திங்கள், 29 ஜனவரி, 2024

ஆலப்புழை படகு வீடு பயணம் - பகுதி 2

ஆலப்புழா படகு வீட்டில் மகன் குடும்பத்துடன் ஜூன் மாதம் பயணம் செய்த போது பார்த்த கோவில்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.


ஆலப்புழா படகு வீடு பயணம்  பதிவில்   பார்த்த கோவில்கள் அடுத்த பதிவில் என்று சொல்லி இருந்தேன், நினைவு இருக்கும். 
முதலில் பார்த்த ஸ்ரீ நாராயணகுரு தேவா கோவில் அப்புறம் கிருஷ்ணர் கோவிலும் போகும் வழியில் பார்த்த அழகிய காட்சிகளும்  இடம்பெறுகிறது.

சனி, 27 ஜனவரி, 2024

படகு வீட்டில் பயணம்


நாங்கள் தங்கி இருந்த படகு வீடு

கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் இரண்டு நாள்  படகு வீட்டில்  சவாரி செய்தோம். மூன்றாம் நாள் காலை படகு வீட்டை பிரிய மனம் இல்லாமல்  வந்தோம். படகில் சுற்றி காட்டினார்கள், இரவு மீண்டும் அதே இடத்தில் வந்து தங்கி விடுவோம். அருமையாக இருந்தது படகு பயணம். மகன் ஜூன் மாதம் அழைத்து சென்றான்.

பேரனின் பிறந்தநாளையும், மருமகளின் அம்மா பிறந்த நாளையும் படகில் கொண்டாடி மகிழ்ந்தோம்.  அவை இங்கு என் சேமிப்பாக பதிவில் இடம் பெறுகிறது.

வியாழன், 25 ஜனவரி, 2024

ஆறுபடை வீடு அழகா போற்றி






மகன் அரிசோனாவில் உள்ள மகா கணபதி கோவில் தைபூசத்திருநாளுக்கு கணினியில் செய்து கொடுத்த  விளம்பர பலகை. ஆறு படை வீடு முருகனும் இருக்கிறார்கள்.
நடுவில் முன்பு தைபூசத்திற்கு  மகன் செய்து கொடுத்த திருவாச்சியுடன் மகா கணபதி கோவில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். 
--------------------------------------------------------------------------------------------------





மகன் செய்து கொடுத்த திருவாச்சி
தைப்பூச விழா முன்பு போட்ட பதிவு படித்து இருப்பீர்கள். படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.



நாங்கள் பால் குடம் எடுத்தோம் மகனும், பேரனும் காவடி எடுத்தான் அந்த நினைவுகள் வந்து போகிறது.


                                               திருப்பரங்ககுன்றம் 


திருச்செந்தூர்

திருவாவினங்குடி

சுவாமிமலை

                                                        திருத்தணி



பழமுதிர்சோலை




அறுபடை வீடு கொண்ட திருமுருகா  பாடல்

சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடல் எல்லோரும் கேட்டு இருப்பீர்கள், இருந்தாலும் இன்று ஆறுபடை வீடுகளையும் பார்க்கலாம்.  என் பதிவுக்கு பொருத்தம் என்பதால் சேர்த்து இருக்கிறேன் கேட்டு பாருங்கள். 

ஆறுபடை வீட்டின் அழகை நக்கீரர் சொல்வது சின்ன காணொளி தான் பாருங்கள், கந்தன் கருணையில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பேசியது.


சண்முகக் கடவுள் போற்றி சரவணத் துதித்தாய் போற்றி
கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி
தண்மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி
விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி போற்றி.


தைபூச நாளில் முருகன்  சிந்தனை . முருகன் அனைவருக்கும் எல்லா நலங்களையும் அருள பிரார்த்திப்போம்.
ஆறுபடை வீடு அழகா போற்றி ! போற்றி!

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

திங்கள், 15 ஜனவரி, 2024

சனி, 13 ஜனவரி, 2024

மார்கழி கோலமும் மகரிஷி கவிதையும் பகுதி -2



 

மார்கழி கோலமும்  மகரிஷி கவிதையும் -1 

நேற்று போட்ட பதிவு படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.

1958 ம் ஆண்டு  வேதாத்திரி மகரிஷி அவர்களின் துணைவி  மார்கழி மாதம்  கோலம் போடும் போது அக்கோலத்தைச் சுற்றி எழுத கவிதை கேட்டாராம்.  மகரிஷியும் தினம் தினம்  மனதில் தோன்றும் எண்ணங்களை கவிகளாய்  சொல்லுவராம்., அன்னை லோகாம்பாள் அவர்கள் கோலத்தைச்சுற்றி எழுதிய  அந்த கவிதைகள்  இந்த பதிவில்  இடம்பெறுகிறது. பாடல்கள் "மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து" என்று புத்தகமாய் வெளி வந்தது.

இந்த பதிவில் மேலும் சில கோலங்களும்  வேதாத்திரி மகரிஷிஅவர்களின்  கவிதைகள் இடம்பெறுகிறது.

வெள்ளி, 12 ஜனவரி, 2024

மார்கழி கோலமும் மகரிஷி கவிதையும்



மார்கழி மாதம் கோல பதிவுகள் போடவே இல்லை, தைபிறக்க போகிறது, அதனால் மார்கழி கோலங்களை பகிர்ந்து விடலாம் என்று இந்த பதிவு. சின்ன  கோலங்கள் தான். எல்லோருக்கும் தெரிந்த கோலங்கள்தான். என் சேமிப்பாக இங்கு பதிவு செய்கிறேன்.

1958 ம் ஆண்டு  வேதாத்திரி மகரிஷி அவர்களின் துணைவி  மார்கழி மாதம்  கோலம் போடும் போது அக்கோலத்தைச் சுற்றி எழுத கவிதை கேட்டாராம்.  மகரிஷியும் தினம் தினம்  மனதில் தோன்றும் எண்ணங்களை கவிகளாய்  சொல்லுவராம்., அன்னை லோகாம்பாள் அவர்கள் கோலத்தைச்சுற்றி எழுதிய  அந்த கவிதைகள்  இந்த பதிவில்  இடம்பெறுகிறது. பாடல்கள் "மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து" என்று புத்தகமாய் வெளி வந்தது.
---------------------------------------------------------------------------------------------------

கருத்தும் கடவுளும்

கடவுளை வணங்கும் போது 
கருத்தினை உற்றுப் பார் நீ !
கடவுளாய்க் கருத்தே நிற்கும் 
காட்சியைக் காண்பாய் ஆங்கே.

நான் பதிவு ஆரம்பித்த முதல் நாள்  கிளிக்கோலம் போட்டு வேதாத்திரி அவர்களின் கருத்தை  பதிவு செய்தேன். (முன்பு கோலம் போட்டு மகரிஷி கருத்தை  எழுதுவேன்.)

நன்மையே நோக்கு

எண்ணம் சொல் செயலால் 
எவருக்கும் எப்போதும் 
நன்மையே விளைவிக்க 
நாட்டாமா யிரு

உள்ளத்தில் கள்ளம் வேண்டாம்

உள்ளொன்று வைத்துப்
புறம் ஒன்று பேசினால்,
உள்ளொளி தீயாகி
உடலை கெடுத்துவிடும்

இயல்பும்- உயர்வும்

அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு,
அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு. 

ஊக்கம் உயர்வு தரும்
ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து,
ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்

உழைப்பின் மேன்மை
உழைப்பினால் , உடலும், உள்ளமும், 
உலகமும், பயன் பெறும் உணர்வீர்

தினக்கடன்
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் 
நினைப்பதும், செய்வதும் நித்தியக்கடன்


                                                 விதியும்  மதியும்

இயற்கை சக்தியே விதி,

இதை யறிந்த அளவே மதி

உணர்தலால் அமைதி
எண்ணத்தின் வேகமும், இயல்பும் , அறிந்தோர்க்கு
எண்ணமே இன்பமயம். எண்ணம் அமைதிபெறும்.

உண்ணுங்கால் எண்ணு

உண்ணும் உணவு  கிடைத்தவகை
எண்ணி யுண்ணிடல் என்றும் உன்கடன்.

எம் மதத்தையும் குறை கூறாதே

உம்மதமே உலகத்தில் 
உயர்வென்று பேசுகிறீர் 
எம்மதத்தாரிடம் இல்லை
ஏழ்மை பஞ்ச பாதகங்கள்?


அன்பின் செயல்

அனைத்துயிரும் ஒன்றென்று 
அறிந்த அடிப்படையில்
ஆற்றும் கடமையெல்லாம் 
அன்பின் செயலாகும்

கடவுளே - உயிர்

அண்டத்தில் கடவுளாய்
அழைக்கபடுபவன்
பிண்டத்தில் உயிரெனப்
பேசப் படுகிறான் 
கண்டத்தின் மேலே 
கருவில் நிலைத்தவன் 
அண்டத்தும் பிண்டத்தும் 
அவனையே காண்கிறான்


வளர்ச்சி நிலைகள்

அழகு மாறி கொண்டே இருக்கும்
அன்பு ஊறிக் கொண்டே இருக்கும்
தொழுகை தூய்மை வளர்க்கும்
தோல்வி ஜெயத்தில் முடியும்

                           

சிறந்த கலாசாலை

உலகமே  ஒரு பெரிய பழைய பள்ளி,
ஒவ்வொருவருக்கும் தினம் புதியபாடம்,
பலகலைகள் கற்றோர்க்கும் பாமர்க்கும் ,
பகிர்ந்து தரும் இன்பதுன்பம் எனும் பரிசு



மெய்வழி

தெய்வநிலை மனிதரெல்லாம் உணர்ந்தால் அல்லால்!
திருத்தமுள வாழ்வேது? ஆற்றல் அற்றோர்
தெய்வம் உண்டு நம்பித் தினம் வணங்கித்
தேர்வுபெற மதம் கண்டார் அறிவறிந்தோர்

கடவுளும் கடமையும்

கடமையில் உயர்ந்தவர் 
கடவுளை நாடுவார்
கடவுளை அறிந்தவர் 
கடமையில் வாழுவார்.


கோலமும் பாடலும் நாளையும் தொடரும் கோலத்தைப்பார்க்க, கவிதையை படிக்க வருவீர்கள் என்று நம்புகிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

எதுவும் வீணாகவில்லை!


சில நாட்களாக மாலை நேரம்  மொட்டைமாடியில் நடைபயிற்சி மற்றும், பறவைகளை கவனித்தல் செய்கிறேன்.
மொட்டைமாடியை பல வருடங்களுக்கு பின்  இப்போதுதான் திறந்து வைத்து இருக்கிறார்கள். மீனாட்சி கோபுரம் தெரியுமா பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு  போனேன்.


 என் ஆசை ஓரளவு நிறைவேறியது.  வெகு தூரத்தில் இரண்டு கோபுரம் மட்டும் கொஞ்சம் தெரிந்தது. மீனாட்சியை வணங்கி விட்டு என் நடைபயிற்சியை ஆரம்பித்தேன்.

 மாலை நேரம் தண்ணீர் தொட்டி நிரம்பி அதிகப்படியான நீர்  கீழே வழிந்து ஓடியதை குடிக்கவும், குளிக்கவும் பறவைகள் வந்தன. அவை இந்த பதிவில் இடம் பெறுகிறது. .