சிங்காரத் தோட்டத்திற்கு வந்த விருந்தினர் என்று முன்பு போட்ட பதிவில் அணில் படங்கள் பகிர்ந்து இருந்தேன்.
”அங்குள்ள அணிலுக்கு முதுகில் மூன்று கோடுகள் இல்லைதானே!” என்று கேட்டு இருந்தார் ஜீவி சார்:
//அங்கைய அணில்களுக்கு முதுகில் மூன்று கோடுகள் இல்லை, தானே? நான் பார்த்ததை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன். கீரிப்பிள்ளை மாதிரி தண்டியான அடர்த்தியான வால்.//
ஜீவி சார் கேள்விக்கு வருண் இப்படி பதில் சொல்லி இருந்தார்:
//இந்த ஊர் அணில்கள் கொஞ்சம் வேறு வகை. கோடுகள் இருக்கா என்னனு தெரியவில்லை. நம்ம ஊர் அணிலில் தெரிவதுபோல பளிச்சுனு கோடுகள் தெரியாது. கவனிச்சுப் பார்த்தால் இருந்தாலும் இருக்கும். பெரியவைகளாக நல்லா ஹெல்த்தியாகவும் இருக்கும். தக்காளிச்செடியெல்லாம் வளர்த்தால் அணிலுக்குப் போக மிச்சம் ஏதாவது இருந்தால்தான் உங்களுக்கு தக்காளிப் பழம் கிடைக்கும். :) //
இரண்டாவது பின்னூட்டத்தில் வருண் தங்கள் தோட்டத்தில் அணில் படுத்தும் பாட்டை சொல்கிறார் பாருங்கள்:
//அணில், முயல் எல்லாம் எங்க வீட்டிலும் டேராப் போடுவாங்க. எங்கெ மேலே ரொம்பப் பிரியமாவும், உரிமையுடனும் நடந்துக்குவாங்க. :)நம்ம ஊரில் பிரிய்ங்கெட்ட பொழப்புனு ஏதோ சொல்லுவாங்க இல்லை. அதெல்லாம் ஞாபகப்படுத்துவாங்க. :)
என்ன நம்ம ஏதாவது ஒரு ப்ளான் பண்ணினால், அணில்களும், முயல்களும் வேற ஒரு ப்ளான் பண்ணி நம்ம ப்ளானை ஒப்பேத்திவிடும். நம்ம வீட்டில் நம்ம குடியிருக்கிற நேரத்தைவிட அவங்கதான் அதிகம் நேரம் இருக்காங்க? என்னவோ போங்கப்பானு அணிலின் கோணத்தில் இருந்து யோசித்து நல்லாயிருனு வாழ்த்திட்டு, போயிடுவேன். :) //
என்று சொல்லி விட்டு சின்ன அணிலை பார்த்தநினைவு இல்லை
தேடிப் பிடித்து போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்:
//நான் இதுவரை அந்த வகை அணில் இங்கே பார்த்ததாக ஞாபகம் இல்லைங்க. முடிந்தால் தேடிப்பிடித்து ஒரு படம் பிடிச்சுப் போடுங்க! :)//
வருண் இப்படி சின்ன அணிலைப் பார்க்க விருப்பப்பட்டு கேட்கும்போது போடாமல் இருக்க முடியுமா ? அதனால் நேயர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. மருமகள் தேடி எடுத்து கொடுத்து உதவி செய்தாள். மருமகள் தேடி கொடுத்ததற்கு நன்றிசொல்லி உங்களுக்காக பதிவு போட்டு விட்டேன். ஜீவி சாருக்காக்வும் தான்.
கோடுகள் உள்ள சின்ன அணில்
கோடுகள் இல்லாத பெரிய அணில்
ஜீவி சார் சொல்வது போல் கீரிப்பிள்ளை மாதிரி பெரிய அணிலும் இங்கு இருக்கிறது. அது இன்னும் அகப்படவில்லை காமிராவிற்குள்.
அணில் ராமனுக்கு பாலம் கட்ட உதவியதால் ராமர் அதை கையில் அன்பாய் எடுத்து முதுகைத் தடவி விட்டதால் அந்த மூன்று கோடுகள் என்று பெரியவர்கள் ராமர் கதை சொல்லும் போது சொல்வார்கள்.
எல்லா உயிர்களையும் தன் அன்பெனும் குடைக்குள் காப்பாற்றிய
கண்ணனுக்கு இன்று பிறந்த நாள் , அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.