சனி, 19 அக்டோபர், 2024

நவராத்திரி கொலுவும், பேரனின் பக்தபிரகலாதா நாடகமும்

மீனாட்சி கல்யாணம் போல அமைப்பு கொலுப்படிகள் இந்த முறை. 

அரிசோனாவில் மகன்  வீட்டு கொலு படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

மணமகன், மணமகள் வீட்டார்  போல படிகளை அமைத்து  இருந்தாள், நடுவில் கல்யாண செட்.

மருமகளின் அக்கா மகனுக்கு திருமணம் நவம்பர் மாதம் 8ம் தேதி .  அதனால்  இப்படி அமைத்து இருந்தாள். 

ஒரு படியில் பட்டு வேஷ்டியும், இன்னொரு படிகளில் பட்டுப்புடவையும் போட்டு பொம்மைகளை அடுக்கி வைத்தாள். நண்பர் குடும்பம் மற்றும் நாங்களும் பொம்மைகளை அடுக்கினோம்.

மருதாணி வைக்கும் விழா அலங்காரம்  மருமகள் செய்தாள்.

கொலுவுக்கு முன் வருடா வருடம்  ஐந்து குடும்பங்களை அழைத்து  மருதாணி வைத்து விடுவாள் . மருமகளின் தோழி மற்றும் அவர்கள் வீட்டுக்கு வந்து இருந்த பெற்றோர்களும் (தாய்மார்கள்) வந்து ஆசையாக வைத்து கொண்டார்கள்.  குஜராத்தி பெண் ஒருவர் வைத்து விடுவார்.



பேரன் தயார் செய்த நவராத்திரி அழைப்பிதழ் மிக சிறிய காணொளிதான்

இரட்டை நாயனம் வைத்து தடபுடலாக கல்யாணம்
ஒரு நாகசுரம் குழு கீழே அமர்ந்து வாசிக்கிறார்கள், ஒரு குழு நின்று கொண்டு வாசிக்கிறார்கள். சின்ன தட்டுகளில் முந்திரி, பாதாம், பப்பர்மிண்ட் மிட்டாய்,  உலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ் பழம்) வைத்து இருப்பது தெரிகிறதா?

நின்று கொண்டு வாசிக்கும் நாகசுரம் (நாதஸ்வரம்) செட், பாவைவிளக்கு எங்கள் வீட்டு பழைய  பொம்மைகள்.

வெள்ளைப்பூ வைத்து இருக்கும் கிண்ணம் சுழலும்

கல்யாண செட், மற்றும் தசாவதாரம் செட்  இந்த முறை புதிது.

கீழ் வரிசையில் இருக்கும் இராமயண செட் போன வருடம் வாங்கியது, அதில் உள்ள இராவணனை எடுத்து விட்டதால் (ராவணணை இரண்யகசிபு வாக ஆக்கி விட்டதால் ) மீண்டும் வாங்கியது.

மதுரை எங்கள் வீட்டு பொம்மைகள், மற்றும் சம்பந்தி வீட்டு பொம்மைகளும்  இந்த முறை  கொலுவில் உள்ளது.
 


கல்யாணவீட்டு வாசலில் ஜவ் மிட்டாய் விற்பவர், அவரிடம் கைகடிகாரம்,  ஜஸ்கிரீம் போல மிட்டாய் வாங்கி  இருக்கும் பிள்ளைகள். 




பேரனின் நாடகம் பாருங்கள் பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று ,அவனிடம் சொன்னால் மகிழ்வான்.

இந்த முறை புரஜக்டர்  மூலம் "கவின் திரையரங்கில்" அவன் பொம்மைகளை வைத்து நாடகம் தயார் செய்ததை   காட்டினான்.

எப்படி எடுத்தான் என்பதை நாடகத்தின் கடைசியில் காட்டுவான் , கடைசி வரை காணொளியை பாருங்கள்.

10 நாட்களும் நாரயாண மந்திரம் காதில் ஒலித்து கொண்டே இருந்தது. அவன் நாடகம் தயார் செய்த நாளிலிருந்தும் வீட்டில் நாராயண மந்திரம் பாடல் ஒலித்தது.  


இரட்டை குழந்தைகள் வந்து இருந்தார்கள் , வந்தவர்கள் எல்லோரிடமும் ஆசையாக போனார்கள்,  எல்லோரும் தூக்கி வைத்து மகிழ்ந்தார்கள். 

வெற்றிகரமாக ஓடுகிறது  பக்த பிரகலாதா  4 டி நிகழ்ச்சி என்று மகன் தயார் செய்த  காணொளி அன்பர்களுக்கு அனுப்பினான். மிக சிறிய காணொளிதான் பாருங்கள்.

ஹோலோகிராம். முறையில் பிரம்மா, நாராயணன் பேசுவைதை பேரன் நாடகத்திற்கு மகன் செய்து இருந்தான். அவர்கள் பேசும் போது அதை இயங்க வைப்பது அவன் வேலை என்பதால் இந்த முறை தனியாக மகன் எதுவும் செய்யவில்லை.



நாடகம் பார்க்க அமர்ந்து இருப்பவர்கள்





அவன் அறைக்கு விரைகிறான்

நாடகம் முடிந்தவுடன் அவன்  படம்பிடித்த அறையில் அவன் கதாபாத்திரங்களை  குரூப் போட்டோ எடுப்பது போல   வைத்து இருந்ததை  காட்டினான். அதை நான் படம் எடுத்து உங்களுக்கு காட்டி இருக்கிறேன். 


 பிரம்மா   7 ம் வகுப்பு படிக்கும் போது வரைந்த ஓவியம்.  சாமரம் வீசும் பெண்கள், நாரதர் எல்லாம் பிரிண்ட்அவிட் எடுத்து வைத்து கொண்டான். அதற்கு பொம்மை இல்லை.

மற்றவைகள், போன ஆண்டு போட்ட இராமாயண பொம்மலாட்டம் நாடகத்திற்கு வாங்கிய  இராமாயண செட்டில் உள்ள பொம்மைகளை  இந்த நாடகத்திற்கு எடுத்து கொண்டான்,  ராவணனுக்கு ஒரு தலையை மட்டும் வைத்து கொண்டு மீதி   தலைகளை  வெட்டி   எடுத்து  இரண்யகசிபு   செய்தான். துணியில் செய்த பொம்மைகள் அவை.

 மருமகளும் அவள் அம்மாவும்   அவர் தலையை முடி எல்லாம் வைத்து தைத்து கொடுத்தார்கள். இரண்யகசிபு குடல் ரெடி செய்து கொடுத்தது அந்த ஆச்சிதான். நான் சில ஆலோசனைகள் சொன்னேன்,  மற்றும்  புயல் வரும் போது சருகுகள் பறப்பதற்கு  காய்ந்த இலைகள் எடுத்து வந்து  கொடுத்து உதவினேன்.  மகன் , மருமகள் அவன் கேட்பதை வாங்கி கொடுத்தார்கள்.  

பள்ளி விட்டு வந்து  வீட்டுப்பாடங்களை முடித்து பின்  இரவு தூங்க போகும் வரை நாட்கம் தயார் செய்வான். ஒருமாதம் காலம்   ஆனது  நாடகம் தயார் செய்ய. ஆனாலும் அவன் பல குரல்களில் முன்பு  போல பேசவில்லை  சினிமா வசனங்களை அப்படியே வைத்து விட்டான்.  அவனுக்கு நேரமில்லை 10 வது படிப்பதால்.
நரசிம்மர் வரும் தூண் செய்கிறான். நான் அவனுக்கு தெரியாமல் படம் எடுத்தேன், அவன் படம்பிடிப்பை பார்க்க கூடாது என்று சொல்லி இருந்தான்.

குழந்தைகள், பெரியவர்கள் பாடினார்கள் , அனைவரும் எங்களுடன் படங்கள் எடுத்து கொண்டார்கள்  10 நாட்களும்   எல்லோருடன்  கலந்துரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. 

கொலுபார்க்க பாவடை தாவணியில் வந்த குழந்தை மனதை கவர்ந்தாள்

மகனும் மகனின் நண்பரும் பின்னனி இசையுடன்(கரோக்கி முறையில்) திருசெந்தூரின் கடலோரத்தில் பாடலை பாடினார்கள். நண்பர் முதலில் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடினார்.

சில நண்பர்கள் பாட்டு பாடி அனுப்பி வைத்தார்கள் வாட்ஸ் அப்பில். சிலர் வாட்ஸப்பில் நேரே கொலுவைப்பார்த்துபாடினார்கள்.

தினம் 5, 6 குடும்பம் வந்துப்பார்த்தார்கள். (25, 30  பேர்) வருவதை முன்பே சொல்லி விடுவதால் அதற்கேற்றார்  பிரசாதங்கள் தயார் செய்தோம். முன்பே சொல்லி விடுகிறார்கள் அவர்கள் பிரசாதம் கொண்டு வருவதாய் இருந்தால்.



ஒரு நாள் மட்டும் பிரசாத படம் எடுத்து இருக்கிறது, தினம் தினம் எடுக்கவில்லை நேரமில்லை. ரவா இட்லி சாம்பார், தேங்காய் சட்னி, சப்பாத்தி, தட்டைபயிறு கிரேவி, தயிர்சாதம் , பஞ்சாமிர்தம் , ராகி தோசை,  மருமகளும் நாங்களும் சேர்ந்து  செய்தோம்.  ராகி தோசை  தோசை மிஷினில் சுடச் சுட போட்டு கொடுத்தாள் மருமகள். ஆறினால் நன்றாக இருக்காது. உணவு கட்டுப்

பாட்டில் இருப்பவர்களுக்கு அது மகிழ்ச்சியை தந்தது. 

மைசூர்பாக் ஒருவர் செய்து தருகிறார் இப்படி விழாக்களுக்கு ,  அவரிடம் ஆர்டர்  செய்து வாங்கினோம். ஒரு நட்பு சேமியா கேசரி செய்து வந்தார். ஒருவர் காரட் ஹல்வா , ரவா கேசரி , ஒருவர் வெண்பொங்கல்  ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர் பிரசாதம் கொண்டு வந்தார்கள். ஒருவர் கட்லட் கொண்டு வந்தார். மருமகளும் வித விதமாக பிரசாதங்கள் செய்தாள், எல்லோரும் விரும்பும் இட்லி  , சாம்பார் சட்னி இருக்கும்  சர்க்கரை பொங்கல், சப்பாத்தி  மற்றும்  சுண்டல் உண்டு.

சப்பாத்திக்கு வித விதமாக குருமாக்கள் உண்டு. வெங்காயம் சேர்க்காத பலகாரங்கள் உண்டு. சிலர் வெங்காயம் சேர்க்கமாட்டார்கள் விரதம் என்று. அவர்களுக்கு புளி சேவை, இனிப்பு சேவை, எலூமிச்சை சேவை இடை இடையே உண்டு.வெயில் காலம் என்பதால் ஜஸ்கீரீம் , ஜூஸ் உண்டு.

அடைபிரதமன். குழிபணியாரம்  ஒரு நண்பர் மனைவி செய்து  கொண்டு வந்தார்,  சோன்பப்டி ஒரு நண்பர் வாங்கி வந்தார் . சிலர் பழம், பூச்செடிகள் வாங்கி வந்தனர். மலர் கொத்து வாங்கி வந்தனர். பரிசு பொருட்களும் உண்டு. பெரியவர்கள் போல சிறியவர்களும் பழக்க வழக்கங்களை  கடைபிடிப்பது மகிழ்ச்சி தரும் விஷயம். நவராத்திரி விழா எல்லோரும் கூடி மகிழ்ந்து உரையாட ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது.

 நிறைய நண்பர்களின் பெற்றோர்களும்  வந்து இருந்தார்கள் அவர்களையும் அழைத்து வந்தார்கள். அவர்களை பார்க்கவும் ஒரு வாய்ப்பு. 

நிறைய பேர் கொலுவுக்கு அழைத்து இருந்தார்கள் அவர்களின் வீடுகளுக்கும் போய் வந்தோம். நம் வீட்டிலும் தினம் எல்லோரும் வருதால் அதற்கு ஏற்றார் போல அவர்கள் வீடுகளுக்கு போய் வந்தோம்.

மிக அழகாய் வைத்து இருந்தார்கள் கொலுவை. விருந்து உபசரிப்பு என்று அவர்களின்  அன்பு மழையில் நனைந்து வந்தோம் , அவற்றை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

வேலைக்கும் போய் கொண்டு கொலுவும் வைத்து சிறப்பாக 10 நாட்களும்  கொண்டாடி மகிழ்வதை பாராட்ட வேண்டும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

------------------------------------------------------------------------------------------------

50 கருத்துகள்:

  1. சிறப்பு.  மிகவும் சிறப்பு.  ஒரே மாதிரி வருடா வருடம் செய்யாமல் கவினின் கற்பனைகளும், செயல்திறனும் விரிவடைகிறது கொண்டே போவது பிரமிப்பு, மகிழ்ச்சி.  சுற்றி போடுங்கள்.  இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம் என்று பாடி இருப்பீர்கள்.   அப்பாவும், அம்மாவும் சிறந்த முறையில் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //சிறப்பு. மிகவும் சிறப்பு. ஒரே மாதிரி வருடா வருடம் செய்யாமல் கவினின் கற்பனைகளும், செயல்திறனும் விரிவடைகிறது கொண்டே போவது பிரமிப்பு, மகிழ்ச்சி. சுற்றி போடுங்கள். இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம் என்று பாடி இருப்பீர்கள். அப்பாவும், அம்மாவும் சிறந்த முறையில் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.//

      ஆமாம், ஒவ்வொரு வருடமும் மாற்றி செய்வது நீங்கள் எல்லோரும் மற்றும் , மகன், மருமகள் நண்பர்கள், உறவினர்கள் தரும் உற்சாகம் , மற்றும் எல்லோர் ஆசீர்வாதங்கள் தான் காரணம்.
      அம்மாவும், அப்பாவும் தரும் ஆதரவு அதிகம்.
      உங்கள் மகிழ்ச்சியை கவினிடம் சொன்னேன்.


      நீக்கு
  2. ஸ்பெஷல் எபெக்ட் எல்லாம் கொடுத்து படத்தை பிரமாதமாக கவின் எடுத்திருப்பது பிரமிப்பாகவும், வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 

    எங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் சொல்லுங்கள்.  சிரத்தையாக தயார் செய்வது அழகு.  தெரியாமல் நீங்கள் படம் எடுத்ததற்கு ஒன்றும் சொல்லவில்லையா? 

    கொலு அழைப்பிதழும் அழகு.  தயாரிப்பில் நேர்த்தி. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்பெஷல் எபெக்ட் எல்லாம் கொடுத்து படத்தை பிரமாதமாக கவின் எடுத்திருப்பது பிரமிப்பாகவும், வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. //

      ஆமாம், மகிழ்ச்சிதான்.

      //எங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் சொல்லுங்கள். //
      சொன்னேன், நன்றி சொல்ல சொன்னான்.

      //சிரத்தையாக தயார் செய்வது அழகு.

      தெரியாமல் நீங்கள் படம் எடுத்ததற்கு ஒன்றும் சொல்லவில்லையா?//

      இன்று தான் காட்டினேன் பதிவில் போடவா என்று கேட்டு போட்டேன். இப்போது போடுங்கள், எல்லோரும் பார்ப்பதற்கு முன் நீங்கள் பதிவில் போட்டுவிடக்கூடாது என்பதால் வேண்டாம் என்றேன் என்றான்.
      இங்கு மகன், மருமகள் நண்பர்களும் என் பதிவை படிக்கிறார்கள், அவர்களுக்கு சஸ்பென்ஸாக இருக்க வேண்டும் என்று நினைத்து அப்படி சொன்னான்.

      //கொலு அழைப்பிதழும் அழகு. தயாரிப்பில் நேர்த்தி//
      ஆமாம், அவனுக்கு அதில் ஆர்வம் அதிகம், பிரந்த நாள் வாழ்த்து அட்டைகள், மற்றும் இது போன்ற விழா வாழ்த்துகள் தயார் செய்வது பிடிக்கும் அவனுக்கு.

      நீக்கு
  3. கொலு படங்கள் அழகு.  வரப்போகும் உறவின் திருமணத்தை ஒட்டி எழுந்த கற்பனைக்கு ஒரு ஜே.  ரசனையாக பெண் வீட்டுக்கு பட்டுப்புடவையும், மாப்பிள்ளை வீட்டுக்கு பட்டுவேஷ்டியும் வைத்து அலங்கரித்திருப்பது நல்ல கற்பனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொலு படங்கள் அழகு. வரப்போகும் உறவின் திருமணத்தை ஒட்டி எழுந்த கற்பனைக்கு ஒரு ஜே. ரசனையாக பெண் வீட்டுக்கு பட்டுப்புடவையும், மாப்பிள்ளை வீட்டுக்கு பட்டுவேஷ்டியும் வைத்து அலங்கரித்திருப்பது நல்ல கற்பனை.//

      ஆமாம், தாய்லாந்தில் கல்யாணம் . மருமகளின்கற்பனை திறனை பாராட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  4. பிரசாத படங்கள் (நம்ம டிபார்ட்மென்ட்!) கவர்கின்றன. கொழுக்கட்டை போன்ற அந்த வடிவத்தை வாயிலிட்டு சுவைக்க நாக்கு துடிக்கிறது! சிறப்பான கொலு. பாடல் பாடி, கூடி மகிழ்ந்து கொண்டாடத்தானே இதுபோன்ற விழாக்கள்... சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிரசாத படங்கள் (நம்ம டிபார்ட்மென்ட்!) கவர்கின்றன. கொழுக்கட்டை போன்ற அந்த வடிவத்தை வாயிலிட்டு சுவைக்க நாக்கு துடிக்கிறது! சிறப்பான கொலு. பாடல் பாடி, கூடி மகிழ்ந்து கொண்டாடத்தானே இதுபோன்ற விழாக்கள்... சிறப்பு.//

      நீங்களும், நெல்லைதமிழனும் பிரசாதங்கள் என்ன என்று கேட்பீர்கள் அதனால்தான் இந்த விவரங்கள்.
      பாடச்சொன்னால் பிகு செய்யாமல் பாடியது மனதுக்கு மகிழ்ச்சி.
      நம் நட்புகள் பாடி அனுப்பியது மிகவும் மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. படங்கள் அழகாக இருக்கிறது.
    தங்களது பெயரன் கவினின் திறமை பாராட்டத்தக்கது.

    தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது

    காணொளி கண்டு வருகிறேன் பிறகு வருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகாக இருக்கிறது.
      தங்களது பெயரன் கவினின் திறமை பாராட்டத்தக்கது.//

      நன்றி

      //தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது

      காணொளி கண்டு வருகிறேன் பிறகு வருகிறேன்...//

      11 நிமிடம் காணொளி நேரம் கிடைக்கும் போது பார்த்து கருத்து சொல்லுங்கள்.

      கவினை உங்கள் கருத்துக்கள் மேலும் செயல்பட உற்சாகம் அளிக்கும்
      உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கொலு படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இந்த வருடம் புதுமையான முறையில் கொலுவை அமைத்திருக்கிறீர்கள் . தங்களுக்கும், தங்கள் மகன் மருமகள், பேரன் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள். இன்னமும் ஒவ்வொரு படங்களையும் பெரிது பண்ணி பார்த்து விட்டு பிறகு வருகிறேன்.

    இங்கு இன்று காலையிலிருந்து மாலை வரை பவர் கட்டாம். வேலைகளை அதற்குள் முடிக்க வேண்டி கட்டாயங்கள். அதனால் பதிவை சுவாரஸ்யமாக பார்த்து விரிவாக பதில் சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும். பிறகு கண்டிப்பாக வருகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. கொலு படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இந்த வருடம் புதுமையான முறையில் கொலுவை அமைத்திருக்கிறீர்கள் . தங்களுக்கும், தங்கள் மகன் மருமகள், பேரன் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள். இன்னமும் ஒவ்வொரு படங்களையும் பெரிது பண்ணி பார்த்து விட்டு பிறகு வருகிறேன்.//

      உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு நன்றி.


      //இங்கு இன்று காலையிலிருந்து மாலை வரை பவர் கட்டாம். வேலைகளை அதற்குள் முடிக்க வேண்டி கட்டாயங்கள். அதனால் பதிவை சுவாரஸ்யமாக பார்த்து விரிவாக பதில் சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும். பிறகு கண்டிப்பாக வருகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      வேலைகளுக்கு இடையில் வந்து கருத்து சொல்லி போனது மகிழச்சி.
      நமக்குள் மன்னிப்பு எல்லாம் வேண்டாம்.
      வந்து விட்டீர்கள் விரிவான பதில் கொடுத்து விட்டீர்கள்.
      உங்கள் அன்புக்கு நன்றி.

      நீக்கு
  7. சிறப்பு. கவினுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார் , வாழ்க வளமுடன்

      //சிறப்பு. கவினுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்//

      உங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும் கிடைத்தது மகிழ்ச்சி.
      நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    இன்றைய கொலு பதிவு நன்றாக உள்ளது. பொம்மைகள், கொலு படிகள் வடிவமைப்பு வித்தியாசங்கள் சிறப்பாக இருக்கிறது.

    தங்கள் மருமகளின் உறவு வீட்டு திருமணத்திற்காக கல்யாண அமைப்புடன் இப்படி கொலுவை அமைத்த தங்கள் மருமகளின் கற்பனை திறனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    தங்கள் பேரன் கவினும் கொலுவுக்கு சிறந்த ஒத்துழைப்பை தந்துள்ளார். நவராத்திரி அழைப்பிதழ் கார்டு அச்சடித்து, கொலு பார்க்க வருபவர்களுக்கு நல்ல தெய்வீகமான படம் ஒன்றை நடத்தி காண்பித்து என அவரின் பங்களிப்பு எங்களுக்கே மிகப் பெருமையாக உள்ளது. உங்களனைவருக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும்.

    நாடு விட்டு நாடு சென்றும் நம் நாட்டின் பாரம்பரிய விழாவை முறைப்படி கொண்டாடும் சிறப்பே ஒரு தனி அழகுதான். உங்கள் அனைவருக்கும் என அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    பக்த பிரகலாதன் திரைப்படம் நாங்களும் கண்டு கழித்தோம் . என் பேரன், பேத்திகளுக்கு அந்த திரைப்படத்தை என் கைப்பேசியில் காட்டினேன். அவர்களும் நன்றாக இறுதி வரை ரசித்துப் பார்த்தார்கள்.கவினுக்கு என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் சொல்லுங்கள்.

    கொலுவுக்கு பாடலாக திருசெந்தூர் பாடலை பாடிய தங்கள் மகனுக்கும், அவர் நண்பருக்கும் வாழ்த்துகள். மற்றும் தினமும் வாட்சப்பில் கூட பாடி அசத்தியவர்களுக்கும் வாழ்த்துகள்.

    நீங்கள் கொலுவின் பத்து நாட்களும் அவர்களுக்கு தேவையான உதவி புரிந்து சிறப்பாக கொண்டாடியமைக்கு மகிழ்ச்சி.

    தினமும் ஒவ்வொரு விதமான உணவுகள், நெய்வேத்தியங்கள் என செய்ததும் நன்று. உணவு படங்களைப் பார்த்து நானும் கொலுவை நமஸ்கரித்து பிரசாதங்கள் எடுத்துக் கொண்டேன்.

    நீங்களும், படங்களை பொறுமையாக எடுத்து பகிர்ந்து, கொலுவை பற்றி சிறப்பாக எழுதி உள்ளீர்கள். உங்கள் குடும்பத்தினரின் கலையார்வத்திறகு என் மனமார்ந்த வாழ்த்துகள். அத்தனையையும் பார்த்து படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா,

      /இன்றைய கொலு பதிவு நன்றாக உள்ளது. பொம்மைகள், கொலு படிகள் வடிவமைப்பு வித்தியாசங்கள் சிறப்பாக இருக்கிறது.

      தங்கள் மருமகளின் உறவு வீட்டு திருமணத்திற்காக கல்யாண அமைப்புடன் இப்படி கொலுவை அமைத்த தங்கள் மருமகளின் கற்பனை திறனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//

      மருமகளை பாராட்டி மனமார்ந்த பாராட்டுக்களை அளித்தமைக்கு நன்றி.

      //தங்கள் பேரன் கவினும் கொலுவுக்கு சிறந்த ஒத்துழைப்பை தந்துள்ளார். நவராத்திரி அழைப்பிதழ் கார்டு அச்சடித்து, கொலு பார்க்க வருபவர்களுக்கு நல்ல தெய்வீகமான படம் ஒன்றை நடத்தி காண்பித்து என அவரின் பங்களிப்பு எங்களுக்கே மிகப் பெருமையாக உள்ளது. உங்களனைவருக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும்.//

      ஆமாம் , நீங்கள் சொல்வது போல பெருமிதமும் , மகிழ்ச்சியும் எங்களுக்கு .

      //நாடு விட்டு நாடு சென்றும் நம் நாட்டின் பாரம்பரிய விழாவை முறைப்படி கொண்டாடும் சிறப்பே ஒரு தனி அழகுதான். உங்கள் அனைவருக்கும் என அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.//

      உங்கள் வாழ்த்துகள், பாராட்டுக்களுக்கு நன்றி.

      //பக்த பிரகலாதன் திரைப்படம் நாங்களும் கண்டு கழித்தோம் . என் பேரன், பேத்திகளுக்கு அந்த திரைப்படத்தை என் கைப்பேசியில் காட்டினேன். அவர்களும் நன்றாக இறுதி வரை ரசித்துப் பார்த்தார்கள்.கவினுக்கு என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் சொல்லுங்கள்.//

      பேரன் பேத்திகள் ரசித்துப்பார்த்தது மகிழ்ச்சியை தருகிறது.
      உங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் சொல்கிறேன் கண்டிப்பாய் கவின் மகிழ்வான்.

      //கொலுவுக்கு பாடலாக திருசெந்தூர் பாடலை பாடிய தங்கள் மகனுக்கும், அவர் நண்பருக்கும் வாழ்த்துகள். மற்றும் தினமும் வாட்சப்பில் கூட பாடி அசத்தியவர்களுக்கும் வாழ்த்துகள்.//

      வாழ்த்துகளை உரியவர்களிடம் சேர்த்து விடுகிறேன்.

      //தினமும் ஒவ்வொரு விதமான உணவுகள், நெய்வேத்தியங்கள் என செய்ததும் நன்று. உணவு படங்களைப் பார்த்து நானும் கொலுவை நமஸ்கரித்து பிரசாதங்கள் எடுத்துக் கொண்டேன்.//

      நன்றி கமலா

      //நீங்களும், படங்களை பொறுமையாக எடுத்து பகிர்ந்து, கொலுவை பற்றி சிறப்பாக எழுதி உள்ளீர்கள். உங்கள் குடும்பத்தினரின் கலையார்வத்திறகு என் மனமார்ந்த வாழ்த்துகள். அத்தனையையும் பார்த்து படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      நேரம் கிடைக்கும் போது படங்களை வலையேற்றி வைத்து இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எழுதினேன். பதைவை ரசித்து படித்து ஒவ்வொன்றையும் மனதார பாராட்டி விரிவான பின்னூட்டம் கொடுப்ப்து மிகவும் மகிழ்ச்சி, நன்றி .
      தாம்பூல பை போட மறந்து விட்டேன் அடுத்த பதிவில் தருகிறேன்.




      நீக்கு
  9. கொலு தீம் வித்யாசம். கவின் செய்த நவராத்திரி அழைப்பிதழ் காணொளியும் அருமை.
    அதற்கு மேல் பிரகலாதா 4D, அதை பெரிய திரையில் அரங்கில் அமர்ந்து காண்பது போல் காட்டியதும் அமைத்தது மேலும் சிறப்பு.
    மொத்தத்தில் இன்றைய பதிவு சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. புகைப்படங்களும் கமென்டரி போல அமைந்துள்ளது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //கொலு தீம் வித்யாசம். கவின் செய்த நவராத்திரி அழைப்பிதழ் காணொளியும் அருமை.//

      நன்றி.

      //அதற்கு மேல் பிரகலாதா 4D, அதை பெரிய திரையில் அரங்கில் அமர்ந்து காண்பது போல் காட்டியதும் அமைத்தது மேலும் சிறப்பு.
      மொத்தத்தில் இன்றைய பதிவு சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. புகைப்படங்களும் கமென்டரி போல அமைந்துள்ளது.//

      சுவற்றில் பிரேம் மைத்து அதில் தான் திரையரங்கம் அமைத்தான் மகன், பேரன் தன் பெயரை சூட்டினான் திரையரங்கத்திற்கு.
      ஒரு நாள் நல்ல கூட்டம் தரையில் அமர்ந்து படம் பார்ப்பது போல ரசித்துப்பார்த்தார்கள். அதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. பழைய காலத்தை நினைத்து பேசினார்கள் மகனின் நண்பர்களின் பெற்றோர்கள் .

      ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.



      நீக்கு
  10. கொலுவின் தீம் சூப்பர் கோமதிக்கா. என் வாழ்த்துகள் பாராட்டுகளைச் சொல்லிடுங்க மகனுக்கும் மருமகளுக்கும் பேரனுக்கும்

    அதுவும் ஒரு புறம் மணமகன் மறுபுறம் மணமகள் வீட்டார் நடுவில் கல்யாணம் என்று சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      //கொலுவின் தீம் சூப்பர் கோமதிக்கா. என் வாழ்த்துகள் பாராட்டுகளைச் சொல்லிடுங்க மகனுக்கும் மருமகளுக்கும் பேரனுக்கும்//

      கண்டிப்பாய் சொல்கிறேன் கீதா.

      //அதுவும் ஒரு புறம் மணமகன் மறுபுறம் மணமகள் வீட்டார் நடுவில் கல்யாணம் என்று சூப்பர்//

      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.





      நீக்கு
  11. காணொளி கண்டேன் அருமை கவினுக்கு டி. ராஜேந்தர் போல எல்லா தொழில்நுட்பமும் தெரிகிறது வாழ்த்துகள்.

    உங்கள் குடும்பத்தினர் பெயர்கள் டைட்டிலில் வருவது கண்டு மகிழ்ச்சி.

    கவினுக்கு எதிர்காலத்தில் திரைப்படத் துறையில் இயக்குனராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    ஊக்கம் கொடுத்து வாருங்கள் கவினுக்கு மீண்டும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //காணொளி கண்டேன் அருமை கவினுக்கு டி. ராஜேந்தர் போல எல்லா தொழில்நுட்பமும் தெரிகிறது வாழ்த்துகள்.//

      நன்றி.

      //உங்கள் குடும்பத்தினர் பெயர்கள் டைட்டிலில் வருவது கண்டு மகிழ்ச்சி.//

      ஆமாம், எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

      //கவினுக்கு எதிர்காலத்தில் திரைப்படத் துறையில் இயக்குனராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.//

      கவினுக்கு எட்டிங்க் பிடித்து இருக்கிறது எதிர்காலத்தில் அதை செய்ய விரும்புகிறான்.

      //ஊக்கம் கொடுத்து வாருங்கள் கவினுக்கு மீண்டும் வாழ்த்துகள்.//

      ஆமாம், நீங்கள் எல்லோரும் கொடுக்கும் ஊக்கமும், நாங்கள் கொடுக்கும் ஊக்கமும் அவனுக்கு எப்போதும் உண்டு.
      உங்கள் வாழ்த்துகள், பாராட்டுக்கள், கருத்துக்களுக்கு நன்றி நன்றி.

      நீக்கு
  12. மருமகளின் அக்கா மகனுக்கு திருமணம் நவம்பர் மாதம் 8ம் தேதி . அதனால் இப்படி அமைத்து இருந்தாள். //

    ஓஹோ!!!

    ஒரு படியில் பட்டு வேஷ்டியும், இன்னொரு படிகளில் பட்டுப்புடவையும் போட்டு பொம்மைகளை அடுக்கி வைத்தாள்.//

    அட நல்ல ஐடியா!!

    மருதாணி வைக்கும் விழா அலங்காரம் மருமகள் செய்தாள்.//

    நிறைய அழகா யோசிச்சு செஞ்சுருக்காங்க. நல்ல கற்பனை வளம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      நிறைய அழகா யோசிச்சு செஞ்சுருக்காங்க. நல்ல கற்பனை வளம்!//

      மருமகளை பாராட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  13. கொலுவுக்கு முன் வருடா வருடம் ஐந்து குடும்பங்களை அழைத்து மருதாணி வைத்து விடுவாள் . மருமகளின் தோழி மற்றும் அவர்கள் வீட்டுக்கு வந்து இருந்த பெற்றோர்களும் (தாய்மார்கள்) வந்து ஆசையாக வைத்து கொண்டார்கள். குஜராத்தி பெண் ஒருவர் வைத்து விடுவார்.//

    அட! கோலாகலம் தான். அதுவும் இந்த முறை கொலு வேறு மீனாட்சி கல்யாணம் எனவே மெஹந்தி பார்ட்டி பொருத்தம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அட! கோலாகலம் தான். அதுவும் இந்த முறை கொலு வேறு மீனாட்சி கல்யாணம் எனவே மெஹந்தி பார்ட்டி பொருத்தம்.//

      ஆமாம், கீதா .

      நீக்கு
  14. பேரன் தயார் செய்த நவராத்திரி அழைப்பு சூப்பர்...ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா...மிக அழகாக ஆர்வத்துடன் செய்திருக்கிறார்.

    சின்ன தட்டுகளில் முந்திரி, பாதாம், பப்பர்மிண்ட் மிட்டாய், உலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ் பழம்) வைத்து இருப்பது தெரிகிறதா?//

    தெரிகிறது அக்கா.

    எனக்கு கொலு ரொம்பப் பிடிக்கும் ரசித்துப் பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரன் தயார் செய்த நவராத்திரி அழைப்பு சூப்பர்...ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா...மிக அழகாக ஆர்வத்துடன் செய்திருக்கிறார்.//

      ஆமாம், கீதா ஆர்வமாக செய்தான்.

      //தெரிகிறது அக்கா.

      எனக்கு கொலு ரொம்பப் பிடிக்கும் ரசித்துப் பார்க்கிறேன்//

      ஊருக்கு போகும் அவசரத்திலும் பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா

      நீக்கு
  15. வெள்ளைப்பூ வைத்து இருக்கும் கிண்ணம் சுழலும்//

    அழகா இருக்கு,. இரு வீட்டு கொலு பொம்மைகளும் பங்கு பெற்றிருப்பது மகிழ்ச்சி.

    ராவணம் ஹிரண்யகசிபு ஆனது!! கற்பனை வளம் இருந்தால் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல்!!!

    கல்யாணவீட்டு வாசலில் ஜவ் மிட்டாய் விற்பவர், அவரிடம் கைகடிகாரம், ஜஸ்கிரீம் போல மிட்டாய் வாங்கி இருக்கும் பிள்ளைகள். //

    அட ஜவ்வு மிட்டாய் செட் எல்லாம் வந்துவிட்டதா! அழகாக இருக்கு. செட்கள் வாங்கிவிட்டால் நம் தீமிற்கு ஏற்ப வைத்துக் கொள்ளலாம் கோயில் திருவிழா போன்ற தீம் களிலும் வைத்துக் கொள்ளலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளைப்பூ வைத்து இருக்கும் கிண்ணம் சுழலும்//

      அழகா இருக்கு,. இரு வீட்டு கொலு பொம்மைகளும் பங்கு பெற்றிருப்பது மகிழ்ச்சி.

      ராவணம் ஹிரண்யகசிபு ஆனது!! கற்பனை வளம் இருந்தால் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல்!!!

      அட ஜவ்வு மிட்டாய் செட் எல்லாம் வந்துவிட்டதா! அழகாக இருக்கு. செட்கள் வாங்கிவிட்டால் நம் தீமிற்கு ஏற்ப வைத்துக் கொள்ளலாம் கோயில் திருவிழா போன்ற தீம் களிலும் வைத்துக் கொள்ளலாம்.//

      கல்யாணசெட்டில் ஜவ்வு மிட்டாய் செட் இருந்தது.
      நீங்கள் சொல்வது போல மாற்றி அமைத்து கொள்ளலாம்.
      நம் கற்பனை திறணுக்கு ஏற்றார் போல பொம்மைகளை கொலுவில் மாற்றி அமைக்கலாம்.

      நீக்கு
  16. பேரனுக்குக் கை கொடுத்து அணைத்துப் பாராட்டி மகிழ ஆசை! அவ்வளவு அழகாகச் செய்திருக்கிறார் பக்த பிரகலாதன் படம். பின்னாளில் நல்ல கலைஞராக வடிவெடுக்கும் திறன் நிறைய உள்ளது! இறைவன் துணை எப்போதும் அவருக்கு இருக்கட்டும்!

    என் வாழ்த்துகள் பாராட்டுகளைச் சொல்லிடுங்க கோமதிக்கா. இரு பாட்டிகளும் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி!

    படத்தை மிகவும் ரசித்தேன் கோமதிக்கா.

    பல குடும்பங்களுக்குக் குழந்தை வளர்ப்பிற்கு எடுத்துக்காட்டான குடும்பம். இறைவன் துணை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரனுக்குக் கை கொடுத்து அணைத்துப் பாராட்டி மகிழ ஆசை! அவ்வளவு அழகாகச் செய்திருக்கிறார் பக்த பிரகலாதன் படம். பின்னாளில் நல்ல கலைஞராக வடிவெடுக்கும் திறன் நிறைய உள்ளது! இறைவன் துணை எப்போதும் அவருக்கு இருக்கட்டும்!//

      உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கும், ஆசீர்வாதங்களுக்கும் நன்றி கீதா பேரனிடம் சொன்னேன் மிகவும் மகிழ்ந்தான். காணொளியில் உங்கள் கருத்தையும் விரும்புகிறான். என் யூடியூப் காணொளியில் உங்கள் கருத்தைப்பார்ப்பான். அவன் சொல்வான் கீதா அத்தை வருவார்கள் என்று.

      //என் வாழ்த்துகள் பாராட்டுகளைச் சொல்லிடுங்க கோமதிக்கா. இரு பாட்டிகளும் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி!

      படத்தை மிகவும் ரசித்தேன் கோமதிக்கா.

      பல குடும்பங்களுக்குக் குழந்தை வளர்ப்பிற்கு எடுத்துக்காட்டான குடும்பம். இறைவன் துணை!//

      உங்கள் கருத்து மனதை நெகிழ செய்து விட்டது. நன்றி கீதா.

      நீக்கு
  17. இந்த முறை புரஜக்டர் மூலம் "கவின் திரையரங்கில்" அவன் பொம்மைகளை வைத்து நாடகம் தயார் செய்ததை காட்டினான்.

    எப்படி எடுத்தான் என்பதை நாடகத்தின் கடைசியில் காட்டுவான் , கடைசி வரை காணொளியை பாருங்கள்.//

    ஆமாம் நான் கேட்க நினைத்தேன் இதோ போய் பார்க்கிறேன். எனக்கும் இதிலெ எல்லாம் மிகவும் ஆர்வம் உண்டே (எதில் தான் இல்லை கீதா உனக்கு!!!! ஹாஹாஹா என் மைன்ட் வாய்ஸ். புதிது புதிதாகக் கற்கும் ஆர்வம் நிறைய எனக்கு!!!)

    10 நாட்களும் நாரயாண மந்திரம் காதில் ஒலித்து கொண்டே இருந்தது. அவன் நாடகம் தயார் செய்த நாளிலிருந்தும் வீட்டில் நாராயண மந்திரம் பாடல் ஒலித்தது. //

    அருமை கோமதிக்கா. நேர்மறை அலை !

    வெற்றிகரமாக ஓடுகிறது என்ற சின்ன காணொளியும் சூப்பர் கோமதிக்கா.

    பேரன் நின்றுகொண்டு பேசுவது நன்றாக வளர்ந்திருபப்தும் அப்பாவைப் போலவே அந்த உடல் மொழி இருப்பதும் எல்லாமே எனக்கு மாமாவை நினைவு படுத்தியது. வீட்டுத் தலைவன் தந்தை ஒரு புறம் தலைவி அம்மா மறுபுறம் இருவருமே சிறந்தவர்கள் எனும் போது அதுவும் மகன் தந்தையுடன் அளவளாவியது பற்றி நீங்க சொல்லியிருக்கீங்க து இத்தலைமுறையிலும் தொடர்வது இறைவன் ஆசி! மிகவும் ரசிக்கிறேன் கோமதிக்கா. பேரன் தூரத்தில் உங்களைப் போலவே இருப்பதாகப் படுகிறது எனக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமாம் நான் கேட்க நினைத்தேன் இதோ போய் பார்க்கிறேன். எனக்கும் இதிலெ எல்லாம் மிகவும் ஆர்வம் உண்டே (எதில் தான் இல்லை கீதா உனக்கு!!!! ஹாஹாஹா என் மைன்ட் வாய்ஸ். புதிது புதிதாகக் கற்கும் ஆர்வம் நிறைய எனக்கு!!!)//

      உங்கள் ஆரவம், உங்கள் திறமை தெரிந்ததுதானே கீதா. நீங்கள் பன்முக திறமையாளர்.

      அருமை கோமதிக்கா. நேர்மறை அலை !

      வெற்றிகரமாக ஓடுகிறது என்ற சின்ன காணொளியும் சூப்பர் கோமதிக்கா.

      //பேரன் நின்றுகொண்டு பேசுவது நன்றாக வளர்ந்திருபப்தும் அப்பாவைப் போலவே அந்த உடல் மொழி இருப்பதும் எல்லாமே எனக்கு மாமாவை நினைவு படுத்தியது. வீட்டுத் தலைவன் தந்தை ஒரு புறம் தலைவி அம்மா மறுபுறம் இருவருமே சிறந்தவர்கள் எனும் போது அதுவும் மகன் தந்தையுடன் அளவளாவியது பற்றி நீங்க சொல்லியிருக்கீங்க து இத்தலைமுறையிலும் தொடர்வது இறைவன் ஆசி! மிகவும் ரசிக்கிறேன் கோமதிக்கா. பேரன் தூரத்தில் உங்களைப் போலவே இருப்பதாகப் படுகிறது எனக்கு!//

      உங்கள் இந்த கருத்தை படித்து கண்ணில் நீர் துளிர்த்து விட்டது. மாமா இருந்து பார்க்கவில்லையே கவினின் இந்த நாடகத்தை என்று இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. நாடகம் முடிந்தவுடன் அவன் படம்பிடித்த அறையில் அவன் கதாபாத்திரங்களை குரூப் போட்டோ எடுப்பது போல வைத்து இருந்ததை காட்டினான். அதை நான் படம் எடுத்து உங்களுக்கு காட்டி இருக்கிறேன். //

    ஆஹா!!!

    இரண்யகசிபு குடல் ரெடி செய்து கொடுத்தது அந்த ஆச்சிதான். நான் சில ஆலோசனைகள் சொன்னேன், மற்றும் புயல் வரும் போது சருகுகள் பறப்பதற்கு காய்ந்த இலைகள் எடுத்து வந்து கொடுத்து உதவினேன். மகன் , மருமகள் அவன் கேட்பதை வாங்கி கொடுத்தார்கள். //

    ஒவ்வொன்றும் வாவ் போட வைக்கிறது கோமதிக்கா.

    எப்படித் தயாரானது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

    பள்ளி விட்டு வந்து வீட்டுப்பாடங்களை முடித்து பின் இரவு தூங்க போகும் வரை நாட்கம் தயார் செய்வான். ஒருமாதம் காலம் ஆனது நாடகம் தயார் செய்ய. ஆனாலும் அவன் பல குரல்களில் முன்பு போல பேசவில்லை சினிமா வசனங்களை அப்படியே வைத்து விட்டான். அவனுக்கு நேரமில்லை 10 வது படிப்பதால்.//

    அதனால் என்ன? இதுவே மிகவும் சிறப்பாக இருக்கிறது

    யுட்யூபிலும் பார்த்து நான் அங்கு கருத்து போடுகிறேன்.

    பாவாடை தாவணிக் குழந்தை அம்சம்!!!

    10 நாளும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் கோமதிக்கா

    வருபவர்களுக்கு உணவு தயார் செய்து எலலமே அருமை

    மகன் பாடியது - பன்முகத்திறமை!!!

    உணவு என்னவெலலம் என்பதையும் வாசித்துக் கொண்டேன் கோமதிக்கா

    அனைத்தும் சூப்பரோ சூப்பர்! ரசித்தேன். கவினுக்கும் மகன் மருமகளுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள் சொல்லிடுங்க. உழைப்பு அபாரம்.

    இரு பாட்டிகளுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்! நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொன்றும் வாவ் போட வைக்கிறது கோமதிக்கா.

      எப்படித் தயாரானது என்பதைத் தெரிந்து கொண்டேன்.//

      மகிழ்ச்சி கீதா.

      //யுட்யூபிலும் பார்த்து நான் அங்கு கருத்து போடுகிறேன்.

      பாவாடை தாவணிக் குழந்தை அம்சம்!!!

      10 நாளும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் கோமதிக்கா

      வருபவர்களுக்கு உணவு தயார் செய்து எலலமே அருமை

      மகன் பாடியது - பன்முகத்திறமை!!!

      உணவு என்னவெலலம் என்பதையும் வாசித்துக் கொண்டேன் கோமதிக்கா

      அனைத்தும் சூப்பரோ சூப்பர்! ரசித்தேன். கவினுக்கும் மகன் மருமகளுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள் சொல்லிடுங்க. உழைப்பு அபாரம்.

      இரு பாட்டிகளுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்! நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!//

      அனைத்தையும் ஒன்று விடாமல் ரசித்து பார்த்து, கேட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி நன்றி கீதா.
      எங்கள் அனைவருக்கும், வாழ்த்துகள், பாராட்டுக்கள் தெரிவித்தது மேலும் மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  19. பக்த ப்ரஹ்லாதா குறும்படத்தை பள்ளியில் சக மாணவர்களுக்கு show and tell அசைன்மென்ட் ஆக காட்ட சொல்லுங்கள். நம்முடைய பாரம்பரிய புராணக் கதைகளை அமெரிக்கர்களும் அறிந்து கொள்வார்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பக்த ப்ரஹ்லாதா குறும்படத்தை பள்ளியில் சக மாணவர்களுக்கு (show and tell அசைன்மென்ட் ஆக காட்ட சொல்லுங்கள். நம்முடைய பாரம்பரிய புராணக் கதைகளை அமெரிக்கர்களும் அறிந்து கொள்வார்.//

      நீங்கள் சொன்னது போல சக மாணவர்களுக்கு காட்ட அவன் (நண்பர்களுக்கு)ஆங்கிலத்தில் சப் டைட்டில் தயார் செய்கிறான் .

      அவன் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படம் ஒன்று எடுத்து இருக்கிறான் அதை ஒருநாள் போடுகிறேன் பதிவில்.
      உங்கள் கருத்தை பேரனும் படித்தான், நான் நண்பர்களுக்கு காட்டுவேன் என்று சொல்லுங்கள் என்றான்.

      வணக்கம் சார், மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  20. அரிய காட்சி ஒன்றை பதிவின் முகப்பில் பார்த்தேன். கொலு பின்னணியில்
    திருமதி பக்கங்கள் சின்னமாய் கோயில் கோபுரம். கொலுவின் அழகுக்கு அழகு சேர்த்த தெய்வாம்ச காட்சி. அரிசோனாவிற்கே வந்து அருள் பாலித்த தென்னகக் கோயிலின் கோபுர தரிசனம். எந்தக் கோயில் என்று தெரிந்து கொள்ள ஆன மட்டும் முயற்சித்தேன், பூதக்கண்ணாடியைத் துணை கொண்ட பாட்சா கூட பலிக்கவில்லை. பெயர்ப் பலகையில் எழுத்துக்கள் அழிந்திருந்ததினாலோ என்னவோ. நானும் எனக்குத் தெரிந்த கோபுரக் காட்சிகளையெல்லாம் நினைவில் கொண்டு பார்த்தேன். ஊஹூம். பலன் பூஜ்யமே. காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் கோபுரத்திற்கு முன் பக்கம் இந்த மாதிரி ஒரு மண்டபம் உண்டு என்றாலும் அப்படியும் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இது வேறு ஏதோ ஒரு தென்னகக் கோயில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்

      அரிய காட்சி ஒன்றை பதிவின் முகப்பில் பார்த்தேன். கொலு பின்னணியில்
      திருமதி பக்கங்கள் சின்னமாய் கோயில் கோபுரம். கொலுவின் அழகுக்கு அழகு சேர்த்த தெய்வாம்ச காட்சி. அரிசோனாவிற்கே வந்து அருள் பாலித்த தென்னகக் கோயிலின் கோபுர தரிசனம். எந்தக் கோயில் என்று தெரிந்து கொள்ள ஆன மட்டும் முயற்சித்தேன், பூதக்கண்ணாடியைத் துணை கொண்ட பாட்சா கூட பலிக்கவில்லை. பெயர்ப் பலகையில் எழுத்துக்கள் அழிந்திருந்ததினாலோ என்னவோ. நானும் எனக்குத் தெரிந்த கோபுரக் காட்சிகளையெல்லாம் நினைவில் கொண்டு பார்த்தேன். ஊஹூம். பலன் பூஜ்யமே. காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் கோபுரத்திற்கு முன் பக்கம் இந்த மாதிரி ஒரு மண்டபம் உண்டு என்றாலும் அப்படியும் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இது வேறு ஏதோ ஒரு தென்னகக் கோயில்.//

      திருமதி பக்கங்கள் முகப்பில் தெரியும் கோயில் மதுரை மீனாட்சி கோவில்.

      பதிவில் அம்மனுக்கு பின்னாடி இருக்கும் கோயில் மண்டபம் மகன் தயார் செய்த கோயில் பின்னனி. ம்கனிடம் கேட்டு சொல்கிறேன்.

      அமெரிக்காவில் இப்படி பட்ட காட்சிகள் கிடைக்கும். கோவில் விழாக்களில், வீடுகளில் நடக்கும் விழாக்களில் சுற்றில் மாட்டுவார்கள். நம் ஊர் நினைவு வரும்.

      //அரிசோனாவிற்கே வந்து அருள் பாலித்த தென்னகக் கோயிலின் கோபுர தரிசனம். //

      உங்கள் கவனிப்புக்கு நன்றி.



      நீக்கு
  21. இங்கு பத்தாவது படிக்கும் குழந்தைகளின் படிப்புச்சுமையும் அதன் நேர்த்தியும் எனக்குத் தெரியும். இப்பொழுதே காலேஜ் படிப்புக்கு எல்லா முஸ்தீபுகளும் ஆரம்பித்து விடும். இருந்தாலும் அவன் ஆர்வம் என்னை அசத்தியது. பக்த பிரஹலாதா நாடகம் பார்த்தேன். அருமை என்ற மூண்றெழுத்தை என் குட்டி வாழ்த்தாக குழந்தையிடம் சொல்லவும். மொத்தத்தில் அத்தனை அற்புதங்களுக்கும் என் பலமான கைத்தட்டல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்கு பத்தாவது படிக்கும் குழந்தைகளின் படிப்புச்சுமையும் அதன் நேர்த்தியும் எனக்குத் தெரியும். இப்பொழுதே காலேஜ் படிப்புக்கு எல்லா முஸ்தீபுகளும் ஆரம்பித்து விடும்.//

      ஆமாம்.


      //இருந்தாலும் அவன் ஆர்வம் என்னை அசத்தியது. பக்த பிரஹலாதா நாடகம் பார்த்தேன். அருமை என்ற மூண்றெழுத்தை என் குட்டி வாழ்த்தாக குழந்தையிடம் சொல்லவும். மொத்தத்தில் அத்தனை அற்புதங்களுக்கும் என் பலமான கைத்தட்டல்கள்.//

      நாடகத்தை ரசித்துப்பார்த்து கை தட்டி மகிழ்ந்து கருத்து சொன்னதற்கு நன்றி சார்.

      நீக்கு
  22. கண் நிறைந்த பதிவு...

    மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      க//ண் நிறைந்த பதிவு...

      மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..//

      நன்றி.

      நீக்கு
  23. ஆன்மீகக் குடும்பம் ஒன்று
    தான் வாழ்கின்ற இடத்தில் எப்படியெல்லாம் அறம் வளர்க்கின்றது!...

    எல்லாம் ஈசனருள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆன்மீகக் குடும்பம் ஒன்று
      தான் வாழ்கின்ற இடத்தில் எப்படியெல்லாம் அறம் வளர்க்கின்றது!...

      எல்லாம் ஈசனருள்.//

      ஆமாம், ஈசனருள் அவன் நடத்துகிறான்ம் நாம் நடக்கிறோம்.
      உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  24. விதம் விதமான யோசனைகள் செய்து கொலு விழா கொண்டாடுவது சிறப்பு. படங்களையும், சில காணொளிகளையும் கண்டு ரசித்தேன். எத்தனை மெனக்கெட்டு விழாவிற்காக வேலை செய்திருக்கிறார்கள். அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //விதம் விதமான யோசனைகள் செய்து கொலு விழா கொண்டாடுவது சிறப்பு. படங்களையும், சில காணொளிகளையும் கண்டு ரசித்தேன். எத்தனை மெனக்கெட்டு விழாவிற்காக வேலை செய்திருக்கிறார்கள். அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்//

      ஒரு மாதமாக மெனக்கெட்டு செய்தான் பேரன். மருமகள், மகன் நிறைய வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கிடைக்கும் போது செய்து வைத்தார்கள்.

      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  25. மிக அழகான கொலு, கொண்டாட்டம்! கவினின் ஆர்வம் ஆச்சர்யமூட்டுகிறது. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //மிக அழகான கொலு, கொண்டாட்டம்! கவினின் ஆர்வம் ஆச்சர்யமூட்டுகிறது. வாழ்க வளமுடன்.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு