ஞாயிறு, 31 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 9




1978  ஆம் ஆண்டு நாங்கள்  கல்கத்தா, காசி  போன போது எடுத்த படம்.  என் கணவர், கணவரின் தம்பி, மற்றும் என்  மகளுடன்  கல்கத்தாவில் ஜைன கோவில் சென்ற போது எடுத்த படம். என் கணவரின் அண்ணா எடுத்த படம்

  என் கணவரின் அண்ணா கல்கத்தாவில் வேலைப் பார்த்தார்கள். அப்போது  10 நாட்கள் அவர்கள் வீட்டில்  தங்கி ஊரைச் சுற்றிப்பார்த்து பின்  காசி போய் வந்தோம். அங்கு பார்த்த   பார்சுவநாதர் கோவில். 

ஜைன கோவில் - படம் கூகுள் 

                                                  
புத்தகயாவில் உள்ள புத்தர் ஆலயம்

வெள்ளி, 29 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 8


யானையின் அருகில் நிற்கிறார்கள்
 காசி பிர்லா மந்திர்
                           

                                                      

காசியில்  முக்கியமான இடங்களில்  குளிக்க   மாணவர்கள் படகில் பயணம்
 
உல்லாசப்பயணம்  -7 முந்தைய பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம்
அலகாபாத் திரிவேணி சங்கமம்

நன்றி - கூகுள்





 

காசி தங்க கோபுரம், காசி விஸ்வநாதர்
நன்றி - கூகுள்





காசி விசாலாட்சியம்மன் கோவில்




  நாங்கள் எடுத்த படங்கள் ஆல்பத்தில் ஊரில் இருக்கிறது. கணவர் எடுத்த படங்கள் மேலே உள்ள இரண்டு மட்டும். மற்ற இடங்களில் எடுத்த படங்கள் இல்லை. அதனால்  கூகுளிலில் இருந்து சில படங்கள் மட்டுமே!

அடுத்த பதிவு புத்தகயாவில் பார்ப்போம்.

                                                                      வாழ்க வளமுடன்
---------------------------------------------------------------------------------------------------------------------------


வியாழன், 28 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 7

பூம்புகார் கல்லூரி மேடையில் 
பழைய ஹரித்துவார்
தினம் மாலை நேரம் ஆறு மணிக்கு 
கங்கை நதிக்கு ஆரத்தி
இதற்கு முன்பு எழுதிய பதிவுகள் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

முந்தைய பதிவில்  அடுத்த பதிவில் ஹரித்துவார் பார்க்கலாம்  என்றேன் , வாங்க ஹரித்துவார்ப்பற்றி படிக்கலாம்

உல்லாசப்பயணம் - பகுதி 6








புதன், 27 ஜனவரி, 2021

உல்லாசப்பணம் - பகுதி 5




செங்க்கோட்டை படமும் ,  தாஜ்மஹாலின் நாலு வாயில்களில்  ஒரு வாயில் படமும்



அடுத்த  பதிவில் தலைநகர் டெல்லியில்   காணச்சென்றக் காட்சிகளைப் பார்ப்போம் என்று  சொல்லி இருந்தேன். 

செவ்வாய், 26 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - 4






ரயில் அடுத்து ஜான்ஸியிலிருந்து ஆக்ரா நோக்கி புறப்பட்டதை பார்ப்போம் என்றேன் முந்தின பதிவில்.  தொடர்ந்து பார்க்கலாம்.


 முந்தின பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

திங்கள், 25 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 3



பயணக்குறிப்பு உள்ள நோட்டில் பின் பகுதியில் போன இடங்களின் படங்கள் (அங்கு விற்கும் படங்களும் , போட்டோ க்கள் சிலவும் )ஒட்டி வைத்து இருக்கிறார்கள்.

உல்லாசப்பயணம்உல்லாசப்பயணம்  -2 என் கணவரின் கல்லூரிச்சுற்றுலா தொடர் பதிவு முந்தின பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம். 

சென்ற பதிவில் சாஞ்சி ஸ்தூபியைப் பார்த்து விட்டோம். அடுத்து  குன்றிலிருந்து இறங்கி கீழே  உள்ள தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் பொருட்காட்சிப் பார்க்க வாங்க என்றேன்.

சனி, 23 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 2

 

உல்லாசப்பயணம்  என் கணவரின் கல்லூரிச்சுற்றுலா தொடர் பதிவு முந்தின பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம். 


சாஞ்சியில் அமைந்துள்ள ஸ்தூபிகள் ,புத்தவிகாரம்  பற்றிய வரலாறு இந்த பதிவில் இடம்பெறுகிறது. 

படங்கள் இணைக்க முடியவில்லை. பயணக்கட்டுரை எழுதவேண்டும் என்று படங்களை சேமித்து  எடுத்து வந்த மகனின்  மடி கணினி பழுது ஆகி விட்டதால்  படங்களை இணைக்கமுடியவில்லை. ஒரு சில படங்கள் மட்டும் அலைபேசியில் இருக்கிறது.  அந்த இடங்கள் வரும் போது போடுகிறேன்.



நிறைய படங்கள் ஊரில் ஆல்பத்தில் இருக்கிறது. பிறகு இணைக்க வேண்டும்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

உல்லாச பயணம்



என் கணவர்  பழனியில் பழனி ஆண்டவர் கல்லூரியில்   இந்தியப் பண்பாடு  பி.ஏ படித்தார்கள்.  இளங்கலை இரண்டாமாண்டு  படிக்கும் போது  வட இந்தியாவிற்கு கல்விச்சுற்றுலா போய் இருந்தார்கள். போய் வந்த பயண அனுபவங்களை ஒரு நோட்டில் அவர்கள் கைப்பட  எழதி வைத்து இருந்தார்கள்  அந்தப் பயணக் கட்டுரை இங்கே பகிர்வதாக சொல்லி இருந்தேன்.  தொடர் கட்டுரையாக பதிய எண்ணம். படிக்க சிரமம்  இல்லாமல் இருக்கும்.

செவ்வாய், 19 ஜனவரி, 2021

தமிழுடன் நீங்களும் வாழ்வீர் எம்முடன்


மாதம் ஒருமுறை மயிலாடுதுறையிலிருந்து வெளியாகும் ஆன்மீக பத்திரிக்கை  சிவச்சுடர். என் கணவர்  பத்திரிக்கை ஆசிரியர் குழுவில் இருந்தார்கள் ,  மாதம் ஒரு கட்டுரை எழுதி அனுப்புவார்கள்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

அன்பு உறவுகளுக்கு நன்றி

 நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு  .   என் துயரமான நாட்களில்   உற்ற துணையாக உடன் இருந்து  உதவிய  இரு பக்க சொந்தங்களுக்கும் நன்றி. உறவுகள் வருமுன்னே அக்கம் பக்கம் நட்புகள் உடனே வந்து உதவியதை காலம் முழுவதும் மறக்க முடியாது அவர்களுக்கும் நன்றி.

மற்றும் வலைத்தள நட்புகள் அனைவருக்கும் நன்றி. "அக்கா", "தங்கச்சி" சகோதரி  என்று வாய் நிறைய அழைத்துஉடன்பிறவா சகோதர சகோதரிகளாக ஆறுதல் மொழிகள் சொல்லி அழைத்த அனைத்துஅன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

"அம்மா" என்று அழைத்து வலைத்தளத்திற்கு வாருங்கள்" என்றும் , மனகவலைகளை மாற்றும் மருந்து இது இணையத்திற்கு    வருக" என்றும் அழைத்து கொண்டே இருக்கும் அனைத்து   நட்புகளுக்கும் நன்றி.

தங்கள் வலைத்தளங்களில்   இரங்கல் பதிவு போட்டு ஆறுதல்  தெரிவித்த  நட்புகளுக்கு நன்றி. 

திருமணம்ஆகி வாழ்க்கை துணைவருடன்   வசித்த ஊர்கள் மூன்று,அங்கு அன்பாய் பழகிய நட்புகள்  ஆறுதலாக அன்பாய் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி . 

மகன் ஊருக்கு வந்து இருக்கிறேன் இப்போது. இங்கு வரும் வரை எங்களுக்கு (என் மகனுக்கும் எனக்கும்) எத்தனை எத்தனை அனுபவங்கள் நாளும் ! உறவுகளும், நட்புகளும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டார்கள். அவர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி. 

 நல்லவிதமாக அனைத்தையும் நடத்தி கொடுத்த என் இதய தெய்வத்திற்கும்,  இறைவனுக்கும் நன்றி.   

 என் கணவர்  இளங்கலை முதலாண்டு படிக்கும் போது  வடஇந்தியப் பயணம் சென்றார்கள் . அவர்கள் கைப்பட எழுதிவைத்து இருந்த பயணக்கட்டுரையை தொடரவிரும்புகிறேன்.  இறையருள் விருப்பத்தை  நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வருகிறேன் விரைவில். 

                                                                      வாழ்க வளமுடன்.