செவ்வாய், 20 மார்ச், 2012

உலகச் சிட்டுக்குருவிகள் தினம்











இன்று உலகச் சிட்டுக்குருவிகள் தினம்.

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி எங்கே போனாய் ? நீ வாழ உனக்கு கூடு கட்ட வசதியாக வீடு இல்லை. உன் பசியாற தன் குடும்பத்திற்கு சமைக்க வைத்து இருந்த அரிசி இறைத்து நீ உண்பதை கண்டு களிக்க முண்டாசு கவிஞ்ன் இல்லை. பரசுராமர் தன் தந்தையின் கட்டளைக்கு அடி பணிந்து தன் அன்னையை கொன்றதால் நீ திருவனந்தபுரத்தில் அடைக்கலக்குருவி என்று அழைக்கப்படும் நீ இல்லை என்று என் தாத்தா சொல்வார்கள். உனக்கு ஏன் அடைக்கலக் குருவி என்று பெயர் வந்த்தது என்றால் நீ அடைக்கலமாய் மனிதர் வாழும் வீடுகளில் கூடு கட்டி வசிப்பதால் அந்த பெயர் உனக்கு. ஊர்க்குருவி என்ற பெயரும் உண்டு உனக்கு.

மூடர்களிடம், முட்டாள்களிடம் மல்லுக்கட்டக் கூடாது என்று உன் கதையை சிறுவர்களுக்குப்

பாடாமாக்கினார்கள். அந்தக் கதை உனக்குத் தெரியுமே, இருந்தாலும் கேள்! ஒருநாள் சோவென்று பெருமழை பெய்தது. காற்று சுழற்றி அடித்தது. அப்போது நீகூடு கட்டி வாழும் மரத்தின் அடியில் ஒரு குரங்கு வந்து மழைக்கு ஒதுங்கியது. அப்போது நீ சும்மா இருக்காமல் அந்த குரங்கைப் பார்த்து உனக்கு வசிக்க வீடு இல்லையா நீ வீடு கட்டிக் கொள்ளலாமே எங்களை போல், என்று கேட்டாய் உடனே கோபப்பட்ட குரங்கார், ஊசிமூஞ்சி மூடா! எனக்கு கூடு கட்டத் தெரியாது ஆனால் கூட்டைப் பிய்த்து எறியத் தெரியும் என்று உன் கூட்டை பிய்த்து எறிந்து விட்டது.

பாங்க் விளம்பரத்தில் குருவியைப்போல் சேமிங்க என்று சொல்வார்கள். சிட்டுப் போல் சுறு சுறுப்பாய் இருக்கா பெண் என்று சுறு சுறுப்பான பெண்ணைப் பார்த்துச் சொல்வார்கள்.
சின்ன அழகான பெண்ணைப்பார்த்து சின்னச் சிறிய சிட்டாட்டம் இருக்கா பெண் என்று வர்ணிப்பார்கள்.

எங்கள் வீட்டு அலமாரியில் உள்ள கண்ணாடியில் உன் முகத்தைப்பார்த்து, அது வேறு குருவி என்று நினைத்துக் கொத்தி கொத்திப் பார்ப்பாய். என் அம்மா உன் அலகு வலிக்குமே என்று நீ அடுத்தமுறை வருவதற்குள் அலமாரி கண்ணாடிக்குத் திரைச்சீலை தைத்து மாட்டி விட்டார்கள்.

தூத்துக்குடியில் நாங்கள் இருந்த போது முன் அறையில் மாட்டி இருக்கும் படத்துக்குப் பின் வந்து வைக்கோலால் கூடு கட்டினாய். மின் விசிறி ஓடும் போது குறுக்கே குறுக்கே போகிறது, மின் விசிறியில் அடிபட்டு செத்து விடும் என்று என் அப்பா கவலைப்பட்டு நீ வரும் போது மின் விசிறியை அணைப்பார்கள்.

நான் இருக்கும் ஊரில் இப்போது தவிட்டுக் குருவி என்று சொல்லும் குருவிகள் தான் இருக்கிறது. உன் இனம் இல்லை.

என் மகள் ஊரிலில்(டெல்லி) உன்னைப்பார்த்ததும் எனக்கு எவ்வளவு ஆனந்தம்! போன முறை போனபோது நிறைய இருந்தார்கள் உன் சுற்றத்தார். இப்போது குறைந்து விட்டது உன் இனம்.

அங்கு மகளின் வீட்டுக்கு பின்புறம் நீங்கள் ஆனந்தமாய் மண் குளியல் செய்த போது எடுத்த படங்கள் எங்களுக்கு ஆனந்தத்தை இப்போதும் தருகிறது.





உணவு வைக்கும் மண் தொட்டியில் வந்து அமர்வாய். உன்னை போட்டோ எடுப்பதற்குள் சிட்டாய் பறந்து விடுவாய்.


என் மகன் வாழும் ஊரில்(நியூஜெர்சியில்) உனக்குக் கூடு கட்ட அழகாய் வீடு இருக்கு, புதர் போன்ற மரம் இருக்கு, நீ ஆனந்தமாய் சுதந்திரமாய் கீச் கீச் என்று ஒலி எழுப்பி பறந்தாய். நாங்கள் போன இடம் எல்லாம் உன்னைப் பார்த்தோம் அங்கு உள்ள சரவணபவன் ஒட்டலில் கூடு கட்ட முயன்று கொண்டு இருந்தாய்.

எங்கள் மயிலாடுதுறையில் முன்பு ரயில்வே சரக்கு ஏற்றும் இடங்களில் நெல்மணியை கொத்தவருவாய். இப்போது உனனை பார்க்க முடியவில்லை.
மிகவும் வருத்தமாய் இருக்கிறது.

உன்னை மீண்டும் கண்டால் குழந்தையை போல குதூகலிப்பேன். அந்த நாள் மீண்டும் வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அருங்காட்சியகத்தில் மட்டுமே காணப்படும் அடைக்கலப் பொருளாய் ஆகிவிடாதே!


NationalMuseum of Natural Science,Washington.



சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு என்று பாடிய கவிஞன் இன்று சிட்டுக்குருவிக்கு என்ன தட்டுப்பாடு என்றுதான் பாட வேண்டும் .

பூலோகம் எங்கும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடும் நாளை எதிர்பார்க்கும் மனது இறைவனிடம் மன்றாடிக் கேட்கிறது, ஊர்க் குருவியைக் காப்பாற்று என்று.

29 கருத்துகள்:

  1. சிட்டுக்குருவிகளை பல நாட்களுக்குப்பின் இந்தத் தங்கள் பதிவினில் கண்டதும், நேரிலேயே பார்த்தது போல என் மனம் மகிழ்ச்சி கொண்டது. குழந்தைப்பருவம் போல சந்தோஷமாக உணரவும் முடிந்தது.

    நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நம் நினைவலைகளில் மூழ்கிதான் குருவிகளைக் காண வேண்டியுள்ளது:(!

    நல்ல பதிவு கோமதிம்மா! உங்கள் பகிர்வையும் என் பதிவில் இணைத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. இன்று சிட்டுக் குருவிகள் தினம் என்று நீங்கள் சொல்லித் தான் தெரியும். ஒரு குழந்தைக்குச் சொல்வது போன்று சிட்டுக்குருவிக்கு கதை சொன்ன பாங்கும் அழகு.

    //என் அம்மா உன் அலகு வலிக்குமே என்று நீ அடுத்தமுறை வருவதற்குள் அலமாரி கண்ணாடிக்குத் திரைச்சீலை தைத்து மாட்டி விட்டார்கள்.//

    ஆகா, அம்மாவின் கரிசனம் தான் என்னே!

    எனக்கு அடுத்த முறை உங்கள் சிட்டுக்குருவி வந்து பார்த்த பொழுது எங்கே, என்னைப் போன்ற அந்த இன்னொன்று என்று தேடிச் சோர்ந்திருக்குமோ என்று கவலை வந்து விட்டது!


    //சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு என்று பாடிய கவிஞன் இன்று சிட்டுக்குருவிக்கு என்ன தட்டுப்பாடு என்றுதான் பாட வேண்டும்.. //

    சிட்டுக்குருவி! சேதி தெரியுமா? வா..வா.. பறந்து வா! வந்து,
    'பாட்டுப் பாடவா, பறந்து செல்லவா' என்று பாடு! உன் பாட்டைக் கேட்டால் எங்கள் மனசே கூத்தாடும்! தெரியுமா?..

    பதிலளிநீக்கு
  5. வளர்ந்துவிட்ட குழந்தைக்கு சின்னப்பிள்ளைக்குறும்புகளைச் சொல்வது மாதிரி ..இருக்கு..

    சிட்டுக்குருவி கதைகேக்க வா..எங்கே போய்ட்டே ம்...

    பதிலளிநீக்கு
  6. இந்த கதை சொல்லும் தொணி நல்லாருக்கே! சிட்டுக்குருவி வகை இனமே அரிதாகிக் கொண்டுதான் வருகிறது. சில பல காரணங்களில் முக்கியம் விவசாயம் குறைந்து வருவதும் ஒரு காரணமாக இருக்கலாமோ!!

    பதிலளிநீக்கு
  7. நம் நினைவலைகளில் மூழ்கிதான் குருவிகளைக் காண வேண்டியுள்ளது:(!

    நல்ல பதிவு கோமதிம்மா! உங்கள் பகிர்வையும் என் பதிவில் இணைத்து விட்டேன்.//

    வாங்க ராமலக்ஷ்மி, நீங்கள் சொல்வது போல் நினைவலைகளில் நீங்க இடம் பெற்று விட்டது ஊர்க்குருவி.

    உங்கள் பதிவில் என் பதிவை இணைத்து விட்டதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. எனக்கு அடுத்த முறை உங்கள் சிட்டுக்குருவி வந்து பார்த்த பொழுது எங்கே, என்னைப் போன்ற அந்த இன்னொன்று என்று தேடிச் சோர்ந்திருக்குமோ என்று கவலை வந்து விட்டது!


    //சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு என்று பாடிய கவிஞன் இன்று சிட்டுக்குருவிக்கு என்ன தட்டுப்பாடு என்றுதான் பாட வேண்டும்.. //

    சிட்டுக்குருவி! சேதி தெரியுமாவா..வா.. பறந்து வா! வந்து,
    'பாட்டுப் பாடவா, பறந்து செல்லவா' என்று பாடு! உன் பாட்டைக் கேட்டால் எங்கள் மனசே கூத்தாடும்! தெரியுமா?..

    வாங்க ஜீவி சார்,
    இன்னொன்று எங்கே என்று தேடி சோர்ந்து இருக்குமோ என்ற எண்ணம் உங்களைப் போன்ற கதைஆசிரியருக்கு தான் வரும். நல்ல கற்பனை.

    குருவியார் வந்து பாட்டுக்கள் பாடி நம்மை மகிழ்விக்கட்டும் .

    நீங்கள் சொல்வது போல் நம் மனம் குருவியார் பறந்து வந்து பாடினால் மனது கூத்தாடும் தான்.
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  9. வளர்ந்துவிட்ட குழந்தைக்கு சின்னப்பிள்ளைக்குறும்புகளைச் சொல்வது மாதிரி ..இருக்கு..

    சிட்டுக்குருவி கதைகேக்க வா..எங்கே போய்ட்டே ம்...//

    முத்துலெட்சுமி, சிட்டுகுருவி கதை கேட்க வந்தால் மனதுக்கு மகிழ்ச்சிதான்.

    பதிலளிநீக்கு
  10. இந்த கதை சொல்லும் தொணி நல்லாருக்கே! சிட்டுக்குருவி வகை இனமே அரிதாகிக் கொண்டுதான் வருகிறது. சில பல காரணங்களில் முக்கியம் விவசாயம் குறைந்து வருவதும் ஒரு காரணமாக இருக்கலாமோ!!


    வாங்க தெகா,ஊர்குருவிகள் குறைந்து வருவதற்கு விவசாயம் குறைந்து வருவதும் ஒரு காரணமாய் இருக்கும் என்பது உண்மைதான்.

    எங்கும் ஒலி அலைகள்,பேரிரைச்சல்
    அமைதியான சூழல் இல்லை, எங்கு பார்த்தாலும் நான்கு வழி சாலை ஆகி மரங்கள் எல்லாம் இல்லை, வீடுகள் குருவிகள் வசிக்க வசதி இல்லை அவையும் ஒரு காரணம் குருவி இல்லாததற்கு .நீங்கள் போனவருடம் குருவிகள் பற்றி அருமையாக போட்டு இருந்தீர்கள்.

    உங்கள் வருகைக்கு நன்றி தெகா.

    பதிலளிநீக்கு
  11. இனிய நினைவுகள் மறக்கமுடியாதது..

    இவ்விடுகைக்கு என் வலையில் இணைப்பளித்துள்ளேன்.

    நன்றி.

    http://gunathamizh.blogspot.in/2012/03/blog-post_20.html

    பதிலளிநீக்கு
  12. இனிய நினைவுகள் மறக்கமுடியாதது..

    இவ்விடுகைக்கு என் வலையில் இணைப்பளித்துள்ளேன்.//


    வாங்க gunathamizh, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    என் பதிவை உங்கள் பதிவில் இணைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. தில்லியில் கூட இப்போது குருவிகள் அவ்வளவாக இல்லை....

    பொதுவாகவே இங்கு புறாக்கள் தான் அதிகம்.....

    வரும் சந்ததியினர் பார்க்க முடியுமா என்றுதான் தோன்றுகிறது....

    நல்ல பகிர்வுக்குப் பாராட்டுகள் அம்மா..

    பதிலளிநீக்கு
  14. இங்கே சவூதியில் குட்டிக் குருவிகள் முன்பு பார்க்க முடிந்தது...இப்போது இங்கேயும் கூட இல்லை...

    சிட்டுக்குருவியின் அழகே அழகு..அதிகாலையில் அச்சத்தத்துடன் கண்விழித்த காலங்கள் இனி வாராதோ..

    பதிலளிநீக்கு
  15. பாங்க் விளம்பரத்தில் குருவியைப்போல் சேமிங்க என்று சொல்வார்கள். சிட்டுப் போல் சுறு சுறுப்பாய் இருக்கா பெண் என்று சுறு சுறுப்பான பெண்ணைப் பார்த்துச் சொல்வார்கள்.''

    குருவி மாதிரி சிறுகச்சிறுகச் சேமித்துக் கட்டின அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  16. http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_4505.html

    சிங்காரச் சிட்டுக்குருவி

    பதிலளிநீக்கு
  17. இப்போதுதான் பார்த்தேன் நல்லதொரு பதிவு சிட்டுக்குருவு தினத்துக்கு.

    பதிலளிநீக்கு
  18. இப்பொழுதுதான் கணகளில் பட்டது இவ்விடுகை.சிட்டுக்குருவியைப்பற்ரி எழுதும்பொழுது குழந்தையாய் மாறிப்போனீர்கள்.அருமையான பகிர்தல்.அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  19. அருமையான பகிர்வும்மா. சிட்டுக்குருவிகள் பற்றிய நினைவுகள் அழகாக இருக்கும்மா.

    இந்த இனம் அழிந்து வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.

    பதிலளிநீக்கு
  20. சிட்டுக்குருவிபோல எல்லோர்மனமும் சிட்டாகப் பறக்கின்றதே.

    முன்பெல்லாம் ஊரில் பலதடவை லைட்சேட்டுக்குள் கூடுகட்டி இருக்கும் அந்தலைட்டை பாவிக்காமலே இருந்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  21. சூப்பர் பகிர்வு அக்கா.இப்பொழுது தான் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க ஆசியா, பழைய பதிவையும் படித்து கருத்திட்டமைக்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க வெங்கட், பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. சிட்டுக்குருவியின் அழகே அழகு..அதிகாலையில் அச்சத்தத்துடன் கண்விழித்த காலங்கள் இனி வாராதோ..//

    வாங்க பாசமலர், சிட்டுக்குருவிக்கு வாழ இடம் கொடுத்தால் அமைதியான சூழ்நிலையை கொடுத்தால் பழைய காலங்கள் திரும்பி வரும்.

    பதிலளிநீக்கு
  25. குருவி மாதிரி சிறுகச்சிறுகச் சேமித்துக் கட்டின அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//


    பாராட்டுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  26. சிட்டுக்குருவியைப்பற்ரி எழுதும்பொழுது குழந்தையாய் மாறிப்போனீர்கள்.அருமையான பகிர்தல்.அருமையான படங்கள்.//

    வாங்க ஸாதிகா, பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வாங்க ஷைலஜா, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க ஆதி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. சிட்டுக்குருவிபோல எல்லோர்மனமும் சிட்டாகப் பறக்கின்றதே.

    முன்பெல்லாம் ஊரில் பலதடவை லைட்சேட்டுக்குள் கூடுகட்டி இருக்கும் அந்தலைட்டை பாவிக்காமலே இருந்திருக்கின்றோம்.//

    மலரும் நினைவுகள் அருமை மாதேவி.
    வருகைக்கு நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு