செவ்வாய், 31 அக்டோபர், 2023

ஹாலோவீன் கொண்டாட்டம்







அக்டோபர் மாதம் கடைசி நாள் கொண்டாட படும் பண்டிகை  "ஹலோவீன்"  


இந்த வருடம் மகன் வீட்டு வாசலில் வைத்து இருக்கும்  பொம்மைகள் படம் பேரன் கவின் அனுப்பி இருந்தான். படங்களுக்கு கீழ் அழகான வாசகங்களும் அவனே எழுதி அனுப்பி இருந்தான்.  மற்றும் அவர்கள் நண்பர்களுடன் சில இடங்களுக்கு சென்று வந்த ஹாலோவின் கொண்டாட்ட படங்களும்  இந்த பதிவில் இடம் பெறுகிறது. 



மகன் மாறுவேடம் அணிந்து இருக்கிறான். இந்த வருட உடை இது.


//மற்றவர்களைப் பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்தக் கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.


முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.//

நன்றி  - விக்கிப்பீடியா


ஹலோவீன் தினக்கொண்டாட்டம்.

2013ல் நியூஜெர்சியில் கொண்டாடிய படங்கள் விவரங்கள் இருக்கிறது.

இருள் விலக்கும் பண்டிகை  என்று முன்பு இந்த நாளை பற்றி எழுதி இருக்கிறேன். படிக்கவில்லை எனறால் படிக்கலாம். 2017ல் நாங்கள் அரிசோனாவில்  கொண்டாடிய  படங்களும் பண்டிகை பற்றிய விவரங்களும் இருக்கும்.


முன்னோர்கள் வழிபாடு என்று ஜார்ஜியாவில் ஹலோவின்   அலங்காரங்கள்  பகிர்வு


மகள் ஊரில் கடைகளுக்கு போன போது ஹலோவின்  விற்பனைக்கு இருந்த பொம்மைகள் . மற்றும் காரில் பயணம் செய்யும் போது பார்த்த காட்சிகளும் இந்த பதிவில்.


இந்த பண்டிகை பற்றி நிறைய பதிவுகளில் எழுதி விட்டதாலும் உங்களுக்கு எல்லாம் இந்த பண்டிகை பற்றி தெரியும் என்பதாலும் இந்த பதிவில்  பேரன் அனுப்பிய படங்களும் அவன்  சொல்லும் விவரங்களும் மட்டும் இடம் பெறுகிறது.
எங்கள் குடும்ப வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் அனுப்பியது.  அதை படம் எடுத்து இங்கு பகிர்ந்து இருக்கிறேன். 

இதில் விரிவாக்கம் செய்து விட்டு படம் எடுக்க தவறி விட்டேன்.






Child Scarecrow Costume

இந்த ஆண்டு கவின் ஹலோவீன் உடையில் 











மகன் அவன் போன இடத்தை சிரித்து கொண்டே சுற்றி காட்டுவார். சின்ன காணொளி தான் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.































கவின் அனுப்பிய படங்கள் நன்றாக இருக்கிறதா?


என்று இரண்டு பகுதியாக  2017ல் மகன் எங்களை அழைத்து போனதை போட்டு இருக்கிறேன். நானும் இன்று பழைய பதிவுகளை படித்து  மகிழ்ந்து கொண்டேன்.

இந்த ஆண்டு கவின் அனுப்பிய படங்களை வைத்து ஹலோவீன் பதிவு போட்டு விட்டேன்.


"பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா ?" மிட்டாய் வாங்க வீட்டுக்கு வரும் குழந்தைகள் சொல்லும் வாக்கியம்


நாளை மிட்டாய் கேட்டு வரும் குழந்தைகளுக்கு  விளையாட்டு பொருட்களை பரிசாக  கொடுக்க போகிறான் கவின்.

நவராத்திரிக்கு வந்த குழந்தைகளுக்கும்   இந்த விளையாட்டுப் பொருட்கள் கொடுத்தார்கள், அவர்களே அவர்களுக்கு பிடித்தவைகளை எடுத்துகொண்டு  மகிழ்ச்சியாக போனார்கள். அது போல நாளை வரும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

நாளை ஹாலோவீன் கொண்டாடும் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.



வாழ்க் வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------

49 கருத்துகள்:

  1. ஹாலோவீன் கொண்டாட்டங்கள் வந்து விட்டதா? உங்களை போன்ற நண்பர்கள் பகிர்ந்து பகிர்ந்து எங்களுக்கும் பழகி விட்டது. எத்தனை விதமான கொண்டாட்டங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //ஹாலோவீன் கொண்டாட்டங்கள் வந்து விட்டதா//
      வந்து விட்டது.

      // உங்களை போன்ற நண்பர்கள் பகிர்ந்து பகிர்ந்து எங்களுக்கும் பழகி விட்டது. எத்தனை விதமான கொண்டாட்டங்கள்.//

      எங்களுக்கும் மகன் அமெரிக்கா போன பின் தான் தெரிந்தது முன்பு. இப்போது எங்கள் குடியிருப்பு பிள்ளைகளும் வேடம் அணிந்து வருகிறார்கள். மிட்டாய் ,அல்லது பிஸ்கட் கொடுக்கிறோம். எங்கள் குடியிருப்பு குழந்தைகள் படமும் ஒரு பதிவில் போட்டு இருக்கிறேன்.
      நம் ஊர் திருவிழாக்களில் நிறைய வேடமிட்டு வருகிறார்கள்.

      நீக்கு
  2. மகனும் பேரனும் வெவ்வேரு உடையில் கலக்குகிறார்கள்.  பேரன் பயங்கர உடை அணிந்திருந்தாலும் ஒரு போட்டோவில் கையைக் கட்டிக்க கொண்டு நிற்பது புன்னகைக்க வைத்தது.  இயல்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகனும் பேரனும் வெவ்வேரு உடையில் கலக்குகிறார்கள். பேரன் பயங்கர உடை அணிந்திருந்தாலும் ஒரு போட்டோவில் கையைக் கட்டிக்க கொண்டு நிற்பது புன்னகைக்க வைத்தது. இயல்பு.//

      மகன், மருமகள், பேரனும் ஹாலோவீன் உடை அணிந்து இருக்கிறார்கள். மருமகள் அவள் தோழியோடு படம் அனுப்பி இருக்கிறாரள்.
      பேரன் கையை கட்டிக் கொண்டு சிறுவர்களின் மகிழ்ச்சியை ரசிக்கிறான்.

      நீக்கு
  3. இந்த வருட தீம் பூசணிக்காயா?  எங்கு நோக்கினும் அதுவே காணப்படுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருட தீம் பூசணிக்காயா? எங்கு நோக்கினும் அதுவே காணப்படுகிறது...//

      ஆரஞ்சு மற்றும் கருமை ஆகிய இருவண்ணங்கள் இந்த கொண்டாட்டத்தில் தொடர்புபட்ட வண்ணங்களாய் உள்ளன. இவை இருளையும் நெருப்பின் வண்ணத்தையும் குறிப்பதாய் கருதப்படுகிறது.

      ஆப்பிளும், பரங்கிக்காயும் இந்த பருவத்தில் நிறைய விளையும். எல்லோர் வீடுகளிலும் ஆப்பிள் இனிப்பு , பரங்க்கிகாய் கொண்டு இனிப்பு, மற்றும் பல வகை பக்குவங்கல் செய்வார்கள்.
      அதனால் பரங்கிக்காய் தான் எல்லோர் வீடுகளிலும் வாசலில் வைப்பார்கள். பரங்கிக்காய் உண்மையானதும் பொம்மைகளாவும் விற்பார்கள் கடைகளில்.

      நீக்கு
  4. தீபாவளிக்கு புதுத்துணி எடுப்பபது போல இதற்கும் புது உடை எடுப்பார்கள் போல..  இதுபோன்ற உடைகளும் நிறைய சேர்ந்திருக்கும்.  அவற்றை இந்த தினம் தவிர மற்ற தினங்களில் போடவும் முடியாது, இல்லை?  கிறிஸ்துமஸ் தினம் போல இந்த நாளிலும் குழந்தைகளுக்கு பரிசுப்பொருள்களா?  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தீபாவளிக்கு புதுத்துணி எடுப்பபது போல இதற்கும் புது உடை எடுப்பார்கள் போல.. இதுபோன்ற உடைகளும் நிறைய சேர்ந்திருக்கும். அவற்றை இந்த தினம் தவிர மற்ற தினங்களில் போடவும் முடியாது, இல்லை?//

      அந்த உடைகளை வேண்டாம் என்றால் நன்கொடை அளித்து விடுவார்கள். நன்கொடை பெட்டிகளில் சேர்த்து விடுவார்கள்.
      மாற்றி மைத்து வைத்து கொள்ள வேண்டுமென்றால் வைத்து கொள்ளலாம்.

      //கிறிஸ்துமஸ் தினம் போல இந்த நாளிலும் குழந்தைகளுக்கு பரிசுப்பொருள்களா? //
      ஆமாம்.வாசலில் மிட்டாய்கள் , பரிசு பொருட்கள் வைத்து விடுவார்கள்.
      பெரியவர்களும், குழந்தைகளும் வீடு வீடாய் அலங்காரம் செய்து கொண்டு வருவார்கள் பார்க்கவே அருமையாக இருக்கும்.

      நீக்கு
  5. காணொளி கண்டேன், ரசித்தேன்..  அந்த உடையின் விகேஷம், நீங்கள் சொன்னது போல மகன் சிரித்துக் கொண்டே பின்ணனியைக் காட்டுகிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொளி கண்டேன், ரசித்தேன்.. அந்த உடையின் விகேஷம், நீங்கள் சொன்னது போல மகன் சிரித்துக் கொண்டே பின்ணனியைக் காட்டுகிறார்!//

      ஸ்ரீராம் நீங்கள் காணொளியை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி ,நன்றி.

      நீக்கு

  6. Very fast. Halloween கொண்டாட்டங்கள் பற்றிய கட்டுரை இவ்வளவு சீக்கிரம் எழுதியது வேடிக்கை தான். படமும் கட்டுரையும் நன்றாக உள்ளன. கவினின் கமெண்டுகளும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் சார்,

      //Very fast. Halloween கொண்டாட்டங்கள் பற்றிய கட்டுரை இவ்வளவு சீக்கிரம் எழுதியது வேடிக்கை தான். //

      அங்கு பண்டிகைகளை விடுமுறை நாளில் கொண்டாடி விடுவார்கள். மகன் சனிக்கிழமை வாசலில் வைத்த படம் அனுப்பினான். பேரனும் சனிக்கிழமையும், ஞாயிறும் அனுப்பினான். அதனால் உடனே பதிவு போட்டு விட்டேன்.


      //படமும் கட்டுரையும் நன்றாக உள்ளன. கவினின் கமெண்டுகளும்.//

      படங்களை, கட்டுரையை, கவினின் கமெண்டுகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  7. படங்களும் நன்றாக இருக்கின்றன.
    பதிவும் நன்றாக வந்திருக்கின்றது..

    பற்பல நம்பிக்கைகள்.. பற்பல கொண்டாட்டங்கள்..

    மகிழ்ச்சி என்றென்றும் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //படங்களும் நன்றாக இருக்கின்றன.
      பதிவும் நன்றாக வந்திருக்கின்றது..//

      நன்றி.
      //பற்பல நம்பிக்கைகள்.. பற்பல கொண்டாட்டங்கள்..//

      ஆமாம், நம்பிக்கைகள் தான் வாழவைத்து கொண்டு இருக்கிறது மக்களை.


      //மகிழ்ச்சி என்றென்றும் வாழ்க..//
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      உங்கள் கதைக்கு பின்னூட்டம் போட்டேன் காணவில்லை ஸ்ரீராம் தேடி போட வேண்டும். பதிவானபின் காணாமல் போவது அதிசயமாக இருக்கிறது.



      நீக்கு
  8. கூடிய விரைவில் இதுவும் இங்கே வந்து சேரக்கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கூடிய விரைவில் இதுவும் இங்கே வந்து சேரக்கூடும்.//

      வந்து விட்டதே! நான் ஒரு ஓட்டலில் வாசலில் ஹாலோவீன் பேயை படம் எடுத்து போட்டு இருந்தேன். முன்பு ஒரு பதிவில். எங்கள் குடியிருப்பு குழந்தைகள் வீடு வீடாய் மாறுவேடம் அணிந்து வந்தார்கள். ராமலக்ஷ்மி பெங்களூரில் அவர்கள் குடியிருப்பு பகுதியிலும் குழந்தைகள் மாறுவேடம் அணிந்து வந்தார்கள் என்றார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. ஹாலோவீன் படங்களும், காணொளியில் சிறப்பாக பயமுறுத்துகிறது.

    கவினுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //ஹாலோவீன் படங்களும், காணொளியில் சிறப்பாக பயமுறுத்துகிறது.//

      அச்சோ! பயந்து விட்டீர்களா!


      //கவினுக்கு வாழ்த்துகள்.//

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  10. பயமுறுத்துவதற்கு ஒரு விழா. வியப்புதான். படங்களும் பகிர்வும் காணொலியும் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      //பயமுறுத்துவதற்கு ஒரு விழா. வியப்புதான். படங்களும் பகிர்வும் காணொலியும் சிறப்பு//

      பயமுறுத்துவதற்கு மட்டும் இல்லை, முன்னோர்களை வழி பாடும் நாளும். படங்களை, காணொளியை பார்த்து
      கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  11. கவின் அனுப்பிய ஹாலோவின் படங்கள் அத்தனையும் அருமை. ரொம்ப மகிழ்வான கொண்டாட்டங்க்ள் என்று தெரிகிறது, கோமதிக்கா. கவின் உங்களோடு தொடர்பில் இருப்பதும், உங்களிடம் இப்படிப் பேசுவதும் எல்லாமே ஒரு குடும்பம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணங்கள். God Bless!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      கவின் அனுப்பிய ஹாலோவின் படங்கள் அத்தனையும் அருமை.//
      நன்றி.
      //ரொம்ப மகிழ்வான கொண்டாட்டங்க்ள் என்று தெரிகிறது,//

      ஆமாம்.

      //கோமதிக்கா. கவின் உங்களோடு தொடர்பில் இருப்பதும், உங்களிடம் இப்படிப் பேசுவதும் எல்லாமே ஒரு குடும்பம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணங்கள். God Bless!//

      நன்றி கீதா.




      நீக்கு
  12. கவின் மற்றும் உங்கள் மகனின் மாறு வேஷம் மகன் சிரித்துக் கொண்டே சுற்றிக் காட்டும் காணொளியை ரசித்துப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது.

    அடுத்து கவின் ஒவ்வொரு படத்திற்கும் கொடுத்திருக்கும் வரிகளும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவின் மற்றும் உங்கள் மகனின் மாறு வேஷம் மகன் சிரித்துக் கொண்டே சுற்றிக் காட்டும் காணொளியை ரசித்துப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது.

      அடுத்து கவின் ஒவ்வொரு படத்திற்கும் கொடுத்திருக்கும் வரிகளும் ரசித்தேன்.//

      நன்றி கீதா.


      நீக்கு
  13. ஹலோவின் அங்கு ரொம்ப சிறப்பாகக் கொண்டாடுவாங்க. கூடவே இந்த பரங்கிக் காய் விழாவும் வந்துவிடும். நன்றி நவிலல் விழா, பூண்டு விழா என்று அதுவும் கொண்டாடப்படும் ஒரு சில இடங்களில்.

    இந்த சமயத்தில் வருடத்திற்குத் தேவையான பம்ப்கின் பட்டர் என்று தடவிச் சாப்பிடுவதற்கான ஜாம் போன்றதும், இன்னும் பல செய்து வைப்பாங்க.

    பழைய வீடு, அந்த ஹால், சாப்பாட்டு மேசை, சுரங்கத் தொழிலாளர்கள் பயனப்டுத்திய குளியல் தொட்டி எல்லாமுமே பொக்கிஷங்களாக, பரங்கிக்காய் வைத்துச் செய்திருக்கும் ஹலோவின் கொண்டாட்டங்கள் எல்லாமே சுவாரசியமாக இருக்கின்றன.

    ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சீஸனில் ஒரு நம்பிக்கை அதன் அடிப்படையில் கொண்டாட்டங்கள் என்று நம்மூரில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மூதாதையர்களை வணங்குதல் கெட்ட சக்தியை ஒழித்தல் என்று இருப்பது போல்...

    இப்போது இங்கும் ஹாலோவின் கொண்டாடத் தொடங்கிட்டாங்க. நிறைய பொம்மைகள் கடைகளில் விற்கிறாங்க.

    குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்கள் நன்றாக இருக்கின்றன. கவினுக்கு வாழ்த்து சொல்லிவிடுங்கள், கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோவின் அங்கு ரொம்ப சிறப்பாகக் கொண்டாடுவாங்க. கூடவே இந்த பரங்கிக் காய் விழாவும் வந்துவிடும். நன்றி நவிலல் விழா, பூண்டு விழா என்று அதுவும் கொண்டாடப்படும் ஒரு சில இடங்களில்.//

      அடுத்து அடுத்து விழாக்கள் தான். நம் ஊரில் ஆடி மாதம் முதல் பண்டிகைகள் ஆரம்பித்து விடும் அது போல தான் அங்கும்.

      //இந்த சமயத்தில் வருடத்திற்குத் தேவையான பம்ப்கின் பட்டர் என்று தடவிச் சாப்பிடுவதற்கான ஜாம் போன்றதும், இன்னும் பல செய்து வைப்பாங்க.//
      ஆமாம், ஆப்பிள், மற்றும் பரங்கிகாய் உணவு பொருட்கள் நிறைய செய்து வைத்து கொள்வார்கள்.

      //பழைய வீடு, அந்த ஹால், சாப்பாட்டு மேசை, சுரங்கத் தொழிலாளர்கள் பயனப்டுத்திய குளியல் தொட்டி எல்லாமுமே பொக்கிஷங்களாக, பரங்கிக்காய் வைத்துச் செய்திருக்கும் ஹலோவின் கொண்டாட்டங்கள் எல்லாமே சுவாரசியமாக இருக்கின்றன.//

      அதனால் தான் கவின் அனுப்பி இருக்கிறான்.

      //ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சீஸனில் ஒரு நம்பிக்கை அதன் அடிப்படையில் கொண்டாட்டங்கள் என்று நம்மூரில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மூதாதையர்களை வணங்குதல் கெட்ட சக்தியை ஒழித்தல் என்று இருப்பது போல்.//

      ஆமாம் கீதா. நான் பழைய பதிவுகளில் இதை எல்லாம் சொல்லி விட்டேன்.


      //இப்போது இங்கும் ஹாலோவின் கொண்டாடத் தொடங்கிட்டாங்க. நிறைய பொம்மைகள் கடைகளில் விற்கிறாங்க.//

      ஆமாம் கீதா, ராமலக்ஷ்மி பல வருடம் முன்பே என் பதிவில் சொன்னார்கள், இப்போது இன்னும் அதிகமாக இருக்கும் தான்.

      //குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்கள் நன்றாக இருக்கின்றன. கவினுக்கு வாழ்த்து சொல்லிவிடுங்கள், கோமதிக்கா.//

      உங்கள் வாழ்த்துகளை சொல்லி விடுகிறேன் கீதா.

      நீக்கு
  14. இங்கு கடலைக்கா திருவிழா வந்துகொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 9 லிருது 11 வரை பசவனகுடியில் (லால்பாக் அருகில்) கொண்டாடுறாங்க இந்த வருடம். போக வேண்டும். 11 ஆம் தேதி முக்கியமான நாள் நிகழ்வுகள் இருக்கும். இந்த முறையாவது போய் பார்க்க வேண்டும். 9, 10 சனி ஞாயிறு ஆனால் 11 திங்கள். சனி ஞாயிறு அன்று ஏதேனும் ஒரு நாள் போய்ப்பாக்கணும்...பார்ப்போம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்கு கடலைக்கா திருவிழா வந்துகொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 9 லிருது 11 வரை பசவனகுடியில் (லால்பாக் அருகில்) கொண்டாடுறாங்க//

      முன்பு கமலா ஹரிஹரன் பதிவு போட்டு இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.


      //இந்த வருடம். போக வேண்டும். 11 ஆம் தேதி முக்கியமான நாள் நிகழ்வுகள் இருக்கும். இந்த முறையாவது போய் பார்க்க வேண்டும். 9, 10 சனி ஞாயிறு ஆனால் 11 திங்கள். சனி ஞாயிறு அன்று ஏதேனும் ஒரு நாள் போய்ப்பாக்கணும்...பார்ப்போம்...//

      போய் பார்த்து வந்து பதிவு போடுங்கள்.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி கீதா.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      இங்கு நடைபெறும் கடலைக்காய் திருவிழா வைப் பற்றி நீங்கள் இருவரும் பேசி பகிர்ந்ததை படித்தேன். என்னை நினைவு வைத்து நீங்கள் கூறியதும் மகிழ்ச்சி சகோதரி. நேரம் இருந்தால் அதற்கேற்ற சந்தர்ப்பம் அமைந்தால் நாங்களும் அங்கு வருகிறோம். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      இங்கு நடைபெறும் கடலைக்காய் திருவிழா வைப் பற்றி நீங்கள் இருவரும் பேசி பகிர்ந்ததை படித்தேன். என்னை நினைவு வைத்து நீங்கள் கூறியதும் மகிழ்ச்சி சகோதரி. நேரம் இருந்தால் அதற்கேற்ற சந்தர்ப்பம் அமைந்தால் நாங்களும் அங்கு வருகிறோம். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      கடலைக்காய் திருவிழா சென்று படங்கள் பகிர்ந்து இருந்தது நினைவுக்கு வந்தது.

      அங்கு செல்லும் சந்தர்ப்பம் அமையட்டும்.
      போய் பார்த்து படங்கள் எடுத்து பதிவு போடுங்கள் கமலா. நீங்கள் பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டதே!

      நீக்கு
    5. ஆமாம் சகோதரி. ஏதோ தடையாகவே ஒவ்வொரு நாளின் நேரங்களும் நகர்ந்து செல்கிறது. ஒரு பதிவை முழுதாக எழுதி வைத்து வெளியிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். எழுத நினைத்திருக்கும், பதிவுகளும், எழுதி முடிக்காமல் பாதியில் வைத்திருக்கும், பதிவுகளுமாக இருக்கிறது. இனி இந்நிலை இவ்வருடம் முழுவதும் தொடரும் போலத்தான் உள்ளது. அடுத்த வருடமாவது நல்லபடியாக பிறந்து எல்லோரையும் மகிழ்விக்க வேண்டுமாய் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி.

      நீக்கு
    6. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //ஏதோ தடையாகவே ஒவ்வொரு நாளின் நேரங்களும் நகர்ந்து செல்கிறது. ஒரு பதிவை முழுதாக எழுதி வைத்து வெளியிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.//

      நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்து கொண்டு பதிவிடுங்கள்.

      //எழுத நினைத்திருக்கும், பதிவுகளும், எழுதி முடிக்காமல் பாதியில் வைத்திருக்கும், பதிவுகளுமாக இருக்கிறது//

      நேரம் நல்லபடியாக அமைந்து பாதியில் வைத்துக்கு இருக்கும் பதிவுகள் முழுமை அடைய நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.


      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    இன்றைய பதிவு அருமை. ஹாலோவீன் கொண்டாட்ட படங்கள் எல்லாமே நன்றாக உள்ளது. நிறைய தகவல்களை படித்து தெரிந்து கொண்டேன்.

    தங்கள் மகன் மற்றும், பேரன் மாறுவேட உடையுடன் கூடிய படங்கள் நன்றாக உள்ளன. தங்களது மகன் மாறு வேட உடையுடன் அங்கிருந்தவர்களை சுற்றி காண்பிக்கும் காணொளியை ரசித்தேன். அவர் அணிந்திருந்த அந்த உருவத்தை விட அவர் வேறு இருவருடன் நிற்கும் ஒரு படம் சற்றே பயமுறுத்துகிறது.:)) தங்கள் மருமகளும் அதில் உள்ளாரா? இல்லை வேறு இரு நண்பர்களா?

    ஒவ்வொரு படத்திற்கும் தங்கள் பேரனின் பொருத்தமான வசனங்கள் நன்றாக உள்ளது. மகன் வீட்டிலும் மிகவும் உற்சாகமாக இவ்விழாவை கொண்டாடியிருக்கிறார்கள்.

    பரங்கிகாய்களின் படங்களும், அவையின் குத்துச்சண்டை படங்களும் நன்றாக உள்ளது. எல்லா படங்களையும் ரசித்துப் பார்த்தேன். உங்கள் மகன் மற்றும் மருமகள், பேரன் அனைவருக்கும் ஹாலோவீன் வாழ்த்துகள்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பதிவு அருமை. ஹாலோவீன் கொண்டாட்ட படங்கள் எல்லாமே நன்றாக உள்ளது. நிறைய தகவல்களை படித்து தெரிந்து கொண்டேன்.//

      நன்றி.

      //தங்கள் மகன் மற்றும், பேரன் மாறுவேட உடையுடன் கூடிய படங்கள் நன்றாக உள்ளன. தங்களது மகன் மாறு வேட உடையுடன் அங்கிருந்தவர்களை சுற்றி காண்பிக்கும் காணொளியை ரசித்தேன்.//

      காணொளியை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      //அவர் அணிந்திருந்த அந்த உருவத்தை விட அவர் வேறு இருவருடன் நிற்கும் ஒரு படம் சற்றே பயமுறுத்துகிறது.:)) தங்கள் மருமகளும் அதில் உள்ளாரா? இல்லை வேறு இரு நண்பர்களா?//

      அந்த படத்தில் மகனின் இரு நண்பர்கள். மருமகள் தன் தோழியோடு அனுப்பிய படம் இருந்தது அதனால் அதை போடவில்லை.

      //ஒவ்வொரு படத்திற்கும் தங்கள் பேரனின் பொருத்தமான வசனங்கள் நன்றாக உள்ளது. மகன் வீட்டிலும் மிகவும் உற்சாகமாக இவ்விழாவை கொண்டாடியிருக்கிறார்கள்.//

      அந்த ஊரில் இருப்பதால் அந்த பண்டிகையை எல்லோரும் கொண்டாடுவார்கள்.

      //பரங்கிகாய்களின் படங்களும், அவையின் குத்துச்சண்டை படங்களும் நன்றாக உள்ளது. எல்லா படங்களையும் ரசித்துப் பார்த்தேன். உங்கள் மகன் மற்றும் மருமகள், பேரன் அனைவருக்கும் ஹாலோவீன் வாழ்த்துகள்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//


      மகன் இன்னும் படங்கள் நிறைய அனுப்பி இருந்தான். மகன், மருமகள் , பேரனுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி .உங்கள் வேலைகளுக்கு இடையே வந்து விரிவான பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.



      நீக்கு
  16. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அருமை...

      காணொளி அசத்தல்..//

      படங்களை, காணொளியை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்..

      நீக்கு
  17. ஹாலூவின் கொண்டாட்டப் படங்கள் அருமை. நானும் கொண்டாட்டத்தில் பங்கெடுத்ததுபோல இருக்கிறது.

    எம்மாம் பெரிய பறக்கிக்காய்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //ஹாலூவின் கொண்டாட்டப் படங்கள் அருமை. நானும் கொண்டாட்டத்தில் பங்கெடுத்ததுபோல இருக்கிறது.//

      நன்றி.

      எம்மாம் பெரிய பறக்கிக்காய்கள்.//

      மிக பெரிதாக இந்த சீஸனில் விளையும்.

      நீக்கு
  18. காணொளி அருமை. மைதானத்தில்தான் எத்தனை பேர்... கொண்டாட்டங்களில்.

    படங்களின் விளக்கமும் நன்றாக இருந்தது.

    இதற்காகவே ஏற்பட்ட டவுனா? பயமுறுத்தும் வித்த்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி அருமை. மைதானத்தில்தான் எத்தனை பேர்... கொண்டாட்டங்களில்.//

      ஆமாம், வேலைகளுக்கு இடையே இப்படி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மகிழ்கிறார்கள்.

      //படங்களின் விளக்கமும் நன்றாக இருந்தது.//

      கவினிடம் சொல்கிறேன்.


      //இதற்காகவே ஏற்பட்ட டவுனா? பயமுறுத்தும் வித்த்தில்.//

      இல்லை, முன்பு தங்கம் வெள்ளி சுரங்கத்தில் வேலைபார்த்தவர்கள், என்று 5000 க்கு மேல் மக்கள் வாழ்ந்த இடம் தான். போரால் சுரங்கம் மூட பட்டவுடன் தங்கம் , வெள்ளி எடுப்பது கைவிட பட்டவுடன் இங்கு இருந்த மக்கள் இடம் பெயர்ந்து விட்டார்களாம்.

      நகரம் இப்படி ஆகி விட்டது. இப்போதும் சிலர் வசித்து கொண்டுதான் இருக்கிறார்களாம்.

      அந்த ஊரில் பறக்கியாய் வைத்து இப்படி நிகழச்சிகள் நடத்துகிறார் ஒருவர்.
      முன்பு என்னையும் என் கணவரையும் அழைத்து போன இடம் வேறு அதன் சுட்டி கொடுத்து இருக்கிறேன், நேரம் இருந்தால் பாருங்கள்.

      பரங்கிக்காய்த் திருவிழா பகுதி-1
      பரங்கிக்காய்த் திருவிழா பகுதி - 2

      நீக்கு
  19. எங்கள் அபார்ட்மென்டலும் சிறுவர்கள் இதைக் கொண்டாடறாங்க. வீடுகளுக்கும் வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்கள் அபார்ட்மென்டலும் சிறுவர்கள் இதைக் கொண்டாடறாங்க. வீடுகளுக்கும் வருகிறார்கள்.//

      ஆமாம், முன்பு ராமலக்ஷ்மி சொன்னார்கள், அப்புறம் கீதா சொன்னார்கள். பெரிய நகரங்களில் இப்போது இந்த விழா நடத்தப்படுகிறது.
      கடலைக்காய் திருவிழாவுக்கு போவீர்களா?
      கமலா, கீதா போவதாக சொல்லி இருக்கிறார்கள். நீங்களும் போய் படம் எடுத்து போடுங்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  20. பேரன் எடுத்த படங்கள், அவன் அப்பா, அவன் இருவரின் ஹாலோவீன் உடை எல்லாம் அருமை. கவின் நல்ல கற்பனை வளத்துடன் குறிப்புக்களைப் பொருத்தமாய்ச் சேர்த்திருக்கிறான். வின்டேஜ் கிராமம் மிக அழகு. பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கின்றனர். பறங்கிக்காய்களால் ஆன மருத்துவமனை சிறப்பு. நாங்களும் சில ஹாலோவீன் தினங்களில் அம்பேரிக்காவில் இருந்திருக்கோம். மரும்கள் வாசலில் ஒரு கூடையில் பரிசுப் பொருட்களும் ஒரு கூடையில் சாக்லேட்டுகளும் வைத்து விடுவாள். குழந்தையை அழைத்துக் கொண்டு அவள் போய்விட்டு வருவாள். இப்போக் குஞ்சுலு தானே போகிறது. இந்த வருஷம் அதன் உடை பட்டர்ஃப்ளை உடை. முதுகில் மாட்டிய சிறகுகளையும் தலையில் போட்டுக் கொண்ட பட்டர்ஃப்ளையின் கொம்புகளையும் இரண்டு நாட்கள் கழற்றவே இல்லை. எங்களுக்குக் காட்டின பின்னர் கழற்றினதாகப் பையர் சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //பேரன் எடுத்த படங்கள், அவன் அப்பா, அவன் இருவரின் ஹாலோவீன் உடை எல்லாம் அருமை. கவின் நல்ல கற்பனை வளத்துடன் குறிப்புக்களைப் பொருத்தமாய்ச் சேர்த்திருக்கிறான்.//

      நன்றி.

      //மரும்கள் வாசலில் ஒரு கூடையில் பரிசுப் பொருட்களும் ஒரு கூடையில் சாக்லேட்டுகளும் வைத்து விடுவாள். குழந்தையை அழைத்துக் கொண்டு அவள் போய்விட்டு வருவாள். இப்போக் குஞ்சுலு தானே போகிறது.//

      ஆமாம், மருமகளும் வாசலில் வைத்து விடுவாள். இன்று எல்லாம் முடிந்து விட்டது என்று கதவை அடைத்து விட்டு உள்ளே வந்து விட்டார்கள், பரிசு பொருள், கடையும் மிட்டாய் பாத்திரமும் பறங்கிகாய் போல உள்ளது வெளியே இருந்தது எடுக்கவில்லை. அதை ஒரு பெண் எடுத்து கொண்டு காரில் ஏறி போய் விட்டாள். விளையாட்டுக்கு செய்தாளா அல்லது நிஜ திருட்டா என்று தெரியவில்லை.வீட்டு வெளியே வைத்து இருக்கும் காமிராவில் பதிவாகி இருக்கிறது. இப்படியும் மனிதார்கள் என்று வியக்க வைக்கிறது.

      //இந்த வருஷம் அதன் உடை பட்டர்ஃப்ளை உடை. முதுகில் மாட்டிய சிறகுகளையும் தலையில் போட்டுக் கொண்ட பட்டர்ஃப்ளையின் கொம்புகளையும் இரண்டு நாட்கள் கழற்றவே இல்லை. எங்களுக்குக் காட்டின பின்னர் கழற்றினதாகப் பையர் சொன்னார்.//

      குட்டியம்மாவுக்கு பட்டுபாப்பாவுக்கு பட்டர்ஃப்ளை உடை மிக அழகாய் இருக்கும்,
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  21. படங்களும் காணொளியும் பகிர்வும் மிக அருமை. தங்கள் முந்தைய ஹாலோவீன் பதிவுகளின் மூலம் விரிவாக இக்கொண்டாட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டது நினைவுக்கு வருகிறது. எங்கள் குடியிருப்பிலும் குழந்தைகள் இதுபோல உடை அணிந்து கலக்குகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் மிட்டாய்கள் கொடுப்போம். இந்த வருடமும் கொடுத்தோம். பேரன் விளையாட்டுப் பொருட்கள் கொடுத்தது சிறப்பு. நல்ல சிந்தனை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      //படங்களும் காணொளியும் பகிர்வும் மிக அருமை. தங்கள் முந்தைய ஹாலோவீன் பதிவுகளின் மூலம் விரிவாக இக்கொண்டாட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டது நினைவுக்கு வருகிறது. //

      நன்றி.

      //எங்கள் குடியிருப்பிலும் குழந்தைகள் இதுபோல உடை அணிந்து கலக்குகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் மிட்டாய்கள் கொடுப்போம்.//

      இந்த ஆண்டும் வந்தார்களா? அருமை.

      //பேரன் விளையாட்டுப் பொருட்கள் கொடுத்தது சிறப்பு. நல்ல சிந்தனை. பாராட்டுகள்.

      மிட்டாயும் , விளையாட்டுப் பொருடகளும் கொடுத்தான்.
      உங்கள் கருத்துக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.








      நீக்கு
  22. மகன் ,பேரனின் கலோவின் கொண்டாட்ட படங்கள் மிக அருமை. ரசித்தேன்.பாராட்டை கூறிவிடுங்கள்.

    எனது பேரனுக்கு இப் படங்களை காட்டுவேன்.
    சிறிய அளவில் அவனும் கொண்டாடினான்.கலோவின் முட்டை, ஸ்கேயாரி உணவுப் பொருட்கள் இரண்டு,மூன்று செய்து குடுத்தேன் அவனும்மிக்க மகிழ்ச்சி அடைந்தான். .உடையும் அணிந்தான்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //மகன் ,பேரனின் கலோவின் கொண்டாட்ட படங்கள் மிக அருமை. ரசித்தேன்.பாராட்டை கூறிவிடுங்கள்.//

      நன்றி, உங்கள் பாராட்டை சொல்லி விடுகிறேன், பேரன், மகனிடம்.

      //எனது பேரனுக்கு இப் படங்களை காட்டுவேன்.
      சிறிய அளவில் அவனும் கொண்டாடினான்.கலோவின் முட்டை, ஸ்கேயாரி உணவுப் பொருட்கள் இரண்டு,மூன்று செய்து குடுத்தேன் அவனும்மிக்க மகிழ்ச்சி அடைந்தான். .உடையும் அணிந்தான்//

      உங்கள் பேரனுக்கு உணவுப் பொருடகள் செய்து கொடுத்து பேரனை மகிழ்ச்சியடைய செய்தது அறிந்து மகிழ்ச்சி.
      ஹலோவீன் உடை அணிந்து மகிழ்ச்சியாக பேரன் கொண்டாடியது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு