வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

வரலெட்சுமி, வருவாய் அம்மா!


பழைய பாடல் ராதா ஜெயலட்சுமி பாடிய  'வரலெட்சுமி வருவாய் அம்மா திருமாலின் தேவி கடைக்கண் பாரம்மா ' என்ற  பாடல் எங்கள் வீட்டு கேஸட்டில் இருக்கிறது.  முன்பு வானொலியில் வைக்கும் பாட்டை வீட்டில் கேஸட்டில் பதிவு செய்து வைத்து இருந்தது. அதை இன்று கேட்டேன். மிக நன்றாக இருக்கும், ஒவ்வொரு வரலெட்சுமி பண்டிகை  அன்றும் கேட்டு மகிழ்வோம், வீட்டில் பூஜை செய்யும் போது போட்டுக் கேட்போம். இங்கு பகிரலாம் என்று தேடினால் கிடைக்கவில்லை அந்தப் பாடல் . ஆனால் அந்த பாடலை  இவர் பாடியது கிடைத்தது.  அமைதியாக அழகாகப் பாடுகிறார்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே!

வெள்ளிக்கிழமையிலே அம்மா உன் வாசலிலே

எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும்  ஐயனார் கோவிலில் இருக்கும் அம்மன்களுக்கு ஆடி வெள்ளிக்கிழமை ஒவ்வொரு வாரமும் கஞ்சி வார்த்தல், கூழ் வார்த்தல் நடை பெறும். இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறப்பான பூஜை நடைபெற்றது.

வெள்ளி, 26 ஜூலை, 2019

அம்பா கருணைபுரிவாய்


குழந்தைகளுக்குப் பிள்ளையாரும், முருகனும்  சிறு வயதில் மிகவும் பிடிக்கும்.  சின்ன வயதில் குழந்தைகளை நவராத்திரியில் பாடச் சொன்னால் இந்தப் பாடலை ஒரு சில குழந்தைகள் கண்டிப்பாய்ப் பாடும். இப்போது புதுவகையான இசை அமைப்பில் இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது கேட்டுத்தான் பாருங்களேன். தைப் பூசத்திற்குப் பழனிக்குப் பாதயாத்திரையாகப் போவோர் இந்தப் பாடலைப் பாடி , ஆடிச் செல்வார்கள்.

செவ்வாய், 23 ஜூலை, 2019

யானைமலை

யானை மலை நோக்கிப் பயணம் . பசுமை நடையின் 101 வது நடை. பிப்ரவரி மாதம் 10.2.2019 ல் 100வது நடை  அதன் பின்  7.7.2019 ஞாயிறு மீண்டும் பசுமை நடை தன் 101 வது நடையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

 முதன் முதலில் 36 பேருடன் ஆரம்பித்த யானைமலையை நோக்கித் தன் பசுமை நடைப் பயணத்தை மீண்டும் வெற்றிகரமாக ஆரம்பித்து இருக்கும்    அவர்களை வாழ்த்துவோம். இந்த நடைக்கு வந்தவர்கள் 250 பேர்.

சமணர்களின் எண்பெருங்குன்றங்களுள் ஒன்றாக ஆனைமலை அக்காலத்தில்  திகழ்ந்தது.

புதன், 10 ஜூலை, 2019

மலை அழகு

ஜீலை 6ம் தேதி சனிக்கிழமை போட்ட பதிவு கீழவளவு  சமணச்சின்னம்
அதன் தொடர்ச்சி இந்த பதிவு.

சமணச்சின்னம் இருக்கும்  பக்கத்தில் உள்ள அரசமரத்தடியில்  பிள்ளையார், முருகனின் வேல் மட்டும் இருக்கும் கோயில்

சனி, 6 ஜூலை, 2019

கீழவளவு
இந்த இடத்திற்கும் போன ஆண்டு  ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன். ஒரு வருடம் ஆகப் போகிறது. பசுமை நடையின் 93 வது நடை.

அந்த இரண்டு பாறைகளுக்கு நடுவே ஒரு நாலு படிகள் ஏறினால்  மலையின் இடப்புறத்தில் பார்சுவநாதர், பாகுபலி, மகாவீரர் ஆகியோரின்  சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

வியாழன், 4 ஜூலை, 2019

கொங்கர் புளியங்குளம்- நிறைவுப்பகுதி

நேற்று போட்ட கொங்கர்புளியங்குளம்  பதிவின் தொடர்ச்சி இந்த பதிவு.
படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.


  மலை மேல்   போய் வந்த  விவரம் அடுத்த பதிவில் என்று சொல்லி இருந்தேன்.

மாயன் கோவில்

புதன், 3 ஜூலை, 2019

கொங்கர் புளியங்குளம் - பகுதி -1

பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது.  நிறைய  பதிவுகள் வலையேற்றாமல் இருக்கிறது.  25.11. 2018 ல்  பசுமைநடை இயக்கத்தினருடன் சென்று வந்த கொங்கர் புளியங்குளம்  பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மதுரை எட்டுத்திக்கிலும் மலைகள் சூழ்ந்த நகரம் என்று அழைக்கிறார்கள். அந்த எண் பெருங்குன்றங்களில் ஒன்று  இந்த கொங்கர் புளியங்குளம்.

கொங்கர் புளியங்குளம் 


புதன், 19 ஜூன், 2019

கீழடி

பசுமை நடை 95 வது நடையில் கீழடிக்கு அழைத்துச் சென்றார்கள்.(23.9.2018) அங்கு போய் வந்ததைப் பதிவு போட இவ்வளவு நாளாகி விட்டது. அவர்கள் 100 வது பசுமை நடை விழாவும் கொண்டாடி விட்டார்கள். 100வது பசுமை நடையில் கலந்து கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொண்டு விட்டேன்.

இந்த கீழடிக்கு அழைத்துச் செல்லும்போது முதல் நாள் மழை பெய்து இருந்தது அதனால் அந்த இடம் எப்படி இருக்கிறது, போகும் பாதை எப்படி இருக்கிறது என்பதை அங்கு போய் பார்வையிட்டு வந்து பின் நம்மை அழைத்துச் சென்றார்கள். மழையால் அகழாய்வு செய்யும் இடங்களை த் தார்ப்பாய் கொண்டு மூடி வைத்து இருந்தார்கள்.  நாங்கள் அங்கு போனதும் திறந்து காட்டினார்கள்.

மிகவும் அழகான அமைதியான இடம்.

அங்கு கீழடி பற்றிக் கொடுக்கப்பட்ட கையேடு- படித்துப் பாருங்கள்.

ஞாயிறு, 9 ஜூன், 2019

மழை ! மழை!

எங்கள் வீட்டுப் பால்கனியிலிருந்து எடுத்த மழைக்காட்சிகள்.


ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழை, காற்றுடன்  நல்ல மழை.
இரண்டு நாளுக்கு முன் பெய்த மழை

மழை வருமா?மழை உண்டா?  என்று கேள்வி கேட்கப்படுகிறது.
கிடைத்த பதில் என்ன பதிவைப் படிங்கள்.

திங்கள், 3 ஜூன், 2019

பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்!

நேற்று(2/6/19) பழமுதிர்சோலைக்குப் போய் இருந்தோம் கிருத்திகை என்பதால்.  விடுமுறை தினம் என்பதால்  நல்ல கூட்டம் கோவிலில்.  அழகர் மொட்டை, காது குத்து விழா என்று   அழகர் கோவில் வளாகம் முழுவதும்  கூட்டம். 

திங்கள், 20 மே, 2019

சின்னத் தோட்டம்

என் வீட்டு சின்னத் தோட்டம் என்று முகநூலில் பகிர்ந்த படங்கள் இங்கு.

பெரிய தோட்டம் வைக்க முடியவில்லை என்றாலும் இந்த சின்னத் தோட்டம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. அதில்  மலரும் பூக்களும் அப்படித்தான்  என்னை மகிழ்விக்கிறது. அப்பார்ட்மென்ட் பால்கனியில் இவ்வளவுதான் வளர்க்க முடியும்.
காலையில் இந்த செடிகளைப் பார்க்கும் போது அது தரும் மனதுக்கு மகிழ்ச்சி.

புதன், 1 மே, 2019

சாமானியரின் குரல்


ஒரு பொருள் உற்பத்தி ஆகி அது சந்தைக்கு விற்பனைக்கு வருவதற்குள் அவர்கள் படும்பாடுகள், விற்பனைக்கு வரும்போது மக்கள் ஆதரவு இல்லை என்றால் அதனால் அவர்கள் படும் வேதனைகள், இவைதான் இந்தப் பதிவில்.

புதிய தலைமுறையில்  ஞாயிறு மாலை சாமானியரின் குரல் என்று பாடுபடும் தொழிலாளிகளைப் பற்றி வைப்பார்கள். அதில் ஒரு நாள் பனை ஓலையில் விசிறி செய்யும் தொழிலாளிகள் பற்றி பார்த்த காட்சிகளின் தொகுப்பு.
சிறு குழந்தைகளும் இந்த தொழில் செய்கிறார்கள்.

திங்கள், 29 ஏப்ரல், 2019

ஜன்னல் வழியே

Image may contain: bird
முதுகு காட்டி நின்றாலும் தலை திருப்பி  என்ன பார்வை!

ஜன்னல் வழியே என்ற என் முகநூல் பதிவை   சேமிப்பாய் இங்கு.
 இந்த முறை புல் புல் பறவைகள் .

சனி, 27 ஏப்ரல், 2019

ஜன்னல் வழியே

அமர்ந்து வேடிக்கைப் பார்க்க கொடிக்கம்பி வசதியாக இருக்கிறது இவைகளுக்கு

தினம் தினம் இவைகளைப் பார்வையிடுவது என் பொழுது போக்கு. அலுப்பு தட்டுவது போல் இருந்தால் பால்கனி வந்து பறவைகளைப் பார்வையிடுவேன். வித்தியாசமாய்  இவைகள் போஸ் கொடுக்கும் போது   படம் எடுப்பேன். காமிராவை எடுத்து வருவதற்குள் சில நேரம் நான் எடுக்க நினைத்த தோற்றத்தை மாற்றி விடும். சில நேரம் அதே மாதிரி நிற்கும். 
ஊஞ்சல் ஆடுவது போன்ற பிரமை கொடுக்கிறது

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

சித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும்திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல் சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலம்.
பரங்கிப்பேட்டையில் உள்ள ஆதிமூலேஸ்வரர் கோவில்


இறைவன் -ஆதிமூலேஸ்வரர்
இறைவி -அமிர்தவல்லி
தல மரம் -வில்வம், வன்னி
தீர்த்தம் -வருண தீர்த்தம்
புராண பெயர் -வருண ஷேத்திரம்
கிராமம்/நகரம் -பரங்கிப்பேட்டை
மாவட்டம் -கடலூர்
மாநிலம் -தமிழ்நாடு

காஷ்யப முனிவர் ஒரு முறை  சிவனை எண்ணி யாகம் நடத்தினார்.  அந்த யாகத்தை நிறுத்த வருணன் மழையை ஏற்படுத்தினான். இதனால் முனிவர் வருணனை சபித்தார். வருணன் சக்தி இழந்தான். பின் அவன் சிவபெருமானை வணங்கி சாபம் தீர்ந்தான். வருணன் சிவபெருமானை   இததலத்திலேயே இருந்து அருளும்படி வேண்டினான். அப்படி இங்கே தங்கியுள்ள அந்த இறைவனுக்கு ஆதிமூலேஸ்வரர் என்று பெயர்.

வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம் என்கிறார்கள் .நாமும் மழை வேண்டி இப்போது அவரை வணங்குவோம்.

சித்திர குப்தர் 12 வயதில் இறந்து விடுவார்  என்று விதி இருந்தது. அவரது தந்தை  வசுதத்தன் மிகவருந்தியபோது, சித்ரகுப்தன் இததலத்து சிவனை வழிபடுவோம் என்று தன் தந்தையிடம் சொன்னார். ஆதிமூலேஸ்வரரை வழிபட்டார்கள்.

 மார்க்கண்டேயரை  சிவபெருமானே  வந்து காப்பாற்றினார். இத்தலத்தில்  தன் துணைவியைப் பெருமைப்படுத்த அம்பாளை விட்டு எமனை தடுக்கச் சொல்கிறார்.  அம்பாள் எமனிடம்,  ”சித்திரகுப்தன் சிறந்த சிவபக்தன் -அதனால் அவனை விட்டுவிடு ” என்கிறார். சிவபக்தர்களை அவ்வளவு சீக்கிரம் எமன் நெருங்கமாட்டார் என்பார்கள்.

மார்க்கண்டேயனை கொல்ல வந்த எமனை சிவன் இடது காலால் உதைத்தார் ,அந்த இடது பாகம் பார்வதி தேவியுடையது என்பார்கள். சேய்க்கு இரங்கும் குணம் தாய்க்குத்தான் உண்டு என்று  மார்க்கண்டேயர் வரலாறும், சித்திர குப்தன் வரலாறும் சொல்கிறது. சிவனின் ஆணைப்படி   சித்திரகுப்தனை எமன் கொல்லாமல் விட்டதுடன் தன் உதவியாளராகவும் ஏற்றுக் கொண்டார்.

இக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு எதிரில் சித்திரகுப்தன் சன்னதி உள்ளது.
இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அமிர்தம் போல் அருளை அள்ளி வழங்குவதால் அம்பாள்,அமிர்தவல்லி  என்று அழைக்கப்படுகிறார். அம்மன்சிலைக்கு கீழ் ஸ்ரீசக்கரம் உள்ளதாம் . சித்திரை மாதம் சிவன், அம்பாள் இருவர் மீதும் சூரிய ஒளி படுமாம் . அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெறுமாம்.

இங்கு ஆயுள் விருத்தியடையவும், மரண பயம் நீங்கவும் , நோய் தீரவும் மிருத்யுஞ்சய ஹோமம் செய்கிறார்கள்,  சஷ்டிஅப்தபூர்த்தி, சதாபிஷேகம்,  செய்து கொள்கிறார்கள். ஞானம், மோட்சம் தரும் கேது பகவானுக்கு அதி தேவதை சித்திரகுப்தர் ,அதனால் சித்திரகுப்தரை வணங்கினால் இவ்விரண்டும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.  சிவன் கோவில்களில் அர்த்தஜாமபூஜை முடிவில் பைரவருக்கு பூஜை நடக்கும். இந்த கோவிலில் சித்திரகுப்தருக்கும், பைரவருக்கும் பூஜை செய்து நடை சார்த்தப்படுகிறது. அர்த்தஜாமத்தில் சிவனுக்கு சித்திரகுபதர் பூஜை செய்வதாக ஐதீகம். சிதராபெளர்ணமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆயுள்விருத்திக்கு தயிர்சாதம்  நைவேத்தியம் செய்கிறார்கள்.


சுண்ணாம்பு கலப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட பாத்திரம்

விமானம்

தெற்குப் பிரகாரம்

துர்க்கையை வலம் வந்து வணங்கலாம்


சித்திரகுப்தர் திருவுருவம்

இக்கோவிலில் ராமேஸ்வரம் ராமலிங்கசுவாமி, காசி விஸ்வநாதர், நீலகண்டர், நீலாயதாட்சி, சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பாதாளலிங்கம், கஜலட்சுமி, காலபைரவர், சூரியன் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
திருநள்ளாறில் கிழக்குப் பார்த்துகொண்டு நின்று சனீஸ்வரர் அருள்வது போல் இங்கும் இருக்கிறார். 
மாசி மகத்தன்று தீர்த்தவாரி. அருகில் இருக்கும் கடலுக்குச் சென்று வருணனுக்கு விமோசனம் கொடுக்கும் விழா நடக்குமாம். தைஅமாவாசை, ஐப்பசி கடைமுழுக்கு நாட்களில் தீர்த்தவாரி உண்டாம்.
இக் கோவிலை தரிசிக்கும் நேரம் காலை 7 மணி முதல், 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு எட்டுவரை. நாங்கள் போனபோது 11மணி பக்கம். குருக்கள் வேறு ஏதோவிழாவுக்கு வெளியே போய் விட்டார். போவதற்கு முன் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து விட்டு போய் இருந்தார். 
காஞ்சி மகாபெரியவரின் தந்தையார் சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஊர் இது என்று சொல்கிறார்கள்.
நாங்கள் பரங்கிப்பேட்டை கோவில்களை தரிசித்து விட்டு    அப்படியே சிதம்பரம் போனோம். அங்கு  அம்மன்  சந்நிதி பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் இருக்கும் சித்திரகுப்தரையும்  தரிசித்தோம்.
சிதம்பரம்-அம்மன் சந்நிதி
ஆயிரக்கால் மண்டபமும் சிவகங்கைத் தீர்த்தமும்

சிதம்பரம் -வடக்குக் கோபுரம்

என்றும் 12வயதாய் இருக்கும் சிவபக்தராகிய  அவரை வணங்கினால் நமக்கும் நல்லது நடக்கும் நம்பிக்கையில் வணங்குகிறார்கள் என நினைக்கிறேன்.
ஒருமுறை அபிஷேகம் பார்த்து இருக்கிறோம். அண்டா அண்டாவாக அனைத்து அபிஷேகங்களும் இருக்கும், இந்த முறை ஏகப்பட்ட தீபங்கள் ஏற்றி வழிபட்டார்கள். பக்தர்கள் தங்கள் கணக்கை சித்திரகுப்தர் நல்லபடியாக எழுதவேண்டும், எமதர்மராஜாவிடம் நம்மைபற்றி நல்லவிதமாக சொல்ல வேண்டும் என்று எடுக்கும்   முயற்சி போலும்!. நல் எண்ணம், நற்செயல், நற்பண்புகளுடன் நாம் வாழ்ந்தால் அவர் நல்லபடியாக நம்மைப் பற்றி நாலுவார்த்தை நல்லதாய் எழுதப் போகிறார்.

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று 
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே’ 

என்பது தேவாரம். திருஇன்னம்பர் என்ற பாடல் பெற்றதலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மனிதர்கள் செய்யும் நற்செயல்கள், தீயசெயல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வார் என்று திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் கூறுகிறது. சித்திரகுப்தர் அதற்காக நியமிக்கப்பட்டவர் போலும்! 
                                 வாழ்க வளமுடன்.
                                     ------------

புதன், 17 ஏப்ரல், 2019

ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்


வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் உள்ள மீனாட்சி, சொக்கநாதருக்கு திருமணம். மதுரை  எஸ் .எஸ் .காலனியில் உள்ள பிள்ளையார் கோவில் 
திருமணம்பார்த்து அங்கு கொடுத்த நீர் மோர் அருந்தி மஞ்சள் , குங்குமம் வளையல் மஞ்சள் கயிறு பிரசாதம்  பெற்று எல்லோரும் நலமாக இருக்க வேண்டி வந்தேன்.

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

மீனாட்சி சொக்கர் திருவிழா! 2019


நேற்று 8/4/2019 காலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேறியது .
இரவு 7மணிக்கு  வீதி உலாக் காட்சிகளைக் கண்டோம். அவை இந்தப் பதிவில் இடம் பெறுகிறது.

Image may contain: one or more people
பக்தர்களை வரவேற்கும் வண்டி முதலில் வருகிறது. அன்னை வரும் பாதையை சரி செய்து கொண்டே வரும்.
Image may contain: one or more people
இப்போது இரண்டு வருடமாய் யானை மட்டும் சாமி முன் வருகிறது. முன்பு, காளை இரண்டு முரசுகளுடன் வரும், அப்புறம் ஒட்டகம் இரண்டு வரும், அப்புறம் யானை வரும். அதன் பின் தான் பஞ்சமூர்த்திகள் பவனி வருவார்கள்.

ஞாயிறு, 31 மார்ச், 2019

இரயில் பயணம்

ரயில் பயணத்தில் கண்ட காட்சிகளை இங்கு பதிவாக. என் சேமிப்பிலிருந்து. போகிற போக்கில் எடுத்தாலும் கிடைத்த காட்சி பிடித்து இருக்கிறது எனக்கு, உங்களுக்கும் பிடிக்கும்.

ரயிலில் எனக்கு  ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு  கடந்து போகும் காட்சிகளை காண்பது மிகவும் பிடித்தமானது, தூரத்தில் தெரியும் கோபுரம், மலைகள், ஏரிகள், வயல்கள், மாடுகள், ஆடுகள், பறவைகள், காலைச் சூரியன், மாலைச் சூரியன் கூடு செல்லும் பறவைகள், மரங்கள், செடி, கொடிகள் என்று இயற்கையை ரசித்துக் கொண்டே பயணம் செய்ய பிடிக்கும். முன்பு கண்களுக்குள் சிறை பிடித்தேன் 
 இப்போது அலை பேசி, காமிரா என்று  சிறைபிடித்து பார்த்து மகிழ்ந்து கொள்கிறேன்.

வியாழன், 28 மார்ச், 2019

குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன்

எங்கள் குலதெய்வம்

களக்கோடி சாஸ்தா- மனைவிகள் பூர்ணகலா, புஷ்கலாவுடன் இருக்கிறார். 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள 'மடவார் விளாகம்' என்ற ஊரில் இருக்கும்  களக்கோடி சாஸ்தா   எங்கள் குலதெய்வம். நிறைய பேருக்கு இந்தக் கோவில் குலதெய்வமாக இருக்கும்.

எங்கள் பக்கம் பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்வார்கள்.  பங்குனி உத்திரத்தன்று போனால் நிறைய கூட்டம் வரும்.
நாங்கள் பங்குனி உத்திரம் அன்று போக முடியவில்லை .

குலதெய்வ வழிபாடு செய்வதற்கு ஏற்ற நாள் சனிக்கிழமை, திங்கள் கிழமை என்று என் மாமியார் சொல்வார்கள். அதன்படி சனிக்கிழமை சென்று வந்தோம்.

ஏரிக்கரையோரம் இந்தக் கோவிலின் அருகில் உள்ள ஏரியின் அழகைப்பற்றியும் அங்கு பார்த்த  பறவைகள், கறவைகள், பூக்கள் படங்கள் கொண்ட பதிவைப் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

செவ்வாய், 26 மார்ச், 2019

குன்றத்துக் குமரன்

திருப்பரங்குன்றம் 
12/3/2019, செவ்வாய்க்கிழமை, கார்த்திகை, சஷ்டி ஆகியவை சேர்ந்து வந்த விஷேசமான  நாள் என்று திருப்பரங்குன்றம் போய் இருந்தோம்.

அங்கு போனால் பங்குனித் திருவிழா கொடியேற்றம் அன்று காலைதான் நடந்து இருந்தது.

தற்செய்லாக  முதல் நாள் விழா சமயம் உற்சவர்  எழுந்தருளல்  கண்டு மகிழும் பாக்கியம் கிடைக்கப்பெற்றோம்.

 அங்கு எடுத்த படங்கள், காணொளி  இவை இந்தப் பதிவில்.

அன்று பதிவு செய்ய முடியவில்லை. இன்று சஷ்டி, செவ்வாய்க்கிழமை  இன்றும் விருந்தினர் வருகை அவர்கள் வந்து போன பின்   முருகன் அருளால் பதிவு செய்து விட்டேன்.

ஞாயிறு, 24 மார்ச், 2019

ஏரிக்கரையோரம்

சனிக்கிழமை எங்கள் குலதெய்வக் கோவிலுக்குப் போய் இருந்தோம் . என் கணவரின் தம்பி குடும்பத்தினர் வந்து இருந்தார்கள்.  அவர்களுடன் மடவார் விளாகம் என்ற ஊரில் இருக்கும் எங்கள் களக்கோடி சாஸ்தா கோவில் போய் இருந்தோம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது இந்த ஊர்.

எங்கள் பக்கம் பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்வார்கள். 
நாங்கள் பங்குனி உத்திரம் அன்று போக முடியவில்லை.  

இந்தப் பதிவில் எங்கள் கோவில் பக்கத்தில் உள்ள பெரிய ஏரியைப் பார்த்த காட்சிகள் பற்றிய பகிர்வு.

வெள்ளி, 22 மார்ச், 2019

உலக தண்ணீர் தினம்

இன்று உலக தண்ணீர் தினம்!

மனிதர்களுக்கும் தண்ணீரின் தேவை அதிகமாகி இருக்கிறது. இருப்பு குறைவு.
பறவைகள் தண்ணீர் தேடிக் குடிபிருப்புக்குள் வருகிறது.
விலங்குகள் காட்டை விட்டு நாட்டுக்குள் வருகிறது..
Image may contain: outdoor and nature

குரங்கார் தண்ணீர் தேடி

Image may contain: outdoor

வந்து தண்ணீர் குடிக்கும் காட்சி

புதன், 20 மார்ச், 2019

சின்னஞ் சிறு குருவி


இன்று  உலக சிட்டுக்குருவிகள் தினம். நான் எடுத்த குருவிகள் படங்கள் இந்த பதிவில்.

No photo description available.
ஹொரநாடு தங்க அன்னபூரணி கோவிலில் அடைக்கல சிட்டுக்குருவி.

Image may contain: sky, cloud, outdoor and nature

No photo description available.
இயற்கை அங்கு மிக அழகாய் இருக்கிறது. 
அங்கு கண்ட வாசகம் மிக அருமையாக இருந்தது.
"இயற்கையை விரும்பு இயற்கை என்றென்றும் உன்னை விரும்பும்”

சனி, 16 மார்ச், 2019

பேச்சிப்பள்ளமும், தீர்த்தங்கரர்களும்


அமணமலை, அமிர்தபராக்கிரமநல்லூர், திருவுருவகம், குயில்குடி எனப் பல பெயர்களில்  இந்த  மலையும் ஊரும் அழைக்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் நாகமலை புதுக்கோட்டை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரின் தெற்குப் பகுதியில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில்  சமணமலை அமைந்துள்ளது. சமணமலையின் கிழக்கு த்திசையில் கீழக்குயில்குடி என்னும் அழகிய சிற்றூர் உள்ளது.

மதுரை பெரியார்  பேருந்து நிலையத்திலிருந்து கீழக்குயில்குடிக்கு 21 சி வழித்தட எண்ணில்  பேருந்து வருகிறது.

புதன், 13 மார்ச், 2019

கீழக்குயில்குடி அய்யனார் கோவில் பகுதி- 2
  இதற்கு முன்பு போட்ட கீழ்க்குயில்குடி  பதிவுகள் படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.

சைவ, வைணவக்  கதைகளைக் கூறும் சிற்பங்கள் அழகாய் உள்ள கோபுரம் என்று முதல் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். போன பதிவில் வைணவ கதைகள் கோபுரங்களில் இருந்ததைப் பார்த்தோம்.
இந்த பதிவில் சைவகதைகள் உள்ள கோபுரக்காட்சிகள்.

 இன்னும் வரும் ,அய்யனார் கோவில் சிற்பங்கள் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். கீழே வருவது அய்யனார் கோவில் பிரகாரத்தில் உள்ள சிலைகள், கோபுரத்தில் உள்ள கதை சொல்லும் சிற்பங்கள் , கோபுரம் தாங்கும் பொம்மைகள் காலத்தைச் சொல்கிறது.  கேரளத்தினர், வட மாநிலத்தவர், நாடோடிகள் (குறவர்கள்)  ஆகியோர் கோபுரத்தில் இருக்கிறார்கள்.

ஆலமர் கடவுள், கோபுரம் தாங்கும் பொம்மைகள் - கேரள ஆண், பெண்

ஞாயிறு, 10 மார்ச், 2019

கீழக்குயில்குடி அய்யனார் கோவில்

புத்தகவெளியீடு   இதற்கு முன்பு போட்ட கீழ்க்குயில்குடி  பதிவுகள் படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.

அடுத்த பதிவில்  இந்த சமணர் மலை என்று அழைக்கப்படும்  கீழ்க் குயில்குடியில்  உள்ள அய்யனார் கோவில் . என்று சொல்லி இருந்தேன்.

கீழக்குயில்குடி அய்யனார் கோவில்- கோவில் பின்புறம் சமணர் மலை, முன்புறம் தாமரைத் தடாகம்

வெள்ளி, 8 மார்ச், 2019

புத்தக வெளியீடு


கீழக்குயில்குடியில் "செட்டிப்புடவு" என்னூம் குகை வாசலில் ஆரம்பமானது 100வது  பசுமைநடை விழா. முதலில் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு உரை  ஆற்றினார்கள். அப்புறம் தொல்லியல்  பேராசிரியர் சொ. சாந்தலிங்கம் உரையாற்றினார்.   அவர் சொன்ன செய்திகள் அடுத்த பதிவில். என்று குறிப்பிட்டு இருந்தேன், அவைகளைத் தொடர்ந்து பார்க்கலாம் இந்த பதிவில்.

முத்துக்கிருஷ்ணன் அவர்களின் 9 ஆண்டு பசுமை நடைக்கு. 100 வது வகுப்பறை இது.  100 நடைகளின் தொடர்ச்சி பெருமிதம், இளைஞர்கள் குழுவின் சாதனை  என்றார்.

                                                    பேசுவது முத்துக்கிருஷ்ணன்
திரு. சொ. சாந்தலிங்கம் தொல்லியல் அறிஞர்

திங்கள், 4 மார்ச், 2019

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!


மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்.
அவன் அருளால் அவன் 
தாள் வணங்குவோம்.


சிவன் ராத்திரிக்கு நாம் சிவனின்  பெருமைகளை அவரின் கருணையை ப்பேசி நினைத்து வணங்கி மகிழ்வோம். இன்று என்ன செய்யலாம் என்று  யோசித்த போது கிடைத்த படங்கள் (அவன் அருளால் கிடைத்தது.) 

அதில் திருக்கச்சூர்   கோவிலுக்குப் பல வருடங்களுக்கு முன்  போனபோது எடுத்த சில படங்கள் கிடைத்தன. அந்த கோவில் மஹா சிவராத்திரி பதிவுக்கு ஏற்ற கதை கொண்ட தலவரலாறு அமைந்த கோவில். இந்தப் பதிவில் இடம்பெறுகிறது.

மற்றும் அலைபேசியில்  நான் எடுத்து சேமித்த படங்கள்  வாட்ஸ் அப்பில் வந்த படங்கள் கலந்த கலவையான பதிவு.