சனி, 27 ஏப்ரல், 2019

ஜன்னல் வழியே

அமர்ந்து வேடிக்கைப் பார்க்க கொடிக்கம்பி வசதியாக இருக்கிறது இவைகளுக்கு

தினம் தினம் இவைகளைப் பார்வையிடுவது என் பொழுது போக்கு. அலுப்பு தட்டுவது போல் இருந்தால் பால்கனி வந்து பறவைகளைப் பார்வையிடுவேன். வித்தியாசமாய்  இவைகள் போஸ் கொடுக்கும் போது   படம் எடுப்பேன். காமிராவை எடுத்து வருவதற்குள் சில நேரம் நான் எடுக்க நினைத்த தோற்றத்தை மாற்றி விடும். சில நேரம் அதே மாதிரி நிற்கும். 
ஊஞ்சல் ஆடுவது போன்ற பிரமை கொடுக்கிறது


வெயிலுக்கு இதமாய் ஈரமாய் இருக்கும் வீடு துடைக்கும் துணிமேல் அமர்ந்து இருக்கிறது.
என்ன தான் செய்வது நாள் முழுக்க? இல்லையா? என்று கேட்கிறது
ஏகந்தமாய் 
என்ன பார்வை உந்தன் பார்வை
போ போ நான் சாப்பிடுவதை பார்க்காதே! எனக்கு வயிறு வலிக்கும்
நீ என்ன செய்கிறாய் என்று அடிக்கண்ணால் என்னை ஒரு பார்வை.
வீட்டில் உள்ளே இருந்து யாரும் வருகிறார்களா என்று ஒரு பார்வை
செண்பகப் பறவைகள் பாடிக் களிக்குது
என்ன சொல்லி விட்டேன், நீ ஏன் தலை குனிந்தாயோ!
நான் உன்னைப் பார்க்கிறேன்
நீ என்னைப்பார்
என் வீட்டில் இந்த ஜன்னல் அதற்கு மிகவும் பிடித்த இடம்
ஓரமாய் ஒழிந்து என்னைப் பார்க்கிறது

Image may contain: bird and plant
ஜன்னலில் உள்ள சின்ன பூச்சி உணவாகக் கிடைத்து விட்டது
எதிர்வீட்டுக் கொடிக் கம்பி
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்துப் பார்த்துத் தான் உணவு எடுக்கும்
இன்று  பிரட் உப்புமாவா , பிரட் துண்டா  என்று பார்வை இடுகிறது உணவை


இரண்டு குருவிகளும்  மைனாக்களை விரட்டிய அலுப்பில் அமர்ந்து இருக்கிறது
குருவிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்த இடத்தில் மைனாக்கள் இருக்கும்,குருவிகள் இரண்டும் பறந்து பறந்து கீச் கீச் ஒலி எழுப்பி விரட்டும் இந்த மைனாக்களை
                                                வயதான பெண் குயில் (கோடி வீடு)

இன்னும் நிறைய இருக்கிறது  அது இன்னொரு பதிவில்.

34 கருத்துகள்:

  1. நீங்கள் படம் எடுக்க பறவைகள் பொறுமையாக போஸ்கொடுத்தது போல இருக்கிறது. அஸ்பெஸ்ட்டாஸ் கூரைபோல இருக்கிறதே... ரொம்ப அனலாய் இருக்காதோ... என்ன ஒரு நம்பிக்கையாய் உங்களை பார்த்து பயப்படாமல் போஸ் கொடுக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      அஸ்பெஸ்ட்டாஸ் கூரை இல்லை
      வெயில் தாக்கத்தை கம்மி செய்யும் கூரைதான் .வெயிலில் கொடிக்கம்பி மேலேயே நிற்கும் . என் வீட்டு பால்கனியில் நின்று தான் எடுப்பேன் பயப்படுவது இல்லை. அதுவும் உயரத்தில் இருக்கும் போது நம்மை பிடிக்க முடியாது என்ற எண்ணமும் அதற்கு இருக்கும் தானே! யாரைப்பற்றியும் கவலை படாமல் ஏகாந்தமாய் அல்லவா இருக்கிறது!

      நீக்கு
  2. பாவம் வெயிலுக்கு அவைகளும் நிழல் தேடி அலைகின்றன. எங்காவது ஒதுங்க ஒருஇடம் கிடைக்காதா என்று தேடி அலைந்து அமர்கின்றன. நம்பிக்கையான மனிதர்களும் அவைகளுக்குக் கிட்டிவிட்டால் கேட்கவும் வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டை சுற்றி மரங்கள் இருந்தாலும் மற்ற பறவைகள் போல் புறாக்கள் மரத்தில் அவ்வளவாக நிற்க மாட்டேன் என்கிறது வீடுதான் வேண்டி இருக்கிறது. நாம் அவற்றை பார்ப்பது போல் நம்மை அவை பார்த்து கொண்டே இருக்கிறது.

      குழந்தைகள் விளையாடும் போது அதன் கவனம் குழந்தைகள் மேல் இருக்கும்.
      நீங்கள் சொல்வது போல் நம்முடன் பழகி நம்மை நம்ப ஆரம்பித்து விட்டன.

      நீக்கு
  3. ஓரமாய்
    ஒளிந்திருந்து பார்க்கிறாய்
    ஆபத்தில்லை என்றதும்
    ஆசுவாசமாய்
    அமர்கிறாய்
    அருகில் வருகிறாய்
    ஓய்வெடுக்க ஒரு இடம்
    நம்பிக்கையாய் கிடைத்தது
    கோவிலும்
    கோமதி அக்காவின் வீடும்
    என்றும் நமக்கு
    அடைக்கலமே என்றுணர்ந்து
    அமைதியாகிறாய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் கவிதை மிக அருமை.
      குருவிகள் கவிதை எழுத வைக்கிறது.
      இப்போது தான் மூன்று குஞ்சுகள் பொரித்து எல்லாம் பத்திரமாய் பறந்து விட்டது.
      போனமுறை சகோ துரை செல்வராஜூ அவர்கள் கவிதை எழுதினார்கள்.
      இந்த முறை நீங்கள் .

      எதிர்வீட்டில், என் வீட்டில் எல்லாம் இரை எடுத்து வந்தாலும் ஜன்னலில் வந்து குரல் கொடுத்து அப்புறம் தான் குஞ்சு கொடுக்க போகும்.

      கோவிலும், கோமதி அக்காவின் வீடும் என்று எழுதிய தம்பிக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.

      நீக்கு
    2. சூப்பர் ஸ்ரீராம்..கவிதை

      அதானே கோமதிக்கா வீடு அடைக்கலம்தான்!!!

      கீதா

      நீக்கு
  4. பறவைகளுடன் வாழக் கொடுத்து வைச்சிருக்கணும். அம்பத்தூர் வீட்டோடு அதெல்லாம் போயாச்சு. இங்கே பின்னால் தோப்பில் பறவைகள் குரல் கொடுக்கும். உணவு வைக்கிறோம். தண்ணீர் வைக்கிறோம். ஆனால் நாங்க ஜன்னல் கதவைத் திறந்தால் பறந்து போய்விடும். மரங்கள் தொலைவில் இருப்பதால் படங்கள் எடுக்க முடியாது. நின்று பார்த்து ரசிப்பதோடு சரி. பால்கனிக்குப் பறவைகள் வருவது இல்லை.

    பதிலளிநீக்கு
  5. குயிலக்கா பாவம் சோர்வாக அமர்ந்திருக்கிறார். ஸ்ரீராமின் கவிதை அருமை! உங்கள் வீட்டுப் பறவைகளால் நமக்குப் புதிய கவிதைகள் கிடைக்கின்றன. அநேகமாக துரையும் வந்து கவிதை எழுதுவார் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதான குயிலக்கா அது தான் சோர்வு. முதுமை தரும் சோர்வு அனைத்து உயிருக்கும் உண்டு தானே!

      பறவைகளால் நமக்கு கவிதை கிடைப்பது மகிழ்ச்சி தான்.
      இருவரும் வரகவிகள். உடனே மனதில் கவிதை வந்து விடுகிறது மடைதிறந்த வெள்ளம் போல்.

      அவர்கள் எழுதிய கவிதைகளை தனி பதிவு போட வேண்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    அம்பத்தூர் வீடு வேப்பமரம் மற்றும் செடி, கொடிகளுடன் இயற்கை சூழ அமைந்த வீடு இல்லையா?
    அங்கு வராமல் இருக்குமா பறவைகள்?

    இங்கும் நான் உணவு வைக்கும், பால்கனிக்கு போனால் பறந்து விடும், தண்ணீர் தொட்டியில் குளிக்குது, நீர் அருந்துகிறது. படம் எடுக்க முடியாது. எங்கள் வீட்டில் உள்ள
    சர்வீஸ் ஏரியாவில் இருக்கும் ஜன்னல் குருவிக்கு பிடித்த இடம் முன்பு பயப்படும், இப்போது பழகி விட்டதால் வந்து அமர்ந்து கொள்கிறது.

    இன்னொரு பால்கனியிலிருந்து படங்கள் எடுக்கிறேன். எதிர் பால்கனி கொடிக்கம்பியில் அமர்வதால் படம் எடுக்க வசதி.

    மொட்டைமாடியிலிருந்து பறவைகளை ரசிக்கலாம் இல்லையா? உங்கள் வீட்டில்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இவைகளை படம் பிடிப்பதற்கும் நிறைய பொறுமை வேண்டும்.
    அழகான காட்சிகள் வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      புறாக்கள் கொஞ்சம் ஆடாமல் அசையாமல் இருக்கும், தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி இவைகளை எடுக்க கொஞ்சம் பொறுமை வேண்டும்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  8. புறாக்களும் செண்பகப் பறவைகளும் மிக அழகு.

    இவையெல்லாம் எங்கிருந்து வந்திருக்கவேண்டும்? காட்டில் உணவில்லாமல் நாட்டைத் தேடி வந்தவைகளா? இல்லை முன்னோர்கள் 'செய்தி' அனுப்புவதற்காக வளர்த்த புறாக்களின் வாரிசுகள் வேலையில்லாமல் சுற்றித் திரிகின்றனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
      இவை எல்லாம் மனிதர்களுடன் வாழ்வது தானே அந்தக்காலம் முதல்.
      'தூது சொல்ல முன்னோர்கள் பயன்படுத்திய புறாக்களின் வாரிசு " நல்ல கற்பனை.
      குருவிகள் அடைக்கலமாக வந்த அடைக்கல குருவிகள் என்று பெயர் பெற்றது.
      புறாக்கள் எப்போதும் மனிதர்கள் வாழும் பகுதி, மசூதி, தேவாலயம், கோவில்கள், வீடுகளில் தான் அந்தக்காலம் முதல் வாழும் பறவைகள்.

      காட்டில் வேடர் பயம் வேடனிடம் காப்பாற்ற எறும்புகள் , வல்லூருகளிடம் இருந்து காப்பாற்ற சிபி சக்கரவர்த்தி போன்றவர்கள் இல்லை போலும் அதனால் தான்
      இந்த பக்கமே சுற்றித் திரிகின்றன என நினைக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி தமிழன்.

      நீக்கு
  9. காமிராவை எடுத்து வருவதற்குள் சில நேரம் நான் எடுக்க நினைத்த தோற்றத்தை மாற்றி விடும். சில நேரம் அதே மாதிரி நிற்கும். //

    கோமதிக்கா நான் எப்ப மொட்டை மாடி அல்லது வெளியில் போனாலும் கேமராவுடன் சென்றுவிடுவேன் அதுவே சில போஸ்க்கள் கேமரா ஒப்பன் ஆவதற்கும் நேரம் எடுக்கும் இல்லையா அதுக்குள மாறிடும் அப்புறம் படம் சேவ் ஆவதாற்குள் நிக்கான் கொஞ்சம் நேரம் எடுக்கும் சேவ் செய்ய ஸோ போஸ் மாறிடும்.

    இங்கு மொட்டை மாடிக்கும் வெளியிலும் எடுத்துச் சென்றாலும் பறவைகளைக் காண்பது அரிது. லேக் போனும் இல்லைனா கார்டன்...காக்கையைப் பார்க்கவே முடியலை. சிட்டுக்குருவி நோ. ஒன்லி புறா அப்புறம் கழுகு...மைனா வாக் போகும் இடத்தில் ஆனால் பறந்துவிடும். சுற்றி ஹைவே ரோடு பாலம் என்றிருப்பதால் மரங்கள் நிறைய இருந்தும் பறவைகளே இல்லை.

    இத்தனைக்கும் நான் தண்ணீர் வைக்கிறேன், தானியம் போடுகிறேன்.

    படங்கள் அத்தனையும் அழகு அதாற்கான கேப்ஷன்ஸ் செம. கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான் காமிராவில் எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

      பறவைகள் மரத்தில் கூடு கட்ட பயப்படுகிறது போல இப்போது, எந்த நேரத்திலும் மரம் வெட்டபடலாம், வீட்டை இழக்கும் நிலை வரும் என்று பயம் போல !

      தொடர்ந்து வையுங்கள் உணவும், தண்ணீரும் உணவு தேவைபடும் பறவைகள்

      வரும் ஒரு நாள் .

      நீக்கு
  10. முதல் படத்தைப் பார்த்ததும் கழைக்கூத்தாடி நினைவு வந்தது. என்ன மெஜஸ்டிக்கா உக்காந்திருகக்கு, பாருங்க..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
      கழைக்கூத்தாடி நினைவு வருதா இந்த பறவையை பார்க்க!
      மெஜஸ்டிக்காய் தான் உக்காத்திருக்கு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. பறவைகளே அழகுதான் கோமதிக்கா. உங்கள் வீட்ட்டருகில் வருவது சூப்பர் அக்கா.

    செண்பகப் பறவைகள் அப்புறம் சிட்டுக் குருவி, பெண் குயில் எல்லாமே அழகுதான் இல்லையா. ஒவ்வொன்றும் அங்கு வந்து கோமதிக்காவுக்கு ஹலோ சொல்லிவிட்டு நமக்கு சோறு தண்ணி வைக்கும் கோமதிக்கா சுகமாக இருக்காங்களானு பார்த்துவிட்டு போக வந்தனவோ?!!

    வெயிலுக்கு பாவம் எங்கு செல்லும் மரங்களும் இல்லை. புறாக்கள் எப்போதுமே கட்டிடங்களில் தான் இருக்கும். மற்ற பறவைகளுக்கு மரம் வேண்டுமே. தண்ணீரும் இல்லை.

    பாவம் எல்லா ஜீவ ராசிகளும். கேரளத்தில் துளசியின் ஏரியாவில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. அதுவும் இடியும் மின்னலுமாய். தமிழகம் வந்த புயல் டாட்டா சொல்லிட்டு பர்மாவுக்குப் போய் பெய்கிறதாம்...ம்ம்ம் தமிழகத்திற்கு எப்போது மழை பெய்யுமோ அதுவும் சென்னைக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கோமதிக்காவுக்கு ஹலோ சொல்லிவிட்டு நமக்கு சோறு தண்ணி வைக்கும் கோமதிக்கா சுகமாக இருக்காங்களானு பார்த்துவிட்டு போக வந்தனவோ?!! //

    என்னை மட்டும் இல்லை கீதா , எதிர்புறம் உள்ள வீடுகளிலும் உணவு வைக்கிறார்கள்.
    சிலர் தண்ணீர் வைக்கிறார்கள் அதன் அலகு மட்டும் போகும் அளவு சின்ன டப்பாக்களில்.
    எல்லோரும் உணவு வைக்கும் நேரத்தில் வைக்கவில்லை என்றால் பால்கனி கம்பியில் உட்கார்ந்து கூவி அழைக்கும்.

    அவற்றின் வருகையால்தான் நான் சுகமாய் இருக்கிறேன் என்பது உண்மை. எங்கள் குடியிருப்பு வளாகத்தில் அவை இளைப்பாற மரம் நிறைய இருக்கிறது. தண்ணீரும் கிடைக்கிறது.

    எங்கள் கட்டிடத்தை சுற்றி காலி மனைகளும் அதில் நிறைய மரங்களும் இருக்கிறது.
    அதனால் பறவைகளின் வருகை இருக்கிறது.

    மழை அது பெய்ய வேண்டிய காலத்தில் பெய்ய வேண்டும். கோடை மழை குறைந்து விட்டது.
    புயலில் இருந்து தப்பியதற்கு மகிழ வேண்டும்.

    மழையை நாள் தோறும் அழைப்போம் வரும்.

    உங்கள் விரிவான பின்னூட்டங்களுக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  13. எங்கள் வீட்டருகே நிறைய புறாக்கள் இருக்கிறது கத்துகுயிலின் ஓசையும் கேட்கும் காணாவிட்டாலும் குருவிகள் மட்டும் ஆப்செண்ட்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
    குருவிகள் இல்லையா உங்கள் பக்கம்?
    குயிலின்ஓசை அதிகமாய் கேட்க்கும் காலம் இப்போது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. உங்கள் ரசனை போற்றுதலுக்குரியது. ஏகாந்தமாக அமர்ந்திருக்கும் பறவையும், ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கும் குருவியும் கவர்கின்றன. எங்கள் வீடு பால்கனியில் அவ்வப்பொழுது புறா ஒன்று அமரும், நான் செல் போனையோ , காமிராவையோ கொண்டு வருவதற்குள் அதன் போஸ் மாறி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
      ஏகந்தமாய் அமர புறாக்கள் விரும்பும் ஒவ்வொரு புறாவையும் இப்படி எடுத்து இருக்கிறேன்.

      குழந்தைகள் போலவே தான் இந்த குருவிகள் நம்மிடம் விளையாடும். என்ன செய்கிறாய் ? என்று என் அடுக்களை ஜன்னலில் வந்து எட்டிப்பார்க்கும் உடனே சரி சரி வேலையைப் பார் என்று தலை போற அவசரத்தில் பறந்துவிடும்.

      காக்கா வந்து பால்கனியில் அமர்ந்து கரையும், விருந்தாளி வருவார்கள், அல்லது கடிதம் வரும் என்பார்கள் முன்பு. இப்போது அப்படி எதுவும் நடக்காது. அவை வந்து நம்மை அழைத்து பார்க்க வைக்க கூப்பிடும், நாம் பார்த்தவுடன் மகிழ்ச்சியாக பறந்து விடும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    அழகான பறவைகளின் படங்கள். மிகவும் பொறுமையாக அவை பறந்து விடாதிருக்கும் போது கவனமாக படமெடுத்து பகிர்ந்து உள்ளீர்கள். அவைகளும் தங்கள் அன்புக்கு கட்டுப்பட்டது மாதிரி போஸ் தந்திருக்கின்றன. அதற்கேற்றவாறு வாசகங்களை தொகுத்து மிகவும் அழகாக பதிவிட்டு... உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    "நாள் முழுக்க என்னத்தான் செய்வது?" என்று அலுத்துக் கொள்ளும் பறவை மிக அழகு.

    புறாக்கள் சாப்பிடும் போது தாங்கள் கொடுத்த கமெண்ட்ஸ் அருமையாக உள்ளது.

    செண்பக பறவைகள் பாடுவதற்கு பொருத்தமாக "நான் என்ன சொல்லி விட்டேன் ஏன் தலை குனிந்தாயோ?" என்ற அருமையான பாடலை தந்திருக்கிறீர்கள்.

    ஊஞ்சல் ஆடுவது போன்ற பறவைகள், குருவி படங்கள் எல்லாமே மிகமிக அழகாக உள்ளது.

    நானும் இது போன்று சில பறவைகளை எனது அலைபேசியில் எடுத்து வைத்துள்ளேன். பகிரத்தான் இயலவில்லை. நேற்று மாலை வெளியில் சென்று விட்டோம். இன்று ஞாயிறு என்பதால் விடுமுறையில் உள்ள குழந்தைகளுடன் பொழுது கழிந்து விட்டது. எனவே தாமதமான வருகை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
    ஒவ்வொரு படத்தையும் ரசித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.
    நேரம் கிடைக்கும் போது நீங்கள் எடுத்த படங்களை உங்கள் வலைத்தளத்தில் போடுங்கள்.
    நேரம் கிடைக்கும் போது வந்து பார்த்து கருத்து சொன்னால் போதும் கமலா.
    குழந்தைகளுடன் பொழுது போவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அதை நழுவ விடாதீர்கள். பதிவு எங்கே போகபோகிறது?

    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அலுக்காத ஒன்று பறவை பார்ப்பது. படங்களையும் பொருத்தமான வாசகங்களையும் ரசித்தேன். செண்பகப் பறவைகள் ஜோடியாக அமர்ந்து கூவும் படம் அழகு.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. ஈரத்துணி மேல் அமர்ந்திருக்கும் புறாவுக்காக.....

    வந்தன அவையும் இணையாய்..
    ஒன்றுக்கொன்று துணையாய்...

    மற்றொன்று சென்றது எங்கே?..
    இன்னொன்று தவிக்குது இங்கே!...

    விடை!?...

    தொடரும் பதிவுகளில்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      கவிதை முன், கதை பின்னா?

      வெயிலின் கொடுமையால் ஈரத்துணி மேல் அமர்ந்த புறாவுக்காக கவிதையா?
      அப்புறம் கதை வருகிறதா?
      மகிழ்ச்சி.
      உங்கள் கவிதைக்கு.

      நீக்கு
    2. இந்தப் பதிவை நேற்றே வாசித்து விட்டேன்..

      கவிதையான பதிவுக்கு கவிதையோடு தான் வரவேண்டும்..

      எனவே தாமதம்...

      மூன்று பதிவுகள் முன்னதாகவே திட்டமிட்டாயிற்று....

      அதற்கிடையில் புறாவுக்கான கவிதையைத் தருகிறேன்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    3. கவிதையான பதிவு//
      அருமை.
      கீதாசாம்பசிவம் அவர்கள் உங்களிடமிருந்து கவிதை வரும் என்றார்கள்.
      அவர்கள் சொன்னது போல் கவிதை வந்து விட்டது.
      இந்த பறவைகள் உங்களிடமிருந்து கவிதையை வரவழைத்து விட்டது மகிழ்ச்சி.
      மூன்று பதிவுகள்! கேட்கவே நன்றாக இருக்கிறது. பதிவுகளை படிக்க ஆவலாக இருக்கிறோம்.
      மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு