வெள்ளி, 24 டிசம்பர், 2021

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்



அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே



மகன் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீடுகளில் கிறிஸ்துமஸ் ஒளி அலங்காரம் . நானும் பேரனும் பார்த்து புகைப்படம் எடுத்து வந்தோம். அவை இங்கு பகிர்வாய்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
விடுமுறை தின
வாழ்த்துக்கள்
!

வியாழன், 23 டிசம்பர், 2021

வேட்டையாடும் பறவை

வல்லூறு  உருவத்தில் சிறியது, ஆனால் வேகமாக பறக்க வல்லது. தன்னை விட பெரிய பறவைகளையும் வேட்டையாடும், வாத்து, புறாவினங்களை எளிதாக தாக்கி கொல்லும் என்று    அதைப்பற்றி படித்து இருக்கிறோம்.

நேற்று அதை  பார்த்து விட்டேன்.  காடை பறவையை அடித்து தூக்கி செல்வதை.

செவ்வாய், 21 டிசம்பர், 2021

 

ஸ்ரீவில்லிபுத்தூர்க் கோவில்


பெரியாழ்வார் கட்டிய 11 நிலைக் கோபுரம்
  ஸ்ரீவில்லிபுத்தூர்  கோபுரம்  நம் அரசின் அடையாள சின்னம்.

மார்கழி என்றாலே பாவை நோன்பும், திருப்பாவையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும் எல்லோருக்கும் நினைவில் வரும் இல்லையா?


கோதை பிறந்த ஊர் கோவிந்தன்  வாழும் ஊர் என்று சொல்லப்படுகிற ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு போய் இருந்தோம் போன மாதம்.  சிவகாசியில் அப்பா பணி புரிந்த போது அடிக்கடி வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் ஆண்டாள் தரிசனம் செய்யப்  போவோம். பல வருடங்கள் கழித்து மீண்டும் தரிசனம். மலரும் நினைவுகள்  வந்து சென்றது. 

கோவிலில் பல மாற்றங்கள். வழி எல்லாம் பால்கோவா கடைகள்,(அம்மனுக்குத் திரட்டுப்பால்தான் பிரசாதம்) துளசி மாலை வாங்கச் சொல்லி துரத்திக் கொண்டே வரும் பெண்கள், ஆண்கள்.  முதலில் எங்கு போகவேண்டும் எப்படித் தரிசனம் செய்ய வேண்டும் என்பதையும் அவர்களே சொல்கிறார்கள். 

         
                     



                                                       ஆடிப்பூரக் கொட்டகை  
 நன்றி - பக்தி ஸ்பெஷல் அட்டைப் படம்

 முதலில் ஆண்டாள் சன்னதி. ”நாச்சியார் திருமாளிகை” என்று அழைக்கப்படுகிறது. அவள் சிறுவயதில் ஆடி, ஓடிக்களித்த இடமே இப்போது ஆண்டாள் சன்னதி. துளசி மாலைகள் வாங்கிக் கொண்டு உள் நுழைகிறோம். உள்ளே நுழைந்தவுடன் பிரகாரத்தில்  லட்சுமிஹயக்கீரவர் . அங்குள்ள பட்டர் வாங்க பெரியாழ்வார் கும்பிட்ட ஸ்வாமி முதலில் இவரை வணங்கி விட்டு போங்கள் என்கிறார்.

அப்புறம் ஆண்டாள் தரிசனம். 

ஆண்டாள் சன்னதிக்குள் செல்ல சிறப்பு கட்டணம் டிக்கட் வாங்கி உள்ளே சென்றோம்.   ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஒரே வரிசையில் நிற்கிறார்கள்.  மூலவர்கள் போலவே  மூன்று உற்சவ மூர்த்திகளும்  முன்புறம் உள்ளனர், இவர்கள்  இருக்கும்  இடம்   முத்துப் பந்தல் என்று அழைக்கப்படுகிறது. பட்டர் ஆரத்திக் காட்டிவிட்டு   சுருக்கமாய்த் தலவரலாறு  சொல்கிறார்.

  உற்சவர்கள்  பின்புறம் இருக்கும்   மூலவர்களை மறைக்கிறார்கள். உற்று உற்றுத் தான் பார்க்கவேண்டும் மூலவர்களை. முதலில் ஆண்டாளைப் பார்த்தேன்,  ஆண்டாள் கையில் கிளி இருக்கிறதா என்று? ஏன் என்றால்    தினம் தினம் புதிதாக இலைகளால் செய்யப்பட்ட கிளி , மாலையில் சார்த்தப்பட்டுக் காலை வரைதான் இருக்குமாம் ஆண்டாள் கைகளில் , அப்புறம் பக்தர்களுக்குக்  கொடுத்து விடுவார்களாம். 
                              
               முன்பு ஆனந்தவிகடனில் வந்த படத்தைக் கிழித்து வைத்து இருந்தேன்.

                      நமது வேண்டுதலைக் கண்ணனிடம் சேர்க்கும் கிளி

 நாம் கொடுக்கும் துளசி மாலையை ஸ்வாமிக்குப் போட்டு விட்டு  ஆரத்தி காட்டி விட்டுத் துளசி மாலையை எடுத்து  கொடுத்தவர் கழுத்தில் போட்டு விடுகிறார்கள்.  அதைப் போட்டுக் கொண்டே கண்ணாடிக் கிணறுக்கு போகிறார்கள். பெண்கள் மாலையைப் போட்டுக் கொண்டு சுற்றி வந்தால் கல்யாணம் ஆகுமாம். 

அடுத்த தரிசனம்  ஆண்டாள் ஸ்வாமிக்கு பெரியாழ்வார் தொடுத்த மாலையை தன் கழுத்தில் போட்டு அழகு பார்த்த கண்ணாடிக் கிணறு. இப்போது கண்ணாடிமூடியால் மூடி ஒரு உண்டியல் பெட்டியாக மாறி விட்டது . நான்கு பக்கம் வாசல் வைத்து அதன் வழியாகப் பணம் போடப்படுகிறது , டாலர் எல்லாம் அதில் இருந்தது. (பணம் தண்ணீரில் விழாது.  அது போன்று அமைத்து இருக்கிறார்கள்). கிணற்றைப் பார்க்க முடியவில்லை. சின்ன சதுரமாய்த் தெரிகிறது கிணறு  மிக கவனமாய்ப் பார்த்தாலும் தண்ணீர் தெரியவில்லை. அடுத்து கண்ணாடி அறை நடுவில்  ஆண்டாள் படம்  வைத்து இருந்தார்கள்.சுற்றி வர கண்ணாடி  வைத்து இருந்தார்கள். கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு சுற்றி வந்து வணங்கி வெளியில் வந்தோம். இங்கும் கட்டணம் உண்டு.

பின் ஆண்டாள் சன்னதி சுற்றி வரும் போது உள்ளே உள்ள உற்சவர்கள் போலவே சுவற்றில் திருவுருவங்கள் இருக்கிறது- ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார். அதன் பக்கத்தில் உள்ள வயதான பட்டர் நமக்குக் கதை சொல்கிறார்,  கோதை பிறந்த கதை, விஷ்ணு சித்தர் கருடாழ்வாராக அவதாரம் எடுத்தகதை , மற்ற கோவில்களில் எதிரில் இருக்கும் கருடன்  இங்குமட்டும் தான் உடன் இருக்கிறார்.  அதற்குக் காரணம் ரங்கமன்னாருக்கு அவர் மாமனார் என்பதாலாம்.  மூவரும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாம். ஆண்டாள் சன்னதி பிரணவ மந்திர  அமைப்பில் கட்டப்பட்டு இருக்கிறதாம். ஆண்டாள் சன்னதியில் 108 திவ்ய தேசங்களின் படம் வரையப் பட்டு இருக்கிறது -அழகாய். இருக்கிறது.
                     
                                         ஆண்டாள் அவதரித்த துளசி வனம்.

அடுத்து ஆண்டாள் பிறந்த துளசிவனம். பெரியாழ்வாரின் துளசி தோட்டத்தில்  செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரத்தில்  பூமி தேவியின் அவதாரமாக கோதை அவதரித்தாள். கோதை தோன்றிய இடம் அழகாய் இருக்கிறது. ஒரு தொட்டியில் துளசிச்செடி முன்புறம்  வைத்து இருந்தார்கள். பின் புறம் ஆண்டாள் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள்,  பட்டர் ஆரத்தி காட்டினார்.

 சன்னதியைச் சுற்றி அழகிய துளசிச் செடிகளும் மரங்களுமாகிய அழகிய தோட்டம்.


                                           
அழகிய துளசி வனம்

ஆண்டாள் கோவில் யானை -பெயர் தெரியவில்லை

 வடபத்திரசாயி ரங்கமன்னாருக்குத் தான் கோபுரம் பெரிதாக இருக்கிறது.   மூலவரைப் பார்க்கப் போக ஒரு பத்துபடி ஏறிப்போக வேண்டும்., பிடித்துக் கொண்டு ஏற  வசதியாக  கைப்பிடி இருக்கிறது.  பெருமாள் சயனகோலத்தில்  ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகாய்க்  காட்சி அளிக்கிறார்.  பின்புறம் உள்ளே இருக்கும் மற்ற தெய்வங்கள் அழகிய வர்ணத்தில் இருக்கிறார்கள்.  பட்டர் பெரிய மூங்கில் தட்டில் துளசியை வைத்துக் கொண்டு வரும் பக்தர்களுக்கு  கொடுத்தார்.  ஆரத்தி காட்டவில்லை.

பெருமாள் சன்னதி எதிரில்  உள்ள (கோபாலவிலாசம்)  மண்டபத்தில் அழகிய மரவேலைப்பாட்டுக் கூரை,  
வடபத்திரசாயி சன்னதி செல்லும் வழி
உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வசதிக்காக புதிய இடம் கட்டி வருகிறார்கள் 
வாசல் முகப்பு
உள் பிரகாரம், நல்ல வெளிச்சம் வருவது போல் கட்டிட அமைப்பு
ஆண்டாளின்  வரலாறு சித்தரிக்கப்பட்டு உள்ளது விமானத்தில்

பெருமாள் சன்னதியிலிருந்து கோபுர தரிசனம்.
மரவேலைப்பாடு போல் கல்லில் அழகாய்ச் செய்த வேலைப்பாடு.   இருபுறமும் கடைகள் உள்ளன.


 வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
                                                         ----------------------------------------

திங்கள், 20 டிசம்பர், 2021

தோட்டத்திற்கு வந்த பல வித பறவைகள்


மணிப்புறா 

பறவைக்கு  பின்னால் தெரியும் செடியில் முன்பு பசுமையான சின்ன சின்ன இலைகளும் சிவப்பு பூவும் இருக்கும் இப்போது முட்கள் மட்டுமே !

இந்த பதிவில் மகன் வீட்டுத்தோட்டத்துப் பறவைகள்.

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

தோட்டத்திற்கு வந்த பறவைகளும், அணில்களும்



இன்று "உங்கள் பறவைகள் வந்தனவா  என்று வல்லி அக்கா கேட்டதால் இந்த பதிவு. மகன் வீட்டில்  வழக்கமாய் வரும்  புறாக்கள், சிட்டுக்குருவிகள், மரங்கொத்திகள் , காடைகளும்    வருகிறது. அவைகள் முன்பு எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன்.  நேற்றும் பறவைகளை எடுத்தேன்.

இந்த பதிவில் உள்ள பறவைகள் மகள் வீட்டு தோட்டத்தில் (அட்லாண்டாவில்) எடுத்த பறவைகள்.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

தாத்தா வந்தார்! கிறிஸ்துமஸ் தாத்தா வந்தார்!



கிறிஸ்துமஸ் தாத்தாவின் வீடு

பேரனும் தாத்தாவும்

கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலங்கள்  உலகம் முழுவதும்  நடந்து கொண்டு இருக்கிறது. கிறிஸ்துமஸ் அன்று வீட்டிற்கு வந்து குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை தருவார், ஏழைகளுக்கு உதவுவார் என்று நம்பப்படுகிறது.

வீடுகளின் வெளி பக்கம், வீட்டுக்குள் என்று வித விதமான  கிறிஸ்துமஸ் தாத்தாவின் பொம்மைகளை வைத்து மகிழ்கிறார்கள். அந்த பொம்மைகள் மகிழ்ச்சி அலைகளை பரப்பிக் கொண்டு இருக்கிறது. 

சாண்டா கிளாஸ் கிறிஸ்துமஸ் தாத்தாவை  குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி பார்த்து அவருடன் படம் எடுத்து கொள்வதில் மகிழ்ச்சி  அடைகிறார்கள்.

வியாழன், 9 டிசம்பர், 2021

கிறிஸ்மஸ் வரும் பின்னே ! ஓளித்திருவிழா வரும் முன்னே!


புத்தகம் விற்கும் கடைக்கு பக்கம்  மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம்.

கிறிஸ்மஸ் வருமுன் கடைகள், வீடுகளில் விளக்கு அலங்காரங்கள் ஆரம்பித்து விட்டது. அக்டோபர் முதல் வாரத்திலிருந்தே கடைகளில் கிறிஸ்மஸ் விற்பனைகள் (பரிசு பொருட்கள் விற்பனை) அமோகமாக நடக்குமாம். நன்றி சொல்லும் நாளிலும் நிறைய விற்பனையாகும் இந்த மாதிரி பொருட்கள். ஏசு பிறப்பு  குடில்  அமைப்புகள் வித விதமாக  இருக்கும். வீடுகளில் மிக அழகாய் ஏசு பிறப்பு குடில் அமைக்கப்படும். மகன் வீடிலும் ஏசுபிறப்பு குடில் அமைப்பான்.
 
டிசம்பர் முதல் வாரத்திலிருந்து இந்த ஊரில் ஒளித்திருவிழா ஆரம்பித்து விட்டது. ஜனவரி புத்தாண்டு வரை இந்த ஒளித் திருவிழா நடைபெறும்.
  அலங்கார விளக்குகளை பார்க்க  சில இடங்களுக்கு


மகள் அழைத்து போனாள். நான் பார்த்த காட்சிகள் இந்த பதிவில்.



புத்தகம் வாங்கும் கடைக்கு அழைத்து போனாள். அந்த கடைக்கு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த கிறிஸ்மஸ் மரம்
மேலே உள்ள  மூன்று படங்கள் புத்தககடை பக்கம் எடுத்தவை

இந்த வளாகத்தில் எடுத்த சில படங்கள் கீழே

தேவாலயம்

இலைகளை உதிர்த்த மரம் விளக்குகளால்  அழகானது


விளக்குகம்பம்  வெளிச்சம்  நிலா வெளிச்சம் போல காட்சி அளிக்கிறது 

Conyers எனும் இடத்தில்  உள்ள பழைய காலத்து ரயில் நிற்கும் இடத்தில் விளக்கு அலங்காரம்
ரயிலை பகலில் எடுத்த படம் இன்னொரு பதிவாக போட வேண்டும்


Conyers  கடை வீதி

விடுமுறை நாள் என்பதால் கடைகள் இல்லை







காரில் வரும் போது எடுத்த படம்

மகள் வீட்டுக்கு அருகில் ஒரு வீட்டில் வைத்து இருந்ததை காரில் வரும் போது எடுத்த படம்.
ஒரு கடை வாசலில் வைத்து இருந்தார்கள்



வீட்டு வாசலில் அலங்காரமாக வைக்க விற்கப்படும் பொருட்கள்
இரவு

பகல்

மகள் வீட்டில்
 
இங்கு எல்லோர் வீடுகளிலும் கிறிஸ்மஸ் அலங்காரம் செய்வார்கள்  மகனும் வைப்பான், அங்கு போனபின் மகன் வீட்டு கிறிஸ்மஸ் அலங்காரம் படம் போடுகிறேன்.

மகள் வீட்டில்

மகள் வீட்டு பால்கனி
வெளிபக்கம் இருந்து இரவு எடுத்தேன் மகள் வீடு.

காமிராவில் எடுக்கவில்லை எல்லாபடங்களும் அலைபேசியில் தான்.

கிறிஸ்மஸ் என்றால் கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமலா? அவர் பின்னால் வருவார். எல்லோருக்கும் பரிசு பொருட்கள் எடுத்து வருகிறார். குளிர் வேறு அதனால் கொஞ்சம் மெதுவாக வருவார். கிறிஸ்மஸ்  வரும் முன் வந்து விடுவார்.
குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

புதன், 8 டிசம்பர், 2021

உலக புகழ் பெற்ற ரோஜாத் தோட்டம்


ரோஜா தோட்டத்து கதை

தோட்டத்து நிழலில் அமர்ந்து பேசி புகைபடங்கள் எடுக்கலாம்


அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அங்கு பார்த்தவைகளைப் பற்றி தொடர் பதிவாக பகிர்ந்து வருகிறேன். 

இந்த பதிவில் அங்கு பார்த்த மிக பழமையான ரோஜா தோட்டம் பற்றிய பகிர்வு.  உலகின் மிக பெரிய ரோஜா தோட்டம். லேடி பாங்க்சியா ரோஸ்  செடி 1885 ஆம ஆண்டில் ஸ்காட்லாந்தில் இருந்து  கொண்டு வரப்பட்டு  இந்த வீட்டின் பின் புறத்தில் நடப்பட்டது. உலகின் மிகப்  பெரியதாக அளவிடப்பட்டு இருப்பது இந்த தோட்டத்தின் சிறப்பு.     இந்த இடம் 8000 சதுர அடியாம். இந்த தோட்டம் "ஷேடி லேடி" என்று செல்லபெயர் பெற்று இருக்கிறது. ரோஜாத் தோட்ட மியூசியம் பார்க்க கட்டணம் உண்டு.

வெள்ளி, 3 டிசம்பர், 2021

டோம்ப்ஸ்டோன் கோர்ட் மியூசியம் - பகுதி -3


நீதிமன்றம் 

அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அங்கு பார்த்தவைகளைப் பற்றி தொடர் பதிவாக பகிர்ந்து வருகிறேன்.

  கோர்ட்ஹவுஸ் மியுசியத்தில்  பார்தத காட்சி பகிர்வின் நிறைவு பகிர்வு  


சட்ட புத்தகம் நீதிபதிகள் படம் , சரித்திரத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு தீர்ப்புகளின் விவரங்கள் கண்ணாடி பேழையில்

                                  அந்தக்கால வண்டிகள்




முதல் ரயில் 1903 ல் வந்தது, டோம்ப்ஸ்டோன் வீதிகள் 1900 ல் எப்படி இருந்தது என்ற படம்,  கோர்ட் படம் 1900 ல்,1920 ல் எப்படி இருந்தது என்ற படங்கள்.  பத்திரிக்கைகளில் வந்த படங்களை வெட்டி ஒட்டி பிரேம் செய்து இருக்கிறார்கள். அந்த காலத்து நீதிபதிகள் உபயோகித்த சுத்தியல்.


                            வக்கீல்கள் இருக்கும் அறை


குதிரை மேல் போட்டு அமரும்  ஆசனம்



பழைய ஆசனங்கள்



வெள்ளி சுரங்கத்தில் வேலை பார்த்தவர்கள்




  விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கும்  பெட்டகம் (இரும்புபெட்டி)






கரடு முரடான கல்லறை நகரத்தில்  தனித்து நிற்கும் கதாபாத்திரங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்




கோர்ட் ரூம்

அவர்கள் விவசாயம்  செய்து ஆடு, மாடு வளர்த்த விவரங்கள், கவ்பாய் குதிரையில் அமர்ந்து  மாட்டை ஓட்டி செல்லும் படங்கள்

துப்பாக்கி சண்டை நடந்த காட்சிகள்

தூக்குத் தண்டனை நடந்த இடம்

தூக்கு மேடைக்கு போகும் படிக்கட்டு

ஜெயில்  கதவு

கோர்ட் மியூசியம் நிறைவு பெறுகிறது. மேலும் வேறு என்ன அங்கு பார்த்தோம் என்பது அடுத்த பதிவில்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------