வெள்ளி, 20 செப்டம்பர், 2024

காலை நேர முழுநிலவும் பறக்கும் பலூனும்



காலை நேரம் பேரன் பள்ளிக்கு போகும் போது வழி அனுப்ப முன் வாசலுக்கு வந்த போது  பார்த்த காட்சிகள்.

அதிகாலை வேளையில் காலநிலை நன்றாக இருப்பதால் சில நாட்களாய்  வானில் பலூன்கள் பறக்கிறது. நானும் அதைப்பார்க்கும் போது குழந்தையாகி போய்விடுவேன். எனக்கு பலூன் பறப்பதை வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

முன் வாசல் எதிரே  காலை முழு நிலவு பக்கம் போன பலூன் படங்கள், மற்றும் பின்னால்  தோட்டத்துப்பக்கம்  வீட்டுக்கு அருகில் போன பலூன்கள் படங்கள்   இந்த பதிவில் இடம்பெறுகிறது.



நிலவே உன் அருகில் வரப்போகிறேன்



வருகிறேன்



வந்து கொண்டு இருக்கிறேன்



இதோ வருகிறேன்


மேலே மேலே போகிறேன்  நிலவின் அருகே

நிலவு அழகாய் இருக்கு இங்கு இருந்துப்பார்க்க

அருகே ! மிக அருகே!

மிக மிக அருகே!

நிலவின் அருகே வந்து விட்டேன்

நிலவை மறைத்து விட்டேன் என்று நினைத்தீர்களா?



இறங்க போகிறேன் நிலா தெரிகிறதா?


இறங்கி போகிறேன் நிலாவை நன்றாக பாருங்க



தோட்டத்துக்கு அருகில் வேறு ஒரு   பறந்த பலூன்


மாடி பால்கனி பக்கம் 

தோட்டத்து மதிலை ஒட்டி இருக்கும் மரத்துக்கு அருகே இன்னொரு  பலூன்


காலை நேர  வானம்  வெண்மேகம் அருகில்  போன போது சூரியன் நன்றாக வந்து விட்டது


அடுத்து அடுத்து பலூன்கள் வந்தது





நான் ஒளிந்து கொள்கிறேன் யாரிடமும் சொல்லாதே!

சிறிய காணொளி தோட்டத்து அரளிச்செடி அருகே மறைந்து கொண்ட பலூன்

ஏப்ரல் மாதம் அரிசோனா வந்தேன், அப்போது இருந்து வெயில் இருந்ததால் பலூன்கள் பறக்கவில்லை.  இப்போது வெப்பம் தணிந்து இருக்கிறது, காலை நேரம் நன்றாக இருக்கிறது, இனி அடிக்கடி பலூன்கள்கள் பறக்கும்.

கீழே வரும் பலூன் படங்கள்  போன வாரம் வீட்டுக்கு  அருகே  பறந்த போது எடுத்த படங்கள்.

பலூன் ஏறும் , இடம் வீட்டுக்கு அருகில் இருப்பதால்  பார்க்க முடிகிறது அடிக்கடி.







பலூன்களை நான் ரசித்தது போல நீங்களும் ரசித்து பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

29 கருத்துகள்:

  1. படங்கள் அழகு.

    இவற்றில் ஏறிப் பறந்தால் நகரம் முழுவதையும் கண்டு களிக்கலாம். நீங்கள் பறந்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு.//

      நன்றி.

      //இவற்றில் ஏறிப் பறந்தால் நகரம் முழுவதையும் கண்டு களிக்கலாம். நீங்கள் பறந்திருக்கிறீர்களா?//

      இல்லை பறக்க ஆசைபடவில்லை. மகனும் ஆசைபடவில்லை.
      பார்க்கமட்டுமே பிடித்து இருக்கிறது.

      போன நிலவு பதிவுக்கு வரவில்லையே!

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. இங்கு இன்று காலை நிலா ஓரத்தில் லேசாக விண்ட தோசை மாதிரி குறையத் தொடங்கி விட்டது.  முக்கால் நிலாதான் இன்று பார்க்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //இங்கு இன்று காலை நிலா ஓரத்தில் லேசாக விண்ட தோசை மாதிரி குறையத் தொடங்கி விட்டது.//

      நல்ல உதாரணம்.

      //முக்கால் நிலாதான் இன்று பார்க்க முடிந்தது.//

      இங்கு நாளை குறையும்.

      நீக்கு
  3. நிலவும் பலூனும் நெருங்கட்டுமே.. அதன் இனிமை பயணம் தொடரட்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிலவும் பலூனும் நெருங்கட்டுமே.. அதன் இனிமை பயணம்
      தொடரட்டுமே..//

      பலூனில் அமர்ந்து இருக்கும் மக்கள் தொடர விரும்பவில்லை எங்களை இறக்கி விடு பின்னால் தொடரலாம் என்று சொல்லி விட்டார்கள்.

      இன்னொரு நாள் தொடரும்.

      பலூன் நமக்கு நிலாவை பார்க்க விட்டுக் கொடுத்து கீழே இறங்கி விட்டது.

      நீக்கு
  4. பலூன் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.  ஆனால் இவற்றை பறக்கவிட்டு என்ன சாதிக்கிறார்கள்?  அந்த பலூன்களை மறுபடி கலெக்ட் செய்து வைத்துக்கொண்டு விடுவார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பலூன் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆனால் இவற்றை பறக்கவிட்டு என்ன சாதிக்கிறார்கள்? //

      பலூனில் ஊரை சுற்றிக் காட்டி பணம் சாம்பாதிக்கிறார்கள் ஸ்ரீராம்.

      //அந்த பலூன்களை மறுபடி கலெக்ட் செய்து வைத்துக்கொண்டு விடுவார்களா?//

      மறுபடி மறு நாள் பறக்க சரிப்பார்த்து மடக்கி வைப்பார்கள்.
      சாந்தி நிலையம் பாடல் போட்டு முன்பு மக்கள் அதில் ஏறி நின்று பறப்பதை காட்டி இருந்தனே! பார்த்து இருப்பீர்கள். போன வாரம் ஒரு காணொளி எடுத்து யூடியூப் செய்து இருக்கிறேன்.
      பால்கனி பக்கம் பறக்கும் பலூனில் மனிதர்கள் தெரிவார்கள் பாருங்கள்.

      நீக்கு
  5. காணொளி ரசனை. அந்த பலூனில் ஒரு முகம் வரையப் பட்டிருந்தால் இன்னும் ரசனையாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொளி ரசனை. அந்த பலூனில் ஒரு முகம் வரையப் பட்டிருந்தால் இன்னும் ரசனையாக இருந்திருக்கும்.//

      விளம்பரத்திற்கு பறக்கும் ப்லூனில் நீங்கள் சொல்வது போல வரைவார்கள். இது மனிதர்கள் பறக்கும் பலூன்.

      /பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவர் அவர் எண்ணங்களே!//
      சாந்தி நிலைய பாடல் நினைவுக்கு வந்து இருக்கும்

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!//

      https://mathysblog.blogspot.com/2017/10/boomiyil-irupathum-vanathil-tamil-film.html

      முன்பு போட்ட பதிவில் இந்த பாடலை பகிர்ந்து இருக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.
      படங்கள் எப்படி இருக்கிறது என்று சொல்லவில்லையே!

      நீக்கு
  7. பலூன் படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

    நிலவோடு இணைத்து எடுத்தது சிறப்பு.

    காணொளி கண்டேன் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //பலூன் படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

      நிலவோடு இணைத்து எடுத்தது சிறப்பு.//

      காலை பேரனை வழியனுப்ப் முன் வாசலுக்கு போன போது கிடைத்த காட்சிநிலவும் , பலூனும்.

      //காணொளி கண்டேன் நன்று.//

      அது தோட்டத்து பக்கம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  8. அழகான படங்கள். இப்படி Hot Air Baloon-களில் பறந்து பறவைப் பார்வையில் கீழே இருக்கும் இடங்களை பார்ப்பது ஒரு நல்ல அனுபவம். படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      //அழகான படங்கள். இப்படி Hot Air Baloon-களில் பறந்து பறவைப் பார்வையில் கீழே இருக்கும் இடங்களை பார்ப்பது ஒரு நல்ல அனுபவம். படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.//

      ஆமாம், மேலே இருந்து பறவை பார்வையில் கீழே பார்த்தால் நன்றாக இருக்கும் தான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அழகான பலூன் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    நீங்களும் , நிலவையும், பலூனையும், விடாமல் துரத்திச் சென்று படமாக்கி இருக்கிறீர்கள். படங்களும், அதற்கு பொருத்தமான வாசகங்களும் மிக நன்றாக உள்ளது. படித்து ரசித்தேன். கடைசியில் நமக்கு பிடித்தமான நிலவின் முகம் பார்க்க வைத்து பலூன் தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு விட்டது போலும்...! (அந்த மிக, மிக அருகே இரண்டும் சேர்ந்திருந்த படம் மிக அருமையாக உள்ளது.) ஒரு சிறந்த புகைப்பட வல்லுனரால் கூட இப்படி அழகான ஷாட்டை தர முடியாது.. உங்கள் அபார திறமைக்கு என மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள் சகோதரி.

    கலரான பலூன்களும் நன்றாக உள்ளது. இந்த பலூன்களை பார்ப்பதே நன்றாக பொழுது போகும் தங்களுக்கு என நினைக்கிறேன். எங்களுக்கும் அதன் மூலம் அழகான படங்களை தந்துள்ளீர்கள். நீங்கள் பகிர்ந்த பாடலை மறக்க முடியுமா? பலூன் பாடல் என்றாலே நாகேஷ் பாடிய அந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. அழகான பலூன் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.//

      நன்றி.

      //நீங்களும் , நிலவையும், பலூனையும், விடாமல் துரத்திச் சென்று படமாக்கி இருக்கிறீர்கள். //

      நிலவும் ,பலூனும் முன் வாசலில் நின்று கொண்டு ஆடாமல் அசையாமல் பலூன் நகருவதை மட்டும் எடுத்த படம்.
      பின்னால் சில பலூன்கள் போனதை எடுத்தேன். துரத்தி படம் பிடிக்க அவசியம் இன்றி நம் வீட்டு தோட்டத்திற்கு அருகே அவைகள் வந்தன.
      துரத்தி கொண்டு போகவும் இப்போது முடியாது காலும் , கையும் வலி
      எதுவும் எழுத பிடிக்காமல் மன சோர்வு ஏற்படும் போது எல்லாம் இந்த மாதிரி காட்சிகள் என்னை சுறு சுறுப்பாக்குகிறது.

      //படங்களும், அதற்கு பொருத்தமான வாசகங்களும் மிக நன்றாக உள்ளது. படித்து ரசித்தேன். கடைசியில் நமக்கு பிடித்தமான நிலவின் முகம் பார்க்க வைத்து பலூன் தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு விட்டது போலும்...! (அந்த மிக, மிக அருகே இரண்டும் சேர்ந்திருந்த படம் மிக அருமையாக உள்ளது.) ஒரு சிறந்த புகைப்பட வல்லுனரால் கூட இப்படி அழகான ஷாட்டை தர முடியாது.. உங்கள் அபார திறமைக்கு என மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள் சகோதரி.//

      உங்கள் வார்த்தைகள் மகிழ்ச்சியை தந்தாலும் அதிகபடியான புகழ்ச்சியாக இருக்கிறது. சிரந்த புகைப்பட வல்லூனர் இன்னும் அழகாய் இந்த காட்சியை படம் எடுத்து இருப்பார்கள்.
      உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      //கலரான பலூன்களும் நன்றாக உள்ளது. இந்த பலூன்களை பார்ப்பதே நன்றாக பொழுது போகும் தங்களுக்கு என நினைக்கிறேன். எங்களுக்கும் அதன் மூலம் அழகான படங்களை தந்துள்ளீர்கள். நீங்கள் பகிர்ந்த பாடலை மறக்க முடியுமா? பலூன் பாடல் என்றாலே நாகேஷ் பாடிய அந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      வேறு நிறைய பலூன் பாடல்கள் இருந்தாலும் அவை எல்லாம் சதா பலூன் கள் வைத்து கொண்டு பாடுவதாக இருக்கிறது.
      நாகேஷ் பாடும் பாடல் பலூனில் பயணம் செய்து கொண்டே பாடும் பாடல் அதுதான் அதை பகிர்ந்தேன், பாடல் வரிகளும் நன்றாக இருக்கும்.
      அனைத்தையும் ரசித்துப் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      நீக்கு
  10. நிலவின் அருகே.. மிக மிக அருகே.. செல்லும் பலூனின் படங்களும் அதற்கேற்ற வாசகங்களும் மிக அருமை. காணொளியில் சூரியன் கடலுக்குள் மறைவதைப் போல் செடிக்குப் பின் மெல்ல இறங்கி மறையும் பலூன் அழகு.
    பதிவை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //நிலவின் அருகே.. மிக மிக அருகே.. செல்லும் பலூனின் படங்களும் அதற்கேற்ற வாசகங்களும் மிக அருமை. காணொளியில் சூரியன் கடலுக்குள் மறைவதைப் போல் செடிக்குப் பின் மெல்ல இறங்கி மறையும் பலூன் அழகு.
      பதிவை ரசித்தேன்.//

      பதிவை ரசித்து படங்களை, காணொளியை பற்றி சொல்லி ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமல்க்ஷ்மி

      நீக்கு
  11. நானும் அதைப்பார்க்கும் போது குழந்தையாகி போய்விடுவேன். எனக்கு பலூன் பறப்பதை வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.//

    நானும் இதைப் பார்த்ததும் ஒரே மகிழ்ச்சி! நான் சின்னக் குழந்தைதானே! (நெல்லையின் கண்ணில் இது படணுமே முருகா!) பலூனில் பறக்கும் ஆசை உண்டு!

    ஸ்ரீராமிற்கு உயரே என்றால் பயம் உண்டு. ஆனால் அவர் ப்ளேனில் பறந்துவிட்டதால் பலூனில் பறக்க பயப்பட மாட்டார்! அவரும் சின்னப் பையன் தான். (இதுவும் நெல்லையின் கண்ணில் படணுமேமுருகா!)

    நிஜமாகவே அழகா இருக்கு கோமதிக்கா. அதில் இருப்பவர்களுக்கு நீங்கள் பார்ப்பது தெரியுமா? கை அசைப்பார்கள் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //  அவரும் சின்னப் பையன் தான். (இதுவும் நெல்லையின் கண்ணில் படணுமேமுருகா!) //

      JKC கண்ணிலும் படணுமே ஈஸ்வரா.....!

      நீக்கு
    2. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //நானும் இதைப் பார்த்ததும் ஒரே மகிழ்ச்சி! நான் சின்னக் குழந்தைதானே! (நெல்லையின் கண்ணில் இது படணுமே முருகா!) பலூனில் பறக்கும் ஆசை உண்டு!//

      அதுதானே! எல்லோரும் குழந்தையாகும் தருணங்கள் உண்டு கீதா
      நெல்லை பார்த்து இருக்க மாட்டார், எல்லா பின்னூட்டங்களையும் வெளியிட்ட போது தான் அவர் பின்னுட்டமும் வெளியிட்டேன்.


      //ஸ்ரீராமிற்கு உயரே என்றால் பயம் உண்டு. ஆனால் அவர் ப்ளேனில் பறந்துவிட்டதால் பலூனில் பறக்க பயப்பட மாட்டார்! அவரும் சின்னப் பையன் தான். (இதுவும் நெல்லையின் கண்ணில் படணுமேமுருகா!)//

      பறக்க போகும் முன் கொஞ்சம் பயம் இருக்கும் அப்புறம் பயம் போய் விடும் ஸ்ரீராமும் சின்ன பையன் தான்., நீங்களும் சின்ன குழந்தைதான்.

      //நிஜமாகவே அழகா இருக்கு கோமதிக்கா. அதில் இருப்பவர்களுக்கு நீங்கள் பார்ப்பது தெரியுமா? கை அசைப்பார்கள் இல்லையா?//

      முன்பு இதைவிட பக்கமாய் பறந்தபோது எல்லோரும் கை அசைத்து சென்றார்கள்.

      நீக்கு
  12. நிலவும் அருகில் பலூனும் அந்தப் படம் செமையா இருக்கு கோமதிக்கா. அதோ தொட்டுவிட்டது! கிரகணம் போல் உன்னை முழுவதும் மறைக்கிறேன் என்று போய் கொஞ்சம் பகுதியை மறைத்துக் கொண்டு கோமதிக்கா அங்கருந்து படம் எடுக்கறாங்க அவங்களுக்கு இப்படி போஸ் கொடுத்தா நல்லாருக்கும்னு பாதி கிரகணம் போதும்னு வந்துவிட்டது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிலவும் அருகில் பலூனும் அந்தப் படம் செமையா இருக்கு கோமதிக்கா. //

      நன்றி கீதா

      //அதோ தொட்டுவிட்டது! கிரகணம் போல் உன்னை முழுவதும் மறைக்கிறேன் என்று போய் கொஞ்சம் பகுதியை மறைத்துக் கொண்டு கோமதிக்கா அங்கருந்து படம் எடுக்கறாங்க அவங்களுக்கு இப்படி போஸ் கொடுத்தா நல்லாருக்கும்னு பாதி கிரகணம் போதும்னு வந்துவிட்டது...//

      ஆமாம்.

      நீக்கு
  13. தோட்டத்து அருகில் பறக்கும் பலூன் செம தெளிவு. மேலருந்து கீழ பார்த்து ரசிக்கலாம். ஆசை எழுகிறது.

    வெண்மேகமும் பலூனும் - செம ஷாட் கோமதிக்கா. ரொம்ப ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தோட்டத்து அருகில் பறக்கும் பலூன் செம தெளிவு. மேலருந்து கீழ பார்த்து ரசிக்கலாம். ஆசை எழுகிறது.

      வெண்மேகமும் பலூனும் - செம ஷாட் கோமதிக்கா. ரொம்ப ரசித்தேன்..//

      காலை வெயில், சூரியன் பக்கத்தில் பறப்பதால் பலூன் நன்றாக தெரியவில்லை, வெண்மேகம் கடல் அலை போல இருந்தது. எனக்கு.
      கடலிலிருந்து பலூன் எழுவது போல எனக்கு தோன்றியது.

      நீக்கு
  14. நிலவும் பலூனும் சேருது ஆனால் பலூன் உடனே இறங்குது

    நிலா அது வானத்து மேலே பலூன் அதும் வானாத்து மேலே, நிலாவை நெருங்கப் பாக்குது. இப்படி பல பாடல்கள் இட்டுக் கட்ட வந்தன...ஆனா டக்குனு போட்டுப் போறேன் எனவே ஒரிஜினல் பாட்டுக்கு ஏற்ப இருக்குமா தெரியலை...

    படங்கள் அனைத்தும் ரொம்ப ரசித்தேன்...கீழே வீட்டருகில் பறந்த பலூன்கள் உட்பட. காணொளி பார்த்துவிட்டேன் கோமதிக்கா அரளிச் செடியின் இடையே மறைவது ரொம்ப அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிலவும் பலூனும் சேருது ஆனால் பலூன் உடனே இறங்குது

      நிலா அது வானத்து மேலே பலூன் அதும் வானாத்து மேலே, நிலாவை நெருங்கப் பாக்குது. இப்படி பல பாடல்கள் இட்டுக் கட்ட வந்தன...ஆனா டக்குனு போட்டுப் போறேன் எனவே ஒரிஜினல் பாட்டுக்கு ஏற்ப இருக்குமா தெரியலை...

      படங்கள் அனைத்தும் ரொம்ப ரசித்தேன்...கீழே வீட்டருகில் பறந்த பலூன்கள் உட்பட. காணொளி பார்த்துவிட்டேன் கோமதிக்கா அரளிச் செடியின் இடையே மறைவது ரொம்ப அழகு!//

      இட்டுகட்டிய பாடல்களை அனுப்புங்க போட்டு விடலாம் பதிவில்.
      நல்லா இருக்கிறது.
      படங்களை . காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு