செவ்வாய், 3 ஜனவரி, 2023

புத்தாண்டு ஆலய தரிசனம்

புத்தாண்டுக்கு கோயில் போனோம் முதலில் சாய் கோயில் . அடுத்து பெருமாள், சிவன், கிருஷ்ணர், ராமர், இருக்கும் கோயில் .அங்கு எடுத்த படங்கள் இந்த பதிவில்.

புத்தாண்டு என்பதால் கோயிலில் கூட்டம் அதிகம். ஆரத்தி முடிந்தவுடன் அனைவருக்கும் பிரசாதங்கள் இனிப்புடன்  கலந்த சாதங்கள் பிரசாதமாக கிடைத்தது.

அடுத்து போன கோயில் பாரதீய ஏக்தா மந்திர்


பார்சுவ நாதர், மகாவீரர், ஆனந்த் சுவாமி என்று பேர் போட்டு இருக்கிறது. ஒரே இடத்தில் அனைத்து சுவாமிகளும் இருப்பது பக்தர்கள் வணங்க வசதியாக இருக்கிறது.




2017ல் போன போது எடுத்த படம் இது.
பிள்ளையார், சிவன், பார்வதி இருக்கிறார்கள்

                                                                                                                                                         

சிறிய மேஜையில் பெரிய பாத்திரத்தில் பாதாம், பிஸ்தா, வெள்ளிரிவிதை, உலர்ந்த திராட்சை கலந்த கலவை உள்ளது ஒரு குட்டி ஸ்பூன் போட்டு இருக்கிறார்கள், பக்தர்கள் பிரசாதம் எடுத்து கொள்ளலாம்.

                        

                                                       கிருஷ்ணர், ருக்மணி

                 

                                          லட்சுமணன், ராமர், சீதை

                                            மூன்று தேவியர்

மகாலக்ஷ்மி நேற்று எடுத்த படம்
                                   
2017ல் போன போது எடுத்த படம்
பெருமாள்

பெருமாளின் இருபக்கமும் இருக்கும் உற்சவர்கள்
  2017ல் போன போது எடுத்த படத்தில் நேரே நின்று எடுத்த படத்தில் உற்சவர்கள் தெரிகிறார்கள்.
நேற்று எடுத்த படம்

இன்று வைகுண்ட வாசல் திறப்புக்கு நேற்று அலங்காரம் செய்து வைத்து இருக்கும் அமைப்பு. மனதால் அந்த வாசலில் பெருமாளின் பின் போனது போல மனதால் தியானம் செய்து கொண்டேன்.இன்று காலை நேரடி ஒலிபரப்பாய் ஸ்ரீரங்கம், திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் தரிசனம் செய்து விட்டேன்.

கோயிலில் உணவு விடுதி இருக்கிறது. ஜனவரி முதல்தேதி இறைவனை வணங்கிவிட்டு  வடை, மசால் தோசை , சாதா தோசை, பூரி என்று வேண்டுமென்பதை ஆர்டர் செய்து காத்து இருந்து  சாப்பிட்டு வந்தோம்.

இன்று வைகுண்ட ஏகாதசி அன்று  விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் பெருமாளை   மனதால் நினைந்து அவன் புகழ் பாடிஎல்லோரும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்து விட்டேன்.

காலை ஆப்பம் செய்து தந்தார் மருமகள் சாப்பிட்டு விட்டு பதிவு போடுகிறேன்.

சிறுவயதில் விரதம்  இருந்து கணிவிழித்த் காலங்களை, மற்றும் மயிலாடுதுறையில் இருந்த போது வைகுண்ட ஏகாதசிக்கு  நாங்கூர் சென்று 11 திவ்ய தேசங்களை வழிபட்டு வந்ததை நினைத்துக் கொள்கிறேன்.

இங்கும் முந்தினநாள் பெருமாள் தரிசனம் செய்து விட்டேன்.

வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

---------------------------------------------------------------------------------------------------

23 கருத்துகள்:

  1. புத்தாண்டு கோவில் விசிட்டுகள் சிறப்பு.  அம்மாடி..   பெரிய பெரிய ஸ்வாமி விக்கிரகங்கள்..  பழைய வீட்டில் இருந்திருந்தால் பாஸ் நிறைய கோவில்களுக்குச் சென்று வந்திருப்பார்.  இங்கு அந்த வசதி இல்லை.  நடுவில் கொரோனா வருடங்களின் தடை வேறு...   ஒரே ஒரு கோவில் அதுவும் சிறிய கோவில் சென்று திரும்பினார்.  அது அவருக்கு ஒரு குறை.

    அந்த தோசை அப்படி கருப்பாக இருக்கக் கூடாது!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //புத்தாண்டு கோவில் விசிட்டுகள் சிறப்பு. அம்மாடி.. பெரிய பெரிய ஸ்வாமி விக்கிரகங்கள்.. //

      ஆமாம், எல்லாம் பெரிதாக அழகாய் இருந்தது.

      //பழைய வீட்டில் இருந்திருந்தால் பாஸ் நிறைய கோவில்களுக்குச் சென்று வந்திருப்பார். இங்கு அந்த வசதி இல்லை. நடுவில் கொரோனா வருடங்களின் தடை வேறு... ஒரே ஒரு கோவில் அதுவும் சிறிய கோவில் சென்று திரும்பினார். அது அவருக்கு ஒரு குறை.//

      நானும் மாயவரம் பற்றி சொல்லி கொண்டே தானே இருக்கிறேன். அது போல உங்கள் பாஸ் சொல்கிறார்கள்.

      //அந்த தோசை அப்படி கருப்பாக இருக்கக் கூடாது!!!!!!//

      ஆமாம், மகன் சரியாக சாப்பிடவில்லை, வீட்டுக்கு வந்து மருமகள் தோசை செய்து கொடுத்தார் .
      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
    2. ஹாஹாஹா ஸ்ரீராம் ஆமாம் பாஸ் எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க...எங்க உறவுக் கூட்டம் 89 வயசு என் சித்திப்பாட்டி குடும்பம் எல்லாரும் நவ திருப்பதி போனதைச் சொன்னேன் பாஸிடம் அப்ப இப்படித்தான் சொன்னாங்க!!!!

      விரதமும் பெரிசா இருக்கலைன்னு...

      கீதா

      நீக்கு
  2. வைகுண்ட ஏகாதசிக்கான பதிவு சிறப்பு.

    அனைத்து சன்னிதிகளையும் தரிசிக்க முடிந்தது. அதிலும் 2017ம் வருடம் எடுத்த படங்களையும் பத்திரமாக வைத்திருந்து அதையும் வெளியிட்டது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //வைகுண்ட ஏகாதசிக்கான பதிவு சிறப்பு.

      அனைத்து சன்னிதிகளையும் தரிசிக்க முடிந்தது. //

      ஆமாம். அதுதான் இந்த கோயிலின் சிறப்பு . மனதுக்கு நிறைவு கிடைக்கிறது.
      2017 ம் வருடம் எடுத்த படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  3. கோயிலிலேயே உணவுக்கான பெஉதி இருப்பதும் நல்லது. வெகுதூரம் பயணித்து வருபவர்களுக்கு உதவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயிலிலேயே உணவுக்கான பெஉதி இருப்பதும் நல்லது. வெகுதூரம் பயணித்து வருபவர்களுக்கு உதவி//

      ஆமாம் , வெகு தூரத்திலிருந்து வருபவர்களுக்கு உதவிதான். நல்ல மழை நேற்று கோயில் வந்தவர்கள் எல்லாம் சூடாய் வடை ஆர்டர் செய்து மகிழ்ச்சியாக மழையை ரசித்து கொண்டு சாப்பிட்டார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்க்ம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  5. கோயிலின் சுத்தம் மனதைக் கவர்ந்தது.. இங்கே இந்த மாதிரி பாரம்பரியக் கோயில்களைப் பராமரிக்கும் நாள் எந்த நாள்..

    அழகான படங்களுடன் பதிவும் அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      கோயிலின் சுத்தம் மனதைக் கவர்ந்தது.//

      ஆமாம்.

      அழகான படங்களுடன் பதிவும் அழகு..//

      நன்றி

      நீக்கு
  6. கோயில் வளாகத்தில் நவீன உணவகம் சிறப்பு..

    இப்படித்தான் இருக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் வளாகத்தில் நவீன உணவகம் சிறப்பு.//

      ஆமாம், வெகு தூரத்திலிருந்து வருபவர்களுக்கு பசியாற நல்ல வழி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      .

      நீக்கு
  7. கோமதிக்கா படங்கள் எல்லாம் வழக்கம் போல் அருமை.அங்குள்ள கோயில்கள் அனைத்தும் நல்ல சுத்தமாக இருக்கும் தான். பெரிதாக இருக்கு கோயில் பாபா கோயில்.

    பெருமாள் படங்கள் அம்மன் படம் எல்லாம் அழகு. கோயில் தரிசனம் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      //கோமதிக்கா படங்கள் எல்லாம் வழக்கம் போல் அருமை.//

      நன்றி.


      அங்குள்ள கோயில்கள் அனைத்தும் நல்ல சுத்தமாக இருக்கும் தான். //

      ஆமாம்.

      பெரிதாக இருக்கு கோயில் பாபா கோயில்.//

      ஆமாம், நல்ல பெரிதாக இருக்கிறது.

      நீக்கு
  8. அட! கோயிலில் உணவகம்.!!! ஆமாம் அங்கெல்லாம் இப்படி இருப்பது நல்ல விஷயம்தான்...

    கோயில் வளாகத்தில் மழை நீர் இருக்கிற்தே மழை பெய்தது இல்லையா?

    மிச்சிகனிலும் மகன் இருக்கும் பகுதியில் மழை என்று சொன்னான். பனி மழையா என்று கேட்டேன் இல்லை வழக்கமான மழை என்றான்.

    மழைக்கு அங்கு உணவு கிடைத்தது வசதியாக இருக்கும்....

    அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அட! கோயிலில் உணவகம்.!!! ஆமாம் அங்கெல்லாம் இப்படி இருப்பது நல்ல விஷயம்தான்.//

    ஆமாம், நம் உணவை விரும்பி சாப்பிடும் மற்றவர்களுக்கும் இது நல்லதுதான்.

    //கோயில் வளாகத்தில் மழை நீர் இருக்கிற்தே மழை பெய்தது இல்லையா?//

    காலை முதல் நல்ல மழை.

    //மிச்சிகனிலும் மகன் இருக்கும் பகுதியில் மழை என்று சொன்னான். பனி மழையா என்று கேட்டேன் இல்லை வழக்கமான மழை என்றான்.//
    ஆமாம், சில ஊர்களில் பனிபுயல் பனி மழை பெய்து இருக்கிறது.இங்கு காற்றும் , மழையும் மட்டும்.

    //மழைக்கு அங்கு உணவு கிடைத்தது வசதியாக இருக்கும்....//

    சூடாய் வடை எல்லோருக்கும் பிடித்த உணவு, மழைக்கு ஏற்றது.

    அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா//
    அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. புது வருட நாளில் கோவில் தரிசனம் சிறப்பு. தரிசித்து மகிழ்ந்தோம் .அழகிய படங்கள் .
    இனிய புது வருட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  11. புத்தாண்டு அன்று சிறப்பான தரிசனம். பெருமாளுக்கு அலங்காரம் அருமையாக உள்ளது. படங்களும் பகிர்வும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      முன்பு போல பதிவுகளுக்கு உங்கள் பின்னூட்டம் வருவது மகிழ்ச்சி. சிரம படுத்தி கொள்ளாதீர்கள். நல்ல ஓய்வும் பயிற்சியும் செய்து பூரண நலம் பெறவேண்டும். அழகான படங்கள் எடுத்து பகிர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
      இந்த ஆண்டு உங்களுக்கு நலமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. நல்லது கோமதிம்மா. எழுதுவதற்கு தற்சமயம் கைபேசியைதான் பயன்படுத்தி வருகிறேன். மடிக்கணினி உபயோகிக்க நாளாகும். பயிற்சிகள் செய்து வருகிறேன். மிக்க நன்றி.

      நீக்கு
    3. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      எழுதுவதற்கு தற்சமயம் கைபேசியைதான் பயன்படுத்தி வருகிறேன். மடிக்கணினி உபயோகிக்க நாளாகும். //
      அப்படியே செய்யுங்க.

      பயிற்சிகள் செய்து வருகிறேன்.//
      நல்லது தொடர்ந்து செய்து வாருங்கள்.
      விரைவில் நலம் பெறுவீர்கள்.

      நீக்கு