டிசம்பர் 12. 11. 2022 ல் மயிலாடுதுறை போன போது அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகள் தொடர் பதிவாக போட்டு வருகிறேன்.
இதற்கு முன்பு போட்ட பதிவுடன் மயிலாடுதுறை கோவில்கள் நிறைவு பெற்றது.
இந்த பதிவில் மயிலாடுதுறை போய் விட்டு மதுரைக்கு திரும்பி வரும் போது தரிசனம் செய்த தஞ்சைக்கு அருகில் உள்ள "புன்னைநல்லூர் மாரியம்மன்" கோவில் இடம்பெறுகிறது.
மாரியம்மன் பட உதவி கூகுள்- நன்றி.
புன்னைநல்லூர் மாரியம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார். சதாசிவ பிரம்மேந்திரரால் புற்றுக்கு முக உருவம் கொடுத்து ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்ட கோவில். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோவில்களில் ஒன்று.
புற்றுமண்ணால் உருவான மூலவர் என்பதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது. உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் தினம் உண்டு. மூலவர் அம்மனுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை 48 நாட்கள்(ஒரு மண்டலம்) தைலக்காப்பு உண்டு. தினமும் இருவேளை சாம்பிராணிதைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் தைலக் காப்பு செய்வார்களாம்.
அப்போது வெண்திரையிட்டு அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறுமாம்.
பக்கத்தில் இருக்கும் இன்னொரு மூலவர் விஷ்ணு துர்க்கை சன்னதி அழகாய் இருக்கிறது. இவருக்கு தினம் அபிஷேகம் உண்டு.
கோவில் உள்ளே வரும் வழி கடைகள் நிறைய இருக்கிறது
மழை பெய்து கொண்டு இருந்தது உள்ளே போகும் வழி
பெரிய மண்டபம் அதை தாண்டி உள்ளே போகும் வாசல்
இருபக்கமும் பெரிய தூண்கள் உள்ள மண்டபம்
திருமலை நாயக்கர் மஹால் தூணை ஒருவர் கட்டி பிடிக்க முடியாது, அது போல இந்த தூணையும் ஒருவர் கட்டிப்பிடிக்க முடியாது .
அம்மன் பவனி வரும் வாகனங்கள்
அம்மன் பவனி வரும் வாகனங்கள்
மண்டபம் பார்க்க அழகு
பிரசாதங்கள் விற்கும் கடை துணிபையில் பிரசாதங்கள்
புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோவில் ஸ்தல வரலாறு எழுதபட்ட கோபுர மஞ்சள் தூள் விளம்பர பலகை
அம்மனுக்கு தங்கபாவாடை அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக இருக்குமாம். அந்த அலங்காரபடமும் பார்க்கலாம்.
அம்மன் கோவில் நுழைவு வாசலில் இருபக்கமும் அறிவுப்புகள் இருக்கிறது அதைல் வலது பக்க அறிவுப்பு குறி சொல்வதாக சொல்லி பக்தர்களிடம் பணம் பறிப்பதாக புகார் வந்து இருக்கிறது அதனால் குறி சொல்லும் பெண்களிடம் ஏமாறவேண்டாம் என்று போட்டு இருக்கிறது.
தஞ்சையை வெங்கோஜி மகாராஜா 1680 ல் ஆண்டு வந்தார். அவர் திருத்தலயாத்திரை செய்து கொண்டு இருந்த போது சமயபுரத்தில் தங்கி இருந்தார். அன்று இரவு கனவில் தஞ்சைக்கு கிழக்கே 7.கி.மீ தூரத்தில் உள்ள புன்னைக்காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து வணங்கும் படி சொல்லி இருக்கிறார் அன்னை. அரசன் புன்னை காட்டிற்கு வந்து வழிபட்டு சிறிய கூரை அமைத்து வழிபட்டு அந்த இடத்துக்கு புன்னைநல்லூர் என பெயரிட்டு அக்கிராமத்தையும் கோவிலுக்கு வழங்கி இருக்கிறார்.
அதன் பின் 1728 -1735ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி அம்மைநோயால் கண் பாதிக்கப்பட்டபோது புன்னை நல்லூர் மாரியம்மனை வணங்கியபின் கண் ஒளி கிடைக்கபெற்றாள். அதனால் மகிழ்ந்த துளஜா ராஜா சிறிய கோவில் கட்டினார். பின் அந்த கோவில் பெரிய கோவிலாக பல மாறுதல் அடைந்து உள்ளது.
மராட்டிய மன்னர் சிவாஜி வழிபட்டு 3 வது திருச்சுற்று கட்டி கொடுத்து இருக்கிறார். காமாட்சி அம்பாபாய் சாகேப் அன்னகூடம் , மற்றும் வெளிச்சுற்று மண்டபம் கட்டி கொடுத்து இருக்கிறார்.
மழை பெய்து கொண்டு இருந்த காரணத்தால் பிரகாரம் வலம் வரவில்லை.
இந்த காணொளியில் கோவிலின் சிறப்பு பற்றிய முழுமையான விவரங்கள் சொல்கிறார்கள். மற்றும் கோவிலை அழகாய் சுற்றி காட்டுகிறார்கள் நேரம் இருந்தால் பார்க்கலாம்.
நான் வெளியில் இருக்கும் திருக்குளத்தை, தலவிருடசம் வேப்பமரத்தை எல்லாம் படம் எடுக்கவில்லை. அதை எல்லாம் இந்த காணொளியில் பார்க்கலாம்.
கோவிலுக்குள் இருக்கும் திருக்குளம் வெல்ல குளம் என்று சொல்கிறார்கள் வெல்லம் கரைத்து விடுவதால் அந்த பேர் போலும்.
கோவிலுக்கு வெளியே ஒன்று இருக்கிறது, திருக்குளத்தில் நடுவில் நீராழி மண்டபம் எல்லாம் அழகாய் இருக்கிறது. நாங்கள் போகவில்லை மழை பெய்து கொண்டு இருந்ததால்.
முன்பு இரண்டு முறை போய் இருக்கிறேன் அப்போதும் ஆற அமர பார்க்கவில்லை, அம்மனை மட்டும் வணங்கி விட்டு வந்து விட்டோம். இன்னொரு முறை போகும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக பார்க்க வேண்டும்.
எதிரில் தெரிவது ராஜஸ்ரீ இராஜராம் திருமண மண்டபம் என்று பேர் போட்டு இருக்கிறது
சிறப்பு கட்டணம் 10 என்று நினைக்கிறேன் , டிக்கட் வாங்கி கொண்டு நன்றாக தரிசனம் செய்தோம். கூட்டம் இல்லை
ஞாயிற்றுக் கிழமைகளில் நல்ல கூட்டம் இருக்கும் நாங்கள் திங்கட்கிழமை போனோம் அதனால் கூட்டம் இல்லை.
புன்னை நல்லூர் மாரியம்மன் பல அற்புதங்களை, நிகழ்த்தி இருக்கிறார் என்றும் இப்போதும் நிகழ்த்தி வருகிறார் என்றும் சொல்கிறார்கள்.
புன்னை நல்லூர் மாரியம்மன் அனைவருக்கும் அனைத்து நலன்களையும் அருள வேண்டும்.
இந்த பதிவுடன் தொடர் பதிவு நிறைவு பெறுகிறது.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
எப்போதோ பழையதாக இருக்கும்போது சென்ற கோவில். இவ்வளவு மாற்றங்கள் வந்தபின் சென்றதில்லை. அல்லது எங்கோ சென்று திரும்பும் வழியில் அவசரமாக ஒருமுறை சென்று தரிசனம் செய்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//எப்போதோ பழையதாக இருக்கும்போது சென்ற கோவில். இவ்வளவு மாற்றங்கள் வந்தபின் சென்றதில்லை. அல்லது எங்கோ சென்று திரும்பும் வழியில் அவசரமாக ஒருமுறை சென்று தரிசனம் செய்திருக்கிறேன்//
.
நாங்களும் நிறைய முறை பார்த்து இருக்கிறோம், அப்போது காமிரா, அலைபேசி எல்லாம் கிடையாது. எப்போதும் புன்னை நல்லூர் அம்மனை மதிய வேளையில் அவசரம் அவசரமாகத்தான் வணங்கி இருக்கிறோம். இருட்டுமுன் மயிலாடுதுறை போக வேண்டும் என்பார்கள் கார் சாரே ஓட்டுவதால்.
மண்டபகங்களின் தரைகள் கோவில் போல இல்லாமல் ஆடம்பரமாக கட்டட பாணியில் உள்ளது. காணொளி கண்டு ரசித்தேன்.
பதிலளிநீக்கு//மண்டபகங்களின் தரைகள் கோவில் போல இல்லாமல் ஆடம்பரமாக கட்டட பாணியில் உள்ளது. காணொளி கண்டு ரசித்தேன்.//
நீக்குதரை நன்றாக இருக்கிரது, ஆனால் கவனமாக நடக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஎனது தளத்தில்
இன்றொரு பாட்டு சமயபுரத்தாளுக்கு..
இன்று முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை சமயபுரத்தாள பச்சைப் பட்டினி விரதம்..
இங்கே தஞ்சை மாரியம்மனின் தரிசனம்..
ஆகா!..
வணக்கம் சகோ துரை செல்வாராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குசமயபுரத்தாளுக்கு நீங்கள் பாடிய பாட்டை பாடி சமயபுரத்தாளை தரிசனம் செய்து வந்து விட்டேன் .
மக்களை காப்பாற்ற அன்னை இருக்கும் விரதம் அறிந்தேன்.
இள்நீர், தூள்மாவு, பானகம் மட்டுமே அருந்தி விரதம் இருப்பது அறிந்தேன். அன்னை மக்களை காப்பற்ற வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மாரியம்மா எங்கள் மாரியம்மா... உன்னை வணங்கிறோம் கருமாரியம்மா பாடல் மனதுக்குள் ஓடியதால் வந்தேன். பிறகு கருத்திடுகிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//மாரியம்மா எங்கள் மாரியம்மா... உன்னை வணங்கிறோம் கருமாரியம்மா பாடல் மனதுக்குள் ஓடியதால் வந்தேன். பிறகு கருத்திடுகிறேன்.//
அருமையான எல்.ஆர். ஈஸ்வரி பாடல். மாரியம்மன் கோவில் விழாக்களில் ஒலிக்கும் பாடல்.
வாங்க .
மிக அருமையான தரிசனம் கிடைத்தது.
பதிலளிநீக்குபடங்கள் வழக்கம் போல அழகு. கோயில் விவரங்கள் நன்று.
வாழ்க வையகம்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//மிக அருமையான தரிசனம் கிடைத்தது.
படங்கள் வழக்கம் போல அழகு. கோயில் விவரங்கள் நன்று.
வாழ்க வையகம்.//
உங்கள் கருத்துக்கு நன்றி.
விசாலமாக உள்ளது கோவில். சக்தி வாய்ந்த அம்மனை வழிபட்டு அடுத்தடுத்த சுற்றுகளைக் கட்டியிருக்கின்றனர் மன்னர்கள்.
பதிலளிநீக்குஓவல் வடிவிலான பெரிய தூண் வித்தியாசமாக உள்ளது. மண்டபங்களையும் பிரகாரங்களையும் அழகான கோணத்தில் படமாக்கி உள்ளீர்கள். தகவல்களுக்கு நன்றி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//விசாலமாக உள்ளது கோவில். சக்தி வாய்ந்த அம்மனை வழிபட்டு அடுத்தடுத்த சுற்றுகளைக் கட்டியிருக்கின்றனர் மன்னர்கள்.//
ஆமாம், அம்மன் கருணையால் பெற்றவர்கள் அன்னைக்கு திருப்பி செய்து இருக்கிறார்கள்.
//ஓவல் வடிவிலான பெரிய தூண் வித்தியாசமாக உள்ளது. மண்டபங்களையும் பிரகாரங்களையும் அழகான கோணத்தில் படமாக்கி உள்ளீர்கள். தகவல்களுக்கு நன்றி.//
இந்த பதிவிலும், மகன் எடுத்த படங்கள் என் படங்கள் என்று இடம் பெற்று இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
முதல் படமே கோபுரம்! கோபுரங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அழகாக இருக்கு
பதிலளிநீக்குகோயில் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் கோ௳திக்கா.
பெரிய மண்டபம் ஆஹா என்ன அழகு! உள்ளே போகும் வாசல் நீளமான பாதையாக ...இரு பக்கமும் பெரிய குண்டான தூண்களுடன் இடையே திண்ணை போன்ற அமைப்புடன் அழகு.
கோயில் பற்றிய வரலாறும், மண்டபங்கள் படமும் அருமை...
கீதா
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//முதல் படமே கோபுரம்! கோபுரங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அழகாக இருக்கு//
எனக்கும் கோபுரம் பிடிக்கும் முதலில் கண்ணை கவருவது ராஜ கோபுரம்தான்.
//பெரிய மண்டபம் ஆஹா என்ன அழகு! உள்ளே போகும் வாசல் நீளமான பாதையாக ...இரு பக்கமும் பெரிய குண்டான தூண்களுடன் இடையே திண்ணை போன்ற அமைப்புடன் அழகு.//
ஆமாம், மக்கள் ஓய்வு எடுக்கிறார்கள் அந்த திண்ணையில் சில இடங்களில் கம்பி தடுப்பு இருக்கிறது.
//கோயில் பற்றிய வரலாறும், மண்டபங்கள் படமும் அருமை...//
நான் கொடுத்து இருக்கும் வரலாற்று குறிப்பு கொஞ்சம் தான். நீண்ட வரலாறு இருக்கிறது கீதா.
காணொளியை ரசித்தேன், கோமதிக்கா. அதில் வரும் திருக்குளம் அழகா இருக்கு. கோயில்களின் அழகே கோபுரம், திருக்குளம், சிற்பங்கள் தூண்கள் மண்டபங்கள் என்று...
பதிலளிநீக்குவாத்துகள் இருக்கும் படித்துறையுடன் அந்தக் குளம் ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறதோ? ஓ வெல்லம் கரைத்துவிடுவதால் இப்படி இருக்கோ?
//எதிரில் தெரிவது ராஜஸ்ரீ இராஜராம் திருமண மண்டபம் என்று பேர் போட்டு இருக்கிறது//
ஓ அது திருமணமண்டபமா? தூண்கள் சுற்றிலும் நடுவில் திறந்தவெளி அழகான தரையுடன்....பெரிய திருமணமே நடத்தலாம் போல....அருமையா இருக்கு
இந்தப் படத்தின் கீழே கோபுர வடிவில் உள்ள சிற்பங்கள் செமையா இருக்கு
அதற்கும் கீழே பிராகாரம் சுற்றும் பகுதியா அது...ஏதோ அரண்மனை போன்று கட்டப்பட்டிருக்கறாதாகத் தெரிகிறது. மழையில் ஈரத்துடன் ....
படங்களும் தகவல்களும் சிறப்பு, கோமதிக்கா
ரசித்தேன்..
கீதா
காணொளியை ரசித்தேன், கோமதிக்கா. அதில் வரும் திருக்குளம் அழகா இருக்கு. கோயில்களின் அழகே கோபுரம், திருக்குளம், சிற்பங்கள் தூண்கள் மண்டபங்கள் என்று...//
நீக்குஆமாம் கீதா காணொளியில் வரும் திருக்குளம் அழகு. கொட்டைகை போட்டு கோபுர அழகை முழுமையாக இப்போது எடுக்க முடிவது இல்லை.
//வாத்துகள் இருக்கும் படித்துறையுடன் அந்தக் குளம் ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறதோ? ஓ வெல்லம் கரைத்துவிடுவதால் இப்படி இருக்கோ?//
தெரியவில்லை, பயன்பாடு இல்லை என்றாலும் குளத்திற்கு புது தண்ணீர் வரவில்லை என்றாலும் இப்படி இருக்கலாம். வெல்லமும் அளவுக்கு அதிகமாக கரைக்கப்படும் போது இப்படி ஆகுமோ தெரியவில்லை.
//ஓ அது திருமணமண்டபமா? தூண்கள் சுற்றிலும் நடுவில் திறந்தவெளி அழகான தரையுடன்....பெரிய திருமணமே நடத்தலாம் போல....அருமையா இருக்கு//
ஆமாம், நல்ல வசதியாக இருக்கிறது.
//இந்தப் படத்தின் கீழே கோபுர வடிவில் உள்ள சிற்பங்கள் செமையா இருக்கு
அதற்கும் கீழே பிராகாரம் சுற்றும் பகுதியா அது...ஏதோ அரண்மனை போன்று கட்டப்பட்டிருக்கறாதாகத் தெரிகிறது. மழையில் ஈரத்துடன்//
ஆமாம் , மழை இல்லாமல் இருந்து இருந்தால் ஒன்று விடாமல் வலம் வந்து இருப்பேன். கிடைத்தவரை பார்த்த மன நிறைவுடன் அம்மனை வணங்கி வந்து விட்டோம்.
அனைத்தையும் ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
இரண்டு மாரியம்மனின் தரிசனமும் கிடைத்தது. சமயபுரம் போனவருஷம் போய் வந்தோம். புன்னை நல்லூருக்கு எப்போவோ ஒரு முறை போனோம். சரியாக நினைவில் இல்லை. இவ்வளவு கட்டிடங்களோடும் டைல்ஸ் தரையுடனும் பார்த்த நினைவும் இல்லை. இங்கே போயிட்டுத் தான் பங்காரு காமாட்சியைப் பார்த்தோம் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குஇரண்டு மாரியம்மனின் தரிசனமும் கிடைத்தது. சமயபுரம் போனவருஷம் போய் வந்தோம். புன்னை நல்லூருக்கு எப்போவோ ஒரு முறை போனோம். //
தஞ்சை போகும் போது எல்லாம் அம்மனை தரிசனம் செய்து இருக்கிறோம். முன்பு சாரின் அண்ணா தஞ்சையில் இருந்தார்கள். அவர்கள் எல்லா கோவில்களுக்கும் அழைத்து சென்றார்கள். அப்போதும் பார்த்து இருக்கிறோம்.
//சரியாக நினைவில் இல்லை. இவ்வளவு கட்டிடங்களோடும் டைல்ஸ் தரையுடனும் பார்த்த நினைவும் இல்லை. இங்கே போயிட்டுத் தான் பங்காரு காமாட்சியைப் பார்த்தோம் என நினைக்கிறேன்.//கட்டிடங்கள் பழையதுதான், டைல்ஸ் மட்டும் புதிது என்று நினைக்கிறேன்.
பங்காரு காமாட்சியை பார்த்த நினைவு இல்லை. எட்டுதிசையிலும் சக்தி கோவில்களை சோழர்கள் தங்கள் ஊரை காக்க கட்டினார்கள் என்று வரலாறு சொல்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கோயிலில் பக்கவாட்டில் இருந்த மண்டபத்தை தற்போது இடித்து விட்டார்கள்.. திருப்பணிக்காக வெளிப் பிரகாரத்தையும் அடைத்து விட்டார்கள்..
பதிலளிநீக்குதரையில் தளவரிசை எல்லாம் பழைய காலத்தைச் சார்ந்தவை..
//கோயிலில் பக்கவாட்டில் இருந்த மண்டபத்தை தற்போது இடித்து விட்டார்கள்.. திருப்பணிக்காக வெளிப் பிரகாரத்தையும் அடைத்து விட்டார்கள்..//
நீக்குஓ அப்படியா! நாங்கள் போக நினைத்து இருந்தாலும் வெளிப்பிரகாரத்தை பார்த்து இருக்க முடியாதா?
அதுதான் நான் நினைத்தேன், திண்ணையில் மட்டும் மார்பிள் புதுசாக போட்டு இருக்கிறார்கள். தல வரலாறு பலகை உள்ள திண்ணையில் பார்த்தால் தெரியும்.
சனிக்கிழமை இரவுகளில் இரண்டாம் பிரகார மண்டபத்தில் நூற்றுக் கணக்கான மக்கள்
பதிலளிநீக்குஉடல் நலத்துக்காக நேர்ந்து கொண்டு தூங்குவார்கள்..
நானும் தூங்கியிருக்கின்றேன்..
இங்கே அம்பாளின் திருவிளையாடல்கள் எண்ணற்றவை..
//சனிக்கிழமை இரவுகளில் இரண்டாம் பிரகார மண்டபத்தில் நூற்றுக் கணக்கான மக்கள்
நீக்குஉடல் நலத்துக்காக நேர்ந்து கொண்டு தூங்குவார்கள்..//ஆவணி ஞாயிறு அப்படி எங்கள் குடும்ப நண்பர் தூங்கியதாக சொல்லி இருக்கிறார். (கண் நோய் நீங்க )
நீங்கள் சனிக்கிழமை இரவு என்று சொல்கிறீகள்.
அம்மன் பல அற்புதங்களை நடத்தி இருப்பதாக இன்னும் நடத்தி கொண்டு இருப்பதாக அறிகிறேன்.
நீங்களும் சொல்லி விட்டீர்கள். மக்களின் மன நோய், உடல் நோயை போக்க வேண்டும். மனம் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள், அல்லது உடல் நோயால் துன்பபடுகிறார்கள்.
அதை போக்கி கொள்ள மனபலத்தை கடவுள் கொடுக்க வேண்டும்.
மீண்டும் வந்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி சகோ.
ஞாயிற்றுக் கிழமை தான் ... ஞாயிற்றுக் கிழமை தான்...
நீக்குநான் தவறாக எழுதி விட்டேன்... ஞாயிறு இரவு கோயிலில் தூங்கி திங்கள் விடியலில் அம்பாள் தரிசனம் செய்து விட்டு வீடு திரும்புவர்..
முத்தழகு சிறுகதை இதன் அடிப்படையில் தான்...
பிழைபட சொல்லியதற்கு அன்னை மன்னிப்பாளாக!..
நீக்கு//நான் தவறாக எழுதி விட்டேன்... ஞாயிறு இரவு கோயிலில் தூங்கி திங்கள் விடியலில் அம்பாள் தரிசனம் செய்து விட்டு வீடு திரும்புவர்..//
ஞாயிறு சொன்னது நல்லது.
மறந்து போய் தவறி சொன்னதற்கு எதற்கு மன்னிப்பு.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
தஞ்சையின் கிழக்கு எல்லையில் இருந்து மாரியம்மன் கோயில் வரைக்கும் ஐந்து கிமீ தூரத்திற்கு சமுத்திரம் ஏரி.. மன்னர் குடும்பத்தினர் அங்கிருந்து கோயிலுக்கு படகில் வருவார்களாம்..
பதிலளிநீக்குஇன்று குட்டை போல் ஆக்கி விட்டார்கள்.. கோயிலுக்கு வெளியே படகுத்துறை யும் சிறியதாக ஓய்வு மாளிகையும் இருக்கின்றன..
ஓய்வு மாளிகை பாழடைந்து விட்டது.. படகுத்துறை காணாமல் போய் விட்டது..
//தஞ்சையின் கிழக்கு எல்லையில் இருந்து மாரியம்மன் கோயில் வரைக்கும் ஐந்து கிமீ தூரத்திற்கு சமுத்திரம் ஏரி.. மன்னர் குடும்பத்தினர் அங்கிருந்து கோயிலுக்கு படகில் வருவார்களாம்..//
நீக்குஆஹா! நினைக்கவே நன்றாக இருக்கிறது.
//இன்று குட்டை போல் ஆக்கி விட்டார்கள்..//
ஆமாம், குட்டை போல தான் இருக்கிறது.
// கோயிலுக்கு வெளியே படகுத்துறை யும் சிறியதாக ஓய்வு மாளிகையும் இருக்கின்றன..
ஓய்வு மாளிகை பாழடைந்து விட்டது.. படகுத்துறை காணாமல் போய் விட்டது..//
அரசர்கள் பரம்பரை மக்கள் கஷ்டபடுகிறார்கள் அப்புறம் அவர்கள் மாளிகையை யார் புதுப்பிக்க போகிறார்கள். தஞ்சாவூர் அரண்மனைக்கு முன்பு சாரின் அண்ணாவுடன் போய் மன்னருடன் தேநீர் அருந்தி இருக்கிறோம் . காலத்தின் மாற்றங்கள்.
மேலும் செய்திகளுக்கு நன்றி.
சமீபத்தில் சென்று வந்தோம்...
பதிலளிநீக்குபடங்கள் அற்புதம் அம்மா...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//சமீபத்தில் சென்று வந்தோம்...
படங்கள் அற்புதம் அம்மா...//
ஓ அப்படியா நல்லது.
உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. புன்னை மாரியம்மன் அன்னையை மனங்குளிர தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் அனைத்தும் அருமையாக எடுத்துள்ளீர்கள்.
மண்டப அழகு மிகவும் நன்றாக உள்ளது. பெரிய தூண்கள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது. திருக்குளம் மற்ற படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளது. இன்று காலையிலேயே சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களின் பதிவில், அன்னை சமயபுர மாரியம்மனையும் தங்கள் பதிவில் அன்னை புன்னை மாரியம்மனையும் கண்டு தரிசனம் செய்து கொண்டேன். கருத்து இடுவதற்குள் மதியம் கொஞ்சம் குழந்தைகளுடன் வெளியில் செல்ல வேண்டி இருந்ததினால், சென்று விட்டு இப்போதுதான் திரும்பினோம். அதனால் தங்கள் பதிவுக்கு வரத் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.
நாங்களும் சென்ற தடவை மகன் வந்திருக்கும் போது, குடும்பத்துடன் ஸ்ரீ ரங்கம் செல்லும் போது, இந்தக் கோவிலுக்கும் சென்று விட்டு திரும்பினோம். ஒரு சில படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் உங்களைப் போல நல்ல அழகாக ஒவ்வொரு இடத்தையும் எடுக்கவில்லை. பதிவும் எழுத இயலவில்லை. அந்த திருக்குளத்தைக்கூட பார்க்கவில்லை. அவசரமாக சென்று திரும்பினோம். இன்னொரு தடவை சமயம் வாய்த்து அன்னை அழைத்தால், நன்றாக தரிசனம் செய்து வரலாம். பதிவை நல்ல லிபராக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்..
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமையாக உள்ளது. புன்னை மாரியம்மன் அன்னையை மனங்குளிர தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் அனைத்தும் அருமையாக எடுத்துள்ளீர்கள்//
நன்றி. மகனும், நானும் எடுத்தோம் படங்கள்.
//மண்டப அழகு மிகவும் நன்றாக உள்ளது. பெரிய தூண்கள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது. திருக்குளம் மற்ற படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளது. இன்று காலையிலேயே சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களின் பதிவில், அன்னை சமயபுர மாரியம்மனையும் தங்கள் பதிவில் அன்னை புன்னை மாரியம்மனையும் கண்டு தரிசனம் செய்து கொண்டேன்.//
நல்லது.
// கருத்து இடுவதற்குள் மதியம் கொஞ்சம் குழந்தைகளுடன் வெளியில் செல்ல வேண்டி இருந்ததினால், சென்று விட்டு இப்போதுதான் திரும்பினோம். அதனால் தங்கள் பதிவுக்கு வரத் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.//
நிறைய தடவை சொல்லி இருக்கிறேன் மன்னிப்பு எல்லாம் வேண்டாம். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது முக்கியம்.
//நாங்களும் சென்ற தடவை மகன் வந்திருக்கும் போது, குடும்பத்துடன் ஸ்ரீ ரங்கம் செல்லும் போது, இந்தக் கோவிலுக்கும் சென்று விட்டு திரும்பினோம். ஒரு சில படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் உங்களைப் போல நல்ல அழகாக ஒவ்வொரு இடத்தையும் எடுக்கவில்லை. பதிவும் எழுத இயலவில்லை. அந்த திருக்குளத்தைக்கூட பார்க்கவில்லை. அவசரமாக சென்று திரும்பினோம். இன்னொரு தடவை சமயம் வாய்த்து அன்னை அழைத்தால், நன்றாக தரிசனம் செய்து வரலாம். பதிவை நல்ல லிபராக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
நீங்கள் போய் வந்தது அறிந்து மகிழ்ச்சி. நீங்கள் எடுத்த படங்களை பதிவில் போடுங்கள்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
புன்னை நல்லூர் மாரியம்மன் அருமையான தரிசனம் மிக அழகான படங்களுடன் . நன்றி மா.
பதிலளிநீக்குஇதுவரை போனதில்லை பார்ப்போம் அடுத்தமுறை அம்பாளை காண முடியுமா என்று ...
அந்த பெரிய பெரிய தூண்கள் கண்களை கவர்கின்றன. அற்புதம்
வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்கு//இதுவரை போனதில்லை பார்ப்போம் அடுத்தமுறை அம்பாளை காண முடியுமா என்று ...
அந்த பெரிய பெரிய தூண்கள் கண்களை கவர்கின்றன. அற்புதம்//
வாய்ப்பு கிடைக்கும் போது போய் வாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஒரு முறை சென்றதுண்டு. நிறைய மாற்றங்கள்..... படங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. படங்கள் எடுக்கப்பட்ட கோணங்கள் சிறப்பாக இருந்தது.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஒரு முறை சென்றதுண்டு. நிறைய மாற்றங்கள்..... படங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.//
நன்றி.
படங்கள் எடுக்கப்பட்ட கோணங்கள் சிறப்பாக இருந்தது.//
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி வெங்கட்.