வியாழன், 2 பிப்ரவரி, 2023

தஞ்சை பெரிய கோவில் பகுதி - 2




தஞ்சை பெரிய கோவிலுக்கு  2022  டிசம்பர் மாதம் 11 ம் தேதி போய் இருந்தோம். அப்போது நான் எடுத்த படங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.


தஞ்சை பெரிய கோவில்  முந்திய பதிவு


நந்தியை பக்கத்தில் போய் பார்க்கவில்லை, கீழ் இருந்தே  எடுத்தேன், கூட்டத்தைப் பார்த்து விட்டு மேலே போகவில்லை.
அப்போது தொடர் பயணத்தால் கால் வலி வேறு.
நந்தி மண்டபத்தில் மேல் விதானத்தில் ஓவியங்கள் அழகாய் இருக்கும் போய் இருந்தால் நன்றாக எடுத்து இருக்கலாம். ஒரளவு தெரிகிறது. கொடிமரத்தை தாங்கும் மனிதர்களும், யானைகளும் அழகு.

மூலவரை பார்க்கவில்லை,  இவரை வணங்கி கொண்டேன்
"சிவபாத சேகரன்" என்று பட்ட பெயர் பெற்ற இராஜ ராஜன் வணங்கியது 


நால்வர்

மூவர் பாடிய தேவாரத்தை புற்றிலிருந்து இராஜ ராஜன்  மீட்டு கொடுத்து  "திருமுறை கண்ட சோழன்" என்ற பட்ட பெயர்பெற்றது   நினைவுக்கு வரும்.


அருங்காட்சியகம்  இருக்கும் இந்த கட்டிடத்தில் முன்பு பார்த்து இருக்கிறோம். அன்று திறக்கவில்லை.

ஒருவர் நிம்மதியாக அமர்ந்து படிக்கிறார், இருவர் நிம்மதியாக தூக்கம்

இந்திரன்
சந்திரன்

ஒரு கை உடைந்து  இருக்கிறது, இன்னொரு கையில் ஓலைச்சுவடி கலைமகள் என்று நினைக்கிறேன்

துர்க்கை

குழந்தையை ஒரு கையில் தூக்கி விளையாட்டு காட்டுகிறார், பயமில்லாமல் குழந்தையின் அம்மா படம் எடுக்கிறார், எனக்குத்தான்  மனம் திக், திக் என்றது.


இந்த வாசல் வழியாக மூலவரை பார்க்க மக்கள் கூட்டம் போனது நானும் போய் பார்க்கலாம் என்று படிகளில் ஏறி போனால் பெண் காவலர் விட மாட்டேன் என்றார், இந்த வழியாக மக்கள் போனதை பார்த்து நான் வந்தேன் என்றேன், அவர்கள் எல்லாம் வி.ஐ.பி  க்கள் என்றார்.



சுப்பிரமணியர்  வள்ளி தெய்வானையுடன் இருக்கும் சன்னதி.



சுப்பிரமணியர் சன்னதிக்கு போகும் படி பக்கவாட்டில் இருக்கும்     ஆறுமுகர்



யானை சிலை  பல தூண்டுகளாக செய்து இணக்கப்பட்டு இருக்கிறது. கயிறு  மேலே உடகார்ந்து இருப்பவர்,  யானை துதிக்கையால் ஒருவரை இழுத்து போவது எல்லாம்  மிக  அற்புதமாய் இருக்கிறது, யானையின் கழுத்தில் காலில் அணிகலன்கள் எல்லாம் அழகு.
யானையின்  துதிக்கையில் அவரின் கை, கீழே அவரின் கழுத்து தொங்கல் எல்லாம் அருமை.  இன்னொருவரும்  கீழே இருக்கிறார்

மண்டபத்தை குதிரை  இழுப்பது போல

குதிரையின் பற்கள்,  கடிவாளம் , கழுத்துமணிகள்  எல்லாம் அழகு குதிரை பல கல் துண்டுகள் இணைப்புதான்


குதிரையும் அழகிய வேலைப்பாடு


படிக்கட்டுக்கு இந்த பக்க யானை தந்தம் உடைந்து இருக்கிறது, துதிக்கையில் ஒருவர், அதற்கு கீழ் ஒரு குதிரை, குதிரையின் காலடியில் ஒருவர் இருக்கிறார், யானையின் வால், அணிகலன்கள் , கழுத்து மணி எல்லாம் அழகு.


முருகன் சன்னதி பக்கசுவரில் உள்ள தூண்கள் பன்னீர் செம்பு போல அதன் தலைபகுதியில் சின்ன கோபுரம் அதில் ஒரு பக்கம் பிள்ளையார், இன்னொரு பக்கம் நடராஜர் ! தூண்களில் எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள்!  சிற்பிகளை வணங்க வேண்டும். 

கற்கோயில் என்போமோ! கலைக்கோயில் என்போமோ! என்று போன பதிவில் புலவர் பாடிய பாடல் பகிர்வு  நினைவுக்கு வந்தது., கலைக்கோவில்தான்.


 சும்ப , நிசுமனுடன் போர்புரியும் தேவி துர்க்கை

மகிஷ வதம், ஆடைகள் பறக்குது, மூக்கு சேதம் அடைந்து  இருக்கிறது

துர்க்கை
முருகனின் இரண்டு கைகளும்  உடைந்து இருக்கு


முருகன் சன்னதியில் இன்னொரு பக்கத்தில் உள்ள  படியில் யானை

பெரிய கோபுரத்தின் பின் இருப்பது கருவூரார் சன்னதி . சன்னதிக்கு பின் புறம் இருக்கும் வேப்ப மரத்தில்  மரத்தில் மூன்று  மரபல்லிகள் இருக்கும் . பல்லிகளை தேடிப் பார்ப்பது கோவில்  போகும் போது எல்லாம் வாடிக்கை. ஆனால் இந்த முறை கண்ணில் தட்டுப்படவில்லை.  மரத்தின் பட்டை போலவே  பல்லியின்  உடல் இருக்கும், அதன் கண் மற்றும்  அசைவு வைத்து தான் கண்டுபிடிக்க முடியும். சில நேரம் சத்தம் கொடுக்கும். கூட்டம் இருந்ததால் மரத்தில் ஒளிந்து கொண்டது போல. மகன் மரத்தை குளோஸ் அப்பில்  நிறைய போட்டோ எடுத்தான்,


  பல்லி தெரிகிறதா என்று பார்க்க  தெரியவில்லை.


இராஜ ராஜ சோழரின் நண்பர் என்று நாம் சினிமாவில் பார்த்து இருப்போம். மன்னருக்கு நிறைய ஆலோசனைகள் சொல்வார்.

சதய திருநாளில் மன்னருக்கு  பிறந்தநாள் வாழ்த்து சொல்ல கருவூரார் வரும் போது மன்னர் சொல்வார்  சில நாட்களுக்கு முன் கருவறையில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்யமுடியாமல் அவதிபட்டபோது தாங்கள் வந்து உதவினீர்கள் என்ற வசனம் வரும்.  பாடல் கேட்டு பல வருடம் ஆச்சு, இப்போது பாடுங்கள் கேட்கலாம் என்று சொல்லி விட்டு அவர் சொல்வார். அதை பாடுவார் கருவூரார்.


https://www.youtube.com/watch?v=q09dYjrH2LU&t=2s


சிவாஜியும்  டி.ஆர் . மகாலிங்கமும் பாடும் பாடல் நன்றாக இருக்கும். கேட்டு பாருங்கள்.

இருவரும் நிற்பது போல ஓவியம் கோவிலில் இருக்கிறது. 

 பெருவுடையாருக்கு அஷ்டபந்தன மருந்து சாத்திய போது மருந்து  சரியாக இறுகவில்லை . அதை கேள்வி பட்ட   கருவூர் சித்தரின் குரு போகமுனிவரின் அழைப்பின் பேரில் தஞ்சை வந்தார் கருவூர் சித்தர்.

 வந்து அஷ்டபந்தனமருந்தை இறைவனை வேண்டி வைத்தார். மருந்தை இறுகும்படி செய்து அரசனின் கவலையை போக்கினார் என்று சொல்லுவார்கள். சித்தர் சக்தி வாய்ந்தவர். கருவூரார் பெருமையை மக்களுக்கு உணர்த்தவே பெருவுடையார் இப்படி லீலை செய்தார் என்றும் சொல்லபடுகிறது, நிறைய சித்துக்கள் செய்வராம் மக்களை ஆன்மீகத்திற்கு கொண்டுவர.  அதில் வெறுப்பு ஏறபட்ட மக்கள் அவரை கொலைசெய்யவும் துணிந்து விட்டார்களாம், இனிமேல் இவர்கள் மத்தியில் வாழ வேண்டாம் என்று கருவூர் ஆனிலையப்பர் கோவிலுக்குள் சென்று லிங்கத்தை தழுவி  இறைவனுடன் இரண்டற கலந்தாராம்.

அவரின் மறைவுக்கு பின் அவரின் பெருமைகள் மக்களுக்கு தெரிந்து இருக்கிறது.

மேலும் கருவூர் சித்தர்  எழுதிய நூல்கள், அவர் வாழ்ந்த காலம், அவர் செய்த சித்துகள்   விவரம் எல்லாம்    தினமலர்  கோவில்கள் பகுதியில்.

கருவூரார் சன்னதி  சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தேன்

கருவூரார் சன்னதியில் அமர்ந்து இருந்தாலே மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். 


தேங்கி நிற்கும் மழை நீரில் கோபுரம் தெரிந்தது , எனக்கு அதை படம் எடுக்க ஆசை


தரையில் தேங்கி இருக்கும்  மழை நீரில் தெரிகிறதா கோபுரம்? என்னால் ஓரளவுதான் எடுக்க முடிந்தது.

தண்ணீரில் கிடக்கும் வெள்ளை புறாவின்  இறக்கைகள் கொஞ்சம் மறைக்கிறது.


 பல வருடங்களுக்கு முன்பு கோபுரத்தின்  உட்பக்கம் பார்க்க அழைத்து சென்று இருக்கிறார்கள் சாரின் அண்ணா.  சிறப்பு விருந்தினராக அவர்கள் மதிக்கப்பட்ட காலம் அது. இப்போது எந்த சிறப்பு விருந்தினருக்கும் அனுமதி இல்லை  . உள்ளே மாரட்டிய ஓவியம் மற்றும்  நாட்டிய சிற்பங்கள் இருந்தன. கோபுரம் உட்பக்கம் பார்க்க அழகாய் இருந்தது. பல வருடங்களுக்கு முன் பார்த்தது இப்போது சரியாக சொல்லமுடியவில்லை. 1975 ம் வருடம்  என்று நினைக்கிறேன்.

தூரத்தில் தெரிவது சண்டிகேஸ்வரர் சன்னதி





மகன்

வராகி சன்னதிக்கு பின்னால் உள்ள இடத்தில் பீரங்கி தரையில் வைத்து இருக்கிறார்கள் கல் ஆசனங்கள் இருக்கிறது.

வராகி அம்மனை பார்க்க முடியவில்லை திரையிட்டு மறைத்து இருந்தார்கள். எப்போது அலங்காரமாக கம்பி கதவு வழியாக பார்க்கலாம் . சிறப்பு பூஜைகள் எப்போதும் நடந்து கொண்டு இருக்கும். மதிய  நேரம் போனதால் நடை திறக்கவில்லை.


இப்படி கோவிலை சுற்றி உள்ள மண்டப வாயில்களில் நின்று பெரிய கோபுரத்தை படம் எடுத்தான். மகன் எடுத்த படங்களை ஒரு பதிவில் போட வேண்டும். அவன் பார்வை வேறு. அவன் ஐபோனில் மேலும் பல வசதிகள் உள்ளது. மகனுக்கு படம் எடுக்கும் திறமையும் அதிகம்.



நான் எனக்கு எடுக்க தெரிந்த மாதிரி என் ஐபோனில்  எடுத்தேன்.

நடை திறக்கும் வரை மக்கள் புல்வெளியில் ஆடி, பாடி, உரையாடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.



பின் பக்கம் ஒரு பெண் பரதநாட்டியம் ஆடி கொண்டு இருக்கிறார், முன்னால் நிற்கும்  சின்னக்குழந்தைக்கும் ஆட ஆசை வந்து விட்டது

உடனே குழந்தை சினிமா பாடலுக்கு நடனம் ஆடுகிறாள் அம்மா காணொளி எடுக்கிறார். பின் பக்கம் சுவர் முழுவதும் கல்வெட்டுதான்.

"சோழர் வரலாறு" என்ற புத்தகம் படித்து பார்த்தேன். ஆசிரியர் . டாக்டர் மா. இராசமாணிக்கனார்  எழுதியது. மகன் கொடுத்தான் படித்துபார்க்க  படித்தேன்.

 தமிழ்நாட்டில் வியத்தகு  முறையில் கற்கோவில்கள் பலவற்றை அமைத்த பெருமை சோழர்க்கே உரியது.வானளாவிய விமானங்கொண்டகோவில்களை கட்ட ஆசைபட்டு அப்படியே கட்டினர்கள் என்றும், கோவில் சுவர்கள், தரையில், ஏராளமான கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டன என்றும்உள்ளது.

மேலே உள்ள  படத்தை பெரிது செய்து பார்த்தால் உண்மை என்று விளங்கும் . சுவர்  மற்றும் கீழ் பகுதி , தரை எல்லாம் கல்வெட்டுதான். சோழர் பெருமையை அறிந்து கொள்ள அவர்கள் கட்டிய கோவில்கள், அவர்கள் கற்கோவில்களாக மாற்றி அமைத்த கோவில்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

வெளி வாசல் தோட்டம்

இந்த குழந்தை வெளி வாசல் பக்கம் முதல் கோவிலை சுற்றி பார்த்து முடிக்கும் வரை என்னை கவர்ந்தாள். அவள் குறும்பு, சிரிப்பு நடனம், என்று மனதை கவர்ந்து விட்டாள்.

அம்மன் சன்னதி வாசல் தூணில் சுவற்றில் உள்ள சிற்பங்கள். மார்கழி தனூர் பூஜை கலந்து கொள்ள கட்டண பலகை.

தஞ்சையில் அம்மன் சன்னதி வாயில் பகுதியில் வலபக்கம் சுவரில்  இருக்கிறது இந்த அற்புத சிலை.

திருப்பழையாறு வட தளியிலிருந்து பட்டீஸ்வரம் கோவில் அருகில் அமைந்து இருக்கும் " திருச்சக்தி முற்றம்" கோவிலில் அன்னை இப்படி சிவனை  தழுவி இருப்பார் .

சக்தி காவிரிக்கரையில் லிங்கம் செய்து வழிபட்டுக் கொண்டு இருக்கும் போது காவிரி ஆற்றில் வெள்ளம் வந்தது, அப்போது  லிங்கத்தை அடித்து சென்றுவிடாது இருக்க இப்படி ஆரத்தழுவியதாக தலவரலாறு சொல்லும்.   மேலும் சக்தியை  சோதிக்க ஜோதிபிழம்பாய் சிவன்  காட்சி கொடுத்தார் என்றும் அதையும் சிவனே என்று தழுவி முத்தமிட்டதால் "சக்திமுத்தம்" "சக்திமுற்றமாக ஆச்சு" என்றும் சொல்வார்கள். கருவறை பக்கம்  ஆரதழுவிய சக்தி சிலையைப்பார்க்கலாம்.

சிவன் பேர்  சிவக்கொழுந்தீசர், அம்மன் பேர் பெரியநாயகி.

நிறைய தடவை மாயவரத்தில் இருக்கும் போது போய் இருக்கிறோம்.


 செம்பியன்மாதேவி செங்கற்களால் கட்டபட்டிருந்த சக்தி முற்ற கோவிலை கற்கோவிலாக மாற்றி கட்டினார் என்றும், முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டியகோவில் என்றும் வரலாறு சொல்லும்.

 கடைசியில் அம்மன் சன்னதிக்கு சென்றோம்.  அன்னை பெரியநாயகியை நன்றாக வெகு நேரம் வணங்க முடிந்தது. யாரும் நம்மை போக சொல்லவில்லை. நல்ல அலங்கரமாக இருந்தார்.

மூலவர் பெருவுடையாரை பார்க்கவில்லையே என்ற மனக்குறை நீங்கியது.அன்னைதான் இறைவனின் சரிபாதி ஆயிற்றே!  அன்னையை மனதார வேண்டி மனநிறைவு பெற்றோம்.



https://www.youtube.com/watch?v=5DhrsSQ-2aY&t=2s

தமிழில் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம்

ஏ.பி நாகராஜன்  இயக்கத்தில் பாடல் காட்சி அற்புதமாக இருக்கும். தஞ்சை கோவில் செட் வியக்க வைக்கும்.

டி.ஆர், மகாலிங்கம் கருவூரார், சீர்காழி கோவிந்த ராஜன், எஸ் . வரலட்சுமி பாடிய பாடல் நன்றாக இருக்கும்.



மேலே உள்ள "ராஜ ராஜசோழன்" படத்தில் வரும் பாடலில்  சொல்லியது போல 

தஞ்சைபெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே! 

தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே!

 

மகன் எடுத்த தஞ்சை கோவில் படங்கள் இன்னொரு  பதிவில் பார்க்கலாம்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------------

43 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் மிக அழகு. அதிலும் நீரில் கோபுர பிம்பம்.

    மகன் இருக்கும் படங்களும் மிக அழகு. பேரன் கோயிலுக்கு வந்திருக்கிறானா?

    சில கோயில் சந்நிதிகள் காலத்தால் பிற்பட்டவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் மிக அழகு. அதிலும் நீரில் கோபுர பிம்பம்.//
      நன்றி.

      //மகன் இருக்கும் படங்களும் மிக அழகு. பேரன் கோயிலுக்கு வந்திருக்கிறானா?//
      சிறு வயதில் வந்து இருக்கிறான். இந்த முறை அவன் வரவில்லை. மகனும் நானும் மட்டும் தான் கோவில் வந்தோம்.

      //சில கோயில் சந்நிதிகள் காலத்தால் பிற்பட்டவை.//

      ஆமாம்.




      நீக்கு
  2. திருச்சத்திமுற்றம் ஒரு தடவை சென்றிருந்தேன். மூலவர் சந்நிதியை அப்போதுதான் அடைத்தார்கள்.

    சத்திமுற்றப் புலவர் வாழ்ந்த ஊர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருச்சத்திமுற்றம் ஒரு தடவை சென்றிருந்தேன். மூலவர் சந்நிதியை அப்போதுதான் அடைத்தார்கள்.//

      ஓ பார்க்க முடியவில்லையா?

      நீங்கள் பழையாறு போய் இருக்கிறீர்கள் அல்லவா? அதன் பக்கம் தானே சக்திமுற்றம்.


      //சத்திமுற்றப் புலவர் வாழ்ந்த ஊர்//

      ஆமாம்.

      நீக்கு
  3. வி ஐ பிக்கள் வழி.... ம்ம்ம் வரலாற்று அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்களைத் தவிர வேறு விஐபிக்களா?

    தஞ்சை பெரிய கோயிலை எவ்வளவு தடவைகள் பார்த்தாலும் அலுக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வி ஐ பிக்கள் வழி.... ம்ம்ம் வரலாற்று அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்களைத் தவிர வேறு விஐபிக்களா?//

      வி ஐ பிக்கள் நிறைய வகை உண்டே!
      //தஞ்சை பெரிய கோயிலை எவ்வளவு தடவைகள் பார்த்தாலும் அலுக்காது//

      அதுதான் அடுத்து மகன் எடுத்த தஞ்சை கோவில் படங்களை போடலாம் என்று நினைக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. அருங்காட்சியகம் பார்த்ததே இல்லை.  என்ன இருக்கும் உள்ளே?  நானெல்லாம் தஞ்சாவூர்க்காரன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      அருங்காட்சியகம் உள்ளே கலை பொக்கிஷங்கள் தான். அற்புதமான சிலைகள், சோழ நாணயங்கள் , செப்பேடுகள் எல்லாம் இருந்தது. பார்த்து பல வருடம் ஆச்சு.

      நீக்கு
  5. கேமிராவை அணைக்கவே மனமில்லாமல் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. வளைத்து வளைத்து நிறைய படங்கள் எடுத்திருக்கிறீர்கள். யாவுமே சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கேமிராவை அணைக்கவே மனமில்லாமல் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. வளைத்து வளைத்து நிறைய படங்கள் எடுத்திருக்கிறீர்கள். யாவுமே சிறப்பு.//

      நன்றி ஸ்ரீராம்.

      நிறைய நேரம் இருந்து இருந்தால் இன்னும் எடுக்கலாம்.
      எல்லாமே கலை அழகு. நன்றாக படம் எடுக்க தெரிந்தவர்கள் போட்டு இருக்கும் படங்களை பார்த்தால் எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்று வியந்து பார்ப்பேன், கறுப்பு, வெள்ளை படங்கள், வண்ணப்படங்கள் எல்லாம் கண்ணையும், கருத்தையும் கவரும்.

      நீக்கு
  6. நீரில் கோபுர பிம்பம் தெரிகிறது. பேரனும் உங்கள் மகனும் ஒரே சாயல் போல! நல்ல போஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீரில் கோபுர பிம்பம் தெரிகிறது. பேரனும் உங்கள் மகனும் ஒரே சாயல் போல! நல்ல போஸ்.//

      நீரில் கோபுரம் தெரிகிறதா? நன்றி.
      மகன் சாயல்தான் பேரன்.

      நீக்கு
  7. வாழும்பல்லி - மர பல்லி முன்னர் பார்த்த நினைவு. சிறு வயதில் கருவூரார் சன்னதி, கருவூரார் பெருமைகள் அறியாத வயது. அப்போது பார்த்த கோவில். கலைநயத்தோடு கூட பார்க்க முடியாத வயது! இப்போது மறுபடி சென்று பார்க்க ஆசை.

    பதிலளிநீக்கு
  8. முன்னர் கோபுரத்தில் ஏறி பார்க்க அனுமதி இருந்ததாகச் சொல்வார்கள். நான் பார்த்ததில்லை. ஒலி இல்லாமல் காணொளிகள் பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முன்னர் கோபுரத்தில் ஏறி பார்க்க அனுமதி இருந்ததாகச் சொல்வார்கள். நான் பார்த்ததில்லை.//

      ஆமாம் முன்ன்ர் மேலே ஏறி பார்த்து இருக்கிறோம். இந்த கோவிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் இப்போது அனுமதி இல்லை.
      இப்போ வரும் கூட்டத்தை அதிகம்.

      //ஒலி இல்லாமல் காணொளிகள் பார்த்தேன்!//

      இன்னும் சரியாக வில்லையா ?

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது.

    நீரில் கோபுரம் இந்த மாதிரி படம் எடுக்கும் எண்ணங்கள் எல்லோருக்கும் வராது. சூப்பர்

    இப்படி குழந்தையை தூக்கிப்போட்டு பிடிப்பவர்களைக் கண்டால் பிடறியில் ஒன்று வைக்க வேண்டும் என்று தோன்றும்.

    இரண்டாவது காணொளி வேலை செய்யவில்லை.

    விவரங்கள் அருமை
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது.

      நீரில் கோபுரம் இந்த மாதிரி படம் எடுக்கும் எண்ணங்கள் எல்லோருக்கும் வராது. சூப்பர்//

      நன்றி.

      //இப்படி குழந்தையை தூக்கிப்போட்டு பிடிப்பவர்களைக் கண்டால் பிடறியில் ஒன்று வைக்க வேண்டும் என்று தோன்றும்.//
      அவர் தலைக்கு மேல் ஒரு கையால் பிடித்து இருந்தார். வீட்டில் பெரியவர்கள் குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கவே விடமாட்டார்கள். வயிற்ரு தொந்திரவு வரும் என்பார்கள், நான் நினைப்பேன் அவர்களுக்கு பயத்தால் ஏற்படும் வயிற்று தொந்திரவு என்று.

      //இரண்டாவது காணொளி வேலை செய்யவில்லை.//

      சுட்டி கொடுத்து இருக்கிறேன். இப்போது பார்க்கலாம்.

      //விவரங்கள் அருமை
      வாழ்க வளமுடன்.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. படங்கள் அனைத்தும் அழகு... அவற்றின் விளக்கங்கள் அருமை...

    பாடல் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் அழகு... அவற்றின் விளக்கங்கள் அருமை...

      பாடல் சிறப்பு...//
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. படங்கள் எல்லாம் ஆஹா போட வைக்கின்றன அதுவும் சிற்பங்கள் நந்தி மண்டபம் வெளிப்புறத் தூண்...வாவ்!!! தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே பாடல் நினைவுக்கு வந்து நம் மனம் வாழ்த்துகிறது!!! எவ்வளவு பார்த்தாலும் அலுக்காத கோயில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன் , வாழ்க வளமுடன்

      படங்கள் எல்லாம் ஆஹா போட வைக்கின்றன அதுவும் சிற்பங்கள் நந்தி மண்டபம் வெளிப்புறத் தூண்...வாவ்!!! //

      நன்றி கீதா.

      //தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே பாடல் நினைவுக்கு வந்து நம் மனம் வாழ்த்துகிறது!!! எவ்வளவு பார்த்தாலும் அலுக்காத கோயில்//

      அந்த பாடல் நினைவுக்கு வந்த காரணத்தால்தான் பாடல் பகிர்வு.

      நீக்கு
  13. அநியாயம் அதென்ன அந்தப் படி வழியாக உங்களை உள்ளே விடவில்லை....அதென்ன விஐபி வழி! வேலை இல்லாத போக்கிரிங்க வழியா.....நீங்க சொல்லிருக்கணும் வே இ போ நான் இல்லை... நான் ஒரு எழுத்தாளினியாக்கும்....பயனுள்ளத சொல்றவங்கன்னு சொல்லி ஒரு டோஸ் விட்டிருக்கணும்....பின்ன என்னக்கா எனக்குக் கோபம் பொத்துட்டு வருது உங்களை விடாதது....இறைவன் சன்னதியில் இப்படி பேதம் பார்ப்பது மனுஷங்க உருப்படவே மாட்டாங்க.


    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அநியாயம் அதென்ன அந்தப் படி வழியாக உங்களை உள்ளே விடவில்லை....அதென்ன விஐபி வழி! //

      மூலவர் இருக்கும் வாசலில் அது உள்ளே போகும் வழி. அதில் பெரிய வரிசை, வெகு நேரம் காத்து இருக்க வேண்டும் என்று போகவில்லை. சிறிது நேரம் அமர்ந்து மக்களை பார்த்து ரசித்து கொண்டு இருக்கும் போது இறங்கும் வழி யாக சிலர் போவதை பார்த்தேன், வயதனவர்களை விடுகிறார்கள் போலும் என்று நானும் கேட்டு உள்ளே போகலாம் என்று நினைத்து போனேன். அப்போது அப்படி சொன்னார்கள்.

      காவிஉடை தரித்த வட நாட்டுகாரார் மாலை மரியாதைகளோடு மலர்ந்த முகத்தோடு வெளியே வந்தார், அவருடம் சில கூட்டம் பெண் காவலர் , ஆண் காவலர்களுடன் மரியாதையாக அழைத்து கொண்டு போனார்கள்.

      ஆஹா! அக்கா எழுத்தாளினியா? நல்லது கூட்டம் இல்லா நாளில் போனால் தரிசனம் கிடைக்கும், அல்லது பொறுமையாக காத்து இருந்து பார்த்து இருக்க வேண்டும். எங்களுக்கு மாயவரம் போக வேண்டிய முக்கிய வேலை இருக்கும் போது பொறுமையாக நின்று இறைவனை தரிசனம் செய்ய முடியவில்லை அவ்வளவுதான்.

      நீக்கு
  14. சுப்பிரமணியர் சன்னதி அந்தக் கோபுரம் படம் செம அழகு. படிக்கட்டு ஆறுமுகர் கீழே ஆனை... இந்தப் படங்களுக்கு மேலே உள்ள இந்திரன் சந்திரன் சரஸ்வதி எல்லாச் சிற்பங்களும் என்ன அழகு இல்லையா...

    யானை சிலை பல தூண்டுகளாக செய்து இணக்கப்பட்டு இருக்கிறது. கயிறு மேலே உடகார்ந்து இருப்பவர், யானை துதிக்கையால் ஒருவரை இழுத்து போவது எல்லாம் மிக அற்புதமாய் இருக்கிறது, யானையின் கழுத்தில் காலில் அணிகலன்கள் எல்லாம் அழகு.//

    ஆமாம் ரொம்ப அழகு,எப்படி செதுக்கியிருக்காங்க...

    மண்டபத்தை இழுக்கும் குதிரை அழகு அழகு! குதிரை கடிவாளம், அதன் கீழே யானை (தந்தம் உடைந்திருக்க்கும் யானை..) அதன் கீழே ஒருவர்...அதன் அணிகலன் எல்லாம் எப்படி அழகா செதுக்கியிருக்காங்க.

    தூண்கள், //சும்ப , நிசுமனுடன் போர்புரியும் தேவி துர்க்கை// மகிஷி வதம், அதன் கீழே வரும் சிற்பங்கள் எல்லாமே ரொம்ப ரசித்தேன்.

    ஒன்று விடாமல் படம் பிடிச்சிருக்கீங்க கோமதிக்கா...உங்கள் ஆர்வமும் எடுக்கும் திறனும் அபாரம் கோமதிக்கா....அழகியல்!!!

    எனக்கும் இப்படித்தான் எல்லாம் எடுக்க நினைப்பேன்...ஆசைப்படுவேன்... நம் கூட வருபவர்களைப் பொருத்து இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுப்பிரமணியர் சன்னதி அந்தக் கோபுரம் படம் செம அழகு. படிக்கட்டு ஆறுமுகர் கீழே ஆனை... இந்தப் படங்களுக்கு மேலே உள்ள இந்திரன் சந்திரன் சரஸ்வதி எல்லாச் சிற்பங்களும் என்ன அழகு இல்லையா...//

      ஆமாம் கீதா, சுப்பிரமணியர் சன்னதியில் அனைத்தும் அருமையாக இருக்கும். உள்ளே சுவாமியும் யாரும் மறைக்க முடியாது பெரிய சுவாமி அழகு. கதவு ,படி, சுவர் வாசலில் இருக்கும் துவாரபாலகர்கள் என்று அனைத்தும் அழகுதான்.

      //ஒன்று விடாமல் படம் பிடிச்சிருக்கீங்க கோமதிக்கா...உங்கள் ஆர்வமும் எடுக்கும் திறனும் அபாரம் கோமதிக்கா....அழகியல்!!!//

      நன்றி.



      //எனக்கும் இப்படித்தான் எல்லாம் எடுக்க நினைப்பேன்...ஆசைப்படுவேன்... நம் கூட வருபவர்களைப் பொருத்து இருக்கு.//
      உண்மை, அவசரபடுத்தினால் முடியாது, வேறு வேலைகளை வைத்து கொண்டு போக கூடாது கோவிலுக்கு. நிறைய கோவில் வைத்து கொண்டாலும் ஓட வேண்டும். ஒரு கோவில் மட்டும் என்றால் நின்று நிதானமாக படம் எடுக்கலாம்.

      நீக்கு
  15. இருவரும் நிற்பது போல ஓவியம் கோவிலில் இருக்கிறது. //

    ஆமாம் இந்தப் பாட்டு ரொம்ப ரசித்த பாடல்....சிவாஜியின் அழகான உச்சரிப்பு!! நடை...எல்லாம் ரசித்ததுண்டு.

    நீரில் தெரியும் கோபுரம் செம. நல்ல தெளிவாக இருக்கு....

    ரொம்ப ரசித்தேன் ஆமாம் நானும் இப்படிப் பார்த்தால் எடுத்துவிடுவேன்....

    அக்கா நீங்களும் அழகாக எடுக்கறீங்க....ஃபோன் படங்கள் நல்ல தெளிவாக இருக்கின்றன அக்கா.

    அந்தக் குட்டிப் பெண் செம க்யூட்

    ஆமாம் சோழர்காலத்துக் கோயில்கள் கலைகளும் பேசப்படுபவை....அது தனி வரலாறு பெருமை.

    படங்கள் அனைத்தும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமாம் இந்தப் பாட்டு ரொம்ப ரசித்த பாடல்....சிவாஜியின் அழகான உச்சரிப்பு!! நடை...எல்லாம் ரசித்ததுண்டு.//

      மகாலிங்கம் அவர்கள் முன்னால் இசைக்கும் ஆலாபனை மிகவும் பிடிக்கும் எனக்கு. அவர் பாடிய பாடல்கள் மிகவும் பிடிக்கும்.

      //நீரில் தெரியும் கோபுரம் செம. நல்ல தெளிவாக இருக்கு....

      ரொம்ப ரசித்தேன் ஆமாம் நானும் இப்படிப் பார்த்தால் எடுத்துவிடுவேன்....

      அக்கா நீங்களும் அழகாக எடுக்கறீங்க....ஃபோன் படங்கள் நல்ல தெளிவாக இருக்கின்றன அக்கா.//

      நன்றி கீதா.

      //அந்தக் குட்டிப் பெண் செம க்யூட்//
      ஆமாம்.

      //ஆமாம் சோழர்காலத்துக் கோயில்கள் கலைகளும் பேசப்படுபவை....அது தனி வரலாறு பெருமை.//
      ஆமாம் வரலாறு பெருமைதான் நமக்கு.
      அனைத்தையும் ரசித்து பின்னூட்டங்கள் நிறைய அளித்து உற்சாகபடுத்துவதற்கு நன்றி கீதா.


      நீக்கு
  16. சிறப்பான பதிவு..

    ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு வித உணர்வினைத் தருவது - என்பது பெரிய கோயிலுக்கு மிகவும் பொருந்தும்..

    படங்கள் அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செலவாரஜூ, வாழ்க வளமுடன்

      //ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு வித உணர்வினைத் தருவது - என்பது பெரிய கோயிலுக்கு மிகவும் பொருந்தும்..//

      ஆமாம், உண்மை.

      படங்கள் அழகு.//
      நன்றி.


      நீக்கு
  17. படங்கள் அழகாக வந்திருக்கின்றன. 1996 இல் ஒரு முறை தஞ்சை சென்றிருக்க்கிறேன். ஆனால் இவ்வளவு ரசித்து பார்க்க இயலவில்லை, கையில் காமெராவும் இருந்தது. யாஷிகா பிலிம் கேமரா.உங்கள் படங்கள் துல்லயமான படங்கள். 

    ஆமாம். எதற்காக இப்படி பாறையைக் குழித்து தண்ணீர் தேக்கி வைக்கிறார்கள்?  
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகாக வந்திருக்கின்றன.//

      நன்றி.

      //1996 இல் ஒரு முறை தஞ்சை சென்றிருக்க்கிறேன். ஆனால் இவ்வளவு ரசித்து பார்க்க இயலவில்லை, கையில் காமெராவும் இருந்தது. //

      அப்போ உங்கள் ஆலபத்தில் இடம்பெற்று இருக்குமே படங்கள்.
      ஏன் ரசித்து பார்க்க இயலவில்லை? கூட்டமா?

      யாஷிகா பிலிம் கேமரா//
      இந்த கேமரா நல்ல கேமரா.


      .//உங்கள் படங்கள் துல்லயமான படங்கள்.//

      நன்றி சார்.

      //ஆமாம். எதற்காக இப்படி பாறையைக் குழித்து தண்ணீர் தேக்கி வைக்கிறார்கள்? //

      அது குழித்து வைக்கவில்லை, தானாக உருவான பள்ளம், மழை நீர் தேங்கி நிற்கிறது. அப்போது மார்கழி மாதம் தொடர் மழை இருந்த நேரம். மற்ற இடங்கள் செங்கல் தளம், இது கருங்கல் தரை தேய்ந்து கொஞ்சம் கீழே இறங்கி இருக்கு தளம், அதனால் நீர் தேக்கம்.

      அதில் பறவைகள் நீர் அருந்தி சென்றது. படம் எடுக்க முடியவில்லை, ஆள் நட்மாட்டம் கண்டு சட் சட் என்று பறந்து கொண்டு இருந்தது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. அம்மன் சந்நிதியின் மண்டபத்தில் தான் அழகின் வடிவாக நான்கு சுதை சிற்பங்கள்... பிற்காலத்தில் அமைக்கப் பட்டவை..

    சிவராத்திரி சம்பவம், அம்பிகை சிவபூஜை, கால சம்ஹாரமூர்த்தி, ஆரத் தழுவிய அம்பிகை - எனும் இவை சிதிலமாகிக் கொண்டிருக்கின்றன..

    ஏனோ இவற்றை
    தொல்லியல் துறை மீண்டும் சீர் செய்யாமல் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அம்மன் சந்நிதியின் மண்டபத்தில் தான் அழகின் வடிவாக நான்கு சுதை சிற்பங்கள்... பிற்காலத்தில் அமைக்கப் பட்டவை..//

      ஆமாம். அந்த சுதை சிற்பம் எனக்கு பிடித்த காரணத்தால் பகிர்வு.

      //சிவராத்திரி சம்பவம், அம்பிகை சிவபூஜை, கால சம்ஹாரமூர்த்தி, ஆரத் தழுவிய அம்பிகை - எனும் இவை சிதிலமாகிக் கொண்டிருக்கின்றன..

      ஏனோ இவற்றை
      தொல்லியல் துறை மீண்டும் சீர் செய்யாமல் இருக்கின்றது.//

      பழமையை காப்பது மட்டும்தான் தொல்லியல் துறையின் வேலையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  19. கருவூராரின் திருமேனி அற்புதமானது.. மந்தஹாசப் புன்னகை நம்மைக் கவர்ந்து இழுக்கும்..

    சித்தர் பீடம் அல்லவா!..
    கவலைகள் அனைத்தும் காற்றோடு காற்றாகப் போயிருக்கும்..

    வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கருவூராரின் திருமேனி அற்புதமானது.. மந்தஹாசப் புன்னகை நம்மைக் கவர்ந்து இழுக்கும்.
      //சித்தர் பீடம் அல்லவா!..
      கவலைகள் அனைத்தும் காற்றோடு காற்றாகப் போயிருக்கும்..//

      ஆமாம், எல்லோரும் ஒரு சில நிமிடங்கள் அமர்ந்து செல்கிறார்கள்.
      அந்த நிமிடம் கவலைகள் தெரிவது இல்லை.

      //வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது..//
      ஆமாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும் இல்லையா!
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி நன்றி.

      நீக்கு
  20. நிதானமாகவும் அருமையாகவும் பொறுமையாகப் படங்கள் எடுத்து இருக்கிறீர்கள். நீரில் கோபுரத்தைப் படம் எடுத்தது நல்ல யோசனை. நன்றாகவும் எடுத்து இருக்கீங்க. உங்கள் மகன் ஆச்சே! உங்களை விடத் திறமையானவராகவே இருப்பார் அல்லவா? அவற்றையும் பார்க்கக் காத்திருக்கேன். நாங்க போயிட்டு வந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போ சமீபத்தில் பையரும், என் கணவரும் மதுரைக்குப் போயிட்டு வந்து ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டார்கள். நல்லவேளையாக எனக்கும், குட்டிக் குஞ்சுலுவுக்கும் ஏற்கெனவே உடம்பு சரியில்லாததால் நாங்க போகவில்லை. இப்போல்லாம் கோயில்கள் தரிசனம் என்பதே காணக்கிடைக்காத ஒன்றாக கடந்த 2,3 வருஷங்களில் ஆகிவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //நிதானமாகவும் அருமையாகவும் பொறுமையாகப் படங்கள் எடுத்து இருக்கிறீர்கள். நீரில் கோபுரத்தைப் படம் எடுத்தது நல்ல யோசனை. நன்றாகவும் எடுத்து இருக்கீங்க.//

      நன்றி.

      //உங்கள் மகன் ஆச்சே! உங்களை விடத் திறமையானவராகவே இருப்பார் அல்லவா? அவற்றையும் பார்க்கக் காத்திருக்கேன்//

      அவனிடம் தான் கற்றுக் கொண்டேன். போன் வாங்கி கொடுத்து படம் எடுக்க சொல்லி கொடுத்து உற்சாகபடுத்துவது அவன் தான்.
      காத்து இருக்கிறேன் என்று சொன்னதற்கு நன்றி.

      //நாங்க போயிட்டு வந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போ சமீபத்தில் பையரும், என் கணவரும் மதுரைக்குப் போயிட்டு வந்து ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டார்கள். நல்லவேளையாக எனக்கும், குட்டிக் குஞ்சுலுவுக்கும் ஏற்கெனவே உடம்பு சரியில்லாததால் நாங்க போகவில்லை.//

      மதுரை கோவில் இப்போது பார்ப்பது கஷ்டம் நெடுநேரம் நிற்பது முடியாது. 100 கொடுத்து டிக்கெட் வாங்கினாலும் அதிலும் நிற்க வேண்டும். அதிகாலை கூட்டம் இருக்காது முன்பு இப்போது அதிலும் வெளியூர்களிலிருந்து புனித யாத்திரை வருபவர்கள் காலை வந்து விடுகிறார்கள். இப்போது இரவு 8மணிக்கு போகலாம் என்று சொல்கிறார்கள் போய் பார்க்க வேண்டும்.

      //இப்போல்லாம் கோயில்கள் தரிசனம் என்பதே காணக்கிடைக்காத ஒன்றாக கடந்த 2,3 வருஷங்களில் ஆகிவிட்டன.//

      உடல் நிலை சரியாகி மீண்டும் தரிசனம் செய்யலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  21. நல்ல தகவல்கள் படங்கள், கல்வெட்டு கள் என பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //நல்ல தகவல்கள் படங்கள், கல்வெட்டு கள் என பகிர்வு நன்று//

      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி

      நீக்கு
  22. ஆஹா... அற்புதமான ஆன்மீக தரிசனம்...
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நாஞ்சில் சிவா, வாழ்க வளமுடன்
      //ஆஹா... அற்புதமான ஆன்மீக தரிசனம்..//
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு