திங்கள், 10 பிப்ரவரி, 2025

தொடரும் வரலாறு





சேர, சோழ , பாண்டிய நாடுகள்

வரலாறு முக்கியம்  முந்திய பதிவு  படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன். இந்த பதிவில் மேலும் வரலாறு  தொடர்கிறது . 



                       
பனம்பூ மாலை,  விற்கொடி,  சேர வம்சத்தில் புகழ்பெற்ற அரசன்  சேரன் செங்குட்டுவன். நான் ஒட்டி இருக்கும் படம் கதை சொல்கிறது தெரிகிறதா? சிறு வயதில்  தமிழ் பாடத்தில் படித்து இருப்பீர்கள்.

                  

அத்தி மாலை, புலிக்கொடி,  கரிகால்சோழர் இங்கு ஒட்டி இருக்கும் படமும் ஒரு கதையை சொல்கிறது தெரிந்து இருக்கும்,  தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். சிறு வயதில் அரியணை ஏரியவர் கரிகாலர்.  அவரை பற்றிய கதைதான் படத்தில் உள்ளது.


                       

   குதிரைப் படை, யானைப்படை என்று ஒரு குதிரை, ஒரு யானை ஒட்டி இருக்கிறேன் என்று  நினைக்காதீர்கள்.அப்போது இப்போது போல கூகுளில் படம் தேடி போட முடியாது , அதனால் கிடைத்த படம் ஒட்டி இருக்கிறேன்.

                     

                         

வேப்பம் பூ மாலை,  மீன் கொடி,  ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் இதிலும்  பெரிய காப்பியத்தின்  கதை இருக்கிறது.

                            


                                 

எவ்வளவு வருடம் ஆகி விட்டது !  அரிசிக்கு பூச்சி எதுவும் வரவில்லை நிறம் மாறி இருக்கிறது.  மிளகும் நன்றாக இருக்கிறது.

     

  இரத்தினக்கற்களும், முத்துக்களும் எங்கள் மாலைகளிலிருந்து எடுத்தவை.   அப்பா எந்த ஊர் போனாலும்  வித விதமாக அழகிய டாலர் உள்ள மணி மாலைகள் வாங்கி வருவார்கள். அப்போதைய நாகரீகத்தை சொல்லும் மணிமாலைகள்  நீட்டமாக இருப்பதால் தங்கைகள்  விளையாடும் போது மாலைகள் அறுந்துவிடும்,   அந்த அறுந்த  மாலைகளை   எல்லாம் அம்மா மீண்டும்  டாலர்களை  வைத்து  கழுத்துக்கு நெக்லஸ்ஸாக  ஆக்குவார்கள்  வித விதமாக. 

 உதிர்ந்த மாலை  சில  முத்துக்களை, டாலரில் உள்ள கற்களை குட்டி கவர் செய்து அதில் போட்டு நோட்டில் தைத்து கொடுத்தார்கள்  அம்மா. அப்போது நல்ல பள, பளப்பாக இருந்தது,   இப்போது ஒளி மங்கி இருக்கிறது.

இறக்குமதி பொருள் குதிரை, பட்டாடைக்கு படம் வைத்து இருந்தேன் அவை காணவில்லை.

குப்தர்கள் காலம் பொற்காலம் :-

                         

                           


செம்பு லட்சுமி நாணயம் ஒன்று ஒட்டி வைத்து இருந்தேன் மிகசிறியது விழுந்து விட்டது, காணவில்லை


நோட்டில் ஒட்டவில்லை எடுத்து வைத்து இருந்தது


                         

               

                             

                          



மகேந்திர வர்மன் சித்திரக்கலையில் சிறந்தவராக இருந்து இருக்கிறார்.  இவருக்கு சித்திரகாரப் புலி என்று பட்டப்பெயர் இருந்துள்ளது. (மார்டன்  டிரஸ் போட்ட மகேந்திர வர்மன் என்று நினைத்து கொள்ளுங்கள் அப்போது ஓவிய வரையும் படம் இது தான் எனக்கு கிடைத்து இருக்கிறது.)

மகேந்திரவர்மன் பல்லவர்களின் சிற்பக்கலைக்கு முன்னோடியாக  விளங்கி மலைகளை  குடைந்துதெடுத்து நாமக்கல், தளவானுர் முதலிய இடங்களில்  இவ்வகை கோயில்களை அமைத்தார்.


பல்லவர் கட்டிடங்களை நான்கு வகைகளாக பிரிக்கலாம் அவை  முறையே மகேந்திரவர்மன் வகை, நரசிம்மன் வகை, இராஜசிம்மன் வகை, அபராஜிதவர்மன் வகை என்பனவாகும்.

                          

 நரசிம்ம வர்மன் மாமல்ல கடற்கரை கோயிலை கட்டினார். அங்கு சிற்பவேலைபாடு அமைந்த பஞ்சபாண்டவர் ரதங்கள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யானை,, சிங்கம் முதலியனவும்,பகீரதன்   கங்கையை கொண்டுவந்த காட்சி, அர்ஜீனன் தவக்கோலம்  எல்லாம் அற்புதமானவை.

இராஜ சிம்மன் காலத்தில்  காஞ்சி கைலாசநாதர் கோயில், வைகுண்ட நாதர் கோயில் எல்லாம் சிற்பகலைக்கும், இவருடைய கலை உள்ளத்திற்கும்  எடுத்துக்காட்டு 

 

மீதி வரலாற்றை   அடுத்த பதிவில் பார்ப்போம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------------

54 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. தொடர்ந்த மன்னர்களின் வரலாற்றை ரசித்தேன். நம்மை ஆண்ட மன்னர்களின் வரலாறு அத்தனையையும் சிறப்பாக எழுதிய நோட்டுகள், ஒட்ட வைத்த படங்களோடு பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள். உங்களின் இந்த பாதுகாத்தலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    "சோழ நாடு சோறுடைத்து" என்ற வரிகளுக்கு ஏற்ப சேமித்த பொருட்களில், அந்த கால அரிசியின் தரம் எவ்வளவு சிறப்பாக உள்ளது. பார்க்கவே மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருந்த தங்களுக்கு பாராட்டுக்கள். பகிர்ந்த அனைத்தும் நன்றாக உள்ளது.

    தங்கள் எழுத்துக்கள் அழகாக இருக்கிறது. இன்னமும் அத்தனையையும் பெரிதாக்கி படித்து விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      ..பதிவு அருமையாக உள்ளது. தொடர்ந்த மன்னர்களின் வரலாற்றை ரசித்தேன். //

      நன்றி.

      //நம்மை ஆண்ட மன்னர்களின் வரலாறு அத்தனையையும் சிறப்பாக எழுதிய நோட்டுகள், ஒட்ட வைத்த படங்களோடு பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள். உங்களின் இந்த பாதுகாத்தலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

      வாழ்த்துகளுக்கு நன்றி.

      //"சோழ நாடு சோறுடைத்து" என்ற வரிகளுக்கு ஏற்ப சேமித்த பொருட்களில், அந்த கால அரிசியின் தரம் எவ்வளவு சிறப்பாக உள்ளது. பார்க்கவே மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. //

      பூச்சி மருந்துகள் அடிக்காத அரிசியாக இருக்கும், ஏற்றுமதிக்கு என்றால் தரமானைதை தானே அனுப்புவார்கள், அதுதான் சிறப்பானதாக இருக்கிறது.

      //எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருந்த தங்களுக்கு பாராட்டுக்கள். பகிர்ந்த அனைத்தும் நன்றாக உள்ளது.//

      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

      //தங்கள் எழுத்துக்கள் அழகாக இருக்கிறது.//

      காலையில் நல்ல பாராட்டுக்கள், வாழ்த்துகள் எல்லாம் உங்களிடமிருந்து கிடைத்தது மகிழ்ச்சி.

      //இன்னமும் அத்தனையையும் பெரிதாக்கி படித்து விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      வாங்க வாங்க மெதுவாய் இன்று தை பூசம், முருகனை வழிபடும் நாள் அதைப்பற்றி எழுதவில்லையே என்று நினைத்தேன், முருகன் இந்த பதிவில் இடம் பெற்று விட்டார். எல்லாம் அவன் அருள்.

      நீக்கு
  2. தாயாதிகளை தாயத்தார்கள் என்று சொல்லலாமா? ஒரு வரி முடியாமல் அடுத்த வரியில் மிச்சம் தொடர்ந்தால் அங்கு ஒரு கொடு இடவேண்டாமோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //தாயாதிகளை தாயத்தார்கள் என்று சொல்லலாமா?//
      தாயாதிகள் இல்லை போலும் தாயத்தார் (குலபகைவர்களால்) என்ற ஒரு கூட்டம் போலும் அவரை சிறை வைத்து பின் அந்த இடத்தை தீவைத்தனர் என்று வரலாற்று குறிப்புகள் சொல்கிறது, அதில் இருந்து தப்பி வரும் போது கால் எரிந்து அவர் கால் கருப்பாக இருந்த தால் கரிகால் சோழன் என்று சொல்கிறார்கள்.

      //ஒரு வரி முடியாமல் அடுத்த வரியில் மிச்சம் தொடர்ந்தால் அங்கு ஒரு கொடு இடவேண்டாமோ!!!//

      தமிழ் டீச்சர் என்றால் தப்பு சொல்லி இருப்பார் வரலாற்று ஆசிரியர் கண்டு கொள்ளவில்லை போலும்.

      நீக்கு
  3. கோவில் வெண்ணி என்று சொல்வதைவிட வெண்ணிப்பறந்தலை என்று சொன்னால்தான் நன்றாய் இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் வெண்ணி என்று சொல்வதைவிட வெண்ணிப்பறந்தலை என்று சொன்னால்தான் நன்றாய் இருக்கிறது!!//

      அப்படியும் சொல்லலாம். புலவர்கள் அதிகமாக பாடியது கரிகால் சோழனை தான். நீங்களும் கவிதை எழுதும் புலவர் தானே!

      சோழன் கரிகாலனின் முக்கிய வாழ்க்கைச் சுவடுகள்:
      முடி சூட்டியபோது - வயது 5

      வெண்ணிப் போர் வெற்றி - வயது 15

      வாகைப்போர் வெற்றி - வயது 16

      இமயமலை படை எடுப்பு - வயது 17-20

      இலங்கை படை எடுப்பு - வயது 21

      காவிரி கரை, கல்லணை (காலம் கிமு 12) கட்டி முடித்தபோது வயது - 53

      அதன்பின் தஞ்சை சென்று, தன் வேளிர் குலத்தவரோடு 83 வயது வரை வாழ்ந்தார்.

      நீக்கு
  4. பாண்டிய நாடு பற்றிய பேப்பரில் ஒரு சதுரம் மட்டும் பிரவுன் நிறத்தில் இருக்கிறது! எண்ணெய் பட்டிருக்கிறதோ...

    முக்கிய அரசர்கள் பேபப்ரிலும் அந்த பிரவுன் தடங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாண்டிய நாடு பற்றிய பேப்பரில் ஒரு சதுரம் மட்டும் பிரவுன் நிறத்தில் இருக்கிறது! எண்ணெய் பட்டிருக்கிறதோ...

      முக்கிய அரசர்கள் பேபப்ரிலும் அந்த பிரவுன் தடங்கள்.//

      பேப்பரே இப்போது போல் நல்ல வெள்ளையாக இருக்காது பழுப்பு நிறம் தான். அது மட்டும் அல்ல பல வருடம் ஆச்சு.

      படம் பசை நிறைய தடவி ஒட்டியதால் அடுத்த பக்கமும் படத்தின் சுவடு கட்ட கட்டமாக தெரிகிறது. எண்ணெய் எல்லாம் படவில்லை.

      நீக்கு
  5. இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. அந்தந்த பாடப்புத்தகங்களிலிருந்தே எடுக்கப்பட்டவை என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. அந்தந்த பாடப்புத்தகங்களிலிருந்தே எடுக்கப்பட்டவை என்பது கூடுதல் சுவாரஸ்யம்.//
      இப்போது நமக்கு ஏதாவது விஷயம் தேவை என்றால் கூகுளில் பார்ப்பது போல நமக்கு சம்பந்த பட்டது பழைய புத்தக கடை, அக்கம் பக்கத்து ஆட்கள், வீட்டுக்கு வருபவர்கள் என்று ஒருவர் விடாமல் கேட்டு பெற்றவை.

      நீக்கு
  6. சில பக்கங்களை படிக்க முடியவில்லை. பார்த்துக்கொண்டே வரும்போது சட்டென சரோஜாதேவி கலர்ஃபுல்லாக வருகிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சில பக்கங்களை படிக்க முடியவில்லை. பார்த்துக்கொண்டே வரும்போது சட்டென சரோஜாதேவி கலர்ஃபுல்லாக வருகிறார்!//

      நீங்கள் கணினியில் படித்தால் படிக்கலாம். நீங்கள் கைபேசியில் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
      என் அப்பா வாங்கி தந்த மாலைகளை பற்றி சொல்ல அவர்கள் படத்தை தேடி போட்டேன். அவர்கள் கழுத்தில் அணிந்து இருக்கும் மாலைகள் போல தான் இருக்கும் நேபாள் போன போது அது போல
      சரம் சரமாக மாலைகளை படம் எடுத்தேன், அதை என் பதிவில் தேடி போடலாம் என்று முதலில் நினைத்தேன், டாலருக்காக சரோஜாதேவி, காஞ்சனாவை போட்டேன். டாலர் அழகாய் இருக்கும் அப்பாவாங்கி வருவது. அம்மா திட்டுவார்கள் காசை கரி ஆக்குவதாக. அவர்களுக்கு தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும் நகை கடைக்காரர் மகள்.
      ஆனாலும் அறுத்து போன மாலைகளை வித விதமாக மீண்டும் மாலை ஆக்குவதில் வல்லவர்.

      இப்போது பிள்ளைகள் வீட்டிலேயே காது தோடுகள், வளையல்கள், நெக்லெஸ் எல்லாம் கற்றுக் கொண்டு செய்து விற்கிறார்கள். தங்கள் உடைக்கு ஏற்றார் போல போட்டு அசத்துகிறார்கள்.

      நீக்கு
  7. படம் பார்த்து கதை... நீங்களே சொல்லி விடுங்கள்!

    இருவரை விசாரிக்கிறார் சோழர். அவர் இரும்பிடர்த்தலையாராக இருப்பாரோ என்று பார்த்தேன். ஏனோ சில பாத்திரங்கள் சாகாவரம் பெற்று மனதில் தங்கிவிடும். கரிகாலன் என்றால் பனிரெண்டு, பதினைந்து வயது பாலக உருவம்தான் மனதில் வரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படம் பார்த்து கதை... நீங்களே சொல்லி விடுங்கள்!//
      நானே சொல்ல வேண்டுமா சரி

      //இருவரை விசாரிக்கிறார் சோழர். //
      ஆமாம்.

      //அவர் இரும்பிடர்த்தலையாராக இருப்பாரோ//
      இரும்பிடர்த்தலையர் கரிகாலனின் தாய் மாமா. கரிகாலின் அப்பா இளஞ்சேட்சென்னி கரிகாலனை இரும்பிடர்த்தலையரிடம் ஒப்படைத்து பாதுகாத்து பட்டத்து இளவரசாக மூடி சூட்ட சொல்லி விட்டு இறந்து விட்டார்.

      //என்று பார்த்தேன். ஏனோ சில பாத்திரங்கள் சாகாவரம் பெற்று மனதில் தங்கிவிடும். கரிகாலன் என்றால் பனிரெண்டு, பதினைந்து வயது பாலக உருவம்தான் மனதில் வரும்!//

      அதனால் தான் அரண்மனைக்கு வழக்கை கொண்டு வந்தவர்கள் பாலகன் எப்படி நல்ல தீர்ப்பு வழங்க முடியும் என்று கேட்டதால்
      இருங்கள் பெரியவரை வர சொல்கிறேன் என்று போய் பெரியவர் போல வேடம் பூண்டு நியாயமான தீர்ப்பை வழங்கி அவர்கள் ஏற்றுக் கொண்ட பின் தன் வேடத்தை கலைத்து தான் யார் என்பதை காட்டியவுடன் "மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது" என்று நிரூப்பித்தார். வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போட கூடாது என்று சொன்னார்.

      இலக்கியங்கள் பாடியது அதிகமாக கரிகால்சோழனைதான்.



      நீக்கு
    2. ஆமாம்.  நினைவுக்கு வந்து .விட்டது.   படித்த ஞாபகம் வருகிறது.  .

      விக்கியில் சொல்கிறார்கள், கரிகாலன் பற்றியோ, அவன் குடும்பம் பற்றியோ அதிகாரபூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை, என்றும் அவன் பற்றி நிலவி வந்த கதைகளையே  வரலாறாக ஆக்கி விட்டார்கள் என்று.

      நீக்கு
    3. இளஞ்சேட்சென்னி பற்றி சாண்டில்யன் ஒரு கதை எழுதி இருக்கிறார்.  கடல்புறா தான் என்று ஞாபகம்.

      நீக்கு
    4. நிறைய இருக்கிறது கரிகாலனுக்கு கதைகள். வரலாறு நிறைய சொல்கிறது.
      சாண்டில்யன் எழுதிய கதை யவனராணி 1960ல் குமுதத்தில் வந்தது.
      எங்கள் வீட்டில் விகடன் தான் வாங்கு வார்கள். 1973 ல் சாண்டில்யன் தான் கதைகள் நூலகத்தில் எடுத்து படித்தேன் .

      நீக்கு
    5. சாண்டில்யன் கதைகளில் டாப் யவனாராணிதான்.  என்னிடம் அப்பா பைண்ட் செய்த ஒரிஜினல் லதா ஓவியங்களுடன் இருக்கிறது.  யவனராணி, டைபீரியஸ், ஹிப்பலாஸ் (ஒரு காற்றின் பெயராம் -  சாண்டில்யன் எழுதி இருக்கிறார்) ஆகியோர் இன்னும் மனதில் நிற்கிறார்கள்.  இதற்கு அடுத்துதான் கடல்புறா.

      நீக்கு
    6. //கரிகாலன் (திருமாவளவன்) வெண்ணி (கோவில்வெண்ணி தஞ்சை - திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) நகரில் சேர மன்னன் பெருன்சேரலாதனையும், பாண்டியனையும், பன்னிரு வேளிர் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த இருங்கோவேள் படையையும் அழித்து மன்னனாக முடி சூடியதை இப்புதினம் விவரிக்கின்றது.//

      உங்கள் கேள்விக்கு விடை அளிக்க தேடியதில் இளசெழியன், கிரேக்க ராணி, பூவழகி கதை நினைவுக்கு வந்து விட்டது, மீண்டும் படிக்க ஆசை வந்து விட்டது. நன்றி. டைப் செய்தால் கைவலி, படித்தால் கண்வலி, இப்படி இருக்கும் பொது ஆசையும் இருக்கிறது.

      நீக்கு
  8. அரிசி மிளகை பிளாஸ்டிக் காவருக்குள் வைத்து பின்செய்த பிறகு பூச்சி எப்படி வரும்? அதுவும் இந்த பேப்பர்களையும் தனித்தனி கவர்களுக்குள் வைத்து பாதுகாத்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பிளாஸ்டிக் காவருக்குள் //

      பிளாஸ்டிக் கவருக்குள் ...!

      நீக்கு
    2. //அரிசி மிளகை பிளாஸ்டிக் காவருக்குள் வைத்து பின்செய்த பிறகு பூச்சி எப்படி வரும்? அதுவும் இந்த பேப்பர்களையும் தனித்தனி கவர்களுக்குள் வைத்து பாதுகாத்திருக்கிறீர்கள்!//

      ஆமாம், புத்தகத்தையும் பூச்சி அரிக்காம்ல இருக்க வேப்பிலை, அத்து உருண்டை, வசம்பு போட்டு வைத்து இருக்கிறேன் புத்தக அலமாரியில்.

      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. சேரநாடு என்றாலே சேரநாட்டுச் செங்குட்டுவன் தான் நினைவுக்கு வருவார். கேரள மொழியில் நிறைய தமிழ்ச்சொற்கள் உண்டு. பல பழமையான கோவில்களும் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      //சேரநாடு என்றாலே சேரநாட்டுச் செங்குட்டுவன் தான் நினைவுக்கு வருவார். கேரள மொழியில் நிறைய தமிழ்ச்சொற்கள் உண்டு. பல பழமையான கோவில்களும் உண்டு.//

      ஆமாம். இமய வரம்பன் நெடுசேரலாதன் என்ற மன்னனுக்கும் அவன் பட்டத்து அரசியான சோழ நாட்டு இளவரசி மணக்கிள்ளிக்கும் பிறந்த மகன். பதிற்றுப்பத்து பதிகம் இவனது தாயின் தந்தை பெயரை ஞாயிற்றுச் சோழன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

      அவர் கண்ணகிக்கு கோயில் கட்டியது தெரிந்த கதை தானே!


      நீக்கு
  10. ஆமாம் தென்னாடு முத்துடைத்து! பாண்டியநாடு என்றால் இது நினைவுக்கு வந்துவிடும்!

    அது போல சோழவளநாடு சோறுடைத்து....

    குறிப்பிட்டிருக்கும் மூவேந்தர்களின் பெயர்களும் நினைவுக்கு வந்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தென்னாடு முத்துடைத்து! பாண்டியநாடு என்றால் இது நினைவுக்கு வந்துவிடும்!

      அது போல சோழவளநாடு சோறுடைத்து....

      குறிப்பிட்டிருக்கும் மூவேந்தர்களின் பெயர்களும் நினைவுக்கு வந்தன.//

      ஆமாம், கீதா
      சேர , சோழ , பாண்டியர்கள் பண்டைய தமிழகத்தை ஆண்டவர்கள் இல்லையா மறக்க முடியுமா?

      நீக்கு
  11. சேரன் செங்குட்டுவன், சாத்தானாரின் மூலம் கோவலன் கண்ணகி கதையறிந்து கண்ணகிக்குச் சிலை வைத்து கோவில் கட்ட நினைத்தவன்.

    இளங்கோவடிகள் கிரீடத்தைத் துறந்து துறவறம் பூண்டிட செங்குட்டுவன் அரசன் ஆனான். சிலப்பதிகாரத்தில் வஞ்சி பகுதியில் வரும் என்ற நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சேரன் செங்குட்டுவன், சாத்தானாரின் மூலம் கோவலன் கண்ணகி கதையறிந்து கண்ணகிக்குச் சிலை வைத்து கோவில் கட்ட நினைத்தவன்.//

      நீங்கள் சொன்னது சரி.

      //இளங்கோவடிகள் கிரீடத்தைத் துறந்து துறவறம் பூண்டிட செங்குட்டுவன் அரசன் ஆனான். சிலப்பதிகாரத்தில் வஞ்சி பகுதியில் வரும் என்ற நினைவு.//

      ஆமாம்.

      சேரன் செங்குட்டுவன், நெடுசேரலாதன்அமர்ந்து இருக்கும் அரண்மனை காட்சியில் ஜோதிடர் இளங்கோதான் அரச பதிவியை அடைவார் என்று சொன்னதை பொய்பித்தார். அப்போதே துறவறம் மேற் கொன்டு செங்குட்டுவன் தான் அரியணை ஏறுவார் என்று கூறியது.
      அந்த கதை தான் நான் ஒட்டி இருக்கும் படம்.

      நீக்கு
  12. ஒரு யானை ஒட்டி இருக்கிறேன் என்று நினைக்காதீர்கள்.அப்போது இப்போது போல கூகுளில் படம் தேடிப் போட முடியாது , அதனால் கிடைத்த படம் ஒட்டி இருக்கிறேன்./

    அப்போ எல்லாம் இப்படித்தான் கிடைக்கும் அக்கா

    கண்ணகி நீதி கேட்கும் படம்

    //எவ்வளவு வருடம் ஆகி விட்டது ! அரிசிக்கு பூச்சி எதுவும் வரவில்லை நிறம் மாறி இருக்கிறது. மிளகும் நன்றாக இருக்கிறது.//

    நல்லா பாதுகாத்திருக்கீங்க...இத்தனை வருஷம் ஆகியும் பொடியாமலும் இருக்கிறதே ஆச்சரியம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ எல்லாம் இப்படித்தான் கிடைக்கும் அக்கா//

      ஆமாம் கீதா, கிடைத்த படத்தை ஒட்டி இருக்கிறேன்.

      கண்ணகி நீதி கேட்கும் படம்//

      ஆமாம் அந்த கதை தான். தெரிந்த கதைதானே!

      //நல்லா பாதுகாத்திருக்கீங்க...இத்தனை வருஷம் ஆகியும் பொடியாமலும் இருக்கிறதே ஆச்சரியம்../

      நன்றி கீதா.

      உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  13. அறுந்த மாலைகளைக் கோர்ப்பது எல்லாம் எனக்குப் பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது. வீட்டில் வாங்கித் தரமாட்டாங்க வீட்டுக்கு வரும் உறவினர்கள் கன்னியாகுமரி போறப்ப எனக்கு வாங்கித் தருவாங்க. அப்படி அதைப் பத்திரமா வைச்சிருப்பேன். அறுந்துச்சுனா பாசி தொலைஞ்சு போச்சுனா அதே நீளம் மாலை கோர்க்க முடியாது.

    அதன் பின் ஏனோ எனக்கு அப்போதே ஒரு ஜென் நிலை வந்துவிட்டது. எதற்கும் ஆசைப்படக் கூடாதுன்னு!!

    செம்பு லட்சுமி நாணயம் எல்லாம் இருந்ததா?

    முதலாம் சமுத்திரகுப்தர் அந்த நாணயம் எல்லாம் நினைவு இருக்கு பார்த்ததும்.

    மஹாபலிபுரம் சிற்பங்கள் வரை எல்லாமே சூப்பர் கோமதிக்கா அப்படியே பாதுகாத்து வருவது அருமையான விஷயம் கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அறுந்த மாலைகளைக் கோர்ப்பது எல்லாம் எனக்குப் பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது. வீட்டில் வாங்கித் தரமாட்டாங்க வீட்டுக்கு வரும் உறவினர்கள் கன்னியாகுமரி போறப்ப எனக்கு வாங்கித் தருவாங்க. அப்படி அதைப் பத்திரமா வைச்சிருப்பேன். அறுந்துச்சுனா பாசி தொலைஞ்சு போச்சுனா அதே நீளம் மாலை கோர்க்க முடியாது.//

      அப்பா வாங்கி கொடுத்தாலும் பொருட்காட்சி போனால் அம்மாவிடம் கேட்போம், அம்மா வாங்கி தர மாட்டார்கள்.

      அம்மாவுக்கு பொறுமை அதிகம் மாலையை மறுபடி ஊசியால் கோர்த்து மாலை செய்வதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது.

      என் பெண்ணுக்கு கருகமணி மாலைதான் பிடிக்கும், ஒவ்வொரு ஆடி பெருக்கு சமயம் அவளுக்கு வித விதமாக டாலருடன் இருக்கும் கருகமணி மாலை வாங்குவேன்.

      //அதன் பின் ஏனோ எனக்கு அப்போதே ஒரு ஜென் நிலை வந்துவிட்டது. எதற்கும் ஆசைப்படக் கூடாதுன்னு!!//

      துறவு நிலை வந்து விட்டால் நல்லதுதான். எளிமை என்றும் நல்லது.

      //செம்பு லட்சுமி நாணயம் எல்லாம் இருந்ததா?//

      அம்மாவைத்து இருந்தார்கள். மிகவும் சின்னது. ஒட்டிய தடம் பார்த்தால் தெரியும்.நல்ல கனமாக இருக்கும். அது நாணயம் இல்லை, அதில் லட்சுமி படம் இருந்ததால் அதை ஒட்டி வைத்தேன்.

      //முதலாம் சமுத்திரகுப்தர் அந்த நாணயம் எல்லாம் நினைவு இருக்கு பார்த்ததும்.//

      பாடத்தில் படித்த நினைவு இருக்கா? நல்லது.

      //மஹாபலிபுரம் சிற்பங்கள் வரை எல்லாமே சூப்பர் கோமதிக்கா அப்படியே பாதுகாத்து வருவது அருமையான விஷயம் கோமதிக்கா.//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  14. கணினியில் படிக்க முடியாத சூழல் பிறகு படிக்கிறேன் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      நேரம் கிடைக்கும் போது பாருங்கள்
      உங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  15. ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறீர்கள்.

    எல்லாமே அழகு. அதிலும் சிறிய பிளாஸ்டிக்கில் சாம்பிள்கள் வைத்திருப்பது அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறீர்கள்.//

      நன்றி நெல்லைத் தமிழன்

      //எல்லாமே அழகு. அதிலும் சிறிய பிளாஸ்டிக்கில் சாம்பிள்கள் வைத்திருப்பது அழகு.//

      யோசனை மட்டுமே என் வேலை பிளாஸ்டிக் பையில் சாம்பிள்கள் வைத்து தைத்து தந்தது அம்மா.
      நோட்டுக்களுக்கு அழகாய் அட்டை போட்டு தருவார்கள்.

      நீக்கு
  16. இப்போது படங்களெல்லாம் சட் சட் என்று எடுத்துவிடலாம், கிடைத்துவிடும். அப்போதெல்லாம் பத்திரிகை பேப்பர் மாத்திரம்தான். நன்கு முயற்சி செய்து கலெக்ட் செய்திருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போது படங்களெல்லாம் சட் சட் என்று எடுத்துவிடலாம், கிடைத்துவிடும். அப்போதெல்லாம் பத்திரிகை பேப்பர் மாத்திரம்தான். நன்கு முயற்சி செய்து கலெக்ட் செய்திருக்கீங்க.//

      ஆமாம், இப்போது படங்கள் எடுத்துவிடலாம் தான்.
      என் அண்ணன் கேலி செய்வார் வீட்டுக்கு வருபவரிடம் படம் கேட்கிறாய் ஓடி விட போகிறார்கள் என்று.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


      நீக்கு
  17. பொக்கிஷம். எத்தனை காலமாக பாதுகாத்து வைத்து இருக்கிறீர்கள் - பிரமிப்பாக இருக்கிறது அம்மா. முந்தைய பதிவும் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //பொக்கிஷம். எத்தனை காலமாக பாதுகாத்து வைத்து இருக்கிறீர்கள் - பிரமிப்பாக இருக்கிறது அம்மா. முந்தைய பதிவும் படிக்கிறேன்.//

      முந்திய பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி வெங்கட்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      வரலாறை தொடர சொன்னவர்கள் நீங்கள்.
      உங்களை காணவில்லையே என்று நினைத்தேன்.

      //ஒவ்வொன்றும் சிறப்பானவை அம்மா//
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி தன்பாலன்.

      நீக்கு
  19. வரலாற்றுப் பதிவுகள் அருமை. நடுநிலைப் பள்ளி காலத்தில் ரெகார்ட் நோட்டுக்காக விதம் விதமாக, வண்ணங்களில் அரசர் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்களின் படங்கள் கிடைக்கும். ஆர்வமாக வாங்கி ஒட்டி கட்டுரைகள் தயாரிப்போம்.

    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //வரலாற்றுப் பதிவுகள் அருமை. //

      நன்றி.

      //நடுநிலைப் பள்ளி காலத்தில் ரெகார்ட் நோட்டுக்காக விதம் விதமாக, வண்ணங்களில் அரசர் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்களின் படங்கள் கிடைக்கும். ஆர்வமாக வாங்கி ஒட்டி கட்டுரைகள் தயாரிப்போம்.//

      உங்கள் இளமை கால நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

      //அருமையான பகிர்வு.//

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  20. படிக்கும் காலத்து உங்கள் ஆக்கங்களை பத்திரப்படுத்தி வைத்திருந்து எங்களுக்கும் காண பகிர்ந்துள்ளீர்கள். அருமையாக உள்ளது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //படிக்கும் காலத்து உங்கள் ஆக்கங்களை பத்திரப்படுத்தி வைத்திருந்து எங்களுக்கும் காண பகிர்ந்துள்ளீர்கள். அருமையாக உள்ளது.//
      உங்களை தேடினேன் காணோம் என்று. வந்து எல்லா பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  21. அக்கா, ஹர்ஷவர்த்தனர் பெயர் மட்டும் நினைவு இருந்தது. இப்ப உங்கள் பதிவு பார்த்ததும் ராஜ்யஸ்ரீ எல்லாம் பள்ளியில் படித்தவை நினைவுக்கு வந்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. உங்க எழுத்து அச்சு போல அழகா இடப்பக்கம் சரிந்து சூப்பரா இருக்கு கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  23. யுவான் சுவாங் இந்தியாவிற்கு வந்தது, நாளந்தா பல்கலைக்கழகம்....உங்கள் குறிப்புகள் நீங்க ஒட்டி வைத்த நோட்புக் எல்லாம் பார்த்ததும் வரலாற்றுப் பாடத்தில் படித்தவை எல்லாம் மீண்டும் இப்ப ரிவிஷன் பார்த்தது போல, பரீட்சைக்குத் தயாராவது போன்ற ஒரு உணர்வு வந்தது!!!! ஹாஹாஹா

    அக்கா இப்ப சின்னப் பிள்ளையாக, பள்ளி படிக்கும் மாணவி போல ஆயிட்டாங்க!!!! சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. இவர் நாகானந்தம், ரத்னாவளீ, ப்ரியதர்சிகா என்ற மூன்று சமஸ்கிருத நாடகங்களை இயற்றியுள்ளார். இவை மன்னரின் அவைப் புலவர்களான பாணபட்டர் முதலியோரால் எழுதப்பட்டவை என்றும் ஒரு கருத்து உண்டு.//

    வரலாற்றில் இதெல்லாம் சகஜமப்பா தான்!!!!

    // இந்த நாடகங்களுக்கு சமஸ்கிருத இலக்கியத்தில் முக்கியப்பங்கு உண்டு..//

    சமஸ்கிருத மொழியே எப்படி வந்தது என்று , சில ஆராய்ச்சிகள் சொன்னதை சமீபத்தில், - ஸ்ரீராம் பகிர்ந்திருந்தார் என்று நினைவு வாட்சப்பில் -வாசித்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. முதலில் சிவன் சூரியன்.....கடவுளர்களை வணங்கினார்.....அந்தக் குறிப்புகளில், பிராகைன்னு சொல்லியிருக்கீங்க இல்லையா அது பிரயாகையைத்தான் அப்ப அப்படிச் சொல்வாங்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  26. நாலந்தா பல்கலைக் கழகம் மிகவும் புகழ் பெற்ற ஒன்று.

    //பிராகையில் நடைபெற்ற திருவிழாவில் மக்களுக்கு வெகுமதிகளை அள்ளி அள்ளி கொடுத்து விட்டு அவை தீர்ந்து போன பின் , தன் பட்டாடைகளையும் தானம் அளித்து விட்டு தன் சகோதரியிடம் ஒரு ஆடையை வாங்கி அதை அணிந்து வந்ததாக என் சரித்திர ஆசிரியர் சொல்வார்.//

    ஓ! புதிய தகவல்.

    ஆமாம் ஹர்ஷர் பற்றி ரொம்பவே பெருமையாகச் சொல்லப்பட்டு படித்த நினைவு இருக்கிறது.

    நூல் ஆசிரியர் கணேசன் அவர்களின் குறிப்புகளும் பார்த்துக் கொண்டேன் அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  27. ஹர்ஷரின் குறிப்பாகத் தன் தங்கைக்காக அவர் செய்ததைப் பார்க்கறப்ப

    அட நம்ம சினிமா இயக்குநர்கள் இதெல்லாம் படிச்சுத்தான் உருவி கதையை உருவாக்கறாங்க போல...மாஸ் ஹீரோ ....தன் தங்கைக்காகப் பழி வாங்குவது உருகுவது எல்லாம்!!! பாருங்க அப்பவே ஹர்ஷர் இப்ப உள்ள மாஸ் ஹீரோவா இருந்திருக்கிறார்...அதாவது நடைமுறை வாழ்க்கையில்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ஹர்ஷரின் அக்கான்னு வரணும்...தெரியாம தங்கைன்னு எழுதிட்டேன்...ஹர்ஷர் மிகச் சிறிய வயதிலேயே ஆட்சிக்கு வந்துவிட்டாரே////பருவ வயதில்....அதான் இப்படி அந்த வயதின் எனர்ஜி!!

    கீதா

    பதிலளிநீக்கு