அரிசோனா தமிழ்ப் பள்ளியில் மார்ச் 4 ம் தேதி திருவள்ளுவர் நூலகம் திறந்தார்கள்.
வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகள் நூலகம் சென்று புத்தகம் எடுத்து வருவது, அங்கே அமர்ந்து படிப்பது எல்லாம் செய்து வருகிறார்கள் விடுமுறை நாளில் நூலகம் செல்லும் வழக்கம் வைத்து இருக்கிறார்கள். தமிழ் புத்தகம் படிக்க வைக்க தமிழ்பள்ளியில் நூலகம் திறந்து இருக்கிறார்கள்.
இங்கு பேரனுடன் நூலகம் போய் வந்தேன், மிக அருமையாக இருந்தது, பெரிய நூலகம். அந்த நூலகம் பற்றி இன்னொரு நாள் பதிவு போட வேண்டும்.
தமிழ் கற்கும் மாணவர்களுக்கு அங்கு கற்றுக் கொடுக்கும் பாடத்தை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்காமல்
அவர்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த பலவகை நூல்களை அவர்கள் படிக்க வழி வகை செய்து இருக்கிறார்கள்.
ஏற்கனவே அவர்களை கதை எழுத வைத்து எழுத்தாற்றலை மேம்படுத்தினார்கள். பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி என்று நடத்திபரிசுகள், சான்றிதழ் கொடுத்து பாராட்டி இருக்கிறார்கள்.
மகன் செய்த திருக்குறள் புத்தக அமைப்பு சுழலும் .
சிறிய காணொளிதான் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
தமிழ்ச்சங்க இயக்குனர்கள், மற்றும் உறுப்பினர்களுடன்
புத்தகங்களை படிக்க படிக்க அவர்களின் தமிழ் கற்றல் ஆர்வம் மேலும் வளரும். தமிழ் மறக்காது இருப்பார்கள். பொன்னியின் செல்வன் படக்கதை இருக்கிறது.
//எந்த வீட்டில் நூல்நிலையம்
இருக்கிறதோ அந்த வீட்டில்தான்
ஒளிவிளக்கு இருக்கிறது.
ஒரு நூலகத்தையும் ஒரு தோட்டத்தையும்
வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும்
தேவையில்லை.
நூலகங்கள் திறமை
இல்லாதவர்களை கூட..
திறமைசாலிகளாக மாற்றி விடும்.
பல நூற்றாண்டின் அறிஞர்கள்
அனைவரும் கூடியிருக்கும்
மாளிகைதான் நூலகம்..
இனிவரும் அறிஞர்களுக்காக
அந்த மாளிகையின் கதவுகள்
திறந்தே இருக்கின்றன.
உயர்ந்த சிந்தனைகளை நமது
முன்னோர்கள் பரம்பரையாக
சேமித்த கருவூலகங்கள் தான்
புத்தகங்கள்..
அவைகள் நமக்கு
காலக்கண்ணாடியாக காட்சியளிக்கும்.
நூலகம் எனும் நண்பன் இருந்தால்
அறிவு.. ஆற்றல்.. பண்பு..
இவையெல்லாம் சிறக்கும்.
படைக்கும் ஆற்றல்,
படிக்கும் ஆற்றல் பெருகும்//
அரிசோனா தமிழ்பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பெற்றோர்கள் நிறைய புத்தகம் வாங்கி கொடுக்கிறார்கள். தமிழ், ஆங்கில புத்தகங்கள் வாங்கி தருகிறார்கள்.
பள்ளியிலும் பரிசாக புத்தகம் கொடுக்கிறார்கள்.
பேரன் இரவு புத்தகம் படிக்காமல் தூங்க மாட்டான். ஒரு மணி நேரம் ஏதாவது புத்தகம் படித்தபின் தான் தூங்குவான். படுக்கை பக்கம் கொஞ்ச புத்தகம் எப்போதும் இருக்கும்.
தமிழில் இந்த கதை படித்து கொண்டு இருக்கிறான். மதுரையில் வாங்கி வந்தான் மகன் .நானும் படித்தேன். நல்ல வேடிக்கையாக இருக்கிறது.
தெனாலி, ராமன் கதை, அக்பரும், பீர்பாலும், கிருஷ்ணா கதைகள், மற்றும் என் பிள்ளைகள் படித்த, சோவியத் நாடோடி கதைகள், பூந்தளிர் கதைகள் பைண்ட் செய்து வைத்து இருக்கும் கதைகள் படிப்பான்.
அவன் அறையில் புத்தக அலமாரி இருக்கிறது. அவன் எழுதிய கதைகள் கோப்பில் பத்திரமாக வைத்து இருக்கிறான்.
மாணவர்களுக்கு நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வந்து படித்து விட்டு பத்திரமாக திருப்பி கொடுப்பது, மற்றும் அடையாளத்திற்கு புத்தகத்தின் ஓரத்தை மடித்து வைப்பது அதில் ஏதாவது எழுதுவது எல்லாம் செய்யக்கூடாது என்று சிறு வயதிலேயெ சொல்லித் தரவேண்டும். எங்கள் பள்ளி ஆசிரியர் சொல்வார் நூலகம் புத்தகம் பலரும் படித்து பயன் அடைய வேண்டியது. அதனால் படித்து விட்டு பத்திரமாக பாதுகாத்து திரும்ப கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று. இங்கு உள்ள பிள்ளைகளுக்கு முன்பே சொல்லி கொடுத்து விட்டார்கள். அதனால் அவர்கள் புத்தகங்களை மிகவும் பத்திரமாக பாதுகாப்பார்கள்.
ஊரில் பொது நூலகத்தில் கதை புத்தகம் எடுத்து வந்தால் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு இருக்கும், அல்லது முடிவை எழுதி "இதற்கு மேல் நீ படிக்க வேண்டுமா "என்று கிறுக்கி வைத்து இருப்பார்கள். நமக்கு படிக்கும் ஆர்வம் போய் விடும். சில புத்தகங்கள் முடிவு இருக்காது. புத்தகங்கள் படிக்க எடுக்கும் போது முதலும், முடிவும் உள்ளேயும் எல்லா பக்கங்களும் இருக்கா என்று பார்த்து எடுத்து வருவேன்.
தொட்டனைதூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு.
-திருக்குறள்
தோண்ட தோண்ட ஊற்று நீர் கிடைப்பது போல நூல்களை படிக்க படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். நல்ல நூல்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வோம்.
நல்லதொரு பதிவு. நூலகங்கள் திறக்கப்படுவது இன்றைய காலகட்டத்துக்கு அவசியமான ஒன்று. முக்கியமாக குழந்தைகளுக்கு அதில் சுவாரஸ்யம் வரவேண்டும். வந்திருக்கிறது. பாராட்டப்படவேண்டிய விஷயம்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//நல்லதொரு பதிவு. நூலகங்கள் திறக்கப்படுவது இன்றைய காலகட்டத்துக்கு அவசியமான ஒன்று.//
ஆமாம் , நீங்கள் சொல்வது சரியே.
//முக்கியமாக குழந்தைகளுக்கு அதில் சுவாரஸ்யம் வரவேண்டும். வந்திருக்கிறது. பாராட்டப்படவேண்டிய விஷயம்.//
குழந்தைகள் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.
நேற்று எங்கள் உயர் அதிகாரியின் பனி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்டேன். பெண் அதிகாரி அவர். பல சிறப்புகள் பெற்றவர். அவரைப்பற்றி தொலைக்காட்சித் தொகுப்பு ஒன்றை விழாவில் காட்டினார்கள். அவர் எவ்வளவு பெரிய படிப்பாளி என்று தெரிந்தது. என் பாரதி என்று சொல்லி பாரதியார் கவிதைகள் சொன்னது இனிய ஆச்சர்யம்.
பதிலளிநீக்கு//நேற்று எங்கள் உயர் அதிகாரியின் பனி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்டேன். //
நீக்குஓ நல்லது.
//பெண் அதிகாரி அவர். பல சிறப்புகள் பெற்றவர். அவரைப்பற்றி தொலைக்காட்சித் தொகுப்பு ஒன்றை விழாவில் காட்டினார்கள். அவர் எவ்வளவு பெரிய படிப்பாளி என்று தெரிந்தது. என் பாரதி என்று சொல்லி பாரதியார் கவிதைகள் சொன்னது இனிய ஆச்சர்யம்.//
இவ்வளவு நாளாக அவரை தன்னைபற்றி காட்டிக் கொள்ளவில்லையா!
பனி ஓய்வு பெற்றதும் அவர் இன்னும் நிறைய படிப்பார், பொழுதுகள் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமைகள் இருக்கிறது.
திறமைகள் எப்போது வெளிபடும் என்று தெரியாது .
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
சிறப்பு..
பதிலளிநீக்கு///புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த பலவகை நூல்களை அவர்கள் படிக்க வழி வகை செய்து இருக்கிறார்கள்///
மிக சிறப்பு...
படங்கள் அருமை..
வாழ்க தமிழ்...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குமிக சிறப்பு...
படங்கள் அருமை..
வாழ்க தமிழ்...//
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
நல்லதொரு பதிவு
பதிலளிநீக்குதமிழ் வெளிநாடுவாழ் தமிழர்களால் தான் சற்று உயிர்ப்புடன் இருக்கிறது.
புத்தக முனைகளை மடிப்பவர்கள், புத்தகத்தை சுருட்டி கையில் வைத்திருப்பவர்கள் இவர்களை கண்டால் எனக்கு கொலை செய்ய வேண்டும் போல் ஆத்திரம் வரும்.
படங்கள் வழக்கம் போல அருமை
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//நல்லதொரு பதிவு
தமிழ் வெளிநாடுவாழ் தமிழர்களால் தான் சற்று உயிர்ப்புடன் இருக்கிறது.//
நன்றி.
//புத்தக முனைகளை மடிப்பவர்கள், புத்தகத்தை சுருட்டி கையில் வைத்திருப்பவர்கள் இவர்களை கண்டால் எனக்கு கொலை செய்ய வேண்டும் போல் ஆத்திரம் வரும்.//
கோபம் வரலாம், இவ்வளவு ஆத்திரம் வேண்டாம் ஜி
படங்கள் வழக்கம் போல அருமை//
உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.
சிறப்பு...
பதிலளிநீக்குஎனக்கு அனைத்துமே திருக்குறள் தான்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//சிறப்பு..
எனக்கு அனைத்துமே திருக்குறள் தான்...//
திருக்குறள் போதுமே! அனைத்தும் அதில் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கோமதிக்கா அருமையான பதிவு இது. அங்கு தமிழ் நூலகம் தொடங்குவது எவ்வளவு சிறப்பு! பார்க்கப் போனால் இங்கு விட அங்குதான் இப்படி நிறைய நடக்கின்றன. அதுவும் குழந்தைகளை சிறு வயதிலேயே வாசிக்கச் சொல்வது அப்பழக்கத்தை ஏற்படுத்துவது அங்கு நிறைய உண்டு.
பதிலளிநீக்குவிழா நிகழ்வுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடந்ததை அறிவிக்கிறது உங்கள் புகைப்படங்கள்!
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா அருமையான பதிவு இது. அங்கு தமிழ் நூலகம் தொடங்குவது எவ்வளவு சிறப்பு! //
நன்றி. தமிழ் நூலகம் தொடங்கி இருப்பது சிறப்புதான்.
//பார்க்கப் போனால் இங்கு விட அங்குதான் இப்படி நிறைய நடக்கின்றன. அதுவும் குழந்தைகளை சிறு வயதிலேயே வாசிக்கச் சொல்வது அப்பழக்கத்தை ஏற்படுத்துவது அங்கு நிறைய உண்டு.//
மாயவரத்தில் நூலகத்தில் வாசிப்பது புத்தகம் எடுத்து வருவது என்று மகன் சிறு வயதிலேயே உண்டு,நாங்களும் நிறைய புத்தகம் வாங்கி கொடுப்போம். வாசிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு இருக்கிறது, அதை நல்ல முறையில் வழி நடத்த வேண்டும்.
//விழா நிகழ்வுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடந்ததை அறிவிக்கிறது உங்கள் புகைப்படங்கள்!//
நன்றி கீதா
கவின் வாசிப்பு பழக்கம் மிகவும் மகிழ்வளிக்கிறது. என் மகன் அதே வயதில் வாசித்த புத்தகங்கள். எனிட் ப்ளைட்டன், ஃப்ராங்க்ளின் டிக்சன் எல்லாம் அருமையான புத்தகங்கள், உங்கள் பேரன் வாசிப்பது கூடவே தமிழ்ப்புத்தகங்களும் வாசிப்பது மிக மிக அருமையான மகிழ்வான விஷயம். அவரும் கதைகள் எலலம் எழுதியிருப்பது ஆஹா!! சமத்துக் குழந்தை.
பதிலளிநீக்குஆர்வம் இது வழி வழியாகத் தாத்தா பாட்டி, பெற்றோர் என்று வருகிறது....இந்தச் சூழல் எல்லாக் குடும்பத்திலும் இருந்தால் குழந்தைகள் நன்றாக வளர்வார்கள்! இறையருள் எப்போதும் உங்கள் எல்லோருடனும் இருக்கும், கோமதிக்கா
கீதா
//கவின் வாசிப்பு பழக்கம் மிகவும் மகிழ்வளிக்கிறது. என் மகன் அதே வயதில் வாசித்த புத்தகங்கள். எனிட் ப்ளைட்டன், ஃப்ராங்க்ளின் டிக்சன் எல்லாம் அருமையான புத்தகங்கள், உங்கள் பேரன் வாசிப்பது கூடவே தமிழ்ப்புத்தகங்களும் வாசிப்பது மிக மிக அருமையான மகிழ்வான விஷயம். அவரும் கதைகள் எலலம் எழுதியிருப்பது ஆஹா!! சமத்துக் குழந்தை.//
நீக்குகவின் பள்ளியில் சிறு வயது முதல் வீட்டில் தினம் 20 நிமிடம் படித்து வர வேண்டும். என்று சொல்வார்கள். உங்கள் மகனும் சிறு வயதில் வாசித்த புத்தகங்கள் பற்றி பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
//ஆர்வம் இது வழி வழியாகத் தாத்தா பாட்டி, பெற்றோர் என்று வருகிறது....இந்தச் சூழல் எல்லாக் குடும்பத்திலும் இருந்தால் குழந்தைகள் நன்றாக வளர்வார்கள்! இறையருள் எப்போதும் உங்கள் எல்லோருடனும் இருக்கும், கோமதிக்கா//
நீங்கள் சொன்னது போல படிக்கும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு. மருமகள், ஆங்கில, தமிழ் நாவல்கள் நிறைய படிப்பாள். இங்கு நூலகத்தில் ஆங்கில கதைகள் மட்டும் கிடைக்கிறது. அமேசானில் தமிழ் நாவல்கள் படிப்பாள். மகனுக்கு இப்போது நேரம் இல்லை.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
ஆமாம் கோமதிக்கா அங்கு புத்தகங்களை எப்படி வைத்திருக்க வேண்டும் பராமரிக்க வேண்டும் என்பதும் கூடக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
பதிலளிநீக்குமகன் அங்கு படித்த பள்ளி அரசு சார்ந்த பள்ளி. அவர்களே புத்தகங்கள் கொடுத்துவிடுவார்கள் பாடப்புத்தகங்கள் எல்லாம். ஒவ்வொன்றும் ஏதோ ஆராய்ச்சி செய்வது போன்ற புத்தகங்களாக இருக்கும். ஆனால் அறிவார்ந்த புத்தகங்கள். அந்த வகுப்பு வருடம் முடியும் போது அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். எனவே விதிமுறைகள் நிறைய உண்டு. கிறுக்கல், குறியீடுகள் எதுவும் பென்சில் பேனா கொண்டு போடக் கூடாது. முனைகள் மடித்தல் எதுவும் கூடாது அழுக்காகக் கூடாது என்று அருமையான விதிமுறைகள். ஒழுக்கம் வந்துவிடும் குழந்தைகளுக்கு.
அது போல அங்கு பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ் நு புத்தகக் கடை....கடைக்குச் சென்றால் நமக்குத் திரும்ப வரவே மனம் வராது. அத்தனை வகைப் புத்தகங்கள். வாங்கவேண்டும் என்றால் வாங்கலாம் இல்லை என்றால் அங்கேயே அமர்ந்து வாசித்துவிட்டும் வரலாம். சிறு குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. அவர்கள் அவர்களுக்கான புத்கங்களை எடுத்துக் கையாளலாம். இப்படிப் பல நல்ல விஷயங்கள் உண்டு
நல்ல பதிவு கோமதிக்கா
கீதா
//ஆமாம் கோமதிக்கா அங்கு புத்தகங்களை எப்படி வைத்திருக்க வேண்டும் பராமரிக்க வேண்டும் என்பதும் கூடக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.//
நீக்குஆமாம் , எங்கள் பள்ளி நூலக பொறுப்பில் உள்ள ஆசிரியரும் சொல்வார். இங்கும் சொல்லி விடுகிறார்கள்.
//மகன் அங்கு படித்த பள்ளி அரசு சார்ந்த பள்ளி. அவர்களே புத்தகங்கள் கொடுத்துவிடுவார்கள் பாடப்புத்தகங்கள் எல்லாம். ஒவ்வொன்றும் ஏதோ ஆராய்ச்சி செய்வது போன்ற புத்தகங்களாக இருக்கும். ஆனால் அறிவார்ந்த புத்தகங்கள். அந்த வகுப்பு வருடம் முடியும் போது அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்//
புத்தகங்கள் சில வெளியில் கிடைக்காது, விலையும் அதிகமாக இருக்கும், படிப்பு சம்பந்தமாக அனைத்தையும் வாங்கி வைத்து கொள்ள முடியாது. இது நல்ல வழி. வருட முடிவில் திருப்பி கொடுக்காத புத்தகம், பழுது செய்து இருந்தால் எல்லாம் அபராதம் விதிக்கப்படும் இல்லையா?
//விதிமுறைகள் நிறைய உண்டு. கிறுக்கல், குறியீடுகள் எதுவும் பென்சில் பேனா கொண்டு போடக் கூடாது. முனைகள் மடித்தல் எதுவும் கூடாது அழுக்காகக் கூடாது என்று அருமையான விதிமுறைகள். ஒழுக்கம் வந்துவிடும் குழந்தைகளுக்கு.//
விதிமுறைகளை கடைபிடிக்கும் வழக்கம் அப்புறம் பழக்கமாகி விடும். பொறுமை, ஒழுக்கம் போன்ற நற்பண்புகள் தானாக வந்து விடும்.
//அது போல அங்கு பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ் நு புத்தகக் கடை....கடைக்குச் சென்றால் நமக்குத் திரும்ப வரவே மனம் வராது. அத்தனை வகைப் புத்தகங்கள். வாங்கவேண்டும் என்றால் வாங்கலாம் இல்லை என்றால் அங்கேயே அமர்ந்து வாசித்துவிட்டும் வரலாம். சிறு குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. அவர்கள் அவர்களுக்கான புத்கங்களை எடுத்துக் கையாளலாம். இப்படிப் பல நல்ல விஷயங்கள் உண்டு//
நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. குழந்தைகள் எல்லாம் வசதி வாய்ப்பை பயன்படுத்தி பலன் அடைய வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
பதிவை ரசித்துப் படித்தேன்.
பதிலளிநீக்குகாணொளி கண்டு வியந்தேன். சுழலும் புத்தகம்
புத்தக முனையை மடிப்பது..ஹாஹாஹா... அடையாளத்துக்கான அட்டை இல்லாவிடில் வேறு எப்படி நினைவில் கொள்வது?
நூலகங்களில் கடைசி சேப்டர், பக்கம் இருக்கா என்று செக் செய்யும் வழக்கம் உண்டு. சிலர், நீங்கள் குறிப்பிட்டதுபோல கடைசிப் பக்கத்தைக் கிழித்திருப்பார்கள்.
நூலகம், அதற்கான புத்தகங்கள் என்று விளக்கமாக எழுதியுள்ளீர்கள். படங்களும் அருமை.
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவை ரசித்துப் படித்தேன்.
காணொளி கண்டு வியந்தேன். சுழலும் புத்தகம்//
நன்றி நெல்லை.
//புத்தக முனையை மடிப்பது..ஹாஹாஹா... அடையாளத்துக்கான அட்டை இல்லாவிடில் வேறு எப்படி நினைவில் கொள்வது?//
அடையாள அட்டைகள் செய்து இருக்கிறான் மகன் அதை படம் போட மறந்து விட்டேன், அதை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். என் பேத்தி அவளே டிசைன் செய்த அடையாள அட்டைகள் செய்து கொடுக்கிறாள். இன்னொரு பதிவில் அதி படம் எடுத்து போடுகிறேன்.
//நூலகங்களில் கடைசி சேப்டர், பக்கம் இருக்கா என்று செக் செய்யும் வழக்கம் உண்டு. சிலர், நீங்கள் குறிப்பிட்டதுபோல கடைசிப் பக்கத்தைக் கிழித்திருப்பார்கள்.//
ஆமாம் கடைசி பக்கம் மட்டும் இல்லை இடையில் ஏதாவது அடுத்து என்ன என்ற விறு விறுப்பான பக்கத்தை வேண்டுமென்றே கிழித்து இருப்பார்கள். அதில் அவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ! தெரியாது.
//நூலகம், அதற்கான புத்தகங்கள் என்று விளக்கமாக எழுதியுள்ளீர்கள். படங்களும் அருமை.//
சார் முனைவர் பட்டம் வாங்க எத்தனை நூலகம் தேடி தேடி படித்தார்கள். ஊர் ஊராக நூலகத்தில்போய் குறிப்பு எடுத்து வருவார்கள். இப்போது போல அப்போது வீட்டில் கணினி இல்லை தேடுதல் எளிதாகிவிடுகிறது இப்போது எல்லோருக்கும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி .
மிகவும் சிறப்பாக இருந்தது இந்தப் பதிவு. நூலகத்தின் தேவையை அனைவரும் உணர்ந்தால் நல்லதே. மாணவர்களுக்கு சிறு வயதிலேயே வாசிப்பை நேசிக்கக் கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ்,வாழ்க வளமுடன்
நீக்குமிகவும் சிறப்பாக இருந்தது இந்தப் பதிவு. //
நன்றி.
//நூலகத்தின் தேவையை அனைவரும் உணர்ந்தால் நல்லதே. மாணவர்களுக்கு சிறு வயதிலேயே வாசிப்பை நேசிக்கக் கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.//
ஆமாம், ரோஷ்ணி நிறைய புத்தகங்கள் படிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆதி சொன்னது, என்னை விட வேகமாக புத்தகங்களிய வாசித்து விடுவார் என்று சொன்னது நினைவில் வந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. அரிசோனா தமிழ் பள்ளியின் நூலக திறப்பு விழா பற்றி அனைத்தையும் படித்து தெரிந்து கொண்டேன். சிறப்பான ஏற்பாடுகள்.அங்கு தமிழ் கற்கும் அனைத்து குழந்தைகளின் ஆர்வத்திற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பள்ளியின் நூலகத்திறகாக உழைத்த அனைவரையும் பாராட்டுவோம். தங்கள் மகனின் பங்கும், அவர் அமைத்துத் தந்த பரிசு பொருள்களும் நன்றாக உள்ளது. சுழலும் திருக்குறள் புத்த அமைப்பு ரொம்பவும் நன்றாக உள்ளது. தங்கள் மகனுக்கும், பல புத்தகங்களை படித்து, தன் அறிவை சுடர் விட செய்யும் தங்கள் பேரனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நூலகம் பற்றிய பொன்மொழிகளை ரசித்துப் படித்தேன். விபரம் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
படங்கள் அனைத்தையும் நன்றாக எடுத்துள்ளீர்கள். அதற்கேற்றபடி பதிவையும் விளக்கமாக தந்து விபரங்கள் அறியச் செய்த உங்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
இரண்டொரு நாட்களாக ஜலதோஷம், ஜுரம் என உடல்நிலை பாதிப்பு. அத்தோடு வீட்டு வேலைகள் என பொழுதுகள் செல்கிறது. இப்படிச் சொல்லவே எனக்கும் வெட்கமாக உள்ளது. என்ன செய்வது? வருவதை அவன் தருவதை அனுபவித்துதானே ஆக வேண்டும். எல்லாம் இறைவன் செயல். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. விட்டுப் போன தங்களின் பதிவுகளையும் படிக்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்களை முந்தின இரண்டு பதிவுகளில் காணோம் என்றதும் நினைத்தேன், உடல் நிலை சரியில்லை என்று. அன்றே சளி பிடித்து இருப்பதை சொன்னீர்கள்.
உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.
//பதிவு அருமையாக உள்ளது. அரிசோனா தமிழ் பள்ளியின் நூலக திறப்பு விழா பற்றி அனைத்தையும் படித்து தெரிந்து கொண்டேன். சிறப்பான ஏற்பாடுகள்.அங்கு தமிழ் கற்கும் அனைத்து குழந்தைகளின் ஆர்வத்திற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.//
நன்றி வாழ்த்துக்களுக்கு.
//பள்ளியின் நூலகத்திறகாக உழைத்த அனைவரையும் பாராட்டுவோம். தங்கள் மகனின் பங்கும், அவர் அமைத்துத் தந்த பரிசு பொருள்களும் நன்றாக உள்ளது. சுழலும் திருக்குறள் புத்த அமைப்பு ரொம்பவும் நன்றாக உள்ளது. தங்கள் மகனுக்கும், பல புத்தகங்களை படித்து, தன் அறிவை சுடர் விட செய்யும் தங்கள் பேரனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.//
நூலகம் அமைய உழைத்த அனைவருக்கும், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சொன்னதற்கு நன்றி.
//நூலகம் பற்றிய பொன்மொழிகளை ரசித்துப் படித்தேன். விபரம் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.//
பொன்மொழிகள் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
//படங்கள் அனைத்தையும் நன்றாக எடுத்துள்ளீர்கள். அதற்கேற்றபடி பதிவையும் விளக்கமாக தந்து விபரங்கள் அறியச் செய்த உங்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.//
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
//இரண்டொரு நாட்களாக ஜலதோஷம், ஜுரம் என உடல்நிலை பாதிப்பு. அத்தோடு வீட்டு வேலைகள் என பொழுதுகள் செல்கிறது. இப்படிச் சொல்லவே எனக்கும் வெட்கமாக உள்ளது. என்ன செய்வது? வருவதை அவன் தருவதை அனுபவித்துதானே ஆக வேண்டும். எல்லாம் இறைவன் செயல். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. விட்டுப் போன தங்களின் பதிவுகளையும் படிக்கிறேன். நன்றி சகோதரி.//
வரும் துன்பத்தை தாங்கி கொண்டு வீட்டு வேலைகளை பார்க்கும் போது சில நேரம் தவிர்க்கமுடியாமல் இருக்கிறோம். விட்டுப்போன பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அது என்னமோ தெரியவில்லை. சொந்த நாட்டை விட்டு அயல் நாடு போனால் தாய் மொழியும், தாய் மண்ணின் பெருமையும் ஊற்றெடுக்கும், திருவள்ளுவர் நூலகம் நல்ல முயற்சி. தமிழ்நாடு அரசிடமும் நூல்கள் உதவி கோரலாம்.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன், வாழ்க வளமுடன்
நீக்குஅது என்னமோ தெரியவில்லை. சொந்த நாட்டை விட்டு அயல் நாடு போனால் தாய் மொழியும், தாய் மண்ணின் பெருமையும் ஊற்றெடுக்கும்,//
நம் மொழி பேசாத நாட்டில் நம் மொழி கேட்பது இனிமை. நம் மொழி பேசும் மக்களிடம் பேசுவது மகிழ்ச்சி. பிழைப்புக்கு வேறு நாடு போனாலும் தாய் மண்ணை மறக்க முடியாதே!
//திருவள்ளுவர் நூலகம் நல்ல முயற்சி. தமிழ்நாடு அரசிடமும் நூல்கள் உதவி கோரலாம்.
திருவள்ளுவர் நூலகம் நல்ல முயற்சி. தமிழ்நாடு அரசிடமும் நூல்கள் உதவி கோரலாம். //
நம் மக்கள் தாயகம் வரும் போது புத்தகங்கள் வாங்கி நூலகத்திற்கு கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கும், யோசனைக்கும் நன்றி.
வருங்கால சிறார்களுக்கு மிகவும் பயன்தரும் முயற்சி ஆரம்பித்தவர்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குமகனின் சுற்றும் கைவண்ணம் அருமை.
பேரனின் வாசிக்கும் ஆற்றவ் மகிழ்ச்சி தருகிறது. எனது பேரனும் புத்தகம்படித்து சொன்னபின்தான் தூங்குகிறான்.தமிழ் இன்னும் வாசிக்க வராது.ஆங்கிலம் ஓரளவு வாசிப்பான்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//வருங்கால சிறார்களுக்கு மிகவும் பயன்தரும் முயற்சி ஆரம்பித்தவர்களுக்கு பாராட்டுகள்
மகனின் சுற்றும் கைவண்ணம் அருமை.//
பாராட்டுக்கு நன்றி.
//பேரனின் வாசிக்கும் ஆற்றவ் மகிழ்ச்சி தருகிறது. எனது பேரனும் புத்தகம்படித்து சொன்னபின்தான் தூங்குகிறான்.தமிழ் இன்னும் வாசிக்க வராது.ஆங்கிலம் ஓரளவு வாசிப்பான்.//
பேரனை பற்றி பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி மாதேவி.
உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.
சிறப்பு. பள்ளியின் இந்த ஏற்பாட்டைப் பாராட்ட வேண்டும். நிகழ்வின் தொகுப்பும் படங்களும் பகிர்வும் நன்று.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//சிறப்பு. பள்ளியின் இந்த ஏற்பாட்டைப் பாராட்ட வேண்டும். நிகழ்வின் தொகுப்பும் படங்களும் பகிர்வும் நன்று.//
ஆமாம், அவர்களை பாரார்ட்ட வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நூலகம் என்றாலே மனதில் மகிழ்ச்சி தான். உங்கள் மகன் இருக்கும் ஊரில் நூலகம் திறந்திருப்பதற்கு வாழ்த்துகள். ஹூஸ்டனிலும் மீனாக்ஷி கோயிலில் மிகப் பெரிய நூலகம் இருந்தது. நாங்க 2016 ஆம் ஆண்டு போன வரை நன்றாகவும் இயங்கியது. அதன் பின்னர் போனப்போ நூலகம் எனச் சின்னதாக ஒரு அறையைக் காட்டினார்கள். மனதே நொந்து போய்விட்டது. மதுரையில் இருந்தப்போ கல்யாணத்துக்கு முன்னால் என் தாத்தா அவருடைய நூலக உறுப்பினர் அட்டைகளைக் கொடுத்திருந்தார். சலிக்காமல் போய்ப் புத்தகங்கள் எடுத்து வருவேன். சென்னையிலும் அம்பத்தூரில் என் பெயரில் நூலக உறுப்பினர் அட்டை இருந்தது.
பதிலளிநீக்குநூலகம் என்றாலே மனதில் மகிழ்ச்சி தான். உங்கள் மகன் இருக்கும் ஊரில் நூலகம் திறந்திருப்பதற்கு வாழ்த்துகள்.//
நீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி.
//ஹூஸ்டனிலும் மீனாக்ஷி கோயிலில் மிகப் பெரிய நூலகம் இருந்தது. நாங்க 2016 ஆம் ஆண்டு போன வரை நன்றாகவும் இயங்கியது
அதன் பின்னர் போனப்போ நூலகம் எனச் சின்னதாக ஒரு அறையைக் காட்டினார்கள். மனதே நொந்து போய்விட்டது//
ஏன் என்ன ஆச்சு? படிப்பவர்கள் குறைந்து விட்டதாலும் புத்தகங்கள் பழுது பட்டு விட்டதாலும் சின்ன அறைக்கு மாறி விட்டதா?
//மதுரையில் இருந்தப்போ கல்யாணத்துக்கு முன்னால் என் தாத்தா அவருடைய நூலக உறுப்பினர் அட்டைகளைக் கொடுத்திருந்தார். சலிக்காமல் போய்ப் புத்தகங்கள் எடுத்து வருவேன். சென்னையிலும் அம்பத்தூரில் என் பெயரில் நூலக உறுப்பினர் அட்டை இருந்தது.//
எனக்கு, பிள்ளைகளுக்கு, கணவருக்கு என்று தனி தனியாக நூலக உறுப்பினர் அட்டை இருந்தது. எல்லோரும் அவர்களுக்கு தேவையான, விருப்பமான புத்தகங்கள் எடுத்து வந்து படிப்போம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
உங்கள் மாமனார், கணவர் என ஆரம்பித்து இப்போது மகன், பேரன் வரைக்கும் புத்தகப்படிப்பில் ஆர்வம் கொண்டிருப்பது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது. நீங்களும் படிப்பீர்கள் என்பது தெரியும். புத்தகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் படிப்பதன் சுவை இணையத்தில் படிப்பதில் இல்லை.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//உங்கள் மாமனார், கணவர் என ஆரம்பித்து இப்போது மகன், பேரன் வரைக்கும் புத்தகப்படிப்பில் ஆர்வம் கொண்டிருப்பது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.//
பேரனும் ஆரவமாக இருப்பது மனதுக்கு மகிழ்ச்சிதான்.
//நீங்களும் படிப்பீர்கள் என்பது தெரியும். புத்தகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் படிப்பதன் சுவை இணையத்தில் படிப்பதில் இல்லை.//
ஆமாம், புத்தகத்தை கையில் வைத்து படிக்கும் சுகமே தனிதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.