ஸ்விடிஸ் பரோவில் உள்ள ராஜகணபதி கோவில் போன போது எடுத்த நிலா
ஓரீஸ் என்ற இடத்தில் உள்ள இந்து டெம்பிள் என்ற கோவில் வாசலில் எடுத்த நிலா
லாங்வுட் கார்டனன்லில் இரவு எட்டு மணிக்கு எடுத்த நிலா
நிலாவானில் நீந்தும் வெண்ணிலா
இரவு நடக்கும் வாணவேடிக்கை பார்க்க மடக்கு நாற்காலியைப் போட்டு இடம் பிடிக்கச் செல்லும் என் கணவர்
சேர் போட்டு இடம் பிடித்தபின் மலர்ப்பூங்கா பார்க்கப் போகும் சிறுவர்கள்
வெள்ளை சேர்கள் வாடகைக்கு கிடைப்பது.
கலர் கலராக உள்ளது அவரவர்கள் வீடுகளிலிருந்து கொண்டுவருவது.
நடக்க முடியாதவர்கள் பேட்டரி சேர் காரில் வந்து இடம் பிடித்துக் கொள்கிறார்கள்
இந்த மண்டபத்திற்கு பக்கத்திலிருந்து வாணம் விடுவார்கள்.
வெடிகளின் பின்னணியில் ஒளிரும் நிலா
பெரிய வட்டம்- நிலா
சின்ன மத்தாப்பூக்களுக்கு ஓரத்தில் நிலா
பெரிய புஸ்வாணங்களுக்கு மேலே நிலா
வானத்தில் சிதறும் வெடிகளுக்குள் நிலா
ஒளிரும் வாணமும் நிலாவும்
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா என்று நாம் சிறு வயதில் பாடி இருப்போம்.குழந்தைகளுக்கு நிலா காட்டி உணவு கொடுத்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன். அன்று என் குழந்தைகளுக்கு, இன்று பேரக்குழந்தைகளுக்கு . அன்றும் அதே நிலா தான், இன்றும் இதே நிலா தான்.
நிலா பாட்டுமட்டும் மாறி விட்டது.
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறிவா
மல்லிகைப்பூக் கொண்டுவா
நடுவீட்டில் வை
நல்ல துதி செய்
என்று பழைய பாடல்
இப்போது கடைசி இரண்டு வரிகள் மாறி உள்ளது.
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுத்தி வா
என்று இருக்கிறது.
சினிமாக்களில் முழுநிலா மிகவும் முக்கியம். அவர் அவர் மனநிலைக்கு ஏற்றவாறு நிலாவும் பாடலும் காட்சி அமைப்புகளும் மாறும். பாட்டு எழுதும் கவிஞர்களுக்கும், படம் எடுக்கும் காமிரமேன்களுக்கும் நிலவின் மீது அத்தனை காதல்.அவ்வளவு அழகாய் இருக்கும் பாடல்கள், காட்சி அமைப்புக்கள், அந்தக் காலம் முதல் இன்று வரை. நிறைய பாடல்கள் எல்லோர் நினைவுகளிலும் வந்துமோதும். யாருக்கு என்ன பாடல் நினைவுக்கு வந்தது என்று பின்னூட்டத்தில் பகிர்ந்து கொண்டால் எல்லோரும் ரசிப்பார்கள்.
புராணங்களில் நிலவு வழிபாடு, நிலவு தேய்வது ,வளர்வதற்கு எல்லாம் என்ன காரணம் என்ற கதை உண்டு அதை எல்லாம் திருமதி இராஜராஜேஸ்வரி அழகாய் அந்த அந்த நாளில் விரிவாக விளக்கம் தந்து அப்போது எந்த கோவில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை அழகாய் கண்ணை கவரும் படங்களுடன் நமக்கு தந்து இருக்கிறார். எல்லோரும் படித்து இருப்பீர்கள்.
வல்லி அக்கா நிலா ரசிகை. அவர்கள் தன் பதிவில் பெளர்ணமி சமயம் அவர்களே எடுத்த அழகான நிலாப்படங்கள் பகிர்வார்கள். பார்த்து இருப்பீர்கள்.
நேற்று போட்ட பதிவு அமெரிக்கா நிலாப் பற்றி. பதிவுக்கு பின்னூட்டம் போடும் போது நானும் நிறைய நிலா படமெடுத்தேன் என்று போட்டு இருந்தேன். உடனே எனக்கும் ஆசை வந்து விட்டது , நான் செல்லும் இடம் எல்லாம் எடுத்த நிலா படம் போட .
பென்சில்வேனியாவில் உள்ள ”லாங்வுட் கார்டன்” என்ற என்ற இடத்திற்கு போன மாதம் போய் இருந்தோம் அங்கு மலர்த் தோட்டம், அழகான புல்வெளிகள், நீர் ஊற்று நடனம், வாணவேடிக்கை எல்லாம் உண்டு ஒரு பதிவில் நீரூற்று நடனத்தை பகிர்ந்து கொண்டேன்.
இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை ஆரம்பம். அதற்கு கட்டணம் 38 டாலர் ஒருவருக்கு. கையில் திருப்பதிக்குபோகும் போது அடையாள் டோக்கன் கட்டுவதுபோல் சிவப்பாய் ஒரு அடையாள அட்டையைக் கட்டி விடுகிறார்கள். அரைமணி நேரம் வாணவேடிக்கை, பின்னணியில் இசை ஒலிக்க நடை பெறுகிறது. கடைசி நேரத்தில் மட்டும் டாம்டூம் என சத்தத்துடன் சட சட வென்று வெடி அதிர்கிறது. அதற்கு முன்பு எல்லாம் சிறிய சத்தத்துடன் பூவாண சிதறல்கள்தான். வட்டமாய், நட்சத்திரம்போல்,வால்நட்சத்திரம் மாதிரி.
வெள்ளையாக தெரியும் அழகிய நீரூற்றுக்குள் வாணவேடிக்கையின் போது கலர் கலராக தெரிகிறது.
நம் ஊரில்( மதுரையில் ) அழகர் எதிர் சேவையின் போது தல்லாகுளத்தில் இரவு வாணவேடிக்கை வைப்பார்கள். வித விதமாய் அதை எல்லாம் பார்த்து விட்டு இதைப்பார்க்கும் போது ஆச்சரியமாய் இல்லை எனக்கு. ஆனால் பின்னணி இசையும் ஒவ்வொரு வெடி வெடித்தபின் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதும் பார்க்க கேட்க நன்றாகத் தான் இருக்கிறது.
இங்கு அவர்களுக்கு நம்மைப் போல் சுதந்திரமாய் வெடி வெடிக்கமுடியாதே! குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் தான் அவர்கள் வாணவேடிக்கை செய்வார்கள் . அப்போது தான் ரசிக்க முடியும். இந்த கார்டனில் மாதம் இரண்டு தடவை உண்டு. மதியம் மூன்று மணிக்கே வந்து வாணவேடிக்கை பார்க்க இடம் பிடிக்க சேர்களை போட்ட பின் மக்கள் தோட்டத்தின் அழகை ரசிக்க போகிறார்கள். தோட்டத்தின் அழகை, மலர்களின் அணி வகுப்பைக் கண்டு ரசித்து பார்க்கில் விளையாடி பின் ஆறு மணிக்கு நீர் நடனத்தை கண்டு மகிழ்கிறார்கள். வாணவேடிக்கையை நன்கு இருட்டியவுடன் தான் ஆரம்பிப்பார்கள்.
எட்டு மணி வரை போன மாதம் இருட்டவில்லை. சின்னவர்கள், பெரியவர்கள் என்று எவ்வளவு கூட்டம் வருகிறது இந்த வாணவேடிக்கையை ரசிக்க.
வாணவேடிக்கை சமயம் நிலா வானத்தில் சின்ன வெளிச்ச பந்தாய் இருந்ததையும் காட்ட வாண வேடிக்கை வீடியோ எடுத்ததையும் போட்டு விட்டேன், எங்கள் சின்ன காமிராவில் எடுத்தது ரொம்ப எதிர்பார்க்க முடியாது.
மலர்த் தோட்டம் - எனது அடுத்த பதிவில் .
வாழ்க வளமுடன்.
நிலா, வாணவேடிக்கை படங்கள் அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குகாண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே...
பதிலளிநீக்குகண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே...
ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே – நீ...
ஓரிடத்தில் நின்றதென்ன வெள்ளி நிலவே...
ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே – நீ...
ஓரிடத்தில் நின்றதென்ன வெள்ளி நிலவே...
நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன சொல்...
நினைவும் மாறி நின்று விட்ட வேதனை என்ன...?
நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன சொல்...
நினைவும் மாறி நின்று விட்ட வேதனை என்ன...? – இங்கு
விளையாடும் காதலரைக் காண வந்தாயோ – உன்னை
அறியாமல் பார்த்த படி திகைத்து நின்றாயோ...?
காதலெங்கள் சொந்தமென்று அறியவில்லையா...?
கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா...?
காதலெங்கள் சொந்தமென்று அறியவில்லையா...?
கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா...? – உன்
மோகநிலை மறந்து விடு வெள்ளி நிலாவே வந்த
மேகத்திலே மறைந்து விடு வெள்ளி நிலாவே...
வாங்க தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமுதலில்வந்து படங்களை பாராட்டி. அழகான, அருமையான பாடலை பகிர்ந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி.
உங்கள் பதிவில் நீங்கள் பகிர்ந்து கொண்ட பலே பாண்டியா படத்தில் கூட அருமையான பாடல் உள்ளது. இங்கு நீங்கள் பகிர்ந்த பாடல் பாக்கியலக்ஷ்மி தானே!
உங்கள் வரவுக்கும், பாடல் பகிர்வுக்கும், கருத்துக்கும், தமிழ் மண ஓட்டுக்கும் நன்றிகள்.
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாகஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
பதிலளிநீக்குகாணொளிகள், படங்கள் அனைத்தையும் ரசித்தேன். பூர்ண நிலவைக் கொண்டாடும் விதமாக வானிலே பூவாகப் பொழிகின்றன ஒளிச் சிதறல்கள். ஆர்வமாக நாற்காலிகளுடன் இடம் பிடித்து இரசிப்பது சுகானுபவமே. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையான காட்சி
பதிலளிநீக்குநாங்களும் அங்கிருந்து பார்ப்பதைப்போலவே
அற்புதமாகப் படமெடுத்து பகிர்ந்தமைக்கும்
காணொளிக்கும் மனமார்ந்த நன்றி
நேரில் பார்த்த மாதிரி ஒரு சந்தோஷம்!
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.
>>>>>
எனக்குப்பிடித்த நிலா பாடல்கள்:
பதிலளிநீக்குஉயர்ந்த மனிதன் என்ற படத்தில் வரும் முதல் பாடல்.
“நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா .......
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா ....
தென்றலே என் தனிமை கண்டு இன்று போய் விடு .....
தென்றலே என் தனிமை கண்டு இன்று போய் விடு ......
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா ......”
+
சின்னச்சின்ன ஆசை ...
சிறகடிக்கு ஆசை ......
முத்து முத்து ஆசை ....
முடிந்து வைத்த ஆசை ...
என்ற பாடலில் வரும்
வெண்ணிலவைத்தொட்டு
முத்தமிட ஆசை ......
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை .....
சின்னச்சின்ன ஆசை ....
சிறகடிக்கும் ஆசை ...... “
//புராணங்களில் நிலவு வழிபாடு, நிலவு தேய்வது, வளர்வதற்கு எல்லாம் என்ன காரணம் என்ற கதை உண்டு அதை எல்லாம் திருமதி இராஜராஜேஸ்வரி அழகாய் அந்த அந்த நாளில் விரிவாக விளக்கம் தந்து அப்போது எந்த கோவில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை அழகாய் கண்ணை கவரும் படங்களுடன் நமக்கு தந்து இருக்கிறார். எல்லோரும் படித்து இருப்பீர்கள். //
பதிலளிநீக்குஆஹா! நல்லதொரு நினைவலைகளை ஞாபகப்படுத்தியுள்ளதற்கு நன்றிகள்.
இணைப்பினையும் கொடுத்திருந்தால் அனைவருக்கும் பயன்பட்டிருக்குமே ! ;)
படிக்காதவர்களும் படிக்க முடியும், படித்தவர்களும் மீண்டும் பார்த்து ரஸிக்க முடியும்.
எனினும் இதைத் தங்கள் பதிவினில் வெளியிட்டுள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
அன்புடன் VGK
பட்டம் போல பறந்து வா
பதிலளிநீக்குபம்பரம் போல் சுத்தி வா
வெள்ளி ஓடம் போல் நீந்தும் அழகான வெண்ணிலவை வான
வேடிக்கைகளுடன் சிறப்பான பதிவாக்கியதற்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!
வெண்ணிலவே வெண்ணிலவே
பதிலளிநீக்குவிண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உனை அதிகாலை அனுப்பி வைப்போம்
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பதிலளிநீக்குஅழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
வா முத்துலெட்சுமி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகவிதாயினிக்கு கவிதை தந்த பாடல் நினைவுக்கு வந்து விட்டதா? மகிழ்ச்சி பகிர்வுக்கு.
புதிய பாடலா? எந்த படம்?
வாங்க ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமலர் தோட்டத்தில் மலர்களை நிறைய படம் எடுத்து விட்டக் காரணத்தால் காணொளி கொஞ்சம் தான் எடுக்க முடிந்தது. மகனும் எடுத்தான் அவனிடம் கேட்டு போடலாம் என்றால் வேலை பளு அதிகமாய் இருக்கிறது. அதனால் தொந்திரவு செய்யவில்லை.
இன்னொரு சமயம் அவன் எடுத்த கணொளியை பகிர்கிறேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. உங்களுக்கு பிடித்த நிலவு பாடல் சொல்ல வில்லையே!
வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், அருமையான உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.
வாங்க கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குபாடல் நினைவுக்கு வரவில்லையா?
வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். படங்கள் நன்றாக இருக்கிறதா? நன்றி.
பதிலளிநீக்கு1970ம் வருடம் சுசீலா அவர்களுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த அருமையான பாடல் அல்லவா! நாளை இந்த வேளை பாடல்.
சின்ன சின்ன ஆசை பாடலும் அருமையான பாடல். அதுவும் விருது பெற்றது என்று நினைக்கிறேன், மின்மினி பாடியது,
ஜப்பான் மொழியில் இந்த பாடலை மொழி பெயர்த்து ஜப்பான் ரசிகர்கள் விரும்பி கேட்டார்கள். அந்த பாடல் வந்த சமயம் எல்லோரும் சிறியவர் முதல், பெரியவர்கள் வரை விரும்பி கேட்டப் பாடல்.
உங்கள் விருப்ப பாடல் பகிர்வுக்கு நன்றி.
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளை காலையில் எழுந்தவுடன் பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் படித்து இருப்பார்கள் சார்.நீங்கள் முதலில் வந்து அருமையான் பின்னூட்டங்கள் நாலு ஐந்து என்று போட்டு விடுவீர்கள். உங்கள் நன்றிகளுக்கு நன்றி.
வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபதிவை ரசித்து பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
உங்களுக்கு நினைவுக்கு வந்த பாடல்கள் மிக அருமையான பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.
**
பதிலளிநீக்குவெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
**
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
**
பழைய பாடல்கள் பலவும் நன்றாக இருக்கும். ‘நாளை இந்த வேளை பார்த்து’ பாடலும் அருமையான மெலடி.
அருமையான நிழற்பட, வீடியோப் பதிவுப் பகிர்வுகள்!
பதிலளிநீக்குமிக மிக அருமை!
இப்படி வெளியில் எல்லோரும் ஒன்றுகூடி ரசிப்பதும் ஒரு மகிழ்வே!
பகிர்வினுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை...
என் மனதில் என்றும் ஒலிக்கும் பாடல்...
அமரர்கள் ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் ஜெமினி கணேஷன் அவ்ர்கள் நடிப்பில் பாடல் வரிகள் அப்ப்டியே மனதை உருக்கிச் செல்லும்...
எத்தனை தடவை கேட்டாலும் என் கண்கள் பனித்துவிடும்...:’(
த ம.4
ஆஹா ! மறந்துட்டேன்.
பதிலளிநீக்கு“ஆயிரம் நிலவே வா ! ஓர்
ஆயிரம் நிலவே வா ! ....
இதழ் ஓரம் சுவை சேர்த்து புதுப்பாடல் நீ பாடப்பாட .........
ஆயிரம் நிலவே வா ! ஓர் ஆயிரம் நிலவே வா ! “
-=-=-=-=-=-
இதே தலைப்பில் நான் ஒரு தனிப்பதிவே சமீபத்தில் வெளியிட்டுள்ளதால், தனியே இங்கு மீண்டும் சொல்ல மறந்திருக்கிறேன்.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
இந்தப்பதிவுக்கு பின்னூட்டங்களின் எண்ணிக்கை 210க்கு மேல் போகிவிட்டதால், மேலும் யாராவது பின்னூட்டமிட்டால் அது நிலாவாக அங்கு தோன்றாமல் மேகங்களால் மறைக்கப்பட்டு வருகிறது ;(
எனினும் என்னால் மட்டும் அவைகளை வேறு வழியில் சென்று படித்து மகிழ முடிகிறது.
-=-=-
இதுபோல ஏற்கனவே இரண்டு பதிவுகளில் இதே பிரச்சனையை நான் சந்தித்துள்ளேன்.
[1]
http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
262 பின்னூட்டங்கள் உள்ளன. ஆனால் முதல் 200 மட்டுமே யாராலும் படிக்க முடிகிறது.
[2]
http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
224 பின்னூட்டங்கள் உள்ளன. ஆனால் முதல் 200 மட்டுமே யாராலும் படிக்க முடிகிறது.
-=-=-
வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், பதிவுலக சாதனைப் பெண்மணி. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நீங்கள் போட்ட சிறப்பு பதிவு அல்லவா!
பதிலளிநீக்குஆயிரம் நிலவே வா ஓர் ஆயிரம் நிலவே வா என்பது.
//இந்தப்பதிவுக்கு பின்னூட்டங்களின் எண்ணிக்கை 210க்கு மேல் போகிவிட்டதால், மேலும் யாராவது பின்னூட்டமிட்டால் அது நிலாவாக அங்கு தோன்றாமல் மேகங்களால் மறைக்கப்பட்டு வருகிறது ;(//
இப்படி வேறு இருக்கிறதா! தெரியாதே!
உங்கள் அடை பதிவுக்கு எல்லோரும் ரசிகர்கள் அல்லவா அதற்கு அதிக பின்னூட்டங்கள் வாராமல் இருக்குமா?
அடுத்துநீங்கள் பெற்ற விருதுகளை 108 பதிவர்களுக்கு பகிர்ந்து அளித்தீர்கள். அதற்கு நன்றி பின்னூட்டமே 216 க்கு மேல் இருக்கும், அப்ப்ய்றம் ரசித்தவர்கள் வேறு கேட்கனுமா!
மீண்டும் உங்கள் வருகைக்கும் தகவல்கள், பாடலுக்கும் நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி., வாழ்க வளமுடன். நீங்கள் பகிர்ந்த இரண்டு பாடல்களும் மிக நன்றாக இருக்கும்,
பதிலளிநீக்கு// ‘நாளை இந்த வேளை பார்த்து’ பாடலும் அருமையான மெலடி.//
ஆம் அருமையான் மெலடி தான் எனக்கும் பிடித்தபாடல்.
நீங்கள் சொல்வது போல் பழைய நிலா பாடல்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கும். கோமதியின் காதலன் என்ற படத்தில் வானம் மீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே! சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் நன்றாக இருக்கும். அம்மா தன் நோட்டில் இந்த பாடலை எழுதி வைத்து இருந்தார்கள். அவர்களுக்கு பிடித்த பாடல்.
மீண்டும் வந்து உங்கள் நினைவுக்கு வந்த பாடலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராமலக்ஷ்மி.
வாங்க இளமதி, வழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
//என் மனதில் என்றும் ஒலிக்கும் பாடல்...
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை...
அமரர்கள் ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் ஜெமினி கணேஷன் அவ்ர்கள் நடிப்பில் பாடல் வரிகள் அப்ப்டியே மனதை உருக்கிச் செல்லும்...
எத்தனை தடவை கேட்டாலும் என் கண்கள் பனித்துவிடும்...:’(//
உங்களுக்கு பிடித்த இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். எத்தனை முறை கேட்டாலும் மனம் நெகிழ்ந்து தான் போகும். இசை, நடிப்பு, பாடல் வரிகள் எல்லாம் அருமையாக கலந்த பாடல்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.
படங்கள் அருமை. நேரில் பார்த்த உணர்வு. நன்றி
பதிலளிநீக்குமேலும் சில பாடல்கள்:
பதிலளிநீக்கு[1]
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ ....
நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ .....
[2]
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத்தொடாதே.
[3]
"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை"
"அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை"
"அவள் இல்லாமல் நானில்லை ......
நான் இல்லாமல் அவள் இல்லை"
-=-=-
இதுபோன்று இன்னும் எவ்வளவோ இனிமையான பாடல்கள். ;)
யோசிக்க யோசிக்க ஒவ்வொன்றாய் வந்துகொண்டே தான் இருக்கும்.
வாங்க ஜெய்க்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொன்ன பாடல்கள் எல்லாம் அருமை.
உங்கள் உற்சாகமான பாடல் பகிர்வுகளுக்கு நன்றி.
இவை எல்லாம் நெஞ்சில் நீங்காத இடம் பெற்ற பாடல்கள் ஆயிற்றே!
நிலவை காமிராவுக்குள் விதம் விதமாக சிறைப் பிடித்து விட்டீர்கள். கண் கொள்ளாக் காட்சி. நிலவைப் பாரத்தாலே ஒரு மகிழ்ச்சிதான்
பதிலளிநீக்குகொஞ்சம் பழய பாடல் தான் 'என்றும் அன்புடன் ' படம் பெயர். :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநேற்றுதான் சவாலே சமாளி பார்த்ததால் உடனடியாக நினைவுக்கு வந்த பாடல் 'நிலவைப் பார்த்து வானம் சொன்னது' அப்புறம் நிறைய நிலாப் பாடல்கள் மனதில் வரிசை கட்டி நிற்கின்றன.
எல்லாப் படங்களும் கண்டேன், ரசித்தேன்.
தல்லாக்குளம் நினைவுகள் எனக்கும்! நான் அங்கு ரேஸ் கோர்ஸ் காலனியில் இருந்தேன்!
பதிலளிநீக்கு”நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ....” வாணவேடிக்கைகளைப் பார்க்க முப்பது டாலரா.? அதை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாமே.திருச்சூர் பூரம் அன்று நடைபெறும் வாண வேடிக்கை பார்த்தவர்க்கு எல்லாமே ஜுஜுபிதான்,,,!படங்கள் அருமை. பாராட்டுக்கள்.
உங்களது இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருக்கும்போது 'முரசு' தொலைக்காட்சியில் ராகினி 'வெண்ணிலாவும் வானும் போலே' என்று பாட பத்மினி அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார்!
பதிலளிநீக்குஎல்லோரும் நிலா பாட்டு சொல்கையில் நான் சொல்லாமல் போனால் நன்றாக இருக்குமா?
வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆம், நீங்கள் சொல்வது போல் நிலவை கண்டாலே மகிழ்ச்சி தான்.உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வா முத்துலெட்சுமி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன் படம் கேள்வி பட்டு இருக்கிறேன், பாடல் கேட்டது இல்லை கேட்டுப்பார்க்க வேண்டும்.
நன்றி மறுவருகைக்கு.
வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவரிசைகட்டி நிற்கும் பாடல் தொகுப்பை உங்கள் தளத்தில் நேயர் விருப்பமாய் பகிர்ந்து கொள்ளுங்கள். கேட்டு மகிழ்கிறோம்.
உங்களுக்கும் தல்லாகுள நினைவுகள் வந்தது மகிழ்ச்சி.தல்லாகுள பெருமாள், புரட்டாசி சனிக்கிழமை , அழகர் வரும் நாள், அவர் அழகர் கோவில் போகும் நாள் எல்லாம் நினைவுகளில் வந்து போகிறது.
தல்லாகுளத்தில் வெடிப்பது போல் வித விதமாய் கோவையில் என் மாமியார் வீட்டுப்பக்கம் ஒரு வீட்டில் தீபாவளிக்கு வெடிப்பார்கள் இரவு எல்லோரும் வேடிக்கைப் பார்ப்பார்கள்.
உங்கள் வரவுக்கும், பாடல் பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். உங்களுக்கு நினைவுக்கு வந்த பாடல் மிக இனிமையாக இருக்கும். நன்றி.
பதிலளிநீக்குஎங்கிருந்தும் பர்க்க முடியாது. வாணவேடிக்கை பார்ப்பவர்கள் மட்டும் தான் அந்த தோட்டத்தில் இருக்க அனுமதி மற்றவர்கள் 6 மணிக்குள் திருப்பி அனுப்ப பட்டு விடுவார்கள்.இருவருக்கும் வேறு வேறு அடையாள அட்டைகள் கையில் கட்டப்படுகிறது.
திருச்சூர் வாணவேடிக்கை கேள்வி பட்டு இருக்கிறேன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநானும் இப்போது முரசு ரசிகை ஆகிவிட்டேன் பழைய பாடல்கள் கேட்டு மகிழ்வேன். நீங்கள் பகிர்ந்த பாடல் மிக நன்றாக இருக்கும்.
உங்கள் வரவுக்கும், நிலாபாடல் சொன்னதற்கும் நன்றி.
என்னன்னவோ பெயர்கள் நிலவுக்கு இருந்தாலும், நிலா என்றால் தான் அழகாக இருக்கிறது. 'நிலா' என்பதில், பெண்மை முகம் பெறுவதாலோ என்னவோ.
பதிலளிநீக்குஇன்றைய எனது பதிவிலும் ஒரு நிலா பாட்டு. இந்தப் பதிவை நான் பார்ப்பதற்கு முன், கதை வரிகளுக்கி டையே அதுவும் ஒரு வரியாய் வந்திருக்கிறது.. அந்தப் பாடலை யாத்த கவிஞர், யுகக்கவிஞர். ஏற்கனவே நம் உள்ளம் கொள்ளை கொண்டவர்.
எல்லாமே திரைப்படப் பாடல்களாக இருக்கையில் ஒரு மாற்றத்திற்கு அந்தப் பாடல், இங்கே.
"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்!
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!
கதை வரிகளுக்கி டையே அதுவும் ஒரு வரியாய் வந்திருக்கிறது.. அந்தப் பாடலை யாத்த கவிஞர், யுகக்கவிஞர். ஏற்கனவே நம் உள்ளம் கொள்ளை கொண்டவர்.//
பதிலளிநீக்குகவிஞ்சர்களுக்கு நிலாவின் மேல் அவ்வளவு காதல் அருமையாக எழுதுவார்கள் . பாவேந்தர் பாடல் மிக் அருமை.
//இன்றைய எனது பதிவிலும் ஒரு நிலா பாட்டு//
உங்கள் கதையில் அந்த பென்ணைப்பார்த்தவுடன் கவிஞனாய் மாறி பாடுவது பொருத்தம் தான்.
நீங்கள் பகிர்ந்த பாரதிதாசன் கவிதை பழைய சினிமா படங்களில் கதாநாயகன் காதலியைப் பார்த்து பேசுவதாய் அமையும் புகழ் பெற்ற கவிதைதான்.
//'நிலா' என்பதில், பெண்மை முகம் பெறுவதாலோ என்னவோ.//
உண்மை. என் உறவினர் பெண் பேர் நிலா. பெண்ணை நிலாவுக்கு ஓப்பிடூ செய்து பேசாத கவிஞர் உண்டா?
உங்கள் வருகைக்கும், அருமையான கவிதை பகிர்வுக்கும் நன்றி சார்.
நிலவு புகைப்படங்களும் அதன் விபரங்களும் அருமை!
பதிலளிநீக்குகொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன் போலிருக்கிறது! அதற்குள் இருக்கின்ற அத்தனை நிலவுப்பாடல்களையும் எல்லோரும் எழுதி விட்டார்கள்! இருந்தாலும் பாக்கி நினைவில் இருக்கின்ற பாடல்களை எழுதுகிறேன்.
'நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது' [ படம்: தேன் நிலவு]
இரவும் நிலவும் வளரட்டுமே [ கர்ணன்]
நிலவே நீ சாட்சி[ படம்: நிலவே நீ சாட்சி ] [ இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
விண்ணோடும் முகிலோடும் [ படம்: புதையல்] மிக இனிமையான பாடல்களில் ஒன்று இது!!
நிலவென்ன பேசும் [ ராணி சம்யுக்தா]
நிலவோடு வான் முகில்[ராஜராஜன்]
பொன்னெழில் போத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில் [ கலங்கரை விலக்கம்] [ காலத்தால் அழிக்க இயலாத இனிமையான பாடல்]
நிலாவும் வாணவேடிக்கையும் அருமை..
பதிலளிநீக்குவாங்க மனோ சாமிநாதன்,வாழ்க வளமுடன். நீங்கள் தாமதமாக வந்தாலும் எவ்வளவு அருமையான பாடல்கள் உங்களுக்கு இருந்து இருக்கிறது பகிர.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் எல்லாம் காலத்தால் அழியாத இனிமையான பாடல்களதான்.
உங்கள் வரவுக்கும், அழகிய பாடல் பகிர்வுக்கும் மிகவும் நன்றி.
வாங்க அமைதிச்சாரல் , வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குபாடல் சொல்லவில்லையே நீங்கள்!
வானவேடிக்கைகளும் நிலா படங்களும் ரொம்ப சூப்பர்
பதிலளிநீக்குமடக்கு நாற்காலி அவரவர் தான் கொண்டு வரனுமா?
காணொளி என்னால் பார்க்க முடியாது பிறகு வந்து பார்க்கீறேன்
பதிலளிநீக்குத ம - 6
வாங்க ஜலீலா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமடக்கு நாற்காலிகள் அங்கு கிடைக்கும் , வாடகை கொடுக்க வேண்டும். நம் காரில் எடுத்து சென்று விட்டால் நல்லது என்று எல்லோரும் கொண்டு வந்து விடுவார்கள். சனி, ஞாயிறு வெளியில்(கேம்பிங்) செல்ல எல்லோர் வீடுகளிலும் மடக்கு நாற்காலிக்ள், மடக்கு பெரிய குடைகள்,டென்ட் எல்லாம் வைத்து இருக்கிறார்கள். அதனால் கவலை இல்லாமல் கொண்டு வந்து விடுகிறார்கள்.
நேரம் கிடைக்கும் போது காணொளி பாருங்கள்.உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கு நன்றிகள்.
கோமதிம்மா..படங்கள் பல கதைகள் சொல்லுகின்றன.ரொம்ப நேரமாக அழகுப்படங்களை விழி அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
பதிலளிநீக்குகாணொளிகள், படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபடங்களும் பதிவும் நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்திவிட்டன. பின்னூட்டங்கள் பல கருத்துக்களுடன் சுவைபட எழுதப்பட்டுள்ளன.
பதிலளிநீக்குவாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.ஊருக்கு போய் வந்தபின் என் தளத்திற்கு இப்போது தான் வருகிறீர்கள். நலமா?
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், நீங்கள் படங்களை ரசித்தமைக்கும் நன்றி.
வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க வியாபதி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி. பின்னூட்ட கருத்துக்களையும் ரசித்தமைக்கு மிகவும் நன்றி.
அருமையான நிலவு. வாணவேடிக்கையும் உங்கள் வர்ணனையும்,அதற்குப் பிறகு வந்த பின்னூட்டங்களும்
பதிலளிநீக்குநிலா போலவே அழகு.
தனபாலனின் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதில் வரும் பொருள் ஜானைக்கும் பொருந்தும் நல்லதொரு காட்சி பாக்ய லக்ஷ்மியில்.
அனைவரும் ஒர்ர் இனம் என்பது போல நிலா பக்தர்கள் ஆகிவிட்டோம் பாருங்கள். நிலவு தரும் குளிர்ச்சி போல பதிவும் பின்னூட்டங்களும் மின்னுகின்றன.
மனம் நிறைந்த வாழ்த்துகள் கோமதி.
வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.உங்கள் பின்னூட்டத்திற்கு நிலா காத்து இருந்தது. நீங்கள் நிலா ரசிகை அல்லவா!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் தனபாலன் பகிர்ந்த பாடல்,அந்த படத்தில் ஜானகிக்கும் பொருந்தும். காட்சிக்கு ஏற்ற பாடல்தான் பாக்யலக்ஷ்மியில்.
நிலாவைக்காட்டி தாய்மார்கள் உணவு அளித்ததால் அனைவரும், நிலா பக்தர்கள் ஆகி விட்டார்கள்.
உங்கள் வருகைக்கும், மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.
நிலாவைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் உண்டோ! பெண்ணிற்கும் நிலாவிற்கும் நிறைய சம்மந்தம் உண்டு பெண்ணின் முகத்தை நிலாவிற்கு ஒப்பிடுவாரகள், இந்துமதி, மலர்மதி, வெண்ணிலா பிறைநிலா என்றெல்லாம் பெயர் வைப்பது உண்டு. தங்கள் கூறியது போல் நிலா உங்கள் நண்பன் குழந்தைகளுக்கு சோறூட்டும் போதும். நிலவை வீட்டுற்குள்ளேயே இவ்வளவு பரிமாணங்களில் ரசிக்க வைத்த தங்களுக்கு அன்பு நன்றிகள் அம்மா.
பதிலளிநீக்கு//அதற்கு கட்டணம் 38 டாலர் ஒருவருக்கு.//
பதிலளிநீக்குஏ..யப்பா.. 38 டாலரா!! எங்க ஊருக்கு வாங்கக்கா... எல்லாருக்கும் ஃப்ரீ!! அடிக்கடி நடக்கும். :-)
வாங்க பாண்டியன்,வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் நிலவைப் பற்றி பாடாத கவிஞ்ர்கள் கிடையாது தான்.
குழந்தைகளுக்கு சோறூட்டும் போது நண்பன் தான்.
உங்கள் வருகைக்கும், அருமையான பின்னூட்டத்திர்கும் நன்றி.
வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவந்து விடுகிறேன். உங்கள் ஊருக்கு.
நீங்கள் பாடல் சொல்ல வில்லை,
படங்கள் எப்படி இருக்கு சொல்லவில்லை !
உங்கள் அழைப்புக்கு நன்றி.
மிகவும் தாமதமாக் வருகிறேன் போலும். ஆனால் வந்தது முக்கியம் என்பது நிறைவு.
பதிலளிநீக்குநல்ல நிலாப் பதிவு.
அதில்லை! கவனமாக எல்லா நிலாக்களையும் சேமித்து
ஒன்றாகப் போட்டது சிறப்பு விடயம் ரசித்தேன்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்:
வாங்க வேதா.இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் என் தளத்திற்கு வந்து கருத்து பதிவு செய்யலாம், உங்கள் வரவு மகிழ்ச்சியும் நிறைவும் தரும்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
சற்று வேலைப்பளுவால் தொடர்ந்து பல தளங்களுக்கும் வரவியலவில்லை. இன்றுதான் இந்தப் பதிவைக் கண்ணுற்றேன். வாணவேடிக்கை பார்க்க நிலவும் வானத்திலிருந்து வேடிக்கை பார்க்க வந்துவிட்டதோ? அழகிய புகைப்படங்களும் காணொளிக்காட்சிகளும் மனம் கொள்ளைகொண்டன. நிலா என்றால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பம்தானே. எங்கள் மகள் பெயர் வெண்ணிலா என்பதை இங்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி. நிலாப் பாடல்கள் ஒவ்வொன்றும் நிலவை ரசிப்பது போலவே சுகம். மனந்தொட்ட பகிர்வுக்குப் பாராட்டுகள் மேடம்.
பதிலளிநீக்குவாங்க கீத மஞ்சரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவை நானும் எதிர்ப்பார்த்தேன், உங்களுக்கு வேலைகள் அதிகம் இருக்கும் போல என்று நினைத்தேன்.
நீங்கள் சொல்வது போல சிறியவர் முதல் பெரியவர் வரை நிலா என்றால் மகிழ்ச்சிதான்..
வெண்ணிலா என்று பேர் உங்கள் மகளுக்கு வைத்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி. நிலா பாடல் எல்லாம் கேட்க சுகம் தான்.
உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
வானில்தவழும் வெண்ணிலா, இரவுநிலா, வாணவேடிக்கைகளை பார்த்து சிரிக்கும் நிலா என நிலாப் பெண் பல தோற்றங்களில் மகிழ்விக்கின்றாள். ரசனை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்க மாதேவி, வாழ்க வளமுடன். உங்கள் வருகைக்கு தான் நிலா காத்து இருந்தாள்.நிலா பெண்ணின் பல தோற்றங்களை ரசித்தமக்கு நன்றி மாதேவி.
பதிலளிநீக்குநிலாப்பகிர்வு,படங்கள்,காணொளி அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குவாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
திருமதியா நாச்சியாரானு கொஞ்சம் சந்தேகம் வந்துடுச்சு.
பதிலளிநீக்குநடுவில் ஒரு படம் கடலில் குளிக்கும் நிலாப் போல் ஒரு பிரமையை உண்டாக்கியது.
வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களை இரண்டு மூன்று பதிவுகளில் காணோம்.
நீங்கள் சொல்வது சரிதான் நாச்சியர் அக்காவின் நிலா பதிவுகளைப் பார்த்து தான் நானும் நான் எடுத்த நிலா படங்களை பகிர்ந்தேன்.அக்காவுக்கும், தங்கைக்கும் ஒரே மாதிரி நினைப்பு இருக்க கூடாதா?
நீங்கள் உங்களுக்கு பிடித்த நிலா பாடலை சொல்லவில்லையே!
நடுவில் ஒரு படம் கடலில் குளிக்கும் நிலாப் போல் ஒரு பிரமையை உண்டாக்கியது.//
பதிலளிநீக்குநிலாவானில் நீந்தும் வெண்ணிலா படத்தை தானே படத்தைதானே நீங்கள் சொல்கிறீர்கள் அப்பாதுரை சார்?
வெள்ளை மேகங்கள் அலைகள் போலவும், நீலமேகம் நீலக்கடல் போல் இருந்ததால்தான் அந்த தலைப்பே கொடுத்தேன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
நீல வாண ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா/
பதிலளிநீக்குவாங்க விமலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்தை அழகாய் சொல்லிவிட்டீர்கள் இரண்டையும் இணைத்து.
நன்றி.
அழகு நிலாவையும், வாணவேடிக்கையும் கண்டு களித்தோம் அம்மா. அழகான பகிர்வு.
பதிலளிநீக்குவாங்க ஆதி , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநிலாவையும், வாணவேடிக்கையும் கண்டு களித்தமைக்கு நன்றி