மலர்கோலங்கள் தொடர் பகுதி
//பூவே இளம் பூவே பூமியில் நானும் உன்னை போல் ஒரு நாள் மட்டும் வாழ்ந்தாலும் பாசமாய் சிரித்திட வேண்டும் நேசமாய் வாழ்ந்திட வேண்டும் மண்ணிலே மனமாக மனதளவில் நல்ல குணமாக.//
நன்றி- பூக்கள் கவிதை
மகன் வீட்டில் இன்று பூத்த ரோஜா ,
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
அருமை...
பதிலளிநீக்குமிகவும் பிடித்த பாடல்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்களுக்கு பிடித்த பாடலா மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நல்ல பாடல். எவ்வளவு டிசைனில் பூக்களை வைக்க முடிகிறது! எல்லாமே அழகு.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், பூக்கள் இருப்புக்கு ஏற்ற மாதிரி நமக்கு மனதுக்கு தோன்றியது போல வைக்கலாம்.
//எல்லாமே அழகு//
நன்றி ஸ்ரீராம்.
மிக அழகான மலர் அலங்காரம்!
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//மிக அழகான மலர் அலங்காரம்!//
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. மலர் கோலங்கள் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. முதல் படம் மலர்களினால் ஆன ஆரம் மிகவும் நன்றாக உள்ளது.தாங்கள் பொறுமையுடன் இணைத்த ஒவ்வொரு மலர் படங்களையும் ரசித்துப் பார்த்தேன்.
பூக்கள் கவிதை அருமை. உண்மை... அதைப்போல் நாமும் ஒருநாள் வாழ்ந்தாலும், அதற்கும், நமக்கும் பயனுள்ளதாக அது இருப்பதைப் போலவும், மன மகிழ்ச்சியுடன் அந்த ஒரு நாளை கழிக்கும் மனதுடனும் பிறந்து வாழ வேண்டும். அழகான கவிதை.
உங்கள் மகன் வீட்டில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாவும், செம்பருத்தியும், மனதை கவர்கிறது.
பகிர்ந்த பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். அர்த்தமுள்ள வரிகள். எனக்கு மிகப் பிடித்த பாடலும் கூட... இப்போதும் கேட்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. மலர் கோலங்கள் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது//
நன்றி.
கவிதை, மலர் கோலங்கள், பாடல், மற்றும் மகன் வீட்டுத் தோட்டத்து பூக்களை ரசித்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி.
போன பதிவை படித்தீர்களா?
உங்கள் உடல் நலம் தேவலையா?
ஊர்களுக்கு போய் வந்தபின் உடல் நிலை எப்படி இருக்கிறது?
வணக்கம் சகோதரி
நீக்குஉங்களின் சென்ற பதிவை இன்னும் படிக்கவில்லை. மன்னிக்கவும் சகோதரி. கண்டிப்பாக படிக்கிறேன். புது வருடம் வந்ததிலிருந்து எல்லோரின் எல்லா பதிவுகளுக்கும் ஏனோ முன்பு போல சரிவர வர இயலவில்லை.
இங்கு மகன் எல்லோரும் சேர்ந்து செல்ல வேண்டுமென மிகவும் ஆசைப்பட்டதால், கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஊருக்கெல்லாம் என் உடல் நலம் கொஞ்சம் நலமடைந்தவுடன் எப்படியோ அவர்களுடன் சென்று வந்து விட்டேன். பல கோவில்கள் தரிசனம் நல்லபடியாக கிடைத்தது மனதுக்கு மகிழ்வாக இருந்தது. ஆனால், வந்தவுடன், வீட்டு வேலைகள், பிரயாண அலைச்சலில் உடம்பு களைப்பு என ஒரு வார நாட்கள் விரைவாக ஓடுகிறது. அதனால் முறையாக தினமும் பதிவுலகத்திற்கு வரவில்லை. இன்று இப்போது கொஞ்சம் பரவாயில்லை. எனவே எல்லோரின் பதிவுகளை காண வந்து விட்டேன். இனி தங்களின் பதிவுகளை தவறாமல் தொடர்ந்து வருகிறேன் சகோதரி. உங்களின் அன்பான அக்கறையான விசாரிப்புகளுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உடன் வந்து பதில் சொன்னதற்கு நன்றி கமலா.
நீக்குகுடும்பத்தோடு கோயில்களை தரிசனம் செய்து வந்தது மகிழ்ச்சி.
இறை அருளால் உடல் பூரண நலம் அடைந்து முன்பு போல பணிகள் செய்ய வாழ்த்துகள்.
பிராயண களைப்புடன் பதிவுகளை பார்த்து விரிவான கருத்துக்கள் கொடுப்பது மகிழ்ச்சி.
ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். பதிவுகளை எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம் .
படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குகாணொளிப் பாடல் என்றும் பிடித்த பாடல்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை , பாடலை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ஊருக்கு போய் விட்டு வந்து விட்டீர்களா?
போன பதிவை படிக்கவில்லை என்றதும் ஊரில் இல்லை என்று நினைத்தேன்.
மலர்க் கோலங்கள் எல்லாமும் மிக மிக அழகு..
பதிலளிநீக்குஇப்படியான
மலர் அலங்காரங்களைப் பார்த்து மகிழ்ந்திருந்தாலே மனதிற்கு அயர்ச்சி என்று ஏதும் இல்லை..
இறைவனின் படைப்பினில் தான் எத்தனை எத்தனை அழகு...
வாழ்க நலம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//மலர்க் கோலங்கள் எல்லாமும் மிக மிக அழகு..//
நன்றி.
//இப்படியான
மலர் அலங்காரங்களைப் பார்த்து மகிழ்ந்திருந்தாலே மனதிற்கு அயர்ச்சி என்று ஏதும் இல்லை..//
மலர்களை பார்த்தாலே மனதுக்கு மகிழ்ச்சி, மேலும் இது போல வடிவங்களில் மலர் கோலங்கள் போட்டதும் மன அமைதி ஏற்படுகிறது.
//இறைவனின் படைப்பினில் தான் எத்தனை எத்தனை அழகு...//
ஆமாம், இறைவனின் படைப்பில் எல்லாம் அழகு.
வாழ்க நலம்..//
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
கோமதிக்கா பூக்கள் வடிவங்கள் உங்கள் கற்பனை மிக அருமை. எல்லா வடிவங்களுமே அழகு. மாலை போன்றது செமையா இருக்கு
பதிலளிநீக்குபூக்கள் பங்களும் அழகு.
பாடல் மிகவும் அருமையான பாடல். ரசித்ததுண்டு
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா பூக்கள் வடிவங்கள் உங்கள் கற்பனை மிக அருமை. எல்லா வடிவங்களுமே அழகு. மாலை போன்றது செமையா இருக்கு//
நன்றி.
பூக்கள் பங்களும் அழகு.//
பூக்கோலங்களை, பூக்களை, பாடலை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
மலர் கோலங்கள். பாடல்கள் என பகிர்வு ரசனை.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குகோலங்களை , பாடலை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.