செவ்வாய், 30 ஜூன், 2020

சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் -பகுதி-2


காலடியில் உள்ள பூர்ணா நதியில் சங்கரர் தன் தாயோடு  குளிக்கப் போகும் போது  முதலை  சங்கரரின் காலைக் கவ்வியது,  துறவறம் மேற்கொள்ள சங்கரர்  அனுமதி கேட்கும் காட்சி.

சங்கரரின்  தாய் தனது மகன் துறவறம் மேற்கொள்வதை விரும்பவில்லை.
'அம்மா! துறவறம் மேற்கொள்ள அனுமதி கொடுத்தால் இந்த முதலை என் காலை விட்டு விடும் " என்று சொல்ல , தாய் சம்மதிக்கிறார்.
ஆதி சங்கரர்  துறவறம் மேற்கொள்ள தன் அம்மா  ஆர்யாம்பாளிடம்  அனுமதி பெற்றது இப்படித்தான். அதைச் சித்தரிக்கும் காட்சி.

சனி, 27 ஜூன், 2020

சிருங்கேரி சாரதாம்பாள் கோயில்


துங்கா  நதியின் எதிர்க்கரையிலிருந்து எடுத்த கோபுரக் காட்சி

2015 ஜனவரி முதல் வாரத்தில் கர்நாடகாவிற்கு ஆன்மீகச் சுற்றுலா 6 நாள்  பயணம் செய்தோம் அதில் அருள்மிகு  குக்கி சுப்பிரமணியர் திருக்கோவில்  போனதை மட்டும் முன்பு பதிவு போட்டு இருந்தேன் அப்புறம் பதிவு தொடரவில்லை.

மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர்  . உடுப்பி கிருஷ்ணன்.

இந்த கொரோனா காலத்தில் கோவில் போக முடியவில்லை. போன கோவில்கள் பற்றிப்பதிவு போடலாம் என்று ஆரம்பித்து இருக்கிறேன். 

வியாழன், 25 ஜூன், 2020

பாலமலை அரங்கநாதர் திருக்கோயில்

                                                    பாலமலை அரங்க நாதர் கோவில்
இப்போது பெளர்ணமிக்கு 'சத்ய நாராயணா பூஜை' நடைபெறும் போலும்! படம் இருக்கிறது 

நாங்கள்  கோவைக்குப் போயிருந்தபோது பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து 12.கி.மீ  தூரத்தில் உள்ள  பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு  
18. 02. 2012ல் போனோம். நாங்கள் போன அன்று வைஷ்ணவ ஏகாதசி. சனிக்கிழமை. என் கணவரின்  தம்பி குடும்பத்தினருடன்  டாக்ஸி வைத்துக் கொண்டு போனோம். டிரைவர் பேர் வாசுதேவன் மிகவும் பொருத்தமாய் அமைந்து விட்டது.

இந்த கோவிலைப் பதிவில் போடலாம் என்று நான் எடுத்த படத்தைத் தேடினால் கிடைக்கவில்லை.  ஒரு படமும் இல்லை. பாலமலை குறிப்பு எழுதி சேமித்து வைத்தது மட்டும் இருந்தது.


போகவர எவ்வளவு  தூரம்  கோவில் வரலாறு பற்றிச் சிறுகுறிப்பு எழுதி வைத்தது எல்லாம் இருக்கிறது, படங்களை மட்டும் காணோம்.

அக்குறிப்பு;-

வியாழன், 11 ஜூன், 2020

மாடித்தோட்டம்



தங்கையின் வீட்டு மாடித்தோட்டம் 

தோட்டக்கலை என்பது நல்ல பொழுதுபோக்கு மட்டுமல்ல- மனதுக்கும், உடலுக்கும் உற்சாகத்தைத் தரும.

வீட்டுத்தோட்டத்தால் மனதுக்கு மகிழ்ச்சி, தோட்டத்தில் வேலைபார்ப்பதால்  உடல் ஆரோக்கியம்.  எல்லாம் கிடைக்கிறது. தோட்டத்தில் வைத்த செடிகளில் அதன் படிப்படியான வளர்ச்சி நிலைகளைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தினசரி ஒரே மாதிரி வேலைகளால் அலுப்பும் சலிப்பும் ஏற்படாமல் தடுக்கும் இந்த தோட்டக்கலை.

நம்மைச் சுற்றி உள்ள காற்றைச் சுத்தப்படுத்தி  ஆரோக்கியம் நிறைந்த சூழலைத் தருகிறது.