திங்கள், 10 பிப்ரவரி, 2014

விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை!

                       விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
                      விளக்கினின் முன்னே வேதனை மாறும்
                      விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
                      விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.
                                                                                        -- திருமந்திரம். 1818.

தினமும் தான் விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறோம். வெள்ளி என்றால் இன்னும் கொஞ்சம் விசேஷம். அதுவும் தைவெள்ளி, ஆடிவெள்ளி என்றால் மிக விசேஷம் கோவில்களில். வீடுகளிலும் வெள்ளி என்றால் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்வது, விளக்கு பூஜை செய்வது என்று இருக்கும்.

  என் அம்மாவுக்கு எல்லா வெள்ளிக்கிழமையும் விசேஷம் தான். . ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளக்கு பூஜையில் லட்சுமி அஷ்டோத்திரம், விளக்கு போற்றி, துளசிமாதா ஸ்லோகம், திருவிளக்கு அர்ச்சனை எல்லாம் செய்யவேண்டும் - அதுவும் காலையில்.  முதலில் என் அக்கா - அக்காவுக்கு திருமணம் ஆனவுடன் - அடுத்து நான். எனக்குப் பிறகு என் தங்கைகள் செய்தார்கள். சிறுமியாக இருந்தபோது அதன் முக்கியத்துவம் தெரியவில்லை, அப்போது எல்லாம் அன்றைய நாளில் வரும் விகடனைப் படிக்கமுடியவில்லையே என்றுதான் இருக்கும். சீக்கிரம் பூஜை முடிக்க வேண்டும், விகடன் படிக்க வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியாது. ஆனால் இப்போது அம்மா சொல்லிக்கொடுத்த விளக்கு பூஜையின்  அருமையை  உணர்ந்தவள்.


 


எங்கள் குடும்பங்களில் பெண் கல்யாணத்திற்கு கொடுக்கும், வெள்ளிக்குத்து விளக்கு, வெண்கலக்குத்து விளக்கைப் புகுந்த வீட்டுக்குப் போனபின் முதல் முதலில் ஏற்றும்போது அதற்கு வடைமாலை சார்த்தி, பாயசம் வைத்து வணங்க வேண்டும்.  முன்பு எல்லாம் தினமும் விளக்கை விளக்கி அதற்கு பொட்டு வைத்து வணங்க வேண்டும். காலம் செல்லச்செல்ல, திங்கள்கிழமை, வியாழக்கிழமை மட்டும் விளக்குவது  வழக்கம் ஆகிவிட்டது.


தை கடைவெள்ளி அன்று (7/2/2014)எங்கள் ஊரில் உள்ள அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீஸ்வரர் கோயிலில் லட்சதீபம் நடைபெற்றது. கடந்த 20 வருடங்களாக நடத்தி வருகிறார்கள்.   இதனை   நடத்துபவர்கள்: - ஸ்ரீபுனுகீஸ்வரர் ஆலய உழவாரப் பணி மன்றம், சிவனடியார் திருக்கூட்டம், இந்துசமய தத்துவ விசாரணை மையம், மற்றும் ஸ்ரீபுனுகீஸ்வரர் ஆலயநிர்வாகம்.

வருடாவருடம் அதில் என் கணவர் திருவிளக்கு வழிபாட்டைப்பற்றிப் பேசுவார்கள். இறைவன் அருளால் 20 வருடங்களாகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். புனுகீஸ்வரகோவிலில் நடக்கும் வார வழிபாட்டு மன்றம் நடத்தும் ஆண்டுவிழாவிலும் 30 வருடமாய் பேசிவருகிறார்கள். 

அன்று திருக்கயிலை பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குருமகா
சந்நிதானம் வந்து விளக்கேற்றி துவக்கி வைப்பார்கள். இந்த முறை
திருவாவடுதுறை தம்பிரான் சுவாமிகள் வந்து விளக்கேற்றி அருளுரை வழங்கினார்.

                                    

                                     
                                    
                                      

 கொடிமரத்திற்கு நேரே அழகாய்ப் பெரிய குத்துவிளக்கு
அலங்கரிக்கப்பட்டு இருந்தது அநத விளக்கை முதலில் ஏற்றி
இலட்சதீபத்தை  தம்பிரான் சுவாமிகள் துவக்கி வைக்க , கோவில் முழுவதும் மக்கள் ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் விளக்கு ஏற்றத்
தொடங்கினர்.சுமார் ஒருமணி நேரத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு, கோவில்

முழுவதும் ஜெகஜோதியாய் காட்சி அளித்தது.

எப்படி விளக்கு ஏற்றவேண்டும், எந்த உலோகங்களில் ஏற்றினால் நல்லது
என்ன எண்ணெய் ஊற்றி ஏற்றினால் நல்லது.  விளக்கை எப்படி துலக்குவது என்று எல்லாம் பேசினார்கள், பெரியபுராணத்தில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும்நன்மைகளைக் கூறும் பாடல்கள், திருமந்திரத்தில் உள்ள பாடல்கள் என்றும்,பேசினார்கள் அதன் பின்  பேராசிரியர் பெருமக்கள் பேசினார்கள். முதலில்பேசிய பேராசிரியர் என் கணவர்.

                               

கோவிலில் விதவிதமாய்க் கோலங்கள் போட்டிருந்தார்கள் பெண்கள்.
தெய்வ உருவங்களை அழகாய் வரைந்து, அதைச் சுற்றிலும் விளக்கு வைத்து
இருந்தார்கள்.
                           
     

                                     

                                                                                                                            

                            
                                       

                                     

                                     
                                     
                                         

மக்களை மாலை நேரம்  கோவிலுக்கு வரவழைக்க இது போன்ற விழாக்களால் தான் முடியும் போல்! அவ்வளவு மக்கள் கூட்டம்.  விளக்கு எரிக்க எண்ணெய் இல்லாமல் எவ்வளவு கோவில் இருள் அடைந்து கிடக்கிறது. அங்கு எல்லாம் இப்படி இலட்சதீபம் ஏற்ற வாரீர் என்று போட்டு எண்ணெயை வாங்கிச் சேமித்து வைத்தால் ஆண்டு முழுவதும் ஏற்றலாம்.


(’தீபத் திருநாள் திருக்கார்த்திகை’  என்ற பதிவில்  திருவிளக்குப்பாடல்கள்,
நாயன்மார்களும், ஆழவார்களும், நம் முன்னோர்களும் பாடிய பாடல்கள்
தொகுப்பு உள்ளது.

ஜோதி வழிபாடு’ என்ற பதிவில் விளக்கேற்றி அற்புதம் புரிந்தவர்களைப் பற்றிக்
குறிப்பிட்டு இருக்கிறேன். படிக்காதவர்கள் படித்துப்பார்த்து உங்கள்
கருத்துக்களை சொன்னால் மகிழ்வேன்.)
                                                        
குருக்கள் சாந்தநாயகிக்கு அழகாய் சந்தனக்காப்பு அலங்காரம் செய்து
இருந்தார்.

                                           

                                              புனுகு பூனை பூஜித்த புனுகீஸ்வரர்.

கோவில் கோபுரம் எல்லாம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அன்று நடந்த விழா சிறப்பு படங்கள் உங்கள் பார்வைக்கு:
 
     
அக இருளை விலக்கி, அங்கு ஒளி பொருந்திய இறைவனைக்
குடியேற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.

                                                                   வாழ்க வளமுடன்.
                                                                              ------------


49 கருத்துகள்:

 1. வணக்கம்
  அம்மா.

  வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றுவதன் நோக்கம் பற்றியும்
  புதிய தகவலாக
  கல்யாணத்திற்கு கொடுக்கப்படும் குத்துவிளக்குக்கு இப்படியான வணக்கமுறை ஒன்றை தங்களின் பதிவின் வழி அறிந்தேன்..அம்மா. படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகு. வாழ்த்துக்கள்..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  அம்மா.
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. ஆஹா ...என்ன ஒரு விளக்கம் !! அருமை அருமை அருமையான
  படைப்பினைக் கண்டு உள்ளம் குளிர்ந்தது தோழி .வாழ்த்துக்கள்
  தங்களின் இல்லமும் ஒளிமயமாகத் திகழட்டும் .மிக்க நன்றி
  சிறப்பான பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 4. இலட்ச தீபம் கண்டு மகிழ்ந்தேன் சகோதரியாரே நன்றி

  பதிலளிநீக்கு
 5. இலட்ச தீபம் கண்டு மகிழ்ந்தேன் சகோதரியாரே நன்றி

  பதிலளிநீக்கு
 6. படங்களுடன் பகிர்வு
  மிக மிக அற்புதம்
  தீப மகிமை குறித்து அறியாதன
  அறியவேண்டியவைகளை அறிந்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோவில் அழகு. 'திருவிளக்கை ஏற்றிவைத்தேன் திருமகளே வருக...' பி. சுசீலாவின் குரலில் பாடல் மனதினில் ஓட, பதிவைப் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான விளக்கம் அம்மா... படங்கள் அனைத்தும் பிரமாதம்... இங்கும் தாடிக்கொம்பு கோயிலில் இது போல் நடக்கும்... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
  உங்கள்அழகான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் அம்பாளாடியாள், வாழ்க வளமுடன்.
  உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் மனம்கனிந்த வாழ்த்துக்களுக்கு மிக நன்றி.
  தமிழ்மணவாக்குக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்குக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் ரமணிசார், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கு அளித்தமைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். சார் வரைந்த இரண்டு படங்களை பார்க்கவில்லையா?(கோவிலில் மகளுடன் விளக்கு ஏற்றும் படம், வீட்டில் விளக்கு பூஜை செய்யும் படம்)
  கலர் படம் வரைந்தவுடன் தெரியவில்லையா?
  பி.சுசிலாவின் பாடலுடன் பதிவை படித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம், திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். தாடிகொம்பு கோயில் பார்த்து இருக்கிறேன். அங்கும் இலட்சதீபம் நடைபெறும் என்று கேள்விபட்டு மகிழ்ச்சி.
  தமிழமண வாக்குக்கு நன்றி.வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. தமிழ்மண வாக்கு அளிக்கும் எல்லோருக்கும் நன்றி.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
  அன்பின் பூ - இரண்டாம் நாள்

  பதிலளிநீக்கு
 17. ஹைய்யோ!!! அருமையோ அருமை! எதைச் சொல்ல எதை விட!

  இனிய பாராட்டுகள்.

  பேராசிரியருக்கு எங்கள் அன்பான விசாரிப்புகள்.

  (புனுகு) பூனை கும்பிட்ட கோவில் என்றால் நல்லாத்தான் இருக்கும் இல்லே!!!

  பதிலளிநீக்கு
 18. விளக்கிட்டார் பேறு சொல்லவும் அரிதே..!

  அழகாய் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சாந்தநாயகி அருள் பொழியும் படம் மனம் நிறைத்தது ..!

  விளக்கொளியில் ஜொலிக்கும் ஆலயம் அருமை..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் துளசிகோபால், வாழ்க வளமுடன்.
  புனுகு பூனை உங்களை அழைத்து வந்து விட்டதே! என் பதிவுக்கு.
  கோயில் மிக நன்றாக இருக்கும்.
  உங்கள் பாராட்டுக்களுக்கும் இனிய விசாரிப்புகளுக்கும் நன்றி துளசி.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். விளக்கிட்டவர்களின் பெருமையை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.
  சாந்தநாயகிக்கு அழகாய் அலங்காரம் செய்வார் குருக்கள் எப்போதும்.
  உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.  பதிலளிநீக்கு
 21. வெகு அழகான மிகவும் அருமையான ரம்யமான பகிர்வு.

  படிக்கப்படிக்க, படங்களைப் பார்க்கப்பார்க்க, கண்களுக்கு விருந்தாக, மனதுக்கு மருந்தாக ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

  கையினால் வரைந்துள்ள ஒருசில படங்கள் மிகவும் அழகாக அற்புதமாக ஜீவ ஒளியுடன் புத்துயிர் பெற்றதாக அமைந்துள்ளன.

  அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 22. எத்தனை எத்தனை விளக்கங்களுடன் படப்பகிர்வும் கருத்தை மட்டுமல்ல கண்ணையும் கவர்ந்து விட்டன.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  நலமா?
  முன்னால் உள்ள இரண்டு படங்கள் சார் வரைந்தது. கோவிலில் உள்ள படங்கள் பெண்கள் , ஆண்கள் என்று அடியார்கள் வரைந்தது. உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
  உங்கள் உறசாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் சாந்தி மாரியப்பன், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. // சார் வரைந்த இரண்டு படங்களை பார்க்கவில்லையா?//

  நான் அப்படி நினைத்துத் தேடித் பார்த்தேன். அவர் வரைந்தது என்று இப்போதுதான் தெரிகிறது. அற்புதம். திறமையான அந்தக் கைகளுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 27. அன்பு கோமதி, ஒவ்வொரு அன்னையும் கற்றுத்தரவேண்டிய நல்லவிஷயங்களை அம்மா உங்களுக்கும் கொடுத்திருக்கிறார். இது வாழையடி வாழையாகத்தொடரட்டும். என் அம்மாவும் மாலைபொழுதில் தாமரைப் பூ விளக்கை ஏஏற்றச் சொல்லி தமிழ் அர்ச்சனைப் பாடல்களைச் சொல்லவைப்பார்கள். ஜோதி நம்முள் ஏற்றி இறைவன் முன்னும் ஏற்றும்போது ஏற்படும் நிம்மதியும் ஆனந்தமும் சொல்லி முடியாது. சாரின் படங்கள் வழக்கம் போல் வெகு ஜோர். ஆதினங்கள் வந்திருந்து சிறப்பித்த விழாவை உங்கள் படங்கள் மூலம் கண்டு மகிழ்ந்தேன். மிக மிக நன்றி அம்மா. எல்லோர் வீட்டிலும் ஒளீ பரவட்டும். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 28. சிறப்பான விளக்கம்! நிறைய கோவில்கள் இருளில் கிடப்பது உண்மை! வீணாய் பல பொருட்கள் வாங்கி வீட்டை நிரப்புவதை விட கோவிலுக்கு எண்ணெய் வாங்கிக் கொடுத்து ஒளியால் நிரப்பினால் நம் இருளும் விலகும். புணுகீஸ்வரர் கோவில் எந்த ஊரில் இருக்கிறது? அதையும் பகிர்ந்து இருக்கலாமே! அலங்காரம் அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
 29. விளக்கேத்தச் சொன்னீங்களேனு ஓட்டமா ஓடி வந்தேன். ஏத்தி முடிஞ்சாச்சு! :)

  அருமையான விழாப் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. வெள்ளிக்கிழமை விளக்குகளும் கோலங்களும் அபாரம்! எல்லோரும் பக்தி உணர்வோடு. செய்து இருக்கிறார்கள். உங்கள் கணவர் ஒரு பேராசிரியர் என்ற செய்தி மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
 31. ஸ்ரீராம், சார் படத்தைப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
  பாராட்டுக்களுக்கு நன்றி சொல்ல சொன்னார்கள் சார்.

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது போல் வாழையடி வாழையாக தொடரபட வேண்டிய பழக்கம் தான். அதை எல்லா குழந்தைகளுக்கும் அவர் அவர் அன்னைதான் கற்றுக் கொடுப்பார்கள். தாயைப்பார்த்து தான் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். உங்கள் அருமையான கருத்துக்கும், அனபான வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 33. சிறப்பாகத் தொகுத்திருக்கிறீர்கள்.வண்ணக் கோலங்கள், ஒளி தீபங்கள்,
  சுவாமி அலங்காரங்கள் அனைத்தையும் காணத் தந்திருப்பதற்கு நன்றி. சாரின் கணினி ஓவியங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் சுரேஷ், வாழ்க வளமுடன்.
  புனுகீஸ்வரர் கோயில் மபிலாடுதுறையில் இருக்கிறது.
  உங்கள் வருகைக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.
  வலைச்சரப் பொறுப்பை நன்றாக செய்தீர்கள். எனக்கு தான் தொடர்ந்து வர முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் ஜனா சார்.வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் இளங்கோ, வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது போல் அனைவரும் பக்தி உணர்வுடன் தான் செய்து இருக்கிறார்கள்.

  என் கணவர் தமிழ்த்துறை தலைவராக பூம்புகார்க் கல்லூரியில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர்கள்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

  பதிவையும், சாரின் கணினி ஓவியத்தையும் பாராட்டியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 38. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
  உங்கள் பின்னூட்டம் மறைந்து இருந்தது இப்போது தான் கண்டு பிடித்து போட்டேன்.
  விளக்கேற்றியதற்கும் விழாவை கண்டு மகிழ்ந்தமைக்கும் நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 39. தங்கள் கணவரின் ஓவியங்கள் அருமை அம்மா.. பெண்களின் கோலங்கள், சந்தனகாப்பு அலங்காரம் என அனைத்தும் அருமை. பகிர்ந்ததற்கு நன்றிகள்!!

  பதிலளிநீக்கு
 40. வணக்கம் தியானா, வாழ்க வளமுடன். உங்கள் வருகைக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 41. வணக்கம் கவியாழி கண்ணதாசன்,வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 42. அழகான படங்கள்......

  விளக்கங்களும் அருமை......

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 43. ஒளிரும் விளக்குகளும் கோலங்களும் அருமை.

  கணினி ஓவியங்களும் அருமை உங்கள்கணவருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 44. அன்பு மாதேவி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு