சனி, 14 ஜனவரி, 2023

தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!

உடல் நலம் காப்போம் நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் - குறள். தற்போது அதிகமாகி வரும் சர்க்கரை நோய் பற்றி தினமணி மருத்துவமலர்( 2001) கூறிய சில கருத்துக்களை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன் மக்களிடம் சர்க்கரை நோய் உள்பட எந்த நோயாக இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு அவசியம் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. 

 சர்க்கரை நோய்ச் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க் கல்வித் துறை என்ற தனிப் பிரிவே செயல்படுகிறது சர்க்கரை நோயாளிகளின் மாத்திரை அளவு குறைய வேண்டுமென்றால் தினமும் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி,செய்யவேண்டும்.இப்படி செய்தால் உடலில் உள்ள இன்சுசிலின் நன்றாக வேலை செய்யும்.

ரத்தஓட்டம் அதிகரிக்கும், உடல் எடை இயல்பான அளவுக்குக் குறையும், இதயத்துக்குத் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டரால் (எல்டிஎல்) குறைக்கும்,நல்லகொலஸ்டரால்(எச்டிஎல்) அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறையும், நன்றாக தூக்கம் வரும்.உணவு எளிதில் ஜீரணமாகும். மொத்தத்தில் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.

 உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிஷங்கள் உங்களைத் தயார்ப் ப்டுத்திக் கொள்ளுங்கள். இதேபோன்று உடற்பயிற்சியை முடித்தவுடன் 5 முதல் 10 நிமிஷங்கள் இளைப்பாறுங்கள். 

 தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள். முடிந்தவரை வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள். நடந்து செல்லும்போது நீண்ட வழியையே தேர்வு செய்யுங்கள். லிஃப்ட்டில் செல்லாமல் மாடிக்குப் படி ஏறிச்செல்லுங்கள். கடைக்குச் செல்லும் போது வாகனங்களைச் சிறிது தொலைவிலே நிறுத்திவிட்டு மீதித் தொலைவை நடந்து செல்லுங்கள். 

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தாழ் சர்க்கரை நிலை காரணமாகத் தலை சுற்றல், மயக்கம் ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் கடைப் பிடிக்கவேண்டியவை: கையில் எப்போதும் சாக்லேட்,மிட்டாய் வைத்துக் கொள்ளுங்கள்.

 சர்க்கரை நோய் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சியின்போது நெஞ்சில் வலி அல்லது அசௌகரியம் ஏற் பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்திவிடுங்கள். இவ்வாறு அம்மலர் கூறுகிறது.

 இனி, வெண்டைக்காய் விஷயத்திற்கு வருகிறேன். தமிழ் நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக ஒன்பதாவது மாநில மாநாட்டு மலரில் வெண்டைக்காய் பற்றி Dr. N.செல்லையா அவர்கள் எழுதி இதைப் படித்தவர்கள் நகல் எடுத்துப் பலருக்கும் கொடுத்தால் பெரும் தொண்டு! தேவைப் பட்டவர்கள் கேட்டுப் பின்பற்றிப் பயன் அடைந்தால் நல வாழ்வு என்று எழுதியிருந்தார். 

அதை நான் இங்கு தருகிறேன். நீங்களும் இதைப் படித்து மற்றவர்களுக்கு சொல்லலாம். // ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள். மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரை டம்ளர் தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள் .காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக வெண்டைக்காய் துண்டங்களை வெளியே எடுத்துப்போட்டுவிட்டு அந்த தண்ணீரைக் குடியுங்கள்.

 (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ வேறு எதுவும் அருந்த வேண்டாம்.) எதற்கு இது? இப்படிக் குடித்து வந்தால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள ச்ர்க்கரை இரண்டே வாரங்களில் மளமள என்று இறங்கிவிடும் என திரு.பி.எஸ் பஞ்சநாதன் அவர்கள் தன் நண்பர் புகழ்மிக்க எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.

 இதனை திரு.ரா.கி.ர அண்ணாநகர் டைம்ஸ் பத்திரிக்கையில் நாலு மூலைப் பகுதியில் வெள்யிட்டுள்ளார். அப்பத்திரிக்கைக் குறிப்பில் மேலும் கூறியுள்ள செய்திகள் யாவை தெரியுமா? இதோ: தன் சர்க்கரை லெவல் இற்ங்கிவிட்டதாகவும் தன் சகோதரி இன்சுசிலின் ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்தி விட்டதாக்வும் இப்பொழுது அவர்கள் பழம், ஐஸ்கிரீம் எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள் எனவும் இன்சுலின் பக்கம் போவதில்லை எனவும் திரு.பி.எஸ்.பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.

 தினம் ஒரு வெண்டைக்காய் தானே செலவு. திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்கள் மேலும் எழுதியுள்ளது: நானும் என் ம்னைவியும் நீரிழிவு நோயளிகள்தான். 190 மிலிகிராமுக்கும் சற்று மேலோ,கீழோ இருந்து வருகிறது. சில் சமயங்களில் 230 வரை எகிரி விடும் நண்பர் பஞ்சநாதனின் இமெயில் கிடைத்த மறுதினம் முதல் இரவில் வெண்டைக்காய் தண்ணீர் வைத்து காலையில் குடித்து வருகிறோம், 15 நாட்கள் சென்றபின் இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தபோது என்ன ஆச்சிரியம்! எனக்கு 60 இறங்கி இருக்கிறது என் மனைவிக்கு 30 இறங்கி இருக்கிறது. புதிதாக ஏதாவது மாத்திரை மருந்து சாப்பிட்டோமா என்றால் அறவே கிடையாது. பல வருடங்களாக 3 வேளைகளும் எதை விழுங்கி வருகிறோமோ அதே மாத்திரைகள்தாம். உணவில் கட்டுப்பாடா என்றால் புதிதாக அப்படி ஒன்றும் இல்லை. வாடிக்கையான உணவுதான். ஆகவே இந்த அதிசயம் வெண்டைக்காய் வைத்தியத்தினால் மட்டுமே நடந்திருக்கிறது என்று திடமாக நம்புகிறேன். 

 இந்த மருந்தைத் தொடர்ந்து அருந்தவும் தீர்மானித் திருக்கிறேன்.இதைப் படிப்பவர்கள் பின்பற்றிப் பாருங்கள். பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே இல்லாத வைத்தியம்.ஆனால் ஒன்று,வெண்டைக்காய்த் தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு சாதா தண்ணீர் குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும். அல்லது ஒரு திராட்சைப் பழத்தை மெல்லலாம். இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி வரவேண்டும்?எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா?ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி எல்லாம் பல அன்பர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.

 மாதத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுவது அவசியம்.அந்த ரிபோர்ட்டைத் தகுந்த டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத் தொடரலாமா?அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள லாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி செய்யுங்கள்-என அறிவுறுத்தியுள்ளார் திரு.ரா.கி.ர அவர்கள். நன்றி: திரு.தி.எஸ்.பஞ்சநாதன், எழுத்தாளர் திரு.ரா.கி. ரங்கராஜன (இ.மெயில் முகவரி:rankamala @ yahoo.co.in) அண்ணா நகர் டைம்ஸ்-ஏப்ரல் 19-25,2009 மற்றும் ஏப்ரல் 26-மே2,2009.// நம் வீட்டுத் தோட்டங்களில் இயற்கை உரமிட்ட வெண்டைக்காய் கிடைத்தால் இன்னமும் நல்லது. வாழ்க நலமுடன். வாழ்க வளமுடன்.


42 கருத்துகள்:

  1. மிக நல்ல பகிர்வு. சர்க்கரை வியாதியால் சங்கடப்படும் எனக்குத் தெரிந்தவர்களுடன் நிச்சயம் இத்தகவலை பகிர்ந்திடுவேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கோமதி மேடம் அடுத்த அதிரடி பதிவு என்ன எழுத போறாங்கன்னு வெயிட் பண்ணி பார்த்தேன்... இதோ எழுதிட்டாங்க...

    மற்றுமொரு நல்ல விஷயத்தை பற்றி... மேடம்... கலக்கறீங்க...

    வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கு நல்லது, குழந்தைகளுக்கு சிறு வயது முதல் பழக்கப்படுத்துங்கள் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன்... இந்த சர்க்கரை குறைப்பு மேட்டர் எனக்கு புதுசு கண்ணா புதுசு...

    எனிவே... வாழ்த்துக்கள் மேடம்...

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராமலக்ஷ்மி,
    நலமா?
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வாங்க கோபி,

    நானும் என் குழந்தைகளுக்கும்,பேரக்குழந்தை
    களுக்கும் நல்ல கணக்கு வ்ரும்
    வெண்டைக்காய் சாப்பிட்டால் என்று
    கொடுப்பேன். எனக்கும் இது புது
    செய்தி தான் அதனால் தான் இதைப்
    பகிர்ந்து கொண்டேன்.

    வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. // ராமலக்ஷ்மி said...

    மிக நல்ல பகிர்வு. சர்க்கரை வியாதியால் சங்கடப்படும் எனக்குத் தெரிந்தவர்களுடன் நிச்சயம் இத்தகவலை பகிர்ந்திடுவேன். நன்றி.//

    வழிமொழிகிறேன்! :-)

    பதிலளிநீக்கு
  6. முல்லை,
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மிகவும் தேவையான பதிவு அம்மா. நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  8. கீதா ரெங்கன் பதிவுக்கு சுட்டி கொடுக்க போய் தவறுதலாக பதிவு ஆகி விட்டது. 2009ல் போட்ட பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://mathysblog.blogspot.com/2010/01/blog-post_24.html
      கீதா ரெங்கனுக்கு "உடல் நலம்" என்ற பதிவு சுட்டி கொடுக்க தேடிய போது கிடைத்த பதிவு . ஆரம்பத்தில் போட்ட பதிவு.(படங்கள் போடா பதிவு .)

      நீக்கு
    2. ப்ரவாயில்லை கோமதிக்கா நீங்க கொடுத்த சுட்டியைப் பார்க்க வந்தேன் இதைப் பார்த்ததும் இங்கேயே வந்துவிட்டேன்!!!!

      பயனுள்ள பதிவு மீண்டும் வந்தால் நலல்துதான் பார்க்காத எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

      வெண்டை வைத்தியம் செய்கிறோம் கோமதிக்கா. அதுவும் சர்க்கரை நோய் என்பதுநோயல்ல ஆனால் கவனமாக இருக்கணும் இதை நான் இப்ப எழுதும் பதிவிலும் சொல்ல இருக்கிறேன். அளவான சரியான உணவு, உடற்பயிற்சி, நடைப் பயிற்சி எல்லாம் சரியாக இருந்தால் கூடியவரை மருந்து எடுத்துக் கொள்ளாமலேயே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது என் அனுபவம் ப்ளஸ் என் மகனின் அனுபவம். மருந்து கூட இல்லாமல் செய்யலாம்....ஆனால் வயதாகும் போதுதான் பிரச்சனை உடற்பயிற்சி குறையும் என்பதால் கண்டிப்பாக மருந்தோடு இப்படியான சப்ளிமென்ட் வைத்தியங்களினாலும் சமாளிக்கலாம்....மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று சரியாக அவ்வப்போது சர்க்கரை அளவை கவனித்துக் கொண்டு

      கீதா

      கீதா

      நீக்கு
    3. //ப்ரவாயில்லை கோமதிக்கா நீங்க கொடுத்த சுட்டியைப் பார்க்க வந்தேன் இதைப் பார்த்ததும் இங்கேயே வந்துவிட்டேன்!!!!//

      உடல் நலம் சுட்டியும் பாருங்கள், உங்களுக்கு உதவியாக இருக்கும். மனவளகலை பயிற்சிகள் அது.

      //பயனுள்ள பதிவு மீண்டும் வந்தால் நலல்துதான் பார்க்காத எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.//

      நன்றி.

      //வெண்டை வைத்தியம் செய்கிறோம் கோமதிக்கா. அதுவும் சர்க்கரை நோய் என்பதுநோயல்ல ஆனால் கவனமாக இருக்கணும் இதை நான் இப்ப எழுதும் பதிவிலும் சொல்ல இருக்கிறேன். அளவான சரியான உணவு, உடற்பயிற்சி, நடைப் பயிற்சி எல்லாம் சரியாக இருந்தால் கூடியவரை மருந்து எடுத்துக் கொள்ளாமலேயே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது என் அனுபவம் //

      உண்மை நீங்கள் சொல்வது. உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் மற்றவர்களுக்கும் உபயோகமாய் இருக்கும்.

      //என் மகனின் அனுபவம். மருந்து கூட இல்லாமல் செய்யலாம்....ஆனால் வயதாகும் போதுதான் பிரச்சனை உடற்பயிற்சி குறையும் என்பதால் கண்டிப்பாக மருந்தோடு இப்படியான சப்ளிமென்ட் வைத்தியங்களினாலும் சமாளிக்கலாம்....மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று சரியாக அவ்வப்போது சர்க்கரை அளவை கவனித்துக் கொண்டு//

      ஆமாம்,, மருந்தை மருத்துவர் பரிந்துரையுடன் கூட்ட குறைக்க செய்யலாம்.

      நல்ல ஆலோசனைகள் கீதா.


      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      தவறுதலாக பழைய பதிவு பதிவாகி விட்டதே! என்று நினைத்தேன்.
      நீங்கள் மீண்டு தொடங்க வேன்டும் என்றதும் மகிழ்ச்சியாகி விட்டது.
      தொடருங்கள். கீதாவுக்கு உடல் நலம் சார்ந்த பகிர்வுகளை பதிவாக பதித்த சுட்டி கொடுக்கலாம் என்று படித்த போது பதிவாகி விட்டது.
      எல்லாம் நன்மைக்கே!
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இப்போதுதான் சகோதரி கீதாரெங்கன் அவர்களின் உடற்பயிற்சி பதிவை படித்து விட்டு கருத்து தந்து விட்டு வந்தேன். உடனே தங்கள் பதிவிலும், சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்துடன் கூடிய பதிவாக இருக்கிறதே படிக்க வந்து வெண்டைக்காய் மருத்துவம் பற்றி படித்து தெரிந்து கொண்டேன். எனக்கு நிறைய சுகர் இருப்பதாக கண்டு பிடித்து அலோபதி மருத்துவரிடம் மருந்துகள் எடுத்துக் கொண்டேன். ஆனால் அது ஒத்துக் கொள்ளாமல் வேறு விதமான உபாதைகள் வந்து விட்டதால் அதை நிறுத்தி விட்டேன். ஆயுர்வேதத்திற்கு போக வேண்டும். அதற்கும் இன்னமும் நேரம் அமையவில்லை. கால்கள் பாதம் இரண்டும் எப்போதும் மதமதவென்று பாரமாகவே இருக்கிறது.

    நீங்கள் கீதா சகோதரிக்கு வேறு ஒரு பதிவைத் தரப்போகும் போது இந்தப் பதிவு தவறுதலாக வந்து விட்டது என கருத்துரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், என்னைப் போல் இதை ஏற்கனவே படிக்காதவர்களுக்கு இது உபயோகமாகத்தான் இருக்கும். எனவே பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //எனக்கு நிறைய சுகர் இருப்பதாக கண்டு பிடித்து அலோபதி மருத்துவரிடம் மருந்துகள் எடுத்துக் கொண்டேன். ஆனால் அது ஒத்துக் கொள்ளாமல் வேறு விதமான உபாதைகள் வந்து விட்டதால் அதை நிறுத்தி விட்டேன். ஆயுர்வேதத்திற்கு போக வேண்டும். அதற்கும் இன்னமும் நேரம் அமையவில்லை. கால்கள் பாதம் இரண்டும் எப்போதும் மதமதவென்று பாரமாகவே இருக்கிறது.//

      காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பார்கள். இறையருள் உங்களுக்கு இந்த வைத்தியத்தை சொல்ல சொல்லி இருக்கிறது போல.

      //என்னைப் போல் இதை ஏற்கனவே படிக்காதவர்களுக்கு இது உபயோகமாகத்தான் இருக்கும். //

      நீங்கள் சொல்வது உண்மை. படிக்காதவர்களுக்கு உதவும் தான். இந்த பதிவு போட்ட போது 1250 பேர் படித்து இருந்தார்கள்.
      எத்தனை பேர் இதை தொடர்ந்து பலன் அடைந்தோர்களோ !
      நீங்கள் பயன்படுத்தி பார்த்து விட்டு சொல்லுங்கள். பக்கவிளைவுகள் இல்லை அதனால் பயப்பட வேண்டாம்.
      உடற்பயிற்சியில் மகராசனம் சர்க்கரை நோயை குணப்படுத்தும்.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
      உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

      நீக்கு
    2. கமலாக்கா தயவாய், உடற்பயிற்சி முடியல்வில்லை என்றாலும் நடைப்பயிற்சி செய்யுங்க. ப்ளீஸ் ஒரு மணி நேரம்....அது போல சாப்பாடும் அரிசி சாதம் இல்லாமல் காய்கள், சூப், போன்று எடுத்துக் கொண்டு...கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டு அப்புறம் மெதுவாக உணவு என்ன எடுத்துக் கொண்டால் கூடுது என்று கவனித்துஅதற்கு ஏற்ப உணவு அளவு முக்கியம் அப்படி எடுத்துக்கொள்ளலாம்.

      அக்கா சர்க்கரை நோய் என்பது நோயல்ல ஒரு குறைபாடு இன்சுலினின் வேலை....எனவே அதைச் சமாளித்துவிட்டால் பலவித கிளை நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

      நானும் என் பதிவில் சொல்வதாக இருக்கிறேன் என் அனுபவம் என் மகனின் அனுபவம் உண்டு என்பதால் என் தந்தை உட்பட,,

      கீதா

      நீக்கு
    3. கமலாக்கா ஆசனங்களில் கோமதிக்கா சொல்லியிருப்பது போல் மகராசனம் அப்புறம் குனிந்டது பாதம் தொடும் பயிற்சி - பாத ஹஸ்தாஸனா, ஜானுசிரசாசனா...இவை எல்லாம் உதவும்.... லெஃப்ட் ரைட் என்று கால்களை மாற்றி மாற்றி வைக்கும் பயிற்சி மிக நன்றாக உதவும்...என் பதிவில் சொல்ல இருக்கிறேன்

      கீதா

      நீக்கு
    4. லெஃப்ட் ரைட் என்று கால்களை மாற்றி மாற்றி வைக்கும் பயிற்சி மிக நன்றாக உதவும்...என் பதிவில் சொல்ல இருக்கிறேன்//

      ஆமாம், அது மிகவும் நல்லது. கால்களுக்கு இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.

      நீக்கு
    5. அக்கா சர்க்கரை நோய் என்பது நோயல்ல ஒரு குறைபாடு இன்சுலினின் வேலை....எனவே அதைச் சமாளித்துவிட்டால் பலவித கிளை நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.//

      ஆமாம்.

      நானும் என் பதிவில் சொல்வதாக இருக்கிறேன் என் அனுபவம் என் மகனின் அனுபவம் உண்டு என்பதால் என் தந்தை உட்பட,,//

      கண்டிப்பாய் சொல்லுங்கள் அனுபவம் தான் சிறந்தது.

      நீக்கு
  11. நானும் இந்த வைத்தியம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.  பயனுள்ள வைத்தியம் என்று சொல்கிறார்கள்.  பார்டரில் இருக்கும் நான் கூட செய்யலாம்தான்.  இப்போதைக்கு நேரம் ஒத்துழைக்காது!  பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //நானும் இந்த வைத்தியம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பயனுள்ள வைத்தியம் என்று சொல்கிறார்கள். பார்டரில் இருக்கும் நான் கூட செய்யலாம்தான். இப்போதைக்கு நேரம் ஒத்துழைக்காது! பார்க்கிறேன்.//

      பார்டரில் இருக்கும் போது சீக்கீரம் குண்மாகி விடும் ஸ்ரீராம். நேரம் கிடைக்கும் போது மட்டுமாவது செய்யுங்கள்.
      நிறைய பேர் இதை செய்து பலன் இருப்பதாக சொல்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      உங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

      நீக்கு
    2. இனிய பொங்கல் வாழ்த்துகள் அக்கா.  என்னுடைய இன்னொரு பலவீனம் என்ன என்றால் காலை எழுந்ததும் காஃபி குடித்தே பழக்கம்!  ஒரு மணி நேரம் தள்ளிப் போடுவதா?! ஆபீஸுக்கு வேறு அதிகாலை கிளம்ப வேண்டும்!

      நீக்கு
    3. இனிய பொங்கல் வாழ்த்துகள் அக்கா//
      நன்றி ஸ்ரீராம்.

      //என்னுடைய இன்னொரு பலவீனம் என்ன என்றால் காலை எழுந்ததும் காஃபி குடித்தே பழக்கம்! ஒரு மணி நேரம் தள்ளிப் போடுவதா?! ஆபீஸுக்கு வேறு அதிகாலை கிளம்ப வேண்டும்!//

      சாருக்கும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்ற உடன் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.
      அவர்களுக்கும் காலை பெட் காபி குடிக்கும் பழக்கம்.
      பச்சையாக வெண்டைக்காய் கொடு சாப்பிடுகிறேன். இப்படி தண்ணீரில் போட்டு காலை குடிக்க சொல்லாதே என்று சொல்லி விட்டார்கள்.

      விடுமுறை நாளில் , பணி ஓய்வு பெற்றபின் செய்யுங்கள்.
      நன்றி. வாழ்க வளமுடன்

      நீக்கு
  12. அருமையான தகவல்
    தமிழர் திருநாள் வாழ்த்துகள் சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. அக்கா இதில் சொல்லப்பட்டிருக்கும் பயிற்சி, வெண்டை எல்லாமே பின் பற்றுகிறேன். எனக்கு அதனால்தான் சர்க்கரை கட்டுப்பாட்டில் ஓடுகிறது. அது போல சாப்பாடும் ரொம்ப ஸ்டிரிக்ட். அப்படிக் கொஞ்சம் அப்படியும் இப்படியுமா சாப்பிட நேர்ந்தால் கூடுதல் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி செஞ்சு டெஸ்ட் பண்ணினா சர்க்கரை சரியா இருக்கும்

    இப்ப சமீபத்துல கூட டயட் - பழங்கள் மற்றும் சாப்பாடு மிக அளவான சாப்பாடு, முளைகட்டிய தானியங்கள் இப்படி... வீட்டு வேலை, பயிற்சி முடித்து மாத்திரை சாப்பிடாமல் நடைப்பயிற்சி செய்யவில்லை...அதன் பின் தான் செல்ல வேண்டும்.... போகும் முன், சாப்பிட்டு ஒண்ணரை மணி நேரம் கழித்து டெஸ்ட் செய்தேன் சர்க்கரை மிகவும் நார்மல் 130 தான் இருந்தது,.

    மாத்திரை இல்லாமலேயே..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா இதில் சொல்லப்பட்டிருக்கும் பயிற்சி, வெண்டை எல்லாமே பின் பற்றுகிறேன். எனக்கு அதனால்தான் சர்க்கரை கட்டுப்பாட்டில் ஓடுகிறது. அது போல சாப்பாடும் ரொம்ப ஸ்டிரிக்ட். அப்படிக் கொஞ்சம் அப்படியும் இப்படியுமா சாப்பிட நேர்ந்தால் கூடுதல் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி செஞ்சு டெஸ்ட் பண்ணினா சர்க்கரை சரியா இருக்கும்//

      நல்லது, செய்து வருவது அறிந்து மகிழ்ச்சி. நடைப்பயிற்சி மிகவும் நல்லது.

      //இப்ப சமீபத்துல கூட டயட் - பழங்கள் மற்றும் சாப்பாடு மிக அளவான சாப்பாடு, முளைகட்டிய தானியங்கள் இப்படி... வீட்டு வேலை, பயிற்சி முடித்து மாத்திரை சாப்பிடாமல் நடைப்பயிற்சி செய்யவில்லை...அதன் பின் தான் செல்ல வேண்டும்.... போகும் முன், சாப்பிட்டு ஒண்ணரை மணி நேரம் கழித்து டெஸ்ட் செய்தேன் சர்க்கரை மிகவும் நார்மல் 130 தான் இருந்தது,.//

      வயிறு முட்ட சாப்பிட கூடாது என்றுதான் எல்லோரையும் சொல்கிறார்கள். அதும் சர்க்கரை வந்து இருந்தால் 6 வேளையாக பிரித்து சாப்பிட சொல்கிறார்கள். நம்மால் முடிந்தவரை அனைத்தையும் பின் பற்றினால் நலம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.


      நீக்கு
  14. அருமையான விஷயத்தைத் தெரியப்படுத்தியுள்ளீர்கள்.

    சர்க்கரை இல்லை என்றாலும் இதனை விரைவில் உபயோகிக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //அருமையான விஷயத்தைத் தெரியப்படுத்தியுள்ளீர்கள்.//

      நன்றி.

      //சர்க்கரை இல்லை என்றாலும் இதனை விரைவில் உபயோகிக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்கிறேன்.//

      நல்லது. பக்கவிளைவு இல்லாதது. சர்க்கரை அளவு குறைந்தால் மாத்திரை அளவு குறையும் . முறையாக பரிசோதனை செய்து கொண்டு கவலை இல்லாமல், மகிழ்ச்சியாக இருந்தால் நல்லது என்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  15. நானும் முன்பொரு சமயம் தங்களால்
    இதைப் பற்றிக் கேள்விப்பட்டு
    வெண்டைக்காய் வைத்தியம் மேற்கொண்டு வந்தேன்..

    இப்போது சர்க்கரை குறைந்துள்ளது..

    டீ, காஃபி எதுவும் கிடையாது.. பால மட்டுமே.. அதில்
    சிறிதளவு கருப்பட்டி தான்..

    தோல் அரிப்புக்கு மருந்து எடுத்துக் கொள்வதால் அதுவும் தற்போது கிடையாது..

    பயனுள்ள வெண்டைக்காய் வைத்தியக் குறிப்புகள்..

    மகிழ்ச்சி.. நன்றி..
    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //நானும் முன்பொரு சமயம் தங்களால்
      இதைப் பற்றிக் கேள்விப்பட்டு
      வெண்டைக்காய் வைத்தியம் மேற்கொண்டு வந்தேன்..

      இப்போது சர்க்கரை குறைந்துள்ளது..//

      கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

      //பயனுள்ள வெண்டைக்காய் வைத்தியக் குறிப்புகள்..//


      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. @ சகோ கீதா

    // அக்கா சர்க்கரை நோய் என்பது நோயல்ல ஒரு குறைபாடு இன்சுலினின் வேலை....எனவே அதைச் சமாளித்துவிட்டால் பலவித கிளை நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.. //

    உண்மை.. உண்மை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா ஹரிஹரனுக்கு கீதா சொன்னது முற்றிலும் உண்மை.

      நீக்கு
    2. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

      இன்றுதான் இந்த கருத்துரைகளைப் பார்த்தேன். முறையான உடற்பயிற்சி இல்லையென்றாலும் நடைப்பயிற்சி செய்து கொண்டேதான் இருக்கிறேன். (நடுவில் தொற்று காலங்களில்தான் வெளியில் செல்ல இயலாமல் வீட்டுக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தேன். மேலும் நடப்பது என்பது எனக்கு பிடிக்கும்.) இனி. தங்கள் ஆலோசனைகளின்படி செய்கிறேன். எனக்காக நீங்கள் பல கருத்துக்களை தந்திருப்பதற்கு மிக்க நன்றி. அதை பின்பற்றுங்கள் எனக் கூறிய சகோதரி கோமதி அரசு அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      உங்கள் உடலநலத்தைப்பார்த்து கொண்டால் நீங்கள் உங்கள் குடும்பத்தினரை பார்த்து கொள்ள முடியும்.
      நானும் பல, சில காரணங்களால் உடற்பயிசியை விட்டு இருந்தேன், இப்போது உடல் சிரம பட ஆரம்பித்தவுடன் மறுபடியும் ஆரம்பித்து இருக்கிறேன்.மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  17. பலருக்கும் பயனாகும் இந்த மீள் பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      ஆமாம், பலருக்கு பயனாகும் என்று நினைக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  18. பல வருஷங்களாக இது சுற்றி வருகிறது அல்லவா? நாங்களும் முயற்சி செய்து பார்த்தோம். ஒண்ணும் புதுசா நடக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்க கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //பல வருஷங்களாக இது சுற்றி வருகிறது அல்லவா?//

      ஆமாம், இந்த பதிவு போட்டே பல வருடம் ஆச்சு.

      //நாங்களும் முயற்சி செய்து பார்த்தோம். ஒண்ணும் புதுசா நடக்கலை.//
      சிலருக்கு நன்கு பலன் கொடுத்து இருக்கிறது என்று சொன்னார்கள்.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு