Thursday, September 29, 2011

நாங்களும் வைத்தோம் கொலு


நவராத்திரி என்றால் 9 நாளும் கொலு வைத்து மூன்று தேவிகளையும் மனம் மொழி மெய்யால் போற்றி துதித்து குதூகலத்தோடு கொண்டாடுவோம், முன்பு. ஆனால் இப்போது நாங்களும் கொலு வைத்து இருக்கிறோம் என்றுதான் வைக்கிறோம். படிகள்
அமைத்து வைக்க அந்த காலத்தில் வீட்டில் உள்ள டிரங்க் பெட்டிகள் அட்டைகள், புத்தகங்கள் வைத்து அழகாய் 5 படிகள் அமைத்து கொலு வைப்போம். கோதுமை, வெந்தயம், கேழ்வரகால் புற்கள் உண்டாக்கி பார்க் அமைப்போம். இந்துக் கோவில் ,கிறித்துவக்கோவில் மசூதி என்றும்(எங்களுக்கு எல்லா மதத்தவரும் எங்கள் காலனியில் இருந்ததால் அவர்களையும் மகிழச்சிப் படுத்த அப்படி வைப்போம்) அமைத்து, கிராமங்கள் ,நகரம், சினிமா கொட்டகை, கடைகள், மணிக்கூண்டு என்று கொலுவில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி அமைப்போம். உறவினர், நண்பர்கள், குழந்தைகளின் நண்பர்கள் என்று அழைத்து குதூகலமாய்க் கொண்டாடிய நாட்களை நினைத்துக் கொண்டு இப்போது நவராத்திரியைக் கொண்டாட வேண்டி உள்ளது. பண்டிகைகள் அலுப்புத் தட்டும் வாழ்விலிருந்து நம்மை மாற்றி அமைக்க உதவுதால் அதை விடவும் மனசில்லை.

நாங்க்ள் செப்டம்பர் 2ம் தேதி கிளம்பி ,22ம் தேதிதான் திருக்கயிலாயம் தரிசனம் முடித்து திருவருள் துணையுடன் திரும்பி வந்தோம்.(காட்மாண்டுவில் நாங்கள் இருக்கும் போது 6.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து பாதிப்பு ஏற்படாமல் வந்து சேர்ந்தோம்) பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கொலு சமயத்தில் வந்து விடுவீர்களா என்றுதான் கேட்டார்கள் வந்து விடுவோம்: வந்து கொலு வைப்போம் என்று சொல்லிச் சென்றோம்.

10 வருடமாய் இரும்புக் கொலுப் படி செட்டில் கொலு வைத்தோம். நல்ல அகலமாய் இரண்டு வரிசைகள் பொம்மைகள் வைக்க வசதியாக பிரித்யேகமாய் செய்யச் சொல்லி வாங்கி அதை இரண்டு மணி நேரம் செலவழித்து பிரித்து மாட்டி வைத்து கொண்டு இருந்தோம்.

இப்போது அதுவும் போச்சு, அப்படியே 5 தட்டு உள்ள அந்த அலமாரியைப் படியாக்காமல் அப்படியே வைத்து கொண்டு இருக்கிறோம். குழந்தைகள் திருமணமாகி தூரா தொலைவில் இருக்கிறார்கள், அக்கம்பக்கத்தில் உதவிய குழந்தைகளும் வளர்ந்து திருமணம் ஆகிப் போய் விட்டார்கள்.

நாங்கள் இருவரும் தான் எல்லாம் செய்ய வேண்டி உள்ளது. எவ்வளவுதான் உற்சாகத்தை வளர்த்து கொண்டு செய்தாலும் போதும் போ என்ற எண்ணம் வந்து விடுகிறது. என் மகன் நேற்று அடுத்த முறை கொலுவுக்கு வருகிறோம், படி அமைத்து நன்றாக சிறப்பாக பழைய மாதிரி நவராத்திரி கொலுவை சிறப்பாக செய்து விடுவோம் என்றான். இறைவன் அருளால் அப்படியே நடக்கட்டும். மருமகள் வந்த முதல் நவராத்திரி மகனும் மருமகளும் சேர்ந்து சிறப்பாய் செய்தார்கள்.

விஞ்ஞான வளர்ச்சியில் இணையம் குடும்பத்தை இணைத்து வைக்கிறது. ஸ்கைப் மூலம் குழந்தைகள் எங்கள் வீட்டு கொலுவுக்கு வந்தார்கள், தினம் வாருங்கள் என்றேன். நியூஜெர்சியில் இருக்கும் பேரனிடம் பாடு என்றவுடன் நன்றாக சம்மணம் போட்டு உட்கார்ந்து தொடையில் தட்டி தாளம் போட்டு, தேர்ந்த பாடகர் மாதிரி ச ரி க ம பா பாடி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான். டெல்லியில் உள்ள பேத்தி, மாலையில் அவள் வீட்டு கொலுவிலும், பின் எதிர் வீட்டு கொலுவிலும் பாடி விட்டு எங்கள் வீட்டு கொலுவிற்கும் ஸ்கைப்பில் வந்து இரண்டு பாட்டு பாடினாள். பேரன் அவனுக்கு தெரிந்த தேவாரம் பாடி அசத்தினான். அடுத்த முறை தன் அக்காவின் பாடலுக்கு பக்க வாத்தியம் வாசிப்பான், ஏனென்றால் குழந்தை இப்போது மிருதங்கம் கற்றுக்கொண்டு இருக்கிறான். குருவிடம் நன்றாக வாசிக்கிறான் என்று இப்போதே பாராட்டு பெற்று விட்டான். அவனுக்கு பிடித்த சர்க்கரை பொங்கலை கொடுத்தேன் ஆஹா! இதை சாப்பிட முடியவில்லையே என்று சொன்ன போது தான் பாடலை வீட்டிலேயே வந்து பாடுவது போல் மகிழந்த என் மனது குழந்தைக்கு விருப்பமான உணவை கொடுக்க முடியவில்லையே என வருந்தியது. என் மகளின் மாமானார், மாமியார் டெல்லி வந்து இருக்கிறார்கள் என் மகள் வீட்டுக்கு அவர்கள் நேற்று எங்கள் வீட்டு கொலுவைப் பார்த்தார்கள்.

இன்னும் எங்கள் வீட்டு கொலு வைக்கும் வேலை முடிவடையவில்லை. நிறைய வேலை பாக்கி உள்ளது,பார்க் அமைக்க வேண்டும், மலையிலிருந்து அருவி கொட்டுவது போல் வைக்க வேண்டும் கொலு பார்க்க வரும் குழந்தைகள் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள்.
கொலுவில் என் அம்மாவின் கைவண்ணத்தில் உருவாகிய பொம்மைகள்,பூவேலைப்பாடுகள், மகனின் ஒவியங்கள், மகள், மருமகள் கைவேலை, பேரன், பேத்தியின் ஒவியங்கள் என்று அணி வகுக்கிறது. கண்மேட்டியில் நான் பின்னிய பிள்ளையார் இருக்கிறது.கை எம்ப்ராய்டரில் பூங்கொத்துக்களுடன் ’வெல்கம்’ என்று பின்னிய கர்ட்டன் இன்றும் வரவேற்கிறது. என் கணவர் சரஸ்வதி பூஜை அன்று அம்மன் முகம் செய்து தன் பங்கை பூர்த்தி செய்து கொள்வார்கள்.என் அண்ணன் பேரன் ஐஸ் குச்சியால் அவனே செய்த அலங்கார தோரணத்தை கொலுவிற்கு வைத்துக் கொள்ளுங்கள் ஆச்சி என்று கொடுத்தான். அதுவும் இந்த வருடம் இடம்பெறுகிறது.

பண்டிகை என்றாலே வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பங்கு எடுத்துக் கொண்டு செய்யும் போது அளவில்லா ஆனந்தம் கிடைக்கும். ரொம்ப பெரிய வேலை என்று இல்லை: மாவிலைத் தோரணம் கட்டுதல், சுவாமி படங்களுக்குப் பொட்டு வைத்தல், பூ வைத்தல் என்று செய்தாலே போதும். இதெல்லாம் என் குழந்தைகள் செய்வார்கள். இப்போது அவர்களை நினைத்துக் கொண்டே இருக்கிறேன். நாம் அவர்களை இதில் ஈடுபடுத்தும் போது அவர்களுக்கும் நம் பழக்க வழக்கத்தை சொல்லிக் கொடுத்தது போல இருக்கும், நமக்கு அவர்கள் உதவி செய்தது போலவும் இருக்கும். ஒருவர் மட்டும் எல்லா வேலைகளையும் செய்வது என்றால் அதில் வெறுப்பும் ஏன் தான் இந்த பண்டிகை வருகிறதோ என்ற எண்ணமும் தான் ஏற்படும். பண்டிகை என்றாலே குதூகலத்திறகுத் தான். அதனால் முடிந்ததைச் செய்து முடியாததைக் குறைத்துக் கொண்டு மன மகிழ்ச்சியோடு தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

52 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் வைத்துள்ள கொலு சிம்பிளாகவும் அதே சமயம் சிறப்பாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்.

// பண்டிகை என்றாலே குதூகலத்திறகுத் தான். அதனால் முடிந்ததைச் செய்து முடியாததைக் குறைத்துக் கொண்டு மன மகிழ்ச்சியோடு தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.//

சரியாகச் சொன்னீர்கள். நன்றி. vgk

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஸ்கைப்பில் பன்னீர் தெளித்து .. சந்தனம் குங்குமம் கொடுத்ததைக் குறிப்பிடவில்லையே..:))

வெங்கட் நாகராஜ் said...

அழகான கொலு அம்மா... சிம்பிளாக இருந்தாலும், சிறப்பாக இருக்கிறது உங்கள் வீட்டு கொலு...

சுண்டலும் நீங்கள் தராமலேயே நானே எடுத்துக் கொண்டேன்... :)

கைலாஷ் பயணம் சென்றது குறித்து மிக்க மகிழ்ச்சி... நன்கு தரிசனம் கிடைத்ததா?

Thekkikattan|தெகா said...

கோமதியம்மா, கொலுவோட சேர்த்து டெக்னாலிஜியும் எத்தனை தூரம் உங்களோட வளர்ந்திட்டு இருக்கின்னு தெரிஞ்சிக்க முடியுது. அந்த ஸ்கைப் புகைப்படம் அருமை :)

அன்பவிங்க! :)

ஜீவி said...

இறைவன் அருளில் தங்கள் இருவரின் திருக்கயிலாய தரிசனம் முடிந்து வந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

உங்கள் கொலுவும் நன்றாகத் தான் இருக்கிறது. அக்கறையுடன் ஆர்வத்துடன் ஈடுபடும் எதுவுமே சிறப்புதான். வெளிநாட்டில் குழந்தைகளை விட்டு விட்டு இருப்போரின் மனநிலையை அப்படியே படம் பிடித்தாற் போலச் சொல்லியிருக்கிறீர்கள்.

தங்கள் பகிர்ந்தலுக்கு மிக்க நன்றி.

கோபிநாத் said...

கொலு அட்டகாசம் ;-))

கூடவே ஸ்கைப் முலமாக பாடி கலக்கிட்டாங்க போல ! ;)

கோவை2தில்லி said...

உங்க வீட்டு கொலு ரொம்ப அழகா இருக்கும்மா.

திருக்கயிலாய தரிசனம் நல்லபடியாக பெற்று வந்த உங்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும்.

ஸ்கைப்பில் கொலு பார்க்க பேரன் பேத்தி வந்தது அருமை.

கோமதி அரசு said...

உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

மேலும் சிலபடங்கள் போட்டு இருக்கிறேன் முடிந்தால் பாருங்கள்.

கோமதி அரசு said...

முத்துலெட்சுமி, நினைவு படுத்தியதற்கு நன்றி. அன்று நீ பாடி இருந்தால் அதையும் குறிப்பிட்டு இருப்பேன்.

கோமதி அரசு said...

வெங்கட் வாங்க, எங்கள் கொலுவிற்கு வந்து சுண்டல் எடுத்துக் கொண்டதற்கு நன்றி.

கயிலை தரிசனம் மிகவும் நன்கு கிடைத்தது.

கோமதி அரசு said...

தெகா, நலமா?

விஞ்ஞானம் வளர்ந்து இருப்பதால் தான் நாங்கள் மன மகிழ்ச்சியுடன் இருக்க முடிகிறது.

கோமதி அரசு said...

வாங்க ஜீவி சார்,

நீங்கள் சொன்ன மாதிரி இறைவன் அருளால் திருக்கயிலாயம் தரிசனம் முடித்து வந்தோம்.

உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

கோமதி அரசு said...

வாங்க கோபிநாத், ஆம் ஸ்கைப்பில் பாடி எங்களை மகிழ்ச்சி படுத்தி விட்டார்கள்.

கொலுவுக்கு வந்து பாராட்டியதற்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஆதி,

கொலு நல்லா இருக்கா மகிழ்ச்சி.

உங்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள்.

இன்றும் வந்து பாடினர்கள்.

ஸாதிகா said...

//விஞ்ஞான வளர்ச்சியில் இணையம் குடும்பத்தை இணைத்து வைக்கிறது. ஸ்கைப் மூலம் குழந்தைகள் எங்கள் வீட்டு கொலுவுக்கு வந்தார்கள், தினம் வாருங்கள் என்றேன். நியூஜெர்சியில் இருக்கும் பேரனிடம் பாடு என்றவுடன் நன்றாக சம்மணம் போட்டு உட்கார்ந்து தொடையில் தட்டி தாளம் போட்டு, தேர்ந்த பாடகர் மாதிரி ச ரி க ம பா பாடி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான். டெல்லியில் உள்ள பேத்தி, மாலையில் அவள் வீட்டு கொலுவிலும், பின் எதிர் வீட்டு கொலுவிலும் பாடி விட்டு எங்கள் வீட்டு கொலுவிற்கும் ஸ்கைப்பில் வந்து இரண்டு பாட்டு பாடினாள். பேரன் அவனுக்கு தெரிந்த தேவாரம் பாடி அசத்தினான்.//

உலகமே கை விரலில் அடங்கி விட்டது பார்த்தீர்களா?

ஹுஸைனம்மா said...

ஐந்து படிகளில் ஈரிரண்டு வரிசையாக பொம்மைகள் வைக்க வேண்டும் என்றால் பெரிய்ய கலெக்‌ஷன் இருந்தால்தான் முடியும். இத்தனை வருடம் சேர்த்த பொம்மைகள் போதுமாயிருக்கும் இல்லையா?

வயரால் பின்னப்பட்ட ஒட்டகங்கள்(தானே?), கார் - ஆகியவை இருப்பது உங்கள் கொலுவில்தானே? அழகாக இருக்கின்றன.

ஸ்கைப் படம் புன்னகை தருகீறது. என் சிறுவயதில், தந்தை வெளிநாட்டில் இருந்தபோதெல்லாம் மாத ஒருமூறைதான் தொலைபேசவே முடியும். இப்போ அடிக்கடி நேரில் பார்ப்பதுபோல உணர்ந்தாலும், தூரம் தூரம்தானே!!

உங்கள் பயணம் சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

வாங்க ஸாதிகா, உலகமே கைவிரலில் அடங்கி விட்டது உண்மைதான்!

ஆனால் மனம் துடித்துக் கொண்டு இருக்கிறதே கைகளில் குழந்தையை அள்ள.

கோமதி அரசு said...

வாங்க ஹீஸைனம்மா, நிறைய வருடங்களாய் சேர்த்த பொம்மைகள் தான். இப்போது போதும் என்று வாங்குவது இல்லை. அப்படியே ஏதாவது போகும் இடங்களில் ஆசை பட்டு வாங்கினால் அதை குழந்தைகளுக்கு , நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு கொடுத்து விடுகிறேன். எடுத்து வைத்து பாதுகாக்க முடியவில்லை, பழைய டிரங்க் பெட்டிகள், பழைய சூட்கேஸ்கள் அட்டைப் பெட்டிகள் என்று கொலு பொம்மைகள் இடத்தைபிடித்துக் கொண்டு இருக்கின்றன. என் கணவரும் கொலுவுக்கு வாங்காதே யாருக்கும் கொடுக்க என்றால் வாங்கு என்று கடை பக்கம் போகும் போதே எச்சரிக்கை செய்து விடுவார்கள்.


நீங்கள் பார்த்தது கொஞ்சம் தான். இன்னும் இருக்கு என் அம்மாவின் கை வேலைகள். என் அம்மா வயரால் பின்னிய ஒட்டகம் தான் நீங்கள் பார்த்தது. எங்கள் வீட்டு கொலுதான்.டி.வி அலமாரியில் கொஞ்சம் வைத்து இருக்கிறேன்.

நீங்கள் சொன்ன மாதிரி முன்பு அடிக்கடி போன் செய்ய முடியாது. இப்போது தினம் பேச வசதி உள்ளது, நெட் பழுது அடைந்தால் மனது வருத்தம் அடைகிறது.

பயணம் சிறப்பாக அமைந்தது, நன்றி ஹீஸைனம்மா.

Rathnavel said...

வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

கொலு ரொம்ப அழகாருக்கு..

கோமதி அரசு said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ரத்னவேல் ஐயா.

கோமதி அரசு said...

நன்றி அமைதிச்சாரல்.

ராமலக்ஷ்மி said...

அழகான கொலு. ஸ்கைப்பில் கொலு பார்க்கும் அனுபவம் புதுமை. நேரில் செல்ல முடியாத குறை ஓரளவேனும் தீர்ந்து மனதுக்கு நிறைவு:)!

கோமதி அரசு said...

ராமலக்ஷ்மி, நாங்கள் வைத்த கொலுவுக்கு நீங்கள் வந்தவுடன் கொலு மேலும் களைகட்டி விட்டது.

ஸ்கைப்பில் குழந்தைகளை பார்ப்பது மன நிறைவுதான்.

இராஜராஜேஸ்வரி said...

பண்டிகைகள் அலுப்புத் தட்டும் வாழ்விலிருந்து நம்மை மாற்றி அமைக்க உதவுதால் அதை விடவும் மனசில்லை.இறைவன் அருளில் தங்கள் இருவரின் திருக்கயிலாய தரிசனம் முடிந்து வந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

நாங்களும் ஸ்கைப்பிலும் ஜி டாக்கிலும் தான் கொண்டாடுகிறோம்.

ஆயில்யன் said...

ஆஹா கொலு பார்த்ததுமே எங்க வீட்டு கொலுவையும் இப்படி ஒரு லைவ் வீடியோவுல பாக்கணும்ங்கற நினைப்பு வந்துடுச்சு :)

அருமையான அனுபவம் வித் பேரன் & பேத்தி’ஸ் :)

உங்க பிள்ளைகளும் சூப்பரா பாடுவாங்கதானே? அவுங்ககூடவும் ஒரு லைவ் சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் எதிர்பார்க்கிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,நீங்கள் கயிலை சென்று வந்தது பற்றி மிகவும் சந்தோஷம்.
உங்கள் கொலு உங்களைப் போலவே
சிம்பிளாகவும் அழகாகவும் இருக்கிறது.
ஸ்கைப் கொலுப்படல்கள் தான் பிரமாதம். நானும் மகளின் கொலுவை ஸ்கைப் மூலமா
பார்த்துத்தான் சந்தோஷப் பட்டேன்.
என் கணினி நகராக் கணினி:)
அதனால் அவர்களுக்கு எங்கள் கொலுவைக்
காண்பிக்க முடியவில்லை.
தங்கள் மகளின் கொலுவையும் பார்த்தேன். அருமை. அருமை. மனமார்ந்த வாழ்த்துகள் மா.

மாதேவி said...

கொலு நன்றாக இருக்கின்றது.

உங்கள் வீட்டு நவராத்திரி கொலுவில் விஜயதசமி நாளிலாவது கலந்துகொண்டது மகிழ்ச்சியைத் தருகிறது.

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வெற்றித் திருநாள் வாழ்த்துகள்.

மாதேவி said...

கொலு நன்றாக இருக்கின்றது.

விஜயதசமி நாளிலாவது கொலுவில் கலந்து கொள்ளக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது.

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் வெற்றித் திருநாள் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

நாங்களும் ஸ்கைப்பிலும் ஜி டாக்கிலும் தான் கொண்டாடுகிறோம்.//


வாங்க இராஜராஜேஸ்வரி,நீங்களும் எங்களை மாதிரிதானா!

உங்கள் வருகைக்கு நன்றி.

கோமதி அரசு said...

வல்லி அக்கா, வாங்க வாங்க நலமா?

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

நீங்களும் கொலுவை ஸ்கைப்பில் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி. ஸ்கைப்புக்கு நன்றி சொல்ல வேண்டும்
நாம்.

மகள் கொலுவையும் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

உங்க பிள்ளைகளும் சூப்பரா பாடுவாங்கதானே? அவுங்ககூடவும் ஒரு லைவ் சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் எதிர்பார்க்கிறேன்:)//

ஆயில்யன், வாங்க நலமா?
உங்கள் ஆசையை விரைவில் பூர்த்தி செய்து விடுவோம்.

உங்கள் கொலுவை பார்த்தீர்களா?
என் மருமகள் நலமா? விசாரித்தாக சொல்லுங்கள்.

கோமதி அரசு said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வெற்றித் திருநாள் வாழ்த்துகள்.//

மாதேவி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வெற்றித் திருநாள் வாழ்த்துக்கள்.

விஜயதசமிக்கு நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி மாதேவி.

Jaleela Kamal said...

உங்கள் வீட்டு கொலு மிக அருமை, இப்படி பிரிந்து வாழ்ந்தால். பண்டிகை நாள் போது தான் ரொம்ப கவலையாக இருக்கும் இல்லையா?
ஆனால் இப்ப ஸ்கைப்,ஜீடாக் இந்த வசதியாவது க்கிடைத்ததே?

Jaleela Kamal said...

முன்பெல்லாம் இந்த வசதி கூட கிடையாது.

கோமதி அரசு said...

வாங்க ஜலீலா,
வெகு நாட்கள் ஆகிவிட்டதே உங்களைப் பார்த்து நலமா?

எங்களை போன்றவர்களின் மனக்குறைகளை ஸ்கைப், ஜீடாக் தான் தீர்த்து வைக்கிறது .

கொலுவைப் பார்த்து பாராட்டியதற்கு நன்றி ஜலீலா.

கோமதி அரசு said...

ஆம் ஜலீலா. அப்போது இந்த வசதிகள் கிடையாது. வளர்ந்து விட்ட விஞ்ஞான வசதிக்கு நாளும் நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

நெட் வேலை செய்யவில்லை என்றால் சரியாகும் வரை நிம்மதி இல்லை.

கோவை2தில்லி said...

இன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க!”

உங்கள் வலைப்பக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தபோது வந்து பாருங்கள்.

நட்புடன்

ஆதி வெங்கட்.

ஷைலஜா said...

முதமுதல்லா கொலுக்கு வந்திருக்கேன் பாட்டு வேணாலும் பாடறேன்,,எங்க சுண்டல்?:)

கோமதி அரசு said...

ஷைலஜா, வாங்க.
உங்கள் முதல்வரவுக்கு நன்றி.
உங்கள் பாட்டை கேட்க ஆசை பாடுங்கள்.
சுண்டல் தந்து விடுகிறேன்.

சிவகுமாரன் said...

எனக்கு கொலு பார்க்க பிடிக்கும்.
நன்றி.
இணையம் எப்படியெல்லாம் உறவுப்பாலமாய் இருக்கிறது.

கோமதி அரசு said...

வாங்க சிவகுமாரன்,
நாங்கள் வைத்த கொலுவிற்கு வந்ததில் மகிழ்ச்சி, நன்றி.

இணையம் சிறந்த நட்பு பாலம் தான்.

ஸாதிகா said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

மாதேவி said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

வியபதி said...

"நியூஜெர்சியில் இருக்கும் பேரனிடம் பாடு என்றவுடன் நன்றாக சம்மணம் போட்டு உட்கார்ந்து தொடையில் தட்டி தாளம் போட்டு, தேர்ந்த பாடகர் மாதிரி ச ரி க ம பா பாடி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான்" என்ற வரிகளைப் படித்த போது எங்களையும் மகிழ்ச்சி தொத்திக் கொண்டது.(பேரன் பேத்தி தூரதேசத்தில் இருக்கும் தாத்தா பாட்டிகளுக்குத்தான் இது நன்கு புரியும்)

கோமதி அரசு said...

பேரன் பேத்தி தூரதேசத்தில் இருக்கும் தாத்தா பாட்டிகளுக்குத்தான் இது நன்கு புரியும்)//

வாங்க வியபதி, நீங்கள் சொல்வது உண்மை.

கொலுவுக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

ஊரில் இருந்ததால் உடன் பதில் அளிக்க முடியவில்லை.

கோமதி அரசு said...

ஸாதிகா, உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

மாதேவி, உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.

தங்கம்பழனி said...

கொலுக்களின் அணிவரிசை மனசை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சிறப்பாக பதிவிட்டமைக்கு எனது நன்றி பாராட்டுதல்கள்..வாழ்த்துக்களும்..!!

என்றென்றும் உங்கள் அன்பு, தங்கம்பழனி.

asiya omar said...

கொலுவைப்பற்றிய பகிர்வும்,பேரக்குழந்தைகள் பற்றிய பகிர்வும் மனதை தொட்டது..நல்ல பகிர்வு கோமதியக்கா...

கோமதி அரசு said...

வாங்க தங்கம்பழனி,
உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஆசியா, நலமா?

எப்போதும் குழந்தைகள், பேரக்குழந்தைகள் நினைப்புதான்.
உங்கள் வரவுக்கு நன்றி.