சனி, 5 நவம்பர், 2011

சதயத் திருநாள்


ஐப்பசி சதய நட்சத்திரத்தில் சோழச்சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் பிறந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் என் மகன் அதே நட்சத்திரத்தில் பிறந்தான். அது தெரியாது அல்லவா உங்களுக்கு?

 
ராஜராஜ சோழன் சிவனுக்கு பெரிய கோவில் கட்டினார். அது போல் என் மகனும் சிவனுக்கு ஆலயம் கட்டினான். எப்படி என்று கேட்கிறீர்களா சாக்பீஸில் மெஷின் ஊசி என்னும் உளியால் செதுக்கி செதுக்கி கட்டினான். அவன் பாடம் படிக்கும் சோபா சேரில் உட்கார்ந்து எழுதும் அட்டையில் சாக்பீஸை வைத்துக் கொண்டும் பிளைடாலும் ஊசியாலும் செதுக்கி செதுக்கி செய்தான்.

ஒரு மாதகாலத்திற்கும் மேலாக அதைச் செய்தான். அப்போது பள்ளியில் அவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். அவன் கட்டிய கோவிலில் தேவாரக் கல் வெட்டு இருக்கிறது. துவாரபாலகர் , லிங்கோத்பவர் இருக்கிறார்கள். கோவிலுக்கு முன்பு சுவாமி எழுந்தருளும் மண்டபம் கட்டி உள்ளான். ராஜ கோபுரம் கட்ட ஆரம்பித்து, படிக்க வேண்டியது நிறைய இருந்ததால் பாதியில் விட்டு விட்டான். பின் நேரம் இல்லை.

 புடவைகட்டி, கோட்டுப் போட்ட முதல்வர் ஜெயலலிதா, தபால் பெட்டி, கீரைக்காரம்மா, பலிபீடம், டிராபிக் போலீஸ், பள்ளி செல்லும் சிறுமி, சிறுவன் ஆண், பெண் என்று நிறைய கொலுவில் ஆங்காங்கு வைக்க செய்து தந்தான். இவை எல்லாம் கொலு பெட்டியில் இருக்கிறது.

 உங்களுடன் இன்னொரு முறை பகிர்ந்து கொள்ள்கிறேன். இந்த கோவிலை தூசுதட்டக் கூட பயம் எனக்கு. மிக கவனமாய் மெதுவாய் துடைப்பேன் எங்கு உடைந்து விடுமோ என்று.இப்போது இரண்டு வயதாகும் அவனுடைய மகனிடம் நாளை வளர்ந்தபின் காட்ட பத்திரப்படுத்தி வருகிறேன்.

நாளைதான் சதயத்திருநாள். தஞ்சையில் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.என் மகனும் தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறான்.அவனுக்கு எங்களது வாழ்த்துக்கள்.நீங்கள் எல்லோரும் வாழ்த்துக்கள்.

                                         வாழ்க வளமுடன்.

47 கருத்துகள்:

  1. உளியால் செதுக்கி சிலைகள் வடிப்பது எவ்வளவு கடினமோ, அதைவிட கடினமானது, இந்தத் தங்கள் மகன் செய்துள்ள அறிபுதமான படைப்புக்கள்.
    இதை நான் நன்கு அறிவேன். சிறுவயதில் நானும் இதுபோல ஒருசிலவற்றை செய்து பார்த்தது உண்டு.

    அசாத்யமாகப் பொறுமையும், கலை உணர்வும் வேண்டும். நல்ல கலைஞன் ஒருவரை பெற்றெடுத்த தாய் என்ற பெருமை உங்களுக்கு என்றும் உண்டு.

    இதே போல மிகச்சிறிய சதுரமான தட்டையான அழிக்கும் ரப்பரில் (Pencil Eraser), உடைத்த அரை ப்ளேடு உதவியுடன், V GOPALAKRISHNAN என்ற என் முழுப்பெயரையும் Rubber Stamp ஆகச் செய்தேன். அனைவரும் பாராட்டினார்கள்.

    கைவேலை என்பது அனைவருக்கும் வராது. அதற்கு ஒரு ஆர்வமும், கலைமகளின் அருளும் தேவை.

    தங்கள் மகனுக்கு என் பாராட்டுக்கள்.
    பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரும் கலையுலகில் ராஜாதிராஜனே - அவரை நன்கு ஊக்குவித்துக் கொண்டே இருங்கள். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  2. ஆஹா அருமையா இருக்கு படைப்பு.

    என்னுடைய வாழ்த்தையும் சொல்லிடுங்க

    பதிலளிநீக்கு
  3. வாங்க கோபாலகிருஷ்ணன் சார், நீங்கள் சொன்னது மிகவும் உண்மை. பொறுமையும் கலையுணர்வும் அவனுக்கு இருந்ததால் தான் அதை செய்ய முடிந்தது அவனால்.

    நன்கு ஒவியம் வரைவான். தன் நண்பர்களுக்கு தான் வரைந்த ஒவியங்களை பரிசளிப்பான்.

    சிறுவயதில் சப்பாத்திசெய்ய கோதுமை மாவு பிசைந்து வைத்து இருந்தால் அதை எடுத்து சென்று பொம்மைகள் செய்வான்.

    இயேசுநாதர், நடராஜர், சரஸ்வதி, கிருஷ்ணர், பறவைகள்,மலர்கள் என்று அவன் வரைந்த ஒவியங்கள் எங்கள் கொலுவில் இடம்பெறும்.

    நீங்களும் சிறுவயதில் கைவேலைகள் செய்து பாராட்டு பெற்றது அறிந்து மகிழ்ச்சி.

    உங்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், என் மகனிடம் சொல்கிறேன்.உங்களை போன்ற பெரியவர்களின் வாழ்த்துக்கள் அவனுக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.

    எனது மருமகளும் கைவேலையில் மிகவும் ஆர்வம் உள்ளவள். நிறைய கலைப்பொருட்கள் செய்து இருக்கிறாள்.

    இப்போதும் ஒய்வு நேரத்தில் பெயிண்டிங் செய்து வருகிறான். நீங்கள் சொன்ன மாதிரி
    குடும்பத்தார் எல்லோரும் ஊக்குவித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

    முதலில் வந்து வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வாங்க புதுகை, நிச்சியம் உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து விடுகிறேன்.

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப அருமையான சிற்பம். மற்றவற்றையும் பார்க்க ஆவல். முடிந்தால் இதுபோலவே தனித்தனியே படம் எடுத்துத் தரப்பாருங்களேன்.

    மகனுக்கும் ஆர்வத்துக்குத் துணை நிற்கும் மருமகளுக்கும் வாழ்த்துக்கள்:)!

    பதிலளிநீக்கு
  6. அற்புதம்ம்மா. கொஞ்ச நேரம் அசந்து தான் போயிட்டேன் :) அவருக்கு வாழ்த்துகள். அமெரிக்கா போனப்ப இதை எடுத்துட்டு போய் பேரனிடம் காண்பிக்கலயா?

    பதிலளிநீக்கு
  7. இதைவிட ஒரு தாய்க்கு என்ன மகிழ்ச்சி! சதயத்தில் பிறந்த மகனை என்றும் இதயத்திலிருத்தி இப்படி பதிவில் பெருமையுடன் கூறும் தாய்மனசினை புரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  8. சாக்பீஸில் கலைவண்ணம் கண்ட மகனுக்கும் இதை மனதிலும் பின் எழுத்திலும் வடித்து வைத்த தாய்க்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. பிறந்தநாள் வாழ்த்துக்களை இங்கயும் சொல்லிக்கிறேன்..
    கல்வெட்டில் தேவாரங்களோடு கட்டியவர் இன்னார் அவருடைய தாய் தந்தையர் பெயரும் உண்டென்று நினைவு..:)

    பதிலளிநீக்கு
  10. அசந்து போய் விட்டேங்க. முதலில் லாங்ஷாட்டில் எடுக்கப் பட்ட படங்களோ என்று எண்ணினேன். பின் வரிகளைப் படித்த பிறகு தான் உங்கள் மகனாரின் கைவண்ணம் என்று தெரிந்து கொண்டேன்.

    நெட்டியில் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படியான கைவேலையை பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. பார்த்ததும் மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் அற்புதங்க.. அந்த நிதானமும், பொறுமையும் வாழ்க்கையில் நிறைய பரிசுகளை அளிக்கும். அவருக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். பேரனுக்கு பாட்டியின் பரிசா.. ஜமாயுங்கள்!

    பதிலளிநீக்கு
  11. happy b'day to the sculptor :)

    i very carefully scrutinized; learnt that it was such a meticulous fine job ...

    thanks for sharing :)

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராமலக்ஷ்மி, உங்கள் விருப்பம் போல் தனி தனியாக மகனின் கைவேலைகளை படம் எடுத்து தருகிறேன்.

    மகன், மருமகளிடம் உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து விடுகிறேன்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க ஆதவன், நலமா?
    உங்கள் படிப்பு எப்படி போகுது?
    சிங்கபூரில்தானே இருக்கிறீர்கள்?

    சாக்பீஸ் சிற்பத்தை அமெரிக்காவிற்கு பத்திரமாய் கொண்டு போக முடியுமா?

    பேரனுக்கும் புரிந்து கொள்ளும் வயது ஆகவில்லையே!

    அவன் பெரியவன் ஆனதும் கொடுத்தால் தன் அப்பா கஷ்டப்பட்டு செய்து இருக்கிறார்கள் என்று பத்திரமாய் பார்த்துக் கொள்வான்.

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஆதவன்.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ஷைலஜா,

    உங்கள் பின்னூட்டம் அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க மாதவி,

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. முத்துலெட்சுமி, ’ மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ தேவாரப் பதிகம் தெரியுது பெரிது செய்துப் பார்த்தால்.

    தாய் தந்தை பெயர் உண்டா என்பதை காசியிடம் கேட்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. அந்த நிதானமும், பொறுமையும் வாழ்க்கையில் நிறைய பரிசுகளை அளிக்கும். அவருக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். பேரனுக்கு பாட்டியின் பரிசா.. ஜமாயுங்கள்//

    வாங்க ஜீவி சார்,
    உங்கள் மனங்கனிந்த வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  18. வாங்க தெகா,

    கவனமாய் பார்த்து வாழ்த்தியதற்கு நன்றி.

    பிறந்த நாள் வாழ்த்துக்களை என் மகனிடம் தெரிவித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. அசத்தலா இருக்கும்மா.. உங்கள் மகனுக்கு எவ்வளவு பொறுமை...

    சற்றே அழுத்திப் பிடித்தால் உடைந்து விடும் சாக்பீசில் இப்படி செதுக்கி செய்வது எவ்வளவு கஷ்டம்.....

    பிறந்த நாள் காணும் அவருக்கு இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. வாங்க வெங்கட், என் மகன் சொல்வான் அம்மா இராஜராஜன் சிற்பிகளை கொண்டு கோவில் கட்டினார். நான் நானே கட்டபோகிறேன் என்று சொல்லி செய்வான். அவன் பிளைடால் அதை ராவும் போது எனக்கு உடம்பு கூசும்.

    கை, கழுத்து எல்லாம் வலிக்கும் என்பான், ஆனால் பொறுமையாய் செய்து விட்டு தேவசிற்பி கோவில் கட்டிவிட்டேன் பார்த்தீர்களா என்று கோவிலை காட்டிய போது ஆனந்த கண்ணீர் வந்தது உண்மை.

    நீங்கள் சொல்வது போல் அவன் பொறுமை தான் பெறுமை சேர்த்தது.

    வாழ்த்துக்களுக்கு நன்றி வெங்கட்.

    இன்னும் மூன்று நாளில் டெல்லி வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  21. இந்த கோவிலை தூசுதட்டக் கூட பயம் எனக்கு. மிக கவனமாய் மெதுவாய் துடைப்பேன் எங்கு உடைந்து விடுமோ என்று.இப்போது இரண்டு வயதாகும் அவனுடைய மகனிடம் நாளை வளர்ந்தபின் காட்ட பத்திரப்படுத்தி வருகிறேன்.


    நானும் நிறைய பொக்கிஷங்களை சேர்த்துவைத்திருக்கிறேன். அடுத்த தலைமுறையிடம் காட்டவும்.. சொல்லவும்....

    மற்றவர் பார்வையில் அது மிகச் சாதாரணமாக காட்சியளிக்கும் என்றாலும்...

    பதிலளிநீக்கு
  22. வாங்க இராஜராஜேஸ்வரி, பொக்கிஷங்கள் நிறைய என்னிடமும் அடுத்த தலைமுறையிடம் காட்ட உள்ளது. மற்றவர் பார்வையில் சாதாரணமாய் உள்ளது நமக்கு பொக்கிஷமே.

    உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. சபா, உங்கள் வாழ்த்துக்களூக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. அருமையான வேலைப்பாடு- அழகிய கைவண்ணம். பாராட்டுக்களும் வாழ்த்துக் களும்

    பதிலளிநீக்கு
  25. வாங்க வியபதி, உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. ராஜராஜ சோழன் சிவனுக்கு பெரிய கோவில் கட்டினார். அது போல் என் மகனும் சிவனுக்கு ஆலயம் கட்டினான். எப்படி என்று கேட்கிறீர்களா சாக்பீஸில் மெஷின் ஊசி என்னும் உளியால் செதுக்கி செதுக்கி கட்டினான். அவன் பாடம் படிக்கும் சோபா சேரில் உட்கார்ந்து எழுதும் அட்டையில் சாக்பீஸை வைத்துக் கொண்டும் பிளைடாலும் ஊசியாலும் செதுக்கி செதுக்கி செய்தான்.ஒரு மாதகாலத்திற்கும் மேலாக அதைச் செய்தான். அப்போது பள்ளியில் அவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். அவன் கட்டிய கோவிலில் தேவாரக் கல் வெட்டு இருக்கிறது. துவாரபாலகர் , லிங்கோத்பவர் இருக்கிறார்கள். கோவிலுக்கு முன்பு சுவாமி எழுந்தருளும் மண்டபம் கட்டி உள்ளான். ராஜ கோபுரம் கட்ட ஆரம்பித்து, படிக்க வேண்டியது நிறைய இருந்ததால் பாதியில் விட்டு விட்டான். பின் நேரம் இல்லை. புடவைகட்டி, கோட்டுப் போட்ட முதல்வர் ஜெயலலிதா, தபால் பெட்டி, கீரைக்காரம்மா, பலிபீடம், டிராபிக் போலீஸ், பள்ளி செல்லும் சிறுமி, சிறுவன் ஆண், பெண் என்று நிறைய கொலுவில் ஆங்காங்கு வைக்க செய்து தந்தான். இவை எல்லாம் கொலு பெட்டியில் இருக்கிறது. உங்களுடன் இன்னொரு முறை பகிர்ந்து கொள்ள்கிறேன்.

    அருமையான படைப்பு .மிகவும் சிறப்பாக நுட்பமாகச் செய்துள்ளார் வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு இயற்கையாகவே இந்த விசயத்தில் தெய்வத்தின் ஆசியும் நிறையக் கிட்டியுள்ளது போல் உணரத் தோன்றுகின்றது .மிக்க நன்றி பகிர்வுக்கு .மீண்டும் மீண்டும் என் வாழ்த்துக்கள் உங்கள் மகனின் இந்தக் கலை மென்மேலும் சிறப்பாக வளர .

    பதிலளிநீக்கு
  27. வாங்க அம்பாளடியாள், உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    உங்களைப் போன்றவர்களின் வாழ்த்து என் மகனை மேலும் வாழ்வில் சிறப்புறச் செய்யும்.

    பதிலளிநீக்கு
  28. உங்களுக்கும உங்கள் மகனும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. வாங்க ஜலீலா, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. அருமையான வேலைப்பாடு,

    சாக்பீஸில் செய்ய மிகவும் பொறுமை வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    உங்கள் மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிவிடுங்கள்..

    பதிலளிநீக்கு
  31. உங்கள் மகனின் கைவண்ணம் கவர்கின்றது.

    மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. .இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  33. வாங்க கருன், உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    என் மகனிடம் உங்கள் வாழ்த்தை தெரிவித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  34. வாங்க மாதேவி, உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் , பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. தங்கள் மகனின் படைப்பு அற்புதமா இருக்கும்மா. அவருக்கு எங்கள் வாழ்த்தை சொல்லிடுங்க.

    மருமகளுக்கும் கைவேலையில் ஆர்வம் இருப்பது குறித்து மகிழ்ச்சி. மகனின் படைப்புகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  37. பிரமிக்க வைத்தது..
    யாரிடம் என்ன திறமை ஒளிந்திருக்கிறது என்று வெளிப்படும் போதுதானே புரிகிறது..
    எதிர்கால சிற்பிக்கு என் நல்வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  38. வாங்க ரிஷபன் ,உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. அன்பு கோமதி இப்பதான் பார்த்தேன். உங்கள் மகனுக்கு இந்த மாசி மாதம் வாழ்த்துகள் சொல்கிறேன்.:)
    நன்றாக இருக்கணும்.

    எங்கள் இரண்டாவது மகனும் சதயம் தான்.ஆவணி சதயம்.
    அருமையான வேலைப்பாடு . எங்க வீட்டில் காண்பித்ததும் ரொம்ப மெச்சிக் கொண்டார்.
    வளரட்டும் அவர் கலை,

    பதிலளிநீக்கு
  40. பதிவு பழைய பின்னூட்டங்களோடு வந்திருந்தது.  கமெண்ட் இடும்போது காணாமல் போய்விட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஆமாம், பழைய பின்னூட்டங்களுடன் வந்து விட்டதை எடுத்து விட்டு வேறு போட்டேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  41. அந்தக் கோவிலை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.  ஒரு ராஜா, கோவில் கட்டியபோது கும்பாபிஷேகத்துக்கு அவன் குறித்த நாளில் வரமுடியாது என்று ராஜாவின் கனவில் கடவுள் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது.  பிரமிக்க வைக்கும் திறமை.  உங்கள் மகனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      பழைய பதிவை படித்து கொண்டு இருந்தேன், அது இன்றைய தினத்தில் பதிவாகி விட்டது.
      அதனால் அதை எடுத்து விட்டு மீண்டும் போட்டேன்.
      உங்கள் பின்னூட்டம் பழைய பதிவில் இருந்தது.

      நீங்கள் நேரில் பார்த்த போது கோயிலுக்கு போகஸ் லைட் போட்டு உள்ளே உள்ள சிவலிங்கத்தை காட்டினார்கள் சார்.
      இது முன்பு மயிலாடுதுறையில் இருக்கும் போது படம் எடுத்து போட்ட பதிவு அப்போது லைட் எல்லாம் போடவில்லை.
      அதற்கு அப்புறம் எடுக்கவே இல்லை படம்.
      //ஒரு ராஜா, கோவில் கட்டியபோது கும்பாபிஷேகத்துக்கு அவன் குறித்த நாளில் வரமுடியாது என்று ராஜாவின் கனவில் கடவுள் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது.//

      ஆமாம்.
      பூசாலார் மனதில் கட்டிய கோவிலுக்கு போக வேண்டி இருப்பதால் ராஜா கட்டிய கோவிலுக்கு வரவில்லை ராஜா.
      உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  42. பழைய பதிவு எப்படியோ வெளியாகி விட்டது. நவம்பர் மாதம்தான் இருப்பினும் தேதி தெரியவில்லை பிறந்தநாள் வாழ்த்துகள்.

    அசாத்தியமான நுண்ணறிவு உள்ளவர்களுக்கே இது சாத்தியமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      2011 சனிக்கிழமை, 5ம் தேதி போட்ட பதிவு வெளியாகி விட்டது.

      இன்று மகனுக்கு பிறந்தநாள்தான். இங்கு நாளை சதய நட்சத்திரம். தஞ்சையில் இன்று மன்னர் ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழா நடைபெறும்.
      உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

      //அசாத்தியமான நுண்ணறிவு உள்ளவர்களுக்கே இது சாத்தியமாகும்.//
      உங்கள் பாராட்டுக்கு நன்றி.


      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு