புதன், 25 ஆகஸ்ட், 2010

தட்டிக் கொடுக்கும் தேவதை











மாதம் இருமுறை வரும் பெண்கள் பத்திரிக்கை "தேவதையில்" என் வலைபக்கம் வந்துள்ளது.அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.(ஆகஸ்ட் 16-31)

என் பதிவுகளை படித்து அதை அழகாக தொகுத்து வழங்கிய நவநீதன் அவர்களுக்கு நன்றி.

//வலைப் பதிவு எனப்படும் திறந்தவெளியில் தங்கள் எண்ணங்களை கொட்டி வைக்கும் பெண்களை தட்டிக் கொடுக்கும் பகுதி இது//

வலையில் எழுதும் என் போன்றவர்களுக்கு இது உற்சாகத்தை தரும்.மேலும் எழுத தூண்டு கோலாய் அமையும்.

ஒரு காலத்தில் குறிப்பிட்ட இரண்டு மாத ,வார இதழகள் வாங்கி படிப்போம்,அதன் பிறகு எல்லா மாத, வார இதழ்களை படிக்கும் ஆவலில் வீட்டுக்கு தினம் படித்து விட்டு திருப்பி கொடுப்பவர்களிடம் வாங்கி படித்தோம். இப்போது டீ.வி வந்த பின் பத்திரிக்கை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தாலும் புதிதாக பத்திரிக்கை வந்து கொண்டு தான் இருக்கு.அதில் ’வளம் பெற வரம் தரும் தேவதை’ என்று இந்த பத்திரிக்கை வந்துள்ளது.அதில் ’வலையோடு விளையாடு’ எனற பகுதியில் தான் நமக்காக் இரண்டு பக்கங்களை அளித்து நம்மை மகிழ்ச்சி படுத்துகிறார்கள்.

பலதரப்பட்ட விருப்புகளை கொண்டவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்கிறது தேவதை.

குழந்தைகள்,இளம் வயதினர்,நடுவயதினர்,வயதானவர்கள் என்று எல்லோர்க்கும் நிறைவு அளிக்கிறது.

தேவதைக்கு ஆண்டு ஒன்றாம். அதை வாழ்த்துவோம்,மேலும் வளர.
நான் இந்த பதிவுலத்திற்கு வந்தும் 1 ஆண்டு ஆகிறது. உங்கள் எல்லோர் ஆதரவும்
எப்போதும் வேண்டும். என்னை உற்சாகப் படுத்தி எழுத தூண்டும் வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

தேவதை இதழில் நான் வந்து இருப்பதை எனக்கு முதலில் சொன்ன வல்லி அக்காவிற்கு நன்றி.

தேவதையில் வந்த என் பக்கத்தை தெளிவாக்கி என் வலைபக்கத்தில் போடதந்த ராமலக்ஷ்மிக்கு நன்றி.

16 கருத்துகள்:

  1. மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா. பத்திரிகைகளில் நம் பெயரைப் பார்ப்பது பெரும் மகிழ்ச்சிதான் அக்கா!!

    பதிலளிநீக்கு
  2. தேவதையில் வலைப்பூ அறிமுகம்!

    வலைப்பூவின் ஒருவருட நிறைவு!

    தட்டிக் கொடுத்த தேவதைக்கும் ஒரு வருட நிறைவு!

    வரிசையாக மகிழ்ச்சியான விஷயங்கள்.

    மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் ,

    ஓராண்டு நிறைவுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தேவதை இதழில் உங்களது வலைப்பூ பற்றி வந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா!

    வெங்கட்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் கோமா அம்மா

    பதிலளிநீக்கு
  6. மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா ;))

    கலக்குறிங்க ;)

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்து சொன்ன ஆதவன்,ஹீஸைனம்மா,ராமலக்ஷ்மி,
    முத்துலெட்சுமி,வெங்கட்நாகராஜ்,
    சின்ன அம்மிணி,தமிழ்பிரியன் எல்லோருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள்மா! மேலும், மேலும் பகிர்ந்துக்கோங்க :)

    பதிலளிநீக்கு
  9. ”தேவதை”யில் வலைப்பூ அறிமுகம்..

    மனமார்ந்த வாழ்த்துக்கள் கோமதி மேடம்...

    ம்ம்ம்... நடக்கட்டும்.... வலையிலிருந்து அடுத்த கட்டமான புத்தகத்திற்கு தாவியாச்சா....

    நல்ல முன்னேற்றம் தான்... இது போல தங்களின் பல பதிவுகள் பல புத்தகங்களில் வெளிவர வாழ்த்துகிறேன்..

    வல்லி அக்கா, ராமலஷ்மி மேடம் ஆகியோருக்கும் என் வாழ்த்துகளும் நன்றியும் உரித்தாகுக...

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வாழ்த்துக்கு நன்றி கோபி.

    வல்லி அக்கா,ராமலக்ஷ்மி சார்பில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அன்புத் தங்கச்சி,கோமதி
    திரு,நவனீதன் முதலில் என்னைப் பற்றிக் கேட்டு தொலைபேசிய போது ,கொஞ்சம் மலைப்பாக இருந்தது. இத்ற்கு முன்னாலேயே துளசிகோபால்,மதுமிதா இவர்கள் எல்லோரையும் பற்றிப் பக்கங்கள் வந்ததால் நானும் சரியென்று அனுப்பி வைத்தேன். மதுரையிலிருந்து எங்க சித்தி போன் செய்தாங்க. என்ன தேவதை ஆகிட்டயா நீ? அப்படீன்னு கேட்டதும் மகா சந்தோஷம்.:) தேவதைக்கும்,உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.மா.வாழ்க வளர்க.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் அக்கா. நான் தேவைதை இந்தியாவில் போய் இருக்கும் போது படித்தது. நல்ல இதழ்.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி விஜி.

    பதிலளிநீக்கு