இதற்கு முன் போட்ட பதிவு நவராத்திரி கொலுவும் பேரனின் பக்தபிரகலாதா நாடகமும் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
இங்கு (அரிசோனாவில்) மகனின் நண்பர்கள் வீட்டில் வைத்த கொலுவுக்கு நாங்கள் போய் வந்தோம், அந்த படங்கள் பதிவில் இடம்பெறுகிறது.
சென்னை சொந்த ஊர் இவர்கள் வீட்டில் கல்யாண செட் என்னை கவர்ந்தது
கீழ்படியில் உள்ள பட்டாபிஷேக பொம்மைகள், துளசி பூஜை செய்யும் பொம்மைகள் அழகு

ஒருபக்கம் திருப்பதி கோயில்
மறுபக்கம் உப்பிலி அப்பன் கோயில் காட்சி
எளிமையான கொலு கோவில் பிராகாரம் பின்னனி அழகு
மாயவரம் சொந்த ஊர் இவர்கள் வீட்டுக் கொலு. மயில் வடிவில் அம்பாள் சிவனை பூஜித்த பொம்மை இருக்கிறது இரண்டாவது படியில்.

திருப்பூர் சொந்த ஊர் இவர்கள் வீட்டுக் கொலு படி நம் தேசிய கொடி கலரில் விரிப்பு அழகு.
பெருமாள் உற்சவம்

ராஜராஜேஸ்வரி பூஜித்தல்
கும்பகர்ணனை உறக்கத்திலிருந்து எழுப்புதல்
பெருமாள் உற்சவம்
ஐயப்ப பூஜை
நான் அவ்ர்கள் வீட்டில் ஒரு பக்கத்தில் பியோனோ இருப்பதைப்பார்த்து யார் வாசிப்பார்கள் என்று கேட்டேன், மகன் வாசிப்பான் என்றார்கள். மாடியில் படித்து கொண்டு இருந்த மகனை வர செய்து "பாட்டிக்கு வாசித்து காட்டு" என்றவுடன் இனிமையாய் மூன்று பாடல்கள் வாசித்தான் பாராட்டி வாழ்த்தினோம்.

சேலத்தை சேர்ந்தவர்கள் , இந்த வீட்டில் நான்காவது படியில் திருமணம் ஐந்தாவது படியில் குழந்தைக்கு காது குத்தும்,
விருந்து உபசார செட் அழகாய் இருந்தது.


திருநெல்வேலி சொந்த ஊர், இந்த வீட்டில் இரண்டு பக்கமும் படிகளில் பொம்மைகள் வைத்து இருந்தார்கள்.
இரண்டு படிகளுக்கு நடுவில் மீனாட்சி, சிவபெருமான் சிலைகளை வைத்து அவர்கள் முன் திருமணம் நடைபெறுவது போல வைத்து இருந்தார்கள் .
சிவகாசி சொந்த ஊர் இவர்கள் வீட்டில் நடுவில் படி அமைத்து பொம்மைகள் இருபக்கமும் அழகாய் பொம்மைகள்
விளையாட்டுகள்
கல்யாணம் , இசை கச்சேரி, விருந்து உபசாரம்
அரிசோனா சாய் கோயிலில் போட்டு இருக்கும் நவராத்திரி கொலு பதிவில் எங்கள் வீட்டு கொலுவும் இடம்பெற்று இருக்கிறது. கல்யாண பாட்டுடன் எங்கள் வீட்டு கொலு இடம்பெறும். மேலும் முதலில் தெரியும் மூன்று அம்மன் எங்கள் வீட்டு அம்மன்கள். சாய் கோயில் கொலுவோடு மேலும் நாலு வீட்டு கொலு படங்கள் இடம்பெற்று இருக்கிறது.
கடைசியில் உள்ளதுதான் சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை அடுக்கி அதன் மேல் சரஸ்வதி அலங்காரம் செய்வோம். சரஸ்வதி பூஜைக்கு ஏடுஅடுக்குதல், விஜயதசமிக்கு ஏடுபிரித்தல் அதில் வைக்கப்பட்ட புத்தகம் எடுத்து வாசிப்போம், அன்று சில வீடுகளில் சிறு குழந்தைகள் இருந்தால் ஏடு தொடங்குதல் என்று படிக்க வைப்பார்கள்.
அக்டோபர் 23 தினமலர் பத்திரிக்கையில்
"அமெரிக்க தினமலர் வாசகர் வீட்டில் நவராத்திரி" என்ற தலைப்பில் மகன் வீட்டு கொலுவை பற்றிய செய்தி வந்து இருக்கிறது.
எங்கள் வீட்டு கொலுவுக்கு வந்தவர்களுக்கு மருமகள் கொடுத்த தாம்பூல பை, செல் வைத்துக் கொள்ள வசதியாக . இந்தியாவிலிருந்து வரவழைத்தது. இந்த கிண்ணமும், மஞ்சள், குங்கமும் அங்கு வாங்கியதுதான். பெரிய குழந்தைகளுக்கு பேனா அதில் வாசகம் எழுதி இருக்கும். ஒவ்வொருவரும் அதை எடுத்து தங்களுக்கு என்ன வந்து இருக்கிறது என்று படித்து மகிழ்ந்தார்கள். சிறிய குழந்தைகளுக்கு விளையாட்டு சாமானகள் கொடுத்தாள் மருமகள்.
முன்பு மாதிரி 9 படிகளை அமைத்து அதில் ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு என்று வைப்பதும், அவர் அவர்களுக்கு உள்ள திறமைக்கு ஏற்றவாறு கதைகள் சொல்லியும் பொம்மை கொலுவை சிறப்பாக செய்கிறார்கள். அப்படி ஒரு நண்பர் வீட்டில் முருகனை பற்றி வைத்து இருந்தார்கள், ஒரு வீட்டில் குருபரப்பரை என்று காஞ்சி பெரியவரை பற்றி வைத்து இருந்தார்கள், இன்னொரு வீட்டில் உடுப்பி கிருஷ்ணன் வரலாறு. இன்னொரு வீட்டில் துவாரகை கண்ணன் , இன்னொரு வீட்டில் இந்தியாவின் சிறந்த பெண்மணிகளை குறித்து வைத்து இருந்தார்கள் அதை அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
வேலைக்குபோய் கொண்டு, வீட்டுவேலைகளையும் பார்த்து கொண்டு நவராத்திரி கொலுவில் தங்கள் கை திறமைகளை காட்டி கொலுவை அழகு படுத்தி விட்டார்கள்.
வந்தவர்களுக்கு ருசியான உணவு, பிரசாதங்கள், மற்றும் தேர்வு செய்த பரிசு பொருட்கள், மற்றும் அன்பான உரையாடல் என்று உபசரித்து வந்தவர்களை அன்பு மழையில் நனைய வைத்தார்கள்.
நவராத்திரி பண்டிகை வீட்டில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக உற்சாகமாக வைத்து இருந்தது. எல்லோர் வீட்டு குழந்தைகளும் வயதானவர்களிடம் அன்புடன் உரையாடியது மேலும் மகிழ்ச்சி. பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். அயல் நாட்டில் இருந்தாலும் நம் பழக்க வழக்கத்தை கடைபிடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. பாட தெரிந்த குழந்தைகள் பாடுங்கள் என்றால் உடனே பாடினார்கள். வேலை வேலை என்று ஓடுபவர்கள் இந்த 10 நாட்களும் மகிழ்ச்சியாக எல்லோர் இடமும் உரையாடி மகிழ்ந்தார்கள்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
கொலு வைப்பதை விட வெளி நாடுகளில் இருப்பவர்கள் 5 படிகள் கொலுவிற்காக பொம்மைகளைச் சேர்ப்பதுச் மிக சிரமான விஷயம்.
பதிலளிநீக்குஅதையெல்லாம் ஒரு புன்முறுவலுடன் ஒதுக்கி வைத்து விட்டு கொலு வைத்து நண்பர்களையும் அழைத்து மகிழ்கிறார்களே! -- அந்த மனவியல்பைப் புரிந்து கொண்டால், எங்கள் வீட்டில் கொலு வைக்கும் வழக்கமில்லை என்று சொல்வாரும் கொலு வைக்க துவங்கி விடுவார்கள்..
நாமும் தான் செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில் தான் பலப்பல புதுப்புது பழக்கங்கள் கைவசப்படுகின்றன.
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
நீக்கு//கொலு வைப்பதை விட வெளி நாடுகளில் இருப்பவர்கள் 5 படிகள் கொலுவிற்காக பொம்மைகளைச் சேர்ப்பதுச் மிக சிரமான விஷயம்.
அதையெல்லாம் ஒரு புன்முறுவலுடன் ஒதுக்கி வைத்து விட்டு கொலு வைத்து நண்பர்களையும் அழைத்து மகிழ்கிறார்களே! -- அந்த மனவியல்பைப் புரிந்து கொண்டால், எங்கள் வீட்டில் கொலு வைக்கும் வழக்கமில்லை என்று சொல்வாரும் கொலு வைக்க துவங்கி விடுவார்கள்..//
முன்பு மாதிரி இல்லை சார், கொலு பொம்மைகள் வீடு தேடி வருகிறது பத்திரமாக. நாங்கள் மதுரையிலிருந்து அனுப்பியது மிக அருமையாக உடையாமல் வந்தது.
புது பொம்மைகள் சில நியுயார்க்கிலிருந்து வந்தது.
முன்பு வருடா வருடம் சேர்த்தோம் பொம்மைகள் வாங்கி. இப்போது புதிதாக கொலு வைப்பவர்கள் எல்லாம் முதலிலேயே வாங்கி விடுகிறார்கள். ஸ்ரீராம் வீட்டில் மருமகள் ஆசை பாட்டார் என்று எல்லா பொம்மைகளும் வாங்கி வைத்து விட்டார்கள் .
//நாமும் தான் செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில் தான் பலப்பல புதுப்புது பழக்கங்கள் கைவசப்படுகின்றன.//
செய்ய முடிந்தவர்கள், ஆசையாக செய்பவர்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து கொள்ளட்டும் சார்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நாங்கள் கொலு முதல் முறை வைத்ததால் இப்போது கொலுக்களை நான் பார்க்கும் பார்வை ஐடியா தேடும் பார்வையாக இருக்கிறது! பின்னணியில் பெரிய வாழை இலைகள் அல்லது மாவிலைகள், கோவில் பிரகாரம் போன்ற பின்னணி..
பதிலளிநீக்குஎல்லாமே சூப்பர்.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//நாங்கள் கொலு முதல் முறை வைத்ததால் இப்போது கொலுக்களை நான் பார்க்கும் பார்வை ஐடியா தேடும் பார்வையாக இருக்கிறது! பின்னணியில் பெரிய வாழை இலைகள் அல்லது மாவிலைகள், கோவில் பிரகாரம் போன்ற பின்னணி..
எல்லாமே சூப்பர்.//
ஆமாம், அடுத்த முறை நம் வீட்டு கொலுவுக்கு என்ன செய்யலாம் என்ற எண்ணம் வரும்.
அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றி.
அந்த நீல விளக்கு நாங்களும் போட்டிருந்தோம். அதில் படிகள் முழுக்க வருமாறு ஓம் என்று அமைக்க நினைத்தது பொம்மைகள் எல்லாம் வைத்த பிறகு. எனவே சரியாய் நிறைவேற்ற முடியவில்லை. அடுத்த முறை முன்னதாகவே இணைக்க திட்டம்!
பதிலளிநீக்கு//அந்த நீல விளக்கு நாங்களும் போட்டிருந்தோம். அதில் படிகள் முழுக்க வருமாறு ஓம் என்று அமைக்க நினைத்தது பொம்மைகள் எல்லாம் வைத்த பிறகு. எனவே சரியாய் நிறைவேற்ற முடியவில்லை. அடுத்த முறை முன்னதாகவே இணைக்க திட்டம்!//
நீக்குபார்த்தீர்களா! இப்போதுதான் சொன்னேன் அடுத்த முறை வைக்க யோசனைகள் கிடைக்கும் . அடுத்த முறை மிக நன்றாக செய்வீர்கள்.
அலங்காரங்கள். மயிலை கோவில் அருகில் கொலுவுக்கு வேண்டியப்பொருட்கள் எல்லாம் அழகாய் கிடைக்கும்.
எளிமையாய் சில, எடுத்துக் காட்டும் அளவு பெரிஐதாய் சில... தேசியக்கொடி பின்னணி அபாரம்.
பதிலளிநீக்கு//எளிமையாய் சில, எடுத்துக் காட்டும் அளவு பெரிஐதாய் சில... தேசியக்கொடி பின்னணி அபாரம்.//
நீக்குஆமாம்.
பியானோ... அந்தக் கால சினிமாக்களில் ஒரு பாடல் காட்சியிலாவது தப்பாது இடம்பெற்ற இசைக்கருவி. இந்தக் கால குழந்தைகளை, எல்லாம் கற்றுக் கொடுத்து என்னமாய் வளர்க்கிறார்கள்..
பதிலளிநீக்குபாராட்டுகளும், வாழ்த்துகளும்.
//பியானோ... அந்தக் கால சினிமாக்களில் ஒரு பாடல் காட்சியிலாவது தப்பாது இடம்பெற்ற இசைக்கருவி. இந்தக் கால குழந்தைகளை, எல்லாம் கற்றுக் கொடுத்து என்னமாய் வளர்க்கிறார்கள்..//
நீக்குஎல்லோர் வீடுகளிலும் இந்த இசைக்கருவி, சின்னதாக, பெரிதாக என்று இருக்கு. குழந்தைகள் புல்லாங்குழல், வீணை, வாய்ப்பாட்டு, நடனம் என்று கற்றுக் கொடுக்கிறார்கள். விடுமுறை நாளில் பிள்ளைகளை படிக்க அழைத்து கொண்டு போய் விட்டு அழைத்து வருகிறார்கள் .
//பாராட்டுகளும், வாழ்த்துகளும்.//
குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் கொடுக்க வேண்டும்..
பரிசுப்பொருள்கள் மனத்தைக் கவர்ந்தன. நாங்களும் இப்படி யோசித்து யோசித்து குழங்கைகள் வயதுக்கேற்ற பரிசுகள், பெரியவர்களுக்கு வித்தியாச பொருட்கள், பெண்களுக்கு பரிசுப்பொருளுடன் தரமான ரவிக்கை துண்டுகள், என்று..
பதிலளிநீக்குநான் அவர்களுடன் கூட வரும், அழைத்துக் கொண்டு வரும் ஆண்களுக்கும் கிப்ட் தரவேண்டும் என்று அவர்களுக்கும் தனியாக சில பொருட்கள் வாங்கி வைத்துக் கொடுத்தேன்.
அடடா.. எங்கள் வீட்டு கொலுவையும் படம் பிடித்து அனுப்பி இருந்தால் அதையும் பதிவில் இணைத்திருப்பீர்களே.... தனித்தனியாய் எடுத்து அனுப்பி இருக்கலாமே என்று தோன்றுகிறது!
பதிலளிநீக்கு//அடடா.. எங்கள் வீட்டு கொலுவையும் படம் பிடித்து அனுப்பி இருந்தால் அதையும் பதிவில் இணைத்திருப்பீர்களே.... தனித்தனியாய் எடுத்து அனுப்பி இருக்கலாமே என்று தோன்றுகிறது!//
நீக்குஅனுப்புங்கள் ஸ்ரீராம், பதிவர் வீட்டுக் கொலு என்று போட்டு விடலாம்.
பாடல்களும் அனுப்புங்கள் சேர்த்து விடலாம். என் மாமா பெண் வீட்டுக் கொலு, என் தம்பி வீட்டு கொலு எல்லாம் போட வேண்டும் அதனுடன் போட்டு விடுகிறேன்.
இந்த பதிவில் அரிசோனா கொலு மட்டும் இடம்பெறுகிறது.
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.
படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது சகோ.
பதிலளிநீக்குகடல் கடந்து வாழ்ந்தாலும் பாரம்பரியம் காப்பது பெருமையான விடயம் தான்....
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது சகோ.
கடல் கடந்து வாழ்ந்தாலும் பாரம்பரியம் காப்பது பெருமையான விடயம் தான்//
அவர்களுக்கு தங்கள் ஊரில் இருப்பது போல நவராத்திரி சமயம் நினைப்பு இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் என்று வீடு ஜே! ஜே !என்று இருக்கும்.
ஊருக்கு போக முடியாதவர்கள் மனசாந்தி அடைந்து கொள்வார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.
பலரது வீடுகளிலிருந்து கொலு காட்சிகள்... அனைத்தும் சிறப்பு.
பதிலளிநீக்குஎங்களது வீட்டில் வைத்த கொலு - வருடா வருடம் திருச்சியின் பிரபலமான ஒரு நகைக்கடையிலிருந்து வந்து படங்களும் காணொளிகளும் எடுத்துச் செல்வார்கள். இந்த வருடமும் அப்படி எடுத்தார்கள். உள்ளூர் தொலைக்காட்சியிலும் இந்தக் காணொளி வந்தது.
ஒவ்வொரு வருடமும் இதற்கென மெனக்கெடுவது சிறப்பான விஷயம் தான். கடினமான வேலை என்றாலும் மனதுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரக்கூடிய விஷயமாகவே இருக்கிறது.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//பலரது வீடுகளிலிருந்து கொலு காட்சிகள்... அனைத்தும் சிறப்பு.
எங்களது வீட்டில் வைத்த கொலு - வருடா வருடம் திருச்சியின் பிரபலமான ஒரு நகைக்கடையிலிருந்து வந்து படங்களும் காணொளிகளும் எடுத்துச் செல்வார்கள். இந்த வருடமும் அப்படி எடுத்தார்கள். உள்ளூர் தொலைக்காட்சியிலும் இந்தக் காணொளி வந்தது.//
உங்கள் வீட்டுக் கொலு மிகவும் அருமையாக இருந்தது. ஆமாம்
உள்ளூர் தொலைக்காட்சியிலும் வந்து எடுப்பார்களே! வரும்.
நகை கடை ஏற்பாடு செய்து உள்ளூர் தொலைக்காட்சியில் ஒலிபரப்புவது அருமை.
மாயவரத்தில் இருக்கும் போது உள்ளூர் தொலைக்காட்சி வந்து எடுத்து போனார்கள். எல்லோரும் பார்த்தார்கள், நாங்கள் பார்க்க முடியவில்லை. எங்கள் வீட்டில் ஏர்டெல் டிஷ் போட்டு இருந்தோம் அதனால் உள்ளூர் கேபிள் டிவி தெரியாது.
//ஒவ்வொரு வருடமும் இதற்கென மெனக்கெடுவது சிறப்பான விஷயம் தான். கடினமான வேலை என்றாலும் மனதுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரக்கூடிய விஷயமாகவே இருக்கிறது.//
ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை. கொலு வைப்பது பின் எடுத்து பத்திரப்படுத்துவது எல்லாம் சிரமம் தான், ஆனாலும் அந்த 10 நாட்களும் மகிழ்ச்சியாக இருக்கும் அதற்கு கஷ்டங்களை பொறுத்து கொள்கிறோம் நாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. கொலு படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
/வேலைக்குபோய் கொண்டு, வீட்டுவேலைகளையும் பார்த்து கொண்டு நவராத்திரி கொலுவில் தங்கள் கை திறமைகளை காட்டி கொலுவை அழகு படுத்தி விட்டார்கள்./
உண்மை. ஒவ்வொரு ஊரிலிருந்து அங்கு வந்தவர்களும் இப்படி அபாரமாக கொலுக்கள் வைத்து அசத்தியிருப்பது மிகவும் வியக்க வைக்கிறது. எத்தனை பொறுமை.. எத்தனை கலைநயத்துடன் வைத்துள்ளார்கள்..? அத்தனையையும் ரசித்துப் பார்த்தேன்.
கோவில் பிரகாரம் போல பிண்ணனியுடன் கூடிய கொலு, தேசிய கொடி போன்ற அமைப்புடன் கூடிய கொலுவெல்லாம் கண்களை கவர்கிறது. எல்லா கொலுவில் பொம்மைகளையும் நீங்கள் விதவிதமான கோணங்களில் படமெடுத்து போட்டிருப்பது மிக நன்றாக உள்ளது.
பியோனோ வாசித்துக்காட்டிய பையருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சொன்னவுடன் வந்து வாசித்துக் காட்டவும் ஒரு நல்ல பண்பு வேண்டுமே..! கொலுக்கள் வைத்த குடும்பங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்.
கொலுவுக்கு வந்தவர்கள்களுக்கு பரிசாக தருவதற்கு தங்கள் மருமகள் வாங்கிய பொருட்கள் மிக அழகாக இருக்கிறது. மிகுந்த பொறுமையுடன் கொலுவையும் பார்த்துப் பார்த்து வைத்து சிறப்பாக பத்து நாட்களும், வீட்டையும், கொலுவையும் கவனித்த தங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் .
இங்கும் அனேகர் வீட்டு கொலுவுக்கு சென்றவிடங்களில், எங்கள் குழந்தைகளுக்கு பரிசாக வளையல்கள், காதணிகள் தலையில் வைத்துக் கொள்ள கிளிப்புகள் என தந்து கொண்டாடினார்கள். ஒரு வீட்டில் உடைகள் (கவுன்) வேறு எடுத்துத் தந்தார்கள்.
அங்கு சென்றும் இப்படி இந்திய பாரம்பரியங்களை விடாது செய்பவர்களுக்கு பாராட்டுக்கள்.பார்க்கப் பார்க்க அலுக்காத எல்லா கொலுவையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. கொலு படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
நன்றி கமலா
//ஒவ்வொரு ஊரிலிருந்து அங்கு வந்தவர்களும் இப்படி அபாரமாக கொலுக்கள் வைத்து அசத்தியிருப்பது மிகவும் வியக்க வைக்கிறது. எத்தனை பொறுமை.. எத்தனை கலைநயத்துடன் வைத்துள்ளார்கள்..? அத்தனையையும் ரசித்துப் பார்த்தேன்.//
ஆமாம் , அவர்கள் வீட்டு வழக்கப்படி ஒவ்வொருவரும் கொலு வைத்து வழிபட்டார்கள்.
//கோவில் பிரகாரம் போல பிண்ணனியுடன் கூடிய கொலு, தேசிய கொடி போன்ற அமைப்புடன் கூடிய கொலுவெல்லாம் கண்களை கவர்கிறது. எல்லா கொலுவில் பொம்மைகளையும் நீங்கள் விதவிதமான கோணங்களில் படமெடுத்து போட்டிருப்பது மிக நன்றாக உள்ளது.
பியோனோ வாசித்துக்காட்டிய பையருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சொன்னவுடன் வந்து வாசித்துக் காட்டவும் ஒரு நல்ல பண்பு வேண்டுமே..! கொலுக்கள் வைத்த குடும்பங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்.//
ஆமாம், அவர்கள் வீட்டில் காலை உணவுடன், தீபாவளி பலகாரம் அம்மா அனுப்பியது என்று தந்தார்கள்.
எல்லோரும் ஊரின் நினைவுகளுடன் ஊரின் தொடர்புடன் இருக்கிறார்கள்..
//கொலுவுக்கு வந்தவர்கள்களுக்கு பரிசாக தருவதற்கு தங்கள் மருமகள் வாங்கிய பொருட்கள் மிக அழகாக இருக்கிறது. மிகுந்த பொறுமையுடன் கொலுவையும் பார்த்துப் பார்த்து வைத்து சிறப்பாக பத்து நாட்களும், வீட்டையும், கொலுவையும் கவனித்த தங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் .//
அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வழங்கியதற்கு மிகவும் நன்றி.
//இங்கும் அனேகர் வீட்டு கொலுவுக்கு சென்றவிடங்களில், எங்கள் குழந்தைகளுக்கு பரிசாக வளையல்கள், காதணிகள் தலையில் வைத்துக் கொள்ள கிளிப்புகள் என தந்து கொண்டாடினார்கள். ஒரு வீட்டில் உடைகள் (கவுன்) வேறு எடுத்துத் தந்தார்கள்.//
இங்கும் பெண் பிள்ளைகளுக்கு ஏற்றமாதிரி , ஆண்குழந்தைகளுக்கு ஏற்றமாதிரி எல்லாம் கொடுத்தாள் மருமகள். பெண் குழந்தைகளை அவர்கள் வயதுக்கு ஏற்றார் போல மனையில் அமர்த்தி மரியாதை செய்து ஆடை கொடுப்பது நல்லது.
//அங்கு சென்றும் இப்படி இந்திய பாரம்பரியங்களை விடாது செய்பவர்களுக்கு பாராட்டுக்கள்.பார்க்கப் பார்க்க அலுக்காத எல்லா கொலுவையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
பிழைக்க போனாலும் நம் பாரம்பரியத்தை விடாது கடைபிடிப்பதை பாராட்டி வாழ்த்தி மகிழ்வோம்.
உங்கள் விரிவான அன்பான கருத்துக்கும், வாழ்த்துகள், பாராட்டுக்களுக்கும் நன்றி நன்றி கமலா.
ஆமாம் அக்கா அந்த கல்யாண செட் ரொம்ப நல்லாருக்கு. மணவறையில் உட்கார்ந்திருப்பது போலவும் இருக்கு இல்லையா?
பதிலளிநீக்குஇந்கு எங்கள் உறவினர் கல்யாணத்தில் எங்கள் சமூகக் கல்யாணம் எப்படி நடத்தப்படும் என்று எல்லா நிகழ்வுகளுமே காசியாத்திரை முதல் நலுங்கு வரை எல்லாமே வரிசையாகப் பல மேசைகள் போட்டு வைத்திருந்தாங்க. ஆர்டர் செய்து வாங்கினாங்களாம். மாப்பிள்ளை அழைப்பு, கோயிலுக்குச் செல்வது என்று அனைத்தும்....அப்படி விற்கிறார்களாமே...
நான் புகைப்படம் எடுத்தேனா என்று நினைவில்லை. இருக்கிறதா என்று பார்க்க வேன்டும்.
கீதா
//ஆமாம் அக்கா அந்த கல்யாண செட் ரொம்ப நல்லாருக்கு. மணவறையில் உட்கார்ந்திருப்பது போலவும் இருக்கு இல்லையா?//
நீக்குஅமர்ந்து இருப்பது எல்லோர் வீடுகளில் இருக்கும் இதில் நாத்தி விளக்கு சின்ன பெண் பிடித்து இருப்பார். கல்யாணத்திற்கு பூஜை பாத்திரங்கள் சீர் கொடுப்பது இருக்கும்.
//இந்கு எங்கள் உறவினர் கல்யாணத்தில் எங்கள் சமூகக் கல்யாணம் எப்படி நடத்தப்படும் என்று எல்லா நிகழ்வுகளுமே காசியாத்திரை முதல் நலுங்கு வரை எல்லாமே வரிசையாகப் பல மேசைகள் போட்டு வைத்திருந்தாங்க. ஆர்டர் செய்து வாங்கினாங்களாம். மாப்பிள்ளை அழைப்பு, கோயிலுக்குச் செல்வது என்று அனைத்தும்....அப்படி விற்கிறார்களாமே...//
ஆமாம், இப்போது தொலைக்காட்சியில் பார்த்தேன். ஆண்டாள் கல்யாணம், மற்றும் சமூக கல்யாணம் எல்லாம் பார்த்தேன்.
நான் புகைப்படம் எடுத்தேனா என்று நினைவில்லை. இருக்கிறதா என்று பார்க்க வேன்டும்.
கீழ்படியில் உள்ள பட்டாபிஷேக பொம்மைகள், துளசி பூஜை செய்யும் பொம்மைகள் அழகு//
பதிலளிநீக்குஆமாம் கூடவே முமூர்த்திகளும் சூப்பரா இருக்காங்க!
ஒரு வீட்டில் திருப்பதி கோயில் வளாகம், மலை என்று திருப்பதியையே கொண்டு வந்தது போல வைச்சிருந்தாங்க. இப்ப எல்லாம் அப்படி விற்கிறாங்க போல இல்லைனா ஆர்டர் செய்து வாங்குவாங்களோ என்னவோ?
கீதா
//முமூர்த்திகளும் சூப்பரா இருக்காங்க!
நீக்குஒரு வீட்டில் திருப்பதி கோயில் வளாகம், மலை என்று திருப்பதியையே கொண்டு வந்தது போல வைச்சிருந்தாங்க. இப்ப எல்லாம் அப்படி விற்கிறாங்க போல இல்லைனா ஆர்டர் செய்து வாங்குவாங்களோ என்னவோ?//
சென்னையிலிருந்து வரவழைத்த பொம்மைகள் கீதா இவர்கள் வீட்டில். இவர்கள் ஒரு பெண் மிக அருமையாக பாடுவாள், இன்னொரு பெண் புல்லாங்குழல் வாசிப்பாள். இரண்டு பெண்களும் அருமையான குழந்தைகள்.
அந்த சிம்பிள் கொலுவின் பின்னணி கோயில் பிராகாராம் செமையா இருக்கு 3 டி எஃபெக்ட் போல அருமை
பதிலளிநீக்குமாயவரம் வீட்டு கொலுவும்நல்லாருக்கு மயில் வடிவில் அம்மன் தெரியவில்லை
திருப்பூர் வீட்டுக் கொலுவு சிம்பிள் ராஜேஸ்வரி பூஜித்தல் நல்லாருக்கு
கும்பகர்ணன் 4 வருடங்களுக்கு முன்னரே என் தங்கை பெண் வீட்டில் வாங்கி வைத்திருந்தாங்க புது பொம்மை என்று
பெருமாள் வீதி வலம் 1989ல் முதன் முதலில் காதியில் இறக்கியிருந்தாங்க. நான் என் மாமியார் வீட்டு கொலுவுக்கு வாங்கினேன் நான் முதல் ஆள் என்று சொன்னாங்க கடையில். அப்ப அது 100 ரூ இன்னும் கொஞ்சம் சிறிய பொம்மைகள் ஆனால் அழகாகச் செய்திருந்தாங்க. நிறைய உண்டு ஃபுல் செட்டில். தெருவில் விழுந்து கும்பிடுவது போன்று எல்லாம் பொம்மைகள் உண்டு செட்டில், சாமரம் வீசுவது, தீப்பந்தம் பிடிப்பது போன்று டவாலி போன்று என்று சூப்பராக இருக்கும்.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குஅந்த சிம்பிள் கொலுவின் பின்னணி கோயில் பிராகாராம் செமையா இருக்கு 3 டி எஃபெக்ட் போல அருமை//
ஆமாம்,எனக்கும் பிடித்தது.
//மாயவரம் வீட்டு கொலுவும்நல்லாருக்கு மயில் வடிவில் அம்மன் தெரியவில்லை//
இரண்டாவது படியில் முதலில் இருக்கு. முன்பு போட்ட பழைய பதிவில் அந்த மயில் அம்மன் பூஜிப்பதை தனியாக எடுத்து போட்டேன்.
//திருப்பூர் வீட்டுக் கொலுவு சிம்பிள் ராஜேஸ்வரி பூஜித்தல் நல்லாருக்கு
கும்பகர்ணன் 4 வருடங்களுக்கு முன்னரே என் தங்கை பெண் வீட்டில் வாங்கி வைத்திருந்தாங்க புது பொம்மை என்று
பெருமாள் வீதி வலம் 1989ல் முதன் முதலில் காதியில் இறக்கியிருந்தாங்க. நான் என் மாமியார் வீட்டு கொலுவுக்கு வாங்கினேன் நான் முதல் ஆள் என்று சொன்னாங்க கடையில். அப்ப அது 100 ரூ இன்னும் கொஞ்சம் சிறிய பொம்மைகள் ஆனால் அழகாகச் செய்திருந்தாங்க. நிறைய உண்டு ஃபுல் செட்டில். தெருவில் விழுந்து கும்பிடுவது போன்று எல்லாம் பொம்மைகள் உண்டு செட்டில், சாமரம் வீசுவது, தீப்பந்தம் பிடிப்பது போன்று டவாலி போன்று என்று சூப்பராக இருக்கும்.//
ஆமாம், இவை எல்லாம் பழசுதான். போன வருடம் அத்தி வரதர், இந்த வருடம் அயோத்தி ராமர் இது தான் புதிது. சில வீடுகளில் வாங்கி வைத்து இருந்தார்கள். சாமி புறப்பாடு பொம்மைகள் வித விதமாக இருக்கிறது சில வீடுகளில்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஉங்கள் வீட்டு கொலு அமெரிக்க தினமலர் பத்திரிக்கை எடுத்துப் போட்டு பாராட்டியிருப்பதை பார்த்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. கருத்தில் அதை சொல்ல நினைத்து விடுபட்டு போய் விட்டது. அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தினமலர் பத்திரிக்கை செய்தியை பாராட்டியதற்கு நன்றி கமலா.
நீக்குசாய் கோயில் காணொளி பார்க்கவில்லையா அதிலும் எங்கள் கொலு இடம்பெற்று இருக்கிறது.
மீண்டும் வந்து கருத்து சொல்லி பாராட்டியதற்கு நன்றி.
சேலம் - கல்யாணம் காதுகுத்து விருந்து என்று அழகான செட். இப்படி இன்னும் நிறைய செட்கள் வந்திருக்கும். எனக்கு ரொம்பப் பிடிக்கும் கொலு வேலை கூடுதல் ஆனால் மனதில் உற்சாகம் வரும் நமது கற்பனைத்திறன் பெருகும்...எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆனால் வைக்க முடியவில்லை.
பதிலளிநீக்குதிருநெல்வேலி யும் சிம்பிள் நல்லாருக்கு. சிவகாசி கவர்க்கிறது.
செஸ் பார்த்ததும் மகாபாரதக் காட்சியோன்னு நினைச்சேன். விளையாட்டுகள் ரொம்ப நல்லா வைச்சிருக்காங்க.
மீதம் நாளை பார்க்கிறென் கோமதிக்கா...தூக்கம் கண்ணை தழுவி என்னை அறியாமல் நாற்காலியில் உன்ட்கார்ந்ந்த நிலையிலேயே!
கீதா
சென்னையிலிருந்து கடைசி மாவட்டம் கன்னியாகுமரி அருகில் வரை வந்தாச்சு...
//சேலம் - கல்யாணம் காதுகுத்து விருந்து என்று அழகான செட். இப்படி இன்னும் நிறைய செட்கள் வந்திருக்கும். எனக்கு ரொம்பப் பிடிக்கும் கொலு வேலை கூடுதல் ஆனால் மனதில் உற்சாகம் வரும் நமது கற்பனைத்திறன் பெருகும்...எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆனால் வைக்க முடியவில்லை.//
நீக்குஆமாம், கலைகளுக்கு சிறப்பு தரும் நவராத்திரி. உங்கள் ஆர்வம் தெரியும் வைக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?
//திருநெல்வேலி யும் சிம்பிள் நல்லாருக்கு. சிவகாசி கவர்க்கிறது.
செஸ் பார்த்ததும் மகாபாரதக் காட்சியோன்னு நினைச்சேன். விளையாட்டுகள் ரொம்ப நல்லா வைச்சிருக்காங்க.//
ஆமாம்.
//மீதம் நாளை பார்க்கிறென் கோமதிக்கா...தூக்கம் கண்ணை தழுவி என்னை அறியாமல் நாற்காலியில் உன்ட்கார்ந்ந்த நிலையிலேயே!//
ஓய்வு எடுங்க. வேலை அதிகம் ஊருக்கு போய் வந்து. மெதுவாக பார்க்கலாம் அனைத்தையும் நேரம் கிடைக்கும் போது.
கீதா
//சென்னையிலிருந்து கடைசி மாவட்டம் கன்னியாகுமரி அருகில் வரை வந்தாச்சு...//
ஆமாம். நம் இந்திய மக்கள் பரந்து விரிந்து இருக்கிறார்கள். "திரைகடலோடியும் திரவியம் தேடு " வாக்கை மெய் ஆக்கி உள்ளார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தேசியக்கொடி படியில் பின்னணி அலங்காரம் சூப்பர்.
பதிலளிநீக்குஅந்தக் குழந்தை பியானோ கற்க வைத்து வாசிப்பது மிக அருமை.
என் மகனுக்கு வீணை கற்க வைத்தேன் கீர்த்தனை வரை எட்டினான். நன்றாக வாசிப்பான் சினிமா பாட்டிற்கும் ஸ்வரம் எளிதாக எடுத்துவிடுவான் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு சமயத்தில்.... வீணையில் வாசிக்கும் திறன் உண்டு ஆனால் படிப்பில் கவனம் சென்றதால் தொடர இயலவில்லை. அவனுக்கு ஏதேனும் ஒன்றுதான் செய்ய முடியும் அதுவும் ரொம்ப மெதுவாகத்தான். இப்போது எவ்வளவோ அதில் முன்னேற்றம்.
அரிசோனா சாய் கோயில் கொலு வீடியோவில் எல்லாமே நன்றாக இருக்கிறது உங்கள் வீட்டு கொலுவும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி. தெரிந்தது கோமதிக்கா
கீதா
//அந்தக் குழந்தை பியானோ கற்க வைத்து வாசிப்பது மிக அருமை.
நீக்குஎன் மகனுக்கு வீணை கற்க வைத்தேன் கீர்த்தனை வரை எட்டினான். நன்றாக வாசிப்பான் சினிமா பாட்டிற்கும் ஸ்வரம் எளிதாக எடுத்துவிடுவான் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு சமயத்தில்.... வீணையில் வாசிக்கும் திறன் உண்டு ஆனால் படிப்பில் கவனம் சென்றதால் தொடர இயலவில்லை. அவனுக்கு ஏதேனும் ஒன்றுதான் செய்ய முடியும் அதுவும் ரொம்ப மெதுவாகத்தான். இப்போது எவ்வளவோ அதில் முன்னேற்றம்.//
உங்கள்மகன் வீணை வாசிப்பார்கள் என்று கேட்டு
மகிழ்ச்சி. இப்போது நேரம் கிடைக்கும் போது அவர்கள் வீணை வாசிக்கலாம் இல்லையா? நினைவு இருக்கும் தானே சிறு வயதில் படித்தது.
இங்கு உள்ள பிள்ளைகளும் மேற்படிப்பு படிக்கும் போது தொடருவார்களா தெரியவில்லை. தொடர்ந்தால் நல்லது.
//அரிசோனா சாய் கோயில் கொலு வீடியோவில் எல்லாமே நன்றாக இருக்கிறது உங்கள் வீட்டு கொலுவும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி. தெரிந்தது கோமதிக்கா//
வீடியோ பார்த்தது மகிழ்ச்சி.
தாம்பூலப்பை சூப்பர். மொபைல் ஃபோன் வைத்துக் கொள்ளும்படி இருப்பது.
பதிலளிநீக்குதினமலரில் உங்கள் மகன் சொல்லியிருப்பதை வாசித்தேன். மிக்க மகிழ்ச்சி கோமதிக்கா. தினமலரிலும் உங்கள் வீட்டு கொலு பற்றி வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி,
அலங்காரங்கள் நிகழ்வுகள் எல்லாமே சூப்பர் ரசித்தேன் கோமதிக்கா. எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை இது. 10 நாட்களும் உத்சவம் போன்று மகிழ்வளிக்கும் நிகழ்வு.
கீதா
//தாம்பூலப்பை சூப்பர். மொபைல் ஃபோன் வைத்துக் கொள்ளும்படி இருப்பது.//
நீக்குமொபைல் ஃபோன் வைத்து கொள்ளசொல்லி செய்ய சொன்னாள்.
//தினமலரில் உங்கள் மகன் சொல்லியிருப்பதை வாசித்தேன். மிக்க மகிழ்ச்சி கோமதிக்கா. தினமலரிலும் உங்கள் வீட்டு கொலு பற்றி வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி,
அலங்காரங்கள் நிகழ்வுகள் எல்லாமே சூப்பர் ரசித்தேன் கோமதிக்கா. எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை இது. 10 நாட்களும் உத்சவம் போன்று மகிழ்வளிக்கும் நிகழ்வு.//
அனைததையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
கொலு படங்கள் அனைத்தும் மிக அழகு.
பதிலளிநீக்குஇந்த மாதிரி பண்டிகைகளைச் சாக்காக வைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது, மற்றவர்களைச் சந்திப்பது மிக நல்ல விஷயம்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குபோன பதிவு கவின் நாடகம் பார்த்து கருத்து சொல்வீர்கள் என்று பார்த்தேன்.
வெளியூர் பயணம் அதுதான் சொல்லமுடியவில்லை என்று நினைக்கிறேன்.
//கொலு படங்கள் அனைத்தும் மிக அழகு.
இந்த மாதிரி பண்டிகைகளைச் சாக்காக வைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது, மற்றவர்களைச் சந்திப்பது மிக நல்ல விஷயம்.//
ஆமாம், பண்டிகை மூலமாக நண்பர்கள் சந்தித்து உரையாடி மகிழ்வாக இருக்க முடிவது உண்மை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கொலுப்படி வைப்பதற்கு மிகவும் மெனெக்கிடனும். என் பெண், அவள் வீட்டில் கொலு வைத்திருந்தாள். பார்க்க அழகாக இருந்தது. எங்கள் வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் கிடையாது.
பதிலளிநீக்கு//கொலுப்படி வைப்பதற்கு மிகவும் மெனெக்கிடனும். என் பெண், அவள் வீட்டில் கொலு வைத்திருந்தாள். பார்க்க அழகாக இருந்தது. எங்கள் வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் கிடையாது.//
நீக்குபெண்ணுக்கு கொலு பொம்மைகள் வாங்கி கொடுத்தேன் என்று சொல்லி இருந்தீர்கள்.
பெண் வீட்டு கொலு அழகாய் இருந்தது மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கொலுக்கள் அனைத்தும் மிக அழகு, அந்த கும்பகர்ணன் பொம்மையை மிகவும் ரசிக்கிறேன்...:)
பதிலளிநீக்குவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்கு//கொலுக்கள் அனைத்தும் மிக அழகு, அந்த கும்பகர்ணன் பொம்மையை மிகவும் ரசிக்கிறேன்...:)//
உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வாழ்த்துக்கு நன்றி.
உங்களுக்கும் என் வாழ்த்துகள்.
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் கோமதி அக்கா...
பதிலளிநீக்குவணக்கம் பிலஹரி அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குஅக்கா ஊரிலே இல்லை ஒரு மாதமாக ஊர் ஊராக அலைச்சல்.
இப்போதுதான் ஏதாஸ்தானம்(மதுரை) வந்து இருக்கிறேன்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அதிரா.
ஒவ்வொரு வீட்டுக் கொலுவும் அருமை. நீங்கள் ரசித்தவற்றைப் பற்றிய குறிப்புகள் அவற்றைத் தேடிப் பார்த்து ரசிக்க உதவியாக இருந்தது. கோயில் பிரகாரத்தில் கூரை ஓவியம் நான் சமீபத்தில் சென்ற வைரவன் பட்டி கோவிலை நினைவு படுத்தியது. காணொளி அருமை. படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//ஒவ்வொரு வீட்டுக் கொலுவும் அருமை. நீங்கள் ரசித்தவற்றைப் பற்றிய குறிப்புகள் அவற்றைத் தேடிப் பார்த்து ரசிக்க உதவியாக இருந்தது. //
இன்னும் சில வீடுகள் கொலூ பதிவுகள் போட வேண்டும் என்று நினைத்தேன், முடியவில்லை.
//கோயில் பிரகாரத்தில் கூரை ஓவியம் நான் சமீபத்தில் சென்ற வைரவன் பட்டி கோவிலை நினைவு படுத்தியது. //
ஆமாம். கோவில் அமைப்புதான்.
//காணொளி அருமை. படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.////
அனைத்தையும் ரசித்துப்பார்த்து அருமையான பின்னூட்டம் கொடுத்தற்கு நன்றி ராமலக்ஷ்மி.
கோயில் பிரகாரத்தில் கூரை ஓவியம் நான் சமீபத்தில் சென்ற வைரவன் பட்டி கோவிலை நினைவு படுத்தியது. காணொளி அருமை. படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
நவராத்திரி கொலுவில் உங்கள் வீட்டுக் கொலு தினமலரில் வந்ததற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநண்பர்கள் வீட்டு கொலுக்களுக்கும் சென்று படங்கள் எடுத்து எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
கொலுப் படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//நவராத்திரி கொலுவில் உங்கள் வீட்டுக் கொலு தினமலரில் வந்ததற்கு வாழ்த்துகள்.
நண்பர்கள் வீட்டு கொலுக்களுக்கும் சென்று படங்கள் எடுத்து எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
கொலுப் படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.//
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.