செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

சூரியன் வருவது யாராலே!


அதிகாலை சூரியன் உதயமாகும்  நேரம்

ஆவணி மாதம் சூரிய வழிபாடு சிறந்தது.  நான் எடுத்த அதிகாலைச்சூரியன் படங்களை பதிவாக்கி  இங்கு பகிர்ந்து வருகிறேன்  . இதற்கு முன் போட்ட பதிவுகள் :-

இந்த பதிவில்  நாமக்கல் கவிஞர் பாடலும், சூரியன் படங்களும்.

சூரியன் வருவது யாராலே? தலைப்பு நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை  அவர்கள் எழுதிய  பாடல். உங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். சிலர் சிறு வயதில் அம்மா சொல்லி கொடுத்து பாடி இருப்பீர்கள் . என் அம்மா நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து இருந்தார்கள்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

மனக்கவலை நீக்கும் மாமதியே போற்றி!

காலை பொழுதில் பூ பறிக்க தோட்டம் சென்றேன். 

அப்போது காலை( 6.30) முழுநிலா மிக அழகாய் தெரிந்தது.


 அதிகாலை நிலா மதுரை வீட்டிலும் எடுத்து இருக்கிறேன், ஆனால் காலை நேரம்  முழு நிலா எடுக்கவில்லை இதுவரை. இந்த ஊரில் தான் எடுத்தேன்.  சூரிய உதயம் போல் சந்திரோதயம் பார்த்தேன். பெளர்ணமி அன்று எடுத்த நிலா, மாலை நேரம் எடுத்த நிலா என்று நிலா  பகிர்வு இந்த பதிவில்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

கீழச் சூரிய மூலை அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயம்



 பொங்கல் திருநாள் அன்று (15/01/2015) நாங்கள் கீழச்சூரிய மூலை என்ற

 ஊரில் உள்ள அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று
 இருந்தோம்.,இக் கோயில் கும்பகோணத்தில் இருந்து 
15.கி.மீ தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலுக்கு அருகே
 கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து இவ்வூர் அமைந்துள்ளது.

கீழச்சூரிய மூலை என்றகிராமத்தில் அருள்மிகு பவளக்கொடி அம்பிகை
சமேத ஸ்ரீ சூரிய கோடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

மண்ணைப் படைத்தவன் மண் சுமந்தான்





பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை    இன்று..

பல வருடங்களாய் பார்க்க நினைத்த விழாவை போன வருடம் பார்க்கும் நல் சந்தர்ப்பம் கிடைத்தது.

உறவினர்களுடன் சென்று வந்தேன். நிறைய கூட்டம், பிட்டுக்கு மண்
 சுமந்த கதை சொல்லப்படுகிறது., அது போல் நடித்துக் 
காட்டப்படுகிறது.

மண்டபத்தின் மேல் முக்கிய பிரபலங்கள் மட்டும் அனுமதி ,
கீழ் இருந்து படம் எடுப்பது மிகவும் சிரமமாய் இருந்தது.

வேலை செய்யாமல் சுகவாசியாய் பிட்டை சாப்பிட்டு விட்டு 
தூங்கும் காட்சி, அரசர் வந்து பிரம்பால் அடிப்பது, 
சகலமானவர்கள் மேலேயும் அடி விழுவதை 
வேதபாடசாலை மாணவர்கள் முதுகில் அடிப்பட்டதுபோல் நடித்துக் காட்டுவதும், சுவாமி தன்பங்காய் மண்ணைப் போட்டு
 வெள்ளத்தை தடை செய்வதும் மேடையில் நடித்துக் காட்டப்படுகிறது.

அந்த காட்சிகளும், கதையும் கீழே:-


வைகை வெள்ளம்  அடைக்க  ”அவர்வர் பங்குகளை  அடையுங்கள்”
 என்று பறைசாற்றி அழைத்தனர் .

மண்ணை படைத்தவன் மண் சுமந்தான் கரையடைப்பானாக!

                                                
 இறைவனை கூலியாளாக பெற்ற  பிட்டு விற்கும் முதியவள் தனக்கென்று
 விடப்பட்ட பகுதியை அடைப்பதற்குக் கூலியாள் கிடைக்காமல் பெரிதும் 
வருந்திய வந்தி  சோமசுந்தரப் பெருமானை நினைத்து
  “ ஆலவாய் அண்ணலே! பிட்டு விற்றுப் பிழைக்கும் ஏழை, நானோ அனாதை  எனக்கு கூலியாள் கிடைக்க மாட்டானா என்று அழுது வருத்தினார்.

வந்தியின் சோகக்குரலுக்கு செவிசாய்த்து கூலியாளாக வந்தார் .
“கூலி தந்து என்னை வேலைக்கு வைத்துக் கொள்பவர் உண்டா?” 
என்று கூவிக் கொண்டே வந்தார். கூலியின் குரலைக் கேட்டு 
மகிழ்ந்த வந்தி “எனது பங்குக்கு விடப்பட்டகரையை அடைத்து தருவாயா? 
என்று கேட்டார். அடைத்து தருகிறேன் எனக்கு கூலி என்ன தருவாய் ?
என்று பெருமான் கேட்டார்.

நான் விற்கும் பிட்டை தருகிறேன் என்றார் வந்தி. எனக்கு மிகுந்த பசியாக
 இருக்கு உதிர்ந்தபிட்டை கொடு உண்டு இளைப்பாறி உன் பங்கு இடத்தை அடைக்கிறேன் என்றார்.

ஆனால் சிறுபிள்ளை போல் கொஞ்சம் மண்ணைகூடையில் எடுத்து
 போடுவதும், கூடையை தண்ணீரில் போடுவதும் பின் எடுப்பதும் என்று
 விளையாடி அதில் களைத்து வந்தி கொடுத்த பிட்டை தின்று நீர் 
அருந்தி பக்கத்தில் உள்ளவர்களுக்கும் பிட்டை பகிர்ந்து அளித்தும்
 விளையாடினார்.

 வேலை வாங்குவோர் கையில் பிரம்புடன்  வந்து உன் பங்கு மட்டும்
 அடைபடாமல் இருக்கே என்று  கேட்டனர் அவர் அழகில் மயங்கி
 அடிக்க மனம் இல்லாமல் இவன் பித்தனா? எத்தனா? சித்தனா?
மன்னரிடம் சொல்வதே முறை என மன்னரிடம் கூறினர்.

அழகில் சிறந்த இந்த கூலியாள் பகுதி மட்டும் அடைபடவில்லை, 
ஆடியும் ஓடியும் களித்துக் கொண்டு இருக்கிறான் என்றனர். அரிமர்த்தன பாண்டியனுக்கு  கோபம் வந்து கரையடைப்பானை அழைத்து  
பொற்பிரம்பால் ஓங்கி அடித்தான்.

உடனே கூலியாக வந்த சோமசுந்தரப் பெருமான் கூடையுடன்
 மண்ணை கரையில் கொட்டி மறைந்தருளினார்.

இறைவன் முதுகில் பட்ட அடி  அனைத்து ஜீவராசிகள் மேலும்
 ஈரேழு புவனங்கள் மீதும் பட்டது..

வானத்தில் காட்சி அளித்து “செங்கோற் பாண்டியா!  
உன் பொருள்கனைத்தும் அறவழியிலே தொகுப்பட்டுத் 
தூய்மையாக விளங்கியவை. அவையனைத்தும் நமக்கும் நம்முடைய மெய்யடியார்களுக்கும்  திருவாதவூரன்  பக்தியுடன் கொடுத்தான், 
 அவனை துன்ப படுத்தினாய்.  அதனால் நரியை பரிகளாக்கினோம், 
பரிகளை மீண்டும் நரிகளாக்கினோம்.; மறுதினமும் கொடுமை 
படுத்தினாய் அதனால் வைகையில் வெள்ளம் பெருக செய்தோம்,  
வந்தியின் துயர் நீக்க கூலிக்காரனாக வந்தோம்,  பிட்டுண்டோம், 
உம்மிடம் பிரம்படி பட்டோம். வாதவூரானை அவனது 
விருபத்தின்படியே  விட்டுவிடுக. நீயும்  கனமதுர நீள் செளக்ய சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு  வாழ்ந்திருபாயாக !” என்று   கூறினார்.

விண்ணிலிருந்து வந்த தெய்வதிருமொழி கேட்டு  மாணிக்கவாசக 
பெருமானை கண்டு அவர் அடிகளில் விழுந்து வணங்கி தன்னை
 மன்னிக்கும் படி வேண்டினான்.

பலதிருபணிகள் செய்து பூஜை, திருவிழாக்கள் செய்வித்து அன்பும் 
அருளும் இன்பமும் நிரம்பிய  நல்லாட்சி  செய்து நற்புதல்வனை 
பெற்று  உரிய காலத்தில்  திருக்குமரனுக்குப் பட்டாபிஷேகம் செய்து
சிவபதவி அடைந்தார்.


தங்ககூடை, தங்க மண்வெட்டியுடன்


கூடையை தலையில் வைத்துக் கொண்டு வேலை செய்யாமல் வேடிக்கைப்
 பார்க்கும்  வந்தியின் கூலி ஆளாய்.




சிவனுக்கு அணியபட்ட நகைகள் போலவே இவரும் அணிந்து, உடல் முழுவதும் விபூதி பூசி இருக்கிறார்.


வில்வ இலையை தலையில் சூடி வந்து வந்தியிடம் உதிர்ந்த பிட்டு
 வாங்குகிறார்.

வந்தி அம்மையார்

மன்னர் வருவதை அறிவிக்கும் முரசுகளுடன் காளை



கரை அடைபட்டதா என்று பார்க்க வந்தார்  மன்னர்

யார் பாகம் அடைக்கபடாமல் இருக்கிறது என்று கோபமாய் கேட்டு 
வருகிறார் மன்னர்  .



மன்னர் வருகிறார் தங்கபிரம்பு எடுத்துக் கொண்டு கோபமாய் 

யார் அடைக்காமல் விளையாடி கொண்டு இருந்தது என்று கேட்கிறார்



வைகை ஆறாக அமைக்கப்பட்ட   தண்ணீர் தொட்டி, அதில் தான் கூடையில் மண் எடுத்து
 கொட்டி இருக்கிறார்.

வகைகரையில் தான் சிவன் என்பதை காட்டி அருளியது

சாமி எழுந்தருளிய மண்டபம். 

நன்றி கூகுள்



பிட்டு விற்கப்படுகிறது. இடிந்த பிட்டு மட்டும் தான் உனக்கு என்று சிவனிடம் வந்தி பாட்டி
சொல்லி விட்டதால் உதிர் பிட்டு தான் விற்கப்படுகிறது.



மன்னர்   வரும் பட்டத்து  யானையாக அலங்கரிக்கப்படும் முன் எடுத்த படம்.



மதுரையில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சொல்லும் பாடல்



                       வாழ்க வையகம் ! வாழ்க வையகம்!     வாழ்க வளமுடன் !                                     

========================================================

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

பாம்பு பிடிக்கும் பெண்



பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பயமில்லாமல் பாம்பு பிடிக்கும் பெண்

புதன் கிழமை காலையில் நல்ல வெயில் 10 மணி இருக்கும் . மகன் தோட்டத்திற்கு போனவன் "அம்மா பாம்பு" என்று சொல்லி வீட்டுக்குள் வந்தான். கண்ணாடி கதவை மூடி விட்டு "அம்மா பார்த்துக் கொள்ளுங்கள், நான் பாம்பு பிடிப்பவர்களுக்கு போன் செய்து விட்டு வருகிறேன். ஆபீஸ் வேலை வேறு இருக்கிறது. அது எந்த பக்கம் போகிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று போனான்."

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

பூவாகி , காயாகி , கனிந்த பழம்






கள்ளி செடி பூக்கும் முன். புறா அமர்ந்து இருக்கிறது

மகன் வீட்டுக்கு அருகில் இரண்டு கள்ளிச்செடிகள் இருக்கிறது,  முன் வாசல் பக்கத்திலிருந்தும், மாடிபால்கனியிலிருந்தும், அப்புறம் தோட்டத்திலிருந்தும்  பார்க்கலாம்.


மொட்டில் அமர்ந்து இருக்கும் மரங்கொத்திப் பறவை

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

காலை பொழுதே வருக ! வருக !


ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும்! 

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு 
மேரு வலம்திரி தலான்."

சூரியனை போற்றி பாடும் பாடல்

- மங்கல வாழ்த்துப் பாடல் , சிலப்பதிகாரம்

 காலை பொழுது வரும் சூரியன்  நம் மனதுக்கு மகிழ்ச்சியும் உடலுக்கும் நலமும் கொடுக்கும். 

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிழமை  சிறப்பு.  ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை  சிறப்பு. சூரிய வழிபாடு பழமையான வழிபாடு. சூரியன் ஒவ்வொரு பருவ காலத்திலும்  ,ஒவ்வொரு வண்ணத்தில் காட்சி தருவாராம். வசந்த காலத்தில் பொன் வண்ணம்(தங்க நிறம்) , கோடை காலத்தில் செண்பகப்பூ நிறம், மழைக்காலத்தில் வெண்மை நிறம், முன்பனிக்காலம் தாமரை நிறம் ,பின் பனிக்காலம் சிவப்பு நிறம் .

 ஆடி வெள்ளி சிறப்பு  , அது போல  ஆவணி ஞாயிறு சிறப்பு  .
நாங்கள் ஆவணி ஞாயிறு சூரியனுக்கு பொங்கல் வைத்து வணங்குவோம்.

இந்த மாதம்  (ஆகஸ்டு) 22 ம் தேதி ஆவணி ஞாயிறு வருகிறது. 

வீட்டு வாசலில்  ஆவணி மாதம்  அதிகாலையில் சூரியனுக்கு பொங்கல் வைக்கும் காட்சி ( தங்கை வீடு மதுரை)

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

அன்பு வழி

ஞாயிறு மாலை சீக்கிய குருத்வாரா போய் இருந்தோம். மகன் வீட்டிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ளது இந்த கோயில். மாலை நாலுமணிக்கு அழைத்து போனான் மகன் , நாங்களும், இன்னொரு குடும்பமும் மட்டும் இருந்தோம்.


மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட அழகி குருத்துவாரா. தலையில் துணியால் கட்டிக் கொண்டுதான்  உள்ளே போக வேண்டும். அவர்கள் ஒரு பெட்டியில் துணி வைத்து இருக்கிறார்கள். நாங்கள் வீட்டிலிருந்து தலைக்கு கட்டும் துணி கொண்டு வந்து விட்டோம்.

வலது பக்க  நுழைவு வாயிலின் வழியாக உள்ளே செல்ல வேண்டும். எதிரே தெரியும்  அழகிய தோரண வாயில் வழியாக மலையைப் பார்க்கலாம்.  

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

மழையும், மரங்கொத்திப் பறவையும்


மகன் வீட்டுத்தோட்டத்திற்கு வந்த அரிசோனா மரகொத்திப் பறவை.
 

போன மாதம்  மழை நன்றாக பெய்தது. பயங்கர இடி, மின்னலுடன் மாலை  முதல்  காலைவரை விட்டு விட்டு  பெய்து கொண்டு இருந்தது. மறுநாள் காலையில் மழை கொஞ்சம் விட்டு சாரல் மழை போல் பெய்தது. அதை ரசித்து சாரல் மழையில் உடல் நனைத்து நின்றது மரகொத்திப்பறவை.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

நினைவோ ஒரு பறவை ! விரிக்கும் அதன் சிறகை!

 வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்.

ஆடித்திருநாள்  நாளை  ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா? ( என்று மக்கள் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். மக்கள் கவலைப்பட்டது போலவே மயிலாடுதுறைக்குத் தண்ணீர் வரவில்லை. ஆடி மாதத்தில் காவேரி அன்னையை வணங்க முடியவில்லையே! என்று வருந்திக்கொண்டு  இருந்தவர்களுக்கு. காவேரி முழுக்குத் துறையில் செயற்கைக் குட்டை செய்து அதில் மக்கள் விழா கொண்டாடினார்கள் என்று செய்தியில் சொன்னார்கள்.
 நாங்கள் புகழ்பெற்ற வீரநாராயண ஏரியை(வீராணம்) பார்க்கப்போய் விட்டோம்.


எங்கள் ஊர் காவேரி,- தண்ணீர் இல்லை- தண்ணீர் வரவை எதிர்பார்த்து நிற்கிறது இரு கரையும்.

மாரியம்மன் கோவில் பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து அங்குள்ள அடிகுழாயில் தீர்த்தம்   எடுக்க வந்திருக்கிறார்கள். காவேரியில் நீர் இருந்தால் அதில் எடுத்துச்சென்றிருப்பார்கள்..

திரு இந்தளூர் பெருமாள் வந்து திருமஞ்சனம் ஆடும் மண்டபம்.
ஆடிப்பெருக்கிற்கு ஆற்றிற்கு செல்ல  சிறு தேர் செய்யும் சிறுவர்கள்.
கொள்ளிடத்தில் நீர் வரப்போவதால் அதைத் தூர்வாருகிறார்கள்.
அணக்கரை செல்லும் வழியில் உள்ள கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு விட்டது
காடுமாதிரி புதர் மண்டிவிட்டதால்  இயந்திரம்தான் விரைவாகச் சுத்தம் செய்யும், மனிதனை விட

அணைக்கரை (கீழ்அணைக்கட்டு)
கொஞ்சமாகப் போகும் தண்ணீரில் மக்கள் பூஜை செய்கிறார்கள்
வழியெல்லாம் ஆட்டை வெட்டிக் கொண்டு இருந்தார்கள், மக்கள் வாங்கிப் போய்க் கொண்டு இருந்தார்கள். இங்கு ஒரு ஆடு  மக்களுடன் நோன்பு கும்பிடுகிறது. அது அடுத்த நோன்புக்கு இருக்குமோ என்னவோ!
அணைக்கரைப் பாலத்தின்  அருகில் வாகனங்கள் நிறைய நிற்கிறது. விழாக் கடைகள் போட்டு இருக்கிறார்கள்
வீராணம் மதகடியில் ஆடிப்பெருக்குக்குப் படைக்க வந்த பெண்கள் கூட்டம். ”அதோ பாருடி நம்மைப் படம் எடுக்கிறார்கள் , எங்கள் படம் நாளை பேப்பரில் வருமா ?” என்று கேட்டார்கள், என்னிடம்  மலர்ந்த  முகத்துடன் இந்தப் பெண்கள்.என் சிறிய காமிராவைப் பார்த்தே இப்படிக் கேட்கிறார்களே, வெள்ளை உள்ளம் கொண்ட இந்தப் பெண்கள்!

கண்ணுக்கு இமைபோன்ற கண்ணாளன் கண்களில் தூசியா? விரைந்து போக்கும் அன்புக் கைகள்.(ஏரிக்கரையோரம் கிடைத்த பொக்கிஷம்)
வீரநாராயண ஏரி(வீராணம் ஏரி) அணைக்கட்டுக்குச் செல்லும் வழி இன்று திறந்து இருக்கும். தண்ணீர் திறந்துவிடும்போது பூட்டி விடுவார்கள் என்றார்கள்.

என் கணவர்
அணைக்கட்டிலிருந்து எடுத்த ஏரியின் காட்சி
 பூஜையை முடித்து விட்டு  அணைக்கட்டைப் பார்க்க வரும் மக்கள்.

கல்யாணமாலையை ஏரியில் விடும் பெண்ணும் மாப்பிள்ளையும்
கல்யாணமாலை
இந்த அம்மாதான் காப்பரிசி, வெல்லம் கலந்த அவல்பொரி கொடுத்தார்கள் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார்கள் நாங்கள் மயிலாடுதுறையிலிருந்து வருகிறோம் என்றவுடன் ஏரி பார்க்க வாந்தீர்களா? நான் சின்னபிள்ளையாக இருக்கும் போது ஏரியின் உச்சி வரை தண்ணீர் இருக்கும் நாங்கள் மேலே நின்றே படைத்து விட்டுப் போவோம் என்றார்கள்.  
அவர்கள் கொடுத்த காவேரி அன்னைக்குப் படைத்த பிரசாதம்

வீரநாராயண ஏரியில்  படகு விடும் காட்சியைப் பார்த்தால்  கோடிக்கரை பூங்குழலி நினைவுக்கு வருதா?  

அலைகடல் போல் விரிந்து பரந்த வீரநாராயண ஏரியக் காணொளி எடுத்தேன் ஆனால் அது இங்கு ஏறமாட்டேன்  என்று அடம் பிடிக்கிறது. இன்னொரு நாள் அதற்கு மனசு வரும் போது இங்கு உங்கள் பார்வைக்கு வரும்.
கீழே உள்ள வேதா அவர்களின் ஓவியத்தில் உள்ளதுபோல் பறவைகள் கறுப்பாய்ப் பறக்கிறதா? (ஏரிக்கரையில் பறவைகளின்  குதுகலம் அடுத்த பதிவில் வரும்.)

வெள்ளை நுரையுடன் அலை அடிக்கிறது
ஆசையே அலை போல ! நாம் எல்லாம் அதன்மேலே - ஓடம் போல
வீராண குழாய்கள்- ஆனால் இது புதுக் குழாயாக இருக்கிறது. பழையது மிக பெரிதாக இருக்கும். அதன் உள்ளே  வீடு இல்லாதவர்கள் குடித்தனம் நடத்தினர் என்று வரும்.

 கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில்  காவேரி ஆற்றையும் அதன் கரைகளின் அழகையும், நாட்டின் செழிப்பையும் சொல்கிறார். எல்லோரும் படித்து இருப்பீர்கள், மறுபடி படிக்க வசதியாக பொன்னியின் செல்வன் கதை மீண்டும் கல்கியில்  வருகிறது.  ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை ப்பொழுதில் தொடங்குகிறது கதை அதற்கு பொருத்தமாய்  3/8/2014 முதல் வந்துவிட்டது..

கல்கி அவர்களின் அழகான கற்பனை:-

ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரர் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீரச் சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச்சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியதேவன் என்பது அவன் பெயர்.நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த வீரநாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருக்கிறது.

ஆடிப் பதினெட்டாம்பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும் தொட்டுக் கொண்டு  ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பி கரையில்  உச்சியைதொட்டுக் கொண்டு அலை மோதிக் கொண்டிருப்பது  வழக்கம்
.
                 

ஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் வீரநாராயண ஏரிக்கு ஆடிக்குப் படைக்க வரும் பெண்கள் , ஆண்கள், சிறுவர்கள்
பூஜை சாமான்களை மூடி எடுத்து வரும் பெண்கள், சிறுதேர் உருட்டி வரும் சிறுவர்கள்,  பறவைகள் பறந்து வரும் அழகு!

வந்தியதேவன்  குதிரையில் போய்கொண்டே ரசித்த காட்சி:-

// அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து , தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக்கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும், பெண்களும் குழந்தைகளும், வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து வித விதமான அலங்காரங்கள்  செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, இருவாட்சி, செண்பகம், முதலிய மலர்கள் கொத்து கொத்தாய் அலங்கரித்தன். கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில்  தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு , சித்திரான்னம் முதலியவற்றைக்கமுகு மட்டையில் போட்டுக்கொண்டு உண்டார்கள்.இன்னும் சில தயிரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளை கணவாய்களின்   ஓரமாக  எறிய, மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக் கரைக்கு வெளியே விழுந்தடித்து  ஓடி வருவதைக் கண்டு கைகொட்டி சிரித்தார்கள்.ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களைஅவர்கள் அறியாமல் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறுபக்கத்தில் அவை ஓடிவருவதை கண்டு மகிழ்ந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிதுநேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப்பாட்டும் கும்மியும், சிந்தும் பாடினார்கள்.

வடவாறு பொங்கி வருது
வந்து பாருங்கள்
வெள்ளாறு விரைந்து வருது
வேடிக்கைபாருங்கள் தோழியரே!
காவேரி புரண்டு வருது
காணவாருங்கள், பாங்கியரே!”

என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத் தேவன் செவிகளில்  இன்ப வெள்ளமாக பாய்ந்தன.//


//வட காவேரி என்று பக்தர்களாலும், கொள்ளிடம் என்று பொதுமக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீரநாராயணஏரியில்  பாய்ந்து அதை பொங்கும் கடலாக ஆக்கி இருக்கிறது.அந்த ஏரியின் எழுபத்து நான்கு  கண்வாய்களின் வழியாகவும் தண்ணீர் குமு குமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்திற்கு நீர் வளத்தை  அளித்துக் கொண்டிருந்தது.//

இப்படி அந்த காலத்தில் நீர்வளம் நன்றாக இருந்து வளப்படுத்தியதாகச் சொல்கிறார் கல்கி. நீர்வளம் குறைவாக மழை தப்பி போனாலும் ஏரியின் நீர் பாசனம் வளத்தை அள்ளி தந்திருக்கிறது இந்த ஊருக்கு.

காட்டுமன்னர்குடி வீரநாராயணபெருமாள் பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம்.

போனமாதம் வீரநாராயணபுரம் சென்ற போது  எடுத்த படங்கள் பின் வருவன




    
காலைவேளையில் வயல்வெளி, கதிரவன் வரவுக்கு முன் புல்மேல் பனித்துளி
 


இரு பக்க மரமும் சேர்ந்து பாதைக்குக் கூடாரம் அமைக்கிறது
வீரநாரயாணப்பெருமாள் கோவில் பிரகாரத்தில் மதிலுக்கு  அப்பால்  குலை குலையாய்க் காய்த்துத் தொங்கும் மாங்கனி


மலர்கள் பூத்துக்குலுங்கும் காட்சி. வசந்த காலம் வந்து விட்டது என்று சொல்கிறது.மரங்களில் தேனிக்களின் கூடு நிறைய இருந்தது. காரில் போய்க் கொண்டிருக்கும்போது சிலவற்றை எடுக்கமுடியவில்லை. மயில்கள் அடர்ந்த மரக் கூட்டத்தின் நடுவே இருந்து அகவியது அதின் நீண்ட தோகையை மட்டும் காட்டி மறைந்தது. 
 வந்தியதேவன் குதிரையில் வீரநாராயண ஏரிக்கரையின் மேல் ஏரியின் அழகை  ரசித்துக்கொண்டு சென்றதுபோல் நாங்கள் அவ்வழியில் காரில் ரசித்துக்கொண்டே சென்றோம். கட்டுரை அடுத்த பதிவில் தொடரும்.

இதற்கு அடுத்த பதிவுகள் வீர நாராயண ஏரியும் பறவைகளும்   அடுத்து 'கொள்ளிடக்கரையில் ஆடிப்பெருக்கு விழா" இந்த இரண்டு பதிவுகளையிம் நேரம் இருந்தால் படித்து பாருங்கள் ஒரே நாளில் போனவை. மறக்க முடியாத ஆடிபெருக்கு விழா நினைவுகள். 

ஆடிபெருக்கு விழா வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு எல்லோரும் மகிழ்வாக ஆறு, குளங்கள், கோயில்கள் சென்று  கொண்டாட இறைவன் அருள் புரிய வேண்டும்.

//ஏரி ,குளம்,  கிண்று, ஆறு எல்லாம் நிரம்பி வழிய 
மாரி அளவாய் பொழிய மக்கள் வளமாய் வாழ்க//
- வேதாத்திரி மகரிஷி

                                   வாழ்க வையகம்!  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------------