Sunday, May 9, 2010

அன்பின் வழி

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்


அன்பு - அந்த சொல்லில்தான் எத்தனை தெம்பு. ‘கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை,
நினைத்துப் பார் பார் அது தரும் தெம்பை’ அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அன்புதான் உலக மகா சக்தி! அன்பு என்பது புனிதமானது!. அன்பு என்பது தெய்வமானது!
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது என்ற பழைய பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது யாருக்காவது முழுப் பாடலும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

அன்பின் வழி,அன்பு மேலீட்டால் செய்யப்படும் வேலை, நிச்சயமாக நல்ல வலிமையான ஒனறுதான்.(நன்றி -’அன்னையின் அருள்மலர்கள்’)

உலகத்தில் உள்ள அனைத்துயிர்களுக்கும் தாயாக விளங்கும் இறைநிலைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

”உலக வாழ்வில் உயிரினங்களின் உற்பத்திக்கு ஏற்ற வகையில் பெண்ணினத்தை வடிவமைத்து எல்லா உயிர்வகைக்கும் அன்பு காட்டி, கருணையை வழங்கிக் காக்கும் அந்த பேராதார இறைநிலைக்கு நன்றி கூறி மன நிறைவு பெறுவோம்.

ஒவ்வொரு நாளையும் இறைநிலையின் அன்பின் ஊற்றுப் பெருக்க நன்னாளாகவே கொண்டாடுவோம்.”வேதாத்திரி மகரிஷி

ஒவ்வொரு வீட்டிலும் தாய்தான் தெய்வம்.

தாயிடம் அன்பான வார்த்தை பேசிப் பாருங்கள் ,அவள் எவ்வளவு தெம்பாய் இருப்பாள்!
அன்பான வார்த்தைகள் கனிவான பார்வைதான் ஊட்டச்சத்து மாத்திரைகள்.

அன்பின் வழியது உயிர்நிலை.

39 comments:

goma said...

அன்னையர்தினத்துக்கு ,உங்கள் பதிவு ,மேலும் சிறப்பைச் சேர்க்கிறது

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////தாயிடம் அன்பான வார்த்தை பேசிப் பாருங்கள் ,அவள் எவ்வளவு தெம்பாய் இருப்பாள்!
அன்பான வார்த்தைகள் கனிவான பார்வைதான் ஊட்டச்சத்து மாத்திரைகள்.////////////

வார்த்தைகள் இல்லை இதற்குமேல் சொல்வதற்கு . மிகவும் சிறப்பான பதிவு . உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

ஆயில்யன் said...

அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா :)

பாலராஜன்கீதா said...

அன்னையர் தின வணக்கங்கள் அம்மா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அன்னையர் தின வாழ்த்துக்கள் கோமதி அம்மா :)

☀நான் ஆதவன்☀ said...

அன்னையர் தின வாழ்த்துகள்ம்மா :)

ராமலக்ஷ்மி said...

அன்பான பதிவு.

அன்னையர் தின வாழ்த்துக்கள் கோமதிம்மா!

கோமதி அரசு said...

நன்றி கோமா.

கோமதி அரசு said...

நன்றி பனித்துளி சங்கர்.

கோமதி அரசு said...

ஆயில்யன்,பாலராஜன்கீதா,
முத்துலெட்சுமி,நான் ஆதவன்,ராமலட்சுமி-
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

முகுந்த் அம்மா said...

அன்னையர் தினத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் அம்மா.

சிறிது தாமதமாகிவிட்டது.

மன்னிக்கவும்.

கோமதி அரசு said...

வாங்க முகுந்த் அம்மா,நலமா?

முகுந்துக்கு பல் நன்றாக வந்து விட்டதா?

குழந்தைக்கும், உங்களுக்கும் ஆசிகள்.

சந்தனமுல்லை said...

அழகான இடுகை!அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா!

சந்தனமுல்லை said...

2

அன்புடன் மலிக்கா said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

சேட்டைக்காரன் said...

தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்

கோமதி அரசு said...

முல்லை,மல்லிக்கா உங்கள் இருவர் வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வலைப் பூவில் என்னை குறிப்பிட்டதற்கு நன்றி சேட்டைக்கரான்.

மாதேவி said...

வாழ்த்துகள்.

thenammailakshmanan said...

அன்னையர் தின வாழ்த்துக்கள் கோமதி.. அன்பின் வழியது.. எல்லாம் ...அருமை

கோமதி அரசு said...

மாதேவி, வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

தேனம்மைலட்சுமணன், உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள் அக்கா!!

கோமதி அரசு said...

வாழ்த்துக்கு நன்றி,சகோதரி.

devathai said...

Hello, i am navaneethan from 'DEVATHAI' which is a tamil bi-monthly magazine. in our magazine, we have a separate page for lady bloggers. we planned to publish your blog in this issue. i want just your o.k. and a recent photograph.
my mobile no is. +91 9500019222
thanks
Navaneethan

சி. கருணாகரசு said...

பகிர்வுக்கு.... நன்றிங்க

கோமதி அரசு said...

தேவதைக்கு நன்றி.

என் விபரங்களை மெயிலில் அனுப்புகிறேன்.

கோமதி அரசு said...

கருணாகரசு,உங்கள் வருகைக்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

‘அன்பின் வழி’ அருமையாக இருக்கிறது!
பாரதியின் ‘துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி-கிளியே
அன்பிற்கழிவில்லை காண்’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!

கோமதி அரசு said...

மனோ சாமிநாதன்,உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

’அன்பிற்கழிவில்லை காண்’

பாரதியின் வரிகள் உண்மை.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

அன்பு வேறு..அன்னை வேறா...
அன்னையர் தினத்திற்கு
அன்பான வாழ்த்துக்கள்!!

க.பாலாசி said...

நன்றி நல்ல பகிர்வு... அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.....

கோமதி அரசு said...

நன்றி பாலாசி.

சி. கருணாகரசு said...

ஒவ்வொரு வீட்டிலும் தாய்தான் தெய்வம்.//

முற்றிலும் உண்மை.
உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.

தக்குடுபாண்டி said...

nice reading your post! next poodungo madam!!..:)

கோமதி அரசு said...

நன்றி,கருணாகரசு.

கோமதி அரசு said...

தக்குடுக்கு நன்றி.

அடுத்த பதிவு கூடிய சீக்கீரத்தில் போடுகிறேன். நன்றி.

R.Gopi said...

//தாயிடம் அன்பான வார்த்தை பேசிப் பாருங்கள் ,அவள் எவ்வளவு தெம்பாய் இருப்பாள்!
அன்பான வார்த்தைகள் கனிவான பார்வைதான் ஊட்டச்சத்து மாத்திரைகள்.//

******

மேடம்....

இதை விட சத்தியமான வார்த்தைகள் ஏதுமில்லை.....

மிக மிக நல்ல பதிவு...

என் மனம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்...

கோமதி அரசு said...

கோபி, அன்னையர் தின வாழ்த்துக்கு நன்றி.