திங்கள், 20 மே, 2019

சின்னத் தோட்டம்



என் வீட்டு சின்னத் தோட்டம் என்று முகநூலில் பகிர்ந்த படங்கள் இங்கு.

பெரிய தோட்டம் வைக்க முடியவில்லை என்றாலும் இந்த சின்னத் தோட்டம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. அதில்  மலரும் பூக்களும் அப்படித்தான்  என்னை மகிழ்விக்கிறது. அப்பார்ட்மென்ட் பால்கனியில் இவ்வளவுதான் வளர்க்க முடியும்.
காலையில் இந்த செடிகளைப் பார்க்கும் போது அது தரும் மனதுக்கு மகிழ்ச்சி.






ஊருக்குப் போனபோது செடிக்குத் தண்ணீர். ஊற்ற வசதி இல்லாத காரணத்தால் இப்படி வைத்து விட்டுப் போனேன்.

தேங்காய் நார் நனைத்துப் போடுவேன்.

தண்ணீர் பாட்டில்கள் ஊசியால் சிறு துளையிட்டு வைத்து இருந்தேன்.

மாயவரத்தில் நிறைய  சிமெண்ட்  தொட்டிகளில்  செடிகள் வைத்து இருந்தேன்.

நான் எங்காவது ஊருக்குப் போனால்  பக்கத்து வீட்டினர், மற்றும் வீட்டில் வேலை செய்தவரும் பார்த்துக் கொள்வார்கள்.  
இப்போது அவர்களை நினைத்துக் கொள்கிறேன் . அங்கிருந்து வரும் போது அவர்களுக்கே கொடுத்து வந்து விட்டேன்.
செடிகளைப் பார்க்கும் போதோல்லாம் உங்களை நினைத்துக் கொள்கிறோம் என்கிறார்கள்.

மொட்டுவிடுவதும் மலர்வதும்  மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது.


ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு பூ


ஒன்று, இரண்டு, மூன்று
மொட்டின்  உள் அமைப்பு அழகு  அழகான டிசைன் இல்லே!

மொட்டு தினம் தினம்    வித்தியாசமாய்



மலரப்  போகிறது




மலர்ந்து விட்டது
மொட்டும், மலரும் அழகுதானே!




மொட்டும் மலரும்





பால்கனியில் எங்கே பனித் துளி என்று நினைக்கிறீர்களா ? தண்ணீர் விட்ட போது இலைகளில் தண்ணீர்த் துளி அழகாய் இருந்தது உடனே எடுத்த படம்





ஒரு செடியில் மலர்ந்த இருமலர்கள்



இரட்டை இரட்டை ஒன்று ஒன்று ஒன்று ஒன்று
என்ன கணக்கோ இறைவன் கணக்கு!

நித்ய கல்யாணிச் செடியின்  படங்களை    முகநூலில் பகிர்ந்த போது  கீதா சாம்பசிவம்  அவர்கள் கொடுத்த பின்னூட்டங்கள் . இது பலருக்கு பயன்படும் என்று இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

Geetha Sambasivam மருத்துவ குணம் கொண்ட நித்ய கல்யாணிச் செடி. ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றுக்கு அருமருந்து. சித்த வைத்தியத்தில் இவ்வகை நோய்களுக்கு இதைக் காப்சூல் வடிவில் கொடுக்கிறார்கள். நாடித்துடிப்பையும் சமன் செய்யும். பெண்களுக்கான மாதாந்திரத் தொந்திரவுகளுக்கும் தீர்வு. தாகம் தீர்க்கும், பசியை உண்டாக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும்.


Geetha Sambasivam எங்கும் எப்போதும் வளரும் தன்மை கொண்டது. எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். இதன் அருமை நம்பில் பெரும்பாலோருக்குத் தெரியவில்லை, புரியவில்லை.

Geetha Sambasivam புற்று நோய்க்குக் கூட மருந்து தயாரிக்கின்றனர். இலை, வேர், பூக்கள் எல்லாமே பயனாகும். கஷாயம் வைத்துத் தொடர்ந்து குடித்தால் நீரிழிவுக்கு நல்லது என்பார்கள்.சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.


இந்த பூவை வீட்டில் வைக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால்
பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்தர் அன்னையின் மந்திர மலர்கள் புத்தகத்தில்   

பூமித்தாய் நமக்காகச் செய்யும் பிரார்த்தனைகளே மலர்கள்! ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு மணம் உண்டு. அதே போல் ஓவ்வொரு மலருக்கும் தனித் தனி குணம் உண்டு.என்கிறது ஆன்மீக இயல்.

அன்பு அன்னை அவர்கள் மலர்களின் ஆன்மீக மகத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள்.

நம் உடலுக்கு பலமும், மனதுக்கு நலமும் வாழ்வுக்கு வளமும் சேர்க்கிற ஆற்றல் மலர்களுக்கு உண்டு  என்று சொல்கிறார். பலவகை மலர்களும் அவற்றின் மூலம் பெறக்கூடிய பலன்களும் இந்தப்புத்தகத்தில் உள்ளது - நித்தியகல்யாணியின்  பலன், பயன்கள் . அவை கீழே:-

//நித்தியகல்யாணி - முன்னேற்றத்துக்கான குறியீடு  என்று.
நாம் இந்த மண்ணில்  ஏன் பிறந்தோம்? என்கிற கேள்வியே வளர்ச்சிக்கு வித்திடும்.
வளர்ச்சி இடையறாது நிகழந்து கொண்டே இருக்க வேண்டும். ஒன்றை அடைவதற்கான வேட்கையின் விளைவு அது.
வளர்ச்சி தடையற்றதாக  இருக்க வேண்டும் முழுமையானதாக இருக்க வேண்டும். முழுமையன்றி வேறெதிலும் திருப்தி அடையாத மனநிலைதான் துரித முன்னேற்றத்துக்கு வழி வகுப்பது.

முன்னேற்றம் என்பது மங்களகரமானது, களிப்பூட்டுவது.
நித்தியகல்யாணிப் பூக்களை அன்னையின்  திருவடிகளில் அன்றாடம் சமர்ப்பித்து வாருங்கள் நிச்சயம் முன்னேறுவீர்கள்//

என்று  ஸ்ரீ அரவிந்த அன்னையின் 'மந்திர மலர்கள்' புத்தகத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

என் வீட்டில் துளசி, கற்றாழை, ஓமவல்லி,  சின்ன நந்தியாவட்டை, நித்தியகல்யாணி,  பச்சைக் கனகாம்பரம். மணி பிளான்ட் செடி, மற்றும் பெயர் தெரியாத செடி  இருக்கிறது.
பச்சை கனகாம்பரம் மொட்டு
மலர்
மொட்டும் மலரும்


பெயர் தெரியாத செடி (தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)
இன்சிலின் செடி என்று சொல்கிறார்கள்

வலச்சுலழாக வளரும் செடி. அதன் இலைகளை துவையல் அரைக்கலாம் என்று என் ஓர்ப்படி கொடுத்தார் , கோவையிலிருந்து வந்த செடி. இன்னும் அரைத்துப் பார்க்கவில்லை. இரண்டு கிளைகள் உடைத்துக் கொடுத்தார் ஓர்ப்படி, இரண்டும் நட்டேன், ஒன்றைக் குருவி தூக்கிச் சென்று விட்டது.


இலைவிடுவதும் அழகு 
                                                                இலை விரிவதும் அழகு

                                         
புள்ளிச் சில்லைக் குருவி இதன் துளிர்களைக் கூடு கட்டப்   பறித்து சென்று விடுகிறது, அதனால் இப்போது வீட்டுக்குள். ஆடு வாய் வைத்தால் செடி வளர நாள் ஆகும் என்பார்கள், இந்த குருவி வாய் வைத்த செடியும் வளர நாள் ஆகிறது.

 எல்லாத் தொட்டிகளிலும் கீழாநெல்லிச் செடி தானாக வளர்ந்து இருந்தது. அதன் மருத்துவ குணம் தெரிந்து அனைத்தையும் வளைத்துச் சாப்பிட்டு விட்டது புறா. ஒரு செடி கூட இப்போது இல்லை.

காய்கறிக் கழிவுகளைச் செடிகளில் போடுவதால் மிளகாய்ச் செடி தானாக வந்தது, ஆனால் இன்னும் பூ பூக்கவில்லை.


மஞ்சளும், ஓமவல்லியும்

                                       ஓமவல்லி  இலையில் பஜ்ஜி , வெங்காய பஜ்ஜி  

ஓமவல்லி,( கற்பூரவல்லி)  நம் உடலுக்கு மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தையும் நன்றாக இருக்க உதவுகிறதாம்.  விஷப்பூச்சிகள், கொசு முதலியவற்றை விரட்ட உதவுகிறது. 

துளசியும்  நிறைய மருத்துவ குணம் நிறைந்தது. கோடை காலத்தில்  கோடை இடி பயங்கரமாய் இருக்கும், அது தாக்காமல் இருக்கவும் இந்த துளசி பயன்படும். சிறந்த இடிதாங்கி.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவத்தன்மை இருக்கிறது. அதை எல்லாம் எழுதினால் பதிவு நீண்டு விடும் ,அதைத்  தனிப் பதிவாக போடலாம்.

//கோமதி அக்கா ஏன் அமைதியா இருக்கிறா?... போஸ்ட்டும் போடாமல்..//
அதிரா, உங்களிடம் சொன்னது போல்  என் சின்னத் தோட்டப் பதிவு    போட்டாச்சு.

வாழ்க வளமுடன்.

--------------------------------------------------------------------------

85 கருத்துகள்:

  1. எல்லா படங்களுமே அழகா இருக்கு அக்கா. உண்மையில் புக்கள் மனதுக்கு மிகவும் சந்தோஷத்தை தருபவை. நீங்கள் வைத்திகுக்கும் பூச்செடிகள் அழகாக இருக்கு. நாங்க வெள்ளை பூவினை நித்தியாகள்யாணி என்போம். ஊதாகலர் பூ என்ன பெயர்.மாலை கட்ட அருமையா இருக்கும். நான் இங்கு ஓமவல்லி(நாங்க கற்பூரவள்ளி என்போம்) வைத்திருக்கேன். மகன் இருமல் வந்தால் தானே2 இலை பிடுங்கி சாப்பிடுவார். சரியாகிவிடும். படங்களை ரசித்து ரசித்து எடுத்திருக்கிறீங்க அக்கா.
    ஊரிலிருந்தபோது நிறைய பூச்செடிகள். பூக்கள். அப்போ அதன் அருமை தெரியவில்லை. இங்கு நிறைய விதவிதமான வண்ணங்களில் இருக்கு. ஆனா வாங்கி வைக்க பயமா இருக்கு. காலநிலை. 4 பூச்செடி வீட்டுக்குள் இருக்கு. வெயிலும் இல்லை. வெளியிலும் வைக்க இயல்வில்லை செடியை. நல்லதொரு பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி. வாழ்க வளமுடன்.
      என் சின்னத் தோட்டம் உங்களை வரவழைத்து விட்டதே!

      நித்தியகல்யாணி வெள்ளை, சிவப்பு, ரோஸ் கலரில் இருக்கிறது.
      மாயவரத்தில் வெள்ளையும், இந்த ரோஸ் கலரும் வைத்து இருந்தேன்.
      ஊதாகலர் பார்த்தது இல்லை.
      கற்பூரவள்ளி என்றும் சொல்வது உண்டு அம்மு.
      இருமல், சளி , மற்றும் வயிற்றில் வரும் தொந்திரவுகள் அனைத்துக்கும் இது பயன்படும்.
      தினம் இதை பார்ப்பது ஆன்நதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றத்தில் மொட்டு மலரும்.
      சில குளிர்காலம் பூக்கும், சில வெயில் காலம் பூக்கும் பூக்கள் உண்டு.
      பனி பெய்யும் போது அனைத்தும் கருகி விடும் தானே! விலை கொடுத்து வாங்கி வீணாகி போனால் மந்து கஷ்டபடும். உங்கல் வசந்த காலத்தில் மலர் செடிகளை வைத்து மகிழுங்கள் பிரியசகி அம்மு.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. பெயர் தெரியாத செடி என்று சொன்னீர்களே அதன் பெயர் இன்சுலின் செடி சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த செடி பெரிதும் உதவும்.நன்றி

      நீக்கு
    3. தெரிந்து கொண்டேன் நன்றி
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  2. பெயர் தெரியாத செடி ரெம்ப அழகா இருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகி, அதனால் தான் இங்கு பகிர்ந்தேன்.

      நீக்கு
    2. இன்சுலின் செடி பெயர் தெரிந்து கொண்டீர்களா

      நீக்கு
    3. வணக்கம் ரகு, வாழ்க வளமுடன்
      இன்சுலின் செடி பேர் தெரிந்து கொண்டேன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. பூவென்றாலே புன்னகைதானே நினைவில் வரும்,
    நினைத்தாலே இனிக்கும் தித்திப்பான பதிவு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பூந்தோட்ட கவிதைக்காரன் அவர்களே , வாழ்க வளமுடன்.
      சின்னத் தோட்டத்தைப்பார்க்க பூந்தோட்டம் வந்து இருப்பது மகிழ்ச்சி.
      பூவென்றாலே புன்னைகைதான் உண்மை.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. பூக்களின் அழகும் அதை எடுத்த விதம் மேலும் அழகூ்ட்டுகிறது சகோ.

    எல்லா படங்களும் திறக்க வெகுநேரம் காத்திருந்தேன் இணையம் பிரச்சனை.

    பூக்களை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு முகம் பிரகாசிக்கும் என்பார்கள் உண்மைதான் போலும் மன வருத்தத்தை சற்றேனும் கலைக்கிறது பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      எல்லா படங்களையும் சிரமத்திற்கு பின் பார்த்து மகிழ்ந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      மலர்போல பேரன், பேத்தி பிறக்க போகிறார்கள் உங்களுக்கு. உங்கள் மனக்கவலை அந்த சிரிக்கும் மலர்த்தோட்டத்தைப் பார்த்து பறந்து விடும்.பாடுவீர்கள் 'சின்ன சின்ன ரோஜா சிங்கார ரோஜா அன்ன நடை நடந்து ஆடி வரும் ரோஜா' என்று.

      என் கவலைகளையும் பால்கனி தோட்டம் கலைத்து புன்னகைபுரிய வைக்கிறது ஜி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. இது தான் உண்மையான மகிழ்ச்சி அம்மா...

    பூக்கள் அனைத்தும் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. தோட்டம் வைத்துப் பராமரிப்பபவர்களுக்கு இதய நோய் வருவது கம்மி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படிப் பராமரிக்கும் பொறுமை எனக்கு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

      //தோட்டம் வைத்துப் பராமரிப்பபவர்களுக்கு இதய நோய் வருவது கம்மி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.//

      நல்லது தான், அப்படித்தான் சொல்வார்கள். பராமரிப்பது கஷ்டமாய் இருக்கிறது.
      பறவைகளுக்கு உணவு வைக்கும் பால்கனியில் பறவைகள் ஒரு செடியை விட்டு வைப்பது இல்லை. தூணிகள் காய போடும் பால்கனியில் பயந்து கொண்டு வராமல் இருக்கிறது.

      காலை வெயில் வேறு பட மாட்டேன் என்கிறது 12 மணிக்கு மேல் உள்ள வெயில் தான் செடிகளுக்கு வருகிறது. காலை, மாலை வெயில்தான் செடிகளுக்கு , மனிதர்களுக்கு நல்லது. ஏதோ ஆசை வைத்து இருக்கிறேன் நானும் செடிகளை.

      நீக்கு
  7. நித்ய கல்யாணிச்செடி எங்கள் வீட்டு மொட்டை மாடியிலும் ஒன்று இருந்தது. நானும் முன்பு சில படங்கள் எடுத்து எங்கள் தளத்திலும் பேஸ்புக்கிலும் போட்டிருக்கிறேன். அழகிய மலர். அது மலர்வதும் அழகு. "மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே" பாடல் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நித்ய கல்யாணிச்செடி அழகான மலர் தான். மகன் ஊரில் மேலும் அழகாய் இருக்கிறது.
      நானும் முன்பு பேஸ்புக்கிலும், இங்கும் போட்டு இருந்தேன்.

      "மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே" பாடல் நினைவுக்கு வருகிறது."

      கங்கை அமரனின் இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

      நீக்கு
  8. பெயர் தெரியாத அந்தச் செடி வளைந்து வளர்வது அழகாய் இருக்கிறது. இலைகள் விரிவதும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் தெரியாத அந்த செடியின் பெயரை எனக்கு கொடுத்த என் ஓர்ப்படியிடம் கேட்டால் அவர்களுக்கும் இது தெரியவில்லை. யாரோ அவர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள்.இலைகள் விரிவதும் அழகுதான்.
      உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. அந்தச் செடியின் பெயர் மனதில் இருக்கு. வெளியே வர மாட்டேன் என அடம். எதுக்கும் அவரிடமும் கேட்கிறேன். ஆர்க்கிட் வகை இது என கூகிள் தேடலில் படித்தேன். ஆனால்!!!! பார்க்கணும், மறுபடி.

      நீக்கு
    3. தெரிந்தால் சொல்லுங்கள் கீதா
      நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    மிக அழகான பூக்களின் படங்கள். சின்ன தோட்டம் வைத்து தினமும் பராமரித்து பூக்கள், செடிகள் முறையை பூப்பது, வளருவது என கவனித்து வந்தால், மனசு சந்தோஷமாக இருக்கும். உண்மைதான்.. அவைகளுடன் தினமும் பேசி வந்தால் அவையும் புத்துணர்ச்சியுடன் வளரும். எனக்கும் இப்படியெல்லாம் வளர்க்க வேண்டுமென ஆசை. ஆனால் இங்கு இடவசதி கம்மி. இருக்கிற இடத்தில் இரண்டொரு செடி வைத்திருந்தேன். இப்போதும் வைத்திருக்கிறேன்.. துளசியும் மஞ்சள் செடியும், ஒரளவு நன்றாக உள்ளது.

    தங்களது பெயர் தெரியாத செடி வலஞ்சுழியாக வளைந்து வளருவது அழகாக உள்ளது. ஊதாப்பூக்கள் செடிகளும் அழகாக உள்ளது. மொட்டுக்களும், மலர்கள் விரிவதுமாக, மிக அழகாக ஒவ்வொரு நிலையிலும் படமெடுத்து விரிவாக போட்டிருக்கிறீர்கள். தங்கள் வீட்டு சின்ன தோட்டத்தை மிக அழகாக வளர்த்து பேணி வருகிறீர்கள். ஆமாம்... காலத்திற்கேற்ற வகையில் தாவரங்கள் வளரும். இலைகளும் துளிர்த்து வரும் போது மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி எட்டிப் பார்க்கும். ஓமவல்லி பஜ்ஜிகள் கண்ணை கவர்கிறது. இதுவரை சாப்பிட்டதில்லை. படித்துக் கொண்டு வருகையில், சகோதரி அதிரா அவர்களின் தோட்டப்பதிவு நினைவுக்கு வந்தது. தாங்களும் நினைவாக சகோதரி அதிரா அவர்களின் பதிவை நினைவூட்டி கடைசியில் குறிப்பிட்டு உள்ளதை பார்த்தேன்.

    எங்கள் வீட்டு அப்பார்ட்மெண்ட் மொட்டை மாடியில் ஒரு க்ரூப்பாக (அதில் நான் இல்லை.) அனைவரும் சேர்ந்து வளர்ந்த செடி கொடிகளை புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறேன். பகிரத்தான் நேரம் வரவில்லை. உங்கள் பதிவை பார்த்ததும், அதைப்போடும் ஆவல் எழுந்தது. பார்ப்போம்.! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது சரிதான், அவை வளர்வதை, பூப்பதை பார்த்து வாந்தாலே மனதுக்கு மகிழ்ச்சி தான். காலையில் அதைப் பார்க்க போகும் போது காற்றில் ஆடுவது என்னை கண்டு வரவேற்பது போல் மகிழ்ச்சி அளிக்கும்.

      இந்த படங்கள் எல்லாம் தினம் தினம் பேஸ்புக்கில் போட்ட படங்கள்.
      அப்பார்ட்மெண்ட் குடியிருப்போர் வீட்டு வாசலில் வைத்து இருக்கும் தொட்டிச்செடிகளில் உள்ள பூ படங்களை படம் எடுத்து முன்பு போட்டு இருக்கிறேன். மொட்டை மாடி யாருக்கும் கிடையாது. கேஸ் பைப் லைன் போவதால் குழந்தைகள் எதையாவது திறந்து விட்டால் ஆபத்து என்று மொட்டைமாடி கிடையாது.

      என் தங்கை மாடித்தோட்டம் போட்டு இருக்கிறாள் , வெயிலுக்கு பச்சை பந்தல் எல்லாம் போட்டு இருக்கிறாள் ,பார்க்க அழைத்துக் கொண்டு இருக்கிறாள் போக வேண்டும்.

      ஓமவல்லி பஜ்ஜியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நான் எந்த காயில் பஜ்ஜி செய்தாலும் கடைசியில் ஒரு ஓமவல்லி பஜ்ஜி செய்து விடுவேன், அது வயிற்றுக்கு நல்லது என்று.

      உங்கள் அப்பார்ட்மெண்ட் மாடித்தோட்டத்தில் எடுத்த படங்களை போடுங்கள் நேரம் கிடைக்கும் போது.

      அதிராவின் தோட்ட பதிவில் சொன்னேன், நான் ரெடியாக வைத்து இருக்கிறேன் என் சின்னத் தோட்டத்தை என்று அதிரா "போஸ்ட் போட்டு வெகு நாள் ஆகி விட்டதே! "என்றார் போஸ்ட் போட்டு விட்டேன்.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு
  10. அம்மாடி எத்தனை அழகான மலர்கள். நித்ய கல்யாணியை அன்னையின் மலர்கள்
    புத்தகத்தில் படித்திருக்கிறேன்.
    உங்கள் ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு கதை சொல்கிறதும்மா.
    உங்கள் அன்பில் மலர்ந்த செடிகள் எல்லாம் நலமுடன்
    இருக்கட்டும். அழகு வரிசையாகப் படங்களைப் பார்க்கையில் மனம் நெகிழ்கிறது.
    ஒரு தடவையாவது மதுரை வந்து உங்களைப் பார்க்கவேண்டும் அன்பு கோமதி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.
    முன்பு பொழுதுகள் கணவர் குழந்தைகளுக்காக விடியும், அவசர காலங்கள்.
    செடி வைத்து இருந்தாலும் அதை தண்ணீர் ஊற்ற போகும் போது மட்டும் தான் பார்க்க முடியும். மாயவரத்தில் கீழே இருக்கும் தொட்டிகள் கீழே போய் தான் பார்க்க வேண்டும். இப்போது நினைத்த போது பார்க்கிறேன், அவசரம் இல்லா பொழுதுகள் .

    இந்த செடிகள் வளர்வதை பார்த்து மகிழ்கிறேன்.

    உங்கள் அன்புக்கு நன்றி அக்கா. வாங்க வாங்க அக்கா . நீங்கள் சென்னையில் இருந்த போது பார்க்க முடியாமல் போய் விட்டது வருத்தம் தான்.

    அன்பான குரலை உங்களை காணொளியில் பார்ப்பது நேரில் பார்த்த மகிழ்ச்சி அளிக்கிறது.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. துளசிதரன்: பூக்கள் அத்தனையும் மிக அழகாக இருக்கின்றன. நன்றாகப் பராமரிக்கின்றீர்கள் சகோதரி. மொட்டுகளும் மிக அழகு.

    கீதா: அக்கா செமையா இருக்கு உங்கள் சின்ன தோட்டம். சின்ன தோட்டமா?!!! என்ன அழகாக இருக்கு...செமையா இருக்கு கோமதிக்கா...ரொம்ப ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
      உங்கள் இருவரின் அன்பான மகிழ்ச்சியான கருத்துக்கு நன்றிகள்.

      நீக்கு
  13. மொட்டு என்ன அழகாக இருக்கிறது இல்லையா கோமதிக்கா...ஹையோ. ரோஸ் போலவே இருக்கு.

    மிக நன்றாக சூப்பரா வைச்சிருக்கீங்க அக்கா.

    அந்தச் செடி இன்ஸுலின் செடி போலத்தான் இருக்கு. இலை பார்த்தால்.

    நித்யகல்யாணிப் பூ அழகுதான். வீட்டில் எல்லாம் வைக்கக் கூடாது என்றால் இறைவன் ஏன் படைக்க வேண்டும்? இல்லையா? அதெல்லாம் சும்மா என்றே தோன்றுகிறது. அன்னையின் வரிகளை மிக மிக ரசித்தேன் கோமதிக்கா...

    நானும் நினைத்தேன் கோமதிக்காவிடமிருந்து பதிவு இல்லையே என்று...போட்டாச்சு அதுவும் மிக அழகான பதிவு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

      ஆஹா ! அந்த செடியின் பெயர் சொல்லி விட்டீர்கள். இதன் இலை புளிக்குமா?
      துவையல் அரைத்து பார்க்க வேண்டும்.

      அன்னையின் வரிகளை ரசித்தமைக்கு நன்றி கீதா. இறைவன் படைப்பில் உபயோகமற்றது எதுவும் இல்லை.
      வேண்டாதவை என்று எதுவும் இல்லை. இறைவன், இயற்கை எல்லாம் காரண காரியத்துடன் தான் படைக்க பட்டு இருக்கிறது.

      இன்னும் பதிவுகள் தயார் செய்து வைத்து இருக்கிறேன். வலைத்தளம் ஏற்றாமல் இருக்கிறது.
      உங்கள் அன்பான தேடுதலுக்கும், கருத்துக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  14. அக்கா பஜ்ஜி நல்லாருக்கு.

    ஓமவல்லி இலையில நானும் செஞ்சுருக்கேன். ஓமவல்லி இலையைக் கிள்ளிப் போட்டு பக்கோடாவும் செய்யலாம் வித்தியாசமா ரொம்ப நல்லாருக்கும் அக்கா.

    நானும் எடுத்துக்கறேன் பஜ்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கோடா செய்தது இல்லை. செய்து விடுகிறேன் ஒரு நாள்.
      பாலக் கீரையில் பக்கோடா செய்வது போல் இதையும் செய்யலாம் என்று நினைக்கிறேன்.
      நீங்கள் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி.

      நீக்கு
  15. ஆசையோடும், அக்கறையோடும் நீங்கள் தோட்டத்தை பராமரிப்பதை வியப்பதா? அல்லது மொட்டு படிப்படியாக மலரும் அழகை பொறுமையாக படமெடுத்திருப்பதை வியப்பதா? மலர்களை பற்றிய விவரங்களும் சுவை. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் Bhanumathy Venkateswaran வாழ்க வளமுடன்.
      மாயவரத்தில் இருந்த மூன்று வீடுகளிலும் பெரிய தோட்டம் அமைத்து இருந்தேன், அந்த ஆசையில் தான் இந்த சின்னத்தோட்டம் இடத்திற்கு ஏற்றார் போல்.

      அக்கறையோடு கவனித்தும் சில வாடி போகும் போது கவலை அளிக்கிறது.

      தினம் தினம் கவனிக்கும் போது மொட்டின் ஒவ்வொரு தோற்றங்கள் கவர்ந்தது அதனால் இந்த படங்கள்.

      மந்திரமலர்கள் புத்தகத்தில் உள்ள பகிர்வை, படங்களை பார்த்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  16. ஆஆஆ கோமதி அக்கா தோட்டம் போட்டிட்டா... நைட் எங்கும் போகாததால் இந்த போஸ்ட் என் கண்ணில் படவில்லை...
    நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துக் கொமெண்ட்ஸ் போடுகிறேன் அதுவரை பூக்களை வாட விட்டிடாதீங்கோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      வாங்க வாங்க நேரம் கிடைக்கும் போதெல்லாம்.

      வாடத புஷ்பம் இது வாங்க அப்படியே இருக்கும்.

      நீக்கு
  17. சின்னத்தோட்டம் என்றாலும் வளர்க்கிறீங்கள் ... அதுதான் மனதுக்கு மகிழ்ச்சி... உண்மைதான் செடிகளைப் பார்க்கும்போது மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்... அந்த பேப்பிள் பூவின் பெயர் பட்டிப்பூ என்பார்கள் ஊரில்... அதுதானோ சரியாக தெரியவில்லை... அதனை வீட்டில் வளர்க்கலாமோ என ஆரிடமாவது கேட்டுப் பாருங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னத்தோட்டமோ, பெரிய தோட்டமோ மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் தான்.
      பட்டிப்பூ சிலர் வைக்கலாம் எங்கிறார்கள், சிலர் வைக்க கூடாது என்கிறார்கள்.
      நிறைய வீடுகளில் வாசல் பக்கம் இருக்கிறது. மனதுக்கு மகிழ்ச்சி தருது. இருந்திட்டு போகட்டும்.
      மணி பிளான்ட் செடியை வைக்காதீர்கள் என்று ஒருவர் சொல்கிறார்.

      நீக்கு
  18. சின்ன சாடியிலே நித்திய கல்யாணி வளர்ந்து பூக்கிறதே...சூப்பர்... சுவாமிக்கு டெய்லி பூ வைக்கலாம். கொஞ்சம் பெரிய சாடியில் செம்பருத்தை வையுங்கோ கோமதி அக்கா...

    பதிலளிநீக்கு
  19. எனக்கும் செம்பருத்தி வைக்க ஆசை பார்க்கிறேன். ஒரு பால்கனி பறவைகளுக்கு , உணவும், தண்ணீருக்கும் வைக்கும் இடம், இன்னொரு பால்கனிதான் செடிகள், துணி காய்ப்போட. இன்னும் ஒரு தொட்டி வைத்தால் இட நெருக்கடி ஆகி விடும் முயற்சிக்கிறேன். மாயவரத்தில், மிளகாய் செம்பருத்தி, பெரிய செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி எல்லாம் வைத்து இருந்தேன்.
    பச்சை மிளகாய் செடி இன்று மொட்டு விட்டு இருக்கிறது.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. பேப்பிள் மொட்டு விரிவதை அழகழகா படமெடுத்திருக்கிறீங்க... கனகாம்பரமோ கலர் குறைவா இருக்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொட்டு மலர்வது நன்றாக இருக்கா? மகிழ்ச்சி.
      கனகாம்பரம் இளம் பச்சை கலர் தான்.

      நீக்கு
  21. நித்திய கல்யாணி பூவையோ செடியையோ காணவில்லையே ஒரு வேளை பெயர்க் குழப்பமோ நிஷாகந்தி என்று நினைத்துவிட்டேன் செடிகளைப் பராமரிக்க உடல் நலம்தேவை என்வீட்டில் சின்னதோட்டம் சரியாக பராமரிக்க முடியாமல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
      நிஷாகந்தியை நினைத்துக் கொண்டு தேடினால் எப்படி கிடைக்கும், அது உங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்கிறது. என் வீட்டுத் தோட்டத்தில் நித்தியகல்யாணி.
      தோட்டத்தை பராமரிக்க உடல் நலம் தேவைதான். ஆள் கிடைப்பார்கள் தானே?
      அவர்களை வைத்து செய்து கொள்ள வேண்டியதுதான். வேறு என்ன செய்வது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. பெயர் தெரியாச் செடியின் பெயர் எனக்கும் தெரியாது ஆனா அழகாயிருக்கு... அதைச் சமைப்பார்களாமோ... எதுக்கும் இன்னொருக்கால் கொன்போம் பண்ணிப்போட்டுச் சமையுங்கோ கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான். நான் மறுபடியும் ஓர்ப்படியின் கேட்டுவிட்டு சமைக்கிறேன் அதிரா.

      நீக்கு
  23. மணிப்பிளாண்ட் வீட்டுக்குள் வையுங்கோ கோமதி அக்கா... வெளிநாட்டில் முக்கால்வாசி வீடுகளிலும் உண்டு.... நானும் வச்சிருக்கிறேன்ன்ன்ன்... பணம் கொட்டிது ஹா ஹா ஹா முடிஞ்சா படமெடுத்துப் போடுரேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யூடியூப் ஒரு காணொளி அதில் வீட்டில் வைக்க கூடாத செடி என்று மனிப்பிளாண்டை சொல்கிறார். எதிர்மறை ஆற்றல்களை கொண்டு வரும் என்று.
      நிம்மத்தியாக இருக்க விட மாட்டார்கள் ஏதாவது அதை செய்யாதே இதை செய்யாதே என்று சொல்கிறார்கள். வீட்டுக்கு வரும் விருந்தினரும் இந்த செடியை வைக்க கூடாது என்று ஏதாவது சொல்லி விட்டு போய் விடுகிறார்கள்.
      பணம் உழைத்தால்தானே கொட்டும். சேமித்தால்தானே பண்ம தங்கும்.
      உங்கள் நேர்மறை எண்ணங்கள் வாழ்க!
      போடுங்கள் உங்கள் வீட்டு பணம் கொட்டும் செடியை.

      நீக்கு
    2. இப்போ யூ ரியூப்பில் கண்டது நிண்டதெல்லாம் போடுகிறார்கள்.. அதில் பணம் கிடைப்பதால். அதனால அனைத்தையும் நம்பிட முடியாது.

      நீக்கு
  24. மிளகாய்ச்செடி சூப்பரா வளருது... உந்த வெய்யிலுக்கு காய்ச்சுக் கொட்டும்.. இங்கு வராது.

    என்னாதூஊஊஊ கற்பூர வள்ளி இலையில் பஜ்ஜியோ... ஓ மை கடவுளேஏஏஏ நேக்கு வாணாம்ம்ம்ம்ம்:).

    கோமதி அக்கா, வாழைப்பழத்தோலை குட்டி குட்டியாக் கட் பண்ணி சாடிகளுக்குள் புதைச்சு விடுங்கோ அது நல்ல சத்தாம் செடிகளுக்கு....

    நன்றி, வாழ்க வளமோடும் தோட்டப் பயிர்களோடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிளகாய்ச் செடி நன்கு காய்ச்சுக் கொட்டும் அது போதும் அதிரா.
      கற்பூரவள்ளி பஜ்ஜி நன்றாக இருக்கும் சூடாய் சாப்பிட வேண்டும். ஆறினால் நன்றாக இருக்காது.

      வாழைப்பழத்தோலை தண்ணீரில் ஊற வைத்து அந்த த்ண்ணீரை ஊற்ற சொன்னார் ஒருவர்.
      நான் அதிரா சொன்னது போல் செய்கிறேன்.
      உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அதிரா. (தோட்டக்கலை நிபுணி)

      நீக்கு
    2. //வாழைப்பழத்தோலை தண்ணீரில் ஊற வைத்து அந்த த்ண்ணீரை ஊற்ற சொன்னார் ஒருவர்//
      இதுவும் யூ ரியூப்பில் பார்த்தேன் ஹா ஹா ஹா..

      நீக்கு
  25. அழகிய தோட்டம். நித்திய கல்யாணி வெள்ளை மற்றும் இளஞ்சிகப்பில் நான்கைந்து செடிகள் எங்கள் தோட்டத்தில் உள்ளன. அதன் மொட்டு மிகச் சிறிதாக அழகாக இருக்கும். அருமையாகப் படமெடுத்துள்ளீர்கள். செடியைப் பற்றிய தகவல் பகிர்வும் நன்று.

    செம்பருத்தி சிகப்பு அடுக்கு, மஞ்சள் அடுக்கு, மற்றும் சிகப்பு, வெள்ளை, மஞ்சளில் உட்பக்கம் சிகப்பு ஆகியன உள்ளன. இளஞ்சிகப்பு முன்னர் இருந்தது. தோட்டக்காரர் தவறுதலாக வெட்டி விட்டார். அதே நிறத்தில் மீண்டும் கிடைக்கவில்லை. செம்பருத்திக்கு அதிகமாக தேன் சிட்டுக்கள் வருகின்றன.

    வலச்சுழலாக வளரும் செடி ஆச்சரியப்படுத்துகிறது. இணையத்தில் தேடிப் பார்த்தேன். பெயர் அறிய முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    நித்திய கல்யாணி வெள்ளை தங்கை வீட்டில் இருக்கிறது தருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள் போய் வாங்க வேண்டும்.

    தினம் வித விதமாய் செம்பருத்தி பூக்களை என் மகள் கல்லூரிக்கு வைத்து செல்வாள்.
    செம்பருத்திக்கு தேன்சிட்டுக்கள் வரும் மாயவரத்தில். நிமிடமாய் பறந்துவிடும், பறந்து கொண்டே இருக்கும்.

    கீதா ரெங்கன் இன்சுலின் செடி என்று சொல்கிறார்கள் அப்படி போட்டு தேடி பாருங்கள் ராமலக்ஷ்மி.

    உங்கள் தோட்டம் அழகு, அங்கு வரும் பறவைகளை நீங்கள் எடுக்கும் படங்கள் அழகு.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. அழகழகான படங்கள்....

    தாவரங்கள் தங்களது நுண்ணுணர்வினால் தமக்கு நீர் வார்ப்பவரை உணர்ந்து ம்கிழ்வதாகப் படித்திருக்கிறேன்....

    ஒரு சில மரங்களிடமும் செடிகளிடமும் மனம் விட்டுப் பேசுங்கள்...

    சில தினங்கள் கழித்து நமக்கு வேண்டியவருடன் - அந்தச் செடியருகே சென்றால் -

    அவர் நாம் அன்றைக்குப் பேசிய செய்தியை முன்னெடுத்துப் பேசுவார்...

    இறைவனுக்கு அர்ச்சிக்கப்பட்ட மலர்களையோ இலைகளையோ
    நாம் பிரசாதமாகப் பெற்றுக் கொள்ளும் போது எல்லையற்ற பரவசம் உண்டாகிறதே - எதனால்!...

    மாரியம்மன் காளியம்மன் திருவிழாக்களில் அருளாடிகள் எலுமிச்சங்கனியையும் பூக்களையும் கொடுத்துச் சொல்லும் வாக்குகள் பல சமயங்களில் பலிக்கின்றவே... எப்படி!....

    வீட்டு வாசலில் பூச்செடிகள் இருப்பது மங்கலம்...

    இது பற்றி இன்னும் உள்ளன...
    வேறொரு சமயத்தில் பேசுவோம்...

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.

    //தாவரங்கள் தங்களது நுண்ணுணர்வினால் தமக்கு நீர் வார்ப்பவரை உணர்ந்து ம்கிழ்வதாகப் படித்திருக்கிறேன்....//

    ஆமாம், நானும் படித்து இருக்கிறேன்.

    //ஒரு சில மரங்களிடமும் செடிகளிடமும் மனம் விட்டுப் பேசுங்கள்...

    சில தினங்கள் கழித்து நமக்கு வேண்டியவருடன் - அந்தச் செடியருகே சென்றால் -

    அவர் நாம் அன்றைக்குப் பேசிய செய்தியை முன்னெடுத்துப் பேசுவார்..//

    ஓ! ஆச்சிரியமான செய்திகள்.

    வன்னிமரத்தை சுற்றி நம் வேண்டுதலை சொல்லலாம் என்பார்கள்.
    வன்னிமரம் என்று இருக்கும் இடத்திலிருந்து நினைத்தால் போதும் என்பார்கள்.

    இறைவன் பிரசாதம் என்று அவருக்கு சாற்றிய பூ, அர்ச்சித்தமலர் கிடைத்தால் மகிழ்ச்சி தான்.

    வீட்டு வாசலில் இங்கு வைக்க முடியாது, பின் வாசல் பால்கனிதான் .

    நிறைய செய்திகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  29. 'பெயர் தெரியாதசெடி' இங்கு பல வீடுகளிலும் உண்டு. நீரிழிவு நோயாளர்களுக்கு நல்லது என்று பச்சையாகவே சிறியதாக வெட்டி பச்சடி செய்து சாப்பிடுகிறார்கள்.
    அழகிய சிறிய தோட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்.
      பேர் தெரியாத செடிடைப்பற்றி விவரம் சொன்னதற்கு நன்றி.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
      பதிவுகள் போடுங்கள் மாதேவி.

      நீக்கு
  30. எல்லாச்செடிகள், பூக்கள் கொள்ளை அழகு. எனக்கும் மனது அடித்துக் கொள்கிறது. தோட்டத்தை விட்டு விட்டு வந்துட்டோமே என! இங்கே வைக்க முடியாது! பராமரிப்புக் கஷ்டம், தண்ணீர் ஊற்றினால் கீழே போய் விழும். கீழ் வீடுகளில் ஆட்சேபணை எழுப்புவார்கள். மொட்டை மாடியில் வைத்தால் கடும் வெயிலில் செடிகள் துவண்டு விடும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

      வளர்த்த செடி, கொடி, மரங்களை விட்டு வந்தது வருத்தமாய் தான் இருக்கும்.
      என் தங்கை மொட்டைமாடியில் செடி வளர்த்து இருக்கிறாள். அதற்கு பச்சை துணியால் பந்தல் அமைத்து இருக்கிறாள் அவள் வீடு தனிவீடு, சொந்த வீடு. அதனால் பிரச்சனை இல்லை.

      நீக்கு
  31. நித்யகல்யாணி பல்வேறு வண்ணங்களில் பூக்கும். மருத்துவ குணம் கொண்டது. நீங்கள் என்னுடைய முகநூல் கருத்துக்களை இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி. நல்லவேளையாக வேறு யாரும் அதைக் கவனிக்கவில்லை. :)))) அந்த இன்னொரு செடி இன்சுலின் செடி என தி/கீதா சொல்கிறார். தேடிப் பார்க்கிறேன். செம்பருத்தி எங்க வீட்டில் பல நிறங்களில் இருந்தது. மல்லிகையும் ஒற்றை மல்லிகை, அடுக்கு மல்லிகை, குண்டு மல்லிகை என 3 விதங்கள்! சந்தனமுல்லை என்றொரு முல்லை வகை! அங்கே போய்ப் பூப் பறிக்கச் சென்றால் சுப்புக்குட்டியார் அந்தக் கொடிப்புதரிலிருந்து முதலில் வெளியே வருவார். இப்படி இயற்கை சூழ வாழ்ந்து விட்டு இங்கே நாலாம் மாடியில் உட்கார்ந்திருக்கேன். ஒரே ஆறுதல் அரங்கன் கோபுரம் தான்! இங்கே உட்கார்ந்து பார்த்தாலே போதும். நன்றாய்த் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நித்யகல்யாணி பல்வேறு வண்ணங்களில் இருக்கிறது, மருத்துவ குணம் தெரியும் போல! எல்லோருக்கும் அதுதான் உங்கள் கருத்தை படித்தும் கருத்து சொல்லவில்லை.
      ஏன் நல்லவேளையாக வேறு யாரும் கவனிக்கவில்லை என்கிறீர்கள்?
      பலருக்கு உபயோகம் ஆகும் என்று தான் இங்கு பகிர்ந்தேன்.

      சந்தனமுல்லை வாசம் அதிகம், அதற்குதான் சுப்புக்குட்டியார் வருவார் போலும்.
      மாமியார் வீட்டில் கீழ் இருந்து மொட்டை மாடியில் போய் பூக்கும் . பக்கத்து வீடுகளுக்கு எல்லாம் கொடுப்பார்களாம். நாங்கள் எல்லாம் வந்த பின் கொஞ்ச வருடங்கள் பூத்தது, அப்புறம் வீடு மாற்றி அமைக்க பட்ட போது செடியை வெட்டி விட்டார்கள் . மாமியாருக்கு வருத்தம்.

      அரங்கனை பார்த்துக் கொண்டு இருக்கும் போது வேறு என்ன வேண்டும்?
      வெளியூர் சென்றாலும் இந்த செடிகளின் பராமரிப்பு கஷ்டம்.
      முடிந்தவரை இருகட்டும் என்று தான் வைத்து இருக்கிறேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  32. தோட்டத்தைப் பராமரிக்கும் விதத்தினை, புகைப்படங்களில் உள்ள செடிகளின் பசுமையிலிருந்து உணரமுடிகிறது. அருமை.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.

    மரம் வளரும் வரை கவனித்துக் கொண்டால் போதும் ,ஆனால் செடிகளை ஒரு நாள் கவனிக்கவில்லை என்றாலும் வாடி போய் விடுகிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. அதிரா பக்கம் இங்கே டீ கிடைக்குன்னு சொன்னாங்க ஓடோடி வந்தேன்க்கா :) அந்த ஓமவல்லி பஜ்ஜி சாப்பிட்டதேயில்லை .சுவை எப்படிக்கா இருக்கும் .உடம்புக்கு நல்லதுன்னு கேள்விப்பட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க் வளமுடன்.
      வாங்க ஓமவல்லி பஜ்ஜி சாப்பிட்டு டீ குடிக்கலாம்.
      ஓமவல்லி பஜ்ஜி நன்றாக இருக்கும்.

      நீக்கு
    2. உடம்புக்கு நல்லது தான்.

      நீக்கு
  35. ஊருக்கு செல்லுமுன் செடிகளுக்கு நீர் வசதி செய்து வைத்த அன்புக்கு நிகரேது ..சூப்பர்ப் ஐடியாக்கா .
    சிட்டுக்கள் விளையாடறாங்களா :) செடிகளுடன்..சென்னை வீட்டில் கொய்யா மரம் மல்பெரி பழம் எல்லாம் பறவைகளுக்கும் அணில்களுக்குமே தாரை வார்த்துட்டோம் :) கீழா நெல்லி சிறுகுறிஞ்சான் பெரியகுறிஞ்சான் எல்லாம் சாப்பிட்டா பறவைகளுக்கு நோய் அண்டாது அதான் செல்ப் மெடிகேஷன் செய்துக்கறாங்க உங்க வீட்டு பறவைகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஏஞ்சல் புறாக்கள் கீழா நெல்லி செடியை கபளீகரம் செய்து விட்டது.
      புள்ளி சில்லை குருவி மட்டும் தான் பசும் தளைகளை வைத்து கூடு கட்டுவதால் இளம் துளிர்களை கட் செய்து எடுத்து போய் விடுகிறது.
      அணிகள் பழங்களை இருக்க விடாது அம்மா மாதுளைக்கு துணி கட்டி வைப்பார்கள்.
      பறவைகளுக்கும், மற்ற விலங்குகளுக்கும் நோயிலிருந்து மீள அதற்கு அறிவைக் கொடுத்து இருக்கிறார் இறைவன் ஏஞ்சல்.

      நீக்கு
  36. பாண்டிச்சேரி அன்னை ஆசிரமத்தில் நித்திய கல்யாணி செடிகளை பார்த்து இருக்கேன் .அங்கே வெளிப்பக்கமிருந்து ஸ்கூல் ட்ரிப்பில் ரெண்டு செடிகளை எடுத்து வீட்டுக்கு கொண்டுபோனப்போ செம திட்டு எனக்கு அப்புறம் பின் தோட்டத்தில் யார்க்கும் தெரியாம நட்டுவச்சி பிறகு என்னாச்சுன்னு கவனிக்கலை ..
    அந்த நீலகலர் கனகாம்பரம் நீலாம்பரம் அழகா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டிச்சேரி அன்னை அசிரமத்தில் வித வித பூக்கள் இருக்கும்.
      சிறு வயதில் நானும் வெளியிலிருந்து செடிகளை கொண்டு வந்து நடுவேன்.
      கனகாம்பரம் பச்சை கலர் ஏஞ்சல்.

      நீக்கு
  37. எங்க நாட்டில் இங்கே ஏப்ரல் டு செப்டம்பர் பல வண்ணமலர்செடிகள் இருக்கும் பிறகு குளிருக்கு எல்லாரும் போய்டுவாங்க ..எங்க தோட்டத்தில் நிறைய வண்ணத்து பூச்சிகள் இப்போ வராங்க .இயற்கை எப்பவும் அழகும் இனிமையும் மனசுக்கு சந்தோஷத்தை தருவது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்ணத்து பூச்சியை பார்ப்பதே ஆனந்தம்.
      இப்போது அதை படம் எடுத்து போடுங்கள் பதிவு போட்டு நாள் ஆச்சே!

      குளிர் வந்தால் செடி எல்லாம் பத்திரமாக மரத்தூள் போட்டு வேர் அழுகாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பசுமை பந்தல், கண்ணாடி அறை முதலிய வற்றில் வைத்து பாதுகாக்கிறார்கள் இல்லையா?

      வண்ணத்தி பூச்சியை பார்ப்பதே மகிழ்ச்சிதான் அது தரும் சந்தோஷம் அளவிட முடியாது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  38. படங்கள் அனைத்தும் மிக அழகு! பார்த்ததுமே தன் தூய்மையான அழகால் அமைதிப்படுத்துவது தான் மலர்களின் விசேஷ அழகு. அவற்றை பல கோணங்களில் ரசித்து சொல்லி வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமினாதன்.
      மலர்கள் தன் தூயமையான அழகால் நம்மை அமைதிப்படுத்தும் தான்.
      சாந்தி, மகிழ்ச்சி எல்லாம் கொடுக்கும்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  39. படங்கள் மிக அழகு. அதிலும் சிறு சிறு செடிகள் அழகாக இருக்கின்றன.

    பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் 'பஜ்ஜி' படம் இருந்தது. இருந்தாலும் அதிலும் ஓமவல்லி இலை பஜ்ஜி என்று சொல்லி, பதிவிற்கான தொடர்பைக் கொண்டுவந்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
      பஜ்ஜி படம் எடுத்து வைத்து இருந்தேன். இந்த பதிவுக்கு பொருத்தம் என்று போட்டு விட்டேன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  40. சின்னத் தோட்டம் ன்னு நீங்க சொன்னாலும் அற்புதமான தோட்டம் ன்னு தான் சொல்லுவேன் ...


    பசுமையா , குளிர்ச்சியா , இனிமையா ஆஹா ..ரொம்ப அழகு மா

    இலையின் மீது நீர் துளிகள் உள்ள படம் ரொம்ப அழகு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்.
      தோட்டத்தைப் ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  41. பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  42. சின்னத்தோட்டம் என்றாலும் மனத்துக்கு நிறைவாய் இருக்கிறது கோமதி மேடம். மொட்டு மலரும் அழகு அபாரம். அதைப் பொறுமையாய்ப் படமெடுத்து நாங்களும் ரசிக்கத் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
      நலமா கீதமஞ்ச்சரி? முகநூலில் வலைத்தளத்தில் காணமுடியவில்லையே!
      தோட்டத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  43. அனைத்து மலர்களும் கண்கொள்ளா காட்சி ....

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் ஜட்ஜ்மென்ட் சிவா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு