உ
==
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் -- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
இன்று விநாயகர் சதுர்த்தி. எல்லோரும் மகிழ்ச்சியாக விழாவை கொண்டாடிக் கொண்டு இருப்பீர்கள். நாங்கள் கொண்டாடி விட்டோம்.
பிள்ளையார் சுழி போட்டுத்தான் நாம் எந்தச் செயலையும் தொடங்குவோம்.
//எந்த ஒரு செயல் ஆரம்பிக்கும் போதும் விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தால் விநாயகர் அருளால் எந்த வினைகளும் தடைகளும் வராமல் நாம் தொடங்கும் செயல் வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கை.// -தினமலர் செய்தி
எல்லோருக்கும் தொடங்கும் செயல்கள் எல்லாம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
//உருகும் அடியார் அள்ளூர உள்ளே ஊறும் தேன்வருக
உண்ணத் தெவிட்டாச் சிவானந்த ஒளியே வருக புலன்வழிபோய்த்
திருகும் உள்ளத்தார், நினைவினுக்கும் சேயாய் வருக எமை
ஆண்ட செல்வா வருக உமை ஈன்ற சிறுவா வருக இணைவிழியால்
பருகும் அமுதே வருக உயிர்ப்பைங்கூழ் தழைக்க கருணை
மழை பரப்பும் முகிலே வருக நறும்பாகே வருக வரை கிழித்த
முருகவேட்கு முன் உதித்த முதல்வா வருக வருகவே
மூரிகலசைச் செங்கழுநீர் முனிவா வருக வருகவே.//
//கணபதிக் களிறே போற்றி !
ஐங்கரத்து அப்பா போற்றி !
சிவம் மகிழ் சிறுவா போற்றி !
செந்நெறிகாட்டுவாய் போற்றி !
திருமறை உதவினாய் போற்றி !
திங்களணி திருவே போற்றி!
திரண்டநால் தோளாய் போற்றி !
ஆனைமா முகத்தாய் போற்றி!
அனைத்திடர் களைவாய் போற்றி !
திருவெலாந்தருவாய் போற்றி!
திருவடி இணைகள் போற்றி !//
என்று பாடி பிள்ளையாரைப் போற்றுவோம்.
இங்கு நியூஜெர்சியில், நம் ஊரில் விற்பது போல் களிமண் பிள்ளையார் கிடைக்க மாட்டார், ஆனால் களிமண் கிடைக்கிறது. ஈரக்களிமண் 5 கிலோ வாங்கி வந்தான் மகன். ”போன முறை மண்பிள்ளையார் சிலை நான் செய்தேன் , இந்த முறை நீங்கள் இங்கு இருப்பதால் நீங்கள் செய்யுங்கள் அப்பா” என்றான். அவர்களும் மகிழ்ச்சியாக பிள்ளையார், மூஞ்சூறு வாகனம் எல்லாம் செய்தார்கள். அலங்காரக் குடை இருந்தது ,அதை மகனின்
பிள்ளையாருக்கு வைத்து விட்டு, தான் செய்த பிள்ளையாருக்கு அலங்கார திருவாச்சி வீட்டில் இருந்த தெர்மோகோலில் செய்தார்கள். மகன் போன முறை செய்த பிள்ளையாருக்கு ஸ்பிரே பெயிண்ட் அடிக்கப்பட்டது. அந்த பிள்ளையாரும் புதிதாக ஆனார்.
பிள்ளையாரை மூன்று நாள், ஐந்து நாள் என்று வீட்டில் வைத்து வணங்கிவிட்டுப் பின் கரைப்பது வழக்கம். இங்கு மகன் கரைக்க வில்லை. அழகாய்ச் செய்து விட்டு கரைக்க மனம் இல்லை என்பதால் கரைக்க வில்லை.
முன்னோர்கள் பிள்ளையாரை கரைக்கச் சொல்லும் காரணம் தினமலரில் படித்தேன் .தெரிந்து இருக்கும் அனைவருக்கும். எதற்கும் படித்து பாருங்களேன்.
//மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.//
பண்டிகை கொண்டாடும் போது எனக்கு நம் ஊரின் நினைவு வந்துவிடும். அங்கெல்லாம் ஊரே கோலகலமாய் இருக்கும், பழங்கள், பூக்கள், தென்னை ஓலையில் செய்த அலங்கார தோரணங்கள், எருக்கம்பூமாலை, என்று எங்கும் கூவிக் கூவி அழைக்கும் கூட்டம், எங்கள் வீட்டில் சுற்றிலும் நாலு பிள்ளையார் கோவில்கள். கோவில்களில் பத்து நாள் முன்பே விழா நடக்கும். பக்தி பாடல்கள் எல்லாக் கோவில்களிலிருந்து ஒலித்துக் கொண்டு இருக்கும்.
பிள்ளையார் திருவீதி உலா 10 நாளும் நடக்கும் . பிள்ளையார் சதுர்த்தி அன்று தேரில் வருவார்.
இங்கு,அமைதியான ஆரவாரம் இல்லாத விழா நினைவு படுத்துகிறது ,அயல் நாட்டில் இருப்பதை. மற்றபடி குழந்தைகளுடன் கொண்டாடுவது மகிழ்ச்சியே!
மகன், மருமகள் சேர்ந்து விநாயகரை அழகாய் அலங்கரித்தார்கள். பேரனும் நான் உதவிசெய்கிறேன் என்று அவர்களுடன் சேர்ந்து எல்லாம் எடுத்துக் கொடுத்தான் . மருமகளின் அம்மாவும் வந்து இருந்தார்கள் அவர்களும் நானும் சேர்ந்து பிரசாதங்கள் செய்தோம்.இப்படி உறவுகள் சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சிதான் இல்லையா!
இங்கு பிள்ளையாருக்குப் பிரசாதமாய் கறுப்பு கொண்டைக்கடலை சுண்டல், தேங்காய் பூரணம் வைத்த மோதகம், எள்ளு உருண்டை., அவல், பொரி, கடலை வெல்லம் வைத்து வழிபட்டோம். வீட்டில் வளர்ந்து வரும் வாழை மரத்திலிருந்து சிறிய வாழை இலையில் பிரசாதம் வைத்து வணங்கியது மகிழ்ச்சி தந்தது.

வீட்டில் இருக்கும் பலவித பிள்ளையார்கள்

பிள்ளையார் பாடல்களுக்கு பேரன் நடனம் ஆடி எங்களை மகிழ்வித்தான்.
உங்கள் அனைவருக்கும் எங்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
------------------
என் மருமகள் தொகுத்து தந்த விநாயகர் செய்முறை தொகுப்பு படங்கள்

விநாயகரை உருவாக்கும் என் நாயகர்
வருகிறார்
வந்துவிட்டார் நலங்கள் அருள
கொலு வீற்றிருக்கும் விநாயகர்கள்
என் மகன் செய்த விநாயகர்
என் கணவர் செய்த விநாயகர்
சூரியன் வணங்க வந்தார் விநாயகரை
அதுதான் ஒளி வெள்ளம்