சனி, 5 செப்டம்பர், 2009

குரு உரு சிந்தித்தல்

குரு

தெளிவு குருவின் திருமேனி காண்ட்ல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே.
-திருமந்திரம்.

எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதி மயமான
இறைவனைத் தியானிப்போமாக. (காயத்ரிமந்திரக்கருத்து)


அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப் பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர் நினைவுகூர்வோம்.

தந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து
தழைத்தொரு உடலாகி உலகில் வந்தேன்
அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ
அளித்த பதிவுகளெல்லாம் என் சொத்தாச்சு
இந்த அரும் பிறவியில் முன்வினையறுத்து
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்கு
வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை
வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வோம். -வேதாத்திரி மகரிஷி

10 கருத்துகள்:

 1. கவிதை அருமை! குரு வணக்கத்தில் நானும் இணைகின்றேன்!!

  பதிலளிநீக்கு
 2. ஆசிரியர் தின என்பதை உணர்ந்ததுமே முதலில் ஞாபகத்துக்கு வந்தது இந்த திருமந்திர பாடல்தான் :)

  சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் கேட்ட ஞாபக்த்தோடு நினைவுகூர்ந்தேன் !

  மகரிஷியின் வரிகள் அருமை !

  பதிலளிநீக்கு
 3. சென்ஷி,
  குரு வணக்கத்தில் கலந்து
  கொண்டது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 4. ஆயில்யன் உங்களுக்கு திருமந்திர பாடல் நினைவுக்கு வந்தது அறிந்து
  மகிழ்ச்சி.

  மகரிஷி பாடல்கள் எல்லாமே
  அருமையாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. கோமதி மேடம்... தங்களின் குரு உரு சிந்தித்தல் கட்டுரை மிக அருமை...

  வாழ்வில் நிறைய புண்ணியம் செய்தவற்கே நல்ல வழிகாட்டும் குரு அமைவார் என்பது நிச்சயம்...

  நல்ல குருவை அடைந்தவன், கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வழி காட்டுவான் என்பது உறுதி...

  நல்ல கட்டுரையை அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...

  பதிலளிநீக்கு
 6. நல்ல பாடல்களை நினைவூட்டி அறிவுறுத்தியதற்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 7. //வாழ்வில் நிறைய புண்ணியம்
  செய்தவற்கே நல்ல வழிகாட்டும் குரு
  அமைவார் என்பது நிச்சியம்.//

  சரியாக சொன்னீர்கள் கோபி.

  என் பெற்றோர்கள் செய்த புண்ணியம்
  எனக்கு நல்ல குரு அமைந்தார்.

  பதிலளிநீக்கு
 8. வேதாத்திரி மகானின் பாடல்கள்

  குருவணக்கம்

  நல்லவிதமான ஆரம்பம்

  தொடர்ந்து வழங்க வாழ்த்துகிறேன்

  வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 9. வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு