காலை எழுந்தவுடன் சூரிய வணக்கம் செய்வது நல்லது.
எனக்கு காலை நேரம் சூரியன் உதிப்பதை பார்ப்பது பிடிக்கும், அதில் ஆனந்தம் கிடைக்கும். இங்கு மகன் வீட்டுத்தோட்டத்திலிருந்து காலையில் மலைகளுக்கு இடையே சூரியன் எழுவது பார்க்க அழகாய் இருக்கும், அப்போது வானத்தின் அழகு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நான் பார்த்து ரசித்த சூரிய உதயத்தை இங்கு உங்கள் பார்வைக்கு இந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறேன்.
சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு வீட்டு வேலைகளை தொடங்கி விடுவோம்.
சூரியன் உதிக்கும் அழகை காணமுடியாமல் குழந்தைகளை பள்ளிக்கும், கணவரை அலுவலகத்திற்கும் அனுப்ப வேலைகளை முடித்தாக வேண்டும்.
பேரன் சூரியன் உதிக்கும் நேரம் பள்ளி போகிறான், மருமகள் கொண்டு விடுகிறாள், காரில் போகும் போது சூரியனை தரிசனம் செய்வார்கள் இருவரும்.
இப்போது தாய்மார்கள் குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கும் எல்லாம் தயார் செய்து வைத்து விட்டு தானும் ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு அவர்களும் வேலைக்கு கிளம்ப வேண்டும். இதில் எங்கு சூரிய நமஸ்காரம் செய்வது?
காலை சூரிய நமஸ்கார 12 நிலை உடற்பயிற்சி செய்தால் உடலுக்கு, மனதுக்கு நல்லது. ஆரோக்கியமாக இருக்கலாம்.
நன்றி - கூகுள்
நின்று கொண்டு செய்ய முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
நன்றி - கூகுள்
நேரமும், மனமும் ஒத்துழைக்க வேண்டும். காலை செய்ய முடியவில்லை என்றால் மாலையிலும் செய்யலாம்.
மகன் வீட்டில் நேரமும் கிடைக்கிறது , பார்க்க வசதியாகவும் இருக்கிறது. பார்த்து ரசிக்கிறேன்.
உடற்பயிற்சிகள் வேதாத்திரி மகரிஷியின் உடற்பயிற்சி செய்து விடுகிறேன்.
மலை முகடு போல தெரியும் பின்னால் வீட்டு கூரை
மலை முகட்டுக்கு போட்டியாக
வானில் தோன்றும் வர்ணஜாலம்
காலைச்சூரியன் தன் கதிர்களை பரப்பி வருகிறான்
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி !- படம் கர்ணன்
புத்தம் புது காலை
பொன் நிற வேளை
- "அலைகள் ஓய்வது இல்லை" , மற்றும் "மேகா "படப்பாடல் இரண்டு படத்திலும் வருகிறது இந்த பாடல்
//பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! //
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! //
- மகா கவி பாரதியார்
மாயவரத்தில் காலைச்சூரியன் சமையல் அறை ஜன்னல் வழியே தெரியும், பார்த்து ஒரு வணக்கம் வைத்து விட்டு வேலைகளை ஆரம்பித்து விடுவேன். மொட்டைமாடியில் பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் வைக்க போகும் போது அவசரமாய் பார்த்து வணக்கம் வைத்து வருவேன் தினம்.
மதுரையில் வீட்டுக்கு வெளியே வந்து காலைச்சூரியனை பார்க்கலாம், மதியம் 12 மணி உச்சி வெயிலில் பால்கனியிலிருந்து பார்க்கலாம்.
இங்கு அரிசோனாவில் மகன் வீட்டில் காலைச்சூரியன் பின் பக்கம் தோட்டத்திலிருந்தும், மாலைச்சூரியன் முன் வாசல் பக்கம் இருந்தும் பார்க்கலாம்.
ஊருக்கு வந்தால் இந்த சூரியன் உதிக்கும் காட்சிகளை தினம் பார்க்க என் சேமிப்பாய் இங்கு பதிவு செய்து இருக்கிறேன்.
கதிரவன் வரவு கண்டு கமலமுகம் மலர்ந்தது- "அவன் பித்தனா" படப் பாடல்
தங்கமாய் மின்னும் சூரிய ஒளி
//வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!//
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!//
-மகா கவி பாரதியார்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!//
- மகா கவி பாரதியார்
சூரியன் வருவது யாராலே!
மெல்ல மெல்ல விடியும் வைகறைப் பொழுது.
நிறைய பதிவுகள் மாலைச்சூரியனை, காலைச்சூரியனை படம் எடுத்து பதிவு செய்து இருக்கிறேன். அவற்றில் சில பதிவுகள் உங்கள் பார்வைக்கு.
//நலமா? உங்கள் வீட்டில் கொலு வைபவங்கள் சிறப்பாக நடைபெற்றதா? அது பற்றிய உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.//
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.//
நவராத்திரி விழா படங்கள் போட்டு பதிவை எதிர்பார்க்கிறேன் என்று கமலா எங்கள் ப்ளாக்கில் கேட்டு இருந்தார்கள். அடுத்த பதிவு கொலு பதிவு . இப்போது என்னை காணவில்லையே என்று தேடியவர்களுக்கு இந்த பதிவு, நன்றி.
முகநூலில் பகிர்ந்த படங்கள் இவை, இங்கு சேமிப்பாய்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------
ஆம்.. பதிவின் ஆரம்ப வரிகளுக்கு புத்தம்புது காலை பொன்னிற வேலை பாடல் பொருத்தம். அதிகாலைச் சூரியன் அகிலத்தை ஆக்கும் அழகு கண்கொள்ளாக் காட்சி...
பதிலளிநீக்கு//வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஆம்.. பதிவின் ஆரம்ப வரிகளுக்கு புத்தம்புது காலை பொன்னிற வேலை பாடல் பொருத்தம். அதிகாலைச் சூரியன் அகிலத்தை ஆக்கும் அழகு கண்கொள்ளாக் காட்சி...//
ஆரம்ப வரிகளையும், தலைப்பையும் ரசித்தமைக்கு நன்றி.
அகிலத்தை அதிகாலை சூரியன் அழகு படுத்துகிறார் என்பது உண்மைதான்.
அடுத்த பாராவுக்கு 'வெள்ளிக்கிழமை.. விடியும் வேலை.. வாசலில் கோலமிட்டேன்' என்றோ, ' அதிகாலை எல்லாமே... இனிதான ராகம்' ' என்றோ 'அதிகாலையில்..சுப வேளையில் என்றோ பாடலாம்!.
பதிலளிநீக்கு//அடுத்த பாராவுக்கு 'வெள்ளிக்கிழமை.. விடியும் வேலை.. வாசலில் கோலமிட்டேன்' என்றோ, ' அதிகாலை எல்லாமே... இனிதான ராகம்' ' என்றோ 'அதிகாலையில்..சுப வேளையில் என்றோ பாடலாம்!.//
நீக்குஉங்கள் நினைவுக்கு வந்த பாடல்கள் அருமை.
பேரன் சூரியன் உதிக்கும் நேரம் பள்ளி செல்வது சூரியன் சற்று தாமதமாக உதிப்பான் என்று பொருளா, அலலது பேரன் அதி அதிகாலையில் பள்ளி செல்வது வழக்கமா?
பதிலளிநீக்கு//பேரன் சூரியன் உதிக்கும் நேரம் பள்ளி செல்வது சூரியன் சற்று தாமதமாக உதிப்பான் என்று பொருளா, அலலது பேரன் அதி அதிகாலையில் பள்ளி செல்வது வழக்கமா?//
நீக்குகுளிர் காலம் என்றால் கொஞ்சம் நேரம் கழித்து, வெயில் காலம் என்றால் விரைவில் உதிப்பார் சூரியன்.
அவன் பள்ளிக்கு காலை 6.30க்கு போக வேண்டும். பேரனை கொண்டு வந்து விட்டு வந்தபின் மருமகள் எட்டுமணிக்கு ஆபீஸ் .
பொன்வானத்தைப் படம் எடுத்து போட்டிருக்கிறீர்கள். அழகு. பல பாடல்கள் மனதுக்குள் ஓடி வருகின்றன. பொன்வானப்பூங்காவில் தேரோடுது... தங்க நிற மேகங்கள் அழகு.
பதிலளிநீக்கு//பொன்வானத்தைப் படம் எடுத்து போட்டிருக்கிறீர்கள். அழகு. பல பாடல்கள் மனதுக்குள் ஓடி வருகின்றன. பொன்வானப்பூங்காவில் தேரோடுது... தங்க நிற மேகங்கள் அழகு.//
நீக்குபல பாடல்கள் மனதுக்குள் ஓடி வருவதை பகிர வேண்டியது தானே!
பொன்வானப்பூங்காவில் தேரோடுது பாடலா?
தங்கநிற குட்டி குட்டி மேகங்கள் அழகுதான்.
வானம் எங்கும் பரிதியின் சோதி....
பதிலளிநீக்குமறுபடியும் SPB யை நினைவுபடுத்தி விட்டீர்கள். இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்' சீரியலில் அவர் ஏகப்பட்ட பாரதியால் பாடல் வரிகளை பாடி இருப்பார்.
பொன்னையொத்த காலைச் சூரிய ஒளி - அழகுப்
பதிலளிநீக்குபெண்ணொருத்தி நடந்து வருவது போல
எட்டுமணிச் சூரியன் பார்க்கையில் - மணமான
பத்தினிப்பெண் பாசம் போல
பட்டப்பகல் சூரியன் பார்க்கையில் - தலையைப்
போட்டுடைக்கும் அலுவலக அதிகாரி போல
நான்குமணிச் சூரியன் பார்க்கையில் - தோள்சாய்த்து
தாங்கி ஆறுதல் சொல்லும் நண்பன் போல
அந்திச் சூரியன் பார்க்கையில் - வீட்டுக்கு
முந்திச் சென்று மனையாள் முகம் பார்க்கும்
எண்ணம் தோன்றும்.
!!! :)))
உங்கள் கவிதையா? அருமை.
நீக்குஅந்திச் சூரியன் மனையாள் முகம் பார்க்கும் எண்ணம் தோன்றுமா?
புதிதாக திருமணம் ஆனபோது அப்ப்டியும், குழந்தைகள் வரவுக்கு பின் அப்பாவை பார்க்க வாசல் கேட்டில் காத்து இருக்கும் குழந்தைகள் நினைவும் வரும் தானே!
உங்கள் கருத்துக்கள், கவிதைக்கு நன்றி.
வாவ்!!! சூப்பர் கூடவே கொஞ்சம் புன்சிரிப்பும்!!
நீக்குகீதா
சூரிய நமஸ்காரம் நான் சினமும் செய்து கொண்டிருந்தேன் இப்போது சமீபமாகச் செய்ய முடியவில்லை. செர்விக்கல் ரிப் காரணமாக.
நீக்குஉட்கார்ந்த நிலை நானும் பார்த்திருக்கிறேன் ஆனால் ரெகுலர் செய்து வந்ததால் இப்படி உட்கார்ந்து செய்வதைச் செய்ததில்லை இதைச் செய்து பார்க்க வேண்டும்.
கீதா
சூரிய உதயமும் பிடிக்கும் அஸ்தமனமும் பிடிக்கும்.
நீக்குவானின் வர்ணஜாலங்கள் நீங்க எடுத்திருக்கும் புகைப்படங்களில் சூப்பரா இருக்கு. நீங்க வர்ணஜாலம்னு சொல்லிருக்கும் புகைப்படங்களில் அந்த வான் மேகங்களின் திட்டுகள் அண்டார்ட்டிகா ஆர்ட்டிக் பகுதிகளில் பனி உருகும் சமயம் ஆங்காங்கே பனிக்கட்டிகள் மிதக்குமே அப்படி இருக்கிறது
கீதா
நவராத்திரி கொலு படங்கள் போடுறப்ப நான் ஃப்ரீயா இருப்பேனா தெரியைவில்லை கோமதிக்கா. இந்த வாரமே கொஞ்சம் பிஸிதான். ஞாயிறிலிருந்து புதன் வரை கொஞ்சம் சிரமம். 24 லிருந்துதான் வலைப்பக்கம் வர முடியும்.
நீக்குபடங்கள் எல்லாம் ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//வாவ்!!! சூப்பர் கூடவே கொஞ்சம் புன்சிரிப்பும்!!//
படத்தைப்பார்த்ததும் புன்சிரிப்பு வந்தது படித்து மகிழ்ச்சி.
//சூரிய நமஸ்காரம் நான் சினமும் செய்து கொண்டிருந்தேன் இப்போது சமீபமாகச் செய்ய முடியவில்லை. செர்விக்கல் ரிப் காரணமாக.//
முடிந்த உடற்பயிற்சிகளை செய்தால் போதும் கீதா
//உட்கார்ந்த நிலை நானும் பார்த்திருக்கிறேன் ஆனால் ரெகுலர் செய்து வந்ததால் இப்படி உட்கார்ந்து செய்வதைச் செய்ததில்லை இதைச் செய்து பார்க்க வேண்டும்.//
முடிந்த போது செய்து பாருங்கள்.
//சூரிய உதயமும் பிடிக்கும் அஸ்தமனமும் பிடிக்கும்.//
எனக்கும் தான் இரண்டும் பிடிக்கும். இங்கு சூரிய அஸ்தமனம் பார்க்க நிறைய இடங்கள் இருக்கிறது.
//வானின் வர்ணஜாலங்கள் நீங்க எடுத்திருக்கும் புகைப்படங்களில் சூப்பரா இருக்கு. நீங்க வர்ணஜாலம்னு சொல்லிருக்கும் புகைப்படங்களில் அந்த வான் மேகங்களின் திட்டுகள் அண்டார்ட்டிகா ஆர்ட்டிக் பகுதிகளில் பனி உருகும் சமயம் ஆங்காங்கே பனிக்கட்டிகள் மிதக்குமே அப்படி இருக்கிறது//
வர்ணஜாலத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
//நவராத்திரி கொலு படங்கள் போடுறப்ப நான் ஃப்ரீயா இருப்பேனா தெரியைவில்லை கோமதிக்கா. இந்த வாரமே கொஞ்சம் பிஸிதான். ஞாயிறிலிருந்து புதன் வரை கொஞ்சம் சிரமம். 24 லிருந்துதான் வலைப்பக்கம் வர முடியும்.
படங்கள் எல்லாம் ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா//
நானும் உடனே போட்டு விட மாட்டேன் கீதா.
அப்படியே போட்டாலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம்.
அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
ஒவ்வொன்றுக்கும் கீழே கருத்து இட முடியாமல் இருக்கிறது.அதனால் அனைத்து கருத்துக்களுக்கும் ஒரே பதில் போட்டு இருக்கிறேன் நன்றி கீதா.
சூரியக் கதிர்கள் படங்கள் மிக அழகு
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//சூரியக் கதிர்கள் படங்கள் மிக அழகு//
நன்றி.
நானும் தினமும் 25 சூரிய நமஸ்காரம் செய்கிறேன். படங்கள் எல்லாம் அழகு. பொன்னைஉருக்கிச் சிதறடித்தது போல் இருக்கின்றன
பதிலளிநீக்கு//நானும் தினமும் 25 சூரிய நமஸ்காரம் செய்கிறேன். படங்கள் எல்லாம் அழகு. பொன்னைஉருக்கிச் சிதறடித்தது போல் இருக்கின்றன//
நீக்குநீங்கள் முன்பே ஒரு பதிவில் சூரிய நமஸ்காரம் செய்வதை சொல்லி இருந்தீர்கள், நல்லது , மகிழ்ச்சி.
நீங்கள் சொன்னது போல பொன்னை சிதறடித்தது போலவே தான் இருக்கு.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
புத்தம் புது காலை பொன்னிற வேளை!!!
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் மிக மிக அழகு,
கோமதிக்கா,
கீதா
//புத்தம் புது காலை பொன்னிற வேளை!!!
நீக்குபடங்கள் எல்லாம் மிக மிக அழகு,
கோமதிக்கா,//
எல்லா படங்களும் அலைபேசியில்தான் எடுத்தேன் கீதா
நன்றி.
சிறப்பான பதிவு..
பதிலளிநீக்குஅழகான படங்கள்..
பயனுள்ள செய்திகள்...
இதை விட வேறென்ன வேண்டும்!..
வாழ்க நலம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ வாழ்க வளமுடன்
நீக்கு//சிறப்பான பதிவு..
அழகான படங்கள்..
பயனுள்ள செய்திகள்...
இதை விட வேறென்ன வேண்டும்!..
வாழ்க நலம்..//
வெகு நாட்களுக்கு பின் என் பதிவுக்கு வருகை, வாழ்த்துக்கும்
கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. பொன்னிற சூரியனின் அழகே அழகு. அதுவும் நீங்கள் அவை உதிக்கும் ஒவ்வொரு நொடியையும், படமெடுத்து பாட்டுக்களால் வரவேற்று ஆர்த்தி எடுப்பது போல் பதிவை தொகுத்தது மிக அருமையாக உள்ளது.
காலை வேளையில் தங்க நிற சூரியனை பார்க்கும் போது மனது எவ்வளவு உற்சாகமடையும் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கிறது. இதைப் போல் நானும் கதிரவனை புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளேன். ஆனால், அது அவ்வளவு அழகை தரவில்லை. மேலும், எங்கள் வீட்டில், உத்தராயணம் வரும் போதுதான் பால்கனியிலிருந்து காலைச் சூரியனாரை கண்குளிர தரிசிக்க இயலும். இல்லை மொட்டை மாடிக்குச் சென்றால் பார்க்கலாம். அந்த நேரத்தில்தான் நமக்கு ஏகப்பட்ட வேலைகள் முளைத்திருக்குமே ..!
பதிவின் தலைப்பும், முதல் வரவேற்பு பாடலும் அருமையாக உள்ளது. பாரதியாரின் பொருத்தமான
பாடல்களும், நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
இன்னமும் பதிவை அழகு செய்யும் அழகான சூரியனை ஆழ்ந்து பார்த்து விட்டு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. பொன்னிற சூரியனின் அழகே அழகு. அதுவும் நீங்கள் அவை உதிக்கும் ஒவ்வொரு நொடியையும், படமெடுத்து பாட்டுக்களால் வரவேற்று ஆர்த்தி எடுப்பது போல் பதிவை தொகுத்தது மிக அருமையாக உள்ளது.//
நன்றி கமலா
//காலை வேளையில் தங்க நிற சூரியனை பார்க்கும் போது மனது எவ்வளவு உற்சாகமடையும் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். //
ஆமாம். அதனால் தான் முன்னோர்கள் சூரிய வழிபாட்டை வைத்தார்கள் என்று நினைக்கிறேன்.
மதுரையில் மொட்டை மாடிக்கு சென்றால் உதயம், அஸ்தமனம் இரண்டையும் பார்க்கலாம்.
பதிவின் தலைப்பை, பாரதியாரின் கவிதையை, மற்றும் பதிவை ரசித்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி.
//இன்னமும் பதிவை அழகு செய்யும் அழகான சூரியனை ஆழ்ந்து பார்த்து விட்டு வருகிறேன்.//
வாங்க வாங்க
நீங்கள் எடுத்து வைத்து இருக்கும் படங்களை போடுங்கள் பதிவில்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மீண்டும் எல்லாவற்றையும் கைப்பேசியில் பெரிதாக்கிப் பார்த்தேன். செக்கசெவேல் என்ற வானமும், கதிரவனும்தான் என்ன ஒரு அழகு. கதிரவனின் கதிர்களால், வானில் தோன்றும் வர்ணஜாலங்கள் அப்பப்பா..! என்ன அழகு. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று தோன்றுகிறது. இங்கு ஒரு வாரமாக லேசான மழைகள் இப்போது இரண்டு மூன்று நாட்களாக நல்ல மழை. சூரியனை நாட்முழுவதும் காணவேயில்லை .
தன்னை சுற்றியுள்ள வானம் முழுக்க தங்க கலரை பரப்பியுள்ள படங்கள் அருமை.
காலை வேளையில் உடற்பயிற்சியாக நீங்கள் சொல்லியுள்ளவை அனைத்தும் சிறப்பு.
தங்களின் சூரிய உதயம் பற்றிய பழைய பதிவுகளை பார்த்து வந்தேன். இரண்டு பதிவுகளுக்கு நான் கருத்து தெரிவிக்க வந்துள்ளேன். அதற்கு முந்தியது இரண்டும் நாம் அறிமுகமாகவில்லை போலும். அனைத்துமே படித்து வந்தேன். நன்றாக உள்ளது. பறவைகளுக்கு நீங்கள் அதிகாலையில் உணவிடுவது குறித்தும், அது சமர்த்தாக சிந்தாமல் சிதறாமல் சாப்பிடுவதும் குறித்த பதிவை மிகவும் ரசித்தேன்.
இன்றைய பதிவில் என்னை நினைவாக குறிப்பிட்டுள்ளதற்கு மிக்க நன்றி சகோதரி. தங்கள் கொலு பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு சௌகரியபடும் போது பகிருங்கள். காத்திருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மீண்டும் எல்லாவற்றையும் கைப்பேசியில் பெரிதாக்கிப் பார்த்தேன். செக்கசெவேல் என்ற வானமும், கதிரவனும்தான் என்ன ஒரு அழகு. கதிரவனின் கதிர்களால், வானில் தோன்றும் வர்ணஜாலங்கள் அப்பப்பா..! என்ன அழகு. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று தோன்றுகிறது.//
மீண்டும் படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி, மகிழ்ச்சி .
//இங்கு ஒரு வாரமாக லேசான மழைகள் இப்போது இரண்டு மூன்று நாட்களாக நல்ல மழை. சூரியனை நாட்முழுவதும் காணவேயில்லை//செய்திகள் படிக்கிறேன் எல்லா இடங்களிலும் மழை பெய்து கொண்டு இருப்பதை அறிந்து கொண்டேன்.
//தன்னை சுற்றியுள்ள வானம் முழுக்க தங்க கலரை பரப்பியுள்ள படங்கள் அருமை.
காலை வேளையில் உடற்பயிற்சியாக நீங்கள் சொல்லியுள்ளவை அனைத்தும் சிறப்பு.//
நன்றி.
//தங்களின் சூரிய உதயம் பற்றிய பழைய பதிவுகளை பார்த்து வந்தேன். இரண்டு பதிவுகளுக்கு நான் கருத்து தெரிவிக்க வந்துள்ளேன். அதற்கு முந்தியது இரண்டும் நாம் அறிமுகமாகவில்லை போலும். அனைத்துமே படித்து வந்தேன். நன்றாக உள்ளது. பறவைகளுக்கு நீங்கள் அதிகாலையில் உணவிடுவது குறித்தும், அது சமர்த்தாக சிந்தாமல் சிதறாமல் சாப்பிடுவதும் குறித்த பதிவை மிகவும் ரசித்தேன்.//
மாயவரம் வாழ்க்கை மறக்க முடியாத நாட்கள். அடிக்கடி இந்த பதிவுகளை படித்து மாயவரத்தையும் அங்கு மகிழ்ச்சி அளித்த பறவைகளை நினைத்து கொள்வேன்.
பழைய பதிவுகளை ரசித்து படித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.
//இன்றைய பதிவில் என்னை நினைவாக குறிப்பிட்டுள்ளதற்கு மிக்க நன்றி சகோதரி. தங்கள் கொலு பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு சௌகரியபடும் போது பகிருங்கள். காத்திருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
கொலு படங்களை வலையேற்ற வேண்டும் . முன்பு மாதிரி அமர்ந்து சுறு சுறுப்பாக வேலை செய்ய முடியவில்லை. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது.
சிறிது நேரம் சிறிது நேரம் அமர்ந்து வேலை செய்கிறேன்.
உங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி. எனக்கு உற்சாகத்தை தருகிறது.
புத்தம் புது காலை பொன்னிற வேளை…. ஆஹா… படங்களனைத்தும் அழகு. சூரியன், சந்திரன், மலைகள், கடல், நதி என இயற்கை நமக்கு அளித்த கொடைகள் தான் எத்தனை எத்தனை. இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றாலும் வேலைகளும் இருக்கத்தானே செய்கின்றன. உங்கள் படங்கள் வழி நாங்களும் சூரியனின் அற்புத ஜாலங்களை கண்டு ரசித்தோம். நன்றிம்மா.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//புத்தம் புது காலை பொன்னிற வேளை…. ஆஹா… படங்களனைத்தும் அழகு. சூரியன், சந்திரன், மலைகள், கடல், நதி என இயற்கை நமக்கு அளித்த கொடைகள் தான் எத்தனை எத்தனை. //
ஆமாம் இயற்கை அளித்த கொடை மிக அழகானது.
//இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றாலும் வேலைகளும் இருக்கத்தானே செய்கின்றன. உங்கள் படங்கள் வழி நாங்களும் சூரியனின் அற்புத ஜாலங்களை கண்டு ரசித்தோம். நன்றிம்மா.//
வேலைகளுக்கு இடையில் கண்டு ரசித்து மனதை லேசாக்கி கொள்கிறோம்.
படங்களை ரசித்து அருமையான கருத்து சொன்னதற்கு நன்றி.
சூரியக் காட்சியின் படங்கள் வெகு அழகாக இருக்கிறது .
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தகவல்கள் நன்று.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉடல் பூரண நலம் தானே!
உங்கள் கருத்துக்கு நன்றி.
அரிசோனா மானிலத்தின் மேல் ஏற்கனவே காதல் ஜாஸ்தி சூரிய பகவானுக்கு. குட்டிக் குழந்தையாய் தவழும் கோலத்தில் உதய ஞாயிறின் அழகே அழகு!
பதிலளிநீக்குதகுந்த இடங்களில் மிகப் பொருத்தமாக பாரதியாரை நினைவு கொண்டது அற்புதம், சகோ. அது மனத்திற்கு மிக உற்சாகமாக அமைந்தது! நன்றி.
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
நீக்கு//அரிசோனா மானிலத்தின் மேல் ஏற்கனவே காதல் ஜாஸ்தி சூரிய பகவானுக்கு. குட்டிக் குழந்தையாய் தவழும் கோலத்தில் உதய ஞாயிறின் அழகே அழகு!//
ஆமாம், இந்த முறை அக்டோபர் வரை வெயில்தான்.
இன்று காலை தான் கொஞ்சம் மழை , குளிர்ந்த காற்று வீசியது.
//தகுந்த இடங்களில் மிகப் பொருத்தமாக பாரதியாரை நினைவு கொண்டது அற்புதம், சகோ. அது மனத்திற்கு மிக உற்சாகமாக அமைந்தது! நன்றி.//
சூரியன் படங்களையும் , பாரதியாரின் கவிதைகளையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
‘தங்கமாக மின்னும்’ ஜொலிக்கும் சூரியனின் படங்கள் அனைத்தும் கண் கொள்ளாக் காட்சி. சூரிய நமஸ்காரம் மற்றும் மகாக் கவியின் பாடல்களுடன் பகிர்ந்திருக்கும் விதம் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//தங்கமாக மின்னும்’ ஜொலிக்கும் சூரியனின் படங்கள் அனைத்தும் கண் கொள்ளாக் காட்சி. சூரிய நமஸ்காரம் மற்றும் மகாக் கவியின் பாடல்களுடன் பகிர்ந்திருக்கும் விதம் அருமை.//
சூரியன் படங்களையும், மகாகவியின் கவிதைகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.
பிரகாசமாக வருகிறார் சூரிய பகவான்.
பதிலளிநீக்குபடங்கள் அட்டகாசம். கண்டு களிப்புற்றோம்.
கவிதைகளும் பாடல்களும் என கவர்ந்தது பகிர்வு.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//பிரகாசமாக வருகிறார் சூரிய பகவான்.//
ஆமாம். நாள்தோறும் சூரியன் உதிக்கும் போது அழகுதான்.
//படங்கள் அட்டகாசம். கண்டு களிப்புற்றோம்.
கவிதைகளும் பாடல்களும் என கவர்ந்தது பகிர்வு.//
பதிவை, படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.