செவ்வாய், 12 ஜூலை, 2016

சுதந்திரப் போராட்ட வீரர்- வீரன் அழகு முத்துக்கோன்


சுதந்திரத்திற்காக எத்தனை எத்தனை வீரர்கள் முன்பு பாடுபட்டு இருக்கிறார்கள். அவர்களில்  வீரன் அழகுமுத்துகோன் அவர்களும் ஒருவர் என்பதைத் திருநெல்வேலிக்குப் போகும் பாதையில் இருக்கும்  அவர்களது நினைவு மண்டபத்தில் உள்ள வரலாற்றைப் படித்து தெரிந்து கொண்டோம்.  

,கோவில்பட்டி  - திருநெல்வேலி  நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக  5 கி.மீ . தொலைவில் காட்டாங்குளம் கிராமம் உள்ளது.


அழகான தோரணவாயில்



போகும் பாதையில் வெகு தூரத்திற்கு ஆள் அரவம் இல்லை. இரண்டு பக்கமும்  தரிசு நிலங்கள்

வீரன் அழகு  முத்துகோன்  நினைவு இல்ல வாயில்
நினைவு கல்வெட்டு

ஓவியம்
இளைய சமுதாயத்தினரும்  தெரிந்து கொள்ள வேண்டிய வீரர்களது  வாழ்க்கை வரலாறு.



வீரன் அழகு முத்துக்கோன் வீர வரலாறு
வீரத்தோற்ற சிலை

நினைவு இடத்திற்கு  போன வருடம்  ஜூன் மாதம் சென்று வந்தோம் நினைவு இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் , சென்ற வருடம் முகநூலில் பகிர்ந்து இருந்தேன்.

”இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகு முத்து கோன்   என்ற தலைப்பில் முனைவர் கே. கருணாகரப்பாண்டியன் வரலாற்று ஆய்வாளர் அவர்கள் எழுதி இருந்த கட்டுரை நேற்றைய தினமலரில் வந்துள்ளது..

                                                                           
            

இவரது கட்டுரையைப் படித்தவுடன் நேற்றே பதிவிட வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய் விட்டது.

 நேற்று அவரது பிறந்த நாளில்  பதிவிட முடியவில்லை. நெட் வேலை செய்யவில்லை. விட்டு விட்டு வந்தது ஓர், இரு படம் ஏற்றினேன் அப்புறம் நெட் முழுமையாக நின்று விட்டது. நேற்று இடம்பெறத் திருவுள்ளம் இல்லை என்று விட்டுவிட்டேன். 

என் கணவர் மொபைல் பார்ட்னர் முன்பு வைத்து இருந்தார்கள் அதில் கொஞ்சம் நெட் இருக்கும் போட்டுப் பார் என்றார்கள் இன்று . பின் அதன் மூலம் பதிவு ஏற்றி விட்டேன் வெற்றிகரமாய்.

 வீரன் அழகு முத்துகோன் அவர்களுக்கு மனதார வீரவணக்கம் செய்யலாம் .

வருகைப் பதிவேட்டில் என் கணவர் கையெழுத்திட்டார்கள்

நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் வழியில் உள்ள தோரணவாயிலின் அருகே ’சரவணபவன்’ ஓட்டல் இருக்கிறது.
                                                                வாழ்க வளமுடன்
                                                                       ----------------------


சனி, 9 ஜூலை, 2016

ஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில்

மதுரையிலிருந்து 15 கி.மீ தூரத்தில், அழகர் கோவிலுக்கு இரண்டு கி.மீபக்கத்தில் இருக்கிறது இந்த ஸ்ரீ பத்திரி நாராயணர் கோவில்.

வேப்பமரத்தின் நிழலில் அழகான மண்டபம்.


 
வடக்கில் உள்ள பத்ரிநாத் ஸ்தல பெருமை  சொல்கிறது  

 

திருமங்கையாழ்வாரின்  பாடல்களும்,  வடக்கில் உள்ளது போல் இங்கு அமைக்க பட்டதற்கு காரணமும் எழுத பட்டு இருக்கிறது.

மூலவர்  ஸ்ரீ பத்ரி நாராயணருக்கு  இலந்தைமரமாக வடிவெடுத்து நிழல் கொடுத்த வரலாறு. 


மூலவர் இருக்கும் விமானம்   இலந்தை மர நிழலில் 
இலந்தை மரம் லட்சுமி  அல்லவா ?அவரை வலம் வந்து வணங்க சொன்னார் பட்டர்.
இலந்தை இலை தெரிகிறதா?

சிறு மண்டபத்தின் உள்ளே நாமம்  தெரிவது பண்டரி நாதர் பக்கத்தில் இருப்பது ருக்மணி.

இந்த கோவில் கட்டியவர் காசி போனபோது கங்கையில் நீராடிய போது அவர் கையில் தட்டுப்பட்டதாம்  ஒரு கல்  அவர்  இந்த கல்லை என்ன செய்வது என்று சான்றோர்களை கேட்டபோது உன் கோவிலில் வை என்று உத்தரவு வந்ததாம்.   அப்போது அவர் கோவில் கட்டவில்லை.
அதன் பின் சிறு மண்டபத்தில் பண்டரிநாதராகவும், ருக்மணி தாயாராகவும் வழி பட்டு வந்து இருக்கிறார்.  அதன் பின்  ஸ்ரீ பத்ரி நாராயணர் கோவில் கட்டிய பின்  முன் புறம் ஸ்ரீ பத்ரி நாராயணரும், பின்புறம் இலந்தைமரமும் வைத்து இருக்கிறார்.

                 

ஸ்ரீபத்ரி நாராயணரை சுற்றி வந்து வணங்குவதற்கு சின்ன பிரகாரம் உள்ளது. அதில் துளசி, மஞ்சள், பச்சை கனகாம்பர செடிகள் வளர்ந்து அழகாய் காட்சி அளிக்கிறது. இலந்தை மரத்தின் நிழல் விழுந்து இருப்பதால் உங்களுக்கு  துளசி செடி மட்டும் தெரியும். இந்த படத்தில்.
விநாயகர் சிலை பெரிதாக தனி சன்னதியில் இருக்கிறார். அரசும், வேப்பும் முன்புறம் இருக்கிறது. விநாயகருக்கு கீரீடம்,  மற்றும் கவசங்கள் தங்கம் போல் மின்னியது .


அரசும், வேம்பும்

மண்டப வாசலை தாண்டி உள்ளே  சிலபடிகள் ஏறி போனால் சின்ன கருடாழ்வார் நடுவில் இருக்கும் ஸ்ரீ பத்ரி நாராயணரை வணங்கியபடி இருக்கிறார். அப்புறம் இடது புறம் முதலில் அழகான அனுமன்.

அடுத்து  அரவிந்தவல்லி தாயார் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார் பட்டர். அடுத்து ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் மண்டியிட்ட தோற்றத்தில் இருக்கிறார்.  முன்புறம் அழகான உற்சவ விக்கிரங்கள். கண்கவர் அழகு.

மூலவர்  வடநாட்டில் உள்ள பத்ரிநாராயணரை விட பெரிது. வடநாட்டில்  உள்ள பத்ரிநாராயணரை கஷ்டபட்டு பயணம் செய்து  போய் கருவரையில் இருக்கும் பத்ரிநாராயணரை வரிசையில் நின்று சாமி பக்கத்தில்   போய் தரிசிக்கும்   போது கைபிடித்து இழுத்து நகர சொல்லிவிடுவார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை பட்டர்  நமக்கு  உள்ளே யார் யார் இருக்கிறார்கள் என்பதை அழகாய் விளக்கி தீபத்தை காட்டி விளக்கினார். பக்கத்தில் பார்க்கலாம் .   பத்ரி நாதர் கண் மூடிய நிலையில் தியானத்தில்  இருக்கிறார்.  வலது பக்கம் குபேரன், கைகூப்பிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இடது புரம் நரநாராயணர்கள் , கீழே எப்போது நாராயண நாமம் சொல்லிக் கொண்டே இருக்கும் நாரதர்,  கருடன், கண்ணனின் பரம பக்தர் உத்தவர் பஞ்சலோக சிலைகள் அழகாய் இருப்பதை காட்டினார். 

வலது புறம் சங்கரர்  இருக்கிறார்.  உற்சவ விக்கிரங்களை வைக்க இருப்பிடங்கள் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.(பத்திரபடுத்த).

அமைதியான அழகான கோவில். வயதான பட்டர் எங்கு இருந்து வருகிறீர்கள் என்று கேட்டு கதைகளை சொல்லி  பிரசாதங்கள் கொடுத்தார்,

ஆங்கில மாத முதல் ஞாயிறும், தமிழ் மாதம் முதல் ஞாயிறும் மாலை பஜனை உண்டாம் அப்போது மட்டும் கோவில் எட்டுமணிக்கு மேல் வரை திறந்து இருக்கும்.  மற்ற நாட்களில்  இரவு 7.30க்கு எல்லாம்  நடை சாற்றப்படும்.


நாங்கள் வடநாட்டில் உள்ள ஸ்ரீ பத்ரி நாராயண கோவில் பத்ரிநாத்  தரிசனம் செய்ததைப்பற்றி எழுதிய பதிவின் சுட்டி. விரும்பினால் நேரம் இருந்தால் படிக்கலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

                                                             வாழ்க வளமுடன்.

புதன், 6 ஜூலை, 2016

பட்டமங்கலம் அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோவில்

 பட்டைமங்கை என்று இருந்த ஊர் இப்போது பட்டமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. அங்கு அருள் செய்யும் தட்சிணா மூர்த்தியின் வரலாறு.

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் மட்டுமே  கிழக்கு   நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். வேறு எங்கும் கிடையாது.


கோபுர வாயில்

சிவன் சன்னதியும், தட்சிணா மூர்த்தி சன்னதியும்
சிவன் சன்னதியில்  உள்ளே தூண்களில்  அழகிய  சிலைகள், கஜசம்ஹார மூர்த்தி.
                                                     கண்ணப்பர் வரலாறு
                                                      சிவன் ரிஷபத்துடன்

மயில் மீது ஆறுமுகன், 

                                                        வில்லேந்திய ராமன்
                                            சஞ்சீவி மலையுடன் அனுமன்
சிவதனுசுடன் ராமர்
மேல் விதானத்தில் அழகான தட்சிணா மூர்த்தி , சனகாதி முனிவர்கள்
தட்சிணா மூர்த்தி ஆலமரத்தின் அடியிலிருந்து அருள்பாலிக்கும் இடம்.
தண்ணீர் இல்லா திருக்குள நீராழி மண்டபம்
ஐயப்பன் சன்னதி. வாசலில் இருமருங்கும் சுதை ச்சிற்பம்
காளி அம்மன் , சுதைச்சிற்பங்கள், தட்சிணா மூர்த்தி சனகாதி முனிவர்கள் - கம்பித் தடுப்புக்குள்
அரளி மரத்தின் கீழ் நிறைய இது போன்ற சுதைச் சிற்பங்கள்

தலவிருட்சம் ஆலமரம் -அதன் கீழ் கார்த்திக்கைப் பெண்கள் அறுவர்.
சுற்றி வர வேலி போட்டு இருக்கிறார்கள் ஆலமரத்தின் விழுதுகள் நிறைய  பெரிய மரத்தைத் தாங்கி நிற்கிறது. பரந்து விரிந்து இருக்கிறது மரம்.

வாழ்க வளமுடன்
-------------