வெள்ளி, 6 ஜனவரி, 2023

பேரூர் பட்டீஸ்வரம்





டிசம்பர் 16ம் தேதி கோவையில் உள்ள  பேரூர் பட்டீஸ்வரர் கோயில் போகும் வாய்ப்பு கிடைத்தது.  இன்று திருவாதிரை அதனால் இந்த கோயில் பதிவில் இடம் பெறுகிறது.

மூலவர் - பட்டீஸ்வரர்
அம்பாள் - பச்சைநாயகி, மனோன்மணி
தலவிருட்சம் - புளியமரம், பனைமரம்
இந்த புளியமரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிறவாபுளி என்று சிறப்பு பெற்றது. இதன் விதையை எங்கு நட்டாலும் வளராது.
பனைமரம் "இறவாபனை" என்று புகழ் பெற்றது.
காமதேனுவும் அவள் மகள் பட்டியும் வழிபட்ட தலம். சிவலிங்ககத்தின் தலையில் பட்டியின் கால் பட்ட தழும்பு இருக்கும்.
.


தலவிருட்சங்களை படம் எடுக்க நேரமில்லை.  வேறு சில வேலைகள் இருந்ததால்  சிறப்பு தரிசனம் வழியே சென்று  விரைவாக தரிசனம்  செய்து விட்டு வீடு திரும்பி விட்டோம். அவசரத்தில் கோபுரபடம் கூட எடுக்கவில்லை.
கோபுர படம் மகன் எடுத்து இருந்தான், பதிவு போடும் போதுதான் மகனிடம்  கேட்டு வாங்கி போட்டேன்.


                 
கோவிலுக்கு முன் உள்ள தலவிருட்சம் நிழல் தெரிகிறது.

கோபுர வாசலில் மார்கழி கோலம் அழகாய்  போட்டு இருந்தார்கள்.

உள்ளே நுழைந்தவுடன் கோயிலை பெரிய திரையில் காட்டி கொண்டு இருந்தார்கள்.


மேல் விதானம் மிக அழகிய வேலைப்பாடு. முன்பு அடிக்கடி போகும் கோயில். இப்போது பல வருடம் ஆச்சு பார்த்து. நடராஜர் இருக்கும் கனகசபையில்    உள்ள தூண்களில் கலைநயமிக்க சிலைகள் அழகாய் இருக்கும்.

கோயிலில் படம் எடுக்க தடை அதனால் வெளிசுற்றில் மட்டும் படம் எடுத்தேன்.



கனகசபை விமானம் தெரிகிறது, வெளி கோபுரம் தெரிகிறது

நடராஜர் மிக அழகாய் புன்சிரிப்புடன் இருப்பார். திருவாதிரை ஆருத்திரா தரிசன விழா மிக சிறப்பாக நடைபெறும். "மேல சிதம்பரம்" என்று அழைக்கப்படுகிறது. நடனம் பார்க்க அருமையாக இருக்கும் ஒரு முறை பார்த்து இருக்கிறேன்.

 ஆனி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று  நடக்கும்  பட்டீஸ்வரரும், பச்சைஅம்மனும் நாற்று நடும் விழா சிறப்பாக நடக்கும். நானும் பார்க்க வேண்டுமென்று நினைத்து இருக்கிறேன், இன்னும் பார்த்தது இல்லை.

                         அம்மன் சன்னதி முன் உள்ள நந்தி மண்டபம்

காலைச் சூரியன் , சுவாமி சன்னதி கொடிமரம் தெரிகிறது.
 இந்த மண்டபத்திற்கு பக்கத்தில் இருக்கும்  இடம் யானை குளிக்கும் இடம். ஒரண்டு மூன்று பாகர்கள் யானையை  உடல் தேய்த்து குளிக்க வைப்பார்கள். இங்கு யானை குளிப்பதை படம் எடுத்து பதிவில் போட்டு இருக்கிறேன்.




யானை ! யானை! பதிவில் இந்த பேரூர் படம் போட்டு இருந்தேன், ஸ்ரீராம் கேட்டவுடன் தேடி போட்டு விட்டேன்.

                               விழா வாகனங்கள் நிறுத்தும் இடம்.

என் கணவரின் அண்ணா அனுப்பிய படங்கள். பேரூர் திருவாதிரை காட்சிகள்.



அவர்கள் மாமாவை போல சிவபூஜை செய்வார்கள். மார்கழி திருவாதிரை அன்று பிறந்தவர்கள்

அவர்கள் வீட்டில் உள்ள நடராஜருக்கு திருவாதிரை அபிஷேகம்

                       அலங்கார காட்சி.


ஆரூர் அத்தா ஐயாற்றமுதே

அளப்பூர் அம்மானே

காரூர் அத்தா ஐயாற்றமுதே

புறாவிற் கருகாவூரானே

பேரூர் உறைவாய் பட்டிபெருமான்

பிறவா நெறியானே

பாரூரு பலரும் ப்ரவப் ப்புடவாய்

பாசூர் அம்மானே

-சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம்

இந்த பாடலை பாடி வேண்டி கொண்டால்  மீண்டும் பிறவா நெறி தந்தருளுவராம். பட்டீஸ்வரன்.


அருண்கிரி நாதர் அருளிய திருப்புகழ்:-

தீராப்பிணிதீர சீவாத் துமஞான

ஊராட்சியதான் ஓர்வாக் அருள்வாயே

பாரோர்க்கிறைசேயே பாலாக்கிரிராசே

பேராற் பெரியோனே பேரூர்ப் பெருமாளே

பிணியை  போக்கி  ஆரோக்கியத்தை அருள வேண்டும் பேரூர் பெருமானே.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

--------------------------------------------------------------------------------------------------

28 கருத்துகள்:

  1. திருவாதிரை சிறப்புப் பதிவு.  படங்கள் யாவும் சிறப்பு.  யானை கண்ணில் படாதது குறை!  பழைய படத்திலிருந்து ஒன்றைச் சேர்த்திருக்கக் கூடாதோ...  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      திருவாதிரை பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      யானை படத்தை தேடினேன். அதற்குள் திருவாதிரை முடிந்து விடுமே என்று போட்டு விட்டேன். இன்று தேடி போடுகிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. ஸ்ரீராம், யானை படத்தை தேடி போட்டு விட்டேன் பாருங்கள். யானை யானை சுட்டியில் நிறைய யானைகள் பார்க்கலாம். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
      நன்றி.

      நீக்கு
    3. நன்றி.  ஆனா...

      கோச்சுக்காதீங்கக்கா..   அப்படியும் யானை நிற்கும் படம் இல்லாதது குறைதான்!!!!!

      நீக்கு
    4. அதுதான் யானை ! யானை ! லிங்க் கொடுத்து இருக்கிறேன் பார்க்க நிறைய யானை படங்கள் இருக்கிறது, சாரே யானையாக மகளை சுமந்து செல்வது போல சார் வரைந்த படம் இருக்கிறது. நேரம் இருந்தால் பாருங்கள். உங்கள் பின்னூட்டம் சூப்பராக இருக்கும்.

      பேரூர் பதிவில் சொல்லியது இந்த யானைதானே குளிப்பதை சொல்லி இருந்தேன். அதுதான் அதை மட்டும் தேடி போட்டேன்.

      நீக்கு
    5. கோச்சுக்காதீங்கக்கா.. அப்படியும் யானை நிற்கும் படம் இல்லாதது குறைதான்!!!!!//

      பேரூர் யானை பழைய படம் படுத்து ஆனந்தமாய் குளிக்கும் படம் மட்டுமே இருக்கிறது. நிற்பது இல்லையே!
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. சிறப்பான படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.

    தரிசனம் கிடைத்தது நன்றி
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      வாழ்க வையகம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. பட்டீஸ்வரம் கேள்விப்பட்டதுண்டு சென்றதில்லை. திருவாதிரை நாளில் அற்புத தரிசனம் . படங்கள் அழகு.
    உங்கள் கணவரின் அண்ணாவின் 'நடராஜ பூஜை 'அலங்காரங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      //பட்டீஸ்வரம் கேள்விப்பட்டதுண்டு சென்றதில்லை. திருவாதிரை நாளில் அற்புத தரிசனம் . படங்கள் அழகு.//
      பள்ளிப்பருவத்தில் கோவையில் இருந்து இருக்கிறேன், அப்புறம் புகுந்தவீடும் கோவை என்பதால் பலமுறை பேரூர் பார்த்து இருக்கிறேன்.

      //உங்கள் கணவரின் அண்ணாவின் 'நடராஜ பூஜை 'அலங்காரங்கள் நன்று.//

      நன்றி.
      படங்களை , பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  5. பேரூர் கோயில் கோயபுத்தூரில் இருந்தப்ப போனது, கோமதிக்கா. பழைய கோயில் மிக அழகாக இருகும். இப்ப புதுப்பித்து இருக்காங்க போல!!!

    மேல் விதானம் அழகான டிசைன். கோபுரம் தரிசனம்!!! படங்கள் அழகு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
      //பேரூர் கோயில் கோயபுத்தூரில் இருந்தப்ப போனது, கோமதிக்கா. பழைய கோயில் மிக அழகாக இருகும். இப்ப புதுப்பித்து இருக்காங்க போல!!!//

      ஓ! நீங்களும் கோவையில் இருந்து இருக்கிறீர்களா?

      //மேல் விதானம் அழகான டிசைன். கோபுரம் தரிசனம்!!! படங்கள் அழகு...//
      மேல்விதானம் இன்னும் எடுத்து இருக்கலாம். உறவினர்களுடன் சென்றதால் உரையாடி கொண்டு வந்ததோம், எடுக்கமுடியவில்லை.

      நீக்கு
  6. பெரிய கோயில், இறைவன் ரொம்ப அழகா இருப்பார்...

    ஹைடெக் போல...டிவி எல்லாம் வைச்சிருக்காங்களே!!! உள்ளே கூட்டம் என்றால் இங்கு தெரியுமோ வெளியில் இருப்பவங்களூக்குப் பார்க்க..

    நானும் ஆருத்ரா தரிசனம் அங்கு பார்த்ததில்லை அது போல நாட்டு நடும் வைபவமும் பார்த்தது இல்லை.

    அம்மன் சன்னதி முன் நந்தீஸ்வரர் படம் ரொம்ப அழகா இருக்கு....

    வெளிப்பிராகாரம் பெரிசாக இருக்கும். பழைய கோயில்களே அழகுதான்...இப்படியான கற்கள் அமைந்த கோயில் ரொம்ப அழகு... மீண்டும் பார்த்துக் கொண்டேன்

    இந்த மண்டபம் படம் முன்பு போட்டிருக்கீங்க அது போல இங்கு யானை குளியலும் போட்டிருக்கீங்க இல்லையா பார்த்த நினைவு இருக்கிறது

    யானை அழகு அழகு!!!! சமர்த்தாகப் படுத்துக் கொண்டு சுகமான குளியல்!!!!

    விழா வாகனம் நிறுத்தும் இடம் அந்தத் தூண்கள் சிற்பங்கள் மிக அழகாக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெரிய கோயில், இறைவன் ரொம்ப அழகா இருப்பார்...

      ஹைடெக் போல...டிவி எல்லாம் வைச்சிருக்காங்களே!!! உள்ளே கூட்டம் என்றால் இங்கு தெரியுமோ வெளியில் இருப்பவங்களூக்குப் பார்க்க..//

      ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன். இப்போது நிறைய கோயில்களில் பிரதோஷ அன்று இப்படி வைத்து இருக்கிறார்கள். கூட்டத்தில் இடிபடாமல் நின்று பார்த்து விடலாம்.

      //யானை அழகு அழகு!!!! சமர்த்தாகப் படுத்துக் கொண்டு சுகமான குளியல்!!!!//
      நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லாதபோது மட்டுமே இப்படி ஆற்றில் தண்ணீர் இருக்கும் போது அங்கே போய் ஆனந்த குளியல் போடும் யானை.

      //விழா வாகனம் நிறுத்தும் இடம் அந்தத் தூண்கள் சிற்பங்கள் மிக அழகாக இருக்கின்றன//
      தூணில் சிறபங்கள் நன்றாக இருக்கும் கீதா. தனி தனியாக முன்பு படம் எடுத்து இருக்கிறேன், தேட வேண்டும்.

      நீக்கு
  7. முன்பு உங்கள் மாமனார், மாமா எல்லாரும் பூஜை செய்வதை போட்டிருக்கீங்கக்கா...

    மாமாவின் அண்ணா அனுப்பிய படங்கள் எல்லாம் செம....அவங்க வீட்டு பூஜைப் படங்களும் அதுவும் பஞ்சாமிர்தம்...ஆஹா...

    அதன் பின் அலங்காரம் எல்லாமே செம...

    திருவாதிரைச் சிறப்புப் பதிவு மிகவும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முன்பு உங்கள் மாமனார், மாமா எல்லாரும் பூஜை செய்வதை போட்டிருக்கீங்கக்கா...//

      ஆமாம், இவர்கள் மாமா போல சிவ பூஜை செய்வார்கள் தினம்.

      //மாமாவின் அண்ணா அனுப்பிய படங்கள் எல்லாம் செம....அவங்க வீட்டு பூஜைப் படங்களும் அதுவும் பஞ்சாமிர்தம்...ஆஹா...

      அதன் பின் அலங்காரம் எல்லாமே செம..//

      நன்றி கீதா.
      பதிவை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    திருவாதிரை சிறப்பு பதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக இருக்கிறது. கோபுர தரிசனம் தரிசித்து கொண்டேன். கோவில் பற்றி நல்ல விளக்கமாக கூறியுள்ளீர்கள். கோவைக்கு ஒரிரு தடவை உறவுகளின் வீடுகளுக்கு சென்றதோடு சரி. அங்கிருக்கும் கோவிலுக்கெல்லாம் சென்றதில்லை. ஒருசமயம் அங்கு சென்ற போது, மருத மலை காண வேண்டுமென நினைத்தேன். ஆனால் என் கணவர் மட்டும் அங்கிருந்த உறவினர்களுடன் சென்று வந்தார். எனக்கு இன்னமும் அந்த கோவிலை காண சமயம் வாய்க்கவில்லை. அவன் எப்போது அழைக்கிறானோ அப்போதுதானேஅவனை காண இயலும்.

    கோவிலின் மேல் விதான படங்கள், காலைச்சூரியனுடன் கண்கவரும் படங்கள், மரங்களின் படங்கள் என ஒவ்வொன்றையும் மிக அழகாக எடுத்துள்ளீர்கள். எல்லாவற்றிற்கும் விளக்கமாக கூறிய பாங்கும் மிக அருமையாக உள்ளது. மனமார்ந்த பாராட்டுக்கள். யானை பற்றிய விபரங்களும் அருமையாக உள்ளது.

    தங்கள் கணவரின் அண்ணா வீட்டில் செய்யப்பட்ட திருவாதிரை பூஜைகள் சிவனாருக்கு செய்யபட்ட மலர் அலங்காரம் எல்லாமே மனதுக்கு நிறைவாக உள்ளன. அவர் அனுப்பிய திருவாதிரை சிவன் படங்களின் மூலமாக ஐயனை தரிசித்து கொண்டேன். நானும் இங்கு அன்று களி, கூட்டு செய்து, இறைவனுக்கு படைத்து விட்டு சாப்பிட்டோம் .

    இப்பதிவுக்கு தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன். இன்னமும் நம் நட்புகளின் (துரை செல்வராஜ், கீதா ரெங்கன் போன்றோர்.) பதிவுகளுக்கு செல்லவே தொடர்ச்சியாக தாமதமாகிறது. ஏதேதோ வேலைகள். மகன் குழந்தைகள் இங்கிருப்பதால் சமையல் சாப்பாடு என வேலைகள் சரியாக உள்ளது. கைப்பேசியை கையில் எடுக்கவே நேரமில்லாத சூழ்நிலைகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //திருவாதிரை சிறப்பு பதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக இருக்கிறது. கோபுர தரிசனம் தரிசித்து கொண்டேன். கோவில் பற்றி நல்ல விளக்கமாக கூறியுள்ளீர்கள்///

      நன்றி. கோவிலின் புராண வரலாறு நிறைய இருக்கிறது. நான் சிறிதுதான் சொல்லி இருக்கிறேன்.

      கோயில் மிக அழகாய் இருக்கும், முருகன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி , அனுமன் சன்னதி , நவகிரக சன்னதி , பைரவர் என்று மிக அழகான கோயில் ஆனால் படம் எடுக்க முடியாது.
      உள் பிரகாரம், வெளி பிரகாரம் உள்ள அழகான கோயில்.

      உறவினர் வீட்டுக்கு மறுமுறை போகும் போது கோயில்களுக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கட்டும் உங்களுக்கு.

      எப்போது வேண்டுமென்றாலும் பதிவுகளை படித்து கொள்ளலாம்.
      நீங்கள் வரவில்லை என்றதும் வேலைகள் அதிகமாக இருக்கும் அதுதான் வரவில்லை என்று நினைத்து கொண்டேன்.
      மகன், மற்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ந்து இருங்கள்.

      கோயில் படங்கள் மச்சினர் வீட்டு நடராஜ அபிஷேக, அலங்கார படங்கள் என்று ஒன்று விடாது விரிவான கருத்துக்கள் சொல்லி பாராட்டியதற்கு நன்றி கமலா.








      நீக்கு
  9. புண்ணியத் தலங்களுள் ஒன்றான பேரூர் பட்டீச்சுரம் தரிசனம்..

    அழகிய சிறபங்களுக்குப் பெயர் பெற்ற திருக்கோயில்..

    தரிசனம் செய்ததில்லை இன்னும்..

    எப்போது வாய்க்குமோ தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜு, வாழ்க வளமுடன்
      //புண்ணியத் தலங்களுள் ஒன்றான பேரூர் பட்டீச்சுரம் தரிசனம்..//

      ஆமாம், புண்ணிய தலம் தான். மாமாவும், அத்தையும் எங்கள் வீட்டில் எல்லோரும் திருவாதிரைக்கு சென்று தரிசனம் செய்து விடுவார்கள்.
      நாங்களும் விடுமுறைக்கு ஊருக்கு போனால் பேருர், மருதமலை போய் வருவோம். இந்த முறை போய் வந்தது மனதுக்கு நிறைவு.

      //தரிசனம் செய்ததில்லை இன்னும்..

      எப்போது வாய்க்குமோ தெரியவில்லை..//
      கண்டிப்பாய் வாய்ப்பு கிடைக்கும் அவன் அருளால்.


      நீக்கு
  10. அழகான படங்களுடன் பதிவு சிறப்பு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. படங்கள் அழகு.

    பேரூரில்தான் சாந்தலிங்க அடிகளாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      //பேரூரில்தான் சாந்தலிங்க அடிகளாரா?//

      ஆமாம்.

      நீக்கு
  12. அவ்வளவு பெரிய விலங்கு, நினைத்தால் பாகனைத் தூக்கி எறியும் வல்லமை பெற்றது..இருந்தாலும் சொல்லுக்கு அடிபணிந்து நடப்பதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவ்வளவு பெரிய விலங்கு, நினைத்தால் பாகனைத் தூக்கி எறியும் வல்லமை பெற்றது..இருந்தாலும் சொல்லுக்கு அடிபணிந்து நடப்பதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்//

      ஆமாம், சின்ன வயதில் சிறு கயிறு கொண்டு கட்டி இருப்பார்களாம், வளர்ந்தபின் சங்கிலி கொண்டு கட்டுவார்களாம். அது நினைத்தால் கயிறை, சங்கிலியை அறுத்து விட்டு போகலாம் ஆனால் பாகனின் அன்புக்கு கட்டுப்பட்டு நிற்கிறது.

      ஆச்சிரியம் தரும் தான் நமக்கு.

      பெரிய விலங்ககை கண்டு அதற்கு பயமில்லை என்பார்கள் தேணீ, எறும்பு கண்டால் பயம் என்பார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு