Monday, November 1, 2010

மோதிரம் வாங்குங்கள்! மோதிரம்!

என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர்
“வைகுந்த அம்மானை” 1904லில் வெளி வந்த புத்தகம். அதை தொட்டாலே உடைந்து விடும் போல் இருந்தது. அதில் வந்த விளம்பரம் என்னை கவர்ந்தது.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இந்தக் காலத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் அன்றும் உள்ளது, ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று.

இதோ அந்த விளம்பரத்தைப் பாருங்களேன்:

// விளம்பரம்

சீர்மையிலிருந்து வரவழைக்கப்பட்ட

எங்களுடைய

ரோஜாப்பு மொட்டை

பரிட்சித்துப் பாருங்கள்

ரோஜாப்பு மொட்டு என்பது

ஒரு ஷோக் மோதிரம்

இந்த மோதிரமானது அன்று அரும்பி இதழ்மலர்ந்த மொட்டை நடுவில் உடையதுபோல
பிரகாசிக்கும். பார்வைக்கு மிக்கபகட்டாயும் சோபிதமாயுமிருக்கப்பட்ட 9-போலி ரவைகள் வைத்து இழைத்தது .இது இங்கலாண்டு கெமிகல்கோள்டு யென்னும் ஒருவித லோகத்தாற் செய்து விராகனிடை 8 ரூபா விலையுடைய சுயத்தங்கத்தினால் மேற் பூசலும் பூசப்பட்டது.
இந்த மோதிரத்தில் எண்ணைபட்டாலும் ஜலம்பட்டாலும் பளபளப்பு மங்குகிறதில்லை. கொஞ்சம் காந்தி குறைந்த போதிலும் சீமைசுண்ணாம்பு பூசிவைத்து புருஷினால் துடைத்து விட்டால் மறுபடியும் பிரகாசிக்கும் இந்த மோதிரத்திற்கும் ஜெனங்கள் 2,000 ரூபாய் விலையிருக்குமேயென்று மதிப்பிடுவதற்கு அஞ்சமாட்டார்கள்.--இதன் விலை 2-ரூபாய்தான் வி.பி. தபாற்கூலி பிரத்தியேகம்.

8-மோதிரத்திற்கு மல்பீஸ் இனாம்
8--எட்டு மோதிரங்கள் ஒரேதடவையில் வாங்குவோருக்கு நாணயமானதாய்
(ஒரு பீஸ் சலவைமல்) அதாவது 20-கெஜமுடைய தான் இனாமாய் அனுப்படும்.

4.மோதிரத்திற்கு இனாம்

4--நாலு மோதிரம் ஒரேதடவையில் வாங்குவோருக்கு சரட்பட்டன் ஒரு செட்டு இனாமாய் அனுப்பபடும்.

என்னுடைய முழுகேட்லாக் வேண்டுமானால் அரையணா ஸ்டாம்பு அனுப்பினால் அனுப்பப்படும்.

வித்தியாரத்திநாகர அச்சுக்கூடத்தலைவர்

பி.நா.சிதம்பரமுதலியார்
பெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //வாங்குங்கள் ஷோக்மோதிரம் விரைந்து.

பின் குறிப்பு:
அதில் உள்ளதை அப்படியே போட்டு இருக்கிறேன்.ஸ்கேனர் என்னிடம் இல்லை.இருந்தால் ஸ்கேன் செய்து போட்டு இருப்பேன்.

வைகுந்த அம்மானை என்ற இந்த புத்தகமும் நன்றாக இருக்கிறது.மகாபாரதக் கதையைப் பாடுகிறது.விநாயகர் துதி,சுப்பிரமணியர் துதி,சரஸ்வதி துதி,ஈஸ்வரர் துதி,மகாவிஷ்ணு துதி, எல்லாத் துதியும் முடித்து பின் கதைக்குப் போகிறது.

28 comments:

Chitra said...

பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

எனக்கு முப்பது மோதிரம் வேணுமே தங்கச்சி.:)
இன்னும் இதுபோல நிறைய புத்தகங்கள் உங்களுக்குக் கிடைக்கவும், அவைகளை எங்களுக்குப் பகிர்ந்தளிக்கவும் வேண்டுகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

இவ்வளவு பழைய புத்தகத்திலும் விளம்பரமா? அக்கால தமிழ் படித்ததில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி அம்மா.

ராமலக்ஷ்மி said...

மக்களைக் கவர்ந்திழுக்கும் இனாம் அறிவிப்பு விளம்பரங்கள் எத்தனை ஆண்டுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டுள்ளன:)? வியப்பும் சுவாரஸ்யமும் ஏற்படுத்தும் பகிர்வு. மிக்க நன்றி கோமதிம்மா.

சென்ஷி said...

அட! :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பயங்கரமான பூ சுத்தலா இருக்கும் போலயே.. 8 ரூபா தங்கத்தால் பூசி மெழுகி .. 2000 ரூபாய்ன்னு ஜெனங்க நினைக்கும் அளவுக்கு இருக்கும் ஆனா 2 ரூபாவா.. எப்படி கட்டுப்படியாகும்?
:))

Thanglish Payan said...

Really superb info of last century..

கோமதி அரசு said...

நன்றி சித்ரா.

கோமதி அரசு said...

வல்லி அக்கா, 30 மோதிரத்திற்கு ஆர்டர் செய்து விட்டேன்.

இன்னும் நிறைய புத்தகங்கள் ஊரில் இருக்கும். தீபாவளிக்கு ஊருக்கு போகிறேன், கொண்டு வந்து விடுகிறேன்.

நன்றி அக்கா.

கோமதி அரசு said...

வெங்கட் நாகராஜ்,அக்கால தமிழை ரசித்தமைக்கு நன்றி.

கோமதி அரசு said...

ராமலக்ஷ்மி,எனக்கும் அதைப் படித்தவுடன் ஏற்பட்ட வியப்பைத்தான் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

நன்றி ராமலக்ஷ்மி.

கோமதி அரசு said...

சென்ஷி,அட!


உங்களை என் பதிவில் பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது?

நலமா?

நன்றி சென்ஷி.

கோமதி அரசு said...

நன்றி Thanglish Payan

கோமதி அரசு said...

பூ சுத்தல் தான் முத்துலெட்சுமி.

நிறைய வாங்கினால் லாபம் போலும்.

நன்றி முத்துலெட்சுமி.

நானானி said...

ஆஹா...! அக்காலத்தமிழ்...கொஞ்சி, கெஞ்சி, கொஞ்சம் மிஞ்சி விளையாடுகிறது.

நானானி said...

//எனக்கு முப்பது மோதிரம் வேணுமே தங்கச்சி.:)//

அதானே பாத்தேன்.

கோமதி அரசு said...

நன்றி நானானி.

அககாலத் தமிழை எல்லோரும் ரசிக்கத் தான் பகிர்ந்து கொண்டேன்.

கோமதி அரசு said...

அக்காவுக்கு ஆர்டர் செய்து விட்டேன் நானானி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அந்த எழுத்துக்கள் அந்த காலத்துக்கே ஒரு நொடி கொண்டு போய் விட்டது!

கோமதி அரசு said...

நன்றி ஆர். ராமமூர்த்தி.

அதனால் தான் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

Anonymous said...

வணக்கம்
அம்மா.

சிறப்பான விளம்பரம் உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளீர்கள் பதிவு அருமை வாழத்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ezhil said...

நாமெல்லாம் அந்தக் காலத்திலேயே அப்படித்தான் இருந்திருக்கிறோம் அப்படித்தானே அம்மா....

இராஜராஜேஸ்வரி said...

“வைகுந்த அம்மானை”-அரிதான புத்தகத்தில் ரசிக்கவைக்கும் விளம்பரம்.!

ADHI VENKAT said...

அக்காலத் தமிழை படித்ததில் மகிழ்ச்சி...

கோமதி அரசு said...

வாங்க இராஜ்ராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பதிவை ரசித்தமைக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.
அக்காலத்தமிழ நன்றாக இருக்கிறது இல்லையா?
நன்றி ஆதி.

கோமதி அரசு said...

வாங்க எழில், வாழ்க வளமுடன். எல்லா காலத்திலும் அப்படித்தான்.
நன்றி எழில்.

கோமதி அரசு said...

வாங்க ரூபன் , வாழ்க வளமுடன். பழைய பதிவுகளை படித்தமைக்கு நன்றி.