ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

குரு வணக்கம்.

குரு வணக்கம்
--------------
தந்தைதா யாவானும் சார்கதியிங் காவானும்
அந்தமிலா இன்பநமக் காவானும்-எந்தமுயிர்
தானாகு வானும் சரணாகு வானும் அருட்
கோனாகு வானும் குரு.

அண்ணலே,நீ அருட்குருவாக வந்து என் உள்ளமாகிய கல்லைப் பிசைந்து தெய்வக் கனியாக மாற்றி அமைக்க வல்லவன். என் உடல்,பொருள்,ஆவியெல்லாம் உனக்கே உரியனவாகும்.

எருவை, செடியானது தன் மயமாக்குவது போன்று குரு சிஷ்யனைத் தன் மயம் ஆக்குகிறார். அவர் கருணையே வடிவெடுத்தவர்.
கைம்மாறு கருதாத பேரியல்பை அவரிடம் காணலாம்.மனிதனைத் தெயவமாக மாற்றியமைப்பவரைத் தெய்வமாகக் கருதாது வேறு எங்ஙனம் கருதுவது?
-சுவாமி சித்பவானந்தர்.

ஒவ்வொருவர் வாழ்விலும் குருவினுடைய பார்வை, குருவினுடைய நினைவு குருவினுடைய சொல் ஒரு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது.
இதை தான்” குரு தானாக வருவார்” என்று அருள் தந்தை கூறுகிறார்--

//குரு என்றால் யார்? குரு என்றால் தன்னை அறிந்தவர். அவருடைய உதவி இவனுக்குக் கிடைப்பதற்கு இங்கே அவன் ஒரு நிமிடமாகிலும் சிந்தித்திருக்க வேண்டும்;தேடி இருக்க வேண்டும். நான் பிறந்து வந்துள்ளேனே,என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே,தெரிந்து கொள்ள வேண்டும், என்று இவனாக நினைத்திருந்தாலும்,சரி, அல்லது இவனுடைய பெற்றோர்கள் நினைத்து இருந்தாலும் சரி,அந்த எண்ணம் நிறைவேறாமல் தொடர்ந்து வந்து இருந்தாலும் சரி அது கட்டாயம் அதற்குரிய ஒரு குருவைத் தேடிக்கொடுத்து விடும். வெளியிலே இருந்து வந்த ஒரு உருவத்தை குரு என்று சொல்வதை விட,ஒரு மனிதனுடைய கர்மா,அவனுடைய action, அவனுடைய சிந்தனை,அவனுடைய தெளிவு,அவனுடைய அறிவு வேகம் அவனுக்கு உயர்வு நாட்டத்தை கொடுத்து விடுகிறது;அதுவே குருவையும் கொண்டு வந்து கொடுத்து விடும் காலத்தாலே. அந்த குருவினுடைய பார்வை,சொல் இவைகள் எல்லாம் சாதகனுடைய உள்ளுணர்வைத் தூண்டி விடுகிறது.//

அறிவே தான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞ்ர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வாம்.
-அருள்தந்தை.


புருவத்திடை உந்தன் பூவிரால் தொட்டு
எந்தன் உயிருணர்த்தி
புன்செயல்கள் பதிவழிந்து,பூர்வநிலை அறிவறிய
துரியம் தந்து
கருவறிந்து அகத்தவத்தால் களங்கங்கள் போகப்
பெருங்களத் தமர்த்தி
கருத்துடனே விளைவறிந்து ஐந்து புலனையாளுங்
கலை போதித்து
உருவத்தில் உயிரை,உயிர்க்குள் உள்ளமெய்ப்
பொருளை அறிவாய்க்காட்டி
ஒழுக்கத்தால் உலகினையே நட்புக் கொள்ளும்
அன்புநெறி விளங்கவைத்து
திருத்தமொடு காயகற்பம்,சீர்கர்மயோகம்,
உடற்பயிற்சி தந்து
சிந்தனையை,உடல்நலத்தைச் சீரமைத்து உய்வித்த
குருவே வாழ்க.


எவரொருவர் குருவை மதிக்கிறார்களோ அவர்கள் தரத்தில் உயர்ந்து பிறவிப் பயனை அடைவார்கள்.

22 கருத்துகள்:

  1. குருர் பிரம்மா, குருர் விஷ்ணு.. குருர் தேவோ மகேஷ்வரஹா
    ............................ தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

    பதிலளிநீக்கு
  2. வாங்க பா.ரா, உங்கள் வருகைக்கு நன்றி.
    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  3. மாதவன்,நன்றி.
    குருவின் திருவடியே சரணம்.

    பதிலளிநீக்கு
  4. குருவணக்கம்..
    தாய் தந்தையரிலிருந்து இன்று
    வரை கிடைத்திருக்கும் அத்தனை குருவுக்கும்நன்றியும் வணக்கமும்..

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியர் தினச் சிறப்புப் பதிவு மிக அருமை.

    //எவரொருவர் குருவை மதிக்கிறார்களோ அவர்கள் தரத்தில் உயர்ந்து பிறவிப் பயனை அடைவார்கள்.//

    முற்றிலும் உண்மை.

    நல்ல பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வந்த உங்கள் பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி. எனக்குக் கிடைத்த எல்லா குருவுக்கும் நன்றி! சொல்ல ஒரு வாய்ப்பு!.

    வெங்கட்.

    பதிலளிநீக்கு
  7. சரியாக சொன்னீர்கள்,முத்துலெட்சுமி.
    தாய், தந்தையிடம் ஆரம்பித்து இன்று வரை நாம் யாரிடமாவது கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.

    எல்லோருக்கும் சொல்லவெண்டும் வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  8. குமார், உங்கள் குரு வணக்கமும் படித்தேன்.

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  9. குரு மரியாதை நன்று....

    கூடப்பிறந்தவர்கள், பெற்றவர்களையே மறந்து விட்டு, இயந்திரமாக வாழ்க்கையை நடத்தும் இந்த நாளிலே, இது போன்ற வாழ்வின் வழிகாட்டியான “குரு”வை நினைவு கூர்தல் பாராட்டுக்குறியது....

    குருவே சரணம்.... குருவே சரணம்...

    நல்ல சிஷ்யனுக்கே நல்ல குரு கிடைப்பார்.... நல்ல குரு கிடைப்பதற்கு உள்மனதினூடே ஒரு தேடல் தொடங்கப்பட வேண்டும்...

    ////எவரொருவர் குருவை மதிக்கிறார்களோ அவர்கள் தரத்தில் உயர்ந்து பிறவிப் பயனை அடைவார்கள்.//

    மிக சரியாக சொன்னீர்கள் கோமதி மேடம்...

    குரு ப்ரம்மா
    குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஷ்வரஹா
    குரு சாட்சாத் பரப்ரம்மா
    தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா...

    பதிலளிநீக்கு
  10. குருவடி சரணம் திருவடி சரணம்.. கோமதி..

    பதிலளிநீக்கு
  11. தந்தைதா யாவானும் சார்கதியிங் காவானும்
    அந்தமிலா இன்பநமக் காவானும்-எந்தமுயிர்
    தானாகு வானும் சரணாகு வானும் அருட்
    கோனாகு வானும் குரு.
    i need this song audio or video.. can you plz help me

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ரோஸன் வாழ்க வளமுடன் என்னிடம் ஆடியோ, வீடியோ இரண்டும் இல்லை ராமகிருஷ்ண தினசரி தியான புத்தகத்தில் இருக்கிறது இந்த பாடல்.

    பதிலளிநீக்கு