திங்கள், 30 ஜூலை, 2018

ஸ்ரீ வெயில் உகந்த அம்மன் கோவில்

15.7. 2018 அன்று தென்பரங்குன்றத்தில் கல்வெட்டு குகைகோவிலைப் (சமணச் சின்னம்)  பார்த்து விட்டு வரும்போது திருப்பரங்குன்றம் ரயில்நிலையம் அருகில் இந்த அம்மன் கோவிலைப் பார்த்தோம். 

வெள்ளி, 27 ஜூலை, 2018

ஆடி மாதம் அம்மனுக்குத் திருவிழா

சங்கரன் கோவில் திருவிழா 17 ஆம் தேதி (17.7.2018) தொடங்கியது.  நாங்கள் அடுத்த நாள் 18ம் தேதி புதன் கிழமை சென்று வந்தோம்.  என் தங்கைகள் அண்ணி எல்லோரும் ஆடித்தபசு சமயம் வருடா வருடம் செல்வார்கள் ஒவ்வொரு வருடமும் அழைப்பார்கள். இந்த முறை வாய்ப்பு கிடைத்தது அன்னையின் அருளால்.

சனி, 21 ஜூலை, 2018

தென்பரங்குன்றம் - பகுதி 2

அடுத்து நாங்கள்  வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் போனபோது அங்கு ஒரு விழா நடந்தது அது என்ன விழா யார் யாருக்கு நடத்தியது என்பதை அடுத்த பதிவில். என்று சொல்லி இருந்தேன். போகும் வழியில் பூத்துக் குலுங்கும் மரங்கள், பூங்கா, மலை அழகு  எல்லாம் பார்த்து விட்டு விழாவிற்குப் போவோம்.
தென்பரங்குன்றம் முந்திய பதிவு படிக்க.

திங்கள், 16 ஜூலை, 2018

தென்பரங்குன்றம்

"பசுமை நடை" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம்.
திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது.

திங்கள், 9 ஜூலை, 2018

சில நினைவுகள்.

 Grand Canyon போகும் முன்   Holbrook என்னும் இடத்தில் உள்ள  தங்கும்  விடுதியில் தங்கினோம். கல்லாகிப் போன மரங்கள் உள்ள தேசிய பூங்கா இந்த ஊருக்குப் பக்கம் இருக்கிறது, அமெரிக்கப் பூர்வீகக் குடிமக்கள்  இருந்த இடங்கள், அவர்கள் இருந்த வீட்டின் அமைப்பு, அவர்களுடைய கைவினைப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள்  இங்கு தங்கிப் போவார்கள். நாங்களும் இங்கு தங்கி, இந்த இடத்தை ரசித்துப் பார்த்துப் பின் தேசிய பூங்காவிற்குப் போனோம். 

வியாழன், 5 ஜூலை, 2018

ஜன்னல் வழியே




புள்ளிச்சில்லை குருவி.

எங்கள் குடியிருப்பு வளாகத்திற்கு வந்த புதுவரவு.



ஏற்கனவே  எங்கள் வளாகத்தில் இருக்கும்  சிட்டுக் குருவி மிக வேகமாய் சத்தம் கொடுத்தது. என்ன என்று எட்டிப் பார்த்தால் புதுவகையான சிட்டுக்குருவிகள் எதிர்வீட்டுப் பால்கனியில் உட்கார்ந்து இருந்தது, அழகாய் இருந்தது,  அதைப்பார்த்து இந்த சிட்டுக்குருவி சத்தம் கொடுத்தது.

செவ்வாய், 3 ஜூலை, 2018

சொல்லுங்கள் பார்ப்போம்- பதிவு இரண்டு


நேற்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று  ஒரு பதிவு போட்டுக் கேட்டு இருந்தேன் ஒரு கேள்வி . இன்று சொல்வதாய்ச் சொல்லி இருந்தேன். அதன் விடை  - அஞ்சறைப் பெட்டி.

வாழ்க்கைக்குத் தேவையான பெட்டி முன்பு  என்றேன்  ஏன் என்றால் இப்போது யாரும் இந்தப் பெட்டியில் வைத்துக் கொள்வது இல்லையே! அதுதான்.

திங்கள், 2 ஜூலை, 2018

சொல்லுங்கள் பார்ப்போம்

Image may contain: indoor



No automatic alt text available.

இது என்ன பெட்டி என்று தெரிந்தவர் சொல்லுங்கள்.
விடை நாளை

மந்திரப் பெட்டியா?
தந்திரப் பெட்டியா?
வாழ்க்கைக்குத் தேவையான பெட்டி முன்பு.

வாழ்க வளமுடன்.