ஞாயிறு, 9 ஜூன், 2019

மழை ! மழை!

எங்கள் வீட்டுப் பால்கனியிலிருந்து எடுத்த மழைக்காட்சிகள்.


ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழை, காற்றுடன்  நல்ல மழை.
இரண்டு நாளுக்கு முன் பெய்த மழை

மழை வருமா?மழை உண்டா?  என்று கேள்வி கேட்கப்படுகிறது.
கிடைத்த பதில் என்ன பதிவைப் படிங்கள்.


மதுரை வைகை ஆறு
மதுரை வைகை ஆறு -ஆடு , மாடுகளுக்கு உதவிக் கொண்டு இருக்கிறது இப்போது.
அழகர் வந்த போது தண்ணீர் திறந்து விட்டார்கள்.  வந்து கொண்டு இருக்கிறது தண்ணீர்
தீபாவளி சமயம் திருவேடகத்தில் உள்ள வைகை ஆறு



மதுரையிலிருந்து மக்கள் திருவேடகம் வைகைஆற்றுக்குப்  போய்க் குளிக்கும் காட்சி

நேற்று இரண்டு தூறல் போட்டு ஏமாற்றிச் சென்ற மழை

நீராவி  ரயில்எஞ்சினை இயக்க நீர் வேண்டும் என்பதால்  அதற்குப் பெரம்பூரில் பெரிய கிணறு வெட்டி இருந்தார்கள்.  இப்போது எஞ்சினுக்கு தண்ணீர் தேவைப் படாத காரணத்தாலும் மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டபடுவதாலும் கிணற்றில் நிறைய சகடை அமைத்து  நீர் இறைத்துக் கொள்ள வசதி செய்து கொடுத்து இருக்கிறார்கள்.  குலுக்கல் முறையில் ஆளுக்கு மூன்று குடம் பிடித்துக் கொள்வதாய் ஒரு தொலைக்காட்சி செய்தி.

அன்று சன் தொலைக்காட்சியில் ஒலிபரப்பும் பாபா தொடரில் சீரடியில் தண்ணீர்ப் பற்றாக்குறை- கிணற்றில் எல்லோரும் வரிசையாக நின்று  ஆளுக்கு இரண்டு குடம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும். வீட்டில் நிறைய பேர் இருப்பவர்கள் , விருந்தினர் வருகை உள்ளவர்கள் மட்டும் மீண்டும் வந்து இரண்டு குடம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கட்டுப்பாடு- மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறார்கள்.

இன்று புதுயுகம்  தொலைக்காட்சியில்  சோதிடர் சேலம் பாலாஜி  அவர்களிடம் நேர்காணல். அதில் பலதரப்பட்ட கேள்விகள் கேட்டார்கள். இந்த பதிவுக்குத்  தேவையான முக்கிய கேள்வி மழைபெய்யுமா? மக்கள் கஷ்டம் தீருமா என்று கேள்விதான்.

ஜுன்  இரண்டாம் வாரத்திலிருந்து ஜுலை 31ம் தேதி வரை நல்ல மழை உண்டாம். அதை நிலத்தடியில் சேகரிக்க வேண்டுமாம். 

 அயல் நாட்டில் வேலைக்குப் போனவர்கள் பெரிய பணக்காரர்கள் எல்லாம் நிலத்தடி நீரை சேகரித்தவர்கள் தானாம்.யார் எல்லாம் நீரை சேகரம் செய்கிறீர்களோ அவர்களுக்கு எல்லாம் மங்கல வாழ்வு வருமாம். வீட்டில் ஆழ்துளைக்கிணறு இறக்கிய இடத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமையுங்கள்.  அப்போது எப்போதும் ஆழ்துளைக் கிணற்றில் நீர் வற்றாது. இப்படி மழைநீரைச் சேகரம் செய்தால் இரண்டு வருடத்தில்  நீர்ப் பற்றாக்குறை தீர்ந்து விடும்.

எல்லா ஏரிகளிலும் நீர் நிறைந்து இருக்கும் தடுப்பணை எல்லாம் கட்டுவார்கள்.,  என்று சொன்னார் பாலாஜி. சொன்னமாதிரி நடக்கும் நேரங்கள் கூடி வந்து இருக்கிறது என்றார்.

இவர் ஜோசியமாய் சொன்னதை நம் முன்னோர்கள் முன்பே சொல்லி இருக்கிறார்கள்.  எந்த எந்தக் காலத்தில் மழை பெய்யும், மழை நீரை எப்படிச் சேகரிப்பது,  'நீர்ச் சிக்கனம் செல்வத்தின் அளவுகோல்' என்று எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். பணத்தைத் தண்ணீர் போல் செலவழிக்காதே என்பார்கள் முன்பு. இப்போது பணத்தைத் தண்ணீர் போல் சிக்கனமாய் செலவு செய் என்று சொல்லும் காலம்.

மழைக் காலத்துக்கு வேண்டியதை சகல ஜீவராசிகளும் சேர்த்து வைத்துக் கொள்ளும். இப்போது மழை பொய்த்துப் போனதால் 'ஆமாம் எங்கே மழை பெய்யப் போகிறது அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்ற எண்ணம் வந்து விட்டது எல்லோரிடமும்.

மழைத் தவம் செய்வோம் மழை வரும் என்று ஒரு ஞானி சொன்னார். மழை தவம் செய்ய வந்தவர்களில் ஒருவர் மட்டுமே குடை கொண்டு வந்து இருந்தார்.
எல்லோரும்  அவனைக் கேலி செய்தார்கள், ஞானி சொன்னார் அவன் மட்டுமே மழை தவத்தின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறான் என்று.
மழை பெய்யும் என்ற நம்பிக்கை வேண்டும்.

இனி காணொளிகளில் மட்டுமே மழையைப் பார்க்க முடியும் என்று சொல்லிக் கொண்டு இருக்காமல் மழை பெய்வதுபோல் கற்பனை செய்வோம். மண் வசனையை முகர்வோம். நம் வீட்டுக் கிணறு ஊரில் இருக்கும் மிச்ச மீதி குளம், ஆறு இவற்றில் நீர் வந்து விட்டதாக நினைத்து அதைக் காட்சியாக காண்போம் அடிக்கடி.

அனுபிரேம் போட்ட புதிய பதிவில் காவிரி வெறும் மணலாகக் காட்சி அளிக்கிறது. சிறு ஓடையாகக் காவிரி ஓடுகிறாள், பார்க்கப் பார்க்க மனது சங்கடப்படுது. காவிரி இரு கரை தொட்டு ஓடுவதைக்  கற்பனை செய்வோம்.
எங்கும் பசுமை, அதிராவின் பதிவு போல் பசுமை  ஆகி விட்டதாகக் கற்பனை செய்வோம்.

வீராணம் ஏரி , செம்பரம்பாக்கம் ஏரி எல்லாம் நிறைந்து வழியும் என்று சொல்லி இருக்கிறார் சோதிடர் பாலாஜி . அவர் சொன்னபடி ஏரிகள் நிறைந்து நீர் வரத்து மக்களின் தேவையை ப்பூர்த்தி செய்யட்டும்.

நாமும் மழை வரும் என்று நம்புவோம். மழை நீரைச் சேகரிக்க முடிந்த அளவு சேமிப்போம். மழையைத் திட்டாமல், வரவேற்போம். கல்யாணசமயத்தில்  மழை வருவது போல் இருந்தால்   , மழை வேண்டாம் என்று தேங்காயை ப்பந்தலில் கட்டி விடுவார்கள், இன்று செங்கல் சூளை போட்டு இருக்கிறேன் மழை வேண்டாம் என்பார்கள், இப்படி ஒவ்வொருவரும் மழையை வேண்டாம் என்று தள்ளி போடுவதால் மழை தள்ளிப் போகிறது என்று சொல்பவர்களும் உண்டு. 

கேரளாவில் பருவமழை ஆரம்பித்து விட்டது என்றார்கள். கனமழையும் இருக்கும் என்று எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள்.  கேரளா பக்கம் இருக்கும் நம் ஊருக்கும் நல்ல மழை எதிர்ப்பார்க்கபடுகிறது.

ஒரு முறை மழையைப்பற்றித் தொடர் பதிவு எழுத வல்லி அக்கா அழைத்த போது மழையும் மகிழ்ச்சியும் என்று என் மழை அனுபவங்களை எழுதினேன்

1973ல் நாங்கள் திருவெண்காட்டில் இருக்கும் போது அடை மழை பெய்யும்.  திருவெண்காடு சுவேதாரண்யர் கோவில் கோபுரத்தை , விமானங்களை மழையும் காற்றும் தழுவிச் செல்வதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு.வீட்டில் வராந்தாவில் கம்பிகேட் வழியாக மழையைப் பார்க்கப் பார்க்க அலுக்காது. பலத்த மழை பெய்யும்போது கோவில் மதில் சுவரைக் கடல் அலை போல் மழை தாண்டித் தாண்டி வருவதைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சி. அப்போது கண்கள் தான் காமிரா, மேமரி கார்ட் மனது.
 திருவெண்காடு  வீடு வராந்தாவில் கம்பிகேட்(மூன்று  ஜன்னல் இருக்கும்) வழியாக மழையை ரசிக்கும் மாடி வீடு  அந்த வீட்டில் தான் இருந்தோம். அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம் இரண்டும் மாடியில் இருந்து பார்த்தால் தெரியும். என் குழந்தைகள் இருவரும்  கம்பிகளைப் பிடித்துக் கொண்டு அந்த ஜன்னலில் நிற்பார்கள். பறவைகளின் இன்னிசை, மழையின் ஓசை எல்லாம் ரசிக்கலாம்.

பல வருடங்களுக்கு முன் திருவெண்காடு போன போது மழை பெய்து கொண்டு இருந்த மாலை நேரம் இருட்ட ஆரம்பித்து விட்டது அப்போது அலைபேசியில் எடுத்த படம்.  குளத்தில் தாமரை இலையில் தண்ணீர்த் துளி கள் நிற்கிறது.

   இன்ப மழை பெய்ய வேண்டும் என்ற மழை பதிவில் ஸ்ரீராம் கவிதையும் இடம் பெற்று இருக்கிறது. சாரின் ஓவியமும் இருக்கிறது.
மழைக் காலத்தில் மழை வேண்டும், வெயில் காலத்தில் வெயில் வேண்டும். மழை வருமுன் செய்ய வேண்டியவைகள் அடங்கிய பதிவு. படிக்க விருப்பம் என்றால் படிக்கலாம்.


அந்தக்கால ஓட்டு வீட்டில் முற்றத்தில் மழை பெய்யும் காட்சி. மாயவரத்தில் என் வீட்டு ஜன்னலில் இருந்து கீழே இருக்கும் ஓட்டு வீட்டை மழை பெய்யும் போது எடுத்த படம்.  சின்ன காணொளிதான். பாருங்கள். அந்த மாதிரி வீட்டில் இருந்தவர்கள் ரசிப்பார்கள்.  முற்றத்தில் தாழ்வாரத்தில் கால்களை த்தொங்கப் போட்டுக் கொண்டு மழையை ரசிக்கலாம். 

சோதிடர் சொன்னது போல் எல்லோருக்கும் மங்கலம் உண்டாக வேண்டுமென்றால் சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடலைப்  பாட வேண்டும்.  சிலப்பதிகார காலத்தில் இந்த மங்கலப்பாடலில் வரும் பூம்புகார் அருகில் உள்ள ஊர் அல்லவா? திருவெண்காடு அதனால் நல்ல மழை பெய்யும்.

மழை, வெயில் இரண்டுமே நமக்கு தேவை. சிலப்பதிகாரத்தில் புகார் காண்டத்தில் வரும்  மங்கல வாழ்த்துப் பாடலில், திங்களையும்  ஞாயிறையும் , மாமழையையும் போற்றுவார்  இளங்கோவடிகள்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் 
 நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
 மேனின்று தான்சுரத்த லான்.
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி யுலகிற்கு அவன் குலத்தோடு 
ஓங்கிப் பரந்தொழுகலான்.


சிறந்த மழையைப்போற்றுவோம்! சிறந்த மழையைப் போற்றுவோம்! அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகிற்கு, அச்சோழன் அருள்தல் போல் மேல் நின்று  நீரைப் பெய்து வளம் தருதலால் ,  சிறந்த மழையைப் போற்றுவோம்!

 திங்களை, ஞாயிறை, சிறந்த மழையை, புகாரைப் போற்றுவோம் என்பது போல் நாம் திங்களை, ஞாயிறை, மழையை, நாம் இருக்கும் ஊரை அந்த ஊரை வளப்படுத்தப்  பாடுவோம்.

//வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மைகுன்றிய
     பிரதேசங்களுக்கு காற்று ஓடி வருகிறது.
அங்ஙனம் ஓடி வரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக்
     கொண்டு வருகிறது.
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை  கடற்பாரிசங்களிலிருந்தே
     வருகின்றது.
காற்றே , உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்
     மழை கொண்டு வா.
உனக்குத் தூபதீபங்கள் ஏற்றி வைக்கிறோம்.
வருணா, இந்திரா, நீவிர் வாழ்க
இப்போது நல்ல மழை பெய்ய்யும்படி அருள் புரிய வேண்டும்.
எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்து போய் விட்டன்.
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று
     காலிகளுக்கும் நோய் வருகிறது. அதனை மாற்றியருள
     வேண்டும்.
பகல்நேரங்களிலே அனல் பொறுக்க முடியவில்லை
மனம்” ஹா ஹா” வென்று பறக்கிறது.
பறவைகளெல்லாம் வாட்டமெய்தி நிழலுக்காகப்
    பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன.
பலதினங்களாக, மாலை தோறும் மேகங்கள் வந்து
 கூடுகின்றன.
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய்,ஓரிலைகூட
     அசையாமல்,புழுக்கம் கொடிதாக இருக்கிறது.
சிறிதுபொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து
     மேகங்களை அடித்துத் துரத்திக் கொண்டு போகின்றன.
இப்படிப் பல நாட்களாக ஏமாந்து போகிறோம்.
இந்திரா, வருணா, அர்யமா, பகா, மித்திரா, உங்கள்
     கருணையைப் பாடுகிறேன்.
எங்கள் தாபமெல்லாந் தீர்ந்து உலகம் தழைக்குமாறு
 இன்ப மழை பெய்தல் வேண்டும்.//

- பாரதி.

நிறைய தினங்கள் பாரதி பாடியது போல் மழைதரும் மேகங்களை காற்று கொண்டு போய் விடுகிறது. உலகம் தழைக்க இன்ப மழையை அழைப்போம்.


மழை வேண்டும் மழை வேண்டும்  இயற்கையே !
மழை வேண்டும்  மழை வேண்டும் கடவுளே!

ஏரி, குளம்,ஆறு  எல்லாம் நிரம்பி வழிய 
மாரி அளவாய்ப் பொழிய 

வாழ்க வையகம்  ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

                                                          வாழ்க வளமுடன்.



========================================================================

66 கருத்துகள்:

  1. நல்ல மழை பெய்யட்டும்..
    மக்கள் துயர் தீரட்டும்....
    மண்ணின் மணம் வீசட்டும்..
    மண்ணின் மனம் குளிரட்டும்!...

    வருண தேவனே வருக.. வருக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      வருணதேவனை வருக என்று அழைத்த கவிதை அருமை.
      மண் குளிர்ந்தால் மனம் குளிரும்.

      நீக்கு
  2. நாடு நலம் பெறுவதற்கு என்று
    நல்லதொரு பதிவு..

    வாழ்க வையகம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடு நலமாக இருந்தால் நாமும் நலமாக இருப்போம்.
      வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. காணொளிகள் கண்டேன் சகோ

    மழையை இன்றைய சந்ததிகள் அபூர்வ காட்சிகளாக பார்க்கும் நிலைக்கு தள்ளி விட்டது நாம்தானே...

    நீர்நிலைகளை பாதுகாக்கும் எண்ணங்கள் இனியாவது நமக்கு வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      மழை இன்றைய குழந்தைகளுக்கு அபூர்வ காட்சி ஆகி விட கூடாது. நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் இனியாவது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. அன்பு கோமதி எத்தனை ஆதங்கம் உங்கள் பதிவில். இது போல நேர்மறை எண்ணங்களும், விஷுவலைசேஷனும் அனைவரும் ஒருமிக்க செய்ய வேண்டாம். மழை பெய்கிறது, நாடு செழிக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
    திரு வெண்காட்டுக் குளம் அற்புதம்.
    மாயவரம் ஏக்கம் இன்னும் போகவில்லை உங்களுக்கு.

    நல்லவர்களின் வாக்கும் எண்ணங்களும் பலிக்கும்.
    மழை வரத்தான் போகிறது. All the videos were very good. Thank you ma.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
      //மழை பெய்கிறது, நாடு செழிக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.//

      இது போதுமே !அக்கா நாடு நலம்பெறும்.
      திருவெண்காடு குளம் படம் காமிராவில் தெளிவாக உள்ள படம் தேடினேன், கிடைக்கவில்லை. மழையில் எடுத்த படங்கள் பதிவுக்கு பொருத்தம் என்று போட்டு விட்டேன் அக்கா.

      மாயவரம் மறக்க முடியாத பந்தம் அக்கா.
      மழை வரட்டும் அது தானே நம் எல்லோர் பிரார்த்தனையும்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  5. மழை வேண்டும் என ஏங்க வைக்கிறது. தண்ணீர் சிக்கனம் மிகவும் அவசியம் என்பதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம்.

    காணொளிகளும் படங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ் , வாழ்க வளமுடன்.
      ஆமாம் வெங்கட், மக்கள் தண்ணீர் சிக்கனத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
      காணொளிகளை பார்த்தது மகிழ்ச்சி.
      உங்கள் வேலை பளுவுக்கு இடையில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  6. ஆஆஆஆஆஆஆ மீ 1ஸ்ட்டு இல்ல இல்ல:))..

    அடிரா மழைடா அடை மழைடா.... அழகாகக் காத்துடன் பெய்திருக்கிறதே.. பிறகென்ன கோமதி அக்காவுக்கு ஜாடி நிறையப்போகிறது மல்லிகை பூத்துக் கொட்டப்போகிறது.. மிளகாய்க் கன்றில் கூடை கூடையாகக் காய்ச்சுக் கொட்டப்போகிறதே.....

    முதல் வீடியோவில் மழை கொட்டுவது அழகு.. மாமாவோ தூவானத்தில நின்று நனைகிறார்ர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது உண்மைதான் அன்று அடித்து மழை காத்துடன் பெய்தது. காய்ந்து கிடக்கும் பூமி உறிஞ்சு கொண்டது. தொடர்ந்து இப்படி பெய்தால் நீர் வரத்து நன்றாக இருக்கும்.

      மாமாதான் தூவானத்தில் நின்று நனைவது. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மழையில் நனைவது, மழையை வேடிக்கைப் பார்ப்பது மிகவும் பிடித்தமானது.
      கோடை இடியும், மின்னலும் மட்டும் கொஞ்சம் பயம். அதுவும் அம்மா சொல்லிக் கொடுத்தது போல் அர்ச்சுனா !அர்ச்சுனா !என்று சொல்லி கொள்வேன்.
      மிளகாய் செடி பூத்து கொட்டுகிறது நீங்கள் சொன்னது போல் காய்ச்சுக் கொட்டினால் மகிழ்ச்சி.

      நீக்கு
  7. ஓ வைகை இப்படி வற்றிவிட்டதே.. இருப்பினும் எதுக்கு இன்னமும் மக்கள் ஆற்றங்கரை எல்லாம் குப்பையை எறிகிறார்களோ தெரியவில்லை.. திருத்தவே முடியாது இவர்களை.. இங்கு கச்சான் கோதை மட்டும் அதுவும் ஒன்றே ஒன்று எப்போதாவது வேணுமென்று கீழே போட்டுப் பார்ப்பேன் கைகக்ள் கூசும்.. ஹா ஹா ஹா பழகிப்போச்ச்...

    திருவேடகம் வைகையில் நல்ல தண்ணி ஓடுதே.. இவ்ளோ தண்ணி இருக்கும்போது.. தண்ணி இல்லை என அழலாமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வகை வற்றி விட்டது. மக்கள் குப்பை கொட்டும் இடமாகத்தான் வைத்து இருக்கிறார்கள்.
      சாக்கடைகளை கொண்டு வந்து விடுகிறார்கள். நீங்கள் சொல்வது போல் குப்பைகளை போட கூசுவது பழக்கம் தான் காரணம்.
      இங்கு அடுக்குமாடியில் குடியிருக்கும் படித்தவர்கள், அவர்கள் குழந்தைகள் எல்லாம் நினைத்த இடத்தில் குப்பைகளை போடுகிறார்கள். தினம் குப்பை எடுக்க வருகிறார் அவரிடம் போட்டது போக இப்படி வேறு சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்கிறார்கள். மீட்டிங் போட்டு போடாதீர்கள் என்று சொல்லவேண்டி இருக்கிறது. அவர் அவர்களுக்கே வரணும்.

      திருவேடகம் தடுப்பணை அதனால் ஜப்பசி மாதம் என்பதால் கொஞ்சம் நீர் இருக்கிறது.
      மதுரையில் அப்போ சொட்டு தண்ணீர் இல்லை அதனால் எல்லோரும் திருவேடகம் போனார்கள் . மக்கள் தொகைக்கு இந்த தண்ணீர் எல்லாம் பற்றாது அதிரா.

      நீக்கு
  8. நேற்று வந்ததும் தூறல் அல்ல.. பெரிய மழைதான்.. பெரிய பெரிய துமியாக விழுகிறதே.. ஆனா டக்குப் பக்கென திரை போட்டுவிட்டதுபோலும் வானம்:))..

    //நீராவி ரயில்எஞ்சினை இயக்க நீர் வேண்டும்//
    இதைக் கண்டுபிடித்தவர் ஸ்கொட்டிஸ்காரர் தெரியுமோ.. அதாவது அதிராவின் அயல்க்காரராக்கும்:)) ஹா ஹா ஹா.

    //மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறார்கள்.//
    விட்டுக் கொடுக்கும் மனப்பானமை வளர்ந்துவிட்டாலே.. பல பிரச்சனை தீர்ந்துவிடும்..

    //ஜுன் இரண்டாம் வாரத்திலிருந்து ஜுலை 31ம் தேதி வரை நல்ல மழை உண்டாம். //

    அதுதான் ஆரம்பமாகி இருக்கோ.. கொட்டாட்டில் நானும் அஞ்சுவைக் கூட்டிக்கொண்டு வாறேன் ஆளை அமத்திப் பிடிச்சிடலாம்:)).. ஹா ஹா ஹா எங்களை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊ:)..

    //அதிராவின் பதிவு போல் பசுமை ஆகி விட்டதாகக் கற்பனை செய்வோம்.//

    ஹா ஹா ஹா அப்பூடியே நிறையத் தண்ணி குடிச்சதைப்போலவும் கற்பனை செய்யுங்கள்:)) வயிறு நிரம்பிவிடும்..

    அது என்ன சாபமோ தமிழ்நாட்டில் ஒன்று கொட்டுகிறது இல்லை எனில் வறட்டி வாட்டுகிறதே... சாமிப காலமாகத்தானே இப்படி.. முன்னைய காலங்களில் இப்படி வறட்சி இருந்திருக்காது என்ன கோமதி அக்கா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /ஆனா டக்குப் பக்கென திரை போட்டுவிட்டதுபோலும் வானம்:))//

      பெரிய துளியாக பெய்து நீங்கள் சொல்வது போல் வானம் திரை போட்டு விட்டது.

      //இதைக் கண்டுபிடித்தவர் ஸ்கொட்டிஸ்காரர் தெரியுமோ.. அதாவது அதிராவின் அயல்க்காரராக்கும்:)) ஹா ஹா ஹா.//

      ஸ்காதலாந்தை சேர்ந்த ஜேமஸ் வாட் முதலாவது நீராவி எஞ்சினை கண்டுபிடித்த பெருமைக்கு உரியவர்தான். இத்தனை வருடத்திற்கு பிறகும் அதிராவிற்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறார்.

      //விட்டுக் கொடுக்கும் மனப்பானமை வளர்ந்துவிட்டாலே.. பல பிரச்சனை தீர்ந்துவிடும்..//

      ஆமாம் அதிரா. எங்கள் ப்ளாக் பாஸிடிவ் செய்தியில் ஒருவர் விவாசாயத்திற்கு தோண்டிய கிணற்றில் தண்ணீர் இருப்பதால் தன் ஊர் மக்களுக்கு அதை விட்டுக் கொடுத்தாரே இல்வசமாய் தண்ணீர் கொடுத்து இருப்பதை பாரட்ட வேண்டும். சில பெரிய மனிதர்கள் மோட்டார் போட்டு தண்ணீரை எல்லாம் எடுத்து கொள்கிறார்கள் , மற்றவர்களுக்கு தண்ணீர் வர மாட்டேன் என்கிறது.

      //கொட்டாட்டில் நானும் அஞ்சுவைக் கூட்டிக்கொண்டு வாறேன் ஆளை அமத்திப் பிடிச்சிடலாம்:)).. ஹா ஹா ஹா எங்களை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊ:)..//

      அதிராவும் , அஞ்சுவும் இருக்கும் போது என்ன கவலை!


      அவர் அடுத்த நேர்காணலில் நீங்களே சொல்வீர்கள் நீங்கள் சொன்னது போல் மழை பெய்தது என்று அடித்து சொல்கிறார், நம்புவோம்.

      // ஹா ஹா ஹா அப்பூடியே நிறையத் தண்ணி குடிச்சதைப்போலவும் கற்பனை செய்யுங்கள்:)) வயிறு நிரம்பிவிடும்..//

      இது நல்ல கதையாக இருக்கே! இதுவும் நல்லாதான் இருக்கிறது. லம்பிகா யோகத்தில் நாக்கை மடித்து மேல் அண்ணத்தில் வைத்து தவம் செய்ய சொல்வார்கள், தண்ணீர் தாகம், பசி இருக்காதாம். தவளை தன் உணவுக்காக இப்படி தவம் இருக்குமாம், அப்புறம் உண்வு கிடைக்கும் போது நாக்கை நீட்டி கவர்ந்து கொள்ளுமாம். முன் யோகிகள் எல்லாம், கடுகளில் குகைகளில் தவம் செய்யும் போது தாகம் பசி எடுக்காமல் இருக்க இப்படி தவம் செய்வார்கள்.

      மழை பெய்தும், பெய்யாமலும் கெடுக்கும் என்று திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார்.
      கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மாற்றாங்கே
      எடுப்பதூஉம் எல்லாம் மழை.
      //முன்னைய காலங்களில் இப்படி வறட்சி இருந்திருக்காது என்ன கோமதி அக்கா?..

      முன்பும் இப்படி இருந்து இருக்கிறது அதனால்தானே 2000 வருடம் முன்பே பாடி இருக்கிறார். வள்ளுவர்.

      எல்லா காலங்களிலும் வறட்சி, பஞ்சம், வறுமை எல்லாம் இருந்து இருக்கும். அந்த கால கட்டத்தை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக கடக்க வேண்டும்.

      நீக்கு
  9. நானும் அடிடா மழைடா அடை மழைடா என மழைக்காட்சிப் படங்கள் புளொக்கில் போட்டேன் 2012 இல் என நினைக்கிறேன்:).

    // என் குழந்தைகள் இருவரும் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு அந்த ஜன்னலில் நிற்பார்கள். //
    மறக்கவே முடியாத இனிமையான காலங்கள்.. நான் இப்படி இளமையை அதிகம் நினைப்பதில்லை.. நினைத்தால் கவலைதான் வரும்..

    // இன்ப மழை பெய்ய வேண்டும் என்ற மழை பதிவில் ஸ்ரீராம் கவிதையும் இடம் பெற்று இருக்கிறது. சாரின் ஓவியமும் இருக்கிறது.//

    ஓ..

    பாரதி அப்பப்பாவின் கவிதை என்றென்றும் அழகுதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானும் அடிடா மழைடா அடை மழைடா என மழைக்காட்சிப் படங்கள் புளொக்கில் போட்டேன் 2012 இல் என நினைக்கிறேன்:).//
      சுட்டி கொடுத்து இருக்கலாம் அதிரா, பார்த்து இருப்பேன்.

      //மறக்கவே முடியாத இனிமையான காலங்கள்.. நான் இப்படி இளமையை அதிகம் நினைப்பதில்லை.. நினைத்தால் கவலைதான் வரும்..//

      ஆமாம் , உங்கள் இளமை காலம் கழிந்த உங்கள் சொந்த ஊரை நினைத்தால் கவலைதான் வரும். புரிந்து கொள்ள முடிகிறது.

      பழைய பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி அதிரா.
      பாரதியின் கவிதை என்றும் அருமைதான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      நீக்கு
    2. ///ஆமாம் , உங்கள் இளமை காலம் கழிந்த உங்கள் சொந்த ஊரை நினைத்தால் கவலைதான் வரும். புரிந்து கொள்ள முடிகிறது. ///
      இல்லை கோமதி அக்கா... அந்த மீனிங்கில் சொல்லவில்லை... காலம் ஓடிவந்துவிட்டதே இனி திரும்ப அக்காலத்துக்குப் போகமுடியாதே எனச் சொன்னேன்... எங்கள் பிள்ளைகள் இப்போதான் பிறந்து ஏ பி சி டி சொல்லிக் குடுத்ததுபோல இருக்கு... இப்போ திரும்பிப் பார்க்க முன் நமக்கு சொல்லித் தருகிறார்கள்... காலம் ஓடுகிறது எனச் சொன்னேன்....

      நீக்கு
    3. ஓ! அந்த அர்த்தமா? காலம் விரைந்து தான் ஓடுகிறது. குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். பழைய காலத்துக்கு போக முடியாது என்பது உண்மைதான்.
      ஆனால் சின்ன குழந்தைகள் செய்த குறும்புகள், அவர்களின் விருப்பு வெறுப்புகளில் மாறுதல் எல்லாம் நினைவு வந்து போகும் போது தான்.
      காலம் ஓட வேண்டும். நகர்ந்தால் தான் கஷ்டம்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  10. திருவேடகம் வைகையில் வெள்ளம் வந்து பார்த்திருக்கேன். 1997 ஆம் ஆண்டில். படங்கள் எல்லாம் பெண் எடுத்தவை. அவளிடம் இருக்கின்றன. ஆனாலும் வைகையை மதுரை மக்கள் வீணடித்துத்தான் விட்டார்கள். பார்க்கப் பார்க்க மனம் பதறுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      ஆமாம், தம்பி, தங்கைகள் பார்த்து இருக்கிறார்கள் வெள்ளத்தை.
      நான் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன். வெள்ளம் கீழ்பாலம் எல்லாம் நிறைந்து போவதை.
      மதுரை வைகை ஆற்றை, மாயவரம் காவிரியை எல்லாம் மக்கள் வீணடித்து விட்டார்கள்தான். நடுவில் இருந்த அழகான நீராழி மண்டபத்தை உடைத்து விட்டார்கள். ஆற்றுக்குள் அந்த இடத்தில் வேறு கட்டுமானம் ஆகிறது.

      நீக்கு
  11. உங்கள் மழை குறித்த வீடியோவை முகநூலிலும் பார்த்தேன். அந்த மாதிரி மழை இங்கே அடித்துப் பெய்வதே இல்லை. மழை வரும்போல் இருட்டிக்கொண்டு வரும். காற்றடித்து மேகங்கள் கலைந்து விடும். எங்கோ போய்விடுகின்றன! இங்கே மழையே பெய்யாதோ எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காற்றுடன் நல்ல மழைதான் அன்று. எப்போதும் வாயு பகவானுக்கும், வருணபகவானுக்கும் போட்டிதானே !
      மழை தேவைபடும் போது அரங்கன் அருள்வார்.

      நீக்கு
  12. மாயவரத்து மழைக்காட்சியும் திருவெண்காட்டு மழைக்காட்சியும் அருமை! அவ்வளவு அருமையான ஊரில் இருந்துவிட்டு எப்படி விட்டு விட்டு வந்தீர்கள்? அதான் எனக்கு ஆச்சரியம்! ஆனாலும் நினைவுகளைப் படமாக்கி வைத்திருக்கிறீர்கள். திருவெண்காட்டுக் குளம் அருமையாக வந்திருக்கிறது. சுட்டிகளில் உள்ள பதிவுகளுக்குப் பின்னர் தான் போகணும். அவற்றையும் போய்ப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவெண்காடு 7 வருடம் இருந்தோம்.குழந்தைகளுக்கு மருத்துவம், பள்ளிபடிப்பு, கோவை, மதுரை போக பஸ் வசதி என்று மாயவரம் வந்தோம். அப்புறம் சொந்தங்கள் யாரும் மாயவரத்தில் இல்லை, அவர்கள் வீட்டு விசேஷம் , நல்லது கெட்டதுகளில் பங்கு பெற பயணம் செய்வது வயதான காலத்தில் கஷ்டமாய் இருக்கிறது. சொந்த வீடு பராமரிப்பு அது இது என்று வந்து விட்டோம் அத்தனை அன்பான நட்புகளை விட்டு விட்டு.

      எல்லாம் இறைவன் திருவுள்ளம் .

      முடிந்த போது பாருங்கள் பழைய பதிவுகளை.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
      மாமழை போற்றுவோம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. காலை வணக்கம். கொதிக்கும் சென்னையிலிருந்து ஸ்ரீராம் ஆஜர்! நேற்று வானிலை நிலைய இயக்குனர் தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கிய செய்தியைச் சொன்னவர், சென்னையில் இப்போதைக்கு மழை கிடையாது என்ற நல்ல செய்தியையும் சொன்னார். அவர் என்ன கடவுளா என்ன? அவர் சொல்லைமீறி அதற்காகவேனும் மழை பெய்ய வேண்டும்.இதற்கிடையில் பேஸ்புக்கில் வெதர்மேன் நேற்று சென்னையில் இந்த ஆண்டுக்கான அதிகபட்ச ரெகார்ட் வெயில் பதிவானதாக தகவல் அளித்துள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      நானும் கேட்டேன் சென்னைக்கு மழை வர வாய்ப்பு இல்லை என்று சொன்னதை.
      முன்பு வானிலை அறிக்கையில் மழை பெய்யும் என்றால் அன்று வடகம் போடலாம் என்று கேலி செய்யபடும். அது போல் வானிலை அறிக்கையை பொய்யாக்கி சென்னைக்கு மழை பெய்யட்டும். வெம்மை ஆண்டுக்கு ஆண்டு அதிகம் என்பார்கள். இப்போது ரெகார்ட் ஆகி விட்டது வருத்தமாய் இருக்கிறது.

      நீக்கு
  15. தானாகப்பொறுப்பு வந்து சேகரம் பண்ண வேண்டிய நீரை, மக்களைச் சேமிக்க வைக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது?!! ஜோதிடர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ஆயினும் நான் நினைத்து நீரை எப்படிச் சேமிக்க? அரசாங்கம் ஆவன செய்யவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர் சேமிக்க நிறைய் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. சோதிடர்களும் காலத்துக்கு ஏற்ற மாதிரி எல்லாம் சொல்கிறார். ரஜினி, பாரத பிரதமர், நாட்டு நிலமை எல்லாம் கேட்டார்கள் அவர் சொன்னது எல்லாம் நடைமுறைக்கு வருகிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

      அரசாங்கம் போர் கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மிச்ச மீதி குளங்கள், ஏரிகள் எல்லா வற்றையும் காப்பாற்றி மழை நீரை சேமித்து மக்களுக்கு பயன் பெற செய்யவேண்டும்.

      நீக்கு
  16. முன்காலத்தில் தண்ணீர் சேகரிப்பை பொறுப்பாகச் செய்தார்கள் ஆட்சியாளர்கள். மக்களும் பொறுப்பு உணர்ந்து இருந்தார்கள். ஆனால் இப்போது மக்கள் வரும் தண்ணீரை வீணடிக்கிறார்கள். தாங்கள் மட்டுமே அதிக தண்ணீர்பெறவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மணல்கொலையைத் தடுப்பதில்லை. தூர் வருவதில்லை. புதிய அணைகள் கட்ட முயற்சி எடுப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு செய்தது போல் பொறுப்பாக எல்லாம் செய்ய பிரார்த்தனை செய்யவேண்டியதுதான்.
      தன்னார்வ தொண்டர்கள் ஏரி, குளங்களை தூர் வாரும் பொறுப்பை எடுத்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் கூட பாஸிடிவ் செய்தியில் போட்டு இருந்தீர்களே!
      மணல் கொள்ளை , மணல் கொலையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது .
      புதிய அணைகள், பழைய அணைகள் பழுது பார்த்தல் எல்லாம் செய்யலாம்.

      நீக்கு
  17. ஓ என் கவிதையும் இருக்கிறதா?பார்க்கிறேன். ஓ... எங்கள் பதிவொன்றைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதிரா பின்னூட்டம் மட்டும் மெயில் பெட்டிக்கு வந்தபோது குழம்பினேன். இப்போது தெளிவுறுகிறேன். ஆனால் நான் ஆடுவதாகச் சொல்லவில்லை. இப்போதெல்லாம் மயில் கூட வானிலை அறிக்கை கேட்டுதான் மழை வருவதை அறிகிறது என்று சொல்ல வந்திருக்கிறேன். அது ஆடுவதாகச் சொல்வதாகவே எழுதி இருக்கிறேன்! மறுபடியும் ஸார் ஓவியம் கண்டு ரசித்தேன். அங்கும், அப்போதும் மழை, மழைநீர் சேகரிப்புப் பற்றியெல்லாம் பொங்கியிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்லி விட்டேன் அதிராவிடம் . மயில் ஆடுவது வானிலை அறிக்கை கேட்டு என்று.
      முன்பு மழை தரும் கொண்டல் மேகம் கண்டால் மயில் ஆடும். இப்போது காலத்துக்கு ஏத்த மாதிரி ரமணின் மழை அறிவிப்பு கேட்டு ஆடுவதாய் அமைத்து இருந்த கவிதை உங்களோடது.

      அப்போதும் மழை நீர் சேகரிப்பு பற்றி எல்லாம் பொங்கி இருப்பது உண்மை. இன்னும் மாற்றம் ஏற்படவில்லை என்பது தான் வருத்தம்.

      நீக்கு
  18. விளம்பரத்துக்குச் செய்கிறார் என்றாலும் நல்ல காரியம் ஒன்று செய்தார் தயாநிதி மாறன். தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் தனது தொகுதிமக்களுக்கு லாரித்தண்ணீர் அனுப்பி வைத்து, தானே குடங்களும் வாங்கி கொடுத்து, தானே சியா குடங்கள் நிரப்பியும் கொடுத்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை ரேடியோ சிட்டி சில ஏரியாக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கிறது.
      தயாநிதி மாறன் போல் எல்லோரும் விளம்பரத்திற்கோ, அல்லது மனம் இரங்கியோ தண்ணீர் கொடுத்தால் புண்ணியம் தான்.

      மக்கள் சைக்கிள், வண்டி, ஆட்டோக்களில் தண்ணீரை எடுத்து செல்கிறார்கள்.
      நிலை மாற வேண்டும் அனைவரின் பிரார்த்தனை உதவி செய்யும்.
      எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நேற்று மீட்டிங் போட்டு தண்ணீர் சேமிப்பு, சிக்கனம் பற்றி பேசினார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  19. அனைவரின் வேண்டுதலும் இதுவே...

    பதிவு மிகவும் சிறப்பு அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரி

    மழை காட்சிகள் அனைத்தும் அருமை. மழையின் தேவையை மக்கள் தற்சமயம் உணர்ந்துள்ளனர். முன்பெல்லாம் அந்தந்த காலத்தில் யாரிடமும் கேட்காமல், இந்திரன் முதல் தேவர்கள் எல்லாம் தத்தம் கடமையை செய்து வந்தனர். மழையின் தேவைக்கு பிரார்த்தனைகளும், தேவைப்படாத போது அதை நிறுத்த வழிமுறைகளும் மக்கள் ஒரு பக்கம் செய்தாலும், இயற்கை மழையினால் வளமாகத்தான் இருந்து வந்தது. நாம்தான் செயற்கை கொண்டு, மரங்களை அழித்தும், சுற்றுச்சூழலை, மற்றும் நீர் நிலைகளை கவனியாது இருந்தும், மழை வருவதற்கான இயல்பை தடுத்து விட்டோமோ எனத் தோன்றுகிறது. தற்சமயம் இப்போது அனைவரும் நீரின் பெருமையை, தேவையை உணர்ந்து செயல்படுகிறோம். தொடர்ந்து பூமி வெப்பமயமாதலை தடுக்க நம் சந்ததிகளுக்கு மழை நீரை சேமிக்க கற்று கொடுக்க வேண்டும். நீரின் பெருமை உணர்ந்தால், மழையும் தவறாது பெய்து நம்மை காக்கும்.மழை படங்கள் மிக அழகாக எடுத்துள்ளீர்கள். கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது மழை பாடலும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      மழைகாட்சிகளை கண்டதற்கு மகிழ்ச்சி.

      மழையின் தேவை இப்போது உணர பட்டு இருக்கிறது.
      அந்தக்காலத்தில் மழை நீரை வீடுகளில் அண்டா, குடம், பானையில் பிடித்து வைத்துக் கொள்வார்கள். மழை நீர் கெட்டுப்போகாது. துணி துவைத்தால் அழுக்கு நன்கு போகும்.

      மழை நீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் பிடித்து வைத்துக் கொள்வார்கள் விருதுநகர், சிவகாசி பக்கம் எல்லாம்.

      நீங்கள் சொல்வது போல்தான் இயற்கையை பாழ்படுத்தி விட்டு இயற்கையை வேண்டினால் என்னவாகும்? இயற்கையை மதிக்க கற்றுக் கொண்டால் இயற்கை அள்ளித்தரும்.

      காடுகள் வளர்க்கப்பட வேண்டும். காட்டை அழிப்பதை தடுக்க வேண்டும்.ஆற்றுபடுகையில் முன்பு போல் பனை மரம் வளர்க்க வேண்டும். மண் அரிப்பைத் தடுக்கும் நீர் நிலைகளை பாதுகாத்தால் தண்ணீர் தட்டுபாடு வரும் ஆண்டில் இருக்காது.
      பதிவை படித்து விரிவான கருத்து அருமையாக கொடுத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  21. வைகை ஆற்றின் படங்கள் கண்டு மகிழ்வாய் இருந்தது.

    ஆற்றின் கரையில் பிளாஸ்டிக் குப்பை. ஆற்றை மாசுபடுத்திவிட்டு, 'மழை வரலை', 'தண்ணீர் எங்கே' என்று கேட்கும் மக்களைப் பற்றி என்ன சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      ஆற்றின் கரையை குப்பையாக வைப்பது மட்டும் அல்ல, சாக்கடை கழிவு நீர் அங்கு விடுகிறார்கள்.
      ஆற்றை வழிபட்ட காலங்கள் போச்சு, ஆற்றை மாசு படுத்தினால் தண்டனை என்றால் ஒரு வேளை பயப்படலாம்.

      நீக்கு
  22. பெங்களூரில் மழை அவ்வப்போது பெய்கிறது. இங்குள்ள ஏரிகளைப் பார்க்க அழகா இருக்கு.

    நம்ம ஊரிலும் நீர் நிலைகளை நன்றாக வைத்துக்கொள்ளும் எண்ணம் வரவேணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்,பெங்களூரில் மழை பெய்வது அறிந்தேன். ஏரிகள் அழகாய் இருக்கும். அங்கும் மரங்கள் வெட்டபட்டு ஏரிகள் மறைந்தும் இருக்கிறது.
      நம் ஊரில் நீர் நிலைகளை சுத்தமா வைத்துக் கொள்ள வேண்டும். தேனி பக்கம் கிணறை தன்னார்வ தொண்டர்கள் சுத்தம் செய்கிறார்கள் விவசாயத்திற்கு.
      குப்பை கூளங்களை அகற்றி குளம் குட்டைகளை தூர் வாரினால் போதும்.

      வரும் காலம் அந்த எண்ணத்தை கொடுக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  23. அனுபிரேம் போட்ட புதிய பதிவில் காவிரி வெறும் மணலாகக் காட்சி அளிக்கிறது. சிறு ஓடையாகக் காவிரி ஓடுகிறாள், பார்க்கப் பார்க்க மனது சங்கடப்படுது. காவிரி இரு கரை தொட்டு ஓடுவதைக் கற்பனை செய்வோம்....


    கண்டிப்பாக மா...அப்படி நினைத்து தான் போன வருடம் காவேரி பொங்கி வந்தாள் ..அப்படியும் அந்த நீரை எல்லாம் சேமிக்காமல் கடலிலே விட்டோம் நினைக்கும் போதே வருத்தம் தரும் நிகழ்வு அது ...குளம் , ஏரியில் சேர்க்காமல் இப்படி வீணடிக்கிறோம் என்று ...


    வைகையை கடக்கும் போதே உங்களை நினைத்துக் கொண்டேன் ....மீனாட்சி அருளால் எங்கும் நல் மழை பெய்யட்டும் ...நாங்கள் சென்ற முதல் நாள் தான் நல்ல மழை பெய்து கொஞ்சம் குளிச்சியாக இருந்தது மதுரை ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்

      காவேரி பொங்கி வந்த போது சேமிக்காமல் கடலிலே விட்டது வருத்தம் தான்.
      ஏரி, குளம் நீரை தேக்கி வைத்தால் நலம் தான்.

      மதுரை வந்து விட்டு போய் விட்டீர்களா? இன்றும் கால் மணி நேரம் மழை பெய்தது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
    2. //வைகையை கடக்கும் போதே உங்களை நினைத்துக் கொண்டேன் ....மீனாட்சி அருளால் எங்கும் நல் மழை பெய்யட்டும் .//

      என்னை நினைத்துக் கொண்டது மகிழ்ச்சி.
      நீங்கள் சொல்வது போள் மீனாட்சியின் அருளால் எங்கும் நல்ல மழை பெய்ய வேண்டும். அதுவுவே அனைவர் எண்ணமும்.
      நன்றி அனு.

      நீக்கு
  24. தஞ்சாவூரில் இதுவரை மழையே இல்லை

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் வாழ்க வளமுடன்,Unknown

    மழை வரும் நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  26. அக்கறைக்கு இக்கரை பச்சை போல் நாங்க இங்கு வெயில் வராதா என நினைக்க அங்கு மழை வராதா என நிலமை இருக்கு. இம்முறை கடும் தண்ணீர் பஞ்சம் என நியூஸ் ல் பார்த்தேன் கா. தண்ணீருக்காக போராடங்கள் எத்தனை. இங்கு 3,4 நாட்கள் நல்ல வெயில் பழையபடி இப்போ சோ..வென கொட்டிக்கொண்டே இருக்கு நேற்றிலிருந்து.. நான் மனதில் நினைப்பது இங்கு பெய்யும் ம்ழையே ,மழையில்லா இடங்களிலும் போய் பெய்யலாமே அங்கு ஏன் போகிறாய் இல்லை என.. நாட்டுக்கு நாடு வித்தியாசம்தான் எத்தனை. .
    ஊரிலிருக்கும்போது மழை பெய்தால் சந்தோஷம் ஒருபக்கம்,மறுபக்கம் வேலை செய்யமுடியாதபடி சிலவேளை ஆகிவிடும். கூரையிலிருந்து தண்ணீர் ஒழுகினால் அந்தந்த இடத்துக்கு பாத்திரங்களை வைப்பது என (ஓட்டு வீடு) துணிகள் காயவைப்பது பிரச்சனை என இருக்கும்.ஆனாலும் அதுவும் சந்தோஷமான காலம்தான். என்ன ஊர்வனவுக்கு பயமா இருக்கும். கடவௌளை பிரார்த்தனை செய்வோம் மழை வரும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி. வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது சரிதான். அக்கறைக்கு இக்கறை பச்சை தான்.

      அங்கு மழையை போக சொல்கிறார்கள், இங்கு வரச் சொல்கிறார்கள்.
      அனுப்புங்க இங்கே மழையை, தேவை படுவோர்க்கு கொடுங்க.

      மழை கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே பாட்டு நினைப்புக்கு வருது.
      அந்தக்காலத்தில் கூறையிலிருந்து ஒழுகும் தண்ணீரையும் வீணாக்காமல் பிடித்து வைத்துக் கொள்வோம். மழைகாலத்தில் பூச்சி பொட்டு பயம் இருக்கும் தான்.

      உங்கள் நல்லெண்ணம் வாழ்க. தன்னலமில்லா பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும்.
      உங்கள் அருமையான அன்பான கருத்துக்கு நன்றி பிரியசகி அம்மு.

      நீக்கு
  27. கோமதிக்கா காலை வணக்கம். நான் பாக்காமல் விட்டிருக்கிறேன் அக்கா. அதிகம் தளம் பக்கம் வராததால்...மிக்க நன்றி கோமதிக்கா வாட்சப்பில் சொன்னமைக்கு.

    துளசி இதைப் பார்த்துவிட்டு கருத்தும் சொல்லியிருந்திருக்கிறார் அதையும் நான் கவனிக்க வில்லை. கவனித்திருந்தால் வந்திருப்பேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      நீங்கள் வைகை ஆற்றை படம் போடுங்கள் என்று கேட்டு கொண்டீர்கள்.
      நான் போட்ட போது உங்களை காணவில்லையே ! என்று தான் சொன்னேன்.
      வேலைகளுக்கு இடையில் பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  28. துளசிதரன்: படங்கள் மற்றும் காணொளிக்காட்சிகள் மனதை நிறைக்கின்றன. கேரளத்திலும் மழை தொடங்கிவிட்டது. தகவல்கள் அருமை. நீர் சேமிப்பு பற்றி இங்கும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டிலும் மழை வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

    கீதா: கோமதிக்கா படங்கள் எல்லாம் அருமை வைகை ஆறு கொஞ்சமேனும் நீரைக் காட்டுகிறதே. ஆனால் அடித்து வந்தால்தானே இப்போதூ சேர்ந்திருக்கும் அழுக்கு எல்லாம் போகும் இல்லையா?

    காணொளிகள் அருமை மிகவும் ரசித்தேன் கோமதிக்கா. மழையின் சத்தமே இனிமையாக இருக்கிறது இல்லையா...பார்க்க பார்க்க ஆனந்தம்.

    இங்கு பங்களூரில் மாலை அல்லது இரவு பெய்தது. இப்போது மூன்று நாட்களாக மழை மெகம் கட்டி வந்தாலும் பெய்யவில்லை ஆனால் நேற்று பகல் முழுவதுமே சிலு சிலு என்று இருந்தது. இரவும், காலையும் சிலு சிலு என்று ஆகிவிட்டது. சென்னை அளவு இங்கு தகிக்கவில்லைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      கேரளத்தில் மழை ஆரம்பித்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.

      கீதா நீங்கள் சொல்வது போல் தண்ணீர் வரத்து வேகமாய் இருந்தால் தான் அழுக்குகள் அடித்து கொண்டு போகும்.
      மழையின் சத்தம் இனிமை, மழை இன்பம் தரும். என்பது உண்மை.
      பெங்களூரில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியாக இருப்பதாய் பெங்களூர் வாசிகள் சொன்னார்கள்.


      நீக்கு
  29. அக்கா மழை நீர் சேமிப்பு என்பது ஜோசியர் சொல்வது இருக்கட்டும் நீங்க சொல்லியிருப்பது போல் நம் முன்னோர்கள் பெரியவர்கள் எல்லாம் சொல்லாததா? நீர் சேமிப்பு எத்தனை அவசியம் என்று.

    என் மாமியார் சொல்லுவார் அவரது அப்பா சொல்லிக் கொண்டே இருப்பாராம் எதிர்காலத்தில் தண்ணீரின் விலை தங்கத்தை விட கூடும் எனவே சேமியுங்கள் என்று. மட்டுமல்ல தண்ணீர் சிக்கனமாகச் செலவழித்தால் வீட்டில் செல்வமும் பெருகும் என்றும்.

    நான் கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன் முன்பெல்லாம் பெண் பார்க்க வரும் போது பெண் குடத்தை நீர் ரொப்பி சிந்தாமல் எடுத்துச் செல்கிறாளா என்றும் இரு கையிலும் தண்ணீர் சேந்தி எடுத்தால் விரல்களின் இடுக்கு வழியே த்ண்ணீர் ஒழுகுவதை வைத்து பெண் சிக்கனமான குடும்பம் நடத்துவாளா இல்லை ஊதாரியா என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழை நீரை சேமிக்க சொன்னார்கள், தண்ணீர் சிக்கனம் செய்ய சொல்லிக் கொடுத்தார்கள் முன்னோர்கள். தண்ணீறை யார் சிக்கனமாய் செலவு செய்கிறார்களோ அவர்களிடம் செல்வம் தங்கும் என்றார்கள்.

      நீங்கள் சொல்வது போல் பெண்ணுக்கு சோதனைகள் எல்லாம் உண்டு தான்.
      கைகளில் தண்ணீர் சீக்கிரம் வழிந்து போய் விட்டால் சிக்கனம் கிடையாது ஓட்டை கை என்று பலிப்பார்கள் தான்.

      எல்லாவற்றிலும் அளவு முறை வைத்து இருந்தார்கள்.

      உங்கள் ஏகபட்ட பணிகளுக்கு இடையே வந்து பதிவுக்கு கருத்து சொன்ன உங்களுக்கும், துளசிதரனுக்கும் நன்றி.

      நீக்கு
    2. உங்கள் பதிவுகளுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு வருகிறேன். ஒரு ஆச்சரியம். (கண்பட்டு விடுமோ என்றும் ஓர் அச்சம்!) நானும் பதிவுகளைத் தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகிறேன்.வாசிக்க ஆளில்லை. ஒன்றிரண்டு பேர் வந்தாலும் .. வந்தார்கள் ... வாசித்தார்களோ என்னவோ .. அப்படியே போய் விட்டார்கள் - இந்த தத்துவத்தைத் தான் பார்க்கிறேன். முன்பெல்லாம் நிறைய பின்னூட்டங்கள் வருமே... இப்போதெல்லாம் யாரும் அப்படி எழுதுவது இல்லை .. வாசிக்கும், எழுதும் பழக்கம் போய் விட்டது என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன் - உங்கள் பதிவைப் பார்க்கும் வரை. அட .. எத்தனை நண்பர்கள்.. எவ்வளவு personal comments - அந்தக் காலம் மாதிரி. ஆக ... எல்லாம் நல்லாவே போகிறது. எனக்கு மட்டும் தான் அந்த “ப்ராப்தம்: அமையவில்லை என்று புரிந்து கொண்டேன்!...திருஷ்டி கழித்து விடுங்கள்!!!

      நீக்கு
    3. வணக்கம் தருமி சார், வாழ்க வளமுடன்.
      உங்கள் பதிவுகளை படிப்பார்கள். காலத்தால் பேசபட வேண்டிய பதிவுகள்.
      நீங்கள் சேமிப்பாய் தளத்தில் பதிந்து வையுங்கள். அப்புறம் புத்தகம் போடுவீர்கள்தானே! எல்லோரும் படிப்பார்கள். நீங்கள் எழுதி கொண்டு இருங்கள்.

      நீங்கள் சொல்வது போல் இங்கு வருபவர்கள் அன்பால் இணைந்த நண்பர்கள்..
      அந்த காலம் போல் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்கிறார்கள்.
      உங்கள் நண்பர்கள் எல்லாம் முகநூல் பக்கம் போய் விட்டார்கள் இல்லையா?
      நீங்களும் அதில் எழுதி வருவீர்கள் தானே?
      நிறைய வாசிக்கிறார்கள், நிறைய எழுதுகிறார்கள். என்ன போன்றசாதாரணமானவளுக்கு ஏற்றார் போல் என்னிடம் பேசுகிறார்கள். என் தளத்திற்கு வருபவர்கள் எல்லாம் பன்முக திறமை வாய்ந்தவர்கள். உங்களை போல்.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      நீக்கு
  30. அட போங்க’மா ... உங்களுக்குப் பின்னூட்டமிட்டவர்களில் பலரும் எனக்கு “நண்பர்கள்” ஒரு காலத்தில். இப்போத் மொத்தமாக எல்லோரும் “டூ” போட்டு விட்டுட்டு போய் விட்டார்கள். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது கேட்க வியப்பாக இருக்கிறது.
      உங்கள் நண்பர்கள் ஏன் டூ விடுகிறார்கள்! தெரியவில்லையே!

      நீக்கு
  31. பண்டைய அரசர்கள் காலம்போல மாதம் மும்மாரியும் , மரமநடுகை குளங்கள் நீர்தேக்கங்கள் பாதுகாத்தல் இருந்தால்தான் காப்பாற்றலாம்.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான் மாதேவி.

    மாதம் மும்மாரி பெய்கிறதா? என்று கேட்டு மழை இல்லை என்றால் ஏன் பெய்யவில்லை என்று ஆராய்ந்து மரம் நடுவது, குளங்கள் ஏரிகளை சீர் படுத்தி மழை நீரை சேமிப்பது, ஏரி குளங்களில் வீடு கட்டி இருப்பதை அப்புறபடுத்துவது என்ற முறைகளை கடைப்பிடித்தால் மழை பெறலாம்.

    உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு