வியாழன், 26 செப்டம்பர், 2019

சக்கரபாணி திருக்கோயில்



24,8.2019 ல் குடந்தையில் பார்த்த கோவில்கள் பதிவாக வந்து கொண்டு இருக்கிறது. இன்று சக்கரபாணி கோவில். இந்த கோவில்  காவிரிக் கரையின் தென் கரையில் அமைந்துள்ள கோவில். குடந்தை  பெரியகடைத்தெருவின் வட கோடியில் அமைந்து இருக்கிறது.
இந்த வாசல் முகப்பில் ஸ்ரீ சக்கர ராஜா இருக்கிறார் ஸ்ரீ சுதர்ஸனவல்லி,  ஸ்ரீ விஜயவல்லி தாயாருடன் இருக்கிறார்

நாங்கள்   காலை சீக்கீரம் வந்தோம். கடைகள் திறந்து விட்டால் காரை நிறுத்துவது கடினம் என்பதால் 7 மணிக்கே வந்து விட்டோம் கோவிலுக்கு.
இந்த நுழைவாயில் வழியாகக் கோவிலுக்குப் போனோம்.
உள்பக்கத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் - ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்த கோலத்தில்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

குடந்தைக் கோவில்கள் - பகுதி 2


இந்தத் திருக்கோயில் கும்பகோணத்தில் மகாமகக்  குளம் கீழ்க்கரையில் உள்ளது.

23.8.2019 அன்று கும்பகோணம் போனபோது  அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகளாய் வருகிறது.

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

குடந்தைக் கோவில்கள்

திருப்பனந்தாள் காசி மடத்தின் அன்பளிப்பாக இந்த மணிக்கூண்டு . இப்போது அதனைப் பராமரிப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி

திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பதிவில் குடந்தையில் போன கோவில்கள்பதிவுகள் இனி அடுத்தபதிவில் என்றேன்.

வியாழன், 5 செப்டம்பர், 2019

திருக்குடந்தை மங்கள நாயகி பிள்ளைத்தமிழ்



ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அபிமுகேஸ்வர பெருமான் கோயில்
இந்தக் கோவிலில் இருக்கும் மண்டபத்தில் தான் விழா நடந்தது.

திருக்குடந்தைத் திருமுறை மன்றம் 1973ல் ஆரம்பிக்கப்பட்டுச் சிறப்பாக நடந்து வ்ருகிறது. அந்த மன்றத்தின் 46 ஆம் ஆண்டு  நிறைவு விழாவில் தான் என் கணவர்  உரை எழுதிய "திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் "
நூல் வெளியீடு நடந்தது.