வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சின்னஞ்சிறு தோட்டம் சிங்காரத் தோட்டம்




நம் வீடுகளில் தோட்டம் போட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சின்ன இடமாக இருந்தாலும் இரண்டு தொட்டி வாங்கி அதில் இரண்டு
பூச்செடிகளை வைத்தால் அதில்  நாம் வாங்கி வந்தபின் இரண்டு இலை
துளிர் வந்தாலே அதைப்பார்க்கும்போது  மகிழ்ச்சி ஏற்படும். மொட்டு விட்டு
விட்டால் அதைவிட மகிழ்ச்சி. மலர்ந்து விட்டால் அளவில்லா மகிழ்ச்சி.
நாம் அவ்வப்போது  கண்டு களிக்க வசதியாக பூச்செடிகளைக் கண்ணில்  படுவது போல்   வைத்து இருந்தால் சந்தோஷத்திற்கு கேட்கவே வேண்டாம்.
நம் தோட்டத்தில் பூத்த மலர்களால் இறைவனுக்கு அலங்காரம் செய்தால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.

இங்கு மகன் வீட்டில் சிறிய தோட்டம், புல்வெளி என்று அழகாய் அமைத்து
இருக்கிறான் சில பூச்செடிகள் தொட்டியில் வைத்து இருக்கிறான்.  தோட்டத்திற்கு போயும், வீட்டில் இருந்தே  கண்ணாடிக்கதவு வழியாகப்பார்க்கலாம், காலையில் மலர்களை மொய்க்கும் வண்டு வரும்.  சின்ன பட்டாம்பூச்சிகள் வரும். காய்ந்த புற்களை எடுத்துச் சென்று குளிர்காலத்துக்கு படுக்க மெத்தை அமைத்துக் கொள்ள மணிப்புறாக்கள், குருவிகள், அணில்கள்   வரும். தானியங்கள் போட்டு இருக்கும் தொங்கும்  கண்ணாடி  ஜாடியிலிருந்து தானியங்களை சாப்பிடப் பறவைகள்,அணில்கள் வரும்.  நாம் படம் எடுக்கப் பக்கம் போனால் கண்சிமிட்டும் நேரத்தில் சிட்டாய் பறந்து விடும் பறவைகள். அணில் குடுகுடு என்று ஓடி ஒளிந்து கொள்ளும்.

கன கம்பீரமாய், கறுப்புப் பூனையார், இளம் ஆரஞ்சும், வெள்ளையும் கலந்த பூனையார் எல்லாம் வருவார்கள். இரவு மின்மினிப் பூச்சிகள் வந்து அழகு சேர்ப்பார்கள் தோட்டத்தை.

மகன் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் இடையில் இருக்கும் தடுப்புத்  தட்டி பக்கத்தில், வைலட் கலரில் பூக்கும் ஒரு செடி இருந்தது. அதில் மஞ்சளும், கறுப்பும் கலந்த வண்ணத்துப் பூச்சி காலையிலிருந்து இரவு வரை தேன் குடிக்க வரும். பார்க்க அழகாய் இருக்கும்.  நாள் முழுவதும் அதைப்  பார்த்துக் கொண்டு இருந்தாலும் அலுக்கவே அலுக்காது.  ஊரிலிருந்து வந்த  நாட்களாக பார்த்து ரசித்த அந்தக்காட்சி இரண்டு நாட்களுக்கு முன் கலைக்கப்பட்டது. பக்கத்து வீட்டுக்குப் புதிதாக வந்து இருப்பவர்கள் தோட்டத்தை முற்றிலும் அழித்து விட்டார்கள். வண்ணத்துப்பூச்சி  சிறகடித்து பறக்கும் அழகைக் காணமுடியவில்லை. ஒரே ஏமாற்றம் தான்.  ஏதோ இவ்வளவு நாள் பழகிய நட்பைப் பிரியும் வேதனை.இதனால் தான் சித்தர்கள் ஆசை அறுமின் என்றார்களோ!

அக்டோபர் வரைதான் இந்த வசந்தம். அதன் பின் பனி விழுந்து மலர் வனம் இருக்காது. மரங்கள் இலைகளை உதிர்த்தும், வண்ணம் மாறியும் இருக்கும். வந்ததில் இருந்து பூக்களையும், வண்டுகளையும், வண்ணத்துப்பூச்சிகளையும் நிறைய படம்பிடித்து இருக்கிறேன். நீங்களும் கொஞ்சம் ரசியுங்கள்.


                     ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்

                                                          மலர்ந்தும் மலராமலும்


                                        மொட்டும்      இருமலர்களும்

                                                                   மூன்றானோம்



இறைவன் பாதத்தில் 




இலைகளே மலர்களாய்


கொடி மலர்
அடுக்குப் பூ
மழையில் நனைந்த கொடிமலர்
அரளி போல் இல்லே!


இந்த பூவில் மஞ்சள் இதழில் மட்டும் எப்போதும் தேன் குடிக்கிறது இந்த வண்டு

வாழை  -  பனிக்காலம் வருமுன் பலன் தருமா ?
குடைபிடித்து இருக்கும் காளான்
முடி வெட்டி அழகு செய்து கொண்டு இருக்கிறது
திராட்சைக்கொடி கூட இனிக்கிறது போல
பக்கத்து வீட்டுத் தோட்டத்திற்கு வந்த வண்ணத்து பூச்சி




தோட்டத்தை இந்த ஊஞ்சலில்  இருந்து  ரசிப்போம் தரையை என் மகனும்,மகளும் சேர்ந்து  வண்ணம் தீட்டி அழகுபடுத்தி இருக்கிறார்கள். மழை விடாமல் பெய்து கறுப்பாய் இருந்த தரையை அழகிய வண்ணத்தரைஆக்கி விட்டனர். பேரனுடன் விளையாடும் இடமும் இது தான். தோட்டத்தில் மணல் தொட்டி இருக்கிறது ,பேரன் விளையாடடுவான்   எங்களுடன்.

மலர்  கண்காட்சி எப்படி இருக்கிறது? தோட்டத்திற்கு வந்த  மற்ற விருந்தாளிகளை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

மலர்த் தோட்டம் போல் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவோம்

அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்.

---------------------------------------------------------------------------------------------------------------------

59 கருத்துகள்:

  1. கண்ணுக்கு விருந்தளித்து மனதினை மகிழச் செய்தது உங்கள் பூந்தோட்டம்! அழகாக படம்பிடித்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. மகனின் மலர்தோட்டம் ரொம்ப அழகு.

    உங்களைக் கவர்ந்த வண்ணப் பொட்டு விருந்தாளி எங்களையும் மயக்குகிறார்.

    மிகுதியையும் போடுங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  3. இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

    >>>>>

    பதிலளிநீக்கு
  4. வண்ணப் பொட்டு விருந்தாளி என்னையும் மயக்கி விட்டார்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  5. பூந்தோட்டமும், அதை அழகாகப் பராமரிப்பதும், அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டதும் நல்லா இருக்கு.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்!

    சுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
    இதந்தரும் வாழ்வில் இனித்து!

    மலர்களின் அழகு மனதிற்கு மகிழ்வு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  7. பூவனம்.

    முதல் படம் மிக அழகு. தோட்டம் வைத்து மரம் செடி வளர்ப்பது என்பது உடல் ஆரோக்கியத்துக்கு, குறிப்பாக இதயத்துக்கு நல்லது என்பார்கள். பார்க்கும்போதே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

    பதிலளிநீக்கு
  8. கண்களுக்கு குளிர்ச்சி தந்த மலர்கள்......

    படங்கள் நன்றாக இருக்கும்மா...

    சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. தோட்டமும் படங்களும் அருமை மகனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. வாங்க சுரேஷ், வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. பதிவில் பார்த்தே மனம்
    அத்தனை குளிர்ந்து போனது
    படங்களுக்கும் பதிவிற்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. பார்க்கும்போது இனம்புரியாத மகிழ்வு எமக்குள் தோன்றுகிறது. மிகமிக அருமை!

    பகிர்வினுக்கு நன்றி!

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  13. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
    வண்ணப்பொட்டு விருந்தாளி உங்களை மயக்கி விட்டாரா?
    மகிழ்ச்சி மாதேவி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். உங்கள் சுதந்திரதின வாழ்த்துக்கு நன்றி.
    பூந்தோட்டமும், அதை அழகாகப் பராமரிப்பதும் ஒரு கலைதான் நீங்கள் சொல்வது போல். இங்கு இவர்களுக்கு பொழுது போக்கு,மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதும் எல்லாம் இந்த தோட்டம் தான். நவம்பர் மாதம் ப்னிவிழும் அதில் விளையாடுவார்கள்.
    வண்ணப் பொட்டு விருந்தாளி உங்களுக்கு பிடித்து இருப்பதில் மகிழ்ச்சி.
    உங்கள் வாழ்த்துக்களுக்கும், நான்கு பின்னூட்டங்களுக்கும் நன்றிசார்.

    பதிலளிநீக்கு
  15. வாங்க கவிஞர் பாரதிதாசன் ஐயா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் மலர்களின் அழகு மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது உண்மைதான்.
    உங்கள் கவிதை வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    ஜீவி சாரின் பூவனம் இங்கு வந்து விட்டதே!
    நீங்கள் சொல்வது உண்மை, உடல் ஆரோக்கியத்திற்கும், இதயத்திற்கும் நல்லதுதான். இதயம் மகிழ்ச்சியால் நிரம்பி உடல் லேசாக காற்றில் பறப்பது போல் உள்ளது.
    பசுமைகண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது. வண்ணத்து பூச்சிகளும், பச்சை, வெட்டுகிளிகளும், கும்பிடு பூச்சிகளும், சின்ன, பெரிய என்று வண்ணத்து பூச்சிகளைப் பார்க்கும் போது பிள்ளை பருவம் திரும்பி வந்து உற்சாகமாய் அதனுடன் ஓடிக் கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. வாங்க வெங்கட், வாழ்க வளமுடன்.
    படங்கள் நன்றாக இருக்கா மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் அருமையான, அழகான பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க இள்மதி, வாழ்க வளமுடன். உங்கள் தாயகம் இப்படி தானே பசுமையும் வனப்பும் நிறைந்து இருக்கும் அந்த நினைப்பு நெஞ்சில் நிறைந்து இருக்கும்! அதுதான் இனம்புரியாத மகிழ்வு.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  21. அழகான தோட்டம்.

    பனி காலத்துக்கு முன் எல்லா அழகையும் ரசிச்சு மனசில் தேக்கி வச்சு அப்பப்ப ரசிச்சுக்கணும்.

    வசந்தம் வந்ததும் எல்லாக் கொண்டாட்டங்களும் மறுபடி ஆரம்பிக்குமே!!!

    பதிலளிநீக்கு
  22. வாங்க துளசி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் பனி காலத்துக்கு முன் பூச்செடிகள் வியாபாரம் நன்றாக நடக்கிறது. வசந்தத்தை நன்கு கொண்டாடுகிறார்கள் பூச்செடிகளை வாங்கி வைத்து அதன் அழகை ரசிக்கிறார்கள்.
    அடுத்த வசந்தம் வரும்வரை மனதில் தேக்கி வைத்து ரசித்துக் கொள்ள வேண்டியது தான் நீங்கள் சொல்வது போல்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. அழகான தோட்டம்..

    முதல் படம் அசத்தல் கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  24. வண்ண மலர்களைக் காணவே அழகாக இருக்கிறதே. அதிகமான புகைப்படங்களை இணைத்து தோட்டத்தை நேரில் பார்த்த திருப்தியை ஏற்படுத்தி விட்டீர்கள்,

    பதிலளிநீக்கு
  25. சின்னஞ்சிறு தோட்டத்தில், சிங்காரத் தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சிகளையும், வண்ண வண்ணப் பூக்களையும் பார்த்தவாறே ஒரு வாக் போய்விட்டு, ஊஞ்சலிலும் ஆடி மகிழ்ந்தோம்.
    படங்கள் அத்தனையும் மிக அருமை!

    பதிலளிநீக்கு
  26. வாங்க அப்பாதுரை சார், வாழக வளமுடன்.
    மிகவும் பிஸி போல நீங்கள்?
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வாங்க விஜி பர்த்தி, வாழ்க வளமுடன்.
    வெகு நாட்கள் ஆகி விட்டதே! உங்களைப்பார்த்து நலமா?
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன், தோட்டத்தில் நடந்து ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தீர்களா ! மகிழ்ச்சி.
    உங்கள் வர்வுக்கும், அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. அக்டோபர் வரை அனுபவிக்கலாம் இந்த மகிழ்ச்சியை. வெகு அழகுணர்வோடு படம் எடுத்திருக்கிறீர்கள் கோமதி. மலர்களில் தான் எத்தனை வண்ண. அதென்ன ஏணி போலச் செல்கிறதே.
    ஊஞ்சலும் அதை ஒட்டிய வண்ணத்தரையும் அழகு. மருமகள் மகன் கைவண்ணம் கண்ணில் ஒற்றிக் கொள்ளத்தோன்றுகிறது. வாழ்கவளமுடன் அம்மா.

    பதிலளிநீக்கு
  31. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    ஏணி பின் பக்கம் ரோட்டுக்கு போகும் வழி. அந்தக் காலத்தில் வீட்டிற்குள் குளிருக்கு கனப்பு போட விறகு கட்டைகள் வேண்டும் அல்லவா! அதை ஏணி படிவழியாக வீட்டுக்குள் கொண்டுவர அமைத்து இருக்கிறார்கள்.மேல் பகுதியில் ஒரு பெரிய இரும்பு வளையம் இருக்கிறது அதில் விறகு கட்டைகள் இருக்கின்றன.
    மக்ன், மருமகள் கைவண்ணத்தை பாராட்டியதற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வண்ண மலர்கள். வட்டமிடும் வண்டுகள். படபடக்கும் பட்டாம்பூச்சிகள். இரவானால் மின்மினிப்பூச்சிகள். அடடா. அருமையான சூழல். உங்கள் வர்ணனையே பார்த்த நிறைவைத் தர, படங்கள் வர்ணனைக்கு சிறப்பு சேர்க்கின்றன. தோட்டத்தைப் பரமாரிக்கும் மகனுக்கும் மருமகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  33. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    படங்கள் எல்லாம் என் காமிராவில் எடுத்தது, மகன் காமிராவில் அழகாய் உங்களை போல் ரசனையுடன் எடுத்து இருக்கிறான். அதையும் ஒருமுறை பகிர வேண்டும்.
    உங்கள் பாராட்டுகளை மகன், மகள் இருவருக்கும் சொல்லிவிட்டேன்.
    உங்கள் வருகைக்கும், அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. மலர்த் தோட்டம் மிக மிக அழகு... இதை விட சந்தோசம் எதுவும் இருக்க முடியாது... தங்களின் மகனுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  35. வாங்க தனபாலன், வாழ்க வாளமுடன். உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அழகான அருமையான தோட்டம். இதில் போய் இருந்தால் நேரம் போவதே தெரியாதே. அதுவும் ஊஞ்சல் வேறு... குட்டி சுவர்க்கம்தான்!!

    பதிலளிநீக்கு
  37. வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
    குட்டி சுவர்க்கம் தான் நீங்கள் சொல்வது போல். அத்துடன் பேரனும் வாழ்வை மகிழ்ச்சி ஆக்குகிறான்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. படங்களே கவிதையாக/வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. வாங்க விமலன், வாழ்க வளமுடன்.படங்களை கவிதையாக ரசித்த உங்களுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. ''..அதில் இரண்டு
    பூச்செடிகளை வைத்தால் அதில் நாம் வாங்கி வந்தபின் இரண்டு இலை
    துளிர் வந்தாலே அதைப்பார்க்கும்போது மகிழ்ச்சி ஏற்படும். மொட்டு விட்டு
    விட்டால் அதைவிட மகிழ்ச்சி. மலர்ந்து விட்டால் அளவில்லா மகிழ்ச்சி...''
    இதை இலங்கையில் அனுபவித்துள்ளேன். இங்கு 2வது மாடி தொட்டியில் தான் அனைத்தும்.
    அருமையான விவரிப்பு ரசித்து மகிழ்ந்தேன் .தங்கள் மகிழ்வு தொடரவும், பேரன் , பிள்ளைகள் மகிழ்வு தொடரவும் இறையருள் நிறையட்டும்.
    அன்புடன் வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  41. வாங்க வேதா.இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
    இலங்கை வனப்பு மிகுந்த ஊர் அல்லவா! எங்குப் பார்த்தாலும் பசுமை.
    நான் போய் இருந்த போது ரசித்தேன்.
    பேரன், பிள்ளைகளுக்கு அளித்த வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் மிகவும் நன்றி.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  42. Such a lovely write up beautiful pics.Sorry for typing in English though,I feel odd :)Happy that I discovered a well written and informative blog

    பதிலளிநீக்கு
  43. வாங்க ஹரிணி, வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. அழகிய இந்த வண்ண மலர்கள் போல் உங்கள் எண்ணமெல்லாம்
    மலர்ந்திருக்க வாழ்த்துக்கள் தோழி !!

    பதிலளிநீக்கு
  45. வாங்க அம்பாள் அடியாள், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் வ்ருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  46. பூவனம் என்று ஸ்ரீராம் சொன்னதும் என் நினைவு வந்ததற்கு நன்றி, கோமதிம்மா.

    அற்புதமான மலர்த்தோட்டம். மாலையில் உட்கார்ந்தால் மனத்திற்கு இசைவாகவும் இனிமையாகவும் இருக்கும். உங்களின் சில விளக்கக் குறிப்புகள் பொருத்தமாக இருந்தன.

    இந்த சிங்காரத் தோட்டம் எந்த நாட்டில் இருக்கிறது?..மன்னிக்கவும். குளிருக்கு கணப்பு, பனிப்பொழிவு வரை என்றெல்லாம் குறிப்பிட்டிருப்ப தால் அந்த நாட்டைப் பற்றிக் கேட்டேன். வாழை, செம்பருத்திச் செடி போன்றவைகள் கூட வளப்பமாக வளர்ந்திருக்கின்றனவே?. ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
  47. பூக்களா ?
    புன்னகைக்கும் தேவதைகளா?
    இலைகளா?
    இன்னிசை பாட வந்த இராக்குயிலா?

    அழகென உரைப்பதா ?
    அன்னை அகிலாண்டேஸ்வரியின்
    அருள் என்பதா ?

    என்ன சொல்லி இப்பதிவை வர்ணிப்பேன் ?
    என்று வந்து இக்காட்சிதனைக் கண்முன் காண்பேன் ?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  48. வாங்க ஜீவி, சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பூவனத்தை மறக்க முடியுமா?
    நீங்கள் சொல்வது போல் மந்துக்கு இசைவாய், இனிமையாக இருக்கும். தோட்டத்தில் உட்கார்ந்தால் நேரம் போவதே தெரியாது. வண்டுகளும், வண்ணத்துப் பூச்சிகளும் மனதுக்கு மகிழ்வு அளிக்கும். என் மகன் வீட்டில் உள்ளது சிங்கார தோட்டம் தோட்டநகரம் என்று அழைக்கப்படும் நியூஜெர்சி மகன் இருக்கும் ஊர். .நான் இங்கு மகன் வீட்டுக்கு வந்து ஒரு மாதம் ஆகிறது.போன பதிவில் இந்த ஊர் நூலகத்தைப் பற்றி போட்டு இருந்தனே சார்.
    உங்கள்வரவுக்கும், உற்சாகம் ஊட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி. சார்.

    பதிலளிநீக்கு
  49. வாங்க சூரி சார், வாழ்க வளமுடன்.
    கவிதையே பாடி விட்டீர்களே!
    நீங்கள் நியூஜெர்சியில் தானே மகள் வீட்டில் இருந்தீர்கள். அங்கு ஒவ்வொரு வீட்டிலும் இப்படி அழகான தோட்டம் அமைத்து இருந்தார்களே நீங்கள் பார்த்து இருப்பீர்களே!
    வையம் நீடுக! மாமழை மன்னுக சேக்கிழார் மங்கள வாழ்த்து பாடியது போல் மங்களமாய் அகிலாண்டேஸ்வரி வாழ்த்து அருளை தந்து விட்டீர்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  50. மனத்துக்கு இதம் தரும் சூழலும் கண்ணுக்கு இதம் தரும் படங்களும் வெகு பிரமாதம். தோட்டத்தைப் பராமரிப்பென்பது மிகவும் சிரத்தையெடுத்து செய்யவேண்டிய வேலை. அர்ப்பணிப்புடன் செய்யவேண்டியது. இவ்வளவு நேர்த்தியான தோட்டத்தைப் பராமரிக்கும் தங்கள் மகன்,மருமகளுக்கு இனிய வாழ்த்துக்கள். பூக்களின் வாசம் மனதுக்கு மிக நெருக்கமாய் வீசுகிறது. பகிர்வுக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க கீத மஞ்சரி, வாழ்க வளமுடன்.
    தோட்டம் நமக்கு மனம், கண், எல்லாவற்றுக்கும் இதம் , இனிமை தருவது உண்மைதான்.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    உங்கள் அழகான பின்னூட்டம் மலரின் மணம் போல் உள்ளது நன்றி.

    பதிலளிநீக்கு
  52. மலர் கண்காட்சி
    மனம் கொள்ளைகொண்டது ..!

    பதிலளிநீக்கு
  53. வாங்க இராஜராஜேஸ்வரி,வாழ்க வளமுடன்.
    மலர் கண்காட்சி மனம் கவந்ததா? மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  54. தோட்டம் பற்றி நீங்க எழுத எழுத அதை சுவாரஸ்யமா படிச்சுக்கிட்டே வந்தேன்பா... மகனும் மருமகளும் சேர்ந்து வண்ணத்தரை ஆக்கினதும், ஊஞ்சலும், பட்டாம்பூச்சிகளும், தேனீக்களும் பூக்களும் என்னை சத்தியமா உங்க லோகத்துக்கே கூட்டிண்டு வந்த மாதிரி இருந்தது... நீங்க சொல்ல சொல்ல நானும் பக்கத்தில் இருந்து நீங்க சொன்னது எல்லாமே ரசனையா பார்ப்பது போல இருந்தது... ஆனா சட்டுனு பக்கத்து வீட்டுக்காரர்கள் தோட்டத்தை அழித்துவிடவே எனக்கும் கஷ்டமா போச்சு போங்கப்பா.... படங்கள் எல்லாம் செம்ம அழகுப்பா... கண்ல ஒத்திக்கணும் போல இருக்கு..

    நம்ம கையால ரெண்டு தொட்டி வெச்சு ஒரு குட்டி செடி வெச்சு அது துளிர் விட்டு அது மொட்டு விட்டு மலராகி அந்த மலரை ஸ்வாமிக்கு வைக்கும்போது ஏற்படும் சுகமே சுகம்..

    எங்க பாட்டிக்கிட்ட தான் வளர்ந்தேன். சென்னைல சிட்டில அவ்ளோ பெரிய தோட்டம் எங்க வீட்டில் இருப்பது போல் காண்பது அரிது எங்கும்... பவளமல்லி மலர்கள் எடுத்து கோர்த்து பெருமாளுக்கு சார்த்தி “ மனசுக்குள்ள ஆண்டாள் மாதிரி நினைச்சுப்பேன் வேற “ :) இன்னமும் அப்டியே தான் நினைப்பு...

    தோட்டத்தில் மலரும் அத்தனை பூக்களும் உங்க கேமராவில் தப்பலை சாமி... அத்தனை அழகு...

    கொஞ்ச நேரம் உங்களுடன் தோட்டத்தில் உலாவிக்கொண்டு இருந்தது போல ஒரு உணர்வு இந்த பதிவு படித்ததுமே..

    நிறைவான அன்பு நன்றிகள்பா...

    பதிலளிநீக்கு
  55. //ஊரிலிருந்து வந்த நாட்களாக பார்த்து ரசித்த அந்தக்காட்சி இரண்டு நாட்களுக்கு முன் கலைக்கப்பட்டது. பக்கத்து வீட்டுக்குப் புதிதாக வந்து இருப்பவர்கள் தோட்டத்தை முற்றிலும் அழித்து விட்டார்கள். //

    எப்படித் தான் மனசு வந்ததோ, தெரியலை!:( அழகான தோட்டம் கண்ணுக்கு விருந்து. ஆனால் படங்கள் நிறைய இருப்பதாலோ என்னமோ சரியாய்த் திறக்கலை. எனக்கு மட்டும் தான்னு நினைக்கிறேன். :)))

    பதிலளிநீக்கு
  56. வாங்க மஞ்சு, வாழ்கவளமுடன்.
    இப்போது எல்லாம் ஒரு பெரிய வீடு இருந்த இடத்தை இடித்து நிறைய அடுக்கு மாடி குடி இருப்புக்கள் கட்டி விடுகிறார்கள். நகரில் தோட்டம் வீடு என்று இருப்பது அரிது தான்.
    எல்லாம் காகித பூக்கள் தான் வீட்டை அலங்கரிக்கிறது.

    நீங்கள் சொல்வது போல் என் மாமியார் வீட்டில் பவளமல்லி இருக்கிறது, அதை எடுத்து கோர்த்து இறைவனுக்கு சாற்றும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், அருகில் இருக்கும் கோவிலுக்கு அந்த அந்த கிழமை சிறப்புக்கு ஏற்ற கடவுளுக்கு அத்தை பவளமல்லியை கோர்த்து எடுத்து செல்வார்கள். வீட்டில் இருக்கும் பெரிய குத்துவிளக்கிறகு மாலை கோர்த்து சாற்றுவார்கள் பார்கவே அவ்வளவு அழகாய் இருக்கும்.

    //மனசுக்குள்ள ஆண்டாள் மாதிரி நினைச்சுப்பேன் வேற “ :) இன்னமும் அப்டியே தான் நினைப்பு...//

    ஆண்டாள் எல்லோர் மனதையும் ஆண்டாள் என்பார்கள் அந்த நினைப்பு தான் எல்லோரிடமும் அன்பாய் இருக்கச் சொல்கிறது. எப்போதும் ஆண்டாளாக இருங்கள்.
    உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு மிகவும் மகிழ்ச்சி.
    நன்றி மஞ்சு.

    பதிலளிநீக்கு
  57. வாங்க கீதா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் எப்படித்தான் மனது வந்தது என்று தெரியவில்லை தோட்டத்தை அழிக்க!
    //படங்கள் நிறைய இருப்பதாலோ என்னமோ சரியாய்த் திறக்கலை. எனக்கு மட்டும் தான்னு நினைக்கிறேன். :)))//

    படங்களை மற்றவர்கள் எல்லாம் பார்த்தாக பின்னூட்டம் அளித்து இருக்கிறார்கள். உங்களுக்கு மட்டும் தான் எனத் தெரிகிறது.

    நெட் இணைப்பின் வேகம் அதிகமாய் இருக்கும் போது பாருங்கள் நன்கு திறக்கும்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா.

    பதிலளிநீக்கு