இன்று மகன் வீட்டுத்தோட்டத்திற்கு வந்த பறவை
Americn Robin
அமெரிக்க பாடும் பறவை. பாடவில்லை மரக்கிளையில் அமர்ந்து இருந்தது போய் விட்டது. இந்த பறவை குளிர் காலத்தில் வரும் பறவையாம். பாலைவன கள்ளி செடிகளில் உள்ள பழங்கள், பாலைவன தாவரங்கள், ஹேக்பெர்ரிகள், பாலைவன புல்லுருவி, மற்றும் புழு, பூச்சிகள் இதன் உணவு. கோடை காலத்தில் இது வேறு இடத்திற்கு சென்று விடுமாம்.
உனக்கு பாட தெரியும் என்றார்கள் பாடேன்
என்ன பாடுவது ?
யோசனையில் வெகு நேரம் இருந்து விட்டு பறந்து விட்டது. இன்னொரு நாள் பாடினால் பதிவு செய்கிறேன்.
பறவைகள் தான் இருக்கும் இடத்தை தன் இனத்திற்கு சொல்லவும், தங்கள் கூட்டத்தில் சில பறவை காணாவிட்டால்
அழைக்க ஒலி எழுப்புமாம். ஒவ்வொரு அழைப்பும் வெவ்வேறு ஒலியாக இருக்குமாம்.
பறவைகளை தேடி பார்க்கும் போது மனம் தெளிவாகுமாம்,. கண்பார்வை கூர்மையாகுமாம். நுட்பமான சத்தங்களையும் கேட்க முடியுமாம். அதெல்லாம் விட பொறுமையாக இருக்க பழகி கொள்ள முடியுமாம். இயற்கையை நேசிக்கும் மனபான்மை வருமாம்.
இவை பறவைகளை பற்றி பத்திரிக்கையில் படித்தது.
பறவைகளை பார்ப்போம், இயற்கையை நேசிப்போம்.
இந்த காணொலியில் இன்று தோட்டத்திற்கு வந்த பறவை.https://www.youtube.com/watch?v=CCh-Ga7bu6M
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
படங்கள் அழகு.
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அழகு.//
உங்கள் கருத்துக்கு நன்றி.
பறவை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. அதன் பெயரும்கூட அழகுதான்.... அது உட்கார்ந்து இருக்கும் மரத்தின் பெயர் என்ன? பார்ப்பதற்கு நம் நாட்டில் காணப்படும் "சவுக்குமரம்"போல் உள்ளதே...
பதிலளிநீக்குhttps://www.scientificjudgment.com/
வணக்கம் நாஞ்சில் சிவா, வாழ்க வளமுடன்
நீக்கு//பறவை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. அதன் பெயரும்கூட அழகுதான்.... அது உட்கார்ந்து இருக்கும் மரத்தின் பெயர் என்ன?//
பாலோ வெர்டே என்பது அதன் பேர், "பச்சை துருவம்" அல்லது பச்சை நிற குச்சி" என்று சொல்கிறார்கள்.
இதில் இரண்டு வகை இருக்கிறது.ப்ளு பாலோ வெர்டே, நீலம்- பச்சை இலைகள் உள்ள ஃபூட்டில் பாலோ .
உங்கள் கருத்துக்கு நன்றி.
சிவா வந்தால் இப்படியான கேள்விகள் இருக்கும் அவர் இப்படி அறிவியல் ரீதியாகப் பல எழுதுகிறார்.
நீக்குஅவர் சாக்கில் நானும் தெரிந்து கொண்டேன் கோமதிக்கா...
கீதா
நன்றி கீதா, நான் அவர் பதிவை பார்க்கிறேன்
நீக்குபாடும் பறவையின் படத்தோடு குரலையும் இணைத்து பதிவில் தந்தமைக்கு மகிழ்ச்சி..
பதிலளிநீக்குவாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//பாடும் பறவையின் படத்தோடு குரலையும் இணைத்து பதிவில் தந்தமைக்கு மகிழ்ச்சி..//
உங்கள் கருத்துக்கு நன்றி.
பறவையை பொறுமையாக படம் எடுத்து பதிவு செய்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குகாணொலியும் கேட்டேன்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//பறவையை பொறுமையாக படம் எடுத்து பதிவு செய்தமைக்கு நன்றி.
காணொலியும் கேட்டேன்//
உங்கள் கருத்துக்கு நன்றி..
ஆகா...! அருமை அம்மா...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//ஆகா...! அருமை அம்மா...//
உங்கள் கருத்துக்கு நன்றி.
பாடும் பறவை அழகு!!! அமெரிக்கன் ராபினின் இசை இனிமை, கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல! நானும் கேட்டுக் கொண்டே இக்கருத்து அடிக்கிறேன்.
பதிலளிநீக்குஅடுத்த முறை வந்தா பாடும் பாருங்க....தொண்டை சரியில்லையோ என்னவோ...நீங்க கேட்டீங்கன்னு தொண்டைய சரி பண்ணிட்டு ப்ராக்ட்டிஸ் பண்ண போயிருக்கும் அடுத்த முறை வந்து பாடும் பாருங்க கோமதிக்கா...
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//பாடும் பறவை அழகு!!! அமெரிக்கன் ராபினின் இசை இனிமை, கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல! நானும் கேட்டுக் கொண்டே இக்கருத்து அடிக்கிறேன்.//
பாடும் போது பார்க்க முடியவில்லை, கேட்க மட்டுமே முடிகிறது.
//அடுத்த முறை வந்தா பாடும் பாருங்க....தொண்டை சரியில்லையோ என்னவோ...நீங்க கேட்டீங்கன்னு தொண்டைய சரி பண்ணிட்டு ப்ராக்ட்டிஸ் பண்ண போயிருக்கும் அடுத்த முறை வந்து பாடும் பாருங்க கோமதிக்கா...//
மாலை நேர வெயிலில் ஆழ்ந்த் யோசனையில் அமர்ந்து இருந்தது தனிமையில் அதனால் பாடவில்லை போலும். அடுத்த முறை வரும் என்று சொல்லிவிட்டீர்கள் காத்து இருக்கிறேன்.
//பறவைகளை தேடி பார்க்கும் போது மனம் தெளிவாகுமாம்,. கண்பார்வை கூர்மையாகுமாம். நுட்பமான சத்தங்களையும் கேட்க முடியுமாம். அதெல்லாம் விட பொறுமையாக இருக்க பழகி கொள்ள முடியுமாம். இயற்கையை நேசிக்கும் மனபான்மை வருமாம். //
பதிலளிநீக்குஆமாம் கோமதிக்கா. நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லிட்டீங்க. நானும் பறவைகள் பத்தி வாசித்த போது அறிந்துகொண்டேன். உளவியலாக மிக நல்ல விஷயமாம்,
நானும் நினைத்துக் கொண்டேன் பறவை பத்தி அப்புறம் போடவே இல்லையே கோமதிக்கான்னு
நானும் போடவே இல்லை பர்ப்பிள் ஹெரான் பத்தி போட்ட பிறகு போடவே இல்லை கிரே ஹெரான் பறவைதான் அடுத்து அதே குடும்பம் என்பதால் ஆனால் இன்னும் படங்கள் செட் செய்து காணொளிகள் எடிட் செய்து போடணும்.
உடற்பயிற்சி பதிவுகள் முடித்தபின் போடணும்...
கீதா
//ஆமாம் கோமதிக்கா. நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லிட்டீங்க. நானும் பறவைகள் பத்தி வாசித்த போது அறிந்துகொண்டேன். உளவியலாக மிக நல்ல விஷயமாம்,//
நீக்குஆமாம், எனக்கு எப்போதும் பறவைகள் பார்ப்பது பிடிக்கும், மதுரை வந்தவுடன் நல்ல பொழுது போக்காக ஆகி விட்டது. உளவியலாக நல்ல விஷயம் தான்.
பறவை ஆராய்ச்சி செய்பவர்கள் காடு மேடு எல்லாம் பொறுமையாக காத்து இருந்து எடுத்து போடுகிறார்கள். பொறுமை வந்து விடுகிறது.
//நானும் நினைத்துக் கொண்டேன் பறவை பத்தி அப்புறம் போடவே இல்லையே கோமதிக்கான்னு//
அதுதான் போட்டு விட்டேன்.
//உடற்பயிற்சி பதிவுகள் முடித்தபின் போடணும்...//
போடுங்கள் கீதா.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பறவையின் புகைப்படம் மிக அழகு!!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்கு//பறவையின் புகைப்படம் மிக அழகு!!//
உங்கள் கருத்துக்கு நன்றி .
பாடும் பறவை மௌனமானது. நீங்கள் வந்திருப்பதை அறிந்து சீசன் இல்லாத காலத்திலும் வந்து பார்த்து சென்றிருக்கிறது போல! பாடும் பறவைகள் என்று ஒரு படம் கூட இருக்கிறது. இரண்டு எஸ் பி பி பாடல்கள் நன்றாக இருக்கும்!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//பாடும் பறவை மௌனமானது. நீங்கள் வந்திருப்பதை அறிந்து சீசன் இல்லாத காலத்திலும் வந்து பார்த்து சென்றிருக்கிறது போல! //
குளிர் காலத்தில் வந்து இருக்கிறாளே! நம்மை போல என்று யோசனையுடன் பார்த்து விட்டு போய் இருக்கிறது ஸ்ரீராம்.
பாடும் பறவை, பாடும் வானம்பாடி இரண்டிலும் பாடல்கள் நன்றாக இருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகிய பறவை. காணொளியும் நன்று.
பதிலளிநீக்குபறவைகளை பார்ப்போம் நேசிப்போம்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய பறவை. காணொளியும் நன்று.
பறவைகளை பார்ப்போம் நேசிப்போம்.//
நன்றி மாதேவி
அழகிய காட்சிகள்
பதிலளிநீக்குவணக்கம் அனுபிரேம் , வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய காட்சிகள்//
உங்கள் கருத்துக்கு நன்றி அனு.
சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் சதீஸ் முத்து கோபால் வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.