வெள்ளி, 13 செப்டம்பர், 2019

குடந்தைக் கோவில்கள்

திருப்பனந்தாள் காசி மடத்தின் அன்பளிப்பாக இந்த மணிக்கூண்டு . இப்போது அதனைப் பராமரிப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி

திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பதிவில் குடந்தையில் போன கோவில்கள்பதிவுகள் இனி அடுத்தபதிவில் என்றேன்.



காசி விஸ்வநாதர்  தோரண வாயிலில் 
சிவபெருமான் நவ கன்னியரை  மகா மக  தீர்த்தத்தில் புனித நீராட அழைத்து போதல் காட்சி

கங்கை, யமுனை, நருமதை, சரஸ்வதி, கோதாவரி, காவேரி, பயோடினி, சரயு ஆகிய நதிகள் வடிவமாகிய கன்னியர் ஒன்பது பேரும் ஒன்றுசேர்ந்து வந்தனர் சிவபெருமானிடம்.    உலகத்தவர்கள்  தங்கள் பாவங்கள் போக நதியில் நீராடிப் போவதால் நாங்கள்  அந்தப் பாவங்களை ஏற்றுத் துன்பப் படுகிறோம்,  எங்களை அந்தத் துன்பத்திலிருந்து காக்க வேண்டும் என்று முறையிட்டனர்.   சிவபெருமான்   உங்களிடம் சேர்ந்த பாவங்கள் போக குடந்தை நகரில் கீழ்த்திசையில்  ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் குரு பகவான் சிம்ம ராசியில் பொருந்தும்  மாசி மாதத்தில் பெளர்ணமியும் மகநட்சத்திரமும் கூடிய நன்னாளில் நீங்கள் சென்று நீராடினால்   போகும் என்றார் நவகன்னியரும் சிவபெருமான் சொன்னபடி நீராடி தங்களிடம் சேர்ந்த பாவங்களைப் போக்கி கொண்டனர்.

உள் பகுதியில் அஷ்டலக்ஷ்மிகள் தாமரையில் அமர்ந்து இருக்கும் காட்சி


கோபுர வாயில்
அழகான சின்னக்கொடிமரம்

உள் புறம் இருந்து எடுத்த படம் அதனால் இருட்டு உள்ளே போனஉடன் இடது பக்கத்தில் நவ கன்னியர் இருக்கிறார்கள்.
நவகன்னியரில்  காவேரி அம்மன்  நித்திய அலங்காரத்தில் இருப்பார். காவேரி அம்மன் கண் திறந்து பார்ப்பது போல் அழகாய் அலங்காரம் செய்து இருக்கிறார் குருக்கள். கண் திறந்து பார்க்கட்டும் காவேரி பொங்கிப் பெருகி  விவசாயிகள் வாழ்வை வளம் சேர்க்கட்டும்.  பஞ்சம் இல்லை என்ற நிலை வரட்டும். ஆடிப்பெருக்கு அன்று நல்ல விஷேசபூஜைகள் நடந்து இருக்கும். மாசி மக நாளில்  நவகன்னியருக்கு அலங்காரம் மிகப் பிரமாதமாய் இருக்கும். முன்பு எடுத்த படத்தைத் தேட வேண்டும்; கிடைத்தால் போடுகிறேன் அந்த படத்தை.


பிரகாரத்தில் எடுத்த படங்கள் 


எவ்வளவு பெரிய திருவாட்சி சுவற்றில் சார்த்தப்பட்டு இருக்கிறது!
பிரகாரத்தில் அழகிய பெரிய உண்டியல்

மகா மக தீர்த்தக் கட்டம்

வடக்கு வாசல் மட்டும் திறந்து இருந்தது. அந்தப் படத்தைப் போன பதிவில் போட்டு விட்டேன். இவை, கம்பிக் கதவு வழியாக எடுத்த படங்கள்.



இந்தப் படத்தில் மேல் பகுதியில் இருக்கும் அபிமுகேஸ்வரர் கோவிலில் தான் புத்தகவெளியீடு நடந்தது. இந்த கோவில் அடுத்த பதிவில்.

இந்த தீர்த்தக்குளம் ஒரு பக்கம் அகண்டும், ஒரு பக்கம் குறுகியும் அமைந்துள்ளதால் இத்தீர்த்தம்  கலசம் போல் காணப்படும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றுமே சிறப்புடையது குடந்தை, குடமூக்கு, கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது. கோவில் நகரம் என்றும் சொல்லலாம்.  பாடல் பெற்ற சிவன் கோவில்கள், திவ்ய தேசங்கள்,  வரலாற்று சிறப்பு பெற்ற பழம் பெரும் நகரம்  குடந்தை.

புனித நீராட தீர்த்தச் சிறப்புப் பெற்றது. பொற்றாமரைக்குளம்,  காசிப தீர்த்தம்,  பகவத் தீர்த்தம்,  சக்கர தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் உள்ளன.
" தீர்த்தம் சூழ்ந்த குடந்தை" என்று போற்றப்படுகிறது. தீர்த்தங்களுக்கு அருமையான கதை இருக்கிறது.
 காசியை விடப் புனிதமான குளங்கள்  என்று  கும்பகோண வரலாறு சொல்கிறது.

அடுத்த பதிவில் மேலும் சில கோவில்கள்.

வாழ்க வளமுடன்.

97 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ
    அழகான படங்களோடு கோவிலைப்பற்றி விளக்கியதும் அருமை.

    குடந்தையின் பெருமைகளை மேலும் அறிய தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
    குடந்தையின் பெருமைகள் நிறைய இருக்கிறது.
    இந்த முறை நான் பார்த்தவை மட்டுமே பகிர போகிறேன்.

    உங்கள் கருத்துக்கும் , தொடர்வதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மகா மக தீர்த்தக் கட்டம் அழகு. பல கோயில்களில் பூட்டியேதான் இருக்கும். கம்பி வழியாகதான் எடுக்க வேண்டியிருக்கும். அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      முதல் நாள் இரவு கம்பி வழியாகதான் எடுத்தேன். பூட்டி இருந்தது.
      மறு நாள் காலையில் ஒரு பக்கம் மட்டும் திறந்து இருந்தார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. காவேரி கண்திறந்து பார்ப்பதுபோல அலங்காரம் செய்த நேரம்...  மேட்டூர் ஆனைமறுபடி மறுபடி நிரம்பி, திறந்து விட்டார்கள்.  ஆற்றோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெல்ல அபாயமும் விடப்பட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      காவேரி அம்மன் கண் திறந்து பார்த்து விட்டாளா? நல்லது தான் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.
      மழை வேண்டும்தான், இங்கு இன்று வார சந்தை அவர்களுக்கு இன்று கஷ்டம் , காற்றும் மழையும். நாங்களும் சந்தைக்கு போகவில்லை. பெளர்ணமிக்கு கோவில் போவேன் போகவில்லை. மழையும் வேண்டும், பாதிப்பு இல்லாமல் வேண்டும் என்று தான் வேண்ட சொல்கிறது.

      நீக்கு
  5. முன்னர் ரேடியோவில் இரண்டு மூன்று கும்பகோணம் பாடல்கள் போடுவார்கள்.  "துறவிநெஞ்சினராய்"என்று தொடங்கி டி எம் எஸ் பாடும் "குயில் பாடும் கும்பகோணம் கோவில் கண்டேன்" பாடல்.  அப்புறம் டி எம் எஸ் பாடும் இன்னொருபாடல் நினைவுக்கு வரவில்லை.  பி சுசீலா பாடும் "ஆலவாய் அழகனே..  ஓம் ஐந்தெழுத்தின் அரசனே" எனும் மதுரைப் பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடந்தையில் நிறைய அருளாளர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள், சித்தர்கள், நாயன்மார், கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர், பாடகச்சேரி இரமலிங்க சுவாமிகள், இன்னும் நிறையபேர் வாழ்ந்து இருக்கிறார்கள். கோவில் நகரம் குயில் பாடும் கும்பகோணம் பாடல் கேட்டு பார்க்க வேண்டும். மதுரை பாடல் பி .சுசீலா பாடியது கேட்டு இருக்கிறேன்.

      நீக்கு
  6. சென்றமுறை குடந்தை சென்றபொழுது இந்தக்குளத்தின் அருகே ஆட்டோவை நிறுத்தி அங்கே அந்த ஆட்டோ டிரைவருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டோம்.  அந்த ஆட்டோ டிரைவர் உள்ளூர் பிரமுகரும் கூட. நாங்கள் குடந்தையில் பார்த்த இடம் யாவும் அவர்  யோசனையில், அவரும் கூட வர பார்த்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
      அவர்கள் ஊர் அவர்கள் பெருமை அல்லவா? மாயவரத்தில் இருந்த போது வாடகை கார் வைத்துக் கொண்டு கும்பகோணம் கோவில்களை பார்க்க வந்த போது அந்த கார் டிரைவரும் எங்களுடன் கோவில்களை சுற்றிப் பார்த்தார், அடுத்து எந்த கோவில் பார்க்கலாம் என்பது போன்ற விவரங்ககளும் சொன்னார்.

      நாங்கள் தங்கிய ஓட்டல் ராயாஸில் கையேடு கொடுத்து விடுகிறார்கள் பார்க்க வேண்டிய இடங்கள் அந்த ஓட்டலிலிருந்து எவ்வளவு துரம் என்றெல்லாம்.

      நீக்கு
  7. கும்பகோணம் பாடல் கிடைத்தது!  இதைத்தான் சொன்னேன்.

    https://www.youtube.com/watch?v=JF38gngNY7E 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டு பார்க்கிறேன் பாடலை, சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.

      நீக்கு
    2. பாடல் கேட்டு மகிழ்ந்தேன், அனைத்து கோவில்களையும் தரிசனம் செய்தேன். நன்றி.

      நீக்கு
    3. இப்பாடலும் கேட்டேன் சூப்பர்.. குடந்தை என்றால் கும்பகோணத்தையோ சொல்வார்கள்.. பாட்டில் வரும் கோயில்தானோ இக்கோயில்?..

      //ஸ்ரீராம்.13 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 7:30
      சென்றமுறை குடந்தை சென்றபொழுது இந்தக்குளத்தின் அருகே ஆட்டோவை நிறுத்தி அங்கே அந்த ஆட்டோ டிரைவருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டோம்.//

      அடுத்த விசாளக்கிழமைக்கு:)) எதிர்பார்க்கப்படுகிறது இப்படம்:))

      நீக்கு
    4. //அடுத்த விசாளக்கிழமைக்கு:)) எதிர்பார்க்கப்படுகிறது இப்படம்:))//

      ஹிஹிஹி....   பாஸ் எடுத்து வச்சுக்கிட்டு தரமாட்டேங்கறாங்க....!

      நீக்கு
    5. பாஸ் மேல் பழியை போட்டு விட்டீர்களா?

      நீக்கு
  8. நான் மனதில்நினைத்த இன்னொரு பாடலும் கிடைத்தது!  அது குதந்தைப் பாடல் அல்ல.  ராமேஸ்வரம் பாடல்!

    https://www.youtube.com/watch?v=KiXUTz0SMZo

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! பாடல்களை கேட்கிறேன் , கேட்டு விட்டு கருத்து சொல்கிறேன்.
      உணவு தயார் செய்ய வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கும், பாடல் சுட்டிகளுக்கும் நன்றி நன்றி. அலைபேசியில் கருத்துக்களை அடித்து அனுப்புகிறீர்களா? வார்த்தைகள் மாறி வந்து இருக்கிறதே!

      நீக்கு
    2. ராமேஸ்வர பாடலும் கேட்டேன், இன்று ராமேஸ்வரம் தரிசனமும் செய்து விட்டேன்.
      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. //https://www.youtube.com/watch?v=KiXUTz0SMZo//

      பாட்டுக் கேட்டேன் நானும்.. சூப்பர்.. முன்னமும் கேட்டிருக்கிறேன் ரி எம் எஸ் குரல் எனில் எப்பாடலும் சூப்பரே..

      நீக்கு
    4. மதுரை, திருச்சி வானொலிகளில் காலைஆறுமணிக்கு பக்திமாலை வைப்பார்கள்.  தொலைக்காட்சியில்லடாத காலங்களில் ரேடியோதானே கதி...   இந்தப்பாடல்கள் எல்லாம் அப்போது கேட்டுக்கேட்டு மனதில் நின்றுபோன பாடல்கள்...

      நீக்கு
    5. //அலைபேசியில் கருத்துக்களை அடித்து அனுப்புகிறீர்களா?//

      இல்லை அக்கா... கணினியில்தான் அந்த லட்சணம்.  மன்னிக்கவும்!  மேலும் என் கீ போர்டில்ஸ்பேஸ் பார் வேறு அழுந்தாது.  ஏறி நிற்கணும்.  அதனால் சில சமயம் வார்த்தைகள் சேர்ந்தோ, அல்லது சேர்த்து டைப்பாகும்போது மாறியோ வேறு வந்து விடும்.  முடிந்த வரை திருத்துகிறேன்!!!


      //குதந்தைப் //

      குடந்தை....குடந்தை....   குடந்தை...  குடந்தை...!



      நீக்கு
    6. உங்களுக்கு தப்பே வராதே என்பதால் கேட்டேன். ஆசிரியர் தப்பாக எழுதினால் வார்த்தையை பலமுறை எழுத தண்டனை கொடுப்பார், அது போல் நீங்கள் எழுதி யிருக்கிறீர்கள்.

      நீக்கு
    7. வானொலியில் கேட்ட பாடல்களை மீண்டும் கேட்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம், சில வானொலி பாடல்கள் கிடைக்க மாட்டேன் என்கிறது ஸ்ரீராம்.

      நீக்கு
    8. //சில வானொலி பாடல்கள் கிடைக்க மாட்டேன் என்கிறது ஸ்ரீராம்.
      ஆமாம்.  நானும்சொல்லியிருக்கிறேன்.  டி எம் எஸ் பாடல்களில் இரண்டை தேடிக்கொண்டிருந்தேன்.  
      1)  ராமநாமத்தைச் சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்...2)  அருளேமானிட உருவாகி அயோத்தி நகரில் பிறந்தது...
      இதில் ஒன்று கிடைத்தது.  இன்னொன்று கிடைக்கவில்லை.
      அப்புறம் சிவானந்த விஜயலக்ஷ்மி பாடிய "அம்பலலிதே மாம்பாலய பரம்சிவம் வனிதே..."
       "சுப்ரமண்யம் சுப்ரமண்யம்...   ஷண்முகநாதா சுப்ரமண்யம்...."  நீண்ட நாட்களுக்குப் பிறகு மும்பை சாரதா பாடிக்கேட்டேன்.  நன்றாகவே பாடியிருந்தார்.
      எஸ் பி பி பாடிய "வாணாதி வானங்களில்... காணாத விண்ணொளியில்.." என்கிற கிறித்தவப் பாடல்.
      இவ்வளவு ஏன்?
      உயர்ந்தவர்கள் படத்தில் பாலமுரளி பாடிய ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே என்கிற அருமையான பாடல் உண்டு.  அதுவே பாதிதான் கிடைக்கிறது.  அந்த அருமையான இரண்டாவது, மூன்றாவது  சரணங்கள் கிடைக்கமாட்டேன் என்கிறது!

      நீக்கு
    9. //உங்களுக்கு தப்பே வராதே என்பதால் கேட்டேன்.//

      ஹா...   ஹா....  ஹா...   
      நிறைய வரும் அக்கா.   கீதா அக்காவைக் கேட்டுப்பாருங்கள். பெஞ்சு மேலெல்லாம் நின்னிருக்கேன்.  இம்போசிஷன்லாம் எழுதி இருக்கேன்!

      நீக்கு
    10. இதுல கூட பாருங்க...

      வானாதி வானங்களிலென்று இருக்கவேண்டும்!

      நீக்கு
    11. நீங்கள் சொன்ன பாடல்கள் எல்லாம் எனக்கும் பிடித்த பாடல்.
      சின்ன வயதில்
      //"சுப்ரமண்யம் சுப்ரமண்யம்... ஷண்முகநாதா சுப்ரமண்யம்..//
      பாலவிஹாரில் கற்றுக் கொண்டேன் இந்த பாடலை பிடித்த பாடல்.

      சிவானந்த விஜயலக்ஷ்மி பாடிய கோவிந்த கோவிந்த என்ற பாடல் பாட கிடைத்த வாய் ஒன்று, தாளம் போட கிடைத்த கை ஒன்று, என்ற பாடல் கிடைக்க மாட்டேன் என்கிறது. வரவேண்டும் வரவேண்டும் தாயே ஒரு வரம் தர வேண்டும் தர வேண்டும் நீயே பாடல் கிடைக்க மாட்டேன் என்கிறது. வானொலியிலிருந்து பதிவு செய்து வைத்து இருக்கிறோம்.

      கிறித்தவப் பாடல் நிறைய பழையபாடல் கிடைக்க மாட்டேன் என்கிறது.



      நீக்கு
    12. //ஹா... ஹா.... ஹா...
      நிறைய வரும் அக்கா. கீதா அக்காவைக் கேட்டுப்பாருங்கள். பெஞ்சு மேலெல்லாம் நின்னிருக்கேன். இம்போசிஷன்லாம் எழுதி இருக்கேன்!//

      ஆமாம், நினைவு இருக்கிறது.

      அலைபேசியில் வார்த்தைகளை அடிக்கும் போது அது முந்திரி கொட்டை போல் நமக்கு உதவ செலவற்றை அடித்துவிடும். பார்க்கவில்லை என்றால் கஷ்டம் அதுதான் கேட்டேன்.


      நீக்கு
    13. ஆமாம்...   ஆமாம்...  என் லிஸ்ட்டில் "கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா"  பாடலும் உண்டு.  டைப்ப மறந்து விட்டேன்.

      அப்புறம் அந்த "வரவேண்டும் வரவேண்டும் தாய்" பாடல் பற்றி முன்னரே சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.  தேரெழுந்தூர் சகோதரிகள் பாடிய அந்தப் பாடலை எழுதியவர் என் அப்பாவின் நண்பர் காலம்சென்ற கவிஞர் மா  வரதராஜன்.   குடும்ப நண்பர்.   எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருபவர்.  என் திருமணத்துக்கும் வந்திருந்தார்.

      நீக்கு
    14. முன்பு பகிர்ந்து இருக்கிறீர்கள் ஸ்ரீராம் , சகோ துரைசெல்வராஜூ அவர்கள் பதிவில் படித்த நினைவு இருக்கிறது.
      கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா பாடல் இசைதட்டாக இருந்தது .எங்கள் வீட்டில் என் அக்கா திருமணத்திற்கு மாலை நலுங்கில் அப்பா எல்லாம் பக்தி பாடல் இசைதட்டுக்களை மெலிதான ஒலியில் வைத்தார்கள் எல்லோரும் பாராட்டினார்கள்.
      அப்பா இசை பிரியர் அதுவும் எம்.எஸ் அம்மா, சிவானந்த விஜயலக்ஷ்மி அம்மா ரசிகர்.

      நீக்கு
    15. ரொம்ப குஷியாக இருந்தாலும் வார்த்தைகள் தடம்புரளும் என அறிஞ்சேனே:) உண்மையா ஶ்ரீராம்?:)

      கோமதி அக்கா என் சந்தேகத்தை தீர்த்து வைக்கவில்லை நீங்கள்... மேலே கேட்டதற்கு, அதிரா வந்து தேட மாட்டா என நினைச்சிட்டீங்களோ?:)

      நீக்கு
    16. //குடந்தை என்றால் கும்பகோணத்தையோ சொல்வார்கள்.. பாட்டில் வரும் கோயில்தானோ இக்கோயில்?..//

      ஆமாம் அதிரா, குடந்தை, குடமூக்கு, கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது.

      பாட்டில் நிறைய கோவில் வருகிறது. கும்பகோணத்தில் உள்ள கோவில் எல்லாம் வருது அதிரா.

      ஸ்ரீராம் இன்று காலை அனுமன் கோவில் போவார் பாஸ்கூட அதுதான் வேக வேகமாய் டைப் செய்து இருப்பார் என்று நினைத்தேன் அதிரா. குஷியும் இருக்கலாம் தான்.

      நீக்கு
    17. //குடந்தை என்றால் கும்பகோணத்தையோ சொல்வார்கள்.. //

      மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றுமே சிறப்புடையது குடந்தை, குடமூக்கு, கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது. கோவில் நகரம் என்றும் சொல்லலாம். பாடல் பெற்ற சிவன் கோவில்கள், திவ்ய தேசங்கள், வரலாற்று சிறப்பு பெற்ற பழம் பெரும் நகரம் குடந்தை.

      பதிவின் கடைசியில் இருக்கே அதிரா படிக்கவில்லையா?

      நீக்கு
    18. //ரொம்ப குஷியாக இருந்தாலும் வார்த்தைகள் தடம்புரளும் என அறிஞ்சேனே:) உண்மையா ஶ்ரீராம்?:)//

      இருக்கலாம் சரித்திரக் கதைப் புகழரசி அதிரா...  எனக்கெப்படித் தெரியும்?!!

      நீக்கு
  9. அழகான படங்களுடன் விளக்கம் அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. காவேரி அம்மன் குறித்து எழுதிய வேண்டுதல் அனைத்தும் நிறைவேற, எனது வேண்டுதல்களும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவேரி அம்மனை வேண்டிக் கொள்வோம். அனைத்தும் நலமாகட்டும்.
      கூட்டுப்பிரார்த்தனை பலன் அளிக்கும்.
      நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. மணிக்கூண்டு அழகு மட்டுமில்லை, அழகாகப் பராமரிக்கவும் படுது.

    கோயிலின் நுழை வாயில் மிக அழகு..

    //கங்கை, யமுனை, நருமதை, சரஸ்வதி, கோதாவரி, காவேரி, பயோடினி, சரயு ஆகிய நதிகள் வடிவமாகிய கன்னியர் ஒன்பது பேரும் ஒன்றுசேர்ந்து வந்தனர் சிவபெருமானிடம்.//
    ஒன்பது கன்னிகளோ.. இவை ஒன்பது பேரும் இப்பவும் இருக்கினமோ நதியாக? அல்லது சிலது மறைந்து விட்டதோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சரித்திரக் கதை புகழரசி அதிரா, வாழ்க வளமுடன்

      கோயிலின் நுழை வாயில் அழகுதான்.
      எல்லா நதிகளும் இருக்கிறார்கள். காவேரியில்தான் நீர் வற்றி இருந்தது இப்போது பெய்த மழையால் நீர் வரத்து இருக்கிறது. இருந்தாலும் முன்பு மாதிரி அகண்ட காவேரியாக வர வேண்டும் நலம் தர வேண்டும்.

      நீக்கு
    2. //வணக்கம் சரித்திரக் கதை புகழரசி அதிரா,//

      அப்பப்போ மாறும் அவங்க அடைமொழியோடு சேர்த்து முழுசா நீங்க ஒருத்தர்தான் கூப்பிடறீங்கன்னு நினைக்கறேன்!!!

      நீக்கு
    3. அதிராவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் இல்லையா அதற்காகதான்.
      வித விதமாய் அடைமொழிகள் கொடுக்கிறார் ஒரு முறை கூட அழைக்கவில்லையென்றால்
      எப்படி! அதுதான்.

      நீக்கு
    4. ///அப்பப்போ மாறும் அவங்க அடைமொழியோடு சேர்த்து முழுசா நீங்க ஒருத்தர்தான் கூப்பிடறீங்கன்னு நினைக்கறேன்!!!///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஶ்ரீராமுக்குப் பொறாமை கோமதி அக்கா:)...
      அவரின் பெயரையும் மாத்தி வச்சிடுவோம் “ஸ்பெல்லிங் மிசுரேக்கு த்றீராம்” ஹா ஹா ஹா படிச்சதும் இந்தப் பாதியை மட்டும் கிழிச்சிடுங்கோ கோமதி அக்கா:)..

      நீக்கு
    5. அதிரா, பொறாமையா ஸ்ரீராமுக்கா ? அப்படி இல்லை அதிரா உங்கள் பெயரை அடைமொழியுடன் கூப்பிட்டது மகிழ்ச்சி ஸ்ரீராமுக்கு.

      படித்தவுடன் கிழித்து போட்டு விட்டேன் அதிரா.

      நீக்கு
    6. பயங்காரப் பொறாமையுடன் நானும் ஒரு தரம் சொல்லி விட்டேன்!

      நீக்கு
  12. //உள் பகுதியில் அஷ்டலக்ஷ்மிகள் தாமரையில் அமர்ந்து இருக்கும் காட்சி//
    மிக அழகு.. நான் அந்த 9 கன்னிகளோ என நினைச்சு அவசரமாக எண்ணினேன் 8 இருந்தது.. ஹா ஹா ஹா.

    கொடிமரத்தை வானம் தெரியும்படி வைத்திருக்கினம்.. பொதுவாக மண்டபம் கட்டியிருப்பினமெல்லோ.. வித்தியாசமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, நவகன்னிகள் என்று இருக்கே! 'நீங்கள் நால்வரை மட்டும் படம் எடுத்து போட்டு இருக்கிறீர்கள்'' என்று கேட்பீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் தோரண வாயிலில் உள் பக்கம் அஷ்டலட்சுமிகளில் தேடி இருக்கிறீர்கள்.

      உள்ளே இருந்த நவகன்னியரை ஒரு சேர எடுக்கமுடியவில்லை , கம்பி தடுப்புக்கு கதவுக்கு நேரே இருப்பவர்களை எடுத்து விட்டேன் . இரு பக்கமும் உள்ளவர்களை எடுக்கவில்லை.

      கொடிமரம் கோவில் அமைப்புக்கு ஏற்ற மாதிரி நெடிதாக, சிறிதாக அமைத்து இருப்பார்கள். வானம் தெரியும் படி கொடி மரமும் உண்டு.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அதையும் கவனிச்சேன் கோமதி அக்கா ஆனா புத்தி கொஞ்சம் பேதலிச்சுப்போச்சூ நவ என்றால் நான்கு ... அப்போ சரிதானே என விட்டிட்டேன் ஹையோ ஹையோ:)..

      நீக்கு
    3. நவகன்னிகள் படம் தேடி எடுத்து போட்டு இருக்கிறேன் பார்த்தீர்களா? நான் எடுத்த படம் கிடைக்கவில்லை. கும்பகோணம் கோவில்கள் பற்றிய வரலாற்று புத்தகத்திலிருந்து எடுத்து போட்டு இருக்கிறேன். நவ என்றால் நான்கு என்று விட்டீர்களா? சரியா போச்சு போங்க.

      நீக்கு
  13. //காவேரி அம்மன் கண் திறந்து பார்ப்பது போல் அழகாய் அலங்காரம் செய்து இருக்கிறார் குருக்கள்.//
    ஓ அது குருக்கள் ஐயாவின் கை வண்ணமோ.. அப்படியே சிலை வடிச்சதைப்போலவே கண் திறந்திருக்கே..

    //பிரகாரத்தில் அழகிய பெரிய உண்டியல்//
    ஹா ஹா ஹா பொங்கல் பானைபோல இருக்கு.. யாரும் தூக்கிப்போயிடாமல் இருக்கத்தான் இப்படிப் பெரிய உண்டியலோ .. இது நிரம்புமோ தெரியாதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /ஓ அது குருக்கள் ஐயாவின் கை வண்ணமோ.. அப்படியே சிலை வடிச்சதைப்போலவே கண் திறந்திருக்கே..//

      ஆமாம், அதிரா குருக்களின் கைவண்ணம் தான். மற்ற அம்மன் கண்களை பார்த்தால் தெரியும் உங்களுக்கு. திருவிழா காலங்களில் நிற்கும் அம்மனை அமர்ந்த கோலத்தில் , அமர்ந்த அம்மனை நிற்கும் கோலத்தில், வித விதமாய் மாற்றி மைப்பார்கள். சந்தனகாப்பில் சுவாமி, அம்மன் மற்றும் உற்சவர்கள் அழகுற காட்சி அளிக்க செய்வார்கள்

      .//ஹா ஹா ஹா பொங்கல் பானைபோல இருக்கு.. யாரும் தூக்கிப்போயிடாமல் இருக்கத்தான் இப்படிப் பெரிய உண்டியலோ .. இது நிரம்புமோ தெரியாதே.//

      பொங்கல் பானையா? செட்டி நாட்டு குடம் போல் காட்சி அளிக்கிறது.
      நீங்கள் சொல்வது போல் தூக்கியும் செல்ல முடியாதுதான்.

      சங்கரன் கோவிலில் பெரிய பெரிய உண்டியல்கள் உள்ளன படம் போட்டு இருக்கிறேன் அதிரா. விவசாயம் நன்றாக நடந்தால் தானியங்களை காணிக்கையாக கொட்டுவார்கள் அப்போது இது போன்ற உண்டியல்கள் நிறையலாம்.

      இப்போது திருப்பதியில்தான் இந்த மாதிரி பெரிய உண்டியல் நிறையும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ///விவசாயம் நன்றாக நடந்தால் தானியங்களை காணிக்கையாக கொட்டுவார்கள் ///
      ஓ இது முற்றிலும் புதுச் செய்தி...

      நீக்கு
  14. //மகா மக தீர்த்தக் கட்டம்//
    ஓ தீர்த்தத் தடாகத்திலிருந்து பார்க்கும்போது குட்டிக் குட்டியாக எத்தனை கோபுரங்கள்.. அழகாக இருக்கு சுற்று வட்டம்.

    // காசியை விடப் புனிதமான குளங்கள் என்று கும்பகோண வரலாறு சொல்கிறது//
    புகழ் எங்கிருக்கோ அங்குதானே மக்கள் போவார்கள்..

    அனைத்துப் படங்களும் அருமையாக இருக்கு கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // காசியை விடப் புனிதமான குளங்கள் என்று கும்பகோண வரலாறு சொல்கிறது//
      புகழ் எங்கிருக்கோ அங்குதானே மக்கள் போவார்கள்..

      நீங்கள் சொல்வது சரிதான். இப்போது எல்லாம் கோவில் புகழ் விளம்பரங்கள் வந்து விட்டது. முன்பு ஆளே வராத கோவில்கள் எல்லாம் புகழ் பெற்றவுடன் அருகில் போவதே கஷ்டமாக போய் விட்டது. இப்போது கோவில் வீடியோக்கள், அதன் சிறப்புகள், அதன் தலவரலாறு தெரியாமல் மக்கள் போவது இல்லை.

      "காசியை விட" என்று அந்தக்காலத்தில் சொல்லி வைத்ததும் காரணமாகத்தான், காசி போக முடியவில்லை என்று வருத்தபடுவார்கள்(அப்போது போவது மிகவும் கஷ்டம்) அதனால் அந்த அந்த ஊரில் காசியை விட வீசை பலன் அதிகம் இந்த இறைவனை கும்பிட்டால் என்று எல்லாம் இருக்கும் வரலாறில்.

      அருகில் இருக்கும் கோவிலுக்கு போக மாட்டார்கள், தூரத்தில் இருக்கும் கோவிலை நினைத்து வருந்துவார்கள் அவர்களை சாந்த படுத்தவே அந்த அந்த கோவில்களில் இறைவனின் சிறப்புகளை சொல்லி வைத்தார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  15. அன்பு கோமதி மா. அழகுமிகு கோவில் தரிசனம் இன்று தான்
    எனக்கு கிடைத்தது.
    தண்ணீரோடு மஹாமஹக் குளத்தைப் பார்ப்பது
    மிக மிக மகிழ்ச்சி.
    அசுத்தப் படாமல் இருக்க வேலி போட்டு இருக்கிறார்கள் போல.

    காசி விஸ்வனாதர் கோவில் படங்களும் விளக்கமாக வந்திருக்கின்றன.

    ஒன்பது நதிகளின் அம்மன் கள் படம் கிடைக்கவில்லை.
    நமக்குக் காவிரித்தாய் கண் திறந்தால் போதும்.

    ஒவ்வொருவரும் கோவில்கள் சென்று அதைப் பற்றி எழுதும் போது
    மனம் நிறைகிறது.

    கும்பகோணம் கோவில்கள் தாம் எத்தனை பெரியவை. நடந்து நடந்து
    கால் வலி எடுத்துவிடும். கும்பேஸ்வரர் கோவிலில் சிலசமயம் எல்லா சன்னிதிகளையும்
    தரிசிக்க அவகாசம் இல்லாமல் வந்திருக்கிறேன்.
    நீங்கள் பதிவில் தரும் அத்தனை விஷயங்களும் மனதில் படிகின்றன. அந்தப் புண்ணியம் உங்களுக்குத் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
      காவேரியில் தண்ணீற் வந்தவுடன் கும்பகோண தீர்த்த குளத்தில் நீர் வரத்து வந்து விட்டது. ஆமாம், அதை பாதுகாக்க தான் வேலி போட்டு இருக்கிறார்கள்.
      நாங்கள் முன்பு நின்று நிதானமாய் பார்த்து இருக்கிறோம். மாயவரத்திலிருந்து ஒரு மணிநேரம் தான், அடிக்கடி வருவோம். இப்போது போனபோது கும்பேஸ்வரர் கோவிலில் அம்மன், சுவாமியை பார்த்து விட்டு ஓடி வந்து விட்டோம்.
      இப்போது கும்பகோண மக்கள் காலை நடைபயணமாக கோவில் பிரகாரங்களில் நடக்கிறார்கள். மகிழ்ச்சி அளிக்கிறது பார்க்கும் போது.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  16. நான் பிறந்த மண் என்பதால் கும்பகோணம் பற்றிய செய்திகளை ஆவலோடு படிக்கிறேன். கிட்டத்தட்ட ஐந்து மகாமகங்களை கும்பகோணத்தில் கண்டு ரசித்து, கும்பகோணத்தின் ஒவ்வொரு தெருவிலும், வீதியிலும் அலைந்த நாள்களை அவ்வப்போது நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. அனைத்திற்கும் மேலாக கடந்த மகாமகத்தின்போது பெரும்பாலும் அனைத்து குடமுழுக்கிற்கும் சென்று என் வலைத்தளத்தில் 30க்கும் மேற்பட்ட பதிவுகளையும் விக்கிபீடியாவில் அதிகமான புகைப்படங்களையும், செய்திகளையும் இணைத்துப் பதிந்ததை கிடைத்தற்கரிய பேறாகவே கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.

    நீங்கள் ஆவலோடு படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
    உங்களுக்கு கிடைத்த பேற்றால் அனைவருக்கும் பயன் உண்டு.
    நான் உங்கள் குடமுழுக்கு பதிவுகளை படித்து இருக்கிறேன்.
    உங்கள் தொடர் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அழகான கோவில். உங்கள் மூலம் நாங்களும் பார்த்தோம். படங்கள் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  19. கருணாநிதியைக் கைது செய்து இருந்த காலத்தில் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்நடந்தது அதனருகேதானே மகா மகக்குளம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
      காசி விஸ்வநாதர் கோவில் பக்கத்தில் தான் மகா மகக்குளம்.உங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  20. எனக்கு இன்னொரு தாய்வீடு..
    பள்ளி நாட்களில் சுற்றிக் கிடந்த ஊர்...
    காஞ்சிபுரத்தைத் தான் கோயில்களின் நகரம் என்று பள்ளிப் பாடங்களில் படித்திருக்கின்றோம்..

    ஊடகங்களும் உள்ளூர் வர்த்தக அமைப்புகளும் சந்தடி சாக்கில் கோயில் நகரம் கும்பகோணம் என்று ஆக்கி விட்டார்கள்...

    அபிமுகேஸ்வரர் கோயிலில் ஜனசந்தடி இருக்காது.. அமைதியாக தரிசனம் செய்யலாம்...

    சில ஆண்டுகளுக்கு முன், காசிவிஸ்வநாதர் கோயிலில் ஏதோ ஒரு விசேஷத்தின் போது

    நதிக்கன்னியரை மிக அழகாக அலங்கரித்து இருந்தார்கள்..

    அங்கிருந்த குருக்களிடம் படமெடுத்துக்கொள்ள அனுமதி கேட்டபோது மறுத்து விட்டார்...

    பின்னொரு சமயம் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு இந்தப் பக்கமுள்ள ஸ்டுடியோ வாசலில் நவகன்னியர் அலங்கார ரூபத்தினைப் படமாகக் கண்டேன்...

    தங்களது பதிவில் காவிரி அன்னையைக் கண்டதும் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.

    இதற்கு முன் குளத்தைச் சுற்றி ஆதரவற்ற நோயாளிகளும் பிச்சைக்காரர்களும் குவிந்து கிடப்பார்கள்... சமீபகாலமாக மகாமகக் குளத்தைச் சுற்றிலும் கம்பியிட்ட பிறகு தான் திருக்குளம் சுத்தமாக இருக்கிறது...

    கொடுத்து வைத்த கும்பகோணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      நீங்கள் சிறு வயதில் இருந்த ஊரா?

      காஞ்சிபுரம், மதுரை, போல கும்பகோணமும் கோவில்கள் நிறைந்த ஊர் தான்.

      நவ கன்னியரை படம் எடுக்கும் போது யாரும் இல்லை தடுக்க, அவர்களை படம் எடுத்த பின் தான் சுவாமி, அம்மனை தரிசனம் செய்தேன். எங்கும் படம் எடுக்க கூடாது என்று எழுதி வைக்கவில்லை.

      கம்பி தடுப்புக்களுக்கு நடுவேதான் எடுக்க முடியும், பூட்டி இருக்கும்.



      //அபிமுகேஸ்வரர் கோயிலில் ஜனசந்தடி இருக்காது.. அமைதியாக தரிசனம் செய்யலாம்...//

      நாங்கள் போன அன்று தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு அபிஷேகம் நடந்து கொண்டு இருந்ததால் கொஞ்சம் கூட்டம் இருந்தது. சுவாமி, அம்மனை நல்ல நிதானமாய் வணங்க முடிந்தது.

      இப்போதும் வயதான யாசிப்பவர்கள் இருந்தார்கள். சுத்தமாக இருப்பதற்கு காரணம் ஒரு வாசல் மட்டுமே திறந்து இருக்கிறது. சிலர் காலையும், இரவும் குளித்துக் கொண்டு இருந்தார்கள். அடுத்த பதிவில் இரவு எடுத்த திருக்குள காட்சிகள் வரும்.

      "குடமூக்கு குடமூக்கு என்பாராகில்
      கொடுவினைகள் தீர்ந்து அரனை குருகலாமே"
      -திருநாவுக்கரசர்

      கொடுத்து வைத்த கும்பகோணம் தான்.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  21. அன்யே தேச க்ருதம் பாபம் வாராணஸ்யாம்
    விநச்யதி வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோண விநச்யதி
    கும்பகோண க்ருதம் பாபம் கும்பகோண விநச்யதி

    -- கும்பகோண ஸ்தல மகாத்மியம்

    தொடர்ந்து வாசித்து வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பகோண ஸ்தல மகாத்மியம் தொடர்ந்து வாசித்து வருவது மகிழ்ச்சி.

      நீக்கு
  22. அந்நாளைய புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் பலர் வாழ்ந்த ஊரும் கும்பகோணம் தான்.
    இன்றைய தமிழ் ஆர்வலர்கள் பலரும் அறியாததும் அதே தான்.

    தமிழ் பற்றி வாய் கிழிய பேசுவோர் தமிழ் மாநாடுகளில் இந்த கும்பகோண எழுத்தாளர்கள் ஒருவரைக் கூட நினைவு கொண்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
      புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள், கணித மேதை இராமனுஜர் எல்லாம் வாழ்ந்த ஊர் கும்பகோணம் தான். முன்பு எழுத்தாளர்களை பற்றி நீங்கள் எழுதியதை படித்து கருத்து சொன்ன போதும் சொன்னீர்கள். நான் ஒரு முறை ஒரு பதிவில் எழுத்தாளர் பற்றி எழுதிய போது எழுத்தாளர்கள் வாழ்ந்த வீட்டைப் பற்றி எல்லாம் சொன்னீர்கள் நினைவு இருக்கிறது. குடந்தையில் தொடர்புடைய தமிழ்ப் புலவர்கள், குடந்தையில் பிறந்த புலவர்கள், எழுத்தாளர்கள் , அங்குள்ள கலைவளர்ச்சி, சிற்பக் கலை, ஓவியக்கலை, இசைக்கலை, நாடக்கலை, நாட்டுப்புறக்கலை என்று எல்லாம் சிறந்து விளங்ககிய ஊர் தான்.

      உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

      நீக்கு
    2. கும்பகோண எழுத்தாளர்கள் என்று எடுத்துக் கொண்டால் ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. இப்பொழுது அவர்களையெல்லாம் பற்றிப் பதிந்தாலும் யாரும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. காலம் வெகு வேகமாக மாறி வருகிறது. அடி மரத்தைச் சாய்த்து நுனி மரத்தைக் கொண்டாடும் உலகம். தங்கள் நினைவுகளுக்கு நன்றி, கோமதிம்மா.

      நீக்கு
    3. பழைய எழுத்தாளர்கள் கதையை தேடி படிக்கும் வாசகர்களும் இருக்கிறார்கள்.
      காலம் மாறும் போது மக்கள் ரசனைகளும் மாறும் தான்.

      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி சார்.

      நீக்கு
  23. வணக்கம் சகோதரி

    அழகான கோவில். விரிவான செய்திகளும் படங்களும் கண்டு களித்தேன். முதல் படம் காசி விஸ்வநாதர் கோவில் கோபுரமும், நவ கன்னியர் பற்றிய செய்தி படங்களுடன் நன்றாக உள்ளது. உட்புறம் அஸ்டலெக்ஷ்மிகள் தாமரை மலரில் அமர்ந்திருப்பது போன்ற படம் அழகாக உள்ளது.

    கோபுர வாயில் அருமையாக உள்ளது. மகாமககுளம் தரிசித்து கொண்டேன். பிரகாரங்களில் எடுத்த போட்டோக்களும் நன்றாக இருந்தது. புண்ணிய தீர்த்தங்கள் இணைத்த குளமும், அதைச் சுற்றியுள்ள கோவில்களும், அதுகுறித்த விளக்கப்படமும் அருமை.
    எவ்வளவு உயர திருவாட்சி ..அது எந்த ஸ்வாமுக்குரியது? அடுத்த கோவில் பதிவையும் விபரமாக காணவும் ஆவலாக உள்ளேன்.
    சற்று தாமதமாகி விட்டது. வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      உயர திருவாட்சி காவேரி அம்மனுக்கு உள்ளது என்று நினைக்கிறேன். அவர்தான் நல்ல உயரமாக இருக்கிறார். ஒவ்வொரு படத்தையும் பார்த்து, ரசித்து விரிவான கருத்துரை வழங்கியது மகிழ்ச்சி. மீண்டும் சொல்கிறேன் வருந்த வேண்டாம், நேரம் கிடைக்கும் போது படித்து கருத்துரை கொடுத்தால் போதும்.
      உங்கள் வரவுக்கும், விரிவான கருத்துக்கும் , அடுத்த பதிவை படிக்க ஆவலாக இருப்பதற்கும் நன்றி , நன்றி .

      நீக்கு
  24. அழகிய படங்களுடன் கோவில் சிறப்பு
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் Yarlpavanan வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  25. படிக்க மறக்காதீர்கள்
    நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
    http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  26. பொதுவாக் கும்பகோணம் சுற்று வட்டார ஊர்களில் நிறையச் சுற்றி இருந்தாலும் எனக்குக் கும்பகோணம் என்றாலே இன்னமும் கொஞ்சம் அலர்ஜி தான்! :)))) நல்லவேளையாக அங்கே இருக்க நினைச்சு வீடெல்லாம் பார்த்துட்டோம். அப்புறமா வேண்டாம்னு தோணி விட்டோம். நான் ஊருக்குக் கிளம்பி வரச்சே காவிரி இரு கரையும் புரண்டு ஓடாட்டியும் ஓரளவுக்குத் தண்ணீர் வந்திருந்தது. ஆனால் படம் தான் எடுக்க முடியலை. இப்போக் காவிரி இருகரையும் புரண்டு ஓடும்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாமபசிவம், வாழ்க வளமுடன்

      கோவில்கள் நன்றாக இருக்கும் கும்பகோணத்தில் ஆண்டு முழுவதும் விழா, பார்த்துக் கொண்டு இருக்கலாம்.
      காவேரி வந்து விட்டாள் , இருகரையும் தொட்டு ஓடும் தான் நீங்கள் இருந்தால் மொட்டைமாடியிலிருந்து படம் எடுத்து போடுவீர்கள்..

      கொள்ளிடத்தில் படகில் போய் படகு கவிழ்ந்து நிறைய பேர் இறந்து விட்டார்கள் என்று தொலைக்காட்சியில் காட்டினார்கள். பார்க்க கஷ்டமாய் இருந்தது. தண்ணீர் வரவில்லை என்றால் புலம்பும் மக்கள், வந்து விட்டாள் கவனமாய் இருக்க வேண்டும் இல்லையா?


      நீக்கு
  27. கோவில் படங்கள் எல்லாமும் நன்றாக வந்திருக்கின்றன. அருமையாகவும் அதைவிடப் பொறுமையாகவும் எடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் படங்கள் நன்றாக வந்திருப்பதாக சொன்னதற்கு நன்றி.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  28. மிக அழகான திருத்தலம் மா...


    பயணம் மற்றும் பசங்களின் உடல் நலம் என பல காரணிகளால் தாமத வருகை ...


    காவேரி அம்மன் கண் திறந்து பார்ப்பது போல் அழகாய் அலங்காரம் ...திரும்ப திரும்ப பார்க்க தோணும் படம் ...மிக அழகு ..


    நிறைய சிறப்பான தகவல்கள் மா ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      குழந்தைகள் நலமா? நேரம் கிடைக்கும் போது படிங்க அனு.
      காவேரி அம்மன் அலங்காரம் அழகாய் இருந்ததால்தான் எல்லோரும் பார்த்து மகிழவேண்டும் என்று இங்கு பகிர்ந்தேன் அனு.
      உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

      நீக்கு
  29. காசிவிஸ்வனாதர்,புனித மகாமக குள தீர்தம் கண்டு கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  30. அழகான படங்களுடன் அருமையான விளக்கங்கள் அக்கா. எனக்கு தஞ்சாவூர்,கும்பகோணம் பிடித்த இடங்கள்.கும்பகோணம் கோவில்கள் கொணட ஊர் போல.நவகன்னிகைக்ள் அழகாக இருக்கின்றார்கள்.
    கோபுர வாயில், மகாமககுளம் பிரகாரங்களில் எடுத்த போட்டோக்கள் அழகா இருக்கு. தீர்த்த குளமும், அதைச் சுற்றி உள்ள் கோவில்களும், அதுகுறித்த விளக்கப்படமும் அருமை. தெய்வீக பதிவா அமைந்திருக்கு. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி , வாழ்க வளமுடன்
      உங்களுக்கு தஞ்சாவூர், கும்பகோணம் பிடித்த ஊரா? மகிழ்ச்சி.
      கும்பகோணம் கோவில்கள் நிறைந்த ஊர் தான்.
      படங்களை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அம்மு.

      நீக்கு
  31. என்ன ஆயிற்று தங்களுக்கு?...

    எபியின் வழியாக செய்தி அறிந்து மனம் வருத்தமுற்றேன்..

    காலை ஊன்றி நடக்கும் பழக்கம் உடையவர் தாங்கள் என்பது எனது அனுமானம்...
    அப்படியிருக்க தண்ணீரில் வழுக்கிக் கொண்டு...

    ஏதோ நேரம் சரியில்லை போலிருக்கிறது...

    இருந்தாலும் இந்த அளவோடு போயிற்றே...

    அதுவரைக்கும் ஐயனுக்கு நன்றி சொல்வோம்...

    விரைவில் நலம் பெறுவதற்கு விழைகிறேன்..

    அம்பாள் அருகிருப்பாளாக!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      காலை ஊன்றி நடப்பவள்தான், வாசிங்மிஷின் குழாய் வெளியே வந்தது தெரியவில்லை, பாத்திரங்களை கழுவ தொட்டியில் போன போது இந்த விபரீதம் கண் சிமிட்டும் நேரத்தில் நடந்து விட்டது. (சோப் தண்ணீரில் கால் வைத்ததால்)

      பிடிக்க எந்த பிடிமானமும் இல்லை அதனால் கால் மடங்கி முட்டி தரையில் மோதும் படி விழுந்து விட்டேன்.

      இடது கையில் கொஞ்சம் காயம் முட்டிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் ஜவ்வு கொஞ்சம் நகர்ந்து இருப்பதால் மருந்து வைத்து கட்டி உள்ளது இரண்டு ஊசி போட்டு மாத்திரைகள் கொடுத்து இருக்கிறார். மூன்று நாளில் சரியாகி விடும் என்று சொல்லி இருக்கிறார்.

      இறைவன் எப்போதும் காத்து வருகிறார். இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.

      உங்கள் விசாரிப்புக்கும், பிரார்த்தனைக்கும், நன்றி.

      நீக்கு
    2. அடக் கடவுளே! எப்போதுமே சமையலறையின் பாத்திரங்கள் கழுவும் தொட்டியின் கீழ் ஓர் மிதியடியைப் போட்டுக் கொள்ளுங்கள். முன்னெல்லாம் சாக்கைப் பயன்படுத்தினோம். இப்போது சாக்குக் கிடைப்பது அரிது. சணலினால் ஆன மிதியடிகளானாலும் பரவாயில்லை. எங்க வீட்டிலும் இப்படித் தான் எப்போது வழுக்குமோ என்னும் பயத்திலேயே மிகக் கவனமாக நடப்பேன். முழு ஓய்வுக்குப் பின்னர் உங்கள் கால் நல்ல பலத்துடன் இருக்கவும், உடல்நிலை விரைவில் சரியாகவும் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      இது தனியாக சர்வீஸ் ஏரியாவில் வாசிங்க் மிஷின், பாத்திரம் தொட்டி அமைத்து இருக்கிறார்கள். சமையல் அறையில் இல்லை.
      மூன்று நாட்கள் ஆகி விட்டது, கொஞ்சம் வலி குறைந்து இருக்கிறது. இனி கவனமாக இருக்கிறேன். பெரிய மிதியடி போட்டு வைக்க முடிவு செய்து உள்ளது.
      உங்கள் விசாரிப்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
      உங்கள் கால்வலி எப்பாடி இருக்கிறது? புயல் பயமுறுத்தல் விலகியதா?

      நீக்கு
  32. இன்று பிறந்தநாள் என்று எபி வழியாக அறிந்தேன்...

    சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராச தனயை
    தங்களிருவருக்கும் எல்லா நலங்களையும் தந்தருள்வாளாக!..

    வாழ்க நலம்.. வளர்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்
      உங்கள் வழ்த்துக்களுக்கும் நன்றி.
      இருவரையும் வாழ்த்தியது மகிழ்ச்சி.
      எங்கள் இருவருக்கும் ஆவணி மாதம் பிறந்தாள் வரும். நட்சத்திர பிறந்தாளூக்கு கோவில் போய் வருவோம். தேதி படி மறந்தே போகும். இப்போது முகநூல் அதை சொல்வதால் அதை பார்த்த அன்பர்கள் எல்லோரும் வாழ்த்து சொல்கிறார்கள்.

      உங்கள் எல்லோர் அன்புக்கும் நன்றி.

      நீக்கு
  33. மகாமகக் குளத்தில் இத்தனை தீர்த்தங்களா. கும்பகோணம் கோயில்கள் அனைத்துமே பிரம்மாண்டம்தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்
      ஆமாம், மகாமக் குளத்தில் இத்தனை தீர்த்தங்கள் இருப்பதால்தான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகம் அன்று மக்கள் கூட்டம் கூடுகிறது, தீர்த்தமாடி மகிழ்கிறார்கள்.
      கும்பகோணம் கோயில்கள் எல்லாம் பிரம்மாண்டம்தான்.

      கோவில்களை சுற்றி வந்தாலே போதும். தனியாக நடைபயிற்சி வேண்டாம்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  34. இப்போது தான் இந்தப்பதிவிற்கு வந்தேன். வந்ததும் உங்கள் முழங்கால் பாதிப்பு பற்றி அறிந்ததும் மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போது எப்படி இருக்கிறீர்கள்? இப்போது நடக்க முடிகிறதா? வலி இருக்கிறதா? முழங்கால் என்னும்போது மிகவும் கவனமாக இருங்கள். உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      இப்போது நலம். நடக்க முடிகிறது.
      கை காயம் மட்டும் வலி இருக்கிறது . ஆறி வருகிறது.
      முழங்கால் வலி குறைந்து விட்டது. இன்னும் இரண்டு நாள் மருந்து இருக்கு.
      அதையும் சாப்பிட்டு விட்டால் பூரண நலம் ஏற்படும். கவனமாய் இருக்கிறேன்.
      உடல நலத்தை கவனித்துக் கொள்கிறேன்.
      உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி மனோ.

      நீக்கு