திங்கள், 26 ஆகஸ்ட், 2013

சிங்காரத் தோட்டத்திற்கு வந்த விருந்தினர்

வீட்டுத்தோட்டம்  பற்றியும் அது அளிக்கும் இன்பத்தைப் பற்றியும்  போன பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.  வீட்டுத்தோட்டம் மனதுக்கு மகிழ்ச்சி உடலுக்கு ஆரோக்கியம் , இதய நோயைப் போக்கும்,  தோட்டத்தைப் பார்க்கும் போது உற்சாகம் தொற்றிக் கொள்கிறது என்று பின்னூட்டம் கொடுத்தவர்கள் எல்லாம்  மகிழ்ச்சியாக தங்கள் கருத்துக்களைப்  பகிர்ந்து இருக்கிறார்கள். இப்படி வீட்டுத்தோட்டம் , நலங்கள்  பல தருகிறது எனத் தெரிகிறது.

ஒரு பழைய  சினிமாப் பாடல் -குழந்தைகள் பாடுவது போல் இருக்கும்- சிறு வயதில் மணலில் வீடு கட்டி விளையாடும் போது கூட தோட்டம் அமைக்க வேண்டும் என்று குழந்தைகள் பாடுவார்கள்:

’ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி,
தோட்டம் இட்டு செடி வளர்த்து ஜோராக குடி இருப்போம்.

 அந்த வீட்டில் வந்தவர்களுக்கு எல்லாம் இடம் இருக்கும் என்று பாடுவார்கள்
வீட்டுக்கு வரும் எல்லோருக்கும் அந்த வீட்டில் இடம் இருக்குமாம் எவ்வளவு அழகாய் பாட்டு எழுதி இருப்பார்கள்!  சீனிவாஸ் அவர்களும், சுசீலா அவர்களும் நன்றாகப் பாடி இருப்பார்கள்.

  பாரதியாரும் ”அழகாய்   மாளிகை !  அதில்  தென்னைமரங்கள் !அதில் அமர்ந்து கீதம் இசைக்கும் குயிலை எல்லாம் ரசிக்க வேண்டும்!” என்கிறார். இப்படி இயற்கை சூழலில் இருந்தால் கவி பாடக்  கேட்க வேண்டுமா!


//காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.//

என்று அவர் பாடினார்


என்னுடைய போன பதிவைப்படிக்காதவர்கள் படிக்கலாம். அதன்சுட்டி
சின்னஞ்சிறு  தோட்டம்  சிங்காரத் தோட்டம்

மண்,மரம், மழை என்று வலைத்தளம் வைத்து இருக்கும்
திரு .வின்சென்ட் அவர்கள் ஆகஸ்ட்  தேதி 25  உலக வீட்டுத்தோட்டத்தினம்  என்று சொல்லி ஒரு சிறு பதிவு போட்டு இருக்கிறார் பாருங்கள்.

//பெருகி வரும் ஜனத்தொகை, குறைந்து வரும் அல்லது அழிவைத்தரும் மழையளவு, விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவது, அதிக இரசாயன பயன்பாடு, மரபணு மாற்ற விதைகள், தரமற்ற நிலத்தடி நீர், துரிதஉணவு முறை இவை அனைத்தும் மக்களின் ஆரோக்கிய வாழ்வையும், புரிந்துணர்வையும் கேள்விக் குறியாக்குவதோடு முறைகேடான விலைவாசி உயர்வையும், ஊழலையும் நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு நம்மாலான  ஒரு மிகச் சிறிய வாய்ப்பு இந்த “வீட்டுத் தோட்டம்”
உலக வீட்டுத் தோட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம்  4 வது ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த  உலக வீட்டுத் தோட்ட தினத்தில் உங்கள் சிந்தையில் “வீட்டுத் தோட்டம்” என்னும் சிறு விதையை ஊன்றுங்கள் அது முளைத்து வளர்ந்து விருட்சமாகி உங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் பயனளிக்கட்டும்.எனது வீட்டுத் தோட்டம் பற்றிய பழைய பதிவு:
http://maravalam.blogspot.in/2010/10/blog-post_26.html
வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் இன்றைய காலத்தின் தேவை .//

 இந்தப் பதிவில் வீட்டுத்தோட்டம் அமைக்க இடம் இல்லை என்றால் மாடித்தோட்டம் அவசியம் என்கிறார்.

நான் என் போன பதிவில் என் தோட்டத்திற்கு வந்த விருந்தாளிகளைப்பற்றி அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் என்றேன் .அவர்களை நீங்களும் பாருங்களேன்.
                                          வித்தியாசமான வண்ணத்துப்பூச்சி

                                                தூரத்திலிருந்து எடுத்த மைனா


                                                           தேன் எடுக்கும் கரு வண்டு


                                           தூரத்திலிருந்து எடுத்த மணிப் புறா


தரையின் வண்ணம் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம் என்று வந்த வண்ணம் குறைந்த  வண்னத்துப் பூச்சி


கும்பிடு பூச்சி, இலை பூச்சி, குச்சி பூச்சி இப்படியும் சொல்லாம் தானே!

பூனையார் ஒளிந்து பார்க்கிறார்

பூ அழகா, நான் அழகா ?

                           சிட்டுக்குருவிகள் ,,  தவிட்டுக் குருவி

தானியங்களை கொறிக்க அணில் செய்யும் சாகசங்கள்
என் மகன் , மருமகள் இருவரும்  தங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு  வந்த விருந்தாளிகளை தங்கள்   காமிராவில் எடுத்து வைத்து இருந்தார்கள் . அந்த அணில், குருவி தொகுப்பை கொடுத்து  உதவினார்கள்.


நடனம் ஆடும் வண்ணத்து பூச்சி

இசை நீரூற்று



சமீபத்தில் பென்சில்வேனியாவில் உள்ள ”லாங்வுட் கார்டன்” என்ற  தோட்டம் போய் இருந்தோம். அதில்  இசை நீர் ஊற்று பார்த்தோம். அது போல் தாத்தாவிடம் வீட்டுத்தோட்டத்தில் நீரூற்று  செய்யவேண்டும் என்று பேரன் .
. சொல்ல அதேபோல் நீரூற்று செய்ய , அதற்கு பேரன் பாட்டுப் பாடுகிறான்.

 
உலக வீட்டுத்தோட்டநாளில்  நம்வீட்டுத்தோட்டத்தில்ஒருரோஜாசெடியாவது 
வைத்து மகிழ்வோம் .வாழ்க வளமுடன்.                                                                                                                       a

45 கருத்துகள்:

  1. வீட்டுத் தோட்ட நாளுக்கு ஏற்ற பதிவு.
    உங்கள் வண்ணத்து பூசசியும், அணிலும், தோட்டமும் மனதைக் கொள்ளையடிக்கின்றன.

    நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
  2. அடேங்கப்பா
    உங்க வீடு சொர்க்கம்போல அல்லவா இருக்கிறது
    வாழ்த்துக்கள்
    வாய்ப்புக் கிடைத்தால் ஒரு முறை தரிசிக்கவேணும் போலத்
    தோணுது
    படங்களுடன் பகிர்வு அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்களுடன் கூடிய அருமையான கட்டுரை. மனதுக்கு இதமாக உள்ளது, பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு -நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. அருமை... அருமை... ரசித்தேன்... வாழ்த்துக்கள் அம்மா....

    பதிலளிநீக்கு
  5. புது வீட்டுல இப்போதான் செடிலாம் நட்டு வைக்க ஆரம்பிச்சிருக்கேன்

    பதிலளிநீக்கு
  6. மிக அருமை!. புத்தம் புதுப் பதிவு.
    கிளிக்கினேன் வந்து விட்டது.
    (சொல்லவே பயமாக உள்ளது.
    மறுபடி வலை ஆடக் கூடாது என்பது பிரார்த்தனை.)
    படங்களும் மிக நன்று ரசித்தேன்.
    அனபு வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

  7. வீட்டுத் தோட்டம் பதிவு சிறப்பாய் இருக்கிறது. பாரதி கனவு கண்டான். அம்மாதிரிக் கனவுகள் நாமும் காணலாம்.60x30 என்று இருக்கும் இடத்தில் வீடும் கட்டித் தோட்டமும் வைப்பது சிரமம். இருந்தும் என் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மாமரம் ஒரு தென்னை( இரண்டிருந்தது. ஒன்றின் மேல் இடி விழுந்து பட்டுப் போயிற்று)பெயர் தெரியாத குரோட்டன்ஸ் எல்லாம் மனைவி உபயம், ரோஜாச் செடி( கொடி.?) என்று இருக்கிறது. இதையே பராமரிக்க முடியவில்லை.
    உங்கள் தோட்டத்துப் படங்கள் அழகோ அழகு. எப்போதும் காமிராவுடன் இருந்தால் பல அபூர்வ படங்களை எடுக்கலாம்.வாழ்த்துக்கள். இந்தத் தோட்டம் இந்தியாவிலா.?

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வரும் விருந்தினர்கள் நடனமும் ஆடி எங்களையும் மகிழ்விக்கிறார்களே!மலர்களும், தோட்டமும், விருந்தாளிகளுமாக மிகச் சிறப்பாக உலக தோட்ட தினத்தை கொண்டாடிவிட்டீர்கள், கோமதி!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் சில செடிகள் வைத்துள்ளோம். கரும்பு வைத்து அது வளர்ந்து வருவது சந்தோஷமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. கேட்காமலேயே மலை வேம்பு... அப்புறம் கீரை, வெண்டை, துளசி...பூக்கள்.. இவை வைத்துள்ளோம்.

    பதிலளிநீக்கு
  10. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அமையக் கொடுத்துவைத்திருக்கவேண்டும். என்ன கவலை என்றாலும் சற்றுநேரம் தோட்டத்தில் உலவினாலோ, சும்மா செடிகொடிகளையும் அங்கு வரும் பறவைகளையும் பார்த்துக்கொண்டிருந்தாலோ போதும். மரஞ்செடிகள் இருக்குமிடத்தில் காலைநேரப் பறவைகளின் கீச்சொலி தேவகானமாய் நம்மை எழுப்பும். தாங்கள் ரசித்தவற்றை நாங்களும் ரசிக்க அழகாய்த் தொகுத்தளித்தமைக்கு நன்றி மேடம். பேரனுக்காக தாத்தா செயற்கை நீரூற்று அமைத்ததும் அதற்கேற்ப பேரனின் குதூகலப்பாட்டும் மனம் கொள்ளைகொண்டன. அடுத்தவாரம் எங்கள் ஊர் நூலகத்துக்கு 'The edible balcony' புத்தகம் எழுதிய பிரபல எழுத்தாளர் இந்திரா நாயுடு வருகைதந்து பால்கனித் தோட்டம் பற்றி பேசவிருக்கிறார். நிச்சயம் கலந்துகொள்ளவேண்டும் என்றிருக்கிறேன். உங்கள் பதிவும் ஆர்வம் கூட்டுகிறது. நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  11. நாளுக்கு ஏற்ற மிகவும் அருமையான பகிர்வு.
    உங்கள் வீட்டு விருந்தினர்கள் அனைவரும் அழகாக இருக்கின்றார்கள்.

    காணொளிகளும் அழகு. தாத்தா பேரனுக்காக செய்தது சூப்பர்.

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம்,வாழகவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன்.
    நாங்கள் மகன் வீட்டில் நியூஜெர்சியில் இருக்கிறோம். குழந்தைகளுடன் இருக்கும் போது தானே நம் வாழ்கை சொர்க்கமாய் இருக்கிறது. வாருங்கள் நீங்களும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    மனதுக்கு இதம் தருகிறது என்று சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.
    உங்கள், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க ராஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் புது வீட்டில் செடிகள் எல்லாம், வளர்ந்து மகிழ்ச்சி அலைகளை பரப்ப வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. தோட்டத்திற்கு வந்த விருந்தாளிகள் வணணம் சேர்க்கிறார்கள்..
    மகிழ்ச்சி கூட்டுகிறார்கள்..!

    பதிலளிநீக்கு
  18. வாங்க வேதா. இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.
    உங்கள் ரசிப்புக்கு மகிழ்ச்சி. பயம் வேண்டாம் இனி பதிவு ஆடாது. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அங்கைய அணில்களுக்கு முதுகில் மூன்று கோடுகள் இல்லை, தானே? நான் பார்த்ததை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன். கீரிப்பிள்ளை மாதிரி தண்டியான அடர்த்தியான வால்.

    பதிலளிநீக்கு
  20. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.பாரதியார் கனவு கண்டது போல் இப்போது 10, 12 தென்னை மரம் வைக்க முடியாது, திருவனந்தபுரத்தில் என் தாத்தா வீட்டில் இன்னும் 15 தென்ன மரங்கள் உள்ளன.யாழ்பானத்து காய் ஒவ்வொன்றும் அவ்வளவு பெரிதாக இருக்கும்.
    இந்த தோட்டம் என் மகன் வீட்டில் இருக்கிறது அவன் நியூஜெர்சியில் இருக்கிறான் நான் இங்கு இப்போது இருக்கிறேன் சார்.
    உங்கள் மனைவி அமைத்துள்ள தோட்டம் அறிந்து மகிழ்ச்சி.
    நீங்கள் சொல்வது போல் காமிராவும் கையுமாய் இருந்தால் தான் திடிர் என்று வரும் சில விருந்தாளிகளை படம் பிடிக்க முடியும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன். தோட்டத்துக்கு வந்த விருந்தினர்களைப் பார்த்து மகிழ்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். நானும் ஊரில் துளசி, கற்றாழை, ஓமவல்லி, நந்தியாவட்டை, அரளி, மருதாணி , மஞ்சள், இஞ்சி எல்லாம் வைத்து இருக்கிறேன், பூசெடிகள் எல்லாம் ஆடு வந்து சாப்பிட்டு விட்டு போய் விடுகிறது அதனால் ஆடு தின்னா செடி மட்டும் தான் இப்போது உள்ளது. முன்பு பன்னீர் ரோஜா,செம்பருத்தி வித விதமாய் வைத்து இருந்தேன்.
    கரும்பு வைத்து இருப்பது பொங்கலுக்கு கிடைத்து விடுமா உங்களுக்கு? உங்கள் வர்வுக்கும்,கருத்துக்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்
    தோட்டத்து விருந்தினர்களையும்,, தாத்தா , பேரன் விளையாட்டை ரசித்தமைக்கும் நன்றி கீதமஞ்சரி.
    //எங்கள் ஊர் நூலகத்துக்கு 'The edible balcony' புத்தகம் எழுதிய பிரபல எழுத்தாளர் இந்திரா நாயுடு வருகைதந்து பால்கனித் தோட்டம் பற்றி பேசவிருக்கிறார். நிச்சயம் கலந்துகொள்ளவேண்டும் என்றிருக்கிறேன்.//

    கலந்துகொண்டு இந்திரா நாயுடு என்ன சொன்னார்கள் என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
    தோட்டத்து விருந்தினர்களையும், காணொளிகளையும் ரசித்தமைக்கு நன்றி. இன்னொரு வீடியோ இருக்கு அதில் தான் நன்றாக இருக்கும் தாத்தா பேரனுக்கு செய்த இசை நீரூற்று, அந்த வீடியோவை வலை ஏற்ற முடியவில்லை ஏனோ, கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது எனக்கு.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் ந்ன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    முதுகில் மூன்று வரி உள்ள அணில் மிக சின்னதாக இருக்கிறது. அதிகம் காணப்படவில்லை, வீட்டு தோட்டத்திற்கு வந்த அந்த அணிலையும் மருமகள் படம் எடுத்து இருக்கிறாள் அது உடனே எடுக்க முடியவில்லை, தேடி அடுத்தமுறை அதையும் பகிர்ந்து கொள்கிறேன்.
    பெரிய அணிலுக்கு நீங்கள் சொல்வது போல் அடர்த்தியான வால்தான்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. படங்கள் பிரமாதம்.
    செல்போன் வளர்ச்சியால குருவிங்க காணாம போகலேன்றதுக்கு சாட்சி.. :)

    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள கோமதி,
    உங்களது இந்தப் பதிவை எனது வலைத்தளத்தில் இணைப்பாகச் சேர்த்துள்ளேன். நேரம் இருக்கும்போது படித்துப் பார்க்கவும்.

    http://wp.me/p2RUp2-3A

    நன்றி!
    அன்புடன்,
    ரஞ்சனி

    பதிலளிநீக்கு
  29. எங்க வீட்டிலேயும் ஒரு "bird feeder" இருக்கு. எல்ஸாக்ட்லி இதேபோல் அணில்தான் வந்து பறவைகள் உணவை எல்லாம் "தட்டிப் பறிச்சு" சாப்பிட்டுப் போயிடுது.

    ***ஜீவி said...

    அங்கைய அணில்களுக்கு முதுகில் மூன்று கோடுகள் இல்லை, தானே? நான் பார்த்ததை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன். கீரிப்பிள்ளை மாதிரி தண்டியான அடர்த்தியான வால்.***

    இந்த ஊர் அணில்கள் கொஞ்சம் வேறு வகை. கோடுகள் இருக்கா என்னனு தெரியவில்லை. நம்ம ஊர் அணிலில் தெரிவதுபோல பளிச்சுனு கோடுகள் தெரியாது. கவனிச்சுப் பார்த்தால் இருந்தாலும் இருக்கும். பெரியவைகளாக நல்லா ஹெல்த்தியாகவும் இருக்கும். தக்காளி ச்செடியெல்லாம் வளர்த்தால் அணிலுக்குப் போக மிச்சம் ஏதாவது இருந்தால்தான் உங்களுக்கு தக்காளிப் பழம் கிடைக்கும். :)

    The fact is.. People DO NOT love squirrels here as they cause all sort of trouble to us!

    பதிலளிநீக்கு
  30. பசுமையைப் பார்த்ததும் அப்படியே ம‌னசில் குளுமை ஏறுகிறது! இந்த மாதிரி செடி கொடிகளைப்பார்க்கும்போது தான் நம் ஊரில் நாம் இல்லையே என்ற பெருமூச்சு எழும். பசுமையான அருமையான பதிவு!!

    பதிலளிநீக்கு
  31. வாங்க வருண், வாழ்க வளமுடன். போனமுறை இங்கு வந்து இருந்த போது போட்ட பதிவுக்கு வந்து வாழ்த்து சொன்னீர்கள்.

    அடுத்து இந்த முறை வந்து பதிவு போட்டவுடன் வந்து விட்டீர்கள் மகிழ்ச்சி.

    உங்கள் வீட்டிலும் இந்த அணில் சேட்டை செய்வாரா?

    போன முறை தக்காளி செடி வைத்து இருந்த போது தக்காளி பழுத்தால் வந்து விடுவார். இந்த முறை பூச்செடிகள், வாழை மட்டும் தான். என் போன பதிவுபடித்தீர்களா?

    நம் ஊர் அணில் போல் இங்கும் இருக்கிறது. அதையும் எடுத்து இருக்கிறது.படம் எங்கோ ஒளிந்து கொண்டு இருக்கிறது. கிடைத்தவுடன் போடுகிறேன்.பெரிய அணிலுக்கு கோடுகள் இல்லை, சின்ன அணிலுக்கு கோடுகள் இருக்கிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  32. வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன். இங்கு எங்குப் பார்த்தாலும் சிட்டுக்குருவிகள் பறந்து திரிவதைப் பார்த்தால் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் உங்களைப் போல நினைப்பேன். செல்போனுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று. எங்கள் ஊர் மயிலாடுதுறையில் எப்போதுமே சிட்டுக்குருவி கிடையாது.அடைக்கல குருவி என்று அழைக்கப் படும் இந்த சிட்டுக் குருவி என் தாத்தா ஊர் திருவனந்தபுரத்திலும் கிடையாது.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  33. வாங்க ரஞ்சினி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வலைத்தளத்தில் இந்த பதிவை இணைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    உங்கள் ஊர் தஞ்சைஅல்லவா?

    வயல்கள் நிறைந்த வளம் கொழிக்கும் ஊர் அல்லவா?
    இப்போது வந்து பசுமையை கண்ணில் நிறைத்து சென்று இருப்பீர்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. அன்பு கோமதி,
    உங்கள் மனம் போலவே தோட்டமும் இனிமையாக அமைந்திருக்கிறது.
    அதைச் சுற்றிச் சுற்றி நீங்கள் படம் எடுத்திருக்கும் அழகு மிகவும் இனிமை.
    வண்ணத்துப் பூச்சியின் நடனம் மனம் கொள்ளை கொண்டது. மிக மிக நன்றிமா. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  36. படங்கள், காணொளிகள், வர்ணனைகள் அனைத்தையும் இரசித்தேன்:)! வீட்டுத் தோட்டத்தின் அவசியத்தை உணர்த்த சரியான நாளில் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  37. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் அன்பான பாராட்டும், வாழ்த்தும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
    நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  38. வாங்க ராமலக்ஷமி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் அனைத்தையும் ரசித்தது அறிந்துமகிழ்ச்சி. உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வாங்க கே.பி ஜனா சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. ***வாங்க வருண், வாழ்க வளமுடன். போனமுறை இங்கு வந்து இருந்த போது போட்ட பதிவுக்கு வந்து வாழ்த்து சொன்னீர்கள்.

    அடுத்து இந்த முறை வந்து பதிவு போட்டவுடன் வந்து விட்டீர்கள் மகிழ்ச்சி.***

    என்னிடம் என்ன ஒரு சுயநலம் பாருங்க. எங்க ஊருக்கு வந்து அது சம்மந்தமான ஏதாவது பதிவு போட்டால்தான் இங்கேயே வர்ரேன் போல இருக்கு. :)))

    ***உங்கள் வீட்டிலும் இந்த அணில் சேட்டை செய்வாரா?***

    அணில், முயல் எல்லாம் எங்க வீட்டிலும் டேராப் போடுவாங்க. எங்கெ மேலே ரொம்பப் பிரியமாவும், உரிமையுடனும் நடந்துக்குவாங்க. :)நம்ம ஊரில் பிரிய்ங்கெட்ட பொழப்புனு ஏதோ சொல்லுவாங்க இல்லை. அதெல்லாம் ஞாபகப்படுத்துவாங்க. :)

    என்ன நம்ம ஏதாவது ஒரு ப்ளான் பண்ணினால், அணில்களும், முயல்களும் வேற ஒரு ப்ளான் பண்ணி நம்ம ப்ளானை ஒப்பேத்திவிடும். நமம் வீட்டில் நம்ம குடியிருக்கிற நேரத்தைவிட அவங்கதான் அதிகம் நேரம் இருக்காங்க? என்னவோ போங்கப்பானு அணிலின் கோணத்தில் இருந்து யோசித்து நல்லாயிருனு வாழ்த்திட்டு, போயிடுவேன். :)

    ***போன முறை தக்காளி செடி வைத்து இருந்த போது தக்காளி பழுத்தால் வந்து விடுவார். இந்த முறை பூச்செடிகள், வாழை மட்டும் தான். என் போன பதிவுபடித்தீர்களா?***

    நான் பார்த்தேங்க.. எங்க வீட்டில் மல்லிகையும் ரோஜாவும்தான் இருக்கு. போன பதிவில் உங்க தோட்டத்தில் ரோஜாவும் இல்லாமல் இருந்தது. அதான் எதுவும் சொல்லாமல் போயிட்டேன்.

    இந்த முறை அணிலைப் பார்த்ததும் அதன் அருமை பெருமைகளை சொல்லலாம்னு வந்தேன் :)

    ***நம் ஊர் அணில் போல் இங்கும் இருக்கிறது. அதையும் எடுத்து இருக்கிறது.படம் எங்கோ ஒளிந்து கொண்டு இருக்கிறது.
    கிடைத்தவுடன் போடுகிறேன்.பெரிய அணிலுக்கு கோடுகள் இல்லை, சின்ன அணிலுக்கு கோடுகள் இருக்கிறது.***

    நல்லதுங்க. நான் இதுவரை அந்த வகை அணில் இங்கே பார்த்ததாக ஞாபகம் இல்லைங்க. முடிந்தால் தேடிப்பிடித்து ஒரு படம் பிடிச்சுப் போடுங்க! :)

    -----------
    நீங்க கோடையில் இங்கேயும், மற்ற மாதங்களில் நம்ம ஊர்லயும் வாழ்றீங்கனு எனக்கு இப்போத்தான் புரியுது. :)

    பதிலளிநீக்கு
  41. வாங்க வருண் வாழ்க வளமுடன்.
    உங்கள் மறு வரவுக்கு மகிழ்ச்சி.
    உங்கள் தோட்டத்தில் அணில் பாடாய் படுத்தினாலும் அதை வாழ்த்தி விட்டீர்கள். அந்த பண்புக்கு வாழ்த்துக்கள்.
    பேரனுக்காக இங்கு வரவு. முன்பு அவன் பிறந்த போது., இப்போது அவனுக்கு நான்கு வயது, அவனின் மழலை கேட்க ஆவலில் வந்து இருக்கிறோம்.

    //நல்லதுங்க. நான் இதுவரை அந்த வகை அணில் இங்கே பார்த்ததாக ஞாபகம் இல்லைங்க. முடிந்தால் தேடிப்பிடித்து ஒரு படம் பிடிச்சுப் போடுங்க! :)//

    உங்கள் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. தேடி படம் போட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு
  42. வணக்கங்க. நலம் நலமறிய ஆவல். தங்களை தொடர்பதிவெழுத அழைத்திருக்கிறேன். நேரம் இருப்பின் தென்றலுக்கு வருகை தரவும்.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம்
    அம்மா

    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_8.html?showComment=1399504745644#c2740972411937371345


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு