வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

வரலெட்சுமி, வருவாய் அம்மா!


பழைய பாடல் ராதா ஜெயலட்சுமி பாடிய  'வரலெட்சுமி வருவாய் அம்மா திருமாலின் தேவி கடைக்கண் பாரம்மா ' என்ற  பாடல் எங்கள் வீட்டு கேஸட்டில் இருக்கிறது.  முன்பு வானொலியில் வைக்கும் பாட்டை வீட்டில் கேஸட்டில் பதிவு செய்து வைத்து இருந்தது. அதை இன்று கேட்டேன். மிக நன்றாக இருக்கும், ஒவ்வொரு வரலெட்சுமி பண்டிகை  அன்றும் கேட்டு மகிழ்வோம், வீட்டில் பூஜை செய்யும் போது போட்டுக் கேட்போம். இங்கு பகிரலாம் என்று தேடினால் கிடைக்கவில்லை அந்தப் பாடல் . ஆனால் அந்த பாடலை  இவர் பாடியது கிடைத்தது.  அமைதியாக அழகாகப் பாடுகிறார்.




நித்யஸ்ரீ மகாதேவன் பாடிய பாட்டு

எங்களுக்கு வரலெட்சுமி பண்டிகை கிடையாது என்றாலும் வெள்ளிக்கிழமை லட்சுமி பூஜை உண்டு.  தங்கை செய்வாள் அவள் வீட்டுக்கு நாளை போய் அம்மனைப் பார்த்து வர வேண்டும்.

தங்கை வீட்டில் வரலெட்சுமி அம்மன் -அவள் எனக்கு அனுப்பிய படம்
எங்கள் வீட்டில் பூஜை சிவப்பு அவல், வெல்லம் போட்ட பால் பாயசம்
கோவிலில் ஆடி மாதம் நான்காம் வெள்ளி    அம்மன் அலங்காரம்
வேப்பிலையால் அலங்காரம்

ஒரு அம்மா அவர் வீட்டில் பூத்த மலர்களால் கட்டிக் கொண்டு வந்த மாலை
நந்தியாவட்டை, செவ்வரளி மாலை
வேப்பிலைக்காரிக்கு வேப்பிலை அலங்காரம்

ஒவ்வொரு வாரமும் புதுப் புடவை 
ஆடிப்பூர வளையல் அலங்காரம்
அன்று அணிவிக்கப்பட்ட வளையல்கள் இன்று எல்லோருக்கும் கொடுத்தார்கள், மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம் , ஆடிக்கூழ் எல்லாம் பிரசாதமாகப் பெற்று  எல்லோருக்கும் வேண்டி வந்தேன்.  எல்லோருக்கும் எல்லா நலன்களையும் அம்மா தர வேண்டும்.

                                                                வாழ்க வளமுடன்.

36 கருத்துகள்:

  1. வரலக்ஷ்மி வருவாயம்மா....

    அந்தப் பாடலை நானும் கேட்டிருக்கிறேன்....

    இனிய பாடலும் அழகான அம்மன் தரிசனமும் இனிமை...

    நல்லோர் அனைவரது இல்லத்திற்கும்
    வரலக்ஷ்மி வருகை தந்து வரம் அருள்வாளாக....

    அன்பின் வாழ்த்துகளுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      இந்த பாடல் அந்தக்காலத்தில் வரலெட்சுமி விரதம் அன்று எல்லோர் வீடுகளிலும் ஒலிக்கும். வானொலியிலும் அடிக்கடி வைப்பார்கள். கேஸட்டில் உள்ளதை ஒரு நாள் பதிவு செய்ய் வேண்டும்.

      எல்லோருக்கும் வரலெட்சுமியின் கடைகண் பார்வை கிடைக்கட்டும்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் கோமதிம்மா...

    வரலெட்சுமி வருவாய் அம்மா பாடல் நன்றாக இருக்கிறது. பாடியவரும் சிறப்பாக பாடியிருக்கிறார்.

    அம்மன் படங்கள் அனைத்தும் அருமை. ஆடி வெள்ளிக்கு சிறப்பான அலங்காரங்கள். பார்க்கவே பரவசம்.

    நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்களின் குரலில் பாடல் – நன்றாக இருக்கிறது. கேட்டு மகிழ்ந்தேன். இனிய காலையாக அமைந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      இனிய காலை வணக்கத்திற்கு நன்றி.

      பழைய பாடலை தேடிய எனக்கு இவர்கள் பாடியதை கேட்டதும் மனதுக்கு நிறைவு.

      ஆடி வெள்ளிக்கு மிகவும் உற்சாகமாய் அலங்காரங்கள் செய்கிறார்.
      நித்யஸ்ரீ பாடலை கேட்டது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  3. குட்மார்னிங். வரலக்ஷ்மி வருவாயம்மா... பாக்யாத லக்ஷ்மி பாரம்மா... போன்ற பாடல்கள் இந்த லிஸ்ட்டில் வரும். எங்கள் வீட்டில் வரலக்ஷ்மி பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. நாள்முழுவதும் வலைப்பக்கமே வரமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      கன்னடம், தெலுங்கு என்று வரலெட்சுமி பாடல்கள் மிகவும் அருமையான பாடல்கள் இருக்கிறது . அனைத்தையும் கேட்டு மகிழ்ந்தேன்.
      உங்கள் வீட்டில் உறவினர், அக்கம் பக்கத்தினர் என்று வந்து கொண்டு இருப்பார்களே!
      வரலெட்சுமி வெற்றிலைபாக்கு வாங்க! அப்புறம் எப்படி வலைபக்கம் வர முடியும்?
      எனக்கும் காலை முதல் இறை வழிபாடு இருந்தது இரவுதான் பதிவு போட்டேன்.


      நீக்கு
  4. புகைப்படங்கள் எல்லாம் அழகு. தரிசித்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. வரலக்ஷ்மி பாடல் நானும் கேட்டிருக்கிறேன். இதை விட பாக்யாத லக்ஷ்மி பாரம்மா ரொம்பப் பிடிக்கும். அதன் தமிழ் மொழிபெயர்ப்பில் பாடியதும் சேர்த்து. நேற்று முகநூலில் (மகாநதி) ஷோபனா விக்னேஷ் பாடியதை வெளியிட்டிருந்தார்கள். அதையும் கேட்டேன். சிறப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      நானும்..பாக்யாத லக்ஷ்மி பாரம்மா பாடல் நேற்று கேட்டேன்.
      ஷோபனா பாடிய பாடலையும் நேற்று கேட்டேன்
      உங்கள் கருத்துக்கு நன்றி. தங்கை வீட்டுக்கு போகிறேன் வந்து பேசுகிறேன்.

      நீக்கு
  6. நேற்று நெ.த. வந்தாலும் வருவேன் எனச் சொல்லி இருந்ததால் மத்தியானம் 2 மணியில் இருந்து அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தோம். 5 மணி சுமாருக்கு வரமுடியவில்லை எனச் செய்தி அனுப்பி விட்டார். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கை வீட்டுக்கு போய் விட்டு இப்போது தான் வந்தேன்.
      நெல்லைத் தமிழன் வரவில்லையா ? அவருக்கு நேரமில்லை போலும்.

      நீக்கு
  7. உங்கள் வீட்டு பூஜை, தங்கை வீட்டு வரலக்ஷ்மி பூஜை அலங்காரம் எல்லாமும் சிறப்பு. அம்மன் படங்கள் எல்லாம் அருமையாக வந்திருக்கின்றன. ஆடிப்பூர வளையல் அலங்காரமும் சிறப்பாக எடுத்திருக்கிறீர்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் படங்களை எடுத்து அழகாய்ப் போடுவதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று போக முடியவில்லை தங்கை வீட்டுக்கு இன்று போய் மஞ்சள் குங்குமம் பெற்று வந்தேன். வார வழிபாடு குழுவினர் வந்து இருந்தார்கள் அம்மா வீட்டு பக்கம் இருந்து எல்லோரும் பாடினார்கள். மன நிறைவாய் இருந்தது.

      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரி

    வரலெட்சுமி அம்மன் பாடல்கள் அருமை. கேட்டு மகிழ்ந்தேன். இதில் அம்மனை பாடும் தமிழ், தெலுங்கு, கன்னட பாடல்களையும் கேட்டிருக்கிறேன். தங்கள் வீட்டு மஹாலக்ஷ்மியும், தங்களுடைய தங்கை வீட்டு வரலெட்சுமி அம்மன் அலங்கார படங்களும் மிகவும் அழகாக இருக்கின்றன. கோவில்களில் உள்ள அம்மன் அலங்காரங்களுடன் இருக்கும் படங்களும் கண்ணைக் கவர்ந்தன. அனைத்தையும் தரிசித்துக் கொண்டேன்.இன்று தங்கை வீட்டுக்குச் சென்று நீங்களும் அம்மனை தரிசிக்க போவதாய் கூறியுள்ளீர்கள். சென்று தரிசித்து விட்டு வாருங்கள். உலக மக்கள் அனைவருக்கும், வரலெட்சுமி தாய் மங்களகரமான நல்லருளை மகிழ்வுடன் தரவேண்டுமென்று நானும் அந்த லோகமாதாவை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஆடி வெள்ளியில் அற்புதமான பதிவை தந்த தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன் .

      வரலெட்சுமி விரதம் அன்று பாடல்களை கேட்டு மகிழ்வதே மனதுக்கு மகிழ்ச்சி.
      தங்கை வீட்டுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு மாலை தான் வந்தேன்.

      //மக்கள் அனைவருக்கும், வரலெட்சுமி தாய் மங்களகரமான நல்லருளை மகிழ்வுடன் தரவேண்டுமென்று நானும் அந்த லோகமாதாவை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்//

      அதுதான் வேண்டும் கமலா ! வேறு என்ன வேண்டும். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  9. தங்கை வீட்டிலும், தங்கள் வீட்டிலும் அலங்காரம், பூஜை அருமை. தரிசித்தோம். கோயில் படங்கள் சிறப்பு சேர்க்கின்றன. அனைவரும் நலமே வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  10. அமைதியாக அருமையாக பாடி உள்ளார்கள்...

    வீட்டில் பூஜை படங்கள் உட்பட அனைத்து படங்களும் அற்புதம்...

    வாழ்த்துகள் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      பாடலை ரசித்து கேட்டதற்கு நன்றி.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  11. வரலெஷ்மி விரத பூஜை அனுஷ்டிப்பது என்பது குடும்ப வழக்கில் ஏற்றுக் கொள்வது. அதாவது புகுந்த வீட்டில் மாமியார் இந்த பூஜை பழக்கத்தை மருமகளுக்கும் ஏற்றுக் கொள்ள வழிவகை செய்வார். திருமணத்தின் போதே பிறந்த வீட்டு சீரோடு வெள்ளி வரலெஷ்மி அம்மன் முகத்தைத் தருவது வழக்கம். கலசத்தில் மஞ்சள் தடவிய தேங்காயு வைத்து அம்மனின் முகத்தையும் முன் நிறுத்தி, தோடு, மூக்குத்தி, கழுத்துக்கு நெக்லெஸ் என்றெல்லாம் விதவிதமாக அலங்கரித்து அம்மனை அழகு பார்ப்பது மிக பிடித்தமானது. அந்நாட்களில் காதோலை கருகுமணி என்றெலாம் இருந்தது.

    முதலில் இழைகோலம் போட்டு அதில் கலசத்தோடு அம்மனை பலகையில் வைத்து இரு பெண்கள் இரண்டு பக்கமும் பலகையைப் பிடித்து 'வரலெஷ்மி அம்மா, எங்கள் வீட்டில் எழுந்தருளுங்கள்' (லெஷ்மி ராவே மா இண்டிக்கி. தெலுங்கு பாடல்) என்று பாடி அழைத்து பூஜை மண்டபத்தில் இருத்துவது கண் கொள்ளாக் காட்சி..

    தங்கள் தங்கை வீட்டு வரலெஷ்மி பூஜை அலங்காரங்கள் சிறப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்

      //வரலெஷ்மி விரத பூஜை அனுஷ்டிப்பது என்பது குடும்ப வழக்கில் ஏற்றுக் கொள்வது. அதாவது புகுந்த வீட்டில் மாமியார் இந்த பூஜை பழக்கத்தை மருமகளுக்கும் ஏற்றுக் கொள்ள வழிவகை செய்வார். திருமணத்தின் போதே பிறந்த வீட்டு சீரோடு வெள்ளி வரலெஷ்மி அம்மன் முகத்தைத் தருவது வழக்கம்.//

      ஆமாம் சார், நீங்கள் சொல்வது சரி.

      எங்கள் மாமியார் வீட்டில் சரஸ்வதி பூஜை அன்று முகம் மஞ்சளில் செய்ய வேண்டும்.
      என் அம்மாவீட்டில் முகம் தேங்காயில் வைத்து கும்பிடுவது வழக்கம். என் அம்மா வெள்ளி முகம் மருமகளுக்கு வாங்கி தந்தார்கள். எங்கள் வீட்டில் பழக்கம் இல்லை அதனால் செய்யவில்லை.

      //தேங்காயு வைத்து அம்மனின் முகத்தையும் முன் நிறுத்தி, தோடு, மூக்குத்தி, கழுத்துக்கு நெக்லெஸ் என்றெல்லாம் விதவிதமாக அலங்கரித்து அம்மனை அழகு பார்ப்பது மிக பிடித்தமானது. அந்நாட்களில் காதோலை கருகுமணி என்றெலாம் இருந்தது.//

      என்னிடமும் அலங்கரித்த அம்மன் வெள்ளி முகம் இருந்தது மருமகளுக்கு கொடுத்து விட்டேன். சார் சரஸ்வதி முகம் செய்வார்கள் அதனால் நான் வைத்துக் கொள்ளாமல் மருமகளுக்கு கொடுத்து விட்டேன்.

      முதலில் இழைகோலம் போட்டு அதில் கலசத்தோடு அம்மனை பலகையில் வைத்து இரு //பெண்கள் இரண்டு பக்கமும் பலகையைப் பிடித்து 'வரலெஷ்மி அம்மா, எங்கள் வீட்டில் எழுந்தருளுங்கள்' (லெஷ்மி ராவே மா இண்டிக்கி. தெலுங்கு பாடல்) என்று பாடி அழைத்து பூஜை மண்டபத்தில் இருத்துவது கண் கொள்ளாக் காட்சி.. //

      நீங்கள் சொல்வது போல் அழைப்பது , பாடுவது, பூஜை செய்வது எல்லாம் மனதுக்கு நிறைவு, மகிழ்ச்சி கொடுக்க கூடியது சார்.

      விவரமாய் எல்லா வற்றையும் குறிப்பிட்டு விரிவாக கருத்து சொன்னதற்கு நன்றி.
      என் தங்கை வீட்டு பூஜை அலங்காரங்களை பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி சார்.


      நீக்கு
  12. அம்மன் படங்கள் எல்லாமே அழகாயிருக்கு அக்கா. தங்கை வீட்டு வரலஷ்மி இன்னும் அழகு. எனக்கு திருவிழா காலங்களில் சுவாமி அலங்காரம் பார்க்க ரெம்ப பிடிக்கும். அம்மன் அலங்காரங்கள் மிகவும் அழகா இருக்கும். எங்கூரில் இத்ற்கு பெயர் பெற்றவர் நல்லூர் கந்தசுவாமி கோவில். திருவிழா காலங்களில் சூப்பரா இருக்கும் முருகனை பார்க்க. சில நேரம் கண்ணீரே வந்துவிடும்.
    உங்க படத்தில் ஆடிபூர வளையல் படம் ரெம்ப அழகு.
    பாடல் கேட்க நன்றாக இருக்கு.நான் இப்போதான் கேட்கிறேன் அக்கா. அருமையான பதிவு அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      உங்கள் ஊரில் கோவில்களில் அலங்காரங்களை பார்த்து இருக்கிறேன். பார்த்துக் கொண்டே இருக்கலாம் அப்படி அழகு. நல்லூர் கந்தசாமி கோவிலுக்கும் யாழ்பாணத்திற்கும் போக முடியவில்லை. 5 நாள் தான் பயண திட்டம்.
      பாடல் பெற்ற தலங்கள் மட்டும் போனோம்.
      முருகன் அழகில் கண்கள் கசிவது நடக்கும் தான்.
      பாடல்கள் பிடித்து இருப்பது மகிழ்ச்சி அம்மு.
      பதிவை ரசித்து அழகான கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம் சகோ ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. சாரி கோமதிக்கா பதிவுக்கு லேட்டு... இப்பலாம் வலைப்பக்கம் வருவது வாசிக்கவுமே நேரம் ரொம்ப டைட்டா இருக்குது.

    படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன அக்கா.

    இந்தப் பாட்டும் கேட்டிருக்கிறேன். உங்கள் தங்கை வீட்டு அம்மன் அலங்காரம் ரொம்ப அழகாக இருக்கின்றது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      கீதா, நேரம் கிடைக்கும் போது வாங்க.

      படங்கள், பதிவு, தங்கை வீட்டு அம்மன் எல்லாம் ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  15. எங்கள் வீட்டிலும் இந்த விரதம் பூஜை இல்லைக்கா.

    ஒரு சில குடும்பங்களில்தான் இதனைச் செய்கிறார்கள். எனக்கு இந்த அலங்காரம் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.

    உங்கள் வீட்டுப் பிரசாதம் ஆஹா!! சூப்பர்! நீங்கள் வைத்திருக்கும் லஷ்மியும் மிக அழகு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, எங்கள் வீட்டில் சரஸ்வதி பூஜைக்கு அம்மன் முகம் செய்வது பழக்கம்.
      முகம் செய்ய முடியாதவர்கள் வெள்ளி முகம் வைத்து கும்பிடுவார்கள்.
      அந்த படம் மருமகளின் அம்மா கொடுத்த படம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. உங்கள் தங்கை வீடு வரலட்சுமியும், உங்கள் வீட்டு லக்ஷ்மியும், கோவில்களில் இருக்கும் அம்மன் படங்களும் மிக அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  17. அம்மன் அலங்கார படங்கள் அனைத்தும் மிக சிறப்பு மா..

    வேப்பிலைக்காரிக்கு வேப்பிலை அலங்காரம், வளையல் அலங்காரம் எல்லாம் பார்க்கவே மிக அழகு ..

    பதிலளிநீக்கு
  18. கோமதி அக்கா எப்படி இருக்கிறீங்க.. அதிரா வந்திட்டேனெல்லோ.. வரலட்சுமி பூஜை அன்று கனடாவில் நின்றோம்.

    அம்மன் படங்கள் மிக அழகு.. உங்களுக்குப் போட்டியாக நானும் கோயில் படங்கள் எடுத்து வந்திருக்கிறேனே:). மேலே கறுத்த முகத்தோடு ஆவேசமாக இருக்கும் அம்மனுக்கு ஒரு அழகிய பெயருண்டெல்லோ.. நினைவு வருகுதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      வாங்க வாங்க அன்பு தங்கையே!
      நலமா? வந்தவுடன் கருத்து சொல்ல வநதது மகிழ்ச்சி.

      கோவில் படங்களை போடுங்கள் பார்க்க ஆவல்.
      கறுத்த முகத்தோடு இருக்கும் அம்மன் இந்த கோவிலில் பேச்சி ஆயி அம்மன் என்று சொல்வார்கள்.
      வரலட்சுமி பூஜையில் கனடாவில் கலந்து கொண்டீர்களா?

      இங்கு உறவினர் வருகை இப்போது தான் ஊருக்கு போனார்கள்.

      உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. வணக்கம் சகோ
    இப்பதிவு எனது பார்வையில் தப்பி விட்டது வரலட்சுமி விரதம் பற்றிய அழகிய அம்மன் தரிசனம் கிடைத்தது நன்றி.

    பாடல்கள் இரண்டும் கேட்டேன் அருமை.

    http://killergee.blogspot.com/2019/08/4.html?m=1

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் வெளியூரில் இருப்பாதல் அலைபேசி மூலம் பார்ப்பீர்கள்
    அதில் காட்டாது அல்லவா? பரவாயில்லை.
    வந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    நானும் உங்கள் பதிவை இன்று தான் பார்த்தேன்,கருத்து அளித்து இருக்கிறேன்.
    உறவினர் வருகையால் சனிக்கிழமை எந்த தளங்களுக்கும் சென்று படிக்கவில்லை.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு