ஞாயிறு, 22 ஜனவரி, 2012

ஸ்ரீ தக்ஷிணகாளி கோயில் - நேபாளம்

ஸ்ரீ தக்ஷிணகாளி கோயில் - நேபாளம்
Shri Dhakshina Kali Temple - Nepal


திருக்கயிலாய யாத்திரை சென்றிருந்த நாங்கள் திரும்பும்
போது காத்மாண்டிலிருந்து முக்திநாத் சென்றுவந்தோம்.
21.09.11 அன்று தான் காத்மாண்டிலிருந்து டெல்லி
திரும்ப விமானடிக்கட் வாங்கியிருந்தோம். எனவே
19ஆம் தேதியுடன் நாங்கள் திட்டமிட்ட இடங்களைப்
பார்த்து முடித்து விட்டபடியால் அங்கு இருக்கவேண்டிய
ஒரு நாளாகிய 20.09.11 அன்று எங்களில் நால்வர்
மட்டும் ஏதாவது இடங்களை சுற்றிப் பார்க்க விரும்பி
தனியாக டாக்ஸி ஏற்பாடுசெய்து போய் வந்தோம்.
அப்படிச்சென்ற இடங்களில் தட்சிணகாளி கோயிலும்
ஒன்று.

இக்கோயில் நேபாளத் தலைநகர் காத்மாண்டில் இருந்து
தென்கிழக்கில் 22 கி.மீ தொலைவில் உள்ளது.

அழகிய மலைப்பாதை. ஆங்காங்கே கிராமங்கள். அழகிய
பாரம்பரிய வீடுகள். வாழைத்தோட்டங்கள், மக்காச்
சோளத்தோட்டங்கள் காணப்படுகின்றன.


வீடுகளில் பரண்
அமைத்து சோளக்கதிர்களை நிறையக்கட்டிக் காயவைக்
கிறார்கள். சிறிய வீடாக இருந்தாலும் மாவிலை கட்டு
வதைப்போல கட்டிவைக்கிறார்கள். அழகழகாய் கட்டிக்
காயவைக்கிறார்கள்.சோளக்கதிரின் மேல் தோலியை
அழகாய் விரித்து மூன்று மூன்றாய் பூ கட்டுவது போல்
கட்டி அதைத் தோரணமாய் கட்டி இருப்பது அழகாய்
இருக்கும். டாக்ஸி வேகமாய் போனதால் சிலவற்றை
போட்டோ எடுக்க முடியவில்லை.அன்னாசிப் பழங்களை
வெட்டிக்காய வைக்கிறார்கள்.

தூரம் அதிகமில்லை என்றாலும் மலைப்பாதையில்
செல்ல ஒருமணி நேரம் ஆகின்றது. கோயில் ஒரு
தனிமலை மீது அமைந்துள்ளது. இந்தக் கோயில் கடல்
மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்
கிறது. அடிவாரத்தில் பார்ப்பிங் (Pharping) என்ற
சிற்றூர் உள்ளது. பேருந்துகள் காட்மாண்டுவில்
இருந்து இங்கு வந்துபோகின்றன.

நாங்கள் அங்கு சென்றதும் நல்ல மழை பிடித்துக்
கொண்டது. ஒரு சிறிய உணவகத்தில் ஒதுங்கினோம்.
இன்னும் நீண்டதூரம் போகவேண்டுமே. நல்லவேளை
யாக அங்கிருந்த சாது ஒருவர் எங்களுக்குக் குடை
கொடுத்து உதவினார்.

அரை கி.மீ மலையேற வேண்டும்.வழியில் பூக்கடைகள்,
மணிகள் விற்கும் கடை, உணவகங்கள் என்று நிறைய
கடைகள் இருக்கின்றன. மலையில் சிறிது தூரம் ஏறிச்
சென்ற பின் நடுவில் சுமார் 100 படிகள் இறங்கி ஆற்றுப்
பகுதியை அடைந்து மீண்டும் சுமார் 275 படிகள் மேலே
ஏற வேண்டும்.

கீழே இருந்து இந்த இடத்திற்கு வர சுமாரான சாலை
உள்ளது. சாலை வேலை நடை பெறுகிறது. பஸ்,
டாக்ஸிகளை கீழேயே நிறுத்தி விடுகின்றனர்.

பூர்ணாவதி கங்கா, உத்தார்சதி கங்கா என்ற பெயருடைய
இரண்டு ஆறுகள் இந்த இடத்தில் ஒன்றாகச் சேர்கின்றன.பூர்ணாவதி கங்கா
உத்தார்சத்தி கங்காகங்கா


இந்த இடத்தில் ஜ்வாலாமுகி கோயில் இருக்கிறது.கட்டி
விடப்பட்ட வெண்கல மணிகள் கொத்துக்கொத்தாக
உள்ளன.சிங்கம் போன்ற விலங்குகளின் வெண்கல
உருவச்சிலைகளையும் வழிபடுகின்றனர்.இறைவியின்
மீது குங்குமம் அரிசி போன்றவற்றைத் தூவுகிறார்கள்


இங்குள்ள மக்கள் தங்கள் உபயோகத்திற்கு மூங்கில்
கூடைகளைப் பயன்படுத்துகின்றனர். அதில் வீட்டுக்கு
வேண்டிய பொருட்களை வாங்கி முதுகில் சுமந்து
வருகிறார்கள்.மலைப் பகுதியில் அப்போது தான்
பாரத்தை எளிதாக கொண்டு வர முடியும் என
நினைக்கிறேன். கடைகளில் அந்த மூங்கில் கூடைகள்
சின்னது , பெரியது என்று கிடைக்கிறது. மேலே
அகன்று கீழே குறுகி இருக்கும் அந்த மூங்கில் கூடை.
பெண்கள் நல்ல பலம் பொருந்தியவர்களாய்
இருக்கிறார்கள். கேஸ் சிலிண்டர்களைக் கூட
முதுகில் சுமந்து பஸ்ஸில் ஏறி இறங்குகிறார்கள்.வெண்கலச்சிலைகள்

வழிபாடு


பொரி, அவல், கொண்டக்கடலை போன்றவற்றை
தக்ஷிணகாளிக்குப் படைப்பார்களாம். இவற்றை இங்கு
கடைகளில் வாங்கிக் கொண்டு மேலே செல்லலாம்.மணிகள்
மழையிலும் பூ வியாபாரம்
கடைகள்


மீண்டும் மலையேறல்
மேலும் கொஞ்சதூரம் ஏறிச்சென்றால் தக்ஷிணகாளி
கோயிலை அடையலாம். வழியில் இருபக்கங்களிலும்
அடர்த்தியான மரங்கள்.

நெருங்கிவிட்டோம்கோயிலை

மூலஸ்தானம்

சிறிய கோயில். சுற்றிவரலாம்.அம்பாளின் உருவம் ஒரு
சிவப்புத்துணியால் மூடப்பட்டுள்ளது. பாதங்கள்,முகம்
தெரிகின்றன. இங்கு வரக்கூடிய பக்தர்கள் மெழுகுவர்த்தி
ஏற்றி வழிபடுகிறார்கள். இதற்காக அங்கு மெழுகு
வர்த்திகள் விற்கப்படுகின்றன.

காளி அசுரரைகளைக் கொன்று அவர்களின் இரத்தத்தைக்
குடித்த இடமாம் இது. அமைதியான இடத்தில் அமைந்த
அக்கோயிலில் காளிதேவியை வணங்கினோம்.

இங்கு புறாக்கூண்டுகள் உள்ளன. இங்கும் பெரியதும்
சிறியதுமான பலவேறு மணிகள் கட்டப்பட்டுள்ளன.
பூனைகள், குரங்குகள் உள்ளன.புறாக்கூண்டு

மணிகள்


கோயில்மலையிலிருந்து கீழே இறங்கும்போது மழை நின்று
விட்டது. டாக்ஸியில் ஏறி மதியநேரத்தில் காத்மாண்டு
வந்து சேர்ந்தோம்.

_________________________

20 கருத்துகள்:

 1. அழகான படங்களுடன் அருமையான நேபாள யாத்திரை பற்றிய விபரங்கள்.
  நல்ல தரிஸனம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 2. படங்களும் பயணமும் மிக அருமை.

  என்ன ஒரு சாந்தமான இடம்!!!!!!

  பதிலளிநீக்கு
 3. படங்களும், தகவல்களும் அருமை அம்மா.

  பதிலளிநீக்கு
 4. படங்களின் மூலம் இடத்தின் அமைதியும் பசுமையும் புலப்படுகிறது. நல்ல பயணக் கட்டுரை அம்மா.. மனதுக்கு நிம்மதி கிடைத்தது..

  பதிலளிநீக்கு
 5. மிக அருமையான புகைப்படங்களுடன் நேபாளத்திற்கு எங்களையும் பயணம் அழைத்துச் சென்றமைக்கு மிக்க நன்றி கோமதியம்மா.

  பதிலளிநீக்கு
 6. அருமையானதொரு பயணம்..

  கங்கையும், அப்பத்தான் மழை பெஞ்சிருக்கும் சூழலும் ஜில்லுன்னு இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், முதல் வருகைக்கும். வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வாங்க துளசி, சாந்தம் தவழும் இடம் தான் தக்ஷிணகாளி வாழும் இடம்.

  உங்கள் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ஆதி வாங்க, உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க வெங்கட், பசுமையும், அமைதியும் போட்டி போட்டுக் கொண்டு கோலோச்சும் இடம். மனதுக்கு நிம்மதி அளிக்கும் இடம் தான்.வருகைக்கு
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 11. புவனேஸ்வரி வாங்க, என்னுடன் நேபாள பயணம் வந்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. மலைப்பாதையும் ஊரும் பார்க்கவே அழகா இருக்கு...

  பதிலளிநீக்கு
 13. வாங்க அமைதிச்சாரல், மிகவும் ரம்யமான சூழல்தான். ஜில்லென்ற காற்றூ சாரலை நனைத்ததா!
  நன்றி சாரலின் வருகைக்கு.

  பதிலளிநீக்கு
 14. வரிசையாக மணிகள், மலைப்பாதை, குடைக்கு அடியில் வியாபாரம் அருமையான படங்கள். சிலிண்டரைச் சுமக்கும் வலிமை கொண்டவர்களாகப் பெண்கள்.

  விவரங்களும் தகவல்களுமாக சிறப்பான கட்டுரை.

  பதிலளிநீக்கு
 15. வாங்க ராமலக்ஷ்மி,கட்டுரையை நன்கு படித்து கருத்துக் கூறியது மிகவும் மகிழ்ச்சி. நன்றி.

  பதிலளிநீக்கு
 16. நேபாளத்தை பற்றிய பகிர்வு அருமை கோமதியக்கா.மலைப்பாதை,கிராமங்கள்,தோட்டங்கள் அழகு,அத்தனையும் அழகு.

  பதிலளிநீக்கு
 17. அது ஒரு சின்ன செய்தியாக இருக்கலாம்; இருந்தாலும் அதையும் விட்டு விடாமல் விவரணையாக வர்ணித்த அழகு தான் இந்தப் பயணக் கட்டுரைகளின் சிறப்பம்சம். 'கொத்து கொத்தாக மணிகள்' போன்ற வார்த்தைகளும், அதை அதை அங்கங்கே காட்சி படுத்திய தெளிவான படங்களும்-- ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், ரொம்ப அற்புதங்க..

  பதிலளிநீக்கு
 18. கட்டுரைகளும் அதோடு படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 19. ஜீவி சார் வாங்க, உங்கள் பாரட்டுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 20. வாங்க கலையன்பன், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு