திங்கள், 2 ஏப்ரல், 2018

புத்தக வாசிப்பு

முன்பு எல்லாம் பொழுதுபோக்கு என்றால் கதைப் புத்தகம் வாசித்தல், வானொலி
கேட்டல் என்று இருக்கும்.
நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வருவோம்.
வீட்டில் வாங்கும் வாரஇதழ்களில் வரும் கதைகளை ஆர்வமுடன் படித்து அடுத்த வார இதழை எதிர்பார்த்த காலம் உண்டு.

மழை நேரம்  வானொலி கேட்க முடியாது கரண்ட் கட், டிரான்ஸிஸ்டருக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு விடும் அதை வெயிலில் காய வைக்க வேண்டும்.
அப்போது எல்லாம் நாம் நாடுவது கதைப் புத்தகம் தான்.

படுத்துக் கொண்டு கடலையைக் கொறித்துக் கொண்டு கதை படிப்பது ஒரு சுகமான அனுபவம். அப்போது கதையில் ஆழ்ந்து விட்டால் (கதை திகில் நிறைந்த காட்சி அல்லது மர்மம் வெளிப்படும் சமயம் என்றால் ) அம்மா கூப்பிட்டாலும் கேட்காது.
இப்போது தொலைக்காட்சிப் பெட்டி, கணினி என்று நேரத்தைப் போக்கும் காலத்திலும் புத்தக வாசிப்பு இருப்பதும் படித்த படித்துக் கொண்டு இருக்கும் புத்தகங்களை ஒரு வாரம் பகிர நண்பர்களை அழைப்பதும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. (முக நூலில்)
என்னை இரண்டு பேர் அழைத்து இருக்கிறார்கள். வாசிப்பைச் சுவாசிப்பாய்
நேசிப்பவர்கள்.
ரேவதி நரசிம்மன் ( வல்லி அக்கா)
ஆதி வெங்கட்

இன்று முதல் நாள் பதிவாய் "ராஜாளி மடம்" கதைப் புத்தகம்.

என்னை அறியாமலே முதல் பகிர்வாய் கி.ரா. கோபாலன் அவர்கள் கதையைப் பகிர்ந்து இருக்கிறேன்.

வாசிப்பை ஊக்கப்படுத்தியவர்.
அவரைப் பற்றிப் படித்துத்  தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து இருக்கிறேன்.


எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ள புத்தகம்.  வாசித்த புத்தகப் பகிர்வு என்ற போது இதைப் பகிர எண்ணம் வந்தது. 1952 ம் வருடம்  கல்கியில் எழுதப்பட்ட கதை. தொடர்நாவல்.

நான் பிறக்கும் முன்பே வந்த கதை!

இந்த புத்தகம் எனக்கு ஒரு மாமி கொடுத்தார்கள். அவர்கள் வேறு ஊருக்குப் போவதால் ஒரு சில கதைப் புத்தகங்கள் கொடுத்தார்கள் வைத்துக் கொள்ள. அவர்கள் நினைவைச் சொல்லிக் கொண்டு. அது இப்போது எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியில் இருக்கிறது.

முன்பு பல காலங்களுக்கு முன் படித்த  கதை. அதை எழுதியவரைப் பற்றி நீங்கள் கேட்டால் சொல்ல வேண்டுமே என்று இணையத்தில் தேடினால்  "தி.இந்து" பத்திரிக்கையில்  எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் இவரைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்.


//1945-ல், கும்பகோணம் சாரங்க பாணி கீழச் சன்னதித் தெருக் கோடியில் ஆராவமுதுக்குச் (பெருமாளைச் சொல்கிறேன்) சொந்தமான ஒரு மண்டபம் இருந்தது. கோயிலுக்குச் சொந்தமான பல மண்டபங்கள் அந்தக் காலத்திலேயே தனியார்வசம் போய்விட்ட காரணத்தால், ‘பெருமாளுக்கு இன்னும் சொந்தமாக இருந்த மண்டபம்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போது இருந்த கோயில் நிர்வாகி படித்தவராக இருந்திருக்க வேண்டும். அந்த மண்டபத்தில் ஒரு வாசக சாலை நடத்த அனுமதித்திருந்தார்.
அந்தக் காலத்து தினசரிகள், வார, மாதப் பத்திரிகைகள் அனைத்தும் வரும். நிறையப் பேர் படிக்க வருவார்கள். சுதந்திரப் போராட்டக் காலம் அது. அந்த வாசக சாலையை நடத்துவதில் கி.ரா.கோபாலன் என்பவர் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
கி.ரா.கோபாலன் இளம்வயதிலேயே மறைந்த ஒரு நல்ல எழுத்தாளர். ‘கல்கி’ இதழ் ஆரம்பித்த புதிதில் நடத்திய சிறுகதைப் போட்டியில் (அது தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் முதல் போட்டியாகக்கூட இருக்கலாம்) முதல் பரிசு பெற்றவர். அந்தக் காலத்துப் பிரபல எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்ட போட்டி அது.
க.நா.சுப்ரமணியம் கதை அனுப்பலா மென்று நினைத்தாராம். ‘‘அதுக்குள்ளே ரா.கி. (கல்கி) என்னைக் கூப்பிட்டு ஜூரியா இருக்கச் சொல்லிட்டார். ஒருவேளை நானும் கதை அனுப்பிச்சுடுவேன்னு பயந்துட்டாரோ என்னவோ’’ என்று க.நா.சு. பிற்காலத்தில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
பரிசு பெற்ற கதையின் பெயர் ‘ஏழ்மை யில் இன்பம்’என்று நினைக்கிறேன். லேசான அங்கதச் சுவையுடன் வறுமையைப் படம்பிடித்துக் காட்டும் கதை. புதுமைப்பித்தன் பாதிப்பாக இருக்கலாம்.
வாசக சாலையின் பெயர் ‘ஜெய மாருதி வாசக சாலை’. வாசக சாலையின் லோகோ அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு விண்ணில் பறப்பது போல் இருக்கும். அந்தப் படத்தை வரைந்தவரும் கோபாலன்தான்!
கி.ரா.கோபாலன் எழுத்தாளர் மட்டும் இல்லை; நல்ல ஓவியர். தமிழ் சாகித்தியங்களும் எழுதியிருக்கிறார். இதைப் பற்றி ஒரு முக்கிய செய்தியைப் பதிவு செய்தாக வேண்டும்.
அவர் ‘நித்திரையில் வந்து என் நெஞ் சில் இடங்கொண்ட’என்ற ஓர் இசைப் பாடலை இயற்றி அக்காலகட்டத்தில் மிகப் பிரபலப் பாடகராக இருந்த என்.சி. வசந்த கோகிலத்திடம் கொடுத்திருக் கிறார். பாட்டு நன்றாக இருந்ததால் இசைத் தட்டாக வெளியிட ஒப்புக் கொண் டார். ஆனால், இசைத்தட்டு வெளிவந்த போது, இயற்றியவர் பெயராக ‘சுத்தானந்த பாரதி’ பெயர் இருந்தது.
கோபாலன் கோபத்துடன் வசந்த கோகிலத்தைப் பார்க்கப் போயிருக்கிறார். வசந்த கோகிலம் கணவர் ‘சாச்சி’ (சதாசிவம்) சொல்லியிருக்கிறார்: ‘ ‘உன் பேரை யாருக்குத் தெரியும்? அதுக்காக ரெக் கார்ட் கம்பெனி சுத்தானந்த பாரதியார் பெயரைப் போட்டிருக்கான். நல்லா விற்கணுமில்லையா? உனக்குப் பணம் வந்தாச்சு இல்லையா, பேசாமெ இரு. கேசு, கீஸுன்னு அலையாதே. டேய்… யார்றா அங்கே, இவருக்கு நூறு ரூபா கொடு. நானும் பணம் தர்றேன், போறுமா?’’
கோபாலன் இதைச் சொன்னது என் மனத்திரையில் இன்னும் அப்படியே நிழலாடுகிறது.//

இதைப் படித்தபோது மனம் கஷ்ட பட்டது. 

மேலும்    நம் நம்பிக்கைதான் நம் வரலாறு என்ற இன்னொரு கட்டுரையிலும் இவரைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

//அவர் ஓர் எழுத்தாளர். ஓவியம் வரையவும் தெரியும். முப்பது வயது இருக்கும். ஒட்டிய கன்னங்கள். கூர்மயான கண்கள். நீண்ட மூக்கு. கதர் குர்த்தா, வேட்டி,, மேல்துண்டு. வாயில் எப்பொழுதும் வெற்றிலை, சீவல், புகையிலை. மெலிதான தோற்றம். பெயர் கி.ரா.கோபாலன்.

கி.ரா. கோபாலன் ஒரு நல்ல எழுத்தாளர். தமிழின் நல்ல எழுத்தாளர்களில் பலர், கோஷ்டிச் சண்டை விளம்பரத்தில் அகப்பட்டுக் கொள்ளாத காரணத்தினால், இக்காலச் சந்ததியினருக்கு அறிமுகம் ஆகாமலேயே போய்விட்டார்கள். ‘கல்கி’ யில் முதல் பரிசு வாங்கிய அவர் கதை ( ‘ஏழ்மையில் இன்பம்’’ ) ஒரு நல்ல கதை. அவர் பிறகு ‘கல்கி’யில் துணை ஆசிரியராகச் சேர்ந்து சில ஆண்டுகள் பணிபுரிந்தார். இளமையிலிருந்தே வறுமையில் உழன்ற காரணத்தினாலோ என்னவோ காசநோய்க்குப் பலியானார்.//
நான் இன்று முக நூலில் பகிர்ந்த கதை ராஜாளி மடம் என்ற கதையில் ஓவியர் பெயர் 'ரா" என்று  கையெழுத்துப் பார்த்தேன். தன் கதைக்கு அவரே ஓவியம் வரைந்ததை அறிந்து கொண்டேன்.
இக் கட்டுரையால்.

அபலை அஞ்சுகம் நாவல் எழுதிய கி. ரா. கோபாலன்,

தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு கி.ரா. கோபாலன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல; நல்ல கவிஞருமாவார். சித்திரக் கலையிலும் மிகுந்த அனுபவம் உள்ளவர். "காட்டூர் கண்ணன்" "கோணல்" "துதிக்கையார்" முதலிய புனைபெயர்களில் நீண்ட காலமாகக் கல்கி பத்திரிகையில் எத்தனையோ கவிதைகளையும், ஹாஸ்யக் கட்டுரைகளையும், அரசியல் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவருடைய எண்ணற்ற சிறுகதைகளையும் ராணி மாதவி, ராஜாளி மடம், அபலை அஞ்சுகம் முதலிய அருமையான பெரிய நாவல்களையும் வாசகர்கள் படித்து மகிழ்ந்திருப்பார்கள். "மாலவல்லியின் தியாகம்" என்ற சரித்திரத் தொடர்கதை கல்கியில் வெளிவந்த போது படித்துப் பாராட்டாதவர்கள் இல்லை. பின்னால் இந்தக் கதையில் அவர் எழுதி வைத்திருக்கும் திடுக்கிடும் சம்பவத்தைப் போலவே திரு. கி.ரா. கோபாலன் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர தினத்தன்று அனைவரையும் திடுக்கிடும்படி செய்துவிட்டு மறைந்துவிட்டார். அவருடைய இளம் மனைவியையும் எட்டு வயதிலிருந்து மூன்று மாதக் குழந்தை வரையில் இருக்கும் உலகம் தெரியாத ஐந்து குழந்தைகளையும் தனியே விட்டு விட்டு சென்ற அவரின் மறைவு வேதனை அளிப்பதாகும். அவருடைய மறைவு தமிழ் நாட்டுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் மிகப் பெரிய நஷ்டமாகும். ” http://www.chennailibrary.com/gopalan/gopalan.html

 சிறந்த  எழுத்தாளர் வறுமையில் வாடி   நோய்வாய்ப்பட்டு மறைந்ததைப் படிக்கும் போது மனது கஷ்டப்படுகிறது.

பழைய எழுத்தாளர்களைப் பற்றி ஜீவி சார் "பூவனம்" வலைத்தளத்தில்,  "அழியாசுடர் "வலைத்தளத்தில் எல்லாம் படித்து இருக்கிறேன். ஆனால் இவரைப் படித்த நினைவு இல்லை.
ஜீவி சாருக்கு இந்த எழுத்தாளரைத் தெரிந்து இருக்கலாம், கும்பகோணத்தில் இருந்து இருப்பதால்.


இக் கதையில் வரும் பொன்னி, மருதப்பன்.

 கதாநாயகி வேதாவையும், கதாநாயகன் டாக்டர் பரசுராமனையும் சேர்த்து வைப்பவர்கள் இந்த  பொன்னி, மருதப்பன் தான்.

கதாநாயகி வேதா, பொன்னி, கதாநாயகன் டாகடர் பரசுராமன்

படத்தில் வேலைக்காரி செங்கம்மா, கதாநாயகி வேதா, படுக்கையில் படுத்து இருப்பது சாரதா என்ற பெண்மணி, கவலையுடன் இருப்பது சாரதாவின் சகோதரி  மரகதம், டாகடர் பரசுராமன்.

நல்ல விறுவிறுப்பான கதை. இந்தக் கட்டிடத்தில் (ராஜாளி மடத்தில்) இருக்கும் மூன்று பெண்கள், மற்றும் அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண்பற்றிய கதை. அன்பு, பாசம், மர்மம் நிறைந்த திருப்பங்கள் நிறைந்த கதை.

                                  வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

58 கருத்துகள்:

  1. நான் வந்துவிட்டேன் கோமதிக்கா..இதோ பதிவை வாசித்துவிட்டு வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    ஸ்வீட் காலியாகி விட்டதா?
    அனைவரும் வந்து விட்டார்களா?

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா கோமதிக்கா நீங்கள், நம் பூஸார் செல்லம் வரும் வரை பார்த்தேன் காலியாகும் நிலை...இன்னும் வந்திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்...ஸ்வீட் கொடுத்து வரவேற்று விருந்தோம்ப வேண்டுமே!!!

    //வசந்த கோகிலம் கணவர் ‘சாச்சி’ (சதாசிவம்) சொல்லியிருக்கிறார்: ‘ ‘உன் பேரை யாருக்குத் தெரியும்? அதுக்காக ரெக் கார்ட் கம்பெனி சுத்தானந்த பாரதியார் பெயரைப் போட்டிருக்கான். நல்லா விற்கணுமில்லையா? உனக்குப் பணம் வந்தாச்சு இல்லையா, பேசாமெ இரு. கேசு, கீஸுன்னு அலையாதே. டேய்… யார்றா அங்கே, இவருக்கு நூறு ரூபா கொடு. நானும் பணம் தர்றேன், போறுமா?’’
    கோபாலன் இதைச் சொன்னது என் மனத்திரையில் இன்னும் அப்படியே நிழலாடுகிறது.//

    கடவுளே! இது என்ன அக்கிரமம். மனம் மிகவும் வேதனை அடைந்தது. அப்போதே இப்படி எல்லாம் நடக்கத் தொடங்கியுள்ள்து பாருங்கள். அப்போ நாம் அந்தக்காலம் அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று சொல்வதெல்லாம் போலித்தனம் போல் இருக்கு. இன்றாவது காப்பி ரைட் எல்லாம் இருக்கு அன்று? கொடுமை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கணினி இல்லாத காலம் அது புத்தகங்களை தேடிஓடிய பொற்காலமாக இருந்தது உண்மையே...

    பதிலளிநீக்கு
  5. வாங்க கீதா, வாழ்க வளமுடன்.


    //ஸ்வீட் கொடுத்து வரவேற்று விருந்தோம்ப வேண்டுமே!!! //

    ஆமாம், வரும் விருந்தோம்பி, இனி வரும் விருந்தினர் வருகையை எதிர்பார்ப்பது தானே! மரபு.

    //கடவுளே! இது என்ன அக்கிரமம். மனம் மிகவும் வேதனை அடைந்தது. அப்போதே இப்படி எல்லாம் நடக்கத் தொடங்கியுள்ள்து பாருங்கள். அப்போ நாம் அந்தக்காலம் அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று சொல்வதெல்லாம் போலித்தனம் போல் இருக்கு. இன்றாவது காப்பி ரைட் எல்லாம் இருக்கு அன்று? கொடுமை!!! //

    எல்லா காலங்களிலும் நல்லவர், கெட்டவர் உண்டு கீதா.
    அடுத்தவன் உழைப்பை திருடுவது, புகழுக்கு ஆசை படுவது.
    எல்லாம் உண்டு.

    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு எழுத்தாளர் அறிமுகம் கோமதிக்கா ரா கி கோபாலன் அவர்கள்!!

    தமிழின் நல்ல எழுத்தாளர்களில் பலர், கோஷ்டிச் சண்டை விளம்பரத்தில் அகப்பட்டுக் கொள்ளாத காரணத்தினால், இக்காலச் சந்ததியினருக்கு அறிமுகம் ஆகாமலேயே போய்விட்டார்கள். //

    இது மிக மிக உண்மை. இப்போதும் பொருந்தும்...அறிமுகம் ஆகாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்!!! அமைதியாக எழுதிக் கொண்டு....

    காச நோய் அவரைப் பீடித்தது வருத்தம் இல்லையா அக்கா...தானே வரைவார் ஆஹா ஓவியர்!! என்ன திறமை இல்லையா? நம் நண்பர்கள் குழுவிலும் நெல்லை இருக்கிறாரே எழுதுகிறார், அழகான கருத்துகள் இடுகிறார் தன் கதைக்குத் தானே வரைகிறார் அவரும் அருமையான ஓவியர்..ஏஞ்சலும்...மிக அழகாக வரைவார்...தேனம்மை ரொம்ப அழகாக வரைகிறார். ஆனால் தன் கதைக்கு அவர் வரைந்திருக்கிறாரா என்று தெரியவில்லை...இப்படி பல கலைகளில் திறமைகள் கொண்டவர்கள் ஒரு வரம் தான் இல்லையா இதெல்லாம்....தங்கள் கணவர் கூட எவ்வளவு அழகாக வரைகிறார்..!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வணக்கம், தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    //கணினி இல்லாத காலம் அது புத்தகங்களை தேடிஓடிய பொற்காலமாக இருந்தது உண்மையே...//


    பொற்காலம் என்று நீங்கள் சொல்வதை நானும் வழி மொழிகிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஆமாம் அக்கா விருந்தோம்பல் நம் மரபு!! எனக்கு மிகவும் பிடித்ததும் கூட. வீட்டில் எப்போதும் மனிதர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பேன் அக்கா..ம்ம்ம்ம்

    அட! கவிஞர்!! ஹாஸ்யக்கட்டுரைகள் எழுதியவர்!! வியக்க வைக்கிறார்..ஆனால் பாருங்கள் முடிவு வெகு விரைவில்...குழந்தைகளை விட்டு...ஏழ்மை வேறு...மனம் மிகுந்த வேதனைப்பட்டது அக்கா...

    வீட்டின் அருகில்தான் அண்ணா சென்டினரி நூலகம். இவர் புத்தகங்கள் இருக்கிறதா என்று பார்க்கிறேன்...வாசிக்க வேண்டும் அதுவும் நீங்கள் இங்கு பகிர்ந்திருக்கும் ராஜாளிமடம் ஆர்வத்தைத் தூண்டுகிறது...

    நல்ல அறிமுகம் நல்ல பதிவு

    உங்களை அழைத்த வல்லிம்மா, ஆதிக்கு வாழ்த்துகள் அக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. எனக்கு வாசிப்பு அனுபவம் மிகவும் குறைவு அக்கா. காரணம் வீட்டில் அப்போது புத்தகங்கள் வாங்கும் பழக்கம் இல்லை....நூலகம் எல்லாம் அனுப்பமாட்டார்கள். இத்தனைக்கும் வீட்டிலிருந்து திரும்பினால் நூலகம்...நான் பள்ளியிலும், கல்லூரியிலும் எடுத்து வாசித்ததுதான் அதுவும் அங்குக் கிடைத்த சொற்ப நேரத்தில்...வீட்டிற்குக் கொண்டு வந்தால் பாடப்புத்தகம் நடுவில் ஒளித்து வைத்து வாசித்து அதை என் கஸின்ஸ் பார்த்துவிட்டால் போட்டுக் கொடுத்து...ரகளையாக இருக்கும். அம்மாவிம் அம்மா கீழ் வளர்ந்ததால்...படிப்பு ஒன்றே பிரதானம்...அவர்களைச் சார்ந்து வாழ்ந்து.... கஷ்டப்பட்ட குடும்பமானதால்...நாம் எதிர்பார்க்கவும் முடியாதே! அதனால் திருட்டுத்தனமாக வாசித்ததுதான்....அதன் பின்னும் அப்படியே ஆகிப் போனது. மாமனார் வாசிப்பார் நிறைய பைன்ட் பண்ணி வைப்பார். அதைக் கொண்டு வந்துள்ளேன் வாசிக்க வேண்டும்...

    உங்கள் அறிமுகம் அருமை அக்கா மிக்க நன்றி..

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வாங்க கீதா,

    //அறிமுகம் ஆகாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்!!! அமைதியாக எழுதிக் கொண்டு//

    உண்மை.

    //காச நோய் அவரைப் பீடித்தது வருத்தம் இல்லையா அக்கா//

    அந்த காலத்தில் சரியான வைத்தியம் இல்லை போலும் காச நோய்க்கு, அப்புறம் ஏழ்மையும் ஒரு காரணம். என்ன சொல்வது?


    நீங்கள் சொல்வது போல் நெல்லைத் தமிழன் பன்முக திறமையாளர்.

    வை.கோ சாரும் முன்பு அவர் எழுதிய கதைகளுக்கு அவரே வரைந்து இருக்கிறார் படம்.
    தேனம்மையும் பன்முக திறமை வாய்ந்தவர்.
    //இப்படி பல கலைகளில் திறமைகள் கொண்டவர்கள் ஒரு வரம் தான் இல்லையா இதெல்லாம்...//.

    நீங்கள் சொல்வது போல் வரம் தான்.

    என் கணவர் நிறைய வரைந்தார் மீண்டும் வரைய சொல்ல வேண்டும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  11. இம்மாதிரி நூல்களை அறிமுகப்படுத்தும்போது அதை வாசிக்க வேண்டும் என்று தோன்றினாலும் எளிதில் கிடைக்காதே தேடிப்போய் வாசிக்க முடியாது (எனக்கு ) வாழ்த்துக்சள்

    பதிலளிநீக்கு
  12. வாங்க கீதா, வாழ்க வளமுடன்.

    //ஆமாம் அக்கா விருந்தோம்பல் நம் மரபு!! எனக்கு மிகவும் பிடித்ததும் கூட. வீட்டில் எப்போதும் மனிதர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பேன் அக்கா..ம்ம்ம்ம்//

    நல்ல பண்பு.

    //அட! கவிஞர்!! ஹாஸ்யக்கட்டுரைகள் எழுதியவர்!! வியக்க வைக்கிறார்..ஆனால் பாருங்கள் முடிவு வெகு விரைவில்...குழந்தைகளை விட்டு...ஏழ்மை வேறு...மனம் மிகுந்த வேதனைப்பட்டது அக்கா...//

    ஆமாம் மனது வேதனபட்டது. உலகம் தெரியாத ஐந்து சின்ன குழந்தைகள், இளம் மனைவி அவர்கள் எப்படி இருக்கிறார்களோ! என்று மனது வேதனைப்படுகிறது.
    நூலகத்தில் கிடைத்தால் படிங்க கீதா. நன்றாக இருக்கும்.

    வல்லி அக்கா, ஆதி எல்லாம் கதை விமர்சனம் நன்றாக செய்வார்கள்.
    நல்ல படிப்பாளிகள், படைப்பாளிகள்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க கீதா, வாழ்க வளமுடன்.
    அம்மா நன்றாக படிப்பார்கள் படித்த வார இதழ்களில் இருந்து சேமித்து வைப்பார்கள்.
    நிறைய நல்ல புத்தகங்கள் வீட்டிற்கு வரும். ஆனந்தவிகடன், மஞ்சரி, கல்கி, கலைமகள் எல்லாம் வாங்க்குவார்கள். பேசும் படம், சில சமயம் வாங்குவார்கள்.
    அப்பா 40 வயது வரை ஆங்கில கிரைம் நாவல்கள், அதன் பின் 51 வயதில் இறக்கும் வரை ஆன்மீக புத்தகங்கள் வாங்கி படித்தார்கள்.(ஆங்கிலத்தில்)
    இப்போது அப்பாவின் ஆன்மீக புத்தங்கள் என் கணவர் படிக்கிறார்கள் . நாவல்கள் அண்ணாவின் நண்பர்களிடம் போய் விட்டது.

    என் கணவர் மாதம் ஒரு புக் வந்த போது மாலைமதி வாங்கி தருவார்கள்.
    முத்து காமிக்ஸ், பூந்தளிர், அம்புலிமாமா, சிறுவர் கதைகள் வாங்கி வருவார்கள். சோவியத் ரஷ்யா நாடோடி கதைகள் எல்லாம் வாங்கி தருவார்கள் படிக்க.

    ரயில் பயணங்களில் நிறைய புத்தகம் வாங்கி வருவார்கள்.

    உங்கள் பின்னூட்டங்க்களுக்கு நன்றி, நன்றி.




    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான் இந்த கதை நூலகத்தில் கிடைக்குமா என்று தெரியவில்லை.
    ஸ்கேன் செய்து இணையத்தில் போடுகிறார்கள். அதையும் கற்றுக் கொண்டால் போடுகிறேன்.
    இது போன்ற திரைப்படங்கள் வந்து இருக்கிறது அந்த காலத்தில்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. // சிறந்த எழுத்தாளர் வறுமையில் வாடி நோய்வாய்ப்பட்டு மறைந்ததைப் படிக்கும் போது மனது கஷ்டப்படுகிறது.//
    ஆமாம் அக்கா பல எழுத்தாளர்களின் நிஜ வாழ்க்கை போராட்டத்தில் வறுமையில் முடிந்திருக்கு .
    அழகான ஓவியம் எத்தனை திறமைகள் அவருக்கு .
    வாசிப்பது சுவாசிப்பது போன்றது .எங்கம்மா நிறைய புக்ஸ் பைண்ட் செஞ்சு வச்சிருந்தாங்க ..எல்லாம் மழை ,சரியான பராமரிப்பிலாம போச்சு .

    உங்களுக்கு புக்ஸ் கொடுத்த மாமிக்கு நல்ல மனது .வீணாக்காமல் சரியான பொருத்தமான வாசிப்பை நேசிக்கும் பொருட்களை பத்திரப்படுத்தும் உங்களிடம் கொடுத்திருக்கிறார் .
    வல்லிம்மா ஆதி இருவரும் நிறைய வாசிப்பு பழக்கமுடையோர் .படிப்பதோடு மட்டுமன்றி விமர்சனமும் எழுதுவாங்க .
    நல்ல விஷயத்தை துவங்கியிருக்கிங்க எனக்கும் நேரமிருந்தா (அநேகமா ஏப்ரல் இறுதி வரை பிசி ) நானும் லைப்ரரி சென்று புத்தகங்களை வாசித்து பகிர்கின்றேன் ..எங்க லைப்ரரில தமிழ் புக்ஸ் கிடைக்குது :)

    பதிலளிநீக்கு
  16. @கீதா ரெங்கன் ..

    என் பொண்ணு தான் வரைவதில் அரசி :)
    நான் சும்மா பூ கார்ட்டூன்ஸ் இப்படி பென்சில் டிராயிங் அவுட்லைனிங் கொடுப்பதோடு சரி.ஆனாலும் ஒரு குட்டி புலியை உசுப்பேற்றிட்டிங்க எப்படியாவது ஒரு படத்தை வரைஞ்சி அதுக்கு கதை எழுத ஆசையா இருக்கு :)

    பதிலளிநீக்கு
  17. இந்த பழைய புத்தகத்தை பார்த்தா எங்கம்மா நிச்சயம் முதலில் அந்த தாள்களை தடவி பார்த்து நெஞ்சோடு அரவணைப்பார் கோமதி அக்கா .
    அம்மாக்கு வாசிப்பது பிடிக்கும் .அந்த வாசிக்கும் குணம் என் மகளுக்கு வந்திருக்கு :)

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
    உங்கள் பண்டிகைகள் நல்ல படியாக நடந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

    அம்மா அவர்கள் நிறைய பைண்ட் செய்து வைத்து இருந்தார்கள்.
    நானும் ஒரளவு பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன்.

    //வல்லிம்மா ஆதி இருவரும் நிறைய வாசிப்பு பழக்கமுடையோர் .படிப்பதோடு மட்டுமன்றி விமர்சனமும் எழுதுவாங்க //

    ஆமாம் .

    //நல்ல விஷயத்தை துவங்கியிருக்கிங்க எனக்கும் நேரமிருந்தா (அநேகமா ஏப்ரல் இறுதி வரை பிசி ) நானும் லைப்ரரி சென்று புத்தகங்களை வாசித்து பகிர்கின்றேன் ..எங்க லைப்ரரில தமிழ் புக்ஸ் கிடைக்குது :)//

    ஓ! தமிழ் புக்ஸ் கிடைப்பது மகிழ்ச்சியான விஷயம்.
    பகிர்ந்து கொள்ளுங்கள்.
    மீண்டும் புத்தக வாசிப்பு வளர வேண்டும் என்பது தானே எல்லோர் எண்ணமும்.

    விடுமுறை சமயத்திலும் வந்து கருத்து சொன்னத்ற்கு நன்றி ஏஞ்சல்.


    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன். உங்களை கீதா குறிபிட்டதை இப்போது தான்பார்த்தேன். நீங்களும், உங்கள் அன்பு மகளும் இணைந்து நன்றாக செய்யுங்கள். நீங்கள் கதை, மகள் ஓவியம். விரைவில் எதிர்பார்க்கிறேன். கீதாவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க ஏஞ்சல்.

    //இந்த பழைய புத்தகத்தை பார்த்தா எங்கம்மா நிச்சயம் முதலில் அந்த தாள்களை தடவி பார்த்து நெஞ்சோடு அரவணைப்பார் கோமதி அக்கா .
    அம்மாக்கு வாசிப்பது பிடிக்கும் .அந்த வாசிக்கும் குணம் என் மகளுக்கு வந்திருக்கு :)//

    புத்தகங்களின் அருமை தெரிந்தவர்கள் உங்கள் அம்மா.
    வாசிப்பு நல்ல விஷயம்.
    நல்லவைகளை தேடி வாசிப்பது அதைவிட சிறப்பு.

    உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்துங்கள்.
    உங்கள் மகளும், நீங்களும் பன்முக திறமை வாய்ந்தவர்கள் தான்.
    வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அறியாதனவற்றை அறிந்துகொண்டேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல், நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி தோழி" வசந்த கோகிலத்தின் குரலில் மனதில் நிழலாடுகிறது. மிக்க நன்றி, புதிய விஷயத்தைச் சொல்லியமைக்கு.

    பதிலளிநீக்கு
  23. அன்பு கோமதி, இத்தனை அருமையான பகிர்வைப் படிக்கும் போதே இவ்வளவு ஆதங்கம் வருகிறதே. இந்தப் புத்தகங்கள் இப்போது கிடைக்குமா..
    பல பழைய புத்தகங்கள் எனக்குக் கிடைப்பதில்லை.

    மிக மிக நன்றி கோமதி. மழை,புத்தகம் ஒரு இதமான மூலை, உட்கார்ந்துவிட்டால் நம் உலகமே தனிதான்.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
    வசந்த கோகிலத்தின் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும் , அதன் பின் இப்படி ஒரு கதை இருக்கும் என்பதை இப்போதுதான் நானும் அறிந்தேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. சுவாரஸ்யமான பதிவு. புத்தகங்கள், அதிலும் பழைய புத்தகங்கள் எப்பவுமே ஆர்வத்தைத் தூண்டக்கூடியது!

    பதிலளிநீக்கு
  26. படிக்கும் ஆவல் வருகிறது. என் அப்பாவுக்குத் தெரிந்திருக்கலாம். கும்பகோணத்தில் இருந்தபோது நிறைய எழுத்தாளர்களுடன் பழகியவர். ஆனால் அவரை இப்பது கேட்க முடியாது!!!

    பதிலளிநீக்கு
  27. அவர் எழுதிய பாடல் எங்கள் தாத்தா சுத்தானந்த பாரதி பெயரில் வந்தது சோகமே. ரொம்ப ஏமாற்றமாக இருந்திருக்கும். சு.பா ப்படி இதற்கு ஒப்புக் கொண்டார் என்று தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் அழைப்பை ஏற்று இன்று ஒரு புத்தகம் பகிர்ந்து விட்டேன்.
    நீங்களும் மழை காலத்தில் புத்தகம் படிப்பதை ரசித்தும், படித்த புத்தகங்களை பற்றியும்
    முன்பு பகிர்ந்து இருக்கிறீர்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.


    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோதரி

    தங்களின் வாசிப்பு அனுபவங்கள் பிரமிக்க வைக்கிறது. / படுத்துக் கொண்டு கடலையைக் கொறித்துக் கொண்டு கதை படிப்பது ஒரு சுகமான அனுபவம். அப்போது கதையில் ஆழ்ந்து விட்டால் (கதை திகில் நிறைந்த காட்சி அல்லது மர்மம் வெளிப்படும் சமயம் என்றால் ) அம்மா கூப்பிட்டாலும் கேட்காது./
    உண்மை.. அந்த வாசிப்புக்கள் மறக்க முடியாதது.

    எனக்கும் புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும்.ஒரு காலகட்டத்தில் நேரம் காலம் போவது தெரியாமல் வாசித்திருக்கிறேன். அதற்கு பிறகு அந்த மாதிரி இயலாமல் போய் விட்டது.

    நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளரின் கதைகளை படித்ததில்லை. இனி எப்போதாவது படிக்கும் சந்தர்ப்பம் அமைந்தால் நன்றாக இருக்கும். அவரின் வாழ்க்கை பற்றி குறிப்பிட்டது வருத்தமாக இருந்தது. அந்த காலத்தில் சிலரின் திறமைகள் அங்கிகரிக்கபடாமலே போய் விட்டனவோ எனத் தோன்றுகிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //சுவாரஸ்யமான பதிவு. புத்தகங்கள், அதிலும் பழைய புத்தகங்கள் எப்பவுமே ஆர்வத்தைத் தூண்டக்கூடியது!//

    ஆமாம், மீண்டும் படிக்கும் போது முன்பு படித்த வரிகள் நினைவுக்கு வரும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  31. வாங்க ஸ்ரீராம்,

    //படிக்கும் ஆவல் வருகிறது. என் அப்பாவுக்குத் தெரிந்திருக்கலாம். கும்பகோணத்தில் இருந்தபோது நிறைய எழுத்தாளர்களுடன் பழகியவர். ஆனால் அவரை இப்பது கேட்க முடியாது!!!//

    நீங்கள் சொன்னது போல் அப்பாவிற்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது.



    பதிலளிநீக்கு
  32. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //அவர் எழுதிய பாடல் எங்கள் தாத்தா சுத்தானந்த பாரதி பெயரில் வந்தது சோகமே. ரொம்ப ஏமாற்றமாக இருந்திருக்கும். சு.பா ப்படி இதற்கு ஒப்புக் கொண்டார் என்று தெரியவில்லை!//

    உங்கள் தாத்தாவா சுத்தானந்த பாரதி? மகிழ்ச்சி.
    இசைதட்டு வெளியீடுவோர் சுத்தானந்த பாரதி அவர்களை கேட்காமலே அவர் பெயரை பயன்படுத்தி கொண்டு இருக்கலாம் அல்லவா?

    தெரிந்து இருந்தால் ஒத்துக் கொண்டு இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

    கோபாலன் அவர்களுக்கு ஏமாற்றமாய் தான் இருந்து இருக்கும் என்ன செய்வது?

    உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

    //எனக்கும் புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும்.ஒரு காலகட்டத்தில் நேரம் காலம் போவது தெரியாமல் வாசித்திருக்கிறேன். அதற்கு பிறகு அந்த மாதிரி இயலாமல் போய் விட்டது. //

    முன்பு மாதிரி இப்போது கதைகள் படிக்க முடியவில்லைதான்.

    //அந்த காலத்தில் சிலரின் திறமைகள் அங்கிகரிக்கபடாமலே போய் விட்டனவோ எனத் தோன்றுகிறது.//

    நீங்கள் சொல்வது உண்மைதான். சிலரின் திறமைகள் குடத்துக்குள் இட்ட விளக்காய் நிறைய பேர் இருந்து இருக்கிறார்கள்.

    இறந்த பின் புகழ் கிடைத்து இருக்கிறது சிலருக்கு, இருக்கும் போது மிகவும் கஷ்டபட்டு இருப்பார்கள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி.



    பதிலளிநீக்கு
  34. என்னை நினைவு கொணடதற்கு நன்றி, கோமதிம்மா.

    கி.ரா.வை நன்றாகத் தெரியும். கும்பகோணம் எழுத்தாளர்களில் என் நூலில் குறிப்பிடாது விடுபட்டுப் போனவர்களில் இவரும் ஒருவர. அதற்கு பிராயச்சித்தமாக ஏதாவது செய்தாக வேண்டும். 'ராஜாளி மடம்' நாவல் பெயர் நன்றாக நினைவில் இருக்கிறது. இவ்வளவுக்கும் அது கல்கியில் வெளிவரும் பொழுது எனக்கு 9 வயது தான். அந்த கடைசிப் பாரா மனசை உருக்கியது. எழுத்தாளன் என்றால் எல்லாக் காலத்தும் இளப்பம் தான்.

    அந்தக் காலத்து கி.ரா.கோபாலன் பெயரிலும் அதிர்ஷ்டக்கட்டை. பிற்காலத்து கரிசல் மண் கி.ராஜநாராயணன் வந்து (கி.ரா. என்று தான்) பொதுவாக எல்லோருக்கும் இவரைத்
    தெரியும்.

    அதே மாதிரி மஞ்சரி தி.ஜ.ர. அற்புதமான எழுத்தாளர். ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'ஒரு பிடிச்சோறு'க்கு ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தி முன்னுரையே எழுதியவர். தி.ஜானகிராமன் பிரபலமாகி, தி.ஜா. என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு தி.ஜ.ர. (தி.ஜ.ர்ங்கநாதன்) மறக்கப்பட்டார். இன்றைக்கும் தி.ஜ.ர.வுக்கும் தி.ஜா.வுக்கும் வித்தியாசம் தெரியாமல் தான் பத்திரிகைகள் கூட எழுதிக் கொண்டிருக்கின்றன.

    ஜே.கே.யின் 'ஒரு பிடிச் சோறு' அதிர்ஷ்டம் செய்த சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பை முதல் முதல் பிரசுரம் செய்தவர் எழுத்தாளர் விந்தன். 'பாலும் பாவையும்' விந்தன். தி.ஜ.ர. முன்னுரை எழுதியிருக்கிறார் என்றால், கவியரசர் கண்ணதாசன் இந்தத் தொகுப்புக்கு வாழ்த்துரை நல்கியிருக்கிறார். ஆனந்தவிகடன் நூல் நிலையத்தில் இந்த தொகுப்பு இருந்து அதைப் படித்த மணியன் விகடன் ஆசிரியரிடம் அறிமுகப்படுத்த
    இவர் விகடனில் எழுத வேண்டுமே என்று ஆசிரியர் பாலு ஆசைப்பட, மணியன் ஜெயகாந்தன் வீட்டைத் தேடிப்போக-- ஜெயகாந்தனின் வாழ்க்கையில் பெரியதொரு திருப்புமுனையாக அந்த நிகழ்ச்சி நடந்தது.

    ஒன்றைத் தொட்டால் இன்னொன்று என்று தமிழ் எழுத்துலகில் நிறைய நிகழ்வுகள்.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    //அந்தக் காலத்து கி.ரா.கோபாலன் பெயரிலும் அதிர்ஷ்டக்கட்டை. பிற்காலத்து கரிசல் மண் கி.ராஜநாராயணன் வந்து (கி.ரா. என்று தான்) பொதுவாக எல்லோருக்கும் இவரைத்
    தெரியும்.//

    நீங்கள் சொல்வது போல் கி.ரா. கோபாலன் அவர்களைப் பற்றி இணையத்தில் தேடிய போது கி.ராஜநாரயாணன் அவர்கள் பற்றிய விவரங்கள்தான் அதிகம். கோபாலன் அவர்களைப் ப்ற்றிய விவரங்கள் குறைவுதான்.


    //அதே மாதிரி மஞ்சரி தி.ஜ.ர. அற்புதமான எழுத்தாளர். ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'ஒரு பிடிச்சோறு'க்கு ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தி முன்னுரையே எழுதியவர். தி.ஜானகிராமன் பிரபலமாகி, தி.ஜா. என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு தி.ஜ.ர. (தி.ஜ.ர்ங்கநாதன்) மறக்கப்பட்டார். இன்றைக்கும் தி.ஜ.ர.வுக்கும் தி.ஜா.வுக்கும் வித்தியாசம் தெரியாமல் தான் பத்திரிகைகள் கூட எழுதிக் கொண்டிருக்கின்றன.//

    பெயர் குழப்பம் செய்தி படித்து திறமை இருந்தாலும் எல்லாத்துக்கும் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று தெரிகிறது.

    //மணியன் ஜெயகாந்தன் வீட்டைத் தேடிப்போக-- ஜெயகாந்தனின் வாழ்க்கையில் பெரியதொரு திருப்புமுனையாக அந்த நிகழ்ச்சி நடந்தது.//
    கரந்தை ஜெயக்குமார் பதிவில் மணியன் ஜெயகாந்தனை தேடி போன விவரம் படித்தேன்.

    //ஒன்றைத் தொட்டால் இன்னொன்று என்று தமிழ் எழுத்துலகில் நிறைய நிகழ்வுகள்.//

    ஆமாம் சார், எழுதுவதில் ஆர்வம் உள்ள உங்களை போன்றவர்களுக்கு நிறைய நிகழவுகள் தெரியும் அதையும் பதிவு செய்து வருவது எங்களை போன்றவர்களுக்கு தெரிந்து கொள்ள முடிகிறது.

    உங்கள் வரவுக்கும், விரிவான கருத்துக்கும் மிகவும் நன்றி.







    பதிலளிநீக்கு
  36. தங்களின் வாசிப்பு அனுபவம் போற்றுதலுக்கு உரியது
    இன்று என்னதான் கணினி, ஈபுக் என வந்துவிட்டாலும், புத்தகத்தைக் கையில் சுமந்து, பக்கம் பக்கமாகப் புரட்டிப் படிக்கும் சுகமே தனிதான்

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

    //இன்று என்னதான் கணினி, ஈபுக் என வந்துவிட்டாலும், புத்தகத்தைக் கையில் சுமந்து, பக்கம் பக்கமாகப் புரட்டிப் படிக்கும் சுகமே தனிதான்//

    ஆமாம் , நீங்கள் சொல்வது உண்மை.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. அருமையான பகிர்வு. சிறந்த எழுத்தாளரும் ஓவியருமான கி.ரா. கோபாலன் அவர்களைப் பற்றி அறியாத பல தகவல்கள். இறுதி காலத்தில் சிரமப்பட்டது வருத்தம் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  39. ஜெயமாருதி வாசகசாலையைப் பற்றி படித்தபோது, பள்ளிப்பருவத்தில் (1960களின் இறுதியில்) கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் மேலவீதி தெற்கு வீதி சந்திப்பில் இருந்த கமலா நேரு வாசகசாலை நினைவிற்கு வந்தது. எங்கள் வீட்டிற்கு அப்போது நவசக்தி இதழ் வந்துகொண்டிருந்தது காங்கிரஸ்காரரான எங்கள் தாத்தா அந்த வாசகசாலைக்குச் செல்லும்போது எங்களையும் அழைத்துச் செல்வார். தற்போது நாளிதழ் படிக்க அடித்தளம் அமைத்தது கமலா நேரு வாசகசாலையும், எங்கள் தாத்தா வீட்டில் வாங்கிய நவசக்தி இதழுமே. அவ்வப்போது நாத்திகம் இதழும் படித்த நினைவு உள்ளது.

    பதிலளிநீக்கு
  40. இந்தப்புத்தகம் என் நூலகத்தில் இருக்கிறது. கல்கியில் அந்த காலத்தில் வெளி வந்த சிறுகதைகளை சேர்த்து பைன்ட் பண்ணிய புத்தகத்தில்கூட இவரின் சிறுகதைகள் இருப்பதாக நினைவு. பழைய புத்தகக்கடைகளில் பல வருடங்களுக்கு முன் பழைய ஓவியங்களுடன் வேண்டும் என்று தேடித்தேடி சேமித்த புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன‌. சின்ன வயதிலிருந்தே வாசிப்பு அனுபவம் என்னிடம் உண்டு இந்த நிமிடம் வ‌ரை. புத்தகங்களும் இசையும் வாழ்க்கை இயங்குவதற்கு அவசியம் வேண்டும் எனக்கு!
    ' நித்திரையில் வந்து நெஞ்சில் இடங்கொண்ட உத்தமன் யாரோடி, என் தோழி?' பாடல் ' ராமு' படத்தில் பி.பி.சீனிவாஸின் புகழ் பெற்ற‌ பாடலான ' நிலவே என்னிடம் நெருங்காதே' பாடலுக்கு முன் சுசீலாவின் குரலில் வரும். இரண்டே வரிகள் தான், அத்தனை இனிமையாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    கி.ரா.கோபாலன் அவர்கள் இறக்கும் போது சிறு வயது தான்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் முனைவர் சார், வாழ்க வளமுடன்.

    //எங்கள் வீட்டிற்கு அப்போது நவசக்தி இதழ் வந்துகொண்டிருந்தது காங்கிரஸ்காரரான எங்கள் தாத்தா அந்த வாசகசாலைக்குச் செல்லும்போது எங்களையும் அழைத்துச் செல்வார். தற்போது நாளிதழ் படிக்க அடித்தளம் அமைத்தது கமலா நேரு வாசகசாலையும், எங்கள் தாத்தா வீட்டில் வாங்கிய நவசக்தி இதழுமே. அவ்வப்போது நாத்திகம் இதழும் படித்த நினைவு உள்ளது.//


    வாசகசாலை நினைவுகள் பகிர்வுக்கு நன்றி.
    சிறு வயதில் தாத்தா வாசகசாலையை அறிமுக படுத்தியது படிக்கும், மேலும் படித்துக் கொண்டே இருக்கும் ஆர்வத்தை அதிகபடுத்தி உள்ளது நல்ல பழக்கம் தான் இல்லையா?

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.


    //இந்தப்புத்தகம் என் நூலகத்தில் இருக்கிறது. கல்கியில் அந்த காலத்தில் வெளி வந்த சிறுகதைகளை சேர்த்து பைன்ட் பண்ணிய புத்தகத்தில்கூட இவரின் சிறுகதைகள் இருப்பதாக நினைவு. பழைய புத்தகக்கடைகளில் பல வருடங்களுக்கு முன் பழைய ஓவியங்களுடன் வேண்டும் என்று தேடித்தேடி சேமித்த புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன‌.//

    கல்கியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை புத்தகம் இருக்கா என்று பாருங்கள்.
    இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.


    //சின்ன வயதிலிருந்தே வாசிப்பு அனுபவம் என்னிடம் உண்டு இந்த நிமிடம் வ‌ரை. புத்தகங்களும் இசையும் வாழ்க்கை இயங்குவதற்கு அவசியம் வேண்டும் எனக்கு!//

    எனக்கும் அப்படித்தான்.

    நீங்கள் ஓவியமும் நன்கு வரைவீர்கள் அல்லவா?

    //நித்திரையில் வந்து நெஞ்சில் இடங்கொண்ட உத்தமன் யாரோடி, என் தோழி?' பாடல் ' ராமு' படத்தில் பி.பி.சீனிவாஸின் புகழ் பெற்ற‌ பாடலான ' நிலவே என்னிடம் நெருங்காதே' பாடலுக்கு முன் சுசீலாவின் குரலில் வரும். இரண்டே வரிகள் தான், அத்தனை இனிமையாக இருக்கும்!//

    ஆமாம், நானும் கேட்டு இருக்கிறேன்.

    தஞ்சையில் தான் இருக்கிறீர்களா?

    உங்கள் கருத்துக்கு நன்றி.





    பதிலளிநீக்கு
  44. குறை நினைச்சிடாதீங்கோ கோமதி அக்கா... விரைவில் வந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  45. வந்திட்டேன் கோமதி அக்கா, புத்தக வாசிப்புப் பற்றி அருமையான ஆரம்பம்.. உண்மைதான் எனக்கும் நெட்டில் இருந்து வாசிப்பதை விட கையில் புத்தகம் வைத்து வாசிப்பதிலேயே திருப்தி...

    //என்னை இரண்டு பேர் அழைத்து இருக்கிறார்கள். வாசிப்பைச் சுவாசிப்பாய்
    நேசிப்பவர்கள்.///

    ஓ இது பேஸ் புக்கில் தொடர்பதிவுபோல ஆரம்பிச்சிருக்கினமோ நல்லது நல்லது...

    பதிலளிநீக்கு
  46. ராஜாளி மடம் முதல் படம் வாசித்தேன் அடுத்தது வாசிக்க வில்லை.. ஆரம்பமே மனதை ஆட்டிப்படைக்கிறதே.. நிட்சயம் அருமையான கதையாகவே இருக்கும்... என்னிடமும் ஒரு நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் இருந்து கொண்டே வருது:).. விரைவில் எழுதி நிறைவேற்றிடுவேன் புளொக்கில்:)..

    பதிலளிநீக்கு
  47. //கி. ரா. கோபாலன்,//

    ஓ சின்ன வயதிலேயே மறைந்திட்டாரோ.. பெரும்பாலும் பிரபல்யமானவர்கள் யாரும் அக்காலத்தில் அதிக காலம் வாழ்ந்ததில்லை.. மன அழுத்தம் .. போதிய சத்தின்மை.. நல்ல மருத்துவ வசதி இன்மை போன்ற காரணமாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  48. பொன்னி.. மருதப்பன் அழகிய பெயர்கள் அழகிய ஓவியம்..

    இரு அருமையான பக்கங்களை மேலாலே அலசி இருக்கிறீங்க நன்று.

    பதிலளிநீக்கு
  49. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    குறையாக நினைக்க மாட்டேன்.
    விடுமுறை விட்டாச்சு என்று சொன்னீர்கள் ஒரு பதிவில்,அதனால்
    குழந்தைகளை அழைத்துக் கொண்டு எங்காவது ஊருக்கு போய் இருப்பீர்கள்
    என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  50. வாங்க அதிரா, வாழ்க வளமுடன்.
    //வந்திட்டேன் கோமதி அக்கா, புத்தக வாசிப்புப் பற்றி அருமையான ஆரம்பம்.. உண்மைதான் எனக்கும் நெட்டில் இருந்து வாசிப்பதை விட கையில் புத்தகம் வைத்து வாசிப்பதிலேயே திருப்தி.//

    //ஓ இது பேஸ் புக்கில் தொடர்பதிவுபோல ஆரம்பிச்சிருக்கினமோ நல்லது நல்லது...//

    ஆமாம் அதிரா, முகநூல் அழைப்புதான்.

    கதையை பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம். அட்டைபடம் மட்டும் போடலாம் என்றார்கள் ஏழு நாள் போட வேண்டும் தினம் ஒருவரை அழைக்கலாம்.
    நான் யாரையும் அழைக்கவில்லை.


    //ராஜாளி மடம் முதல் படம் வாசித்தேன் அடுத்தது வாசிக்க வில்லை.. ஆரம்பமே மனதை ஆட்டிப்படைக்கிறதே.. நிட்சயம் அருமையான கதையாகவே இருக்கும்//

    கதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை விறு விறுப்பாய் இருக்கும்.

    //என்னிடமும் ஒரு நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் இருந்து கொண்டே வருது:).. விரைவில் எழுதி நிறைவேற்றிடுவேன் புளொக்கில்:)..//

    நிறைவேற்றி கொள்ளுங்கள் அதற்கு தானே சொந்தமாய் ஒரு வலைத்தளம் நமக்கே நமக்கு என்று.

    பதிலளிநீக்கு
  51. வாங்க அதிரா.
    /கி. ரா. கோபாலன்,//

    ஓ சின்ன வயதிலேயே மறைந்திட்டாரோ.. பெரும்பாலும் பிரபல்யமானவர்கள் யாரும் அக்காலத்தில் அதிக காலம் வாழ்ந்ததில்லை.. மன அழுத்தம் .. போதிய சத்தின்மை.. நல்ல மருத்துவ வசதி இன்மை போன்ற காரணமாக இருக்கலாம்.//

    நீங்கள் சொல்வது சரிதான்.
    அப்போது எழுத்தை மட்டுமே நம்பி இருந்தோர் நிலமை கொஞ்சம் கஷ்டம் தான்.


    //பொன்னி.. மருதப்பன் அழகிய பெயர்கள் அழகிய ஓவியம்..

    இரு அருமையான பக்கங்களை மேலாலே அலசி இருக்கிறீங்க நன்று.//

    அவர் வரைந்த ஓவியம் என்பதற்கு சாட்சிக்கு ஒரு படம்.

    கதையை நான் சொல்லி விட்டால் நீங்கள் தேடி படிக்க வேண்டாமோ!

    கதை மர்ம முடிசுக்கள் நிறைந்தது.
    அதனால் விளக்கவில்லை.

    உங்கள் தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  52. நலம்தானே அக்கா. எனக்கும் சின்ன வயதிலே வாசிப்பு பழக்கம் ஏற்படுத்தியவர் அப்பா.. அத்தோட்டு அப்பாவும் நல்லா புக் வாசிப்பார். அதைவிட முக்கியமா திரு.கி.வா.ஜ ஐயா அவர்கள் அப்பாவின் நண்பராக இருந்தவர். அதனால் கலைமகள் புக் எங்க வீட்டில் ஒழுங்காக இருக்கும்.அத்துடன் தீபாவளி மலரும். அதைவிட ஆனந்தவிகடன்,குமுதம்,மங்கை , ஞானபூமி என ஓரே புக் மயமாக அப்பாவின் அறை இருக்கும். நாந்தான் திகதி, மாதம் வாரியாக அடுக்கி வைப்பது.
    எனக்கு முன் அட்டையிலிருந்து பின்பக்கம் வரை வாசித்து முடித்துவிட்டுதான் மறுவேலை. நீங்க பதிவிட்ட புக் கூட வாசித்த ஞாபகம். ஆனால் முதலில் சமூக நாவல் வாசித்து பின்னே சரித்திர நாவலுக்கு போவேன். அருமையான மறக்கமுடியாத பசுமையான காலம். திரும்ப வரவே முடியாது.
    அருமையான ஆரம்பம். மன்னிக்க அக்கா வரமுடியாமைக்கு..

    பதிலளிநீக்கு
  53. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
    நலம் அம்மு.

    //சின்ன வயதிலே வாசிப்பு பழக்கம் ஏற்படுத்தியவர் அப்பா.. அத்தோட்டு அப்பாவும் நல்லா புக் வாசிப்பார். அதைவிட முக்கியமா திரு.கி.வா.ஜ ஐயா அவர்கள் அப்பாவின் நண்பராக இருந்தவர். அதனால் கலைமகள் புக் எங்க வீட்டில் ஒழுங்காக இருக்கும்.அத்துடன் தீபாவளி மலரும்.//

    ஓ உங்கள் அப்பாவிற்கு கி.வா.ஜ ஐயா நண்பரா? எங்களுக்கு அவர் பேத்தி நட்பு.
    அவருடன் அவர் தாத்தா பற்றி பேசி விவரங்கள் சேர்த்தேன் கி.வா.ஜ அவர்கள் பதிவுக்கு.

    அப்பாவின் ஆர்வம் உங்களுக்கும் இருப்பது மகிழ்ச்சி.
    என்னிடமும் பழைய கலைமகள், கல்கி, மங்கையர் மலர், எல்லாம் இருக்கிறது.
    பழைய குமுதம், கல்கி, விகடனில் வந்த கதைகளை பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன்.

    சரித்திர சமூக நாவல்கள் , கிரைம் நாவல்கள் எல்லாம் படிப்பேன் நானும்.
    புத்தகம் மட்டுமே என்று இருந்த காலம் பசுமைதான் அம்மு, திரும்ப
    கொண்டுவந்து கொண்டு இருக்கிரார்கள், புத்தக கண்காட்சியில் விற்கும் புத்தகம் சாட்சி சொல்கிறது. பார்ப்போம். காலம் மாறும்.
    எப்போது நேரம் கிடைக்குமோ வாருங்கள் மன்னிப்பு எல்லாம் எதற்கு?

    உங்கள் மலரும் நினைவுகள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  54. எழுத்தாளர் கி.ரா.கோபாலன் பற்றி உங்கள் பதிவின்மூலமே அறிகிறேன். எழுத்து, ஓவியம் என பன்முகத்திறமை. பாடி நடித்த அந்தக்கால நடிகர்கள்போல், படம்வரைந்து கதை எழுதிய படைப்பாளி. இருந்தும் குடத்திலிட்ட விளக்காய் வாழ்க்கை. திறமையோடு வேறு ஒன்றும் தேவைப்படுகிறது - நாலுபேரால் அறியப்படுவதற்கு, அங்கீகரிக்கப்படுவதற்கு. அது என்னவோ வெகுசிலருக்குத்தான் வாய்க்கிறது.

    பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  55. வணக்கம் ஏகாந்தன், வாழ்க வளமுடன்.
    நானும் பதிவு போடும் போதுதான் அவரை தெரிந்து கொண்டேன்.

    குடத்திலிட்ட விளக்காய் தான் வாழ்ந்து மடிந்து விட்டார்.

    நீங்கள் சொல்வது போல் சிபாரிசு, அதிர்ஷ்டம்
    எல்லாம் வேண்டி இருக்கு . உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  56. கி.ரா.கோபாலன் குறித்து ஓரளவு அறிந்திருந்தாலும் நீங்கள் சொன்ன பாடல் விஷயம் மனதை நெருடியது! இவ்வளவு வருஷமாக அது சுத்தானந்தரின் பாடல் என்றே நினைத்திருந்தேன். :( என்னவோ போங்க!

    பதிலளிநீக்கு
  57. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    எனக்கும் கஷ்டமாய்தான் இருந்தது.
    உங்கள் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு