அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.
-திருநாவுக்கரசர் தேவாரம்.
எல்லா உறவுகளமாய் இறைவன் இருக்கிறான். மாமன் , மாமி உறவு மிகவும் முக்கியமானது.
குடும்ப உறவுகள் பற்றி நிறைய பேசி இருந்தார் உறவுகள் என்ற தன் பதிவில் திரு. ஜி.எம் .பாலசுப்பிரமணியம் சார்.
//இரண்டு பதிவுகள் பெண்களை மையமாக வைத்து எழுதினேன் நகைச் சுவையே முக்கிய நோக்கம். ஆனால் நகைச் சுவையானாலும் பெண்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது இந்தப் பதிவு உறவுகளை நான் காணும் விதத்தில் முடிந்த அளவு விருப்பு வெறுப்பில்லாமல் யதார்த்த உலகில் காண்பவற்றை வைத்து எழுதி இருக்கிறேன். கருத்துரைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் இந்தப் பதிவைத் தொடராக்க விரும்புகிறேன். பதிவுலகில் கோலோச்சும் என் மதிப்பிற்குரிய பெண்பதிவர்கள்
திருமதி.கீதா சாம்பசிவம்
திருமதி கோமதி அரசு,
திருமதி இராஜராஜேஸ்வரி
திருமதிகீத மஞ்சரி
திருமதிராஜலக்ஷ்மி பரமசிவம்//
குடும்ப உறவுகளைப் பற்றி பெண்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று வேறு சொல்லி எங்களை அழைத்து இருந்தார்.
இப்படி அழைத்து கேட்டால் எழுதாமல் இருக்க முடியுமா?
உறவுகள் தொடர் கதையே! என்ற தலைப்பில் பதிவை எழுதினேன்.
தாலாட்டு பாட்டில் உறவுகள்:-
//மாமன் அடித்தானோ
மல்லி கைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ
அல்லி மலர்ச் செண்டாலே
மல்லி கைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ
அல்லி மலர்ச் செண்டாலே
போட்டு விளையாடப்
பொன்னாலே அம்மானை
வைத்து விளையாட
வைர கிலுகிலுப்பை
கட்டி விளையாடகாசிச் சிண்டுமணி
ஒட்டி விளையாட ஒயிலார ரயில் வண்டி
நெத்திக்கு சுட்டிநிழல் பார்க்க கண்ணாடி
காலுக்கு தண்டை கைக்கு கணையாழி
கொண்டு வந்து தருவார்கள் -
கோதை கிளிக்கு அம்மான்மார்
சங்கினால் பால் கொடுத்தால்
சந்தணர்வாய் நோகுமென்று
தங்கத்தினால் சங்கு செய்து
தருவார்கள் தாய்மாமன் - என்றும்
மாடுகட்டி போரடித்தால்
மாளாது சென் நெல் என்று
யானை கட்டி போரடிக்கும்
அம்மான்மார் சீமையிலே'- //
பொன்னாலே அம்மானை
வைத்து விளையாட
வைர கிலுகிலுப்பை
கட்டி விளையாடகாசிச் சிண்டுமணி
ஒட்டி விளையாட ஒயிலார ரயில் வண்டி
நெத்திக்கு சுட்டிநிழல் பார்க்க கண்ணாடி
காலுக்கு தண்டை கைக்கு கணையாழி
கொண்டு வந்து தருவார்கள் -
கோதை கிளிக்கு அம்மான்மார்
சங்கினால் பால் கொடுத்தால்
சந்தணர்வாய் நோகுமென்று
தங்கத்தினால் சங்கு செய்து
தருவார்கள் தாய்மாமன் - என்றும்
மாடுகட்டி போரடித்தால்
மாளாது சென் நெல் என்று
யானை கட்டி போரடிக்கும்
அம்மான்மார் சீமையிலே'- //
விளையாட்டில் கூட மாமா, அத்தை உறவை சேர்த்து பாடி விளையாடும் பாடல். பாண்டி விளையாட்டில். என் அம்மா அவர்கள் டைரி குறிப்பில் எழுதி வைத்து இருந்த பாடலில் இருந்து . ஓடி விளையாடு பாப்பா பதிவில் முழு பாடலும் கேட்கலாம். சிறு வயதில் விளையாடிய விளையாட்டுக்கள் எல்லாம் இருக்கும் நேயர் விருப்பமாக ஓடி விளையாடு பாப்பா - 2 வது பகுதியும் போட்டேன்.
//மாமா நேற்று வாங்கித் தந்த
மாணிக்கத்தை பாரிதோ
அத்தை தந்த கட்டி முத்தின்
அழகை வந்து பாரிதோ//
மாணிக்கத்தை பாரிதோ
அத்தை தந்த கட்டி முத்தின்
அழகை வந்து பாரிதோ//
//உறவுகள் பலப்பட முன்னோர் செய்த ஏற்பாடுகள்:-
ஒரு திருமணம் என்றால் மணப்பெண்ணின் சகோதரனுக்கு, மணமகனின் சகோதரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எங்கள் பக்க வழக்கத்தின்படி பெண்ணின் நாத்தனார்க்குச் சடங்குகளில் முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது, கல்யாணத்திற்கு முன் செய்யும் சடங்கிலும், திருமணத்திற்கு பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை கட்டி விடுவது , மூன்று முடிச்சில் ஒரு முடிச்சு போடுவது, அதன் பின் வரும் அனைத்து சடங்கிலும் அவள் பங்கு பெரிது.
ஒரு திருமணம் என்றால் மணப்பெண்ணின் சகோதரனுக்கு, மணமகனின் சகோதரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எங்கள் பக்க வழக்கத்தின்படி பெண்ணின் நாத்தனார்க்குச் சடங்குகளில் முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது, கல்யாணத்திற்கு முன் செய்யும் சடங்கிலும், திருமணத்திற்கு பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை கட்டி விடுவது , மூன்று முடிச்சில் ஒரு முடிச்சு போடுவது, அதன் பின் வரும் அனைத்து சடங்கிலும் அவள் பங்கு பெரிது.
சொந்தநாத்தனார் இல்லையென்றாலும், சின்னமாமனார் அல்லது பெரியமாமனாரின் பெண் அந்த சடங்குகளுக்கு வருவாள். மறுநாள் அவளுக்கு ’நாத்தனார் பலகாரம்’ என்று தனியாகக் கொடுக்கப்படும். ஒவ்வொரு சடங்கையும் அவள் செய்யும் போது அவளுக்கு ’நாத்தனார் சுருள்’ என்று பெண்வீட்டாரால் பணம் கொடுக்கப்படும்.
அது போல் பெண்ணின் சகோதரனுக்கு மாப்பிள்ளை அழைத்து வருவது, கல்யாணப் பந்தலில் பொரி இடுவது, மற்றும் இரவு நலுங்கு வைப்பது,மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுவது என்ற சடங்குகள் உண்டு, அதற்கு மாப்பிள்ளை வீட்டில் துணிமணிகொடுத்து மோதிரம் போடுவார்கள். பெண்ணிற்கு உடன்பிறந்தவன் இல்லையென்றால், பெண்ணின் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள் உதவுவார்கள். இதற்கு குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் தான் முடியும்.
அடுத்து, குழந்தைப் பேறு. இதில் முதல் உரிமை கணவனின் சகோதரிக்கு. குழந்தைக்கு அத்தை காப்பிடவேண்டும். அப்புறம் தான் மற்ற உறவுகள் நகை அணிவிப்பார்கள்.
அதற்கு அடுத்து மொட்டையடித்து காது குத்துதல் . அதற்குப் பெண்ணின் சகோதரனுக்கு முதல் உரிமை. அவனுடைய மடியில் அமர்த்தித்தான் மொட்டையடித்தல், காது குத்துதல். அவனுக்குத்தான் முதல்மரியாதை. அப்புறம் தான் மற்றவர்கள்.
பின். பெண்குழந்தை பூப்பு அடையும் போது, கணவனின் சகோதரி முதல் தண்ணீர் விடுவாள், சடங்கின் போது மாமன் தரும் புடவை, அல்லது சிற்றாடையைத் தான் முதலில் கட்டுவாள் . மாமன் சீர் முக்கியம். அத்தைமகள், அல்லது அத்தையை மாப்பிள்ளை மாதிரி பக்கத்தில் உட்கார்த்தி வைத்து சடங்குகள் செய்வார்கள்.
பெண்க்கு பிறப்பு முதல் இறப்பு வரை இரு வீட்டு உறவுகளும் வேண்டும். அதன் படி தான் சடங்குகளை அமைத்து ஒற்றுமையாக இருக்கவைத்திருக்கிறார்கள்.
தன் அக்காள், தங்கைகளுக்கு பொங்கல், தீபாவளி , கார்த்திகை என்றும் செய்ய வேண்டும். அவளின் புகுந்த வீட்டில் நல்லது , கெட்டதுகளுக்கும் உடன்பிறப்பின் பங்கு இருக்கிறது.
நா. பார்த்தசாரதி அவர்கள் ”வலம்புரிச்சங்கு” என்ற கதையில் பெண்ணின் சகோதருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றி எழுதியிருப்பார்.
அந்தக் கதையில் கடலில் மூழ்கி வலம்புரிச் சங்கு எடுப்பவர் கடலில் ஆழமாக போகவேண்டும் .சங்கை எடுக்கப் போகும்
ஆளின் வயிற்றில் கயிறைக் கட்டி கயிறின் மறுமுனையை மேல் இருக்கும்
ஆளிடம் கொடுப்பார்களாம். அது யார் என்றால் சங்கு எடுக்கப்போயிருக்கும் ஆளின் மச்சினன் தான். தன் சகோதரியின் வாழ்வு அவன் கையில் தான் இருக்கிறது. சகோதரியின் வாழ்வை எண்ணி அவன் அதைப் பத்திரமாய் பிடித்துக்கொள்வான் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது.//
ஆளின் வயிற்றில் கயிறைக் கட்டி கயிறின் மறுமுனையை மேல் இருக்கும்
ஆளிடம் கொடுப்பார்களாம். அது யார் என்றால் சங்கு எடுக்கப்போயிருக்கும் ஆளின் மச்சினன் தான். தன் சகோதரியின் வாழ்வு அவன் கையில் தான் இருக்கிறது. சகோதரியின் வாழ்வை எண்ணி அவன் அதைப் பத்திரமாய் பிடித்துக்கொள்வான் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது.//
மீதி பகுதியை கீழே சகோதரர் தேவகோட்டை ஜி கொடுத்து இருக்கும் சுட்டியில் போய் படித்து பாருங்களேன்
அபாட்னபோத் தட்லோ வலைச்சர சுட்டி
மனித வாழ்வுக்கு மிகமிக உறுதுணை உறவுகள் அதன், அன்பு, அரவணைப்பு, ஆசாபாசங்கள் இல்லையெனில் அதுவும் இன்றைய பாழும் சமூகத்தில் எந்த பிடிப்புணர்வுடன் வாழமுடியும் ஆகவே உறவுகள் என்று தொடர்கதையே என முழக்கமிடுகிறார் இந்த வலைப்பதிவர் அப்படி உறவைப்பற்றி என்னதான் சொல்கிறார் வாருங்கள் மரியாதைக்குறிய திருமதி. கோமதி அரசு அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்கவும்.
சகோதரர் தேவகோட்டை ஜி அவர்கள் வலைச்சரத்தில் ஆசிரியப்பொறுப்பு ஏற்று இருந்த போது வலைத்தள அறிமுகத்தில் என் இந்த பதிவை அறிமுகப்படுத்தி இருந்தார். உறவுகள் பதிவை தேடிய போது இந்த பதிவை வலைத்தளத்தில் அறிமுகபடுத்தி இருக்கிறேன் என்று பின்னூடத்தில் சொல்லி இருந்தார். சகோ தேவகோட்டை ஜி. அன்பர் ரூபன் சுட்டி அனுப்பி இருந்தார்.
இந்த பதிவுகளை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் . பிப்ரவரி 27 ஆம் தேதி என் தம்பிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தினார்கள். அதில் கலந்து கொண்டேன். உறவுகள், நண்பர்கள், உடன்பணிபுரிந்தவர்கள் எல்லாம் பேசினார்கள்.
கடைசியில் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் என்னை பேச சொன்னார்கள். திடீர் என்று பேச அழைத்தபோது முதலில் திகைப்பு ஏற்பட்டது, அடுத்து வருத்தம் ஏற்பட்டது. என் கணவர் இருந்து இருந்தால் அவர்கள்தான் பேசி இருப்பார்கள், தம்பியின் குணநலன்கள் பற்றி.
முதலில் பேச ஆரம்பித்த போது கொஞ்சம் அழுகை வந்தது, பின் என்மனதை திடப்படுத்தி கொண்டு, குடும்ப உறவில் சகோதரன் பங்கும் அதை அவன் திறம்பட , குறைவின்றி அனைத்து சகோதரிகளுக்கு செய்தது பற்றியும் பேசினேன். என் தம்பி மனைவியின் நல்ல குணத்தைபற்றியும் (அனைவருக்கும் உதவும் நல்லகுணத்தையும்) பேசினேன். வீட்டுக்கு வரும் அனைவரையும் மலர்ந்த முகத்தோடு வரவேற்று உபசாரம் செய்து அனுப்புவாள். அவளிடம் என்ன உதவிகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம் தட்டாமல் செய்வாள்.
அப்பன் நீ அம்மை நீ, ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ என்ற பாட்டில் வருவது போல அன்புடைய மாமனும், மாமியும் நீங்கள் என்று பேசினேன். தலைப்பு வந்து விட்டதா?
பாலசுப்பிரமணியம் சார் அழைத்த உறவுகள் தொடரில் எழுதிய மேற்கோள் பகிர்வு திரு. நா பார்த்தசாரதி அவர்களின் கதை "வலம்புரி சங்கு" அதிலிருந்து எடுத்து பேசினேன். அதை வீடியோ எடுத்தாள் தம்பி மகள், மைக் இல்லாத காரணத்தால் என் குரல் மிக சன்னமாக கேட்கிறது, அதனால் அதை இங்கு பகிரவில்லை.
அவன் நண்பர்கள்,
உடன்பணிபுரிந்தவர்கள் அவன் சிரித்த முகத்தை அனைவரிடமும் பழகும் தன்மையை பாராட்டி பேசினார்கள். அது எனக்கு மனமகிழ்ச்சியை, பூரிப்பை தருவதாக சொல்லி வந்து இருந்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து என் பேச்சை நிறைவு செய்தேன்.
அடுத்து தம்பியின் மூத்த மகள் பேசினாள். அப்பா சங்கபணிகளில் ஈடுபட்டது. காலை வேலைக்கு செல்ல அப்பா காட்டும் பரபரப்பு பற்றியும் பேசினாள். எல்லோரிடமும் பணிவாய், அன்பாக இருக்க சொல்லிக் கொடுத்தது என் அன்பான அப்பா என்று சொல்லி வந்தவர்கள் அனைவருக்கும் தன் நன்றியை வணக்கத்தை தெரிவித்தாள்..
தீராதபக்கங்கள் வலைத்தளம் வைத்து இருக்கும் மாதவராஜ் பழைய பதிவர் இன்னும் எழுதி கொண்டு இருக்கிறார். முன்பு அவர் பக்கங்களை படித்து இருக்கிறேன். எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் அவர்களின் மருமகன்
விமலன் விமலன் என்று இப்போது முகநூலில் பதிவுகள் போட்டுக் கொண்டு இருக்கிறார். நிறைய எளிமையான மனிதர்களை பற்றி கதைகள் எழுதுவார், பழைய பதிவர்.போன வருடம் ஓய்வு பெற்று இருந்தார் , ஓய்வுக்கு பின் "ஈரச்சுவடு" என்ற நூலை எழுதி இருந்தார், அந்த நூலை சகோ கரந்தை ஜெயக்குமார் விமர்சனம் செய்து இருந்தார். "காக்கைசோறு" என்ற சிறு கதை தொகுப்பை எனக்கு அனுப்பி இருந்தார் பல வருடங்களுக்கு முன்.
இவர் வலைத்தளத்தின் பேர் மறந்து விட்டேன். இப்போது முகநூலில்
மட்டும் எழுதி வருகிறார்.
மட்டும் எழுதி வருகிறார்.
அரிசோனா ஆண்டு மலரில் என் பதிவு இளமையின் ரகசியம் - தீராகற்றல் இதிலும், உறவுகள், நட்புகளைப்பற்றி எழுதி இருக்கிறேன்.
மகன் பாலைப்பூவுக்கு ஏதாவது ஒரு கட்டுரை கொடுங்கள் என்றான், என் இந்த பழைய பதிவை கொடுத்தேன்.
என் கணவர் வரைந்து தந்த படத்தோடு
இதற்கு முன் ஆண்டு மலர் நடத்திய புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றேன். குடந்தை சாரங்கபாணிகோயில் உள்மண்டப படம் அனுப்பினேன்.
என் மகன் வடிவமைப்பாளர்
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
__________________________________________________________________________
ஆமாம் அக்கா உறவுகளில் முதன்மை இடம் தாய்மாமா, அத்தை. இப்படியும் சொல்வதுண்டு நிகழ்வுகளில் மாமா முழுச்சீர் அத்தை அரைச்சீர் என்று.
பதிலளிநீக்குஇப்படிக் கொடுக்கல் வாங்கல்களில் உறவுகளில் பிணக்கும் ஏற்படுவதுண்டு. ஒருவர் நல்ல ஸ்திதியில் இருந்து மற்றொருவர் கொஞ்சம் குறைவாக இருந்தால் கொடுக்க முடியாமல் தன்னால் இயன்றதைக் கொடுத்தால் அது சொல்லிக்காட்டப்பட்டு மனக் கசப்புகளும் ஏற்படுவதுண்டு.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//ஆமாம் அக்கா உறவுகளில் முதன்மை இடம் தாய்மாமா, அத்தை. இப்படியும் சொல்வதுண்டு நிகழ்வுகளில் மாமா முழுச்சீர் அத்தை அரைச்சீர் என்று.//
ஆமாம், கேள்வி பட்டு இருக்கிறேன் கீதா.
//இப்படிக் கொடுக்கல் வாங்கல்களில் உறவுகளில் பிணக்கும் ஏற்படுவதுண்டு. ஒருவர் நல்ல ஸ்திதியில் இருந்து மற்றொருவர் கொஞ்சம் குறைவாக இருந்தால் கொடுக்க முடியாமல் தன்னால் இயன்றதைக் கொடுத்தால் அது சொல்லிக்காட்டப்பட்டு மனக் கசப்புகளும் ஏற்படுவதுண்டு.//
நீங்கள் சொல்வது போல கொடுக்கல், வாங்கல்களில் உறவுகளில் பிணக்கு ஏற்படுவது உண்டுதான். குடும்பங்களில் இந்த பிணக்கும் வரும் தான்.
விதிவிலக்குகள் இருக்கலாம், குடும்பத்தில் பகைமை பாராட்டிக்
கொண்டு அண்ணன், தம்பி வரப்பு தகராறு, மாமன், மச்சான் சொத்து பிரச்சினை என்று. சகோதர சகோதரிகளுக்கு இடையில் உறவு சுமுகம் இல்லாமல். அதை ஏன் நாம் பேச வேண்டும்? அது மாதிரியான செய்திகள் மகாபாரத, இராமாயண காலத்திலும் உண்டு. ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் உறவுகளின் மேன்மையை புரிந்து கொள்வார்கள்.
ஆமாம் பெண்ணின் நாத்தனாருக்கு முக்கிய பங்குண்டு. பெண்ணின் சகோதரனுக்கும் உண்டு. நீங்கள் சொல்லியிருப்பதுதான்...
பதிலளிநீக்குஆமாம் ஒன்றுவிட்ட என்று சொல்லப்படும் உறவுகள் செய்வார்கள்.
ஆமாம் அத்தைக் காப்பு உண்டு.
நா பா அவர்களின் கதையில் சொல்லிய விஷயம் புதிது அக்கா. இப்ப தெரிந்து கொண்டேன் வலம்புரி சங்கு
கீதா
//ஆமாம் பெண்ணின் நாத்தனாருக்கு முக்கிய பங்குண்டு. பெண்ணின் சகோதரனுக்கும் உண்டு. நீங்கள் சொல்லியிருப்பதுதான்...//
நீக்குஎல்லா சமூகத்தினரிடமும் உண்டு சடங்கு முறைகள் மாறி இருக்கலாம். நாத்தனார் உறவு முக்கியம். பெண்ணின் சகோதரன் முக்கியம் தான்.
குழந்தைக்கு குடல் ஏறி விட்டால் மாமன் வேஷ்டியில் போட்டு உருட்டுவார்கள் குழந்தையை இருவர்.
//ஆமாம் அத்தைக் காப்பு உண்டு//
தான் தான் முதன் முதலில் நகை அணிவிக்கிறோம் என்று அத்தையின் முகத்தில் ஏற்படும் பெருமிதம் அளவிட முடியாது.
//ஆமாம் ஒன்றுவிட்ட என்று சொல்லப்படும் உறவுகள் செய்வார்கள்.//
என் மருமகளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் தான் எல்லாம் செய்தார்கள் சகோதர சடங்குகளை.
//நா பா அவர்களின் கதையில் சொல்லிய விஷயம் புதிது அக்கா. இப்ப தெரிந்து கொண்டேன் வலம்புரி சங்கு//
அந்த கதை கல்லூரியில் பாடமாக இருந்தது. சகோ துரை செல்வராஜூ அவர்கள் கூட சொல்லி இருப்பார் பதிவின் பின்னூட்டத்தில்.
படித்துப்பாருங்கள் நன்றாக இருக்கும்.
இது பற்றி சொல்வது முன்னுரை எதற்கு என்று புரிந்துவிட்டது கோமதிக்கா.
பதிலளிநீக்குஉங்கள் படத்தையும் பார்த்துவிட்டேன்.
//குடும்ப உறவில் சகோதரன் பங்கும் அதை அவன் திறம்பட , குறைவின்றி அனைத்து சகோதரிகளுக்கு செய்தது பற்றியும் பேசினேன். //
நீங்கள் அழகா பேசியிருப்பீங்க. இப்படிக் கலந்து கொண்டு பேசியது எவ்வளவு மகிழ்வான விஷயம் இல்லையாக்கா.
தம்பி மனைவி பற்றிச் சொன்னது நல்ல மகிழ்வான விஷயம். இப்படி அமைவதும் சிறப்பானது.
தலைப்பே வசீகரம். அருமையாகத் தலைப்பை இணைத்து விட்டீர்கள்.
நீங்கள் பேசிய விஷயம் அருமை
கீதா
//இது பற்றி சொல்வது முன்னுரை எதற்கு என்று புரிந்துவிட்டது கோமதிக்கா.
நீக்குஉங்கள் படத்தையும் பார்த்துவிட்டேன்.//
உங்களுக்கு புரியாமல் இருக்குமா கீதா?
//நீங்கள் அழகா பேசியிருப்பீங்க. இப்படிக் கலந்து கொண்டு பேசியது எவ்வளவு மகிழ்வான விஷயம் இல்லையாக்கா.//
விழா மண்டபத்தில் எல்லோரும் ஒருவரை ஒருவர் சந்தித்த மகிழ்ச்சியில் பேசிக் கொண்டு இருந்தார்கள் நேரம் ஆகி விட்டதால் உணவருந்த போய் விட்டனர் எல்லாம் அந்த ஹாலில் தான்.
அதனால் நான் பேசியாது முன் இருக்கையில் அமர்ந்தவர்களுக்கு மட்டுமே கேட்டு இருக்கும்.
//தம்பி மனைவி பற்றிச் சொன்னது நல்ல மகிழ்வான விஷயம். இப்படி அமைவதும் சிறப்பானது.//
தம்பி மனைவி சிரித்த முகத்தோடு அனைவருக்கும் கேட்கும் உதவிகளை செய்வாள் திறமையானவள். நல்ல ஆலோசனைகள் சொல்வாள்.
//தலைப்பே வசீகரம். அருமையாகத் தலைப்பை இணைத்து விட்டீர்கள்.//
நன்றி கீதா.
//நீங்கள் பேசிய விஷயம் அருமை//
நன்றி.
தம்பி உடையவன் படைக்கு அஞ்சான் என்று சொல்வதுண்டு அது போல உங்கள் தம்பியை எல்லோரும் புகழும் போது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்கு//அது எனக்கு மனமகிழ்ச்சியை, பூரிப்பை தருவதாக சொல்லி வந்து இருந்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து என் பேச்சை நிறைவு செய்தேன். //
சூப்பர்.
ஓ எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மருமகனா திரு மாதவராஜ்!?
விமலன் அவர்கள் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றித்தான் நிறைய எழுதுவார். அவரது நூல் பற்றி சமீபத்தில் கரந்தை சகோ எழுதியிருந்தார்.
//மகன் பாலைப்பூவுக்கு ஏதாவது ஒரு கட்டுரை கொடுங்கள் என்றான், என் இந்த பழைய பதிவை கொடுத்தேன்.//
அரிசோனா ஆண்டுமலரில் உங்கள் பதிவு வந்ததற்கும் வாழ்த்துகள் அக்கா
நல்ல கருத்துள்ள பதிவு . மாமாவின் ஒவியத்தோடு.
//இதற்கு முன் ஆண்டு மலர் நடத்திய புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றேன். குடந்தை சாரங்கபாணிகோயில் உள்மண்டப படம் அனுப்பினேன்.//
ஆஹா!! அக்கா கலக்கறீங்க. வாழ்த்துகள் அக்கா!
உறவுகள் தொடர்கதை நினைவுகள் வளர்பிறை பாட்டுக்கு ஏற்ப நீங்க உறவுகள் தொடர்கதையில் தொடங்கி சொல்லி....நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை ன்னு வளர்பிறையாக....
கீதா
//தம்பி உடையவன் படைக்கு அஞ்சான் என்று சொல்வதுண்டு அது போல உங்கள் தம்பியை எல்லோரும் புகழும் போது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.//
நீக்குஆமாம், அப்போது ஒரு தாயின் மனநிலையில் இருந்தேன்.
//ஓ எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மருமகனா திரு மாதவராஜ்!?//
ஆமாம்.
//விமலன் அவர்கள் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றித்தான் நிறைய எழுதுவார். அவரது நூல் பற்றி சமீபத்தில் கரந்தை சகோ எழுதியிருந்தார்.//
ஆமாம், அதில் பின்னூட்டம் போட முடிந்ததா உங்களால் எனக்கு மறுமொழி கொடுக்கும் பெட்டி திறக்கவில்லை.
//அரிசோனா ஆண்டுமலரில் உங்கள் பதிவு வந்ததற்கும் வாழ்த்துகள் அக்கா
நல்ல கருத்துள்ள பதிவு . மாமாவின் ஒவியத்தோடு.//
நன்றி கீதா.
//உறவுகள் தொடர்கதை நினைவுகள் வளர்பிறை பாட்டுக்கு ஏற்ப நீங்க உறவுகள் தொடர்கதையில் தொடங்கி சொல்லி....நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை ன்னு வளர்பிறையாக....//
அருமையாக சொன்னீர்கள் கீதா.
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி, நன்றி.