வியாழன், 8 ஏப்ரல், 2021

அமைதி கொள்வாய் மனமே!                

              தினம் படிக்கும் புத்தகங்களில் இருந்து சில பகிர்வுகள்.


 மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை புத்தகத்திலிருந்து
ஸ்வாமி சிவானந்தா

நாள் ஒரு சிந்தனை தொகுப்பிலிருந்து 

//இந்த மனம் அசையாப் பொருளை அறிந்து அதோடு நிலைத்துவிட்டால் அங்குதான் மனம் என்பது நிலைக்க முடியும் . மற்ற பொருட்கள் எல்லாம் அசைந்து கொண்டே இருக்கக் கூடிய தன்மையுடையவை; மாறிக் கொண்டே 
இருக்ககூடிய தன்மையுடையவை. அதே போல மனமும் அசைந்து கொண்டு மாறி கொண்டுதான் இருக்கும். அதிக  வேகமாக அசைந்து கொண்டு  இருக்கின்ற பொருளோடு மனதை வைக்கின்ற வரைக்கும்  மனம் அந்த அளவு ஆடி கொண்டு  அசைந்து கொண்டு தான் இருக்கும். இந்த உடலில் உயிர் இருக்கின்ற வரையில்  இந்த உடலை பாதுகாக்க, வாழ்க்கையை நடத்திட  அசையும் பொருட்களோடு தொடர்பு கொள்வது அவசியம்தான். ஆனால் அதே நேரத்தில்   எப்பொழுதும் அசைந்து கொண்டே ஆடிக் கொண்டே இருக்கின்ற நிலையில் இருக்கின்றதை விட நிலைத்து இருப்பதும் அவசியம் தான்.ஆகவேதான் மனிதனுக்கு நிலைத்த பொருளாகிய கடவுளை , தெய்வத்தை வழிபடுவது வணங்குவது , அதை உணர்ந்து  கொள்வது, அதோடு லயித்து இருப்பது என்பது அவசியமாயிற்று.//

//ஒவ்வொருவரும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ , பிற்காலத்திலோ , உடலுக்கோ, உயிருக்கோ தீங்கு நேராவண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் அமைதியும் இன்பமும் ஏற்படும்.//

- துன்பம் இல்லாத நிலை பற்றி  அருள்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


இன்று வாட்ஸ் அப்பில் வந்த செய்தி "அமைதியை தேடாதே! அமைதியாக மாறி விடு "என்பது தான். முன்பு பெரியவர்கள் வயதாகி விட்டால் கிருஷ்ணா, ராமா என்று அமைதியாக இருக்கவேண்டும் என்றும், எல்லாம் "மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்" என்றும்," சிவனே என்று இரு" என்றும் சொன்னார்கள். . "சும்மா இரு சொல்லற" என்று அருணகிரிநாதர் சொன்னது போல் இந்த மனம் அலைபாயாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

தியானம் செய்து முடிக்கும் போது  சொல்வது :-
என் மனதில் அமைதி நிலவட்டும்
என்னைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்
உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்
அமைதி அமைதி அமைதி .


அமைதி வந்து விட்டால் நல்லது, அதை இறைவன் அருளவேண்டும். . இயற்கையை ரசிப்பது, பறவைகளை பார்ப்பது, பேரனுடன் விளையாடுவது இப்போதைய  ஆறுதல்.  நாள் அடைவில் அமைதி வந்து சேரும்  என்று நம்புகிறேன்.
இந்த பாட்டு கேட்டேன் நன்றாக இருந்தது அமைதி தெய்வமே இறைவா ! இந்த பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது கேட்டுப் பாருங்கள்.இதுவும் வாட்ஸப் செய்திதான்


வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழாவில் எப்போதும் "உலக நலவேள்வி என்று ஒவ்வொரு மன்றத்திலும்  "வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்று  சொல்லுவோம். இந்த முறை  மார்ச் 28  மாலை 6 மணிக்கு ஆன்மீக உலக சாதனையாக பஞ்சபூத நவகிரக தவம்  செய்ய அழைத்தார்கள். எங்கள் மாயவரம் மன்றத்திலிருந்து.

அதில் குருவருளால் கலந்து கொண்டேன். உலக நன்மைக்காக செய்யபட்ட தவத்தில்  ஒரு சிறு பங்களிப்பு என்ற பெருமிதம் மனதில் வந்தது.

இன்றைய இக்கட்டன சூழ்நிலை (கொரோனா காலம்)
சரியாக கூட்டுதவம் செய்தோம். உலக மக்கள் நன்மைக்காக " பஞ்சபூத நவகிரக தவம்"  செய்தோம்.

அதில் கலந்து கொண்டதற்கு கிடைத்த சான்றிதழ்

இந்த காணொளியில் எவ்வளவு பேர் கலந்து கொண்டார்கள் என்ற விவரம் இருக்கிறது. சிறிய காணொளிதான்.

மகரிஷியின் வேள்வி தினத்தில்    நடைபெற்ற  உலக சாதனை தவத்தில் உலக சமுதாய சேவா சங்கம்  கின்னஸ் சாதனை புரிய உதவிய அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.    

ஆன்மீக உலக சாதனை  என்பதை காட்டிலும் உலக நன்மைக்காக  அன்பர்கள் இணைந்து தவம் ஆற்றியது மனதுக்கு மகிழ்ச்சி ஆறுதல். 

                                               வாழ்க வையகம்

//நமது ஐவகைக் கடமைகளில் கடைசியில் வரும் உலகக்கடமையினை  ஆற்றுவதில் முடிந்த வரையில் மிகுதியான அக்கறை  எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

 பொருளிலோ , செல்வாக்கிலோ உடல்கட்டிலோபோதிய வலிவு இல்லாத நாம் எப்படி உலக நலக் கடமையினை ஏற்று ஆற்ற முடியும் என்று எவரும் மலைக்கவோ சோர்வுறவோ வேண்டாம் .  உலக நலத்திற்காக உங்கள் விருப்பத்தைச் சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலித்துக் கொள்ளுங்கள்.  சிதாகாசமாக இயங்கும் உங்கள் உயிராற்றலிருந்து கிளம்பும் அந்த உயர்ந்த நினைவு அலை மகாகாசம் என்ற பேரியக்கத் தொடர்கள்  உயிரோடு கலந்து அந்த விருப்பம் நிறைவேற  வழி வகுத்துக் கொள்ளும் .
உங்கள் கடமைகளில் ஒன்றாக நாள்தோறும் "வாழ்க வையகம் " என்ற  மந்திரத்தை பத்துதடவையாகிலும் நமது உடன் பிறந்தவர்களாகிய உலக மக்கள் அனைவரையும் விரிவாக நினைத்து ஒலித்துக் கொண்டிருங்கள்.//
-வேதாத்திரி மகரிஷி

       வாழ்க வையகம்!  வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
==========================================================

41 கருத்துகள்:

 1. முதல் இரண்டு புத்தகங்களும் அப்பா வைத்திருந்து பார்த்த ஞாபகம்.  ஆனால் இங்கு எடுத்து அடுக்கும்போது கண்ணில் படவில்லை.  மதுரையிலேயே யாரோ லவட்டி இருக்கவேண்டும்! Fatalism மீது எனக்கும் நம்பிக்கை உண்டு.  வேறு வழியில்லை என்று ஏற்றுக் கொள்ளவேண்டியவற்றுக்கு வேறு என்னதான் சமாதானம் இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   முதல் புத்தகம் ஒரு கல்லூரி ஆசிரியர் மகன் திருமணவிழாவில் தாம்பூல பையில் போட்டு கொடுத்தார்கள்.
   அடுத்த மகரிஷி புத்தகம் ஆழியாரில் பொறுப்பாசிரியர் பயிற்சிக்கு போன போது மன்ற அன்பர் நினைவு பரிசாக கொடுத்த புத்தகம்.
   ஏற்று கொள்ளவேண்டியவற்றை ஏற்று சமாதானம் ஆக வேண்டியதுதான்.

   நீக்கு
 2. சாந்தி நிலவவேண்டும் பாடல் ஷேர் செய்திருப்பீர்களோ என்று பார்த்தேன்.  பகிர்ந்திருக்கும் பாடல் வெகு இனிமை.  உலக நலவேள்வியில் கலந்துகொண்டதற்கு பாராட்டுகள்.  உங்கள் மனதில் நல்ல அமைதி நிலவ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாந்தி நிலவ வேண்டும் முன்பு பகிர்ந்து இருக்கிறேன். அப்புறம் "அமைதி புறாவே," முன்பு மனமே நீ ஈசன் நாமத்தை, "கலங்காது இரு மனமே ஒரு போது அவனின்று ஒரு அணுவும் அசையாதே!" எல்லாம் அதனால் புது பாடல் இனிமையான பாடல் தேடி பகிர்ந்து இருக்கிறேன். பாடல்வரிகள் மிக அருமையாக இருக்கிறது.
   நீங்கள் கேட்டது மகிழ்ச்சி.

   உங்கள் கருத்துக்கு , பாராட்டுக்கு, பிரார்த்தனைக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. மன அமைதிக்கு நல்லதொரு பகிர்வு. வேதாத்ரி மஹரிஷியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அமுத மொழி. இங்கே ஸ்வாமி சிவாநந்தா/யோகி ராம்சூரத்குமார் ஆகியோரும் உலக க்ஷேமத்துக்காகப் பாடுபட்டவர்களே! உலக நல்வேள்வியில் கலந்து கொண்டதற்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். உலகெங்கும் அமைதி நிலவப் பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //ஸ்வாமி சிவாநந்தா/யோகி ராம்சூரத்குமார் ஆகியோரும் உலக க்ஷேமத்துக்காகப் பாடுபட்டவர்களே!//

   ஆமாம்.

   //உலக நல்வேள்வியில் கலந்து கொண்டதற்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். உலகெங்கும் அமைதி நிலவப் பிரார்த்தனைகளும்.//
   பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
   பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

   நீக்கு
 4. இந்தக் கருத்து போயிருக்கா/இல்லையானு தெரியலை. சமீப காலமாக என்னோட கருத்துகள் போய்ச் சேர்வதில்லை. பின் தொடரும் கருத்துகள் மட்டும் வருகின்றன. ஆகவே மீண்டும் இரண்டாம் முறையாகக் கொடுக்கப் போகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் உங்கள் கருத்துக்கள் எனக்கு வந்து சேரவில்லை என்று தெரியவில்லையே
   இன்று கொடுத்த கருத்துக்கள் வந்து இருக்கிறதே!
   இரண்டாம் முறை கொடுத்த கருத்தையும் போட்டு இருக்கிறேன் .

   நீக்கு
 5. மன அமைதிக்கு நல்லதொரு பகிர்வு. வேதாத்ரி மஹரிஷியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அமுத மொழி. இங்கே ஸ்வாமி சிவாநந்தா/யோகி ராம்சூரத்குமார் ஆகியோரும் உலக க்ஷேமத்துக்காகப் பாடுபட்டவர்களே! உலக நல்வேள்வியில் கலந்து கொண்டதற்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். உலகெங்கும் அமைதி நிலவப் பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகெங்கும் அமைதி நிலவப் பிரார்த்தனைகளும்.//

   எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்.

   உங்கள் கருத்து இடம்பெற்றுவிட்டது.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 6. அன்பின் கோமதி,
  வாழ்க வளமுடன். என்றும் அமைதி நிலவட்டும்.
  மஹரிஷிகளின் தத்துவங்கள் மனதுக்கு இதம் அளைப்பவை.
  உலக அமைதி வேள்வியில் நீங்களும் கலந்து கொண்டது மிக மிக
  மகிழ்ச்சி.
  அமைத்திப் புறா பாடல் மிகப் பிடிக்கும். நீங்கள் காணொளியாகத்
  தந்திருக்கும் பாடலும் நன்றாக இருந்தது.

  தியானமும் அமைதியும் சில சமயங்களில் கூடுகின்றன.
  சிலசமயங்களில் மனம் அலை பாயத்தான் செய்கிறது.

  நல்லதையே நாடுவோம். அமைதி குழந்தைகள் வடிவத்தில்
  இறைவன் அனுப்புகிறான்.
  அனுபவிப்போம்.
  அருமையான பதிவுக்கு மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   //உலக அமைதி வேள்வியில் நீங்களும் கலந்து கொண்டது மிக மிக
   மகிழ்ச்சி.//

   ஆமாம் அக்கா அதில் கலந்து கொண்டது மகிழ்ச்சி தந்தது.
   தியானத்தில் நினைவுகள் வந்து முன் நிற்கின்றன. இன்னும் காலம் ஆகும் மனம் ஒருநிலைபட.

   //நல்லதையே நாடுவோம். அமைதி குழந்தைகள் வடிவத்தில்
   இறைவன் அனுப்புகிறான்.
   அனுபவிப்போம்.//

   ஆமாம் அக்கா. நீங்கள் சொல்வது சரிதான்.

   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.   நீக்கு
 7. வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. அருமையான புத்தகங்கள். அதில் இடம் பெற்ற வாக்கியங்கள் மனதை சுத்தப்படுத்தி மன அமைதியை தருகின்றன. பொதுவாக மனத்தை அமைதியாக வைத்துக் கொள்ளத்தான் தினமும் பாடுபடுகிறோம். அந்த பரமானந்த அமைதி நிரந்தரமாக கிடைத்து விட்டால் அதற்கிணை வேறு எதுவுமில்லை.

  நீங்கள் வேதாந்த மகரிஷியின் வருடாந்திர தியான வழிபாட்டில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். முன்பு எங்கள் அண்ணா மன்னியும்,ஆழியாறு பயிற்சி மையத்திற்கு சென்று வந்து கொண்டிருந்தனர். அவர்களும் அங்கு சொல்லும் வழிபாட்டு உரைகளை விபரமாக எனக்கும் சொல்வார்கள்.

  நாமனைவரும் அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டுமென தினமும் பிராத்தனைகள் செய்கிறோம். அதன் பின் நடப்பது நம் ஊழ்வினைப் பயன்கள். என்ன செய்வது.? வருவதை தாங்கிக் கொள்ளும் மனதையும் அவன்தான் அருள வேண்டும்.அந்த பிராத்தனைகள்யும் தவறாது செய்ய வேண்டும்.

  /தியானம் செய்து முடிக்கும் போது சொல்வது :-
  என் மனதில் அமைதி நிலவட்டும்
  என்னைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்
  உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்
  அமைதி அமைதி அமைதி ./

  அருமையான வரிகள். வாட்சப் வரிகளும் நன்றாக உள்ளன. நல்ல ஒரு பக்திப் பதிவினை, அதுவும் மனம் அமைதி பெற வகை செய்யும் பதிவினை இன்று தந்ததற்கு உங்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன். காணொளி பாடல் பதிவில் எங்கு உள்ளதென தெரியவில்லையே... மீண்டும் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன். வாழ்க வளமுடன்

   //அந்த பரமானந்த அமைதி நிரந்தரமாக கிடைத்து விட்டால் அதற்கிணை வேறு எதுவுமில்லை.//

   நீங்கள் சொல்வது உண்மை கமலா.

   //முன்பு எங்கள் அண்ணா மன்னியும்,ஆழியாறு பயிற்சி மையத்திற்கு சென்று வந்து கொண்டிருந்தனர்./

   நீங்கள் முன்பு சொல்லி இருக்கிறீர்கள்.
   நானும் பொறுப்பாசிரியர் பயிற்சி வரை கற்றுக் கொண்டேன் ஆழியார் போய்.
   மாயவரம் மன்றத்திற்கு தவறாமல் போய் வந்தேன். கற்றுக் கொண்டேன்,கற்றுக் கொடுத்தேன்.


   //நாமனைவரும் அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டுமென தினமும் பிராத்தனைகள் செய்கிறோம். அதன் பின் நடப்பது நம் ஊழ்வினைப் பயன்கள். என்ன செய்வது.? வருவதை தாங்கிக் கொள்ளும் மனதையும் அவன்தான் அருள வேண்டும்.அந்த பிராத்தனைகள்யும் தவறாது செய்ய வேண்டும்.//

   ஆமாம், நீங்ககள் சொல்வது சரிதான். வருவதை தாங்கி கொள்ளும் மனபலத்தை தர இறைவனை வேண்டி கொள்வோம் அதை தவிர வேறு வழி இல்லையே!

   பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.


   அலை பேசி வழியாக படித்தால் சிலருக்கு இந்த பாட்டு தெரிவது இல்லை.கீழே சுட்டி கொடுத்து இருக்கிறேன் பாருங்கள்.

   https://www.youtube.com/watch?v=ilSwdnEjf4c

   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி .

   நீக்கு
 8. உலக நல் வேள்வியில் கலந்துகொண்டதற்குப் பாராட்டுகள். முன்னமே சொல்லியிருந்தால் இணையத்திலும் பலர் கலந்துகொண்டிருப்பார்கள்.

  மற்ற பகிர்வுகள் ரசிக்கும்படி இருந்தது. இன்றைய தினம் ஆன்மீகப் பதிவாகப் போய்விட்டது. அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது சரிதான், முன்னமே சொல்லி இருக்கலாம். எனக்கு முதல் நாள் செய்தி அனுப்பினார்கள்.
   பகிர்வுகளை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   உங்கள் பாராட்டுக்கும் நன்றி.

   நீக்கு
 9. மிகவும் அருமையான பதிவு...

  அமைதியாக மாறி விடு... ஆகா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   அமைதி அனைத்துக்கும் அருமருந்து.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. மனது அமைதியடைய வேண்டும் - இதுவே அனைவருடைய ஆசையும்.

  மன அமைதிக்கான விஷயங்கள் நன்று.

  காணொளிகளை மாலையில் காண்பேன்.

  பதிலளிநீக்கு
 11. அமைதி.. அமைதி..
  அருமையான பதிவு..

  வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

   நீக்கு
 12. ஞான சம்பந்தர் அருளிச் செய்த வையக வாழ்த்துப் பாடலையும் சேக்கிழார் வழங்கிய பெரிய புராணத்தின் வாழ்த்துப் பாடலையும் மறப்பதேயில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஞான சம்பந்தர் அருளிச் செய்த வையக வாழ்த்துப் பாடலையும் சேக்கிழார் வழங்கிய பெரிய புராணத்தின் வாழ்த்துப் பாடலையும் மறப்பதேயில்லை...//

   அவர்கள் வையகம், வையக மக்கள் நலம் வாழ பாடியதை தினம் பாடி வருவது நல்லது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 13. ஆண்டவனின் திட்டம் அவர் ஒருவருக்கு தெரியும் .நாம் எல்லாம் அவரால் ஆட்டுவிக்கப்டும் பொம்மைகள் ..சிவானந்தா அவர்களின் புத்தகத்தில் இருந்து எடுத்துக்காட்டிய பகுதி அருமை 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்

   //ஆண்டவனின் திட்டம் அவர் ஒருவருக்கு தெரியும் .நாம் எல்லாம் அவரால் ஆட்டுவிக்கப்டும் பொம்மைகள்//

   ஆமாம் ஏஞ்சல்.
   இந்த பகிர்வு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

   நீக்கு
 14. /////ஒவ்வொருவரும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ , பிற்காலத்திலோ , உடலுக்கோ, உயிருக்கோ தீங்கு நேராவண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் அமைதியும் இன்பமும் ஏற்படும்.////
  இதை உலக மக்கள் புரிஞ்சி நடந்தா எவ்ளோ நல்லா இருக்கும்க்கா ,இந்த வரிகளை தனியே பிரிண்ட் அடிச்சி கொடுக்கணும் எல்லாருக்கும் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ,//இந்த வரிகளை தனியே பிரிண்ட் அடிச்சி கொடுக்கணும் எல்லாருக்கும் //

   எங்கள் மன்றத்தில் இந்த வாசகத்தை பிரிண்ட் அடிச்சி ஒட்டிக் கொள்ள ஸ்டிக்கராக கொடுக்கிறார்கள், வாழ்க வளமுடன் ஸ்டிக்கரும் உண்டு.

   நீக்கு
 15. அமைதியாக மாறிவிடு .நல்ல ஒரு வாட்சப் பகிர்வு .//இன்றைய இக்கட்டன சூழ்நிலை (கொரோனா காலம்)
  சரியாக கூட்டுதவம் செய்தோம். உலக மக்கள் நன்மைக்காக " பஞ்சபூத நவகிரக தவம்"  செய்தோம்.//நல்ல விஷ்யம்க்கா ..உலக நன்மைக்காக அனைவரும் கூட்டு வேள்வி செய்வது என்பது மிகவும் அருமையான விஷயம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாட்சப் பகிர்வு சில இப்படி மனதை தொடும் அதை மட்டும் எடுத்து வைத்துக் கொள்வேன்.

   //உலக நன்மைக்காக அனைவரும் கூட்டு வேள்வி செய்வது என்பது மிகவும் அருமையான விஷயம் .//

   ஆமாம் ஏஞ்சல். அடுக்கு தும்மல் சரியாக மூச்சுப்பயிற்சி கற்றுக் கொள்ள இங்கு போனேன் . அப்புறம் அங்கு சொன்ன விஷயங்கள் பிடித்து போக அதில் நிறைய கற்றுக் கொண்டேன். வாரத்தில் மூன்று நாள் போவேன். மாயவரத்தில் இருந்த நாட்கள் மிகவும் அருமையான நாட்கள். கோவில்கள், மற்றும் இப்படி சதசங்கம் என்று நிம்மதி கொடுத்த ஊர்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஏஞ்சல். பாட்டு கேட்டீர்களா?

   நீக்கு
  2. பாட்டு கேட்டீர்களா மகிழ்ச்சி.

   நீக்கு
 16. சிறப்பான பகிர்வு. மனதில் நிறுத்த வேண்டிய அறிவுரைகள். எத்தனை அறிந்திருப்பினும் மனம் சோர்வடையும் போது அதைக் கடந்து வருவது சிரமமே. கற்ற தியானமும் இறையருளும் நிச்சயம் கை கொடுக்கும். எனது பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //மனதில் நிறுத்த வேண்டிய அறிவுரைகள்.//
   ஆமாம்.

   //எத்தனை அறிந்திருப்பினும் மனம் சோர்வடையும் போது அதைக் கடந்து வருவது சிரமமே//

   ஆமாம் ராமலக்ஷ்மி, இங்கு எடுத்து வந்து இருக்கிறேன் நாள் தோறும் படிக்கிறேன். ஆனாலும் நீங்கள் சொல்வது போல் மனம் சோர்வடையும் போது அதை கடக்க கஷ்டபடுகிறேன். இறையருளால் வீட்டில் இருந்து வேலை பார்க்கிறார்கள் மகன் , மருமகள், பேரனும் அப்படியே வீட்டிலிருந்து படிக்கைறான் அதனால் மனம் சமாதானம் அடைகிறேன்.

   //கற்ற தியானமும் இறையருளும் நிச்சயம் கை கொடுக்கும். எனது பிரார்த்தனைகள்.//
   கற்ற தியானமும் இறையருளும் கை கொடுத்து வருகிறது ராமலக்ஷ்மி. உங்கள் கருத்துக்கும் பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி.


   நீக்கு
 17. உலகில் எல்லா மனிதர்களுமே அமைதியை விரும்புகிறார்கள். அந்த சூழலை இறைவன் சிலருக்கு மட்டுமே வழங்குகிறான்.

  உலக மக்கள் அனைவரும் அமைதியுடன் வாழ இறையே துணை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //உலகில் எல்லா மனிதர்களுமே அமைதியை விரும்புகிறார்கள்.//

   உண்மை.
   //அந்த சூழலை இறைவன் சிலருக்கு மட்டுமே வழங்குகிறான்//

   அந்த சூழலை நம்மை அமைத்துக் கொள்ள சொல்கிறான் போலும் இறைவன்.

   //உலக மக்கள் அனைவரும் அமைதியுடன் வாழ இறையே துணை//

   உண்மை அனைவரும் அமைதியுடன் வாழ இறையே துணை.
   உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.
   நீக்கு
 18. மன அமைதிக்கான சிறந்த பதிவு.
  காலையிலேயே ஒரு கமெண்ட் அனுப்பினேன். உங்களுக்கு வந்து சேரவில்லையென்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   //காலையிலேயே ஒரு கமெண்ட் அனுப்பினேன். உங்களுக்கு வந்து சேரவில்லையென்று நினைக்கிறேன்.//

   ஏன் இப்படி தெரியவில்லையே!
   இந்த கமெண்ட் தான் வந்தது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 19. புத்தகத்தில் உள்ளது உண்மைதானே கோமதி அக்கா.. எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டபடியேதான் நடக்கிறது, அதனால நாம், ஏன் எதுக்காக நடந்தது?.. என்பது போன்ற கேள்விகள் கேட்காமல்.. பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.. நம் கையில் எதுவுமில்லை.

  சேர்டிபிகேட் இப்போ எல்லாமே ஒன்லைனில் வருகிறதே.. கொரோனா மயம்.. வாழ்த்துக்கள்.

  பாட்டு மனதுக்கு அமைதியைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

   //எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டபடியேதான் நடக்கிறது, அதனால நாம், ஏன் எதுக்காக நடந்தது?.. என்பது போன்ற கேள்விகள் கேட்காமல்.. பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்..//

   ஆமாம் அதிரா. மாமாவும் அப்படித்தான் சொல்வார்கள்.

   //சேர்டிபிகேட் இப்போ எல்லாமே ஒன்லைனில் வருகிறதே.. கொரோனா மயம்.. வாழ்த்துக்கள்.//

   கொரோனா காலத்தில் இப்படி வீட்டிலிருந்து படிப்பு கூட்டுப்பிரார்த்தனை என்று எல்லாம் நடக்கிறது.
   உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
   பாட்டுவரிகள், பாடியவிதம் பிடித்து இருந்தது. அமைதியை தருகிறது என்று கேட்ட போது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி நன்றி.


   நீக்கு
 20. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
  மன அமைதிக்கு தினம் படிக்கும் நூல்கள் இது.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு