நம் நாட்டிலும் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல்விழா சிறப்பாக நடந்து இருக்கிறது. செய்திகளில் பார்த்தேன்.
தமிழ் படிக்கும் மழலைகள்
மகனும் பேரனும்
ஜல்லிக்கட்டு காளையுடன்
ஆசிரியர்களும் மாணவிகளும் கும்மி பாட்டு பாடி கும்மி அடித்தார்கள்
மகிழ்ச்சியாக பொங்கல் விழாவை கொண்டாடினர்
தமிழ் படிக்கும் குழந்தைகள், பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகிறோம், என்பதை சொன்னார்கள். விழா சிறப்பாக நடந்தது. அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கினார்கள்.
திருமங்கலத்திலிருந்து வந்து இருந்த கத்தோலிக்க திருச்சபை தந்தை ஜான் கென்னடி அவர்கள்.
அவர் அருட்பணி பணியாற்ற ஆரம்பித்து 25 வருடம் ஆகி விட்டதாம். அதற்கு அவர் தம்பி கத்தோலிக்க திருச்சசபையில் விழா நடத்தினார். நாங்கள் எல்லாம் கலந்து கொண்டோம்.
அவர் தம்பி அருள் அவர்கள் தமிழ் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அருட் தந்தையை பொங்கல் விழாவிற்கு அழைத்து வந்தார். அவரும் மகிழ்வாக கலந்து கொண்டார்.
நிறைய பேர் காளையுடன் நின்று படம் எடுத்துக் கொண்டார்கள். மகனின் நண்பரின் மகன் தமிழ்பள்ளியில் படிக்கும் மழலை ஜல்லிகட்டு காளை கழுத்து மணியை பிடித்து கொண்டு வீரமாய் நிற்கிறான்.
"காளையை அடக்கிட்டோமில்ல" என்று சொல்கிறார். அவர்கள் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில். குட்டி பையன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் குழந்தைகள் பெரியவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், கும்மி , பாட்டு என்று பொங்கல்விழா சிறப்பாக நடத்தது. சுட்டி பையன் நடனம், பாட்டு என்று அனைத்து கலையிலும் சிறந்து விளங்குகிறான்.
நிறைய நடனம் ஆடினான்.
எங்கள் மகன் வீட்டில் நடந்த பொங்கல் பண்டிகை அடுத்த பதிவில்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------
சிறப்பான படங்களுடன் அரிசோனா பொங்கல் விழாவைக் கண் முன் நிறுத்தி விட்டீர்கள்..
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
வாழ்க நலம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//சிறப்பான படங்களுடன் அரிசோனா பொங்கல் விழாவைக் கண் முன் நிறுத்தி விட்டீர்கள்..//
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு காளை தத்துரூபம். அந்தச் சிறுவன் காளையுடன் எடுத்த படத்தை வீட்டிலும் வைத்து போஸ் கொடுத்திருப்பது ஹைலைட் :)!
பதிலளிநீக்குதந்தையைப் போலவே தங்கள் மகன் வரைந்திருக்கும் சூரியன் மற்றும் பொங்கல் வாழ்த்து மிக நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள்.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு காளை தத்துரூபம். அந்தச் சிறுவன் காளையுடன் எடுத்த படத்தை வீட்டிலும் வைத்து போஸ் கொடுத்திருப்பது ஹைலைட் :)!//
அந்த சிறுவனின் அப்பாவுக்கும் என் மகனை போலவே எல்லாவற்றிலும் ஆர்வம் உண்டு. நடனம், ஓவியம், சிலைகள் செய்வது , பாடுவது என்று ஆல்ரவுண்டர். அது போலவே குழந்தையும். படத்தை உடனே வீட்டில் வைத்து அதற்கு வாசகம் கொடுத்து நாங்கள் போனபோது அதன் முன் நின்று போட்டோ எடுத்து விட்டான்.நாங்கள் எல்லோரும் அந்த படத்தின் முன் நின்று ப்டம் எடுத்து கொண்டோம்.
//தந்தையைப் போலவே தங்கள் மகன் வரைந்திருக்கும் சூரியன் மற்றும் பொங்கல் வாழ்த்து மிக நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள்.//
காளை தத்துரூபாக வருவதற்கு நிறைய உழைத்தான் மகன். சூரியன் முன்பே வரைந்த படம், முன்பு சூரியத் தேர் செய்து இருந்தான் ஒரு பொங்கலுக்கு அந்தில் உள்ள சூரியன். முன்பு பழைய பதிவில் சூரிய தேர் பதிவு செய்து இருக்கிறேன்.
உங்கள் வாழ்த்தையும், பாராட்டையும் மகனிடம் சொல்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
அங்கும் சிறப்பாகப் பொங்கல் விழா நடந்தது கண்டு மகிழ்ச்சி கோமதிக்கா.
பதிலளிநீக்குஅங்கு தமிழர்கள் இருக்கும் பகுதிகளில் எல்லாம் இப்படி நடப்பதுண்டு.
மகன் செய்திருக்கும் காளை அச்சு அசலாக இருக்கிறது. பாராட்டுகள். ரொம்ப அழகாக வடிவமைத்திருக்கிறார்.
மகனும் பேரனும் நிற்கும் படங்கள், பேரன் காளையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் படங்கள் எல்லாமே அருமை,
கும்மி அடிச்சு பாட்டுப் பாடி கொண்டாடியது ரொம்பவே சுவாரசியமா இருந்திருக்கும் உங்களுக்கு. நம்மூர்ல இருந்தாப்ல போலவே இருந்திருக்கும்
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அங்கும் சிறப்பாகப் பொங்கல் விழா நடந்தது கண்டு மகிழ்ச்சி கோமதிக்கா.//
ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழ் பள்ளி நடக்கும் அந்த சமயத்தில் பொங்கல் விழாவை சிறப்பாக நடத்தி விட்டார்கள்.
//அங்கு தமிழர்கள் இருக்கும் பகுதிகளில் எல்லாம் இப்படி நடப்பதுண்டு.//
எல்லா மொழி பேசுபவர்களும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள் கீதா. சிறுவன் படம் போட்டு இருக்கிறேன் அல்லவா அவர்கள் செளராஷ்டிரா அவர்களும் தோட்டத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.
//மகன் செய்திருக்கும் காளை அச்சு அசலாக இருக்கிறது. பாராட்டுகள். ரொம்ப அழகாக வடிவமைத்திருக்கிறார்.//
நன்றி கீதா மகனிடம் சொல்கிறேன்.
மகனும் பேரனும் நிற்கும் படங்கள், பேரன் காளையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் படங்கள் எல்லாமே அருமை,//
நன்றி.
//கும்மி அடிச்சு பாட்டுப் பாடி கொண்டாடியது ரொம்பவே சுவாரசியமா இருந்திருக்கும் உங்களுக்கு. நம்மூர்ல இருந்தாப்ல போலவே இருந்திருக்கும்//
ஆமாம் கீதா.
தமிழ் கற்கும் குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துகள். அங்கு இப்படிப் பெற்றோர் சேர்ந்து தங்கள் குழந்தைகளத் தமிழ் கற்க வைப்பது மகிழ்ச்சியான விஷயம். முன்னரும் சொல்லியிருக்கீங்க நினைவு இருக்கு. பேரன் பரிசு வாங்கியது எல்லாம்
பதிலளிநீக்குபொங்கல் போட்டிகள் நடக்கலையோ?
கீதா
//தமிழ் கற்கும் குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துகள். அங்கு இப்படிப் பெற்றோர் சேர்ந்து தங்கள் குழந்தைகளத் தமிழ் கற்க வைப்பது மகிழ்ச்சியான விஷயம்.//
நீக்குகுழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க அழைத்து கொண்டு விடுவதுடன், கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிவது மேலும் மகிழ்ச்சியான விஷயம்.
வெகுதூரத்திலிருந்து கொண்டு வந்து விட்டு அழைத்து போக வேண்டும். விடுமுறை நாளில் வீட்டு வேலைகள் எவ்வளவு இருக்கும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்து அழைத்து வருகிறார்கள்.
பெற்றோர்களின் உழைப்பும் , கவனிப்பும் இருப்பதால் தான் சாத்தியம் ஆகிறது.
டிசம்பர் , மார்ச் மாதம் பேச்சு போட்டிகள் நடக்கும். டிசம்பர் பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறான். அதை ஒரு நாள் பகிர்கிறேன் கீதா.
குட்டிப் பையன் செம க்யூட்.
பதிலளிநீக்குதந்தை ஜான் கென்னடிக்கான நிகழ்வு, அதில் நீங்கள் கலந்து கொண்டது எல்லாம் நிறைவான மகிழ்வான விஷயங்கள்.
பொங்கல் விழா நல்லபடியாக சிறப்பாக மகிழ்வாக நடந்து முடிந்திருக்கிறது!!
மகன் தயாரித்த வாழ்த்து சூரியன் எல்லாமே சூப்பர். பாராட்டுகள் வாழ்த்துகள் சொல்லிடுங்க கோமதிக்கா..
படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன
கீதா
குட்டிப் பையன் செம க்யூட்.//
நீக்குஆமாம்.
//தந்தை ஜான் கென்னடிக்கான நிகழ்வு, அதில் நீங்கள் கலந்து கொண்டது எல்லாம் நிறைவான மகிழ்வான விஷயங்கள்.//
ஆமாம், மிகவும் நல்ல பொழுதாக அன்று போனது.
நிறைவான மகிழ்வான பொழுதுதான்.
அதிலும் குழந்தைகள் பாடி ஆடினார்கள். தமிழ் கிறிஸ்த்துவ குடும்பங்கள் கலந்து கொண்டார்கள். தமிழ் பள்ளி, தமிழ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அதனால் இனிமையாக போனது.
சமயம் கிடைக்கும் போது அதையும் பதிவு போட எண்ணம்.
//பொங்கல் விழா நல்லபடியாக சிறப்பாக மகிழ்வாக நடந்து முடிந்திருக்கிறது!!//
எங்கள் வீட்டிலும் நன்றாக பொங்கல் நிறைவு பெற்றது. காலை முதல் மழை. மழை விட்டதும் பொங்கல் வைத்தோம் தோட்டத்தில்.
//மகன் தயாரித்த வாழ்த்து சூரியன் எல்லாமே சூப்பர். பாராட்டுகள் வாழ்த்துகள் சொல்லிடுங்க கோமதிக்கா..//
சொல்லி விடுகிறேன் கீதா.
உங்களின் மகிழ்வான அனைத்து கருத்துக்களுக்கும், நன்றி.பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. அங்கு தங்கள் வீட்டிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக நடைபெற்றதா? அரிசோனா தமிழ் பள்ளியில் நடந்த பொங்கல் விழா படங்களுடன் நன்றாக உள்ளது.
பள்ளி விழாவிற்கு தங்கள் மகன் செய்த பொங்கல் விழா வாழ்த்து, சூரியன் பொங்கல் பானை படங்கள் (அது ஒருவேளை உண்மையான பொங்கல் பானையோ..? ) ஜல்லிக்கட்டு காளை எல்லாமே மிக அழகாக இருக்கிறது. காளை நிஜமான காளை போல் என்ன ஒரு கம்பீரம்...! எப்படி இப்படி செய்தார் என பார்த்து வியப்படைந்தேன் . என் மனம் நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவரிடம் தெரிவியுங்கள்.
தங்கள் மகனும், பேரனும் காளையுடன் நிற்கும் படங்கள், பேரன் காளையை அடக்குவது போல் அதன் கொம்பை பற்றியபடி தரும் படங்கள் நண்பரின் மகன் காளையுடன் நிற்கும்படியான படங்கள் எல்லாமே நிறைவாக உள்ளது.
அங்கு பயிலும் மாணவ மாணவிகள், கும்மி பாட்டு பாடி ஆடியும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியதும் எல்லாமே நீங்கள் பகிர்ந்துள்ள படங்களையும், தந்திருக்கும் விபரங்களையும், பார்த்து படிக்கும் போது, விழாவை நானும் நேரில் பார்த்தது போன்ற நிறைவை தந்தது. அனைத்துப் படங்களும் நன்றாக உள்ளது.
அங்கு வருகை தந்திருக்கும் கத்தோலிக்க நண்பர் அவர்களது விழாவிற்கு அழைத்தற்கு நீங்கள் சென்றதும், அவர் இங்கு வந்து பொங்கல் பண்டிகை விழாவில் கலந்து கொண்டதும் மனித நேயத்தை காட்டுகிறது. திருமங்கலம் என்றால், மதுரை திருமங்கலமா ? அங்கு நாங்கள் வசித்த போது ஒரு கிறிஸ்துவ பள்ளியில்தான் என் மகள் பத்தாவது வரை படித்தாள். அவள் படித்த பள்ளி விழாக்கள் நினைவுக்கு வந்தன. அடுத்து தங்கள் மகன் வீட்டு பொங்கல் விழாவை காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"தங்கள் பேரன் காளையை அடக்குவது போல காளையின் கொம்புகளை பற்றியபடி இருக்கும் படங்கள்" என வந்திருக்க வேண்டும்.. ஏதோ தட்டச்சு பிழை பொருளை தவறாக கொண்டு வந்து விடுகிறது. மன்னிக்கவும். நன்றி சகோதரி.
நீக்குவணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமையாக உள்ளது. அங்கு தங்கள் வீட்டிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக நடைபெற்றதா? அரிசோனா தமிழ் பள்ளியில் நடந்த பொங்கல் விழா படங்களுடன் நன்றாக உள்ளது.//
நன்றி.
எங்கள் வீட்டிலும், பள்ளியிலும் சிறப்பாக நடந்தது.
//பள்ளி விழாவிற்கு தங்கள் மகன் செய்த பொங்கல் விழா வாழ்த்து, சூரியன் பொங்கல் பானை படங்கள் (அது ஒருவேளை உண்மையான பொங்கல் பானையோ..? ) ஜல்லிக்கட்டு காளை எல்லாமே மிக அழகாக இருக்கிறது. காளை நிஜமான காளை போல் என்ன ஒரு கம்பீரம்...! எப்படி இப்படி செய்தார் என பார்த்து வியப்படைந்தேன் . என் மனம் நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவரிடம் தெரிவியுங்கள்.//
அவனுடைய ஆர்வமும், உங்கள் எல்லோர் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் அவனுக்கு ஊக்கம் தரும் மேலும் இது போல செய்ய .
கண்பதி கோயிலில் நடக்கும் விழாக்களுக்கும் மகனை செய்து தர சொல்கிரார்கள். மார்கழி ஐயப்பன் இருமடி கட்டும் விழாவிற்கு ஐயப்பனின் படம் செய்து தர சொன்னார்கள் கட் அவுட போல செய்து கொடுத்தான், அதை எடுத்து கொண்டு பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்து இருமுடி கட்டி கொண்டார்கள் பக்தர்கள்.
அதில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த கோயில் வெகு தூரத்தில் இருக்கிறது, அது மட்டுமல்ல தமிழ் பள்ளி பொங்கல் விழா சமயம் வைத்தார்கள் அதனால் கலந்து கொள்ள முடியவில்லை.
//தங்கள் மகனும், பேரனும் காளையுடன் நிற்கும் படங்கள், பேரன் காளையை அடக்குவது போல் அதன் கொம்பை பற்றியபடி தரும் படங்கள் நண்பரின் மகன் காளையுடன் நிற்கும்படியான படங்கள் எல்லாமே நிறைவாக உள்ளது.//
நன்றி.
விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் காளையின் பக்கம் நின்று ஆசையாக எடுத்து கொண்டார்கள்.
//அங்கு பயிலும் மாணவ மாணவிகள், கும்மி பாட்டு பாடி ஆடியும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியதும் எல்லாமே நீங்கள் பகிர்ந்துள்ள படங்களையும், தந்திருக்கும் விபரங்களையும், பார்த்து படிக்கும் போது, விழாவை நானும் நேரில் பார்த்தது போன்ற நிறைவை தந்தது. அனைத்துப் படங்களும் நன்றாக உள்ளது.//
நன்றி.
எல்லோரும் மகிழ்வாக கும்மி அடித்து பாடி ஆடியது மகிழ்ச்சி அலையை பரப்பும் விஷயம்.
//அங்கு வருகை தந்திருக்கும் கத்தோலிக்க நண்பர் அவர்களது விழாவிற்கு அழைத்தற்கு நீங்கள் சென்றதும், அவர் இங்கு வந்து பொங்கல் பண்டிகை விழாவில் கலந்து கொண்டதும் மனித நேயத்தை காட்டுகிறது.//
இஸ்லாமிய குடும்பமும் கலந்து கொண்டார்கள் காளையுடன் படம் எடுத்து கொண்டார்கள்.
மத நல் இணக்க பண்டிகைதானே! பொங்கல் விழா. உழவருக்கும், சூரியனுக்கும் நடத்தும் நன்றி தெரிவித்தல் பண்டிகை அல்லவா?
திருமங்கல திரிச்சபையிலும் விழா நடக்குமாம் தந்தை சொன்னார்.
//திருமங்கலம் என்றால், மதுரை திருமங்கலமா ? அங்கு நாங்கள் வசித்த போது ஒரு கிறிஸ்துவ பள்ளியில்தான் என் மகள் பத்தாவது வரை படித்தாள். அவள் படித்த பள்ளி விழாக்கள் நினைவுக்கு வந்தன.//
ஆமாம், மதுரை திருமங்கலம்தான். நீங்கள் சொல்லும் பள்ளியாகத்தான் இருக்கும் அதில் இவர் பிரின்ஸ்பாலாக இருக்கிறார் என்று சொன்னார்.
இவர் தம்பி மகனுக்கு குடும்ப நண்பர் தமிழ் பள்ளி ஆசிரியர். நம் வீட்டு கொலுவிற்கு வந்து பாடல்கள் பாடுவார்.அண்ணனுக்கு நடத்திய விழாவிற்கும் மகன் வரவேற்பு அலங்காரம் செய்து கொடுத்தான்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
கமலா சில தட்டச்சு பிழைகள் வரும் தான். சில நேரம் சரிபார்த்து அனுப்புவோம், சில நேரம் அவசரமாக அனுப்பி விடுவோம்.
பதிலளிநீக்குஎனக்கும் பிழைகள் இப்போது வருகிறது. எப்படித்தான் ஒருமுறைக்கு இருமுறை பிழை பார்த்தாலும் வந்து விடுகிறது, மன்னிப்பு எல்லாம் கேட்காதீர்கள்.
தங்களது மகனையும் பெயரன் கவினையும் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி..
பதிலளிநீக்குவாழ்க பல்லாண்டு..
//தங்களது மகனையும் பெயரன் கவினையும் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி..//
நீக்குநன்றி.
வாழ்க பல்லாண்டு..//
நன்றி மீன்டும் வந்து கருத்து சொன்னதற்கும், வாழ்த்துக்கும் நன்றி.
குழந்தைகள் அசத்துகிறார்கள் அம்மா... மகிழ்ச்சி...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குகுழந்தைகள் திருக்குறள் சொல்லும் போதேல்லாம் உங்களை நினைத்து கொள்வேன், கேட்டால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவீர்கள் என்று,
உங்கள் கருத்துக்கு நன்றி.
பார்க்கவும், படிக்கவும் மனதுக்கு நிறைவாக உள்ளது. காளை மிக அருமை/ அனைவரும் ஆவலுடன் படம் எடுத்துக் கொண்டது ஆச்சரியமே இல்லை. எல்லாமே சிறப்பாக நடந்திருக்கிறது. குழந்தைகள் ஆர்வத்துடன் நம் கலாசாரங்களைக் கற்றுக் கொள்வதும் போற்றத்தக்கது.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குபார்க்கவும், படிக்கவும் மனதுக்கு நிறைவாக உள்ளது. காளை மிக அருமை/ அனைவரும் ஆவலுடன் படம் எடுத்துக் கொண்டது ஆச்சரியமே இல்லை.//
நன்றி.
எல்லாமே சிறப்பாக நடந்திருக்கிறது. குழந்தைகள் ஆர்வத்துடன் நம் கலாசாரங்களைக் கற்றுக் கொள்வதும் போற்றத்தக்கது.//
ஆமாம், பிள்ளைகள் ஆரவத்தையும் ,அதற்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
குழந்தைகள் படங்கள் மிகவும் அழகாக மகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிலளிநீக்குபெயரன் கவினுக்கு வாழ்த்துகள்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//குழந்தைகள் படங்கள் மிகவும் அழகாக மகிழ்ச்சியாக இருக்கிறது.//
ஆமாம், குழந்தைகளை பார்த்தால் நமக்கு மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்தான்.
//பெயரன் கவினுக்கு வாழ்த்துகள்.//
நன்றி.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது சிறப்பு. எங்கள் அலுவலகத்தில் கூட பிரிவு வாரியாக அனைவரும் பொங்கலுக்கு முன்னும் பின்னும் பொங்கல் விழா கொண்டாடியது ஆச்சர்யம். என் முந்தைய அலுவலகத்தில் இந்த நடைமுறையை நான் பார்த்ததில்லை. அந்தந்த தேதியில் சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரும் வேஷ்டி சட்டையில் வந்திருந்தனர்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது சிறப்பு. எங்கள் அலுவலகத்தில் கூட பிரிவு வாரியாக அனைவரும் பொங்கலுக்கு முன்னும் பின்னும் பொங்கல் விழா கொண்டாடியது ஆச்சர்யம். என் முந்தைய அலுவலகத்தில் இந்த நடைமுறையை நான் பார்த்ததில்லை.//
ஓ! உங்கள் அலுவலகத்திலும் கொண்டாடியது சிறப்பு.
எல்லோரும் வேஷ்டி சட்டையில் வந்தது சிறப்புதான். தங்கை பேரன் படிக்கும் பள்ளியில் பசங்கள் வேஷ்டி சட்டையில், பெண் குழந்தைகள் பட்டு பாவாடை சட்டையில் வர வேண்டும் என்றார்களாம்.
எல்லா குழந்தைகளும் அப்படி உடை அணிந்து வந்து பொங்கல் விழாவை கொண்டாடி இருக்கிறார்கள்.
உறியடி, கும்மி, விளையாட்டு போட்டிகள் என அனைத்தும் நடந்து இருக்கிறது.
மகன் செய்த காலை பிரமாதம். அசலாக இருக்கிறது. பேரனும் மகனும் வேஷ்டி சட்டையில் கலக்குகிறார்கள். படங்களும் நிகழ்வுகளும் சிறப்பு.
பதிலளிநீக்கு//மகன் செய்த காலை பிரமாதம். அசலாக இருக்கிறது.//
நீக்குநன்றி.
//பேரனும் மகனும் வேஷ்டி சட்டையில் கலக்குகிறார்கள். படங்களும் நிகழ்வுகளும் சிறப்பு.//
மகன் செய்த காளை மற்றும் பதிவை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.
காளை காலையாகி விட்டதற்கு மன்னிக்கவும்!!!
நீக்குதட்டச்சு பிழைக்கு எதற்கு மன்னிப்பு?
நீக்குதமிழ்பள்ளியின் பொங்கல் விழா கொண்டாட்டம் அருமை.
பதிலளிநீக்குமகன் செய்த காளை மிகவும் நன்றாக உள்ளது குழந்தைகள் படம் எடுத்து மகிழ்வது சிறப்பு.
அழகிய படங்களுடன் மகிழ்ச்சியான விழா.
வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்
நீக்கு//தமிழ்பள்ளியின் பொங்கல் விழா கொண்டாட்டம் அருமை.
மகன் செய்த காளை மிகவும் நன்றாக உள்ளது குழந்தைகள் படம் எடுத்து மகிழ்வது சிறப்பு.
அழகிய படங்களுடன் மகிழ்ச்சியான விழா.//
குழந்தைகள் ,பெரியவர்கள் எல்லாம் காளையோடு படம் எடுத்து கொண்டார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.