சனி, 4 மார்ச், 2023

அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் பகுதி - 3


அபயாம்பிகை சன்னதிக்கு வரும் வழி


டிசம்பர் 12. 11. 2022 ல் மயிலாடுதுறை போன போது அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகள் தொடர் பதிவாக போட்டு வருகிறேன். 

மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோவில் இந்த பதிவில்.
இடம் பெறுகிறது . பாடல்பெற்ற சிவத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் தேவாரம் பாடி இருக்கிறார்கள். 


போன பதிவில் மயூரநாதர் சன்னதி இந்த பதிவில் அபயாம்பிகை சன்னதி படங்கள் , செய்திகள் இடம்பெறுகிறது.

மயிலாடுதுறையில் மயூரநாத கோவில் அம்மன் பேர் அபயாம்பிகை, நாடி வருபவர்களுக்கு அபயம் அளித்து காக்கும் அம்பிகை.

அஞ்சொல் நாயகி  நான் இருக்கிறேன் என அபய கரத்தோடு காட்சி அளிப்பார்
படஉதவி கூகுளுக்கு  நன்றி .

"அஞ்சொலாள் உமை" என்று இத்தல தேவார பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள். அம்மன் 5 அடி உயரத்தில் நேரில் அன்னை நிற்பது போலவே இருக்கும் குருக்கள் செய்யும் அலங்காரங்கள் எல்லாம் அழகு, குறிப்பாக  மடிசார் வைத்து கட்டி இருக்கும் போது பார்க்க மிக  அழகு. பார்த்து கொண்டே இருக்கலாம் . 

நவராத்திரி நாளில் அன்னைக்கு புஷ்பாஞ்சலி நடக்கும். 

அம்மன் சன்னதி நேரே இருக்கும் வாசல்.  இந்த வாசல் பக்கம் ஆதிமூலவர் கோவில் என்று   சிறிய கோவில் இருக்கிறது. மயில் சிவனை பூஜிப்பது போல சிலை இருக்கும். மாமரத்துக்கு அடியில் பெரிய பிள்ளையார் இருப்பார். நாங்கள் அங்கு போகவில்லை. மழை பெய்து கொண்டு இருந்தது அதனால் போகவில்லை. 
16 கால் மண்டபம்
இந்த இடத்தில்  என் நினைவுகள் அதிகம் இருக்கிறது

நாங்கள் எங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு வரும்போது சுவாமியை தரிசனம் செய்து பின் இறைவனை தரிசனம் செய்து விட்டு இங்கு அமர்ந்து கொள்வோம். என் குழந்தைகள் இருவரும்  இதில் ஓடி விளையாடுவார்கள். இந்த நடைபாதை சரிவாக இருக்கும் ஓடி வர அவர்களுக்கு ஆனந்தமாக இருக்கும். பேத்தி, பேரன்களை  அழைத்து கொண்டு போன போது  இந்த இடத்தை காட்டி "உங்கள் அம்மா, அப்பா இந்த இடத்தில் சிறு வயதில் ஓடி விளையாடுவார்கள்" என்றதும் அவர்களும் ஓடி வருவார்கள்.
எல்லா குழந்தைகளுக்கும் இந்த இடம் பிடித்த இடம்.

நான்  வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்து  பழைய நினைவுகளை அசைபோட்டேன்.

அந்தக்கால தொங்கும் கண்ணாடி விளக்கை ஏற்ற  ஏணி.
சக்கரம் வைத்து இருக்கிறது

திருவிழாவுக்கு வரும் வாகனங்கள்

திருவிழாவிற்கு மலர் அலங்காரம் செய்யும் தட்டிகள்
சப்பரத்தின் மேல் பூ அலங்காரம் செய்வது.

வெள்ளை யானை வாகனம்



அன்ன வாகனம்

மயில் வாகனம்



 நவராத்திரி விஜயதசமிக்கு  பாரி வேட்டைக்கு போகும் குதிரை


காமதேனு வாகனம்

நகை அலங்காரம் மற்றும்  புன்னகை அழகாய் இருக்கிறது

சடை அலங்காரம்

பூத வாகனங்கள்


தசக்ரீவனுக்கு இராவணன் என்ற பெயர் வந்த காரண கதையை  சொல்லும் வாகனம்.

கைலை மலையை தூக்கிய கதை :- தசக்ரீவன் தன் புஷ்பக விமானத்தில் வட திசை நோக்கி  ஆனந்தமாக பறந்து போன போது  கைலை மலை தடையாக இருந்ததாம், நந்தி தேவர் கைலை மலையை சுற்றி கொண்டு போக சொன்னாராம். "நான் ஏன் சுற்றி போக வேண்டும்  என்று ஆணவமாக மலையை நகர்த்தி விட்டு  போகிறேன்" என்று மலையை தூக்கினாராம்

இறைவன் தன் கட்டை விரல் நக நுனியால் அழுத்தி தசக்ரீவனின் ஆணவத்தை ஒடுக்கினாராம். பின் தன் இசை புலமையால் இறைவனை தொழுது பாடி   பெரிய வாளை பரிசாக பெற்று இராவணன் என்ற பெயரை பெற்று வந்ததாக புராண வரலாறு சொல்கிறது. இராவணன் என்ற சொல்லுக்கு  ரோதனம் புரிந்தவன் என்று அர்த்தமாம்.
சப்பரங்கள்
தூண் சிற்பம் மான்கள்
அம்மன் சன்னதிக்குள் தூண்களில் அழகிய வேலைப்பாடுகள்




 


அனவித்யாம்பிகை லிங்கத்திற்கு சிவப்பு  புடவை சாற்றி இருப்பார்கள்.

சிவபக்தரான , நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியினர் ஐப்பசி கடை முழுக்கில் நீராட திருவையாற்றிலிருந்து புறப்பட்டு வந்தனர். ஆனால் கடை முழுக்கு நடந்து முடிந்து விட்டது.

அது போல கால் ஊனமுற்ற ஒருவரும் நீராட முடியவில்லை . மூவரும் கதறி அழுது புலம்பினர் இறைவனிடம். இறைவன் மனம் இறங்கி  கார்த்திகை முதல் நாளும் நீராடலாம்  என்றார். மூவருக்கும் முக்தி அளித்தார். கார்த்திகை முதல் நாள் முழுக்கு முடவன் முழுக்கு என்று பேர் பெற்றது.

நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியினரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி கொடுத்து விட்டார்.

அனவித்யாம்பிகை அம்பாள் சன்னதியில் அம்பாளின் வலபக்கம்   தனி சன்னதி உள்ளது. நாதசர்மாவிற்கு சுவாமி சன்னதிக்கும், அம்மன் சன்னதிக்கும் நடுவில்  உள்ள தானிய களஞ்சியத்தில்  முன்னாடி இவரும் பின் கணக்கடி பிள்ளையாரும் இருக்கிறார்கள். பிள்ளையார் அருகில் கணக்கு எழுதும் இடம் இருக்கிறது. பிள்ளைகள் எல்லோரும் கணக்கு போட்டு வருவார்கள் கணக்கு பாடம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை.

நாதசர்மா

இந்த கோவிலில் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டபின் உங்கள் இருவரையும்  வணங்கினால் என்னை வழிபட்ட பலன் கிடைக்கும் என்ற வரத்தையும் கொடுத்தராம் இறைவன்.


அனவித்யாம்பிகை சன்னதி  முன் தான் நவராத்திரி கொலு வைப்பார்கள்.  இவர்கள் இருவருக்கும் அம்மன் சன்னதியில் சிலை இருக்கும்.

அம்மன் சன்னதி இடபக்கம் ஆடிபூரப் அம்மன் கையில் கிளி ஏந்தி மிக அழகாய் காட்சி தருவார். பக்கத்தில் அழகான பள்ளியறை இருக்கும். அம்மன்  கருவறையை சுற்றி அழகான அம்மன் ஓவியங்கள் வரைய பட்டு இருக்கும்.

அடுத்து பெரிய பிரகாரத்தில்  உள்ளவைகளை பார்க்கலாம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------------

41 கருத்துகள்:

  1. சிறப்பான பதிவு..

    வாகனங்கள் அழகு..

    ரொம்பவும் கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கின்றீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //சிறப்பான பதிவு..//
      நன்றி.

      //வாகனங்கள் அழகு..

      ரொம்பவும் கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கின்றீர்கள்..//

      இதில் சில படங்கள் தான் நான் எடுத்த படம் மற்றவைகள் மகன் எடுத்த படம்.

      நீக்கு
  2. வழக்கமாக அமரும் இடம் என்று எழுதி மனதைக கலங்கச் செய்து விட்டீர்கள்...

    அற்றைத் திங்கள்
    அவ்வெண்ணிலவில்... - என்ற பாரி மகளிர் பாடல் நினைவுக்கு வருகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வழக்கமாக அமரும் இடம் என்று எழுதி மனதைக கலங்கச் செய்து விட்டீர்கள்...//
      மன்னிக்கவும் என் நினைவுகளை பகிர்ந்து உங்களை கலங்கவைத்து விட்டேனே!

      //அற்றைத் திங்கள்
      அவ்வெண்ணிலவில்... - என்ற பாரி மகளிர் பாடல் நினைவுக்கு வருகின்றது..//

      பாரி மகளிர் நினைவு வந்து விட்டதா?
      அவர்கள் தந்தையை இழந்த சோகத்தையும் தந்தையின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பாடல்.
      நானும் என் கணவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகிறேன்.என் கணவரும் என் தந்தை போன்றுதான் எங்கள் மேல் அக்கறையும் அன்பும் நிறைந்தவர்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. படங்கள் எல்லாமே மிகவும் அழகாக எடுத்து இருக்கிறீர்கள்.

    அதுவும் உள் பிரகாரத்திலும் தெளிவாக இருக்கிறது.

    மிகவும் ரசித்து பார்த்தேன். நல்லதொரு தரிசனமும் கிடைத்தது நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை, வாழ்க வளமுடன்

      //படங்கள் எல்லாமே மிகவும் அழகாக எடுத்து இருக்கிறீர்கள்.

      அதுவும் உள் பிரகாரத்திலும் தெளிவாக இருக்கிறது.//

      நன்றி ஜி. இதில் மகனுக்கும் பங்கு உண்டு. வாகனங்கள் எல்லாம் அவன் நிறைய கோணங்களில் எடுத்தான், சிலவற்றை மட்டுமே பகிர்ந்து இருக்கிறேன்.

      //மிகவும் ரசித்து பார்த்தேன். நல்லதொரு தரிசனமும் கிடைத்தது நன்றி.//

      ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      //படங்கள் அனைத்தும் அருமை அம்மா..//.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அம்மா அருட்காட்சி தருகிறார்.  அபயம்.  அப்பாவிடம் வரமொன்று கேட்டிருக்கிறேன்.  அருளச்சொல்லி அருளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //அம்மா அருட்காட்சி தருகிறார். அபயம். அப்பாவிடம் வரமொன்று கேட்டிருக்கிறேன். அருளச்சொல்லி அருளவேண்டும்.//

      தாயிடம்தான் அப்பாவிடமிருந்து நமக்கு வேண்டியதை வாங்கித் தர விண்ணப்பம் வைப்போம். அம்மாவும் அப்பாவிடம் பேசி வாங்கி தருவார்கள்.
      அது போல உங்கள் வரத்தை அன்னை தந்தையிடம் சொல்லி வாங்கி தருவாள் கண்டிப்பாய்.
      அபயம் என்று வந்தவர்களை அபய கரம் கொண்டு காப்பாள் அன்னை.

      நீக்கு
  6. பழகிய இடங்களில் பழகிய காலங்களின் அழகிய நினைவுகள் எப்போதுமே சுகம்.  நீங்காமல் உடன் இருந்து விட்டு நினைவுகளாய் நமக்குள்ளேயே வந்து விட்டவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பழகிய இடங்களில் பழகிய காலங்களின் அழகிய நினைவுகள் எப்போதுமே சுகம்.//
      மாயவர்ம் நினைவுகள் மனதில் பசுமையாக தங்கி போனது. நெஞ்சிருக்கும் வரை நினைவுகள் இருக்க வேண்டும்.


      //நீங்காமல் உடன் இருந்து விட்டு நினைவுகளாய் நமக்குள்ளேயே வந்து விட்டவர்...//

      ஆமாம், நன்றாக சொன்னீர்கள் அவர்கள் நினைவுகள் தான் வழி நடத்துகிறது. உடன் இருக்கிறார்கள் என்ற பலத்தை தருகிறது.

      நீக்கு
  7. நிறைய படங்கள்.  எங்களுக்கு அவை சாதாரணப் படங்கள்.   உங்களுக்கு அவை நினைவின் தடங்கள்.  கண்ணில் இருந்தவர் நெஞ்சில் உறைந்து நினைவுகளாய் நிறைந்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிறைய படங்கள். எங்களுக்கு அவை சாதாரணப் படங்கள். உங்களுக்கு அவை நினைவின் தடங்கள்.//

      ஆமாம், நினைவின் தடங்கள்தான்.

      //கண்ணில் இருந்தவர் நெஞ்சில் உறைந்து நினைவுகளாய் நிறைந்தவர்.//

      ஆமாம், நினைவுகளில் நிறைந்து இருக்கிறார்கள். நேற்று நண்பர் வீட்டுக்கு உணவுக்கு அழைத்து இருந்தார்கள். அங்கும் சாரின் நினைப்பு வந்து விட்டது பேசினோம். அவர்கள் செய்த கார உணவு சாருக்கு பிடித்து இருந்தது அதை பற்றி பேசினோம்.
      உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. நம் வாழ்வோடு தொடர்புடைய இடம் நமக்கு என்னவெல்லாம் நினைவுகளைக் கிளறிவிடுகிறது.

    கோவில் பிரகாரம் கோவிட்டையும் நினைவுபடுத்துகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன். குருவாயூர் போய் விட்டு வந்து விட்டீர்களா? கண்ணன் தரிசனம் நல்லபடியாக இருந்ததா?

      //நம் வாழ்வோடு தொடர்புடைய இடம் நமக்கு என்னவெல்லாம் நினைவுகளைக் கிளறிவிடுகிறது.//

      ஆமாம். நினைவுகளை கிளறி விட்டதுதான்.

      //கோவில் பிரகாரம் கோவிட்டையும் நினைவுபடுத்துகிறது//

      காலை நேரம் , திங்கள் கிழமை வேலை நேரம் இல்லையா? அதுதான் கூட்டம் இல்லை.

      நீக்கு
    2. //கோவில் பிரகாரம் கோவிட்டையும் நினைவுபடுத்துகிறது//

      போதிய இடைவெளி விட்டு வர வட்டம் போட்டு இருப்பதை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
      நானும் அப்படித்தான் நினைக்கிறேன். விளக்கு பூஜைக்கு அமரவும் அப்படி வட்டம் போடுவார்கள்.

      நீக்கு
  9. படங்கள் எப்போதும்போல் அழகு.

    முடவன் முழுக்கு போன்ற பல தகவல்களையும் அறிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் எப்போதும்போல் அழகு.//

      நன்றி.

      //முடவன் முழுக்கு போன்ற பல தகவல்களையும் அறிந்துகொண்டேன்.//

      அக்கோவிலில் நாத சர்மா,அனவித்யாம்பிகை இருவரும் லிங்க வடிவில் இருப்பதால் பகிர்ந்து கொண்டேன். முடவன் முழுக்கிற்கு முக்கிய காரணகர்த்தா

      நீக்கு
  10. பதில்கள்
    1. //தூணில் மான் சிற்பம் மிக அழகு//
      இரண்டு மான்கள், ஒன்றின் தலை மட்டும் தெரியும் உடலை செடியின் இலைகள் மறைந்து இருப்பது போல கலை நயத்தோடு செய்து இருக்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. கும்பகோணத்தில் வசித்தும், ஆடுதுறையில் வசித்தும் இருந்தாலும் மாயவரம் சென்றதில்லை. உங்கள் தயவில் மாயவரம் கோயில்கள் உலா வருகின்றேன். நன்றி. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார், சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //கும்பகோணத்தில் வசித்தும், ஆடுதுறையில் வசித்தும் இருந்தாலும் மாயவரம் சென்றதில்லை. உங்கள் தயவில் மாயவரம் கோயில்கள் உலா வருகின்றேன். நன்றி.//
      கும்பகோணம், ஆடுதுறையில் வசித்து இருக்கிறீர்களா? அங்கும் நிறைய கோவில்கள் இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. அபயாம்பிகை அன்னை விக்கிரகம் அழகாக இருக்கிறது.

    கோவில் வாகனங்கள் அழகு. மண்டபங்கள், தூண்களும் என படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //அபயாம்பிகை அன்னை விக்கிரகம் அழகாக இருக்கிறது.

      கோவில் வாகனங்கள் அழகு. மண்டபங்கள், தூண்களும் என படங்கள் நன்று.//
      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  13. விரிவான விளக்கங்கள். அக்கறையுடன் எடுக்கப்பட்ட படங்கள். நன்றி. வாகனங்கள் யாவும் அழகு, குறிப்பாக அன்ன வாகனமும் காமதேனுவும். பழைய நினைவுகள் என்றும் பசுமையானவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //விரிவான விளக்கங்கள். அக்கறையுடன் எடுக்கப்பட்ட படங்கள். நன்றி. வாகனங்கள் யாவும் அழகு, குறிப்பாக அன்ன வாகனமும் காமதேனுவும். பழைய நினைவுகள் என்றும் பசுமையானவை.//

      வாகனங்கள் மகன் எடுத்த பாடங்கள் காமதேனுவின் சடை அலங்காரம் மட்டும் நான் எடுத்தேன். நிறைய படங்கள் எடுத்தான் வாகனங்களை ஒவ்வொரு கோணத்திலும் .
      ஆமாம், நினைவுகள் பசுமையானவை.
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் வழக்கம் போல் தெளிவுடன் உள்ளன.

    அன்னை சன்னதிக்கு போகும் வழியும், பதினாறு கால் மண்டபமும் மிக அழகாக விஸ்தாரமாக உள்ளது.

    அன்னை அபயாம்பிகை தரிசனம் பெற்று கொண்டேன். அன்னை அவ்வளவு அலங்காரத்துடன் அழகாக உள்ளார். சாந்தமான அந்த கருணை நிரம்பிய முகம் "என்னை நம்பி வருபவருக்கு கண்டிப்பாக அபயமளிப்பேன்." என்று கூறுகிறது.

    வாகன படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. காமதேனு வாகனம் மற்றும் பூத வாகனம் முதலியவை மிகவும் அழகாக உள்ளது.

    உங்கள் நினைவுகளில் தங்கியிருக்கும் கோவில். அடிக்கடி சென்று தரிசித்ததில் நினைவுகளும் மாறாது பசுமையாய் அங்குதான் இருக்கும். மறக்க கூடிய பந்தமா ? உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. அம்மையும், அப்பனும் தங்கள் மனக்கவலைக்கு நல்ல மருந்தாக இருப்பார்கள்.

    பிரம்மாண்டமான தூண்களும் சிற்பங்களும் நல்ல கலை பொக்கிஷம். பெரிய கோவில் போலும். அழகாக நல்ல பராமரிப்புடன் சுத்தமாக உள்ளது.

    சிவபக்தரான , நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியினர், கதையும் அறிந்து கொண்டேன். முடவன் முழுக்கு கதையும் அறிந்து கொண்டேன் .இராவனேஷ்வரன் கதையும் ஏற்கனவே அறிந்ததென்றாலும், இப்போதும் படித்து தெரிந்து கொண்டேன். மேலும் அடுத்த பெரிய பிரகாரம் பதிவையும் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் வழக்கம் போல் தெளிவுடன் உள்ளன.//

      நன்றி.

      //அன்னை சன்னதிக்கு போகும் வழியும், பதினாறு கால் மண்டபமும் மிக அழகாக விஸ்தாரமாக உள்ளது.

      அன்னை அபயாம்பிகை தரிசனம் பெற்று கொண்டேன். அன்னை அவ்வளவு அலங்காரத்துடன் அழகாக உள்ளார். சாந்தமான அந்த கருணை நிரம்பிய முகம் "என்னை நம்பி வருபவருக்கு கண்டிப்பாக அபயமளிப்பேன்." என்று கூறுகிறது.//

      ஆமாம். அன்னை இருக்கும் இடம் அழகாய் இருக்கும். அன்னையும் நம்பி வருபவர்களுக்கு அபயம் அளிப்பள்தான் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் அன்னை அருள் செய்த கதை ஏராளம் உண்டு.

      //வாகன படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. காமதேனு வாகனம் மற்றும் பூத வாகனம் முதலியவை மிகவும் அழகாக உள்ளது.//

      அவை எல்லாம் மரச்சிற்பங்கள் அதில் எவ்வளவு பள பளப்பு காலத்தை கடந்தும் அந்த வண்ணங்கள் அழகாய் இருக்கிறது.

      //உங்கள் நினைவுகளில் தங்கியிருக்கும் கோவில். அடிக்கடி சென்று தரிசித்ததில் நினைவுகளும் மாறாது பசுமையாய் அங்குதான் இருக்கும். மறக்க கூடிய பந்தமா ? உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. அம்மையும், அப்பனும் தங்கள் மனக்கவலைக்கு நல்ல மருந்தாக இருப்பார்கள்.//

      ஆமாம், நீங்கள் சொல்வது போல அன்னையும், அப்பனும் மனக்கவலை போக்கும் நல்ல மருந்து தான். மாயவரம் போய் தரிசனம் செய்து வந்தவுடன் புத்துணர்வு கிடைத்து இருப்பது உண்மை.

      //பிரம்மாண்டமான தூண்களும் சிற்பங்களும் நல்ல கலை பொக்கிஷம். பெரிய கோவில் போலும். அழகாக நல்ல பராமரிப்புடன் சுத்தமாக உள்ளது.//

      ஆமாம். இவ்வளவு பெரிய கோவிலை பராமரிப்பது பெரிய வேலை.
      அதை செய்து வருபவர்களை பாராட்டி வணங்க வேண்டும்.

      //சிவபக்தரான , நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியினர், கதையும் அறிந்து கொண்டேன். முடவன் முழுக்கு கதையும் அறிந்து கொண்டேன் .இராவனேஷ்வரன் கதையும் ஏற்கனவே அறிந்ததென்றாலும், இப்போதும் படித்து தெரிந்து கொண்டேன். மேலும் அடுத்த பெரிய பிரகாரம் பதிவையும் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
      அனைத்தையும் ரசித்து படித்து விரிவாக கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.




      நீக்கு
  15. கோமதிக்கா சாரிக்கா..நீங்கள் சனிக்கிழமை போட்ட பதிவு எப்படியோ மிஸ் ஆகியிருக்கு...மிக்க நன்றிக்கா சொன்னதுக்கு...

    சன்னதிக்குப் போகும் வழி நல்ல பெரிய பிராகாரமாக இருக்கிறது இல்லையா...

    அபயாம்பிகை பெயரே அழகு...நீங்கள் அம்மனைப் பற்றிச் சொல்லியிருப்பது அருமை.

    16 கால் மண்டபம் பார்க்க அருமையாக இருக்கு. கொரோனா சமயம் விதிகள் தளர்த்திய போது இடைவெளி விட்டு நிற்க வட்டம் போட்டிருக்காங்க போல.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா சாரிக்கா..நீங்கள் சனிக்கிழமை போட்ட பதிவு எப்படியோ மிஸ் ஆகியிருக்கு...மிக்க நன்றிக்கா சொன்னதுக்கு...//

      ஒரே மாதிரி தலைப்பு இருப்பதால் ஏற்பட்டம் குழப்பம் என்று நினைத்தேன்.

      //சன்னதிக்குப் போகும் வழி நல்ல பெரிய பிராகாரமாக இருக்கிறது இல்லையா//

      ஆமாம்.

      //அபயாம்பிகை பெயரே அழகு...நீங்கள் அம்மனைப் பற்றிச் சொல்லியிருப்பது அருமை.//
      மாயவரத்தில் இந்த அம்மன் பேர் வைத்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்.


      //16 கால் மண்டபம் பார்க்க அருமையாக இருக்கு. கொரோனா சமயம் விதிகள் தளர்த்திய போது இடைவெளி விட்டு நிற்க வட்டம் போட்டிருக்காங்க போல.//
      அதற்காகவும் இருக்கலாம், ஆடி வெள்ளி, தை வெள்ளிக்கு விளக்கு பூஜை நடக்கும் போதிய இடைவெளி விட்டு அமர வட்டம் போட்டு
      இருக்கலாம், தெரியவில்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. இந்த நடைபாதை சரிவாக இருக்கும் ஓடி வர அவர்களுக்கு ஆனந்தமாக இருக்கும். //

    ஆமாம் உங்களுக்கு பழைய நினைவுகள் வந்திருக்கும்...ஒரு இடத்தில் சரிவாக இருந்ததா...அட பார்க்கிங்க் பகுதிகளில் இருக்குமே அது போல இருக்கிறதே என்று நினைத்தேன். ஆமாம் குழந்தைகள் விளையாட மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது பேரன் பேத்திகளும் அதில் விளையாடியது மகிழ்ச்சியான விஷயம்.

    அதுதான் உங்கள் இடமா...இங்கு இந்த ஊரில் நீங்கள் பல வருடங்கள் இருந்திருக்கீங்க இல்லையா...நிறைய நினைவுகள் இருக்கும்...

    அழகாக இருக்கிறது மண்டபம்.....கொஞ்சம் பரமாரித்தால் இன்னும் பளிச்சென்று இருக்குமோ என்றும் தோன்றியது, அக்கா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமாம் உங்களுக்கு பழைய நினைவுகள் வந்திருக்கும்...ஒரு இடத்தில் சரிவாக இருந்ததா...அட பார்க்கிங்க் பகுதிகளில் இருக்குமே அது போல இருக்கிறதே என்று நினைத்தேன். ஆமாம் குழந்தைகள் விளையாட மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது பேரன் பேத்திகளும் அதில் விளையாடியது மகிழ்ச்சியான விஷயம்.//

      ஆமாம், பழைய நினைவுகள் தந்த இடம். யானை தினம் வந்து அம்மை, அப்பனை வணங்கி போகும் யானை நடந்து வர அப்படி பாதை அமைத்து இருக்கிறார்கள்.

      //அதுதான் உங்கள் இடமா...இங்கு இந்த ஊரில் நீங்கள் பல வருடங்கள் இருந்திருக்கீங்க இல்லையா...நிறைய நினைவுகள் இருக்கும்...//

      ஆமாம்.

      //அழகாக இருக்கிறது மண்டபம்.....கொஞ்சம் பரமாரித்தால் இன்னும் பளிச்சென்று இருக்குமோ என்றும் தோன்றியது, அக்கா..//

      மழை நேரம் வெளிச்சம் இல்லை. கும்பாபிஷேகம் வேலை நடக்கிறது, இனி பளிச் என்று இருக்கும் கீதா.

      நீக்கு
  17. சக்கரம் வைத்த ஏணி பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அடுத்திருக்கும் இப்படியான வாகனங்களை எங்கள் ஊரில் சப்பரம் என்று சொல்வாங்க...

    வெள்ளை யானையின் மீது சப்பரம் போன்றது, அலங்காரத் தட்டிகள் , வாகனங்கள் எல்லாமே அழகு...அதன் பின்னான உழைப்பு..எத்தனைக் கலைஞர்கள் இதை எல்லாம் உருவாக்க!

    சடை அலங்காரம் கூட பாருங்க நுண்ணியமாகச் செய்திருக்காங்க.

    இராவணனின் இந்தக் கதைகள் கேட்டிருக்கிறேன் ஆனால் தசக்கிரீவன் இப்போதுதான் கேட்கிறேன் கோமதிக்கா..

    தூண்களின் அழகிய வேலைப்பாடுகள், அதன் மேலே மான் சிற்பம் எல்லாமே அத்தனை அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சக்கரம் வைத்த ஏணி பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அடுத்திருக்கும் இப்படியான வாகனங்களை எங்கள் ஊரில் சப்பரம் என்று சொல்வாங்க...//

      நாங்களும் அந்த பக்கம் ஊர் தானே கீதா, அதனால் நானும் சப்பரம் என்றே சொல்லி இருக்கிறேன்.

      //வெள்ளை யானையின் மீது சப்பரம் போன்றது, அலங்காரத் தட்டிகள் , வாகனங்கள் எல்லாமே அழகு...அதன் பின்னான உழைப்பு..எத்தனைக் கலைஞர்கள் இதை எல்லாம் உருவாக்க!//

      கோவில் திருவிழா என்றால் நிறைய திறமை வாய்ந்தவர்கள் உழைப்பு உள்ளது கீதா.

      //சடை அலங்காரம் கூட பாருங்க நுண்ணியமாகச் செய்திருக்காங்க.//

      காமதேனுவின் சடை அலங்காரத்தை படம் எடுப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவ்வளவு அழாகாய் இருக்கும்.

      இராவணனின் இந்தக் கதைகள் கேட்டிருக்கிறேன் ஆனால் தசக்கிரீவன் இப்போதுதான் கேட்கிறேன் கோமதிக்கா..//

      பத்து கழுத்து உடையவன் என்று தமிழ் அகராதி சொல்கிறது. நான் பத்து தலைகளில் கீரிடம் அணிந்தவன் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

      //தூண்களின் அழகிய வேலைப்பாடுகள், அதன் மேலே மான் சிற்பம் எல்லாமே அத்தனை அழகு.//
      ஆமாம் அழகுதான்.


      நீக்கு
  18. கணக்கடி பிள்ளையார் - புதிதாக அறிகிறேன் கோமதிக்கா. அவரைப்பற்றிய தகவலும் புதிது.

    நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியினரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி கொடுத்து விட்டார்.//

    ஓ இவர்கள் இருவரையும் வணங்கினால் இறைவனை தரிசித்தது போன்று

    அனவித்யாம்பிகை, ஆடிப்பூர அம்மன் என்று எத்தனை வகைகளில் சக்தி பரிமளிக்கிறாள்!!

    மேலே சொல்ல விட்டுப் போச்சு வாகனங்களை நன்றாகப்பராமரிக்கிறார்கள். வர்ணம் எல்லாம் நல்ல பளிச்சென்று இருக்கிறதே..

    அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா...அடுத்து பெரிய பிராகாரம் பார்க்க வெயிட்டிங்க்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணக்கடி பிள்ளையார் - புதிதாக அறிகிறேன் கோமதிக்கா. அவரைப்பற்றிய தகவலும் புதிது.//

      பிள்ளையார் பக்கம் உட்கார்ந்து கணக்கு எழுத வழு வழு என்று ஆசனம் அமைத்து இருப்பார்கள். அதனால் அந்த பேர்.

      //நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியினரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி கொடுத்து விட்டார்.//

      //இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
      தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!//

      சிவனடியார்களுக்கு என்றும் சிறப்பு தன்னில் ஒடுக்கி கொள்கிறார்.

      //மேலே சொல்ல விட்டுப் போச்சு வாகனங்களை நன்றாகப்பராமரிக்கிறார்கள். வர்ணம் எல்லாம் நல்ல பளிச்சென்று இருக்கிறதே..//

      ஆமாம் இன்னும் பளிச் என்று இருக்கிறது.
      அனைத்தையும் ரசித்து விரிவான பல பின்னூட்டங்கள் அளித்தமைக்கு நன்றி கீதா.

      நீக்கு
  19. உங்கள் நினைவலைகளும் மாயவரம் உங்கள் மனதில் எவ்வளவு ஆழமாய்ப் பதிந்திருக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்டேன். பிரகாரங்களெல்லாம் பெரிது பெரிதாக உள்ளன. அனைத்து வாகனங்களும் அருமையாகச் செய்யப்பட்டுள்ளது. திருவிழாக்காலங்களில் உங்கள் வீட்டிலும் உறவினர் கூட்டம் ஜேஜே எனக் குழுமி இருந்திருக்கும். அனைத்துப் படங்களும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள் எப்போதும் போல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //உங்கள் நினைவலைகளும் மாயவரம் உங்கள் மனதில் எவ்வளவு ஆழமாய்ப் பதிந்திருக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்டேன். //

      ஆமாம், அந்த ஊரின் நினைவுகளை, அந்த ஊரை அந்த ஊர் மக்களின் நண்பை என்றும் மறக்க முடியாது.

      //பிரகாரங்களெல்லாம் பெரிது பெரிதாக உள்ளன. அனைத்து வாகனங்களும் அருமையாகச் செய்யப்பட்டுள்ளது.//

      ஆமாம் . பிரகாரம், வாகனம் எல்லாம் அருமையாக இருக்கும்.

      //திருவிழாக்காலங்களில் உங்கள் வீட்டிலும் உறவினர் கூட்டம் ஜேஜே எனக் குழுமி இருந்திருக்கும். அனைத்துப் படங்களும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள் எப்போதும் போல்.//
      எங்கள் வீட்டில் உறவுகளும், நட்புகளும் கோவில் பார்க்க வந்து கொண்டே தான் இருப்பார்கள். அவர்களுடன் பக்கத்தில் உள்ள கோவிலகள் போய் கொண்டே இருப்போம். பக்கத்து வீட்டு அன்பர்கள் கேட்பார்கள் கோவிலை தவிர வேறு எங்கும் போக மாட்டேன் என்கிறீகளே! என்பார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. நாத சர்மா, அன வித்யாம்பிகை பற்றி இன்றே அறிந்தேன். இந்த சந்நிதிகளையும் நாங்க போனப்போப் பார்க்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாத சர்மா, அன வித்யாம்பிகை பற்றி இன்றே அறிந்தேன். இந்த சந்நிதிகளையும் நாங்க போனப்போப் பார்க்கலை.//

      இந்த கதை தெரியாமல் தரிசனம் செய்து இருப்பீர்கள். அம்மன் சன்னதியில்தான் அனவித்யாம்பிகை இருக்கிறார் அவரை வணங்காமல் அம்மனை வலம் வர முடியாது. நாதசர்மா அம்மன் சன்னதி போகும் வாசல் பக்கம் இருக்கிறார்.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு