வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

மும்மூர்த்திகள் ஆராதனை தினம்

 

பேரன்  கவின்

மும்மூர்த்திகள் பல கீர்த்தனைகள் இசையமைத்து இருக்கிறார்கள்

இசையமைப்பாளர்கள் தினம் என்று வைத்து இருக்கிறார்கள்.





அரிசோனாவில் ஃபைன் ஆர்ட்ஸ் அசோசியேஷன் ஆரம்பித்து  40 வருடங்கள் ஆகிறது.  20 வருடங்களாக     சங்கீத மும்மூர்த்திகளின்  ஆராதனை விழாவை நடத்தி வருகிறார்கள்.

இந்த வருடம் 40 வது  வருட ஆண்டு விழா.

இரண்டு  நாட்கள் நடந்தது.பிப்ரவரி 4, 5 தேதிகளில் நடந்தது.

முதல் நாள் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி இருக்கிறார்கள்.  கர்நாடக இசை தெரிந்தவர்கள் எல்லாம் பாடி இருக்கிறார்கள். பேரனின் ஆசிரியரும் பாடினார்கள்.

 இரண்டாவது நாள் ஆராதனை விழாவில் பேரன் பாடினான். அவனுக்கு கற்றுத்தரும் ஆசிரியர் அவர்களிடம் கற்றுக் கொள்ளும் மாணவர்களை பாட வைத்தார்கள். அப்படி நிறைய கர்நாடக இசையை கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களிடம்  இசை கற்கும் மாணவ, மாணவிகளை பாட வைத்தார்கள்.


பேரனுக்கு 5ம் தேதி மதியம் 12 மணிக்கு நேரம் கொடுத்து இருந்தார்கள்.

முத்துசாமி தீட்சீதர், தியாகராஜர், சியாமா சாஸ்திரி


சங்கீத மும்மூர்த்திகள்  பல கீர்த்தனைகளை  இயற்றியவர்கள். 
மூவரும் திருவாரூரில் பிறந்தவர்கள்.

 1762 ல் பிறந்த  சியாமா சாஸ்திரிகள் தஞ்சாவூர் காமாட்சி அம்மன் மேல், நாகப்பட்டினம் நீலாயதாட்சி, திருவையாறு தர்மசம்வர்த்தினி , மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மீது பல   கீர்த்தனைகள் பாடி இருக்கிறார்.

1767 ல் பிறந்த தியாகராஜர் இராமர் மேல்  தெலுங்கு கீர்த்தனைகள் பாடி இருக்கிறார்.

1776 ல் பிறந்த முத்துசுவாமி தீட்சிதர் திருவாரூர் தியகராஜர், கமலாம்பாள்  , கணபதி ஆகியோர் மேல்   பாடல்களை பாடி இருக்கிறார். மிகவும் சிறப்பு வாய்ந்த நவாவரண கீர்த்தனைகள்  இயற்றி இருக்கிறார்.

உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

 மெஷா( Dorado ,Mesa ) என்ற இடத்தில் உள்ள சின்மயா மிஷனில்    இசை விழா நடந்தது.

சின்மயா மிஷனை பார்த்தவுடன் என் இளமைகாலத்தில் பாலவிகாரில் 5வயதிலிருந்து 14 வயது உள்ள குழந்தைகளுக்கு உள்ள வகுப்பில் சேர்ந்து பகவத்கீதை, பஜனை பாடல்கள்,  பஜகோவிந்தம்,  ஸ்லோகங்கள் கற்றது நினைவுக்கு வந்தது. 

அப்பா கோவை  சின்மயா மிஷனில் துணை தலைவராக இருந்தார்கள்.

இருவரும் சேர்ந்து பாடினார்கள்.

இந்த பெண் குழந்தையும் நடனம், பாட்டு ஜிம்னாஸ்டிக், தமிழ்,  என்று நிறைய   கற்றுக் கொண்டு  இருக்கிறாள்.

முதலில் இருப்பவர்கள்  பாட ஆரம்பிக்கும் முன் அடுத்து பாட இருப்பவர்களை அமர வைத்து விடுகிறார்கள். அவர்கள் ஆசிரியர் பெயர் சொல்லி , தங்கள் பெயரை சொல்லிவிட்டு என்ன பாட போகிறோம் என்பதை சொல்லி பாடுகிறார்கள்.
கவின் ஆசிரியர் பெயர் திருமதி. ஜானகி ராமசந்திரன் .

பாடிய குழந்தைகள் எல்லாம் நன்றாக பாடினார்கள்.

நின்னுக்கோரி வர்ணம் பாடினார்கள்.

இந்த குட்டி குழந்தை "முரளி லோலா நந்தலாலா" என்று அழகாய் பாடினாள், தாளம் போட்டு  அருமையாக பாடினாள். 

பாடி முடித்து வந்து ஒரே விளையாட்டுதான்.

மலையாள பாடல் மணிமண்டன் மேல்

இவர்களும்  பாட போகிறார்கள் அதுவரை  விளையாட்டு , 

ஆசிரியர்கள்  மற்றவர்கள்



பாடுவதை கவினிக்க சொன்னார்கள்.

பின்னால் திரையில்  இசை வித்வான்களை காட்டிக் கொண்டு இருந்தார்கள்.  

பேரனின் பாடல் முடிந்தவுடன் கிளம்பி விட்டோம். 

       தண்ணீர் , ஜூஸ் ,  தேநீர் ,உணவு விற்கப்பட்டது

இரண்டு பூரி, சென்னா மசாலா, வெஜிடபிள் சமோசா, பிரைட் ரைஸ் விற்றார்கள் . அதை வாங்கினோம் எல்லோருக்கும். வீட்டிலிருந்து தயிர் சாதம் , ஊறுகாய் கொண்டு வந்து இருந்தோம் இங்கு  உணவு கிடைக்கும் என்று தெரியாமல்.

உணவு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று வாங்கினான் மகன். 

உணவை வாங்கி கொண்டு வெளியே வந்து  ஒரு குடியிருப்புக்கு பக்கத்தில் இருக்கும்  பார்க்கில் அமர்ந்து உணவு உண்டோம்.

காரம் இல்லாமல் நன்றாக இருந்தது.

அங்கு ஒருவர் தன் வளர்ப்பு செல்லம் ஆமையை வெயில் காய அழைத்து வந்து இருந்தார்

                                       நடைபயிற்சியும் ஆச்சு
             இதன் பேர் விவரங்களை பேரனை கேட்க சொன்னேன்
இவள் பேர் ஸ்டிரைக்கர்  (Striker  ) மூன்று வயது ஆகிறது. காய்கறிகள்  இதன் உணவாம். பிடித்த உணவு ஆப்பிள், லெட்யூஸ் இதற்கு பிடித்த உணவாம். பேரன் கேட்டு சொன்னது .

அருகில் உள்ள  வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு நல்ல விளையாட இடம் இருக்கிறது.

இரண்டு குட்டி தேவதைகள் விளையாட கிளம்புகிறார்கள்.


அந்த குடியிருப்பில்  வளாகத்தில் ஒரு வீட்டு வாசலில் மிக அழகான மலர்த்தோட்டம். மலர்ந்து இருக்கும் மலர்த்தோட்டம் மகிழ்ச்சியை தந்தது.


வாழ்க வையகம்  ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

  1. சிறப்பான தகவல்கள், படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    கவினுக்கு வாழ்த்துகள்.

    அரேபியர்களும் ஆமை வளர்ப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //சிறப்பான தகவல்கள், படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.//
      நன்றி.

      //கவினுக்கு வாழ்த்துகள்.//
      கவினிடம் சொன்னேன், நன்றி சொன்னான்.
      //அரேபியர்களும் ஆமை வளர்ப்பார்கள்.//
      ஓ அப்படியா! பொறுமை நிறைய வேண்டும் . அவர் அதனுடன் நடந்து போனபோது பார்த்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. சின்மயா மிஷனை பார்த்தவுடன் என் இளமைகாலத்தில் பாலவிகாரில் 5வயதிலிருந்து 14 வயது உள்ள குழந்தைகளுக்கு உள்ள வகுப்பில் சேர்ந்து பகவத்கீதை, பஜனை பாடல்கள், பஜகோவிந்தம், ஸ்லோகங்கள் கற்றது நினைவுக்கு வந்தது. //

    சிறப்பான விஷயம் கோமதிக்கா..

    அப்பா கோவை சின்மயா மிஷனில் துணை தலைவராக இருந்தார்கள்.//

    ஆஹா! சின்மயா மிஷன் இப்போதும் இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்வதாக அறிகிறேன் கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //ஆஹா! சின்மயா மிஷன் இப்போதும் இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்வதாக அறிகிறேன் கோமதிக்கா.//

      ஆமாம், கீதா நடக்கிறது.
      சின்மயானந்தர், தயானந்தர் பகவத்கீதை பிரசங்கம் ஆரம்பிக்கும் முன் பாலவிகார் குழந்தைகள் பாடும். நானும் பாடி இருக்கிறேன்.
      பகவத்கீதையில் 14ம் அத்தியாயம் மனபாடமாக படுவேன், பஜகோவிந்தம் மன்பாடமாக படுவேன். இப்போது எல்லாம் மறந்து விட்டது, கேஸட் போட்டு பாடும் போது கூட பாடுகிறேன், அடுத்த வரி நினைவுக்கு வரும்.

      நீக்கு
  3. பேரனுடன் நிற்கும் பெண் குழந்தை பல கலைகள் கற்கிறாள் போல!! அருமை

    பேரன் பாடியது பங்கு பெற்றது மிகவும் மகிழ்வான சிறப்பான விஷயம், கோமதிக்கா.

    இப்படியான விழாக்கள் அதுவும் அங்கு நடைபெறுவது எல்லாம் ரொம்ப நல்ல விஷயம். அங்கெல்லாம் இப்படியான விழாக்களில் நம் மக்களில் சிலர் நல்ல ஐடியா பண்ணி இப்படி உணவு எல்லாம் செய்து விற்பனைக்கோ அல்லது நட்புகளுக்கு என்றெல்லாம் வைப்பதுண்டு. நம்மூர் சில பெண்கள் அங்கு இப்படி உணவு செய்து விற்கிறார்கள். குடியிருப்புப் பகுதிகளில் வாஷிங்க் ரூமில் அறிவிப்பு இருக்கும் சப்பாத்தி சப்ஜி, மீல்ஸ் என்று இவ்வளவு என்றும் தங்கள் அலைபேசி எண்ணையும் எழுதி வைச்சிருப்பாங்க. சிலர் பாட்டு சொல்லித் தருவாங்க. ட்யூஷன் கூட எடுப்பதுண்டு. இப்படியான வருமானங்கள் குறைவாக இருந்தால் விசா பிரச்சனை இல்லை. சிலர் வெளியில் தெரியாமல் நட்பு வட்டங்களுக்குள் செய்து கொடுத்துசம்பாதிப்பதும் உண்டு.

    இடம் அழகாக இருக்கிறது கோமதிக்காஅ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரனுடன் நிற்கும் பெண் குழந்தை பல கலைகள் கற்கிறாள் போல!! அருமை//
      ஆமாம்.அவள் அம்மாவிடம் பேசிய போது சொன்னார்கள்.

      //பேரன் பாடியது பங்கு பெற்றது மிகவும் மகிழ்வான சிறப்பான விஷயம், கோமதிக்கா.//

      ஆமாம், அவன் பாட்டு ஆசிரியருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

      //இப்படியான விழாக்கள் அதுவும் அங்கு நடைபெறுவது எல்லாம் ரொம்ப நல்ல விஷயம். //

      ஆமாம்.

      //அங்கெல்லாம் இப்படியான விழாக்களில் நம் மக்களில் சிலர் நல்ல ஐடியா பண்ணி இப்படி உணவு எல்லாம் செய்து விற்பனைக்கோ அல்லது நட்புகளுக்கு என்றெல்லாம் வைப்பதுண்டு. நம்மூர் சில பெண்கள் அங்கு இப்படி உணவு செய்து விற்கிறார்கள். குடியிருப்புப் பகுதிகளில் வாஷிங்க் ரூமில் அறிவிப்பு இருக்கும் சப்பாத்தி சப்ஜி, மீல்ஸ் என்று இவ்வளவு என்றும் தங்கள் அலைபேசி எண்ணையும் எழுதி வைச்சிருப்பாங்க. சிலர் பாட்டு சொல்லித் தருவாங்க. ட்யூஷன் கூட எடுப்பதுண்டு.//

      ஆமாம் கீதா. அப்படித்தான் இங்கும் செய்கிறார்கள்.


      இடம் அழகாக இருக்கிறது கோமதிக்கா//
      ஆமாம்,அழகான அமைதியான இடம்தான்.

      நீக்கு
  4. ஸ்ட்ரைக்கர் நிஜமாகவே கொள்ளை கொண்டுவிட்டாள். என்னவோ அழகான டிசைன் வடிவமைத்த ஃப்ராக்/சால்வையை தன் உடம்பில் போட்டிருப்பது போல. இருக்கு அவள் உடல்...அதுகுள்ளிருந்து எட்டிப்பார்க்கிறாள்.

    அவளது உணவு என்ன என்பதெல்லாம் தெரிந்து கொண்டேன்

    எல்லாப்படங்களும் அருமை ரசித்தேன் கோமதிக்கா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ட்ரைக்கர் நிஜமாகவே கொள்ளை கொண்டுவிட்டாள். என்னவோ அழகான டிசைன் வடிவமைத்த ஃப்ராக்/சால்வையை தன் உடம்பில் போட்டிருப்பது போல. இருக்கு அவள் உடல்...அதுகுள்ளிருந்து எட்டிப்பார்க்கிறாள்.//
      பேரனுக்கும் , எனக்கும் பிடித்து விட்டது, அதனால்தான் அதை பின் தொடர்ந்து போய் பார்த்து ஆமை வளர்ப்பவரிடம் நேர்காணல் செய்தோம்.

      //அவளது உணவு என்ன என்பதெல்லாம் தெரிந்து கொண்டேன்//
      வீட்டில் வளர்ப்பதால் உணவு என்ன கொடுப்பார் என்று கேட்டு தெரிந்து கொண்டேன்.

      //எல்லாப்படங்களும் அருமை ரசித்தேன் கோமதிக்கா!//
      எல்லாப்படங்களையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.
      பாடல் கேட்கவில்லையா?

      நீக்கு
  5. சங்கீத மும்மூர்த்திகள் நினைவு விழா விபரங்கள் நன்று.

    கவினின் பாடல் காணொளி பார்க்கணும்.

    உணவு விவரம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தழிழன், வாழ்க வளமுடன்

      சங்கீத மும்மூர்த்திகள் நினைவு விழா விபரங்கள் நன்று.

      //கவினின் பாடல் காணொளி பார்க்கணும்.//

      நேரம் கிடைக்கும் போது கேளுங்கள்.

      உணவு விவரம் நன்று//
      நன்றி.

      நீக்கு
    2. கேட்டேன். நன்றாக இருந்தது. இன்னும் நல்லா வளரட்டும் கவின். வாழ்த்துகள் அவனுக்கு

      நீக்கு
    3. உள்ளூர்லயே வளர்ந்திருக்கும் வாய்ப்பு இருந்திருந்தால், தேவாரம் திருவாசகம்லாம் தாத்தா, கொள்ளுத்தாத்தாலாம் சொல்லிக்கொடுத்திருப்பாங்க.

      நீக்கு
    4. //உள்ளூர்லயே வளர்ந்திருக்கும் வாய்ப்பு இருந்திருந்தால், தேவாரம் திருவாசகம்லாம் தாத்தா, கொள்ளுத்தாத்தாலாம் சொல்லிக்கொடுத்திருப்பாங்க.//

      ஆமாம். அவன் ஆசிரியர் இரண்டு தேவார பாடல்கள் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். சாரின் திதி அன்று பேரன் பாடினான் தேவாரம் . திதி செய்து வந்த குருக்கள் மகனை, பேரனை பாட வைத்தார்.

      பேரனை தாத்தா கொள்ளுத் தாத்தா வாழ்த்துவார்கள் என்று சொல்லி வாழ்த்தினார். மதுரையில் இராண்டாம் வருடம் திதி கொடுத்த போது மகனும், மகளும் மட்டும் தான் வந்து இருந்தார்கள். அவன் இணையம் மூலம் பாடினான். இரவு 11 மணிக்கு மேல் கண்விழித்து பாடினான். பூஜை எல்லாம் முடிக்கும் வரை பார்த்து கொண்டு இருந்தான்.

      நீக்கு
    5. பேரன் பாடிய பாடலை கேட்டு வாழ்த்தியதற்கு நன்றி.

      நீக்கு
  6. வளர்ப்பு பிராணி ஆமையா? அதை வெளியில் வாக்கிங் கூட்டிச் செல்வது எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளர்ப்பு பிராணிகள் விற்பனை கடையில் நாம் நினைத்து பார்க்கமுடியாத வளர்ப்பு பிராணிகளை பார்த்தேன், நியூஜெர்சியில் .அதை இன்னும் பதிவு போட வில்லை, ஒரு நாள் தேடிப்பார்த்து போடுகிறேன்.,பார்த்தால் வியப்பு வரும்.

      காரில் வந்து அதை கீழே இறக்கிவிட்டு அதனுடன் நடந்தார். அதன் கழிவுகளை உடனுக்கு உடன் எடுக்க கையில் பாலிதீன் கவர் வைத்து இருந்தார். குழந்தைகள் கல், மண்ணை எடுக்குமே அது போல அது எதையாவது கால்களால் எடுத்தால் அதையும் வாங்கி கவரில் போடுகிறார்.
      நடைபாதையில் தான் நடக்க வேண்டும் அதை விட்டு கீழே இறங்கினால் அதனுடன் பேசி நடைபாதையில் வர சொல்கிறார்.
      அதுவும் கேட்கிறது. இது எனக்கு வியப்பை தந்தது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. அட...எனக்கு ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு நீங்க சொல்றது.

      நானும் யூடியூபில், எலி, சிலந்தி...ஓணான் என்று வித வித வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதைப் பார்த்திருக்கிறேன் (போதாக்குறைக்கு மலைப்பாம்பும்).

      வளர்ப்புச் சிங்கம், பல ஆண்டுகள் கழித்து தன்னை வளர்த்தவர்களைப் பார்த்து ஓடி வந்து விளையாடுகிறது (அதன் மொழியில். அது ஒரு தடவை நக்கினாலே நம் தோல் பிஞ்சுரும் என்ற பயம்தான். அன்புல ஒரு அறை விட்டால், தாடை அவுட்).

      நீக்கு
    3. இங்கயும் வித வித நாய்கள் வளர்க்கறாங்க. ஒழுங்கே பெரும்பாலும் கிடையாது (வழில போய் வைக்கும். நாங்கள்லாம் இருந்தால் ஒருவேளை கலெக்ட் பண்ணுவாங்களா இருக்கும். இல்லைன கண்டுக்காம போயிடுறாங்க. ஆங்காங்கே அது சுசு போய் வைப்பதையும் பார்க்கிறேன்).

      நாய்லாம் நக்கிக் கொஞ்சுவதைப் பார்த்தால் எனக்குத்தான் அசூயையாக இருக்கும். ஐயே என்று.

      நீக்கு
    4. //அட...எனக்கு ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு நீங்க சொல்றது.

      நானும் யூடியூபில், எலி, சிலந்தி...ஓணான் என்று வித வித வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதைப் பார்த்திருக்கிறேன் (போதாக்குறைக்கு மலைப்பாம்பும்).//

      எனக்கும் வளர்ப்பு பிராணிகளை விற்கும் கடியில் பார்த்த போது ன் வியப்பாக இருந்தது, இப்படி இதை எல்லாம் வளர்க்கிறார்கள் என்று.

      //வளர்ப்புச் சிங்கம், பல ஆண்டுகள் கழித்து தன்னை வளர்த்தவர்களைப் பார்த்து ஓடி வந்து விளையாடுகிறது (அதன் மொழியில். அது ஒரு தடவை நக்கினாலே நம் தோல் பிஞ்சுரும் என்ற பயம்தான். அன்புல ஒரு அறை விட்டால், தாடை அவுட்).//

      பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால்
      பகைவன் கூட நண்பனே !
      பாசம் காட்டி ஆசை வைத்தால்
      மிருகம் கூட தெய்வமே!

      என்ற பாடல்தான் நினைவுக்கு வரும்.

      அன்பும் பாசமும் ஆசையும் வைத்தால்
      அதன் அடி பூ போல இருக்கும் போல!

      நீக்கு
    5. நாய்களுக்கும் நாம் சொல்லி தந்தால் அவை பழகி கொள்ளும் . நாயின் உடைமையாளர்கள் இதை பழக்கப்படுத்தி வழக்கம் ஆக்கினால் நல்லது.

      //நாய்லாம் நக்கிக் கொஞ்சுவதைப் பார்த்தால் எனக்குத்தான் அசூயையாக இருக்கும். ஐயே என்று.//
      வளர்ப்பவர்களுக்கு அப்படி எதுவும் தெரியாது, அவர்கள் அதை குழந்தையாக நினைக்கிறார்கள், குழந்தை நக்கினால் மகிழ்வது போலவே மகிழ்வார்கள். நாய் என்று சொல்லவிட மாட்டார்கள் தன் பேரை சொல்லவேண்டும்.
      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. நிகழ்வு அருமை அம்மா...

    படங்கள் அசத்தல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      நிகழ்வு அருமை அம்மா...

      படங்கள் அசத்தல்...//
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. சிறப்பான நிகழ்வு.  ஒரு செட் பாடும்போதே அடுத்த செட்டை அமரவைத்து விடுவதும் நல்ல ஏற்பாடு.  நேரத்தைக் கட்டுப்படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //சிறப்பான நிகழ்வு. ஒரு செட் பாடும்போதே அடுத்த செட்டை அமரவைத்து விடுவதும் நல்ல ஏற்பாடு. நேரத்தைக் கட்டுப்படுத்தலாம்.//

      ஆமாம். பாடும் குழந்தைகளும் மனதளவில் தயார் ஆகி விடுவார்கள்.
      அடுத்து அடுத்து பாட வரநேரமும் சரியாக இருக்கும்.

      நீக்கு
  9. இவ்வளவு சின்னக் குழந்தை கூட பாடுகிறதா..   அட...  பாட்டு முடிந்து வந்து விளையாடுவது அழகு.  எல்லோருமே விளையாடிக் கொண்டே பாடும் நேரம் வந்ததும் பாடுவது அழகாய் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவ்வளவு சின்னக் குழந்தை கூட பாடுகிறதா.. அட... பாட்டு முடிந்து வந்து விளையாடுவது அழகு. எல்லோருமே விளையாடிக் கொண்டே பாடும் நேரம் வந்ததும் பாடுவது அழகாய் இருந்திருக்கும்.//

      பாட்டை ரசிப்பதை விட குழந்தைகளின் விளையாட்டைதான் ரசித்தேன். வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள் இப்படி கூட்டத்தை கண்டதும் சக தோழிகளை பார்த்தும் மகிழ்ச்சி அடைவது பார்க்கவே அழகு. சின்னக்குழந்தை கீழே உருண்டு பிரண்டு விளையாடினாள். தட்டமாலை சுற்றினாள்.

      நீக்கு
  10. ஆமைக்கு தன் எஜமான் அடையாளம் தெரியுமா? எப்படி பழகும்? நாய் பூனை மாதிரி வீட்டில் வளர்க்க முடியுமா? ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் என்றெல்லாம் பழமொழி சொல்வார்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமைக்கு தன் எஜமான் அடையாளம் தெரியுமா? எப்படி பழகும்?

      நாய் பூனை மாதிரி வீட்டில் வளர்க்க முடியுமா?//
      அவர் சொல்வதை புரிந்து கொண்டு நடைபாதைக்கு கீழே இறங்கிய ஆமை மீண்டும் அவர் சொன்னதை கேட்டு மேலே ஏறியதே! அவரை அடையாளம் தெரிகிறதே!


      ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் என்றெல்லாம் பழமொழி சொல்வார்களே...//

      எல்லோர் வீட்டிலும் ஆமை பொம்மைகள் வைத்து இருக்கிறார்கள் கூர்ம அவதாரம் விஷ்ணு என்று பூஜை அறையில் வைக்கிறார்கள்.

      குன்றகுடி பொன்னபலம் அடிகளார் அவர்கள் சொன்னது மூன்று ஆமைகள் வீட்டுக்கு நல்லது அல்ல அவை கல்லாமை, இயலாமை, முயலாமை . சிலர் பொறாமை கூடாது என்பார்கள்.

      எங்கள் வீட்டில் உடகார ஆசனம் மரத்தில் ஆமை வடிவில் இருக்கும், உப்பு மரவை மூட ஆமை வடிவில் இருக்கும்.
      ஆமை பொம்மைகள் இருக்கிறது.

      தேவகோட்டை ஜி அரேபியர்கள் ஆமை வளர்க்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார் .

      நீக்கு
  11. படங்கள் யாவும் சிறப்பு.  விளையாட நிறைய இடம் இருப்பது பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் யாவும் சிறப்பு. விளையாட நிறைய இடம் இருப்பது பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.//

      விளையாட நிறைய இடம் இருப்பது மகிழ்ச்சிதான். கரி அடுப்பு இருக்கிறது. உணவை சமைத்து சாப்பிட . விடுமுறை நாளில் மாலை நேரம் இந்த மாதிரி இடங்களில் கூட்டம் இருக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  13. உங்கள் பேரன்பாடுவது அருமையாக இருக்கிறது. இரு குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.
    சிறப்பான நிகழ்வுகள் நடத்துவது பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //உங்கள் பேரன்பாடுவது அருமையாக இருக்கிறது. இரு குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.//

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

      //சிறப்பான நிகழ்வுகள் நடத்துவது பாராட்டத்தக்கது.//

      ஆண்டு தோறும் இப்படி விழா எடுப்பது பாடுபவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
      உங்கள் கருத்துக்கும், பாராட்டக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  14. சிறப்பான தகவல்கள், படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    பேரன் கவின்
    தமக்கு அன்பின் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்க்ம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //சிறப்பான தகவல்கள், படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

      பேரன் கவின்
      தமக்கு அன்பின் வாழ்த்துகள்.//
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  15. இசை பாடுவதிலும் அருமையான பங்களிப்பு..

    இப்படி விழாக்கள் பாடுபவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

    தாத்தா,
    பாட்டிகக்கும் பெருமை.. சந்தோஷம்...

    அன்பின் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இசை பாடுவதிலும் அருமையான பங்களிப்பு..

      இப்படி விழாக்கள் பாடுபவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.//

      ஆமாம், இப்படி பங்கு பெறுவது பாடுபவர்களுக்கு உற்சாகம் தான்.

      //தாத்தா,
      பாட்டிகக்கும் பெருமை.. சந்தோஷம்...

      அன்பின் நல்வாழ்த்துகள்..//

      உறவுகள் அத்தனை பேருக்கும் மகிழ்ச்சிதான்.
      உங்கள் நல் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  16. பேரனுக்கு வாழ்த்துகள். நிகழ்வை அருமையாகத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள்.

    ஆமை சொல்பேச்சுக் கேட்டு நடப்பது ஆச்சரியமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கும் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      //ஆமை சொல்பேச்சுக் கேட்டு நடப்பது ஆச்சரியமே.//
      ஆமாம், எங்களுக்கும் வியப்பை தந்தது.
      //பேரனுக்கு வாழ்த்துகள்.//

      உங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு