சனி, 10 நவம்பர், 2012

தீபாவளி வாழ்த்துக்கள்


அன்பு வலை உலக அன்பர்களுக்கு வணக்கம். நலமா? வெகு நாட்களாய் வலைப் பக்கம் வரவில்லை நான். எல்லோரும் இறைவன் அருளால் நலமாய் இருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த மாதம் முதல்  இணையத்துடன்  இணைவேன் என நம்புகிறேன்.  எல்லோருடைய பதிவுகளையும் அப்போது படிக்க வேண்டும். உங்களுடம் பகிர்ந்து கொள்ள விஷயங்கள் நிறைய உள்ளன.  பகிர்ந்து கொள்வேன்.

இந்த முறை சிறப்பு தீபாவளி -- எங்களுக்கு. மகன்,  மருமகள்,பேரன் ஊரிலிருந்து வந்து இருப்பதால். அவர்களுடன் வழக்கம் போல் கோவை போய்  எங்கள் மாமனார் வீட்டில் . தீபாவளி கொண்டாடப்  போகிறோம்.

மேலும்  இந்த ஆண்டு  இன்னும்  சிறப்பு என்னவென்றால்  எங்கள் மாமனார், மாமியார் அவர்களுக்கு 75 வது திருமண நாள். இதுவரை  அவர்கள் திருமண நாள் கொண்டாடியது இல்லை அவர்கள் அந்தக் கால மனிதர்கள். பேரன், பேத்திகள் ஆசையாக அவர்கள் திருமண நாளை விழாவாக எடுக்கப்  போகிறார்கள் 12ம் தேதி.

மறுநாள் தீபாவளிக் கொண்டாட்டம். குடும்பத்தினருடன். அதற்கு மறுநாள் 14ம் தேதி  மாமாவுக்கு 104  வது  பிறந்த நாள். மாமாவின் ஆசிர்வாதங்கள் உங்கள் எல்லோருக்கும்.

எல்லோருக்கும் தீபாவளித்  திருநாள் நல் வாழ்த்துக்கள்! 

வாழ்க வளமுடன்.


19 கருத்துகள்:

 1. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.தீபாவளி நல வாழ்த்துக்கள் மேடம்

  பதிலளிநீக்கு
 2. அம்மா அக்கா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ;))

  பதிலளிநீக்கு
 3. கோமதியக்கா, மகிழ்ச்சிகரமான தீபாவளி மற்றும் தங்களின் மாமனார் மாமியாரின் திருமண நாள் கொண்டாட்டங்கள் சிறப்புற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.விரைவில் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. எல்லோருடனும் தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள்.

  தாத்தா, பாட்டிக்கு எங்கள் நமஸ்காரங்களை தெரிவித்து விடுங்கள் அம்மா.

  இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. தீபாவளி வாழ்த்து சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
  நீங்களும், உங்கள் அன்பு குடும்பத்தினரும் நலமுடன், வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 7. மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  மாமனார்-மாமியார் 75 ஆண்டு திருமண வாழ்வு, சதம் தாண்ட என் பிரார்த்த்னைகள். இதுவரை திருமண தினம் கொண்டாடியதில்லை என்பது ஆச்சர்யம்தான். சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் இவையெல்லாம் செய்ததில்லையா? நூறு வயதில் செய்வது கனகாபிஷேகம்தானே? அதுவா இப்போது செய்யப்போகிறீர்கள்?

  எல்லாம் சிறப்புற நடக்க என் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
 8. தீபாவளி வாழ்த்துக்களும் வந்தனங்களும்! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 9. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. கோமதிம்மா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 12. பெரியவர்களை நமஸ்கரிக்கிறேன் அம்மா.

  பதிலளிநீக்கு
 13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! தங்கள் மாமனார், மாமியாருக்கு என் வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 15. கொண்டாட்டங்கள் எல்லாம் மகிழ்ச்சிகரமாக இருந்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

  தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. மாமனார் மாமியாரின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டோம். நன்றி.

  இனிய பகிர்வுகளுடன் வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி
  உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/12/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 18. http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

  ஒரு நிமிடம் இங்க வாங்கோ

  பதிலளிநீக்கு